நினைவுகளின் சங்கமம் பத்மநாதன் ஐயா - செ. பாஸ்கரன்


 ."மலரும் மெட்டுக்கள்" உங்கள் விருப்பப் பாடல்களை விரும்பிக் கேட்க விரும்பினால் தொலைபேசியை அழுத்துங்கள் , இது என்னுடைய குரல் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் செவ்வாய்கிழமை இரவுகளில் ஒலிக்கின்ற அந்தக் குரல்.  அறிவிப்பை கொடுத்துவிட்டு தொலைபேசியை பார்க்கின்றபோது மழைச்சாரல் மெல்லத் தூவுவது போல் தொலைபேசியில் உள்ள மின்விளக்குகள் அசைய தொடங்கிவிடும் . தொலைபேசியில் நேயர்களோடு உரையாடும் நிகழ்வாக இருக்கும். வானொலி நிலையத்தில் இருந்துகொண்டு மக்களோடு உரையாடுவது , அவர்களோடு பல விடயங்களை விவாதிப்பது, பேசுவது இது எல்லாம் மனதை நெகிழ வைக்கின்ற விடயமாக இருக்கும்.

பல புதிய குரல்கள் பல அறிந்த குரல்கள் இப்படி விதவிதமான குரல்கள் அந்த தொலைபேசி ஊடாக வந்துபோகும். வணக்கம் என்று கூறியதும் வணக்கம் ஐயா என்று பாசத்தோடு ஒலிக்கின்ற ஒரு குரல் அவரை நேரில் பார்த்து பேசுவது போல் இருக்கும். இவ்வளவு சாந்தமாக, அன்பாக, இனிமையாக அந்தக் குரல் பேசும் . நான்தான் ஐயா பத்மநாதன்  பேசுறன் என்பார் காலம்சென்ற பத்மநாதன் ஐயா அவர்கள். சொல்லாமலே அவருடைய குரல் அவரை யாரென்று காட்டிக் கொடுத்துவிடும் ஆனாலும் தன்னுடைய பெயரை சொல்லியே பேசுவார். என்னிலும் பார்க்க எத்தனையோ வயசு மூத்த பெரியவர் ஆனால் அவர் பேசுகின்ற போது என்னை ஐயா என்றுதான் அழைத்துக் கொள்வார். நான் பலமுறை கேட்டிருக்கிறேன் ஏன் ஐயா நீங்கள் பெயரை சொல்லியே அழைக்கலாம் என்பேன் ஒரு சிரிப்பு ஒரு புன்னகை அவ்வளவுதான். தொடர்ந்தும் அப்படியே தான் அழைத்தார்.

பாடல்களைப் பற்றி பேசுவார். இவருடைய வயதொத்தவர்கள் பழைய பாடல்களை ரசித்து கொண்டிருப்பார்கள், பழைய பாடல்களில் இருக்கின்ற இனிமை புதிய பாடல்களிலே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் இவர் கேட்பதில் பல புதிய பாடல்கள் ஆகத்தான் இருக்கும். பல புதிய பாடல்களை எனக்கு அறிமுகம் செய்தவர் திரு பத்மநாதன் ஐயா அவர்கள். "ஐயா இந்த படத்துல ஒரு பாட்டு ஒன்று வந்திருக்கு கேட்ட நீங்களோ தெரியாது" என்பார் சில வேளைகளில் அந்த பாடலை நான் கேட்டு ரசித்து இருப்பேன் சில வேளைகளில் நான் கேட்காமல் இருந்திருப்பேன். அந்த பாடலை உடனடியாக தேடி எடுத்து கேட்டு பார்ப்பேன் மிக இனிமையாக, எனக்குப் பிடித்ததாக இருக்கும். அவருடைய அந்த ரசனையும் என்னுடைய ரசனையும் எங்கோ ஒரு இடத்தில் ஒத்துப் போகின்றததாக இருக்கும்போல் தெரிகின்றது.


மெல்பனில் நடந்த ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தியின் நூல் வெளியீட்டு அரங்கு


அவுஸ்திரேலியாவில்  மெல்பனில் வதியும் சமூகப்பணியாளரும்,  தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான  சபாரத்தினம் சுந்தரமூர்த்தியின்             Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு  கடந்த  26 ஆம் திகதி சனிக்கிழமை , மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில்  நடைபெற்றது.

சுந்தரின் புதல்வி திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய  இந்நூல்வெளியீட்டு அரங்கை,  இந்த இணைப்பில் வரும் படங்களில் பார்க்கலாம்.


தெள்ளத் தெளிவுடனே சிந்தித்தல் நங்கடனே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிவுடனே சிந்தித்தல் நங்கடனே 
கள்ளங் கபடமதை கனவதிலும் காணாமல்
உள்ளுவதை உயர்வாக உணர்வுடனே கலந்திடுவோம்  !

வெள்ளமென வேகமுடன் வீழ்த்தவரும் வினைகளையும்
வெங்கொடுமைத் தீயெனவே பொசுக்கவரும் வேட்கையையும் 
பொங்கிவரும் ஆசையெனும் பொல்லாத ஆற்றினையும்
எங்களிடம் வாராமல் இருப்பதற்கு இறைநினைப்போம்  !

பசித்திரு தனித்திரு விழித்திரு நினைத்திரு 
அணைத்திரு அகற்றிடு ஆணவம் ஒதுக்கிடு
படித்திடு திருமுறை பகர்ந்திடு நல்லுரை
இருத்திடு மனமதில் இறையது விருப்பினை  ! 

வெறுத்திடு பகைமையை விரட்டிடு பொய்மையை
பெருக்கிடு மெய்மையை இருத்திடு பொறுமையை 
நசுக்கிடு கோபத்தை நயந்திடு தர்மத்தை 
இருத்திடு கருணையை இறுக்கிடு இறையடி !  

அஞ்சலிக்குறிப்பு : நீங்காத நினைவுகளில் நிலைத்திருக்கும் ஆறுமுகம் பத்மநாதன் முருகபூபதி


எமது தமிழ்சமூகத்தில்,  மழைக்கு முக்கிய பண்பாட்டுக்கோலம்  காலம் காலமாக நீடித்துள்ளது.

முழு உலகிற்கும் மழையைத்  தரும் இயற்கையை போற்றிவரும் எமது சமூகமும்,  வீட்டுக்கு திடீரென ஒரு விருந்தினர் வந்துவிட்டால்,   “ மழைதான் வரப்போகிறது  “ என்பார்கள்.  எவரதும் வாழ்வில் வசந்தம் வீசினால்,  முன்னேற்றம் தென்பட்டால்,  “ அவர் காட்டில் மழை பொழிகிறது  “ என்பார்கள்.

இவ்வாறு மழை குறித்து பல்வேறு கருத்தியல்கள் வாழ்கின்றன. 

தான் படைத்த குறளில், தமிழ் என்ற சொல்லே இடம்பெறாதவகையில் உலகப்பொதுமறை எழுதிய திருவள்ளுவரும் கூட 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

( அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் குறள் எண்: 55 )

மழை குறித்து எழுதி வைத்துள்ளார்.

இந்த அஞ்சலிக்குறிப்பினை மழைகுறித்த பதிவுடன்


தொடங்குவதற்கு  முக்கிய காரணம்  இம்மாதம் 22 ஆம் திகதி சிட்னியில் மறைந்த எமது அருமை நண்பர் – அன்பர் ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் பற்றிய நினைவுகள்தான்.

அவர் மறைந்திருக்கும் திகதியில்தான் எத்தனை இரண்டு இலக்கங்கள் பாருங்கள்: 22 -02 -2022.

இரண்டு தேசங்களில் வாழ்ந்து மறைந்திருக்கும் ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள்,  என்னைவிட  பதினைந்து வயது மூத்தவர். ஆனால், இரண்டாயிரமாம் ஆண்டின் பின்னர் அறிமுகமாகிய அவர் என்னோடு வயது வித்தியாசமின்றி தோழமையுடன் உறவாடியவர்.

அவரை பல வருடங்களுக்கு முன்னர்  முதல் முதலில் கொழும்பில் சந்தித்த நாளன்றும் நல்ல மழை பெய்தது.  அவரது வீட்டு வாசல்படியேறும்போது,   “ வாருங்கள்…. மழையையும் அழைத்து வந்திருக்கிறீர்கள்  “ என இன்முகத்துடன் அழைத்து,  துடைப்பதற்கு துவாய் தந்தவர்.

கடந்த 24 ஆம் திகதி சிட்னியில்  அவரை, அன்பு மனைவி, மக்கள், உறவுகள் , நட்புகள் ,  அன்பர்கள் வழியனுப்பிவைக்கும்போதும் கடுமையான மழை. 

அப்போது நான் வதியும் மெல்பனில் கடும் கோடை. சூரிய பகவான் எம்மை  சுட்டெரித்துக்கொண்டிருந்தார். சிட்னியில் வருண பகவான், குறைவின்றி மழையை பொழிந்துகொண்டிருந்தார்.  இயற்கைதான் எத்தனை விநோதங்களை எமக்கு காண்பிக்கிறது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -04 “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் மூன்றாம் அத்தியாயம் மேற்கு அவுஸ்திரேலியாவில் கனவில் வந்த கல்வியங்காடு !! முருகபூபதி


இரண்டு நாட்களும் நகர்ந்த வேகத்தில் அவுஸ்திரேலியாவின் – மேற்கு மாநிலத்தின் இயந்திர கதியிலான துரிதத்தை சந்திரன் உணர்ந்துகொண்டான்.

அவன் நித்திரைவிட்டு எழுவதற்கு முன்னமே அவர்களிருவரும் தனித்தனி காரில் சென்று மாலையானதும் முந்திப்பிந்தி வந்து சேரும்போது  தொலைக்காட்சியில் மாலைச்செய்தியைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

வீட்டுக்குள்ளே அடங்கி அவன் புழுங்கிவிடக்கூடாது என்பதற்காக


வேலையால் திரும்பியதும் அவனையும் அழைத்துக்கொண்டு கடற்கரைப்பக்கமோ, பூங்காக்களைத் தேடியோ அவர்கள் புறப்படுவார்கள்.

வசந்தி வேலை அசதியால் இரவில் சமைக்கப் பஞ்சிப்படும்போது, மக்டொனால்ட்ஸ் ட்றைவ் இன்னில் ம்பேக்கர், சிக்கன், சிப்ஸ் என்று மூவருமே வயிற்றை நிரப்பிக்கொள்ளும்போது, - சந்திரனை பணம் கொடுக்கவிடாது தடுப்பதில் அவர்கள் இருவருமே கண்ணாக இருந்தனர்.

ஒருநாள் சந்திரன் கேட்டான்:  “அவுஸ்திரேலியா எப்படி…? உங்களிருவருக்கும் பிடித்துக்கொண்டதா…?  “ கிழங்கு சிப்ஸை சுவைத்துக்கொண்டிருந்த வசந்தி,  “ வந்தாயிற்று… பிடிக்கத்தானே வேண்டும்.  “ என்றாள்.

வசந்தி சுரத்தில்லாமல் பேசுவதாகப்பட்டது சந்திரனுக்கு.

“ ஆரம்பத்தில் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. எதுவுமே அப்படித்தான் சந்திரன். புது நாடு – புதுவீடு – புது உணவு – புது நண்பர்கள்… முதலில் இனம்புரியாத தயக்கத்தை தருவது இயல்புதான். எந்தச் சூழ்நிலையையும் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தனித்திறமை வேண்டும்தான். லண்டனுக்குப் படிக்கப்போயிருந்தபோது, எனக்கு சரியான Home sick இருந்தது. பிறகு எல்லாம் சரி. இங்கே வந்தும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிட்டுது. என் பாதி வாழ்க்கை இந்து சமுத்திரத்துக்கு அப்பால்தான் என்று சாத்திரியார் சொன்னதாக அம்மா முன்பு சொன்னது ஞாபகம்.   வெகு நிதானமாக பாலேந்திரா பேசுவது சந்திரனுக்கு பிடித்திருந்தது.

வசந்தியின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்வது குறைவாக இருந்தாலும்,  எதனையும் நறுக்குத் தெறித்தாற்போல் பேசுவதனால் அவளுடன் இயல்பாகப் பேசுவதற்கு சந்திரன் தயங்கினான்.

 “ வசந்திக்கு இந்த லைஃப் துப்பரவாகப் பிடிக்கவில்லை. அவவின்ர தலைவிதி என்னைப்பிடிச்சுப்போச்சுது… வந்து சேர்ந்திட்டா…. “

"காட்டுக்குயில்" படைத்த நிரோஜினி ரொபர்ட் பேசுகிறார்

 

கானா பிரபா


ந்த ஆண்டின் முற்பகுதியில் "காட்டுக்குயில்" என்ற  கவிதை நூல்
வழியாகப் படைப்புலகில் தன் முதற் பதிப்பை அரங்கேற்றியிருக்கும் சகோதரி நிரோஜினி ரொபர்ட் ஐ நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நிகழ்ச்சிக்காகவும், வீடியோஸ்பதி காணொளித் தளத்துக்காகவும் சந்தித்திருந்தேன்.

கவிஞர் வாலியின் பாடல் வரிகளின் ஆரம்ப அடிகளைக் கொண்ட இரண்டு நூல்கள் இந்த ஆண்டில் வெளிவந்திருக்கின்றன. ஒன்று நிரோஜினி கொடுத்த "காட்டுக்குயில்" இன்னொன்று என்னிடமிருந்து SPB பாடகன் சங்கதி. 

இன்று Nirojini Robert அவரது பிறந்த நாளில் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிரோஜினி.

https://www.youtube.com/watch?v=W-ily2eAYDI&t=65s



சீவனிலே சிவத்தைக் காணும் சீரிய சைவம்!


பல்வைத்திய கலாநிதி   ' சிவஞானச்சுடர்
பாரதி இளமுருகனார்

                               

 

அன்றொரு நாள்…..

 

வீதியிலே வேகமாக விரைந்து வந்த

       மிகப்பெரிய வாகனத்தால் தாக்குண் டநாதன்

நாதியற்ற வன்போலக் குற்றுயி ரோடு

       நாலடிக்கு வீசப்படக் கண்டே ஒருவன்

சாதிமதம் பார்க்காது ஓடி வந்து

       தாங்கிமெல்லத் தூக்கிமுத லுதவி செய்து

பீதியோடோர் மருத்துவமனை தனிலே சேர்த்துப்

       பிழைக்கவைத்த பரனைப்பார்த்து நாதனும்கேட்டான்….

 



 

 

 

 

 

படித்தோம் சொல்கின்றோம் : எம். வாமதேவனின் நீங்காத நினைவுகளில்…. மலையக மண்ணின் மைந்தர்கள் முருகபூபதி


நினைவுகள் சாசுவதமானவை. நினைவுகளை தேக்கி வைப்பதற்கு நினைவாற்றலும் தேவை.  அத்துடன் நினைவுகள்தான் மனச்சாட்சி. அத்துடன் நீதி புகட்டும் ஆவணம்.

இலங்கையில் பசுமையை படரச்செய்த மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, மலையகத்தின் ஆத்மாவை கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் பதிவுசெய்த சில ஆளுமைகள் பற்றிய தனது பசுமையான நினைவுகளை எழுத்தாளர், ஆய்வாளர், இலங்கை அரச மட்டத்தில் பல உயரிய பதவிகளை வகித்திருக்கும் எம். வாமதேவன்  “ நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின் மைந்தர்கள்  “ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அண்மையில் நடத்திய இலங்கை எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசுவழங்கும்


திட்டத்தின் அடிப்படையில் நடத்திய போட்டியில் கட்டுரைப்பிரிவில்  தாம் எழுதிய                                        “ குன்றிலிருந்து கோட்டைக்கு  “ நூலுக்கு  இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசினைப்பெற்றிருக்கும் எழுத்தாளர் வாமதேவனுக்கு வாழ்த்துக் கூறியவாறு, இந்நூல் பற்றிய நயப்புரைக்குள் வருகின்றேன்.

கல்வி, தொழிற்சங்கம் – அரசியல், நிர்வாகம், இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி அமரத்துவம் எய்திவிட்ட, இர. சிவலிங்கம், எஸ். திருச்செந்தூரன், டி.வி. மாரிமுத்து, எம். சின்னத்தம்பி, வி. கே. வெள்ளையன், பெ. சந்திரசேகரன், ஓ. ஏ. இராமையா, எம். இராமலிங்கம்,  சி. நவரட்ன, பி. முருகேசு, சி. வி. வேலுப்பிள்ளை, சாரல்நாடன், தமிழோவியன், மல்லிகை சி. குமார் எஸ். எம். கார்மேகம்,     ந. நெடுஞ்செழியன், பொன். கிருஷ்ணசாமி ஆகியோர் பற்றிய நினைவுகளை நூலாசிரியர் வாமதேவன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அவர்களின் வாழ்க்கையையும் பணிகளையும் சித்திரிக்கும் இந்த நூலைத் திறந்ததும் மனதை அதிர வைக்கும் செய்தியையும் அறிந்துகொள்கின்றோம்.

அதனைப்பார்த்தவுடன் மனம் கனத்துப்போனது. சில நிமிடங்கள் மனம் உறைந்துவிட்டது.

நூலாசிரியர் வாமதேவனின் அருமைத் தந்தையாரும் அன்புச் சகோதரிகள் மூவரும் 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அப்புத்தளை பெரகலை மண்சரிவில் உயிர் நீத்திருக்கும் செய்தியே அது.

அவர்களுக்கும் அதன்பின்னர் இயற்கை எய்திய அன்புத்தாயருக்கும் நூலாசிரியர், இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

உக்கிரேன் போர் - கவிதை - த. நந்திவர்மன்




வாசிப்பு அனுபவம்: அவதானிப்பின் ஊடாக உணர்வுகளை புரிந்துகொள்ளல்....! அயலாள் தர்மினி கவிதைகள் தேவா ஹெரால்ட் - ஜெர்மனி


கவிதையை
, ஓவியத்தை புரிந்துகொள்ள தனித்த ஒருமனமும், ரசிப்பும் வேண்டும். இவை ஒருவருக்குத் தரும் செய்தி இன்னொருவருக்கு வேறுமாதிரியான கருத்தைத் தரும். அவரவரின் அனுபவங்களுக்குள்ளால் கவிதையின் நாதத்தை , ஓவியத்தின் உயிர்ப்பை பெறமுடியும்.

கலைஆக்கதாரர்கள் முன்வைக்கின்ற பொருள் அல்லது சொல்ல முயலும்


விடயம் என்னவென அங்கு அனுபவிப்போர் அதை  கிரகிப்பாக மட்டுமே செய்யலாம்
. கூற வேண்டிய கருத்தை அழுத்தம் தருவதற்கு கட்டுரையில்,  சிறுகதையில், நாவலில் சொற்களால் பல பக்கங்களுக்கு நீட்டலாம். கவிதையோ சுருக்கமான மொழியில், நுணுக்கமாக விடயத்தை சொல்கிறது. கவிதையிலே ஓவியத்திலே அழகும் காணலாம். ஆழமும்  காணலாம். அழுத்தமும் காணலாம்.

எனது இந்த முன்மொழிவுகளோடு தர்மினியின்,  அயலாளுக்குள் நுழைந்தேன்.

அட்டைப்பட ஓவியமும்,கவிதைதொகுப்பின் தலைப்பும்:

அயலாள் ஓவியம் அறிமுகப்படுத்தும்  பெண் அயலிலே இருப்பவர். நண்பி. அருகிருந்து வாழ்வை கவனிக்கிறார், வேறோரு பார்வையால்  இந்த உலகை கவனிக்கிறார், அல்லது பக்கத்து வீட்டுக்குள்ளால் படலைக்குள்ளால் எட்டிப் பார்த்து இன்னோரு வீட்டின் வாழ்வியல் பிரச்சினைகளை தன்  உணர்வுகளில் சித்தரிக்கிறார் என்ற பார்வையை உணர்த்தும் சித்திரம் என பல பொருள்  கொள்ளலாமோ. ?

அப்படி கவனிப்பதன் ஊடாகத்தானே மற்றவரின், சமூகத்தின் வாழ்வியலை, சந்தோசங்களை,  அல்லல்களை  உணர்வுபூர்மாக புரிந்துகொள்ளமுடியும். மனதில் சுமக்கின்ற சுமைகளை  மற்றவரிடம் பகிர கவிதை, ஓவியம், நாவல், சிறுகதை, இசை,  நாடகம் என இன்னும் பல வடிவங்கள் தேவையாகின்றன.

சொந்த நிலத்திலிருந்து கட்டாய பெயர்ப்பு, அகதிப்பயணத்தை ஆரம்பித்து வைக்கிறது. அது தொடங்கிய இடத்திலிருந்து, தற்காலிக இருப்புவரை தொடரும் துயரங்கள், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவிப்பன. அகதிகளாக வாழ்தலை எவருமே தேர்ந்தெடுப்பதில்லை. அது அவர்கள் மேல் போர், வறுமை, தீ, வெள்ளம், காலநிலை மாற்றம், வாழ்நிலத்திலிருந்து துரத்தப்படல் போன்ற இன்னும் பல காரணிகளால் திணிக்கப்பட்டிருக்கிறது. தர்மினியின் கணப்பற்றவீடு உள்ளாலும், வரிசைக்குள்ளாலும் இன்னும் பல கவிதைகளுக்குள்ளாலும் அகதியாக்கப்பட்டோரின் தொடரும் துயரங்கள் கனக்கின்றன.

ஸ்வீட் சிக்ஸ்டி 4 - பலே பாண்டியா - - ச சுந்தரதாஸ்

.

இந்திய சுதந்திரத்துக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கட்டபொம்மனின் வரலாற்றை படமாகியவர் பிரபல தயாரிப்பாளரும் டைராக்டருமான பி ஆர் பந்துலு.சிவாஜியின் நடிப்பில் இவர் உருவாக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் மாபெரும் வெற்றி பெற்றது.அந்த துணிவில் அடுத்ததாக வா உ சி யின் வரலாற்றை கப்பலோட்டியத் தமிழன் என்ற பெயரில் படமாக்கினார்.சிவாஜியின் நடிப்பில் வெளியான இந்த படம் பெரு தோல்வியை சந்தித்தது.இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த பந்துலுவுக்கு உதவ சிவாஜி முன் வந்தார்.சம்பளம் ஏதுமின்றி மிக குறுகிய காலத்துக்குள் ஒரு படத்தில் நடித்து கொடுக்க சிவாஜி முன் வரவே அப்படி உருவான படம் தான் பலே பாண்டியா.


இம்முறை சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் வரலாறுகளை படமாக்கி சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாத பந்துலு முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கத் தொடங்கினார்.குறுகிய கால தயாரிப்பு என்பதால் நிறைய நடிகர்களைத் தேடி அலையாமல் மூன்று வேடத்தில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் எம் ஆர் ராதா இவர்களுடன் தேவிகா பாலாஜி எம் ஆர் சந்தானம் வசந்தி சந்தியா இவர்களை வைத்து படத்தை மளமளவென்று வெறும் இரண்டே வாரங்களில் எடுத்து முடித்து விட்டார்.

அப்பாவி பாண்டியன்,சயன்டிஸ் சங்கர்,கொள்ளைக்காரன் மருது என்று மூன்று வேடங்களை ஏற்று சிவாஜி நடித்தார்.மூன்று மாறுபட்ட குணாம்சங்களை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் அவர்.வழக்கமாக கம்பீரக் குரலில் பேசி நடிக்கும் சிவாஜி இதில் சங்கர் வேடத்தில் மிக சன்னமான குரலில் அடக்கமாக நடித்து வித்தியாசம் கட்டியிருந்தார்.மருதுவின் மானரிஸமும் ஜோர்.அவர் தான் அப்படி என்றால் இரட்டை வேடத்தில் வரும் எம் ஆர் ராதா தன் குரல்,நையாண்டி வசனம்,அங்க சேட்டைகள் என்று பலவகைகளிலும் பிய்த்து உதறி இருந்தார். நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலில் எம் ஆர் ராதா பண்ணும் அட்டகாசம் சிரிக்காதவர்களையும் சிரிக்க வைத்து விடும். வழக்கமாக மிடுக்கான வேடத்தில் வரும் பாலாஜிக்கு இதில் அசடு வழியும் நகைச்சுவை வேடம்.குறையின்றி அதனை செய்திருந்தார்.தேவிகா வழக்கம் போல் நடித்திருந்தார்.ஒரு சிவாஜிக்கு தேவிகா ஜோடி என்றால் மற்றொரு சிவாஜிக்கு ஜோடி சந்தியா.இதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து சந்தியாவின் மகள் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது காலத்தின் கோலம்.

ஹிருதயம் ♥️

கானா பிரபா


இன்னொரு கல்லூரிக் காதல், ஆனால் எத்தனை கல்லூரிக் காதல் கதைகள் வந்தாலும் ஒரு பெரிய கூட்டணியோடு, மிகப் பெரும் எதிர்பார்ப்பும் சேர்ந்து கொண்டால் வெற்றிக் கணக்கு ஓரளவு தீர்மானிக்கப்பட்டு விடும். ஹிருதயமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

மோகன்லால் மகன் பிரணவ், இன்றைய காலத்து இளசுகளின் கனவுக்கன்னி கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் வினீத் சீனிவாசன்

என்ற அடையாளத்தோடு விளம்பரப்படுத்தப்பட்டதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறிப் போனது.
ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே தட்டத்தின் மரயத்து” வழியாகத் தன் மாயாஜாலங்களைக் காட்டியவருக்குப் புதிதாக ஏதும் காட்ட வழி தெரியவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது.
அந்தப் படம் குறித்து என் பதிவு
மூன்று மணி நேரத்தை எட்டிப் பிடிக்கும் படம், ஆனால் சோர்ந்து விடாமல் பார்க்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தயார்படுத்தி விடுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் தியாகராஜ பாகவதர் காலம் போல மொத்தம் 15 பாடல்கள். என் அனுபவத்தில் இந்தப் பாடல்களை முன்னர் கேட்டிராத போதும் காட்சிகளோடு தானாக வந்து விழும் போது ரசித்து அனுபவிக்க முடிகின்றது. அந்த வகையில் இசைமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இயக்குநர் வினீத் சீனிவாசனின் மனவோசையாகப் பயணிக்கிறார்.
காதல் படம் என்றால் தயாரிப்பாளர் கணக்கில் குறைந்தபட்ச

உத்தரவாதமாவது இருக்கும் என்றெல்லாம் ஒரு காலம் இருந்தது.
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் உருகி உருகிக் காதல் கொள்ளும் படைப்புகள் வருவதில்லையே என்றதொரு கருத்தரங்கைப் படைப்பாளிகள் பார்வையில் காதலர் தினச் சிறப்புப் பகிர்வாக ஆனந்த விகடன் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
வாட்சாப் நம்பரை வாங்கி காதலித்தோமா, காதலை முறித்தோமோ என்ற நிலையில் இருக்கும் உலகத்தில் ஆழமான மன உணர்வுகளைக் காட்சிப்படுத்தினாலும் ஏற்கும் மன நிலையில் ரசிகன் இருப்பானா என்றதொரு ஆதங்கத்தை அந்தப் பகிர்வில் இயக்குநர்கள் வெளியிட்டிருந்தார்கள்.
ஹ்ருதயம் படத்தின் கதையும் அதனாலோ என்னமோ யாகூ சாட் காலத்துக்குப் போய் விடுகிறது.
இந்தக் கல்லூரிக் காலத்தைப் பற்றி இடைக்காலத்தில் “அர்ஜூன் ரெட்டி”யும் வந்து போய் விட்டதால், நல்ல பிள்ளையாக அதீதமாக போதை, குடி, கும்மாளம் என்று காட்டாமல் அதைத் தன் மென் சுபாவத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் வினீத். ஒளிப்பதிவாளரும் (விஸ்வஜித்) இரண்டு கதைக்களிலும் தோளோடு தோள்.

ஆன்மீகத்துடன் அறிவியலை இணைக்கும் மகாசிவராத்திரி


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் " என்று நம்பிக்கை


ஊட்டினார் ஞானசம்பந்தப் பெருமான்.அவரால் அப்பரே என்று அழைக்கப்பட்டவர்,            " நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா "  என்று அழை த்து  " கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் - நற்றுணையாவது நமச் சிவாயவே " என்று உபதேசம் செய்தார்.அவர்களின் பின்னர் வந்தவர்               " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்று இறைவனிடம் இயம்பி நிற்கி ன்றார். " ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி - உலப்பிலா ஆனந்தமாய தேனினைச்

சொரியும் செல்வமாகிய சிவனை " 
, " நமச்சிவாய வாழ்கநாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெ ஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க " என்று பணிந்து நின்று அதன் வழியில் எம்மையும் ஆற்றுப்படு த்துவராக மணிவாசகப் பெருமான் வந்து நிற்கிறார். இவர்கள் யாவருமே இறை நினைப்பினை மனமிருத்தி வாழ்நா ளெல்லாம் வாழ்ந்தவர்கள். இவர் கள் சமயநெறியின் வழியில் கால்பதித்து நின்றவர்கள் எனலாம்.   இவர்களை முன்னிறுத்தியே " நால்வர் வழியில் நடப்பது நன்று " என்றும் ,  " நாலு பேர் சொல்லுவதைக் கேள் " என்றும் மரபாக வந்திருக்குமோ என் பதும் கருத்திருத்த வேண்டியதே.இவர்களின் சிந்தனைசெயற் பாடுவாழ் வியல் முறைகள் அத்தனையுமே கோவிலாகவே இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமா கும். கோவிலை மையமாகக் கொண்ட இவர்களின் செய ற்பாடுகளிற் கிடைத்த அனுபவங்கள் எங்கள் சமயநெறியில் மிகவும் முக்கி யத்துவம் பெறுகின்றன. முழுமுதற் கடவுளாய் எம்பிரான் சிவனையே இவ ர்கள் யாவரும் பணிந்து போற்றி தங்களின் மனத்தைப் பக்தியால் பிணை த்து உருக்கமாய் பல தெய்வத் திருமுறைகளாக ஆக்கி எமக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் அகத்தில் அமர்ந்திட்ட அந்த ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியான சிவனைக் குறித்து பல விரதங் கள் அனுடிக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவோம்.அப்படி அமையும் அந்த அருட் சோதியான சிவனின் விரதங்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியதாகவும்ஆன்மீக. அறிவியல் கருத்துகள் நிறைந்ததாகவும் அமை கின்ற விரதம்தான் வருடந் தோறும் வருகின்ற " மகா சிவராத்திரி " விரத மாகும்.

நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்!


கிறிஸ்டி நல்லரெத்தினம்  



அப்போதுதான் பேய் மழை பெய்து ஓய்ந்திருந்தது!

அடர்ந்த காடு. கதிரவன் வெளியே வரட்டுமா வேண்டாமா என தயங்கும் அதிகாலை வேளை.

ஏதோ 'சர, சர' என்ற சப்தம் அந்தக் காட்டின் நிசப்தத்தை மெதுவாய் கலைத்தது.

ஒரு செந்நிற கம்பளம் மெதுவாய் அக்காட்டில் இருந்து பரந்து விரிந்து கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கிற்று. இது என்ன மாயம்?

அருகில் சென்றுதான் பார்ப்போமே.

அட,  அந்த செந்நிறத்தை தந்தது மையும் அல்ல.... மந்திரமும் அல்ல.


அவைதான் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு செந்நிற நண்டுகள். 43.7  மில்லியன் நண்டுகள் இத்தீவு வாசிகள்! ஆஸ்திரேலியாவின் சனத்தொகையை விட (25.9 மி) ஏறத்தாள இரண்டு மடங்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

 

இவை இத்தீவிற்கு தனித்துவமானவை.

இவை ஜிகார்கோய்டியா  (Gecarcodea) எனும் நிலநண்டு பேரினங்களுள் அடங்கும் உயிரினங்கள். இவை ஆஸ்திரேலியாவின் கோகோஸ்  தீவுகளிலும் வாழ்ந்தாலும் கிறிஸ்மஸ் தீவுதான் இவைகளின் ஹெட் ஆபீஸ்!

அது சரி, இந்த கிறிஸ்மஸ் தீவு எங்குதான் இருக்கிறதாம்?

பூமிசாத்திர வகுப்பினுள் நுழைவோமா?

என் தேவனே… என் தேவனே… ஏன் என்னைக் கைவிட்டீர்…? அவதானி


இயேசு கிறிஸ்து ஆறுமணி நேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டார், வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல், ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியை  இருள் சூழ்ந்து கொண்டது. அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு:  “ ஏலி! ஏலி! லாமா சபக்தானி “ என்று உரத்துச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..? “ என்று அர்த்தம்.

குறிப்பிட்ட  குரலின்  வரிகளை நாம் பரிசுத்த வேதாகமத்தில் படித்திருப்போம்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் மாதம் வரும் பெரியவெள்ளி ( Good Friday )


தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு, சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள். வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு,  இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்,  கடந்த 2021 ஆம் ஆண்டுவரையில்  பெரும் துயரமாகவே அனுட்டிக்கப்பட்டது.

இவ்வருடமும்  அத்தகைய துயர நாளைத்தான் நாம் கடக்கவிருக்கின்றோம். எனினும், குறிப்பிட்ட ஈஸ்டர் தினம் வரும்போதெல்லாம் அனைத்து மக்களுக்கும் அவர்களை அறியாமலேயே பதட்டம் தொற்றிவிடுகிறது.

ஒரு காலத்தில்,  தமிழரசுக்கட்சியின் பிதாமகர் தந்தை செல்வநாயகம், இலங்கையில் பதவிக்கு வந்த  நீல – பச்சைக் கட்சித்தலைவர்களுடன் ( பண்டாரநாயக்கா – டட்லி சேனநாயக்கா )  ஒப்பந்தம் செய்து, அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் வந்ததும்,  “ இனிமேல் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்    என்றார்.