.ஆசிரியை திருமதி.இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியர் - மதவுவைத்தகுளம் அ.த.க பாடசாலை, நெடுங்கரைச்சேனை அ.த.க பாடசாலை வவுனியா, பெரியபுலம் மகாவித்தியாலயம், இளையதம்பி அ.த.க யாழ்ப்பாணம் )
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை09/09/2024 -15/09/ 2024 தமிழ் 15 முரசு 22 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
.ஆசிரியை திருமதி.இரத்தினபூபதி தெய்வேந்திரம்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியர் - மதவுவைத்தகுளம் அ.த.க பாடசாலை, நெடுங்கரைச்சேனை அ.த.க பாடசாலை வவுனியா, பெரியபுலம் மகாவித்தியாலயம், இளையதம்பி அ.த.க யாழ்ப்பாணம் )
யாதும் ஊரே யாவரும் கேளிர்
முதலில் அவ்வாறு பணியாற்றியபின்னர்தான்
பின்னாளில் எழுத்து மற்றும் கலை, சினிமா, ஊடகத்துறையிலும்
பிரகாசித்தனர்.
அறிஞர் ம.பொ.சி, தமிழரசு கழகம் என்ற அரசியல் கட்சியையும்
அறிஞர் ம.பொ. சி. க்கும்
கண்ணதாசனுக்கும் இந்திய அரசு நினைவு முத்திரைகளும் வெளியிட்டுள்ளன. ஒரு காலத்தில்
அச்சுக்கோப்பாளர்களாகவும் ஒப்பு நோக்காளர்களாகவும்
விளங்கிய இவர்கள் நால்வரும் பல நூல்களையும் எழுதியிருப்பவர்கள். தமிழகமும் இலங்கையும் நன்கறித்த எழுத்தாளர்கள்.
அத்துடன் சில இதழ்களுக்கும்
ஆசிரியர்களாக விளங்கினர்.
ஆனால், இந்தத் தகவல்களை அன்றிருந்த வீரகேசரி ஆசிரிய பீடத்தில் எத்தனைபேர்
அறிந்துவைத்திருந்தனர் என்பது எனக்குத் தெரியாது.
ஒப்புநோக்காளர் – அச்சுக்கோப்பாளர் பிரிவிலிருந்து எவரையேனும் ஆசிரியபீடத்திற்கு எடுத்தால் , தங்களுக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று நினைத்தவர்கள் சிலர் அப்போதிருந்தார்கள்.
சில வருடங்களுக்கு முன்னர் ஈழத்தின் மற்றும் ஒரு இலக்கிய ஆளுமை எஸ். எல். எம்.
ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற கதைத்தொகுப்பு
வெளியானது. ஹனீபாவின் எழுத்துக்களை பிடிக்காத
சில அதிமேதைகள் அவரை கிறுக்கன் என்று வர்ணித்தனர்.
அதற்கு அவர், “ நான் கிறுக்கன் எண்டா, எதுக்கடா என்னுடைய எழுத்துக்களை
படிக்காங்கள் … ? “ என்று எதிர்க்கேள்வி போட்டவர்.
மகாகவி பாரதியைக்கூட அவன்
வாழ்ந்த காலத்தில் கிறுக்கன் என்றுதான் சிலர் அழைத்தார்கள். எங்கள் புகலிட நாட்டில் ஒரு கவிஞர் தனக்கு கிறுக்கு பாரதி என்றே
புனைபெயரும் வைத்து, அதனையே தனது மின்னஞ்சல்
முகவரியுமாக்கியிருக்கிறார்.
எனவே கிறுக்கு என்பது மோசமான
சொல் அல்ல.
எஸ். எல். எம். ஹனீபா அவர்களின் வாழ்வையும் பணிகளையும் விரிவாகப் பதிவுசெய்யும் மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சிறப்பு மலர், இந்த கொரோனோ காலத்திலும் எப்படியே விமானம் ஏறி, பசுபிக் சமுத்திரத்தையும் கடந்து, அவுஸ்திரேலியாவில் எனது வீட்டு வாசலை வந்தடைந்துவிட்டது.
Saturday, August 21, 2021 - 6:08pm
ஆப்கானிஸ்தானின் மகளிர் வலையமைப்பின் ஸ்தாபகர் மஹ்பூபா சிராஜ் அண்மையில் சர்வதேச அலைவரிசை ஒன்று எழுப்பிய கேள்விக்கு வழங்கிய பதிலை மேற்கோள் காட்டியே இந்த விடயத்தை ஆரம்பிக்கிறேன்.அவருடைய பதிலின் உணர்ச்சி, நாட்டின் எதிர்காலம் குறித்து வைத்திருந்த கனவு சிதைவடைந்துள்ளமையால் உருவாகியுள்ள
தாக்கம் என்பன உள்ளடங்கியிருக்கின்றன என்பன சக்தி வாய்ந்த செய்தியாகும்.
.
சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் அதனால் ஏற்பட்ட அழிவில் இருந்து தம்ம நிவர்த்திக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரழிவு உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய போதும் சில புதிய தகவல்களும் எமக்குக் கிடைக்கின்றன. அண்மையிலே வெளிவந்த ஒரு செய்தி எம்மை வியப்புக்குள்ளாக்கியது. சென்னைக்கு அருகில் உள்ல மகாபலிபுரம் என்னும் கடற்கரை கடல் அனர்த்தம் ஏற்பட்ட சமயத்தில் 100 மீற்றர் வரை உள்வாங்கியதாம். இவ்வாறு உள்வாங்கிய சமயத்தில் மகாபலிபுரத்துக் கடலுக்குள் பல சிற்பங்களைக் காணக்கூடியதாக இருந்ததாம்.
இது வரை இப்படியாகக் கடலின் அடியில் இருந்த சிற்பங்கள் யாராலும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஒரு சுனாமி ஏற்பட்டிராவிட்டால் மேலும் பலகாலம் இது யாரின் கண்ணிலும் பட்டிருக்காது. சுனாமி அனர்த்தத்தின் போது இதைக் கண்டதால் தற்போது இவை பற்றி அறிவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வாளர்களும் கடற்படையினரும் ஆய்வில் மூழ்கியுள்ளதாக அறிகிறோம். இந்த ஆய்வு எத்தனை வியப்பான செய்திகளை அளிக்குமோ என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உங்களில் பலர் இந்த மாமல்லபுரத்திற்குப் போயிருக்கலாம். இந்தக் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சிற்பங்களைக் காண்பதற்குப் பலர் போவது வழக்கம். இன்று தமிழரின் நாகரிகச் சின்னமாக உயர்ந்து நிற்கும் கோயில்கள் கட்டுவதற்கு இந்த இடம் தான் பயிற்சிக்களமாக அமைந்தது. சிற்பிகள் தாம் அமைக்கப் போகும் சிற்பவடிவங்களை இங்கு காணும் பெரிய பாறாங்கற்களிலே செதுக்கிப் பழகினார்கள். இங்கு 5 இரதம் போன்ற வடிவங்களைக் காணலாம். இதைப் பாண்டவர் இரதம் என்பார்கள். இதுவே கல்லிலே எப்படிக் கோயில் அமைப்பது என்ற எண்ணத்தை உருவகப்படுத்திப் பார்த்ததாகக் கருதப்படுகிறது.
எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு அறிமுக பாமாலை அவசியமற்றது. எழுத்துலகம் நன்கு அறிந்த ஒரு படைப்பாளி. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இன்றுவரை எழுத்து துறைக்குள் பயணித்துக்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணி ஆற்றிவருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
அவரால் இந்த (
2021) ஆண்டு படைக்கப்பட்ட கதைத்தொகுப்பின்
கதை என்னும் சிறுகதைத்தொகுதி அண்மையில் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. 15
சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் இடம்பெறும் “அம்மம்மாவின் காதல்”, “அவள் அப்படிதான்”,
“ஏலம்”, “கணங்கள்”, “நேர்காணல்” ஆகிய ஐந்து சிறுகதைகளிலும் பரந்து விரிந்து இடம்பிடித்துநிற்கும்
பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பெண்கள் தொடர்பான சமூகப் பார்வை, அவர்கள் மீதான கரிசனை
– மேலைநாட்டார் வருகையோடு தமிழ்ச்சூழலுக்குள் வேரூன்றியது. பெண் கல்வி, பெண்களுக்கு
தொழில், வாக்குரிமை என அவர்களது சமூக அந்தஸ்து உயரவே மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளும்
வலுப்பெற ஆரம்பித்தன.
அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் - பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்கவே இலக்கியங்கள் வாயிலாகவும் பெண்ணியம் பல எழுத்தாளர்களால் பேசப்பட்டன.
19 ஆகஸ்ட் 2021
சர்வதேசப் படைகள் வெளியேறியபின்பு, ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தாலிபன்கள் எல்லா ஊர்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். இருபது ஆண்டுகள் சண்டை நடந்தபின்பு ஏன் அமெரிக்கா வெளியேற ஒப்புக்கொண்டது?
2001ல் நடந்த 9/11 நிகழ்வுக்குப் பிறகு நேட்டோ தாலிபன்களைக் காபூலை விட்டு வெளியேற்றியது.
பனையின் மீது தமிழர் பெருங்காதல் கொண்டிருந்திருக்
பனையின் குளம் , பனகுடி, பனஞ்சாவடி , பனங்குளம் , பனையூர், பனையப் பட்டி , வடக்குப் பனை வடலி, தீய்ந்த பனைப்பட்டி , கலந்த பனை , பனங்காட்டூர், திருப்பனையூர் , பனங்காடு , பொற்பனைக் கோட்டை.
இலக்கியங்களில் காட்டினாலும் தாங்கள் வாழுகின்ற இடங்களிலும் பனையினை விட்டுவிடத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை காட்டுகிறதல்லவா !
வெய்யில் என்று பாராமல் , மழை என்று பாராமல் ; ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து மக்களுக்கு - அவர்களின் வாழ்வில் பல நிலைகளிலும் பனையானது பயனை நல்கியே வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.
.
மீண்டும் தொடங்கும் மிடுக்கு.பீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறான் சிரித்திரன்
1963ஆம் ஆண்டு உதயமாகி, சஞ்சிகை வானில் தனக்கென தனியிடம் பிடித்து சரித்திரம் படைத்தவன் சிரித்திரன்.
35 வருட வெற்றிப் பயணத்தில் சிரித்திரன் பண்ணையில் செதுக்கப்பட்ட எழுத்துலக சிற்பிகள் பலபேர். அவர்களின் ஆதரவுடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியத்தின் ( Centre for Creativity and Innovation ) அரிய முயற்சி சிரித்திரனின் மீள் வருகை.
"செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் " என்ற சிரித்திரனின் தாரக மந்திரத்தோடு அதே சிரிப்போடும், சிறப்போடும் வெளிவந்து கொண்டிருக்கிறான் .
உலகத் தமிழ் உறவுகள் தம் கரம் நீட்டி சிரித்திரனை வரவேற்று, நீண்ட வெற்றிப் பயணத்திற்கு தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.
ஈழத்து, இந்திய மண்ணின் முதல் தமிழ் நகைச்சுவை சஞ்சிகை என முத்திரை பதித்த சிரித்திரன் உங்கள் இல்லங்களில் சிரிப்பையும் சிந்தனையையும் வாரி வழங்கட்டும்.
.
https://www.facebook.com/watch/?v=414169193249640
சீனாவின் பிரவேசம் இலங்கையில்
அதிகரித்ததையடுத்து சீன மொழியிலும் அறிவிப்பு பலகைகள் காட்சிக்கு வந்துவிட்டன. சமகால கொரோனோ பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், விமான நிலையங்களிலும் சீன மொழி ஒலிபரப்பாகலாம்.
சீனாவின் கொழும்பு போர்ட்
சிட்டி எதிர்காலத்தில் பல அதிசயங்களை இலங்கையில் நிகழ்த்தவிருக்கிறது.
அப்போது சீனமொழியில் வெளிவரும் அறிவிப்பு பலகைகள், சுவரொட்டிகளில் எழுத்துப்பிழைகள் நேர்ந்தால், அங்கு வாழும், வாழப்போகும் சீனப்பிரஜைகள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பது மாத்திரம் நிச்சயம்.
நடராஜா கருணாலிங்கம் ( வயது 75 ) என்னும் மின்சார தொழில் நுட்பவியலாளர்
கடந்த 11 ஆம் திகதி கொரோனோ தொற்றினால் மரணமடைந்ததையடுத்து, அவரது மனைவி ஜெயலக்ஷ்மி ( வயது 75 ) நேற்று 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
இவர்களது ஒரு மகன்
அவுஸ்திரேலியாவிலும் ஒரு மகள் இங்கிலாந்திலும் வசிக்கின்றனர்.
இந்த அடுத்தடுத்த மரணங்களினால்
இவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.
சமூக இடைவெளிபேணவேண்டிய சூழலில் இறுதி நிகழ்வுகளும் நடைபெறவில்லை.
.
கார் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடும் அருண் மனதளவில் கோழையாகவே இருக்கிறான். தனது பய உணர்வுகளை மறைக்க தினமும் மாலை நேரத்தில் மது அருந்துகிறார். பிரபுவின் தங்கை அருணை காதலிக்கிறாள் அவளின் காதல் தோற்க கூடாது என்பதால் பிரபு தானும் ஒரு குடிகாரனாக நடிப்பதுடன் அதன் காரணமாக விரைவில் இறக்கப் போவதாக நடிக்கிறார். இதைப் பார்க்கும் அருண் மதுவை விட்டு பிரபுவின் தங்கையை மணக்கிறார். ஆனால் பிரபு மீது குடிகாரன், திருடன் என்று எல்லாம் பழி சுமத்தப்படுகிறது.
இவ்வாறு அமைந்த படத்தின் கதை வசனத்தை மதுரை திருமாறன் எழுதியிருந்தார் வசனங்கள் அர்த்தமுள்ளதாக அமைந்தது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி என்ற பாடல் இன்றும் பலரின் மனக் கவலைக்கு ஆறுதல் தரும் பாடலாக ஒலிக்கிறது. பாடலில் இடம்பெறும் வரிகளான கடலில் விழுந்த ஒருவனுக்கு கை கொடுத்தேன் அவன் வெளியேற, கரைக்கு அவரனும் வந்துவிட்டான் கடலில் நான்தான் விழுந்துவிட்டேன் மூலம் படத்தின் கதையையே வெளிப்படுத்தி இருந்தார் கவிஞர். இசை கே வி மகாதேவன்.
தமிழ், மலையாளத் திரையுலகில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபலமாக விளங்கிய சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்த் திரைப்பட
உலகில் 1980களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபல நடிகையாக விளங்கியவர் சித்ரா. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலாக அறியப்பட்டவர் சித்ரா.
“டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம்.
“மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார் சிரித்தபடியே குடும்ப வைத்தியர்.
“எவ்வளவு காலமாக இது இருக்கு மிஸ்டர் சிவம்?”
“இரண்டு மாதங்களாக இருக்கு டொக்ரர்…”
“ஏதாவது குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடந்திருக்கா? ஐ மீன்… ஏதாவது துக்ககரமாக அல்லது அதீத சந்தோஷமாக?”
அதுவரையிலும் ஒன்றுமே பேசாமல், சிவத்திற்கு அருகில் இருந்த அவரது மனைவி தேவா வைத்தியரைப் பார்த்தார். பின்னர் சிவத்தைப் பார்த்தார். `இந்த மனிசன் ஏதாவது உளறிக் குழறி விடப்போகுது’ என்ற பயத்தில் சிவத்தின் கால்களை நசுக்கினார், கரப்பான்பூச்சி நசுக்குவது போல்.
“இவருக்கு ஒன்றுமே இல்லை டொக்ரர். தான் செத்துப்போவன் எண்டு பயப்படுகின்றார்”
நாட்டை நீண்ட காலம் மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராக வேண்டும்
முன்னேஸ்வரம் தேர் உற்சவம் இன்று (19/08/2021)
மேலும் 198 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 7,183 கொவிட் மரணங்கள்
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இனவாதத்தை முதலில் ஒழிக்க வேண்டும்
வடக்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும்
நாட்டை நீண்ட காலம் மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராக வேண்டும்
- ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய முழு உரை
சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே,
மதத் தலைவர்களே,
நண்பர்களே,கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தலிபான் தலைவர்கள் நாடு திரும்பினர்: புதிய அரசு அமைக்கும் பணிகள் தீவிரம்
ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐ.அ. இராச்சியத்தில் அடைக்கலம்
எதிரிகளை பிடிக்க தலிபான் வீடு வீடாக தேடுதல் வேட்டை
கடலுக்குள் எரிமலை வெடிப்பு: ஜப்பானில் புதிய தீவு தோற்றம்
ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 2000ஐ நெருங்கியது
தலிபான் தலைவர்கள் நாடு திரும்பினர்: புதிய அரசு அமைக்கும் பணிகள் தீவிரம்
இதுவரை கட்டாரில் தங்கியிருந்த தலிபான்களின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30
வழி: ZOOM செயலி, Facebook
இலங்கையர்கோனின் சிறுகதைகள்:
இ.இராஜேஸ்கண்ணன்
இலங்கையர்கோனின் கட்டுரைகள்:
இயல்வாணன்
இலங்கையர்கோனின் பிற படைப்புக்கள்:
சி.ரமேஷ்
கருத்துரை:
பேராசிரியர் செ.யோகராசா
நன்றியுரை:
அகில் சாம்பசிவம்
நடிகர்கள்: நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண்; இயக்கம்: மிலிந்த் ராவ்.
2011ல் கொரிய மொழியில் வெளிவந்த Blind திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த 'நெற்றிக்கண்'. இயக்குனர் மிலிந்த் ராவ் இதற்கு முன்பாக 'காதல் 2 கல்யாணம்', 'அவள்' போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.
துர்கா (நயன்தாரா) ஒரு சிபிஐ அதிகாரி. ஒருமுறை துர்கா காரை ஓட்டிவரும்போது ஏற்படும் விபத்தில் தம்பி இறந்துவிட, அவளுடைய பார்வையும் பறிபோகிறது. இந்தத் தருணத்தில் சென்னை நகரில் பல பெண்கள் காணாமல் போகிறார்கள். துர்கா ஒரு முறை கால் டாக்ஸியில் பயணம் செய்யும்போது, அந்த ஓட்டுனர் நடந்துகொள்ளும்விதம் விபரீதமாக இருப்பதோடு, விபத்தும் ஏற்படுகிறது.
அதிலிருந்து தப்பிக்கும் துர்கா இது குறித்து காவல்துறையில் தகவல் தெரிவிக்கிறாள் துர்கா. இதனை விசாரிக்கிறார் உதவி ஆய்வாளரான மணிகண்டன் (மணிகண்டன்). பெண்கள் காணாமல் போன நிகழ்வுகளுக்கும் இந்த கால் டாக்சி விபத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும் எனப் புரிகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே மீதப் படம்.
மிலிந்த் ராவ் இதற்கு முன்பாக இயக்கிய 'அவள்' திரைப்படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கியவர்தான் இதையும் இயக்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவது கடினம். அந்த அளவுக்கு படத்தில் ஓட்டைகள்.
தான் பயணம் செய்த கால் டாக்சியின் ஓட்டுநர் விபரீதமாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியதாகவும் காவல்துறையில் சொல்கிறாள் துர்கா. 'ஆப்' மூலம் பதிவுசெய்யப்பட்ட அந்த கால் டாக்சியின் ஓட்டுனர் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்தான் கதாநாயகியிடம் மோசமாக நடந்துகொண்டாரா என்று விசாரித்திருந்தால் பல விஷயங்கள் விளங்கியிருக்கும்.
ஆனால், அதைவிட்டுவிட்டு எந்தக் காரிலாவது கண்ணாடி உடைந்திருக்கிறதா எனத் தெருத்தெருவாக விசாரிக்கிறது காவல்துறை. அடுத்ததாக, அந்த சைக்கோ கொலைகாரன் மெட்ரோ ரயிலில் செல்வதை வீடியோ காலில் பார்க்கும் இளைஞன் ஒருவன், அந்த சைக்கோவின் படத்தை காவல்துறைக்கு அனுப்பியிருக்க முடியும். அதையும்விட்டுவிட்டு, அங்க அடையாளங்களைச் சொல்லி படம் வரைந்து, தேடுகிறார்கள்.
படம் நெடுக,கதாநாயகி செல்லும் இடங்களில் எல்லாம் மனித சஞ்சாரமே இல்லாமல் இருக்கிறது. பாலத்தின் மேல் விபத்தில் சிக்கினாலும் சரி, மெட்ரோ நிலையங்கள், மால்கள் என வில்லனிடம் மாட்டிக்கொண்டாலும் சரி எங்கேயுமே ஆட்கள் இருப்பதில்லை. ஒரு கட்டத்தில் வில்லன் தப்பிக்க வேண்டுமென்பதற்காக, காவல் நிலையத்திலும் 3 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
படத்தில் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. படம் நெடுக வன்முறையை சகிக்கமுடியாத வகையில் தொடர்ந்து காட்டுகிறார் இயக்குனர். நெற்றிக்கண் என படத்தின் பெயரைச் சொன்னால், இந்தக் காட்சிகளே மனதில் நிற்கின்றன. பெண்கள் மீதான வன்முறையையும் பாலியல் துஷ்பிரயோகத்தையும் அவ்வளவு அப்பட்டமாகக் காட்ட வேண்டிய அவசியம் இந்தக் கதையில் இல்லவேயில்லை. இருந்தும் அதை அவ்வப்போது காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.
படம் முழுக்கவே அடிவாங்கி கீழே விழுபவர்கள் சரியான நேரத்தில் எழுந்து ஏதாவது செய்கிறார்கள். இதெல்லாம் 'ஜோம்பி' படங்களில் நடப்பதைப்போலவே இருக்கிறது.
நகரையே பதற வைக்கும் ஒரு கடத்தல் வழக்கு குறித்து ஊடகங்கள் ஏதும் கவலைப்படவில்லை. சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் சர்வ அலட்சியமாக இந்த விவகாரத்தை டீல் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் காவல் துறையில் அந்த சைக்கோ சிக்கியதும், அவன் இருப்பிடத்தைச் சோதனை செய்யாமல், அவனிடம் உண்மை அறியும் சோதனை என்ற பெயரில் நேரத்தைக் கடத்துகிறார்கள். அந்த சைக்கோ, காவல்துறை ஆணையர் முன்பாகவே சவால்விட்டு, பிறகு தப்பிச் செல்கிறான்.
நயன்தாரா மட்டும் ஒற்றையாக நின்று கொலைகாரர்கள், பேய்கள், போதை மருந்து கடத்தல்காரர்கள் ஆகியோரைச் சமாளிக்கும் பல படங்கள் வந்துவிட்டன. அதில் இதுவும் ஒன்று. மிக சுமாரான ஒன்று. நன்றி பிபிசி தமிழ்