'மல் சாலாவ' - எச்.ஏ. அஸீஸ்

.


அப்பா மரணித்து விட்டார்
அவரை நான்
முதல் தர சவச்சாலையில் வைத்துள்ளேன்
 அதி முக்கிய அதிதிகளுக்கான
'மல் சாலாவ'
 இந்த சமூகத்தில் 
எத்தனை பேர் இறந்து போயினர்
அப்பாவுக்கு மட்டுமே
இந்த அதீத மரியாதை
 ஒரு பக்கம் நிறைய
படம் ஒன்று போட்டு
பத்திரிகையில் பிரசுரித்ததும்
எத்தனை பேர் வந்துள்ளனர்
மலர் மாலைகளுடன் இங்கு
 அப்பா பெரியவர்
அவரின் கடைசி ஆசை
தனது இறப்பு நன்றாக
அமைய வேண்டும் என்பது
 முதல் தர சவச்சாலை
அதனால் தான்
வந்த அதிதிகளுடன் 'மல் சாலா'வில்
மகன் சிரித்து கதைப்பது கேட்கிறது
 அப்பா மரணித்து விட்டார்
- எச்.. அஸீஸ்

பிற்குறிப்பு:
""""""""""""""
  - நேற்று வரை அப்பாவிடம்
     மருந்துக்கும் பணம் இருக்கவில்லை
     சேரிக் குடிசையில்
     சாக்குக் கட்டிலில்  
     செத்துப்போயிருந்தார் அப்பா
     எவருமே கண்டு கொள்ளாது.

  - 'மல் சாலாவ' (in Sinhaha) - Funeral parlour )


சிட்னி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சேக்கிழார் விழா


சிட்னி முருகன் ஆலயத்திலும் கல்வி கலாச்சார மண்டபத்திலும் 12/06/2016 மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற சேக்கிழார் விழாவில் இருந்து ஒருசில படங்களை காணலாம் .




பாஸ்கரனின் முடிவுறாத முகாரி - நடேசன்

.

பைபிளின் பழயகோட்பாடு மூவாயிரம் ஆண்டுகளின் முன்பாக உரைநடையில் எழுதப்பட்டுள்ளது இதற்காக பழய கோட்பாட்டை நாம் படிக்கத் தேவையில்லை குறைந்த பட்சமாக வேதாகமத்தில் உள்ள பத்துக் கட்டளைகள் பார்த்தடியளமயசயn-டிழழம-உழஎநசால் நமக்குத் தெரியும். அவை வசனமாக எழுதப்பட்டுள்ளது. 2230 வருடங்களுக்கு முன்பான பிளட்டோவின் குடியரசுவில்(சுநிரடிடiஉ)) சாதாரண உரையாடல்கள். உள்ளது. அதே போல் தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானைப் பார்த்தால் அதுவும் வசன நடையில் உள்ளது.

மேற்கூறிய முக்கியமான நூல்கள் முறையே ஹிப்ரூஇ கிரிக்கம் இமற்றும் அரபி என்ற தொன்மையான மொழிகளிகளில் எழுதப்பட்டது.

2500 வருடங்கள் பழமையான தமிழ் மொழியில் மட்டும் உரைநடை 18ம் நூற்றாண்டில் அச்சுயந்திரங்களுடன் வீரமாமுனிவரது வருகைக்காக காத்திருந்தது?

அதற்கு முன் தமிழ் உரைநடை இல்லையா ?


தமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகத்மியம் - முருகபூபதி

.

சிவாஜியின் கனவு தொலைந்தது. வாரிசுகளின் கனவு விதையாகிறது
            

" பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்  வழுவல  கால வகையினானே "   என்பது  நன்னூல்  வாக்கு.  இதனை பனையோலையில்   எழுத்தாணியால்  பதிவுசெய்தவர்  பவனந்தி முனிவர்   என்று   சொல்லப்படுகிறது
வள்ளுவரும்   கம்பரும்  இளங்கோவும்  அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும்   எழுத்தாணியையும்  ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான   எழுத்துக்களைப்படைத்தனர்  என்பதற்காக  இந்த நூற்றாண்டின்  பிள்ளைகள்  பனைமரம்  தேடி அலையவேண்டியதில்லை.
அவர்கள்   கணினியிலும்  கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர்.
கைத்தொலைபேசியிலேயே  சினிமாப்படங்களையும்  சின்னத்திரை மெகா தொடர்களையும்  விளையாட்டுக்களையும்,  தாம்  விரும்பும் இசை, நடன  நிகழ்ச்சிகள்  உட்பட  அனைத்தை  பொல்லாப்புகளையும் முகநூல்   வம்பு  தும்புகளையும்  பார்த்துக்கொள்ளமுடியும்.
இனி  கையில்  எடுத்து  வாசிக்க  புத்தகம்  எதற்கு ?  படம்பார்க்க தியேட்டர்தான்   தேவையா?
சில  படங்களை  அகலத்திரையில்  பார்த்தால்தான்  திருப்தி எனச்செல்பவர்கள்  விதிவிலக்கு.
தொலைக்காட்சியின்   வருகை,  திருட்டு விசிடியின்  தீவிர  ஆக்கிரமிப்பு   முதலான  காரணிகளினால்,  திரையரங்குகள் படிப்படியாக   மூடப்பட்டுவருகின்றன.

இயேபின்ட புஸ்தகம் (மலையாள சினிமா) - கானா பிரபா

.


எந்தவொரு ஆட்சி, அதிகார முறைமையும் துரோகத்தனத்தால் கட்டியெழுப்பப்பட்டது. அது தன்னை நிலை நிறுத்த எந்தவொரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும். பதவி வெறிக்கு முன் பந்த பாசம் கூட நிலைத்திருக்காது. 
ஆனால் இப்படியானதொரு கட்டமைப்பு என்பது நிலைத்திருக்காது, அடிமைத் தளையிலிருந்து தன் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள, சமூக விடுதலை நோக்கிய, தன்னலம் பாராத போராளிகள் தோற்றம் பெறுவர். 
மன்னராட்சிக் காலத்திலிருந்து, ஐரோப்பியர் காலம், அதற்குப் பின்னான குடியாட்சி அரசமைப்பு வரை இது முடிவில்லாத சக்கரச் சுழற்சி. இதைத்தான் "இயோபின்ட புஸ்தகம்" திரைப்படமும் பதிவாக்குகிறது.

இந்திரா காந்தி அரசால் இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதி, 1977 ஆம் ஆண்டு தான் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் கம்யூனிஸ்ட் தலைவர்,  தன் கழிந்த நினைவுகளை, வரலாற்றின் பழைய பக்கங்களை எழுத ஆரம்பிக்கிறார். அதுதான் "இயோபின்ட புஸ்தகம்" (The Book of Job).

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பாய்கிறது கதை. ஹாரிசன் என்னும் வெள்ளைக்காரர் கேரளாவின் மூணாறு பகுதியிலே தேயிலைத் தோட்டங்களை நிறுவித் தன் வர்த்தகப் பரப்பை ஆரம்பிக்கிறார். அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வாழ்க்கைப்பட்டவர்களை அடிமைகளாக வழி நடத்தும் வகையில் விசுவாசமிக்க ஒருவனைக் காண்கிறார். அவனைக் கிறீஸ்தவனாக்கி இயோப் (Job) என்று பெயரும் சூட்டப்படுகிறது. 


ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை - ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்

.
" ஈழத்தமிழ்  இலக்கியமானதுபுகலிடத்  தேசியத் தமிழ்  இலக்கியத்தினூடாக உலகத்  தமிழ்  இலக்கியம்  என்ற  பரிமாணத்தை  எய்தியுள்ளது "


(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமும் இணைந்து 04-06-2016 அன்று  நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)

இந்தத் தலைப்பு  பரந்துபட்ட  ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான  காரியமல்ல.
ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக்  கொண்டது என்பதை  பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன.
ஈழத்துப் பூதந்தேவனார்  ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது.

இருதலைக் கொள்ளி எறும்பு - தேவகி கருணாகரன்

.


இரண்டு நாட்களுக்கு முன் வைத்திய கன்ஃபொரன்சுக்காக நைஜீரியாவின் தலை நகர் லேகொசுக்குச் சென்ற என் கணவர் இன்றைக்கு நாலு மணிக்கெல்லாம் வந்திருக்க வேணும் . இப்போது எட்டு மணியாகியும் வரவில்லையே!! திறந்திருந்த வாசற் கதவுக்கு நடப்பதும் பாதுகாப்பு மெஷ் கதவினூடாக வெளியே எட்டிப் பார்ப்பதும்இ; திரும்பி வந்து அமர்வதுமாக இருந்த என் மனதில் பல எண்ண அலைகள் வந்து மோதின. இந்த ஆபிரிக்கா கண்டத்திலே அவருக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளை நினைத்தும் உடல் நடுங்கி வியர்த்தது.
            ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு. நைஜீரியாவின் கடுனா பிரதேசத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். எமது தாய் நாட்டில் நடந்த போரின் தாக்கத்தால் எம் போன்ற பல தமிழர் உயிருக்குப் பயந்துஇ பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நினைத்து ஊரை விட்டுப் பல நாடுகளிற்கு வெளியேறி விட்டார்கள்.  ‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்ற நிலைமை போய் இப்போ ‘உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடு’ என்ற நிலை ஆகிவிட்டது. தமிழரின் விதிக்கு அமைய என் கணவரும் கடுனா மாநிலப் போதனா வைத்தியசாலையில் வேலை பெற்றுக் கொண்டுஇ எம்மையும் கூடவே அழைத்துக் கொண்டு நைஜீரியா வந்து விட்டார்.
திரும்பவும் வாசற் கதவடிக்குச் சென்று மெஷ் கதவின் மேல் மூக்கை அழுத்தியபடி வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்தேன். இது மார்கழி மாதம்இ; ஹமட்டான் காலம். பனியுடன் சஹாரா பாலைவனத்து தூசியும் சேர்ந்த புகார் மூன்று அடிக்கு மேல் எதுவுமே தெளிவாகத் தெரியாமல் மூடியது. உற்று உற்றுப் பார்த்தேன் வீட்டைக் கடந்து ரோட்டிலே மோட்டார் வண்டிகளின் வெளிச்சம் தூசி படிந்த பனி மண்டலத்தின் ஊடாக ஒளி இழந்து மங்கலாக மின்னியது. ‘ஊம்’ பெருமூச்சு விட்டபடிஇ லேசாக கண்களில் துளிர்ந்த நீரை துடைத்தபடி திரும்பவும் சோபாவில் வந்து அமர்ந்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன்இ இரவு ஒன்பது மணி. தலைமைஇ புரொஃப்சர் அடிக்கேயையோஇ நண்பர்களையோ விசாரிப்பதற்கு அல்லது உதவி கேட்பதற்கு அந்தக் காலத்தில் கடூனாவில் வீட்டுக்கு வீடு தொலைபேசி இருக்கவில்லை. கையடக்க தொலை பேசியைப் பாவனைக்கு  வராத காலம் அது.

இலங்கைச் செய்திகள்


யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம பகுதி : தீ கட்டுபாட்டுக்குள் : இராணுவ வீரர் பலி, 47 பேர் படும் காயம் : நீரை பருகும் போதும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் : இரங்கல் வெளியிட்ட ஜனாதிபதி.!

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

 'குளியல் அறையில் இருந்தவாறு ஓடி வந்தேன்" கொஸ்கம விபத்து : திகில் சம்பவத்தை விளக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

 கொஸ்கமவுக்கு ரணில், சந்திரிகா விஜயம்.!

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் பசில் கைது

 பசில் பிணையில் விடுதலை

20 மணித்தியாலங்கள்  உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி

மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

புனித ரமழான் நோன்பு ஆரம்பம்.!

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

அனுரவை சந்திக்க மகனுடன் வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த

முகாமை ஏன் சாலாவில் அமைத்தோம்? : எமது பக்கம் சிறு தவறு ஏற்பட்டிருக்கலாம்:  வெடிப் பொருட்களை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்கின்றனர் :  கொஸ்கம சம்பவம் தொடர்பில் புது தகவல்கள்

கொஸ்கம புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பம்

களுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்.!   

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்.!

நல்­லி­ணக்கம் ஜன­நா­ய­கத்­துக்கு பிரிட்டன் உதவும்

முன்னைய ஆட்சியின்போது பயன்படுத்தப்பட்ட  வாகனங்கள் மாயமாகிவிட்டன

வோக்ஸ்வாகன் கார் நிறுவனம்  2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

சாமானியனின் சாதனை! ---- அதிஷா

.

கன்பரா கலை - இலக்கியம் 2016 ஒரு பார்வை --ரஸஞானி - மெல்பன்

.

இலங்கையில்  போருக்குப்பின்னர்  தோன்றியுள்ள இலக்கியங்கள்   மனச்சாட்சியின்  குரலாக ஒலிக்கின்றன."
நான்கு   அமர்வுகளில்  நடைபெற்ற  கருத்துக்களம்
                        



           "  போருக்குப்பின்னரான   இலக்கியங்கள்  மக்களின்  மனச்சாட்சியைத் தூண்டி  போரினால்  சீரழிந்த  நாட்டை,  சமூகத்தைக்   கட்டி  எழுப்ப  வேண்டும்  என்ற  உணர்வை  ஏற்படுத்து கின்றது.   நமது  நாட்டிலும்  போருக்குப்பின்னரான  பாதிப்புகள், அவல நிலைகள்  குறித்த  இலக்கியங்கள்   உருவாகிக் கொண்டிருக்கின்றன.
   தற்போது   சுய தணிக்கைகள்  எதுவுமின்றி  தமது  படைப்புகளை எழுதும்  சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் இடம்பெற்ற தவறுகளை விமர்சிக்கும்  எழுத்துக்கள்  வருகின்றன.  போராளிகள்  சிலர் வெளிப்படையான  தமது  எண்ணங்களை  எழுதுகின்றனர். "   - இவ்வாறு  கடந்த  4   ஆம்   திகதி  அவுஸ்திரேலியா -  கன்பராவில் நடைபெற்ற   கலை  இலக்கியம் - 2016  நிகழ்ச்சியில்  உரையாற்றிய ஈழத்தின்  மூத்த  எழுத்தாளரும்  ஞானம்  இதழின்  ஆசிரியருமான மருத்துவர்  தி. ஞானசேகரன்  உரையாற்றினார்.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்  இணைந்து  கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள் மண்டத்தில்  நடத்திய  இந்நிகழ்விற்கு  சங்கத்தின்  தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா    தலைமைதாங்கினார்.

நான்கு    அமர்வுகளாக   நடைபெற்ற   இந்நிகழ்ச்சியை   கன்பரா  தமிழ் மூத்த  பிரஜைகள்   சங்கத்தின்  தலைவர்  திரு. முருகேசு  ருத்திரன், இலக்கிய  ஆர்வலர்  கலாநிதி கே. கணேசலிங்கம்,   இலங்கையிலிருந்து  வருகைதந்த  எழுத்தாளர்   திருமதி  ஞானம்  ஞானசேகரன்,  கன்பரா தமிழ்ச்சங்கத்தின்  தலைவர்  திரு. ஞானசிங்கம்,  ஆகியோர்  மங்கள  விளக்கேற்றி  தொடக்கிவைத்தனர்.


The Superstar Singer Karthik Live in Concert with Singer Priya Hemesh - 16 07 2016

.

புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் மாட்டுச் சண்டை

.


புஜேராவில் பொதுமக்களை கவர்ந்து வரும் மாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது. இது அமீரகத்தின் பாரம்பர்யத்தை நிலை நாட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஜேரா கடற்கரை அருகில் உள்ள மைதானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் மாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மாட்டுச் சண்டையில் புஜேரா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து மாடுகள் அதிக அளவில் பங்கேற்கின்றன.
இதனால் இந்த சண்டையை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் புஜேராவை நோக்கி செல்கின்றனர்.
இந்த மாட்டுச் சண்டை குறித்து புஜேராவைச் சேர்ந்த அமீரக வாசி ஒருவர் கூறியதாவது : இந்த சண்டை கடந்த 60 வருடமாக பாரம்பர்யமாக நடந்து வருகிறது. இந்த பாரம்பர்ய நிகழ்வு நடைபெறுவதற்கு அரசாங்கம் புஜேரா கடற்கரை அருகே இடத்தை வழங்கியுள்ளது. இந்த சண்டையானது ஐரோப்பாவில் இருப்பது போன்ற ரத்தம் வரும் விளையாட்டல்ல. இதில் ஜெயிப்பவர்களுக்கு எந்த வித பரிசுத்தொகையும் கிடையாது.
இந்த நிகழ்ச்சியான ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தில் நடைபெறாது.