என் அப்பா
என் வாழ்க்கையின்
சாகசம்
என் பிரபஞ்சத்தின் நட்சத்திரம்
அவர் முக்கியத்துவம்பற்றி
நான் சொல்லாத நாளில்லை
நான் சிறுமியாக இருந்தபோது
அவர் என்னோடு இருந்தார்
என்னை நன்றாக நேசித்தார்
என் ஆரோக்கியத்தை
கவனித்தார்
ஓர் அன்புக் கடலை
பரிசளித்தார்
நான் குமரியாக மாறும்போதும்
அவர் என்னோடு இருந்தார்
என் குறைகளை அனுமதித்தார்
என் தெரிவுகளைச் சரி
செய்தார்
என் முயற்சிக்குத்
துணை நின்றார்
நான் சுயமாக நின்ற
போது
அவர் என்னோடு இல்லை