இன, மத, பேதமற்ற நாட்டை தருவோம் - அனுர குமார திசாநாயக்க - செ . பாஸ்கரன்


 

அனுரவின் ஆட்சி இலங்கையின் மீட்சிக்கு வழியமைக்குமா ! ச. சுந்தரதாஸ்

 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியை


சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க தெரிவாகியள்ளார். தீவிர இடதுசாரி கட்சியான ஜே வி பியின் வழித்தோன்றலான தேசிய மக்கள் கட்சி காலத்துக்கு ஏற்றாற் போல் தனது சில கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு இந்த வரலாற்று வெற்றியினை அடைந்துள்ளது .

ஜே வி பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றிக்கு

அவர்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டியது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்குத்தான்! சிங்கள மக்களின் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளை பெற்று அரியாசனம் ஏறிய அவரால் உருப்படியாக ஓர் ஆணியைக் கூட புடுங்க முடியாமல் போனதால் பதவியை விட்டு மட்டுமன்றி, நாட்டை விட்டும் அவர் தப்பி ஓட வேண்டி வந்தது. அவரின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார சரிவும் மக்களுக்கு கடும் சுமையையும், கடன் சுமையையும் ஏற்றப்படுத்தியது. அதே சமயம் அவரின் ஆட்சிக்கு எதிராக ஜே வி பியின் இன்னொரு பிரிவான முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம் தலைமையின் கீழ் நடத்தப் பட்ட அரகலய (போராட்டம்) சற்று தாமதித்து தந்த பரிசுதான் இந்த ஜனாதிபதி ஆசனம்.


ஆனால் இதனை சொல்லும் போதே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அனுரகுமாரவுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி அவருக்கு வாக்களித்த பெரும்பாலான மக்களின் மன வெளிப்பாடேயாகும். அவரும் சரியில்லை, இவரும் சரியில்லை ஆகவே அனுரவுக்கு கொடுத்து பார்ப்போம் என்ற மன பாங்கிலேயே அனுரவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். சென்ற 2019 தேர்தலில் கோட்டபாயவுக்கு வாக்களித்த அதே மனவோட்டத்திலேயே இவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க ஒன்றும்

அரசியல் கற்று குட்டி அல்ல. ஏற்கனவே சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் பதின்னான்கு மாதங்கள் விவசாய , காணி அமைச்சராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பின் இருபது ஆண்டுகள் எதிர் கட்சியில் அமர்ந்து விட்டு இப்போது மகுடம் தரிக்கின்றார் . அனுரவுக்கு கிடைத்துள்ள நாட்டின் அதிபர் பதவி உண்மையில் ஓர் முள் இருக்கையாகும். வங்குரோத்து ஆகிவிட்ட நாட்டின் பொருளாதார நிலையை மீண்டும் கட்டியெழுப்புதல், உள்ளூர் உற்பத்தியை சீர்படுத்துதல், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற உடனடி சிக்கல்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியு ள்ளார். அதே சமயம் இவற்றை செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் அவர் பெற

வேண்டியுள்ளார். அதற்கு ஜே வி பி அல்லது இன்றைய தேசிய மக்கள் கட்சி தங்கள் கொள்கையில் சில நெகிழ்ச்சி போக்கினை மேற் கொள்ள வேண்டியிருக்கும். இதனால் ஏற்றப்படக் கூடிய கொள்கை மாற்றங்கள் அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை ஏற்றப்படுத்தா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
அனுர முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு பாரிய சவால் அவரின் வெளியுறவு கொள்கையாகும். இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் அவரை பொறுத்த வரை இருபுறமும் கூரான சவரக் கத்தியாகும். இரண்டில் எதனை பிழையாக கையாண்டாலும் பாரதூரமாக அறுத்து விடும். ஆகா வெளியுறவு கொள்கை, நிதிக் கொள்கை இரண்டையும் சரிவர கையாள அனுபவஸ்தர்களின் , திறமையாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ள அவர் தயங்கக் கூடாது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

 





































நன்றி Daily Ceylon NEWS

படிப்போம் தெரிவோம் பக்குவம் பெறுவோம் !










மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



சுவையான உணவு சுகத்தை அளிக்கும்
கனிவான இசை களிப்பைக் கொடுக்கும்
பெருமளவு பணம் இன்பம் அளிக்கும்
தரமுடை நூல்களே அறிவைப் பெருக்கும்

தேடித் தேடி நூல்களைப் படி  
தெரிந்து தெரிந்து நூல்களைப் படி
ஓடி நாடி நூல்களைப் படி
உயரும் அறிவு உளமும் தெளியும்  

முக்கனி சர்க்கரை கற்கண்டு தேனும்
முழுச்சுவை என்று நாவே சொல்லும்
நாவின் சுவையோ நற்சுவை அன்று
நல்ல நூல்களே நல்கிடும் நற்சுவை 

பழத்தின் சாற்றைப் பலரும் விரும்புவர்
பருகும் அனைத்தும் அமுதமாய் எண்ணுவர்
அமுதம் என்பது அறிவுடை நூல்களே
அறிந்தால் அனைவரும் அடைகுவர் இன்பமே

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

 




கீழே 4 பக்கங்கள் உள்ளன

பக்கத்தை பெரிதாக்கி படிக்கவும்



மருந்தை பார்த்தால் சுத்த மண்!

 


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்                   



மண்ணைத் உண்பதில் சில மருத்துவ பலன்கள் இருப்பதாக ஜஸ்ட் போன்ற மேல்நாட்டு வைத்தியர்கள் இப்பொளுது கண்டறிந்துள்ளனர், ஆனால் இயற்கை வைத்தியத்தில் இதன் பலனை விரிவாக கூறிஉள்ளார்கள். அதை மகாத்மா காந்தியும் தன் வாழ்வில் சோதனை செய்து பார்த்து, தாம் கண்ட பலனை ‘ஆரோக்கிய திறவுகோல் ‘என்ற நூலில் எழுதியுள்ளார்.

வைத்தியத்திற்கு மண்ணை பயன்படுத்துவதை  நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அந்த உண்மையை இன்று சில சம்பிரதாய நம்பிக்கைகளிலும் காண முடிகிறது.

நாட்டரசன் கோட்டை கம்பர் சமாதியை சுற்றிலும் கிடக்கும் செம்மண்ணை  எடுத்துப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதை கொஞ்சம் தண்ணீர் போட்டு கரைத்துக் குடிப்பார்கள்.  

தஞ்சாவூர் ஜில்லாவில் வைத்தீஸ்வரன் கோவிலில்  கொடுக்கப்படும் சின்னஞ்சிறு மண் உருண்டைகளை மருந்தாகச் சாப்பிடுக்றார்கள். இதனால் எந்த நோயும் தீர்ந்து விடும் என்ற நம்பிகை இன்றும் பக்தர்கள் இடம் இருந்து வருகிறது .

மண் மருந்து பற்றி காள மேகப் புலவர் தமாஷாக பாடுகிறார்

 

                           மண்டலத்தில் நாளும்

                                வயித்தியராய் தாம் இருந்து

                           கண்டவினை தீர்க்கிறார்

                                 கண்டீரோ? தொண்டார்

                           விருந்தைப்பார்த்(து) உண்(டு) அருளும்

                                 வேளூர் எம்  நாதர்

                           மருந்தைப்பார்த்தால் சுத்த

                                 மண்,!

 

போர்னியோவில் நடந்த கொலைகள்


அவுஸ்திரேலிய , நியூசிலாந்து மற்றும் நேசநாடுகளின் 2428 இளைஞர்கள் ஜப்பானிய போர் வீரர்களால் பட்டினிபோட்டு, சித்திரவதை செய்து  படுகொலை  கொலை செய்யப்பட்ட இடத்தில் நான் நிற்கிறேன்  என்றபோது  இதயம் கனத்தது.

 எண்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவங்களை இரை மீட்டாது கடந்துபோக  முடியாது. இப்படியான சம்பவங்களை மறந்து விடுதல் மீண்டும் அவைகள் நடப்பதற்கு வழிவகுக்கும். முக்கியமாக ஜனநாயக காலத்தில் ஒவ்வொருவரும் அறிவதன் மூலம் தவறானவர்கள்  அரசியல் செய்வதைத் தடுக்க முடியும். ஹிட்லர் போன்றவர்கள் தேர்தல் முறையிலேயே ஆட்சிக்கு வந்தார்கள்.

யுத்தங்கள்,  அதனால் ஏற்படும்  மரணங்களை பத்திரிகைளில்


செய்தியாகவோ,  தொலைக்காட்சியில் காட்சியாகவோ பார்க்கும்போது,  அவை நமக்குத் தூரத்துப் பச்சையாகி விடுகிறது. மனத்தில் நிற்பதில்லை தற்போது காசாவில் நடந்த விடயங்கள் பக்கத்து நாடுகளுக்கே உறைக்கவில்லை. அதேபோல்  இலங்கையில் நடந்த மரணங்கள் பல இலங்கைத் தமிழர்களுக்கே  புரியவில்லை. மரணங்கள் தங்கள் பரப்புரைகளுக்கு வலியூட்டும் என அதிக மரணங்களுக்காகக் காத்திருந்தனர்.  எல்லா நாட்டிலும்  சமூகங்கள்,  காலம் காலமாக துன்பியல் சம்பவங்களாக நடந்தவற்றை இலகுவாக மறந்து விடுகிறது.  ஆனால்   அந்த இடங்களிலிருந்தவர்களுக்கு மன ரீதியில் அல்லது உடல்  ஏற்படும் பாதிப்பு நிரந்தரமானது.  சமீபத்தில்  போர்னியோவிலுள்ள சாபா மாநிலத்திற்குப்  போனபோது எனக்கு அப்படியான அனுபவம் ஏற்பட்டது. அதுவும் உடனடியாக அல்ல,  படிப்படியாகவே.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில 1971ம் வருடம் பல்கலைக்கழக புகுமுக வகுப்பான 11-12வருடங்களில் ஒன்றாகப்  படித்த ஐந்து பேர் மற்றொரு நண்பருடன் ஆறு பேராக  மலேசியாவின் சாபா மாகாணத்திற்குப்  போய்ச் சேர்ந்தது ஏப்ரல் 24 மாலையில் ஆனால் ஏப்ரல் 25 அன்சாக்(Anzac)  நாள் எனப்படும். அது அவுஸ்ரேலியர்களுக்கு முக்கியமான நாள்.

சன்டங்கன்(Sandakan) நகரில்  சங்கரி -லா ஹோட்டேலுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் எங்களுடன் வந்தவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியர்கள் என்பதால் ‘நாளை அதிகாலை நான்கு மணியளவில் இங்குள்ள மயானத்தில் பிரார்த்தனை நிகழ்வு நடக்க  உள்ளது.  இதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி பாதுகாப்பு அமைச்சர் வந்துள்ளார் ‘ என வழிகாட்டி அழைப்பு விடுத்தார்.

ஊதியம்!


-சங்கர சுப்பிரமணியன்



நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன். இன்றும் அங்கொன்றும்

இங்கொன்றுமாக கிடைக்கும் வாய்ப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்த பிரபலமான நகைச்சுவை நடிகர் என் வீடு தேடி வந்தார்.

"என்ன தம்பி எவ்வளவு பெரிய நடிகர் நீங்க, இந்த ஏழையின் வீடு தேடி வந்திருகிறீர்களே?" என்றேன்.


"ஒன்னுமில்ல அண்ணே! ஒரு சிறிய வேடம் இருக்கு. அதில் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேன்" என்றார்.


"இன்று நான் உள்ள நிலையில் வீடு தேடி வந்து இதைக்கேட்கணுமா, தம்பி?" என்றேன்.


"ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, நாளை படப்பிடிப்புக்கு வந்துடுங்க," என்று நேரத்தயும் படப்பிடிப்பு தளத்தயும் சொல்லி விட்டு சென்றார்.

 

அவர் சென்றதும் அப்படியே பிரமித்து அதே இடத்தில் இருந்தேன். என் மனைவி என்னை உலுக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தாள்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பித்து பிடித்தது போல் இருக்கீங்க?"


"இல்ல, எவ்வளவு பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்து நடிக்க கூப்பிட்டுட்டு போறாரே என்று நினைத்துப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன்."


"எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

இரண்டே நாள் படப்பிடிப்புத்தான். நடித்து முடுத்து விட்டேன் ஆனால் இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் என் தரித்திரமும் கூடவே சேர்ந்தே வரும் போலிருக்கு. என்ன மனிதர் இவர்? என் நிலைமை தெரிந்தும் இப்படி நடித்ததற்கு உண்டான பணத்தைக்

கொடுக்காமல் இரண்டு நாட்களாயும் பேசாமல் இருக்காரே என்று எண்ணினேன். இரண்டு நாள் போய் ஒரு வாரமும் ஆனது.

 

ஒரு நாள் திடீரென்று வீட்டின் முன் கார் வந்து நின்றது. எட்டிப் பார்த்தேன் அவர் தான் வந்தார்.

 

"அண்ணே மன்னிச்சுடுங்க, இரண்டு மூன்று நாட்களாக வெளி நாட்டில் படப்பிடிப்பு. அதனால் தான் என்னால் உங்களை பார்க்க முடியல" என்று சொல்லி வருந்தினார்.


"பரவாயில்லை தம்பி"


உங்க நடிப்புக்கான ஊதியத்தைக் கொடுக்கத்தான் வந்தேன்" என்று கையில் ஒரு மடித்த தாளையும் சில ரூபா நோட்டுக்களயும் சில நாணயங்களையும் கொடுத்து விட்டு, 


“அண்ணே மறுபடியும் மன்னிச்சுடுங்க. அடுத்த படப்பிடிப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். அப்ப உங்க நினைவு வரவே ஓடோடி வந்தேன்.” என்று சொல்லி மறைந்தார்.

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

 

- திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

September 18, 2024 3:51 pm 

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மாரடைப்பால் மரணமானார். நேற்று (17) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு போது அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.   நன்றி தினகரன் 

கவர்ச்சிக்கு வயது ஓர் எல்லையில்லை என்று நிருப்பித்த சி ஐ டி சகுந்தலா - ச .சுந்தரதாஸ்

 தமிழ் திரையுலகம் எத்தனையோ விதமான கதாப் பாத்திரங்களை


ஏற்று நடித்த நடிகைகளை பார்த்துள்ளது. குணசித்திர வேடம், நகைச்சுவை வேடம், வில்லி வேடம் என்று மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நடுவில் சில தினங்களுக்கு முன் மறைந்த சி ஐ டி சகுந்தலா இலகுவில் ஓரங்கட்டப்படக் கூடியவர் அல்லர். கவர்ச்சி நடன நடிகையாக அவர் அடையாளம் காணப்பட்ட போதும் அவருக்குள் இருந்த ஆற்றல், வேகம், துடிப்பான நடன அசைவுகள் என்பன அவரை ஏனைய நடிகைகளுக்குள் இருந்து வேறுபடுத்திய போதும் மற்றய நடிகைகளுக்கு அவர் எந்த விதத்திலும் குறைந்தவராக கருதி விட முடியாது.


சகுந்தலா 1950 ம் ஆண்டுகளின் இறுதி பகுதிகளிலேயே திரையுலகிற்குள் இளம் நடன நடிகையாக நுழைந்து விட்டார். பல நடனப் பாடல்களில் கோஷ்டி நடன மாதர்களுக்குள் அவரும் ஆடிக் கொண்டிருந்தார். கதாநாயகியாக நடிப்பவர்களையே கமெரா வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே , ஒண்டிரண்டு குளோஸ் அப் காட்சிகளில் சகுந்தலாவின் அழகிய இளம் முகத்தை காணக் கூடியதாகவே இருந்தது. ஆனாலும் அவரின் திறமை எல்லாம் கடலில் கரைந்த பெருங்காயமாகவே கரைந்தது. என்றாலும் அவரின் முயற்சிக்கு பங்கம் வரவில்லை. தொடர்ந்து படங்களில் கோரஸ் நடனம் ஆடிக் கொண்டே இருந்தார்.

அப்படி ஆடிக் கொண்டிருந்தவருக்கு படிக்காத மேதை படத்தில் சிறு

வேடம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின் அவரை ஓரளவு அடையாளம் காட்டிய படம் போலீஸ்காரன் மகள். ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இப் படத்தில் கதாநாயகனால் அச்சுறுத்தப் படும் பெண்ணாக தோன்றி நடித்தார் சகுந்தலா. பீம்சிங், ஸ்ரீதர் படங்களில் நடித்த போதும் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள் ஏதும் அவருக்கு கிட்டவில்லை. தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தவருக்கு 1970 ஆண்டு பொன்னான ஆண்டாக அமைந்தது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் சி ஐ டி சங்கர் படத்துக்கு துணிந்து சகுந்தலாவை கதாநாயகியாக அமர்த்தினர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த இந்த ஆக்ஷ்ன் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் சகுந்தலா. குறிப்பாக தை பூசத் திருநாளிலேயே ராஜா பெண் பார்க்க வருவாரடி, பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா ஆகிய பாடல்களில் சகுந்தலாவின் நடனம் தூள் கிளப்பியது. தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஜஸ்டிஸ் விஸ்வநாதன் படத்திலும் ஹீரோயினாக ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்தார் சகுந்தலா. இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்தது ஒரு கனமான வேடம். அதனை குறையின்றி செய்திருந்தார் அவர். இதே ஜஸ்டிஸ் விசுவநாதன் சில ஆண்டுகள் கழித்து ரஜினி நடிப்பில் பொல்லாதவன் என்று உருவெடுத்த போது சகுந்தலா நடித்த அதே வேடத்தை லஷ்மி நடித்திருந்தார்.

கலியுகக் கண்ணன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 புராணப் படங்களிலும், பக்திப் படங்களிலும் கடவுள் அவப்போவது


தோன்றி பக்தர்களுக்கு அருள் புரிவதை பார்த்துள்ளோம். ஆனால் சமூகப் படம் ஒன்றில் கடவுள் திடீர் திடீர் என்று தோன்றி திருவாய் மலர்ந்தருள்வதை முதல் தடவையாக 1974ம் வருடம் வெளி வந்த ஒரு படத்தில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டியது. அந்தப் படம்தான் கலியுகக் கண்ணன்.


திரையுலகில் பாடலாசிரியராக பயணித்துக் கொண்டிருந்த கவிஞர் வாலி இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தார்.ஏற்கனவே கிருஷ்ண விஜயம் என்ற பெயரில் அவர் எழுதி மேடையேறிய நாடகமே கலியுகக் கண்ணனாக படமானது. வாலி தனது இந்த புதிய முயற்சியில் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கடவுளும், பக்தனும் உரையாடும் காட்சிகளில் அவரின் வசனங்கள் பளிச்சிட்டன.

சாதாரண ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் சாம்பு ஐயர் கடும்

பொருளாதார சிக்கலுக்கு நடுவே தன் மனைவியுடனும், மகனுடனும் வாழ்க்கை நடத்துகிறார். இத்தனைக்கும் முவரும் தொழில் செய்கிறார்கள் , ஆனாலும் குடும்பம் கஷ்ட ஜீவிதமாகவே உள்ளது. ஒரு நாள் பால்காரிக்கு கொடுக்க வேண்டிய ஐம்பத்தொரு ரூபாயை கொடுக்க வழியில்லாத சாம்பு தன் மனைவி கடவுளுக்கு செலுத்த வைத்திருந்த உண்டியலில் இருந்து காணிக்கைப் பணத்தை எடுத்து விடுகிறார். அன்றிரவு கிருஷ்ண பகவான் சாம்பு முன் தோன்றி தனக்குரிய ஐம்பத்தொரு ரூபாயை கேட்கிறார். அது மட்டுமன்றி சாம்புக்கு மறு நாள் இரண்டாயிரம் ருபாய் கிடைக்கப் போவதையும் , அவரின் பணச் சிக்கல் முடிவுக்கு வரப் போவதையும் சொல்கிறார் . அப்படி தனது பணக் கஷ்டம் தீர்ந்தால் பதிலுக்கு ஐநூற்று ஐம்பத்தொரு ரூபாயை கிருஷ்ணருக்கு தருவதாக சாம்பு வாக்களிக்கிறார்.

மறுநாள் அவர் கலந்து கொண்ட அதிர்ஷ்ட போட்டி ஒன்றில் இரண்டாயிரம் ருபாய் சாம்புவுக்கு அதிர்ஷ்ட பரிசாக விழுகிறது.அத்தோடு அவரின் தரித்திரமும் தொலைகிறது. அடுத்தடுத்து வாழ்வில் முன்னேறி ஐந்து நட்சத்திர ஹோட்டல் முதலாளியாகிறார் சாம்பு. ஆனால் வாக்களித்த மாதிரி ஐநூற்று ஐம்பத்தொரு ரூபாயை கிருஷ்ணருக்கு திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்துகிறார். கிருஷ்ணரும் அவ்வப்போது சாம்பு முன் தோன்றி பணத்தை கேட்கிறார்.

இலங்கைச் செய்திகள்

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று முதல் ஆரம்பம்

மிஸ் இன்டர்நேஷனல் – 2024 முதலிடம் வென்ற திலினி

இந்திய துணை தூதர அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பு

“வோக்ஸ்வேகன்” தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறப்பு


இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை

சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்ைக

September 16, 2024 6:00 am 
  • எதிர்வரும் தேர்தலில் மக்கள் அதனை தீர்மானிக்க வேண்டும் – IMF தெரிவிப்பு 

உலகச் செய்திகள்

ஹிஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து 26 பேர் பலி; பலர் காயம்

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றம்

பேஜரை அடுத்து வோக்கி டோக்கிகள் வெடிப்பு: இஸ்ரேல்–லெபனான் போர் பதற்றம் அதிகரிப்பு

காசா போர் நிறுத்தத்திற்கு பிளிங்கன் தீவிர முயற்சி: உயிரிழப்பு 41,272 ஆக அதிகரிப்பு

14% வருடாந்த வளர்ச்சியை நோக்கி நகரும் இந்திய பாதுகாப்பு சந்தை

தாய்வானின் கடற்பரப்புக்குள் 835 சீனப் படகுகள் ஊடுருவல்

பங்களாதேஷ் இராணுவத்திற்கு நீதி அதிகாரம்: தேவையெனில் ‘சூடு’ நடத்தவும் அனுமதி

இஸ்ரேலியப் படையினரின் கொடிய செயலால் பரபரப்பு

காசாவில் எகிப்து எல்லையை நோக்கி இஸ்ரேலியப் படையினர் முன்னேற்றம்


ஹிஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து 26 பேர் பலி; பலர் காயம்

- இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு சதி

September 19, 2024 7:28 am 

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 5 மாதங்களுக்கு முன் வாங்கிய 5,000 பேஜர் (Pagers) மற்றும் வால்கி டோக்கி (Walkie Talkie) சாதனங்கள் கடந்த செவ்வாயன்றும் புதன் அன்றும் வெடித்ததில் இதுவரை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பேஜர்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தாய்வான் தொடக்கம் புடபாஸ்ட் வரை தொடர்புபட்டுள்ளது. இவை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பாதுகாப்புக் கட்டமைப்பை முறியடித்துள்ளது. நாடெங்கும் ஆயிரக்கணக்காக பேஜர்கள் வெடித்த நிலையில் சுமார் 3,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் லெபனானுக்கான ஈரான் தூதுவ அதிகாரிகளும் உள்ளனர்.

இலக்கியவெளியின் “வ.ஐ.ச.ஜெயபாலன்” சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு