சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013

.

துர்க்கை அம்மன் ஆலய 7ம் நாள் அலங்கார உற்சவம்

.

துர்க்கை அம்மன் ஆலய 7ம் நாள் அலங்கார உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன் சரஸ்வதி லக்சுமிஆகிய தேவியர்கள் அருகிருக்க வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா  காட்சியாக இருந்தது. 

துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம்  16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவு 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.

துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 4ம் நாள்


படப்பிடிப்பு  ஞானம்ஸ்
துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 3ம் நாள்

.துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் -2ம் நாள்

.
துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 1ம் நாள்
.

துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் நேற்றைய தினம் 16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவூ 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.


சனிக்கிழமை முதல்நாள் திருவிழாவில் துர்க்கை அம்மன் காமாட்சி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு அழகிய பச்சைக்கிளியூடன் நாதஸ்வர தவில் வாத்திய இசை முழங்க  வீதி உலா வந்தகாட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பிளைக்ரவூண், செவன்கில்ஸ், சென் கிளையர் போன்ற பகுதிமக்களின் விழாவாக இந்த திருவிழா அமைந்திருந்தது. கோவில் நிறைந்த மக்கள் பக்திபரவசத்துடன் அம்மனை வணங்கி சென்றார்கள்..
வீதி உலா வந்தபோது கோவில் நான்கு வீதியிலும் நிறைகுடம்வைத்து இனிமையான நாதஸ்வர இசைக் கச்சேரி இடம் பெற்றது. இசைக்கலைஞர்கள் அருமையான நாதஸ்வர இசையை வழங்கினார்கள்.சனிக்கிழமை முதல்நாள் திருவிழாவில் துர்க்கை அம்மன் காமாட்சி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு அழகிய பச்சைக்கிளியூடன் நாதஸ்வர தவில் வாத்திய இசை முழங்க  வீதி உலா வந்தகாட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பிளைக்ரவூண் செவன்கில்ஸ் சென் கிளையர் போன்ற பகுதிமக்களின் விழாவாக இந்த திருவிழா அமைந்திருந்தது. கோவில் நிறைந்த மக்கள் பக்திபரவசத்துடன் அம்மனை வணங்கி சென்றார்கள்..
வீதி உலா வந்தபோது கோவில் நான்கு வீதியிலும் நிறைகுடம்வைத்து இனிமையான நாதஸ்வர இசைக் கச்சேரியூம் இடம் பெற்றது. உள்ளுர் இசைக்கலைஞர்களும் மலேசியாவில் இருந்து வருகைதந்திருக்கும் கலைஞர்களும் அருமையான நாதஸ்வர அசையை வழங்கினார்கள்.