துர்க்கை அம்மன் ஆலய 7ம் நாள் அலங்கார உற்சவம்

.

துர்க்கை அம்மன் ஆலய 7ம் நாள் அலங்கார உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றது. கோவில் நிறைந்த பக்தர்களுடன் நாதஸ்வர இசை முழங்க துர்க்கை அம்மன் சரஸ்வதி லக்சுமிஆகிய தேவியர்கள் அருகிருக்க வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா  காட்சியாக இருந்தது.  

துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம்  16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவு 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.அடுப்படிக்குள் அம்மிக் கல்லு

.

வழமையானது
அடுப்படிக்குள் அம்மிக் கல்லு
அதன் மேலே அழுக்குத் துணி
அருகேயொரு எண்ணெய் தாச்சி
அதை மூடும் கறை படிந்த
அலுமினிய மூடி.
இவெயல்லாம் இன்றெங்கே?
அம்மியும் ஆட்டுக் கல்லும்
பெயரே தெரியாது
மறைந்துவிட்ட காலம் இது.
இடுப்பொடிய சமைத்தெடுக்கும்
பொழுதெல்லாம் சாயந்துவிட்டது.
Kitchen னேயில்லாமல்
கச்சிதமாய் கடைச் சாப்பாடு
காசு கொடுத்தால்
ஹோம் டெலிவரி
எண்ணெய் பொரியல் தளதளக்க
வேலையற்று இருதயமும்
நின்றுவிட யோசிக்கிறது.
எம்.கே.முருகானந்தன்.

துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் 1ம் நாள்


.

துர்க்கை அம்மன் ஆலய அலங்கார உற்சவம் நேற்றைய தினம் 16.02.2013 சனிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறும் இந்த அலங்கார உற்சவம் 27.02.2013 புதன் கிழமை இடம்பெறும் வைரவசாந்தியூடன் நிறைவடைய உள்ளது. நாள்தோறும் இரவூ 5மணிக்கு அம்பாளுக்கு அபிசேகமும் அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு பூசையூம் இடம்பெற்று நாதஸ்வர தவில் கச்சேரியூடன் அம்பாள் வீதிஉலாவரும் காட்சி இடம் பெறுகின்றது.

இலங்கைச் செய்திகள்

உணவு நஞ்சானதில் 20ற்கும் மேற்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்திசாலையில்

 கொள்வனவு செய்யப்பட்ட பானம் காலாவதியானவை என கண்டுபிடிப்பு

 தூதுவரை திருப்பி அழைத்தது சவூதி

பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கத்திற்கு காணிகள் சுவீகரிக்கப்படும் 

 யாழ்.நகரில் ரூ.500 மில்லியன் செலவில் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதி 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஜனாதிபதி

கையை இழந்த மாணவி தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

 இரு பல்கலைக்கழக மாணவர்களையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு 

உடலின் பின்புறத்தில் புத்தர் வெளிநாட்டுப் பெண்ணுக்கு தண்டம்

மட்டக்களப்பில் தொடர்ந்து அடை மழை - சில பாடசாலைகளுக்கு பூட்டு 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு திடீர் விஜயம்

மெல்பேர்ணில் நிகழ்ந்த மிருதங்க அரங்கேற்றம் - நவரத்தினம் அல்லமதேவன்


.
மெல்பேர்ணில் நிகழ்ந்த செல்வன் செந்தூரன் யோகரட்ணம் அவர்களின் வியக்கத்தக்க மிருதங்க அரங்கேற்றம்


Melbourne ல் George Wood Performing Arts centre ல் கடந்த 16.02.2013 சனிக்கிழமை மாலை கலாநிதி.சந்திரபானு பரதாலய அக்கடமி கல்லூரியின் மிருதங்க வித்துவான் ஸ்ரீ பாலஸ்ரீ இராசையாவின் மாணவன் செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் அவர்களுடைய மிருதங்க அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த கலைஞர்கள் கலைப்பிரியர்கள் மத்தியில் கோலாகலமாக அரங்கேறியது. செல்வன்.செந்தூரன் யோகரட்ணம் திரு.ஜெராட் யோகரட்ணம் திருமதி.பூங்கோதை யோகரட்ணம் ஆகியோரின் அன்புப் புதல்வன் ஆவார்.
மண்டப வாயிலில் அழகிய மலர்க்கொத்து வைக்கப்பட்டிருந்தது. அன்புக்குச் சின்னமாக அலங்கரிப்பது பூ என்பதை யாரும் மறுக்கமுடியாது. இளம் பெண்கள் கைகளில் மலர்த்தட்டு  கர்க்கண்டு  சந்தனம்  குங்குமத் தட்டங்களுடன் வரவேற்றனர்.

சிட்னியில் நிவேதா சரவணன் அரங்கேற்றம் - “ஆருத்ரா”

.


சிட்னி நைடா கலை அரங்கில் செல்வி நிவேதா சரவணனின் அரங்கேற்றம் நடந்தது. நிவேதா சிட்னி பிரபல நாட்டிய குருவும் வேம்படி மகளிர் கல்லூரி முன்னாள் நடன ஆசிரியையுமான கலை வித்தகர் சுகந்தி தயாசீலனின் மாணவி ஆவர்.
விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல நாட்டிய குரு பத்மஸ்ரீ அடையார் லக்ஷ்மண் கலந்து கொண்டார்.அவரது நடன அமைபிலேயே பல அம்சங்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.சிறப்பு விருந்தினராக தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியையும் கவின் கலை ஆய்வு வல்லுனருமான ஞானா குலேந்திரன் சிறப்பித்தார்.காதல் - தவமணி தவராஜாஒரு கண்ணோட்டம்
காதல் என்றால் என்ன?
அர்த்தம் சொல்ல முடியாது. ஆழம் காணமுடியாதது. காதல் இல்லையேல் சாதல், சாதல் என்கிறார்கள். நிறைவேறாத காதல் உதாரணம் (அம்பிகாபதி, அமராவதி, அனார்கவி, சலீம்) தெய்வீகக் காதல், அமரத்துவக் காதல் என்கிறார்கள். புனிதக்காதல் என்கிறார்கள். ஆனால் பல வருடங்களாக சந்தோஷமாகக் காதலித்தவர்கள் திருமணமானவுடன் சில மாதங்களிலே சலித்துப் போன கதை கதைக்கிறார்கள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதும் இதுதானோ?
எது எப்படியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை தேவை. வயது வந்தவுடன் ஆணுக்குப் பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் ஓர் ஈர்ப்பு உண்டாகிறது. இது மனிதருக்கு மட்டுமல்ல உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் பொதுவான விதியாகும். உற்பத்திப் பெருக்கத்திற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்;டது. கூடல் காதலின் பின்தான் வயது ஏறஏற மனக்காதல் ஏற்படுகிறது. மனக்காதலை எவராலும் பிரிக்க முடியாது. உலகின் எந்தத்திக்கிலும் இருவரும் பிரிந்திருந்தாலும் மனதால் ஒன்று பட்டவர்கள் சேர்ந்தேயிருப்பார்கள். இப்போதுள்ள நவீன வசதிகளும் ஒன்றுபட்ட இதயங்களுக்கு ஓர் ஒளடதமாகும்.
மனதினால் ஒன்று படாதவர்கள் சேர்ந்து வாழும்போதும் பிரிந்திருப்பவர்கள் போன்றவர்கள். அங்கு நிம்மதிக்குப்பதில் சஞ்சலமே குடியிருக்கும். இதனாலேயே பிரிவுத் துயரங்களும் கஷ்டங்களும் உருவாகின்றது. ஆகையால் எல்லோரும் ஒன்றிணைந்து காதலைப் போற்றி சந்தோஷமாக வாழ என்னுடைய காதலர் தின வாழ்த்துக்கள்

துர்க்காதேவி தேவஸ்தானம் வழங்கும் இராகசங்கமம் 10.03.2013

.

தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் விசேட வழிபாடு

.

அவுஸ்ரேலிய தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் சிலருக்கு
17 .02.2013 அன்று சிட்னி முருகன் ஆலயத்தில்  ஒரு விசேட வழிபாடு நடாத்தப்பட்டது. அத்துடன் அவர்கள் அவுஸ்ரேலிய சமூகத்துடன் எப்படி இணைந்து வாழவேண்டும் என்பது பற்றிய கருத்துக்களும் பரிமாறப்பட்டது. இதில் சமூக்துடன் இணைந்து வாழ உதவும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வில் அவர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் பரிமாறப்பட்டது.
உலகச் செய்திகள்


பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!

பாப்பரசரின் வெளியேற்றம்

நஷீட்டுக்கு எதிராக பிடியாணை இந்திய தூதரகத்தில் தஞ்சம்

பஸ்ஸில் குண்டு வெடிப்பு; பங்களாதேஷில் 16 பேர் பலி

காதலர் தினத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர் கைது


பதவி விலகுகிறார் பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர்!2013-02-11

பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
அவரின் தற்போதைய வயது 85. இந்நிலையில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர்  1415 ஆம் ஆண்டு 12 ஆவது பாப்பரசர் கிரிகெறி பதவிவிலகியுள்ளார். இதன்படி பதவி விலகும் இரண்டாவது பாப்பரசராக 16ம் ஆசிர்வாதப்பர் பதிவாகியுள்ளார்.             நன்றி வீரகேசரி 

கொண்டாட்டங்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி
அண்மையில் முகப்பு புத்தகத்தில், அது தான் பேஸ் புக்கில்  எனது பேஸ் புக் நண்பர் ஒருவர், தைப் பொங்கலும் எங்கடை கொண்டாட்டம் இல்லையாம், அது ஆபிரிக்கர்களின் விழாவாம் என்று  என்று அழுது கொண்டிருந்தார். சித்திரை வருசப் பிறப்பு இப்ப ஆரியர் வருசம் என்று எங்கடை தமிழ் அபிமானிகள் ஓலமிட,  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னை விட வேறு தமிழ் அபிமானிகள் உண்டா எனப் பொங்கியெழுந்து  தைப் பிறப்புத்தான்  தமிழரின் புது வருடம் எனப் பிரகடப்படுத்தினர். இதற்கென்ன காசா செலவழிக்க வேணும், வெறும் பிரகடனம்தானே செய்து விட்டுப் போகட்டும் என்று நினைத்தேன். தீபாவளியும் ஆரியருடையது என்று எம்மில் சிலர் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். இதுகள் எல்லாம் சின்ன வகுப்பிற் படிக்கும் போது சினேகிதன் தந்த மயில் இறகை அவனுடன் ஏற்பட்ட சண்டையின் பின் கோபத்தில் திருப்பிக் கொடுப்பது போல இருக்கிறது.

மெல்பேர்ன் குன்றத்துக் குமரன் ஆலய மகோற்சவத் திருவிழா


.
மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக் குமரன் ஆலய மகோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுகடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்ற மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக் குமரன் ஆலயத்தின் வளர்ச்சி அளவிடற்கரியது. குன்றத்தில் அமர்ந்திருந்து அடியார்கள் அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் குமரனின் திருவிளையாடல்கள் பற்பல. அழகிய தமிழ்க் கடவுள்  அழகன் வேலனவன்  கந்தவேள்  ஸ்ரீ முருகப்பெருமானின் முதலாவது மகோற்சவத் திருவிழா நந்தன வருடம் உத்தராயனகாலம் மாசி மாதம் நாலாம் நாள் சனிக்கிழமை 16.02.2013 அன்று ஆரம்பமாகியுள்ளது. நித்திய பூசைகளில் நிகழும் சகல குறைகளையும் நீக்கி எம்பெருமானின் அனுக்கிரகங்களும் அனைத்து அடியவர்களுக்கும் கிடைக்க வருடந்தோறும் நடைபெறும் மகோற்சவத் திருவிழா  இறைவனின் ஜந்தொழில்களையும் விளக்குவதாக கூறப்படுகின்றது.


நதியாய் வாழ்கிறேன் - எழுத்தாளர் சிவசங்கரி

.
பச்சை பட்டுடுத்தி நிற்கும் மலை, மலையின் நடுவே பயணிக்கும் தார்ச்சாலை, சாரல் மழையில் குளித்தபடி மரங்கள், மிதமான வேகத்தில் பேருந்து, கணவன் தோளில் சாய்ந்தபடி காதல் மனைவி. அவளின் கைகளில் ஒரு புத்தகம். இயற்கை காட்சிகளில் விழிகளை தொலைக்காமல், புத்தகத்தின் அர்த்தமுள்ள எழுத்துக்களில் மனதையும் தொலைத்து, பேருந்தில் இருந்து இறஙகிய தம்பதிகளிடம் ஒரு கேள்வி.... "பயணம் சுகமாக இருந்ததா?' பதில்.. "அர்த்தமுள்ளதாக இருந்தது!' சொன்னவர்கள் கைகளில் எழுத்தாளர் சிவசங்களியின் "சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது?' புத்தகம்.


இப்படி மனித உணர்வுகளை மயிலிறகால் வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று போயிருக்கிறது. காரணம்...

எழுதணுங்கற கனவோ, எழுத்துல சாதனை புரியணுங்கற வெறியோ இல்லாம, எதேச்சையா எழுத தொடங்குனேன். இப்போ... போதும்!னு தோணுச்சு நிறுத்திட்டேன். மறுபடியும் எழுதணும்னு தோணுச்சுன்னா நிச்சயம் எழுதுவேன்!' மனதில் தெளிவு சிவசங்கரியின் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கிறது.


அம்மாவுக்கு என்னென்ன பிடிக்கும்?

பௌர்ணமி நிலவு, அன்னையின் தாலாட்டு, குழந்தைகளின் சிணுங்கல், உள்ளத்தை சாந்தப்படுத்தும் சங்கீதம், மனதையும் நிறைக்கிற சாப்பாடு, கண்ணீர் விடாத ஆண்கள், அழகு நிரந்தரமில்லை!ன்னு ஆணித்தரமா நம்புற பெண்கள், எந்த சூழ்நிலையிலும் தோள் கொடுக்க தயாராக இருக்கிற நண்பர்கள், தன் வாழ்க்கைக்கு எது தேவை?ன்னு தெளிவா தெரிஞ்சு வைச்சிருக்கிற மனிதர்கள்... இப்படி நிறைய பிடிக்கும். எந்த ஒரு விஷயத்தையுமே, கண்களால் பார்க்காம மனசால பார்க்க பழகிட்டா, நமக்கு பிடித்தமான விஷயங்கள் இந்த உலகத்துல நிறைய தெரியும். இந்த பழக்கத்துக்கு நான் அடிமையாகி பல வருஷங்கள் ஆச்சு!

முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மண்டலின் இசைக்கச்சேரி


.

படப்பிடிப்பு ஞானி

சிட்னி முருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிஷான் ஜெயேந்திரனின் மண்டலின் இசைக்கச்சேரியின் போது  எடுத்த படங்களில் சிலவற்றைக் கீழே காணலாம்துர்க்கை அம்மன் அலங்கார உற்சவம் 16 02 2013

.


வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 54 – ஒன்றில் ஒன்பது

   
ஞானா:   
    அப்பா…அப்பா…எப்பிடி இருக்கப்பா இந்தக் கதை?

அப்பா:        என்ன ஞானா….திடு திப்பெண்டு வந்து கேள்வி கேக்கிறாய்?  என்ன கதை? சொன்னால் எல்லோ            தெரியும்.


ஞானா:         என்னோடை அப்பா ஒரு மனிசி வேலை செய்யிறா. தமிழ் மனிசிதான். அளவு கணக்கில்லாத பணக்காரி. பெரிய விலை உயர்ந்த உடுப்புகள்தான் போட்டுக்கொண்டு வருவா. வேலைக்கு வாறதும்             பென்ஸ் காரிலைதான்.

அப்பா:   
    ஏன் ஞானா? உனக்கு அவவைப் பாக்க எரிச்சலாய் இருக்கே?

ஞானா:         உங்களுக்குப் பயித்தியமே அப்பா? திருக்குறள் படிக்கிற நான் எரிச்சல் படுவனே. அவ சொன்ன ஒரு        விஷயந்தான் எனக்குக் குழப்பமாய் இருக்கு.       
             
அப்பா:        ஞானா என்ன குழப்பம் எண்டு சொல்லு. தீர்த்து வைக்கலாமோ எண்டு நான் பாக்கிறன்.

ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 2 - மதி

 .


கண்டனும் வில்லியும் சகோதரர்கள். ஒரு நாள் இருவரும் வேட்டையாடச் சென்றனர். அப்பொழுது கண்டன் கொல்லப்பட்டான். வில்லி ஆண்ட இடம் வில்லிபுத்தூர் என அழைக்கப்பட்டது. வில்லி எம்பெருமானை மிகுந்த கவலையுடன் வணங்க எம்பெருமான் காட்சி கொடுத்து கண்டனை உயிர்ப்பித்து தருவதாகவும் பெரும் பொருளும் தருவதாகவும் கூறி மறைந்தார். கண்டனும் உயிர்த்தெழுந்தான். வில்லியும் கண்டனும் அங்குள்ள பெருமாள் கோவிலையும் புதுப்பித்தனர். அங்கு ஒரு எல்லையில் ஒரு சிறிய இடத்தில் அழகிய பூந்தோட்டத்தை அமைத்து ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டுக் கொண்டு ஒருவர் இருந்தார். தன்னையே மறந்து வழிபாட்டிலிருந்தவர் விஷ்ணு சித்தர். அக்கிராம மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை அவர்.

ரோடியோவின் மூலகர்த்தா மார்கொனி: உலக வானொலி தினம்

.
ஐ.நா.வின் கல்வி , அறிவியல்மற்றும் கலாச்சாரஅமைப்பு(யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டுஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாகஅறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியைஉலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.. 
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius)என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்,மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ,ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.பின்னர்,இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார். 
இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியை, 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்தசர். க்ளமன்ட் அட்லி,(1945-1951) வானொலி வாயிலாகஅறிவித்ததை, இந்தியர்கள் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.
ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்றநாடுகளில் இன்றுஉலக வானொலிதினத்தை கொண்டாட உள்ளனர். உலக வானொலி தினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச்செயலர் பான்கீமூன்விடுத்துள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் தகவலினை செலவின்றி கொண்டு செல்லும் மதிப்புமிக்க சாதனம் வானொலி என கூறியுள்ளார்.

Nantri:தினமலர்

தமிழ் சினிமா


விஸ்வரூபம்

ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன்.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார்.
இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார்.
நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார்.
தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள்.
பிடிபட்ட கமலின் போட்டோ தீவிரவாத தலைவன் உமருக்கு அனுப்பப்படுகிறது. அதிர்ச்சி அடையும் அவர், ‘அவனை முட்டியில் சுட்டு நான் வரும் வரை உயிரோடு வைத்திருங்கள்’ என்று கட்டளை இடுகிறார். உமர் வந்து சேர்வதற்குள் கமல் நடத்தும் விஸ்வரூப தாண்டவம்தான் படம்.
‘என் ஆத்துக்காரிக்கு சிக்கன் பிடிக்கும், எனக்கு ஆத்துக்காரிய பிடிக்கும். அதான் சமைக்கிறேன்’ என்கிற அப்பாவி கதக் நடனக்கலைஞராக விஸ்வநாதன்.
‘அப்பனைத் தெரியாத பிள்ளைங்க திமிராத்தான் வளரும், உன்ன மாதிரி’ என்று உமர் சொல்ல, ‘அப்பன் யாருன்னே தெரியாம வளர்ற பிள்ளைங்க ரொம்ப திமிரா வளருமோ உங்கள மாதிரி’ என்று அவரையே மடக்கும் ஜிகாதி.
‘நானோ உமரோ சாகிற வரைக்கும் இந்த கதை முடியாது’ என்று கர்ஜிக்கும் ரா உளவாளி என்று கமலின் ஒவ்வொரு அவதாரமும் அசத்தல். ஆக்ரோஷ சண்டையிலும், ஆனந்த நடனத்திலும் மிரட்டல்.
‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று பூஜா சொல்லும்போது, ‘எந்த கடவுள்?’ என்கிற போதும், ‘எங்க கடவுளுக்கு 4 கைகள்’ என்று பூஜா சொல்ல, பெண் அதிகாரி ‘அவரை எப்படி சிலுவையில அடிப்பீங்க?’ என்று கேட்க, ‘கடல்ல போட்டுருவோம்’ என்று பூஜா சொல்வதும் கமல் பிராண்ட் நையாண்டிகள். நடிகராக மட்டுமல்ல, இயக்குனராகவும் தன்னை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார் கமல்.
ஆப்கான் கிராமம், அதில் ஜிகாதிகளின் வாழ்க்கை முறை, படிக்கத் துடிக்கும் தீவிரவாதிகளின் பிள்ளைகள், படிக்கவும், சிந்திக்கவும் முனைபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் என்று இதுவரை ஊடகங்களில் படித்தவற்றையும், பார்த்தவற்றையும் கண்முன்னே நிகழ்த்தி காட்டும்போது மனது பதறுகிறது.
அதனால்தான் ஆரம்பத்திலேயே இளகிய மனதுடையவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல்.
எதற்கும் உதவாத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தன் முதலாளியை திருமணம் செய்ய துடிக்கும் கதாபாத்திரத்தில் பூஜா. அக்ரகார தமிழ் பேசி அசைவம் சாப்பிடும் கதாபாத்திரம். கமலின் ஆக்ஷன் ரூபத்தை கண்டு மிரளும் காட்சியில் கண்களிலேயே நடித்திருப்பது அருமை.
ஆண்ட்ரியாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கமலின் தளபதியாக வந்து கைதட்டல் வாங்குகிறார். கமலின் உயரதிகாரியாக சேகர் கபூர் கச்சிதம்.
இறந்த நண்பனின் உடலை பார்த்து விட்டு பிரஷர் மாத்திரை போட்டு ‘நண்பன் செத்த அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக் வந்து நானும் செத்துடக்கூடாதில்ல நிறைய வேலை இருக்கே’ என்று சொல்லும் காட்சி ஒரு சோறு பதம்.
உமர் குரோஷியாக நடித்திருக்கும் ராகுல் போஸ்தான் கமலுக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறார். ஒவ்வொரு வார்த்தையிலும், அசைவிலும் வில்லத்தனம்.
மிடுக்காக இருக்கும்போதும், தளர்ந்தபோதும் அந்த வில்லத்தனத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்வது பிரமாதம். நாசராக வரும் நாசர், சலீமாக நடித்திருக்கும் ஜெய்தீப் அஹ்லாவத் உட்பட அனைவருமே பாத்திரத்துக்கேற்ற தெரிவு.
பாடல்களில் ஆக்ரோஷமும் இருக்கிறது. ஆரோகணமும் இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டுகிறார்கள், தலைக்குமேல் பறக்கும் ஹெலிகொப்டரின் சத்தம், திரையில் வெடிக்கும் துப்பாக்கி குண்டுகள் பக்கத்தில் விழுவது போல பதற வைப்பது என்று தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.
ஷானு ஜான் வர்க்கீஸின் ஒளிப்பதிவில் அமெரிக்க அழகும் ஆப்கான் பரப்பும் மனதில் நிறைகிறது. கலை இயக்குனர் இளையராஜாவின் கலையில் எது நிஜம் எது செட் என்பது தெரியவில்லை.
சில காட்சிகளின் வசனங்கள் மவுனிக்கப்பட்டிருந்தாலும் அவை எதுவும் கதையை பாதிக்காதவாறு கவனமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கமல்.
வில்லனை கொல்லவில்லையே என்ற குறை இருந்தாலும் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பை படத்திலேயே சொல்லியிருப்பதில் அந்த குறையும் மறைந்து விடுகிறது.


சிட்னியில் பாகவத கீதா வகுப்புக்கள் அத்தியாயம் 13 - 18


Sri Vasudevacharya, a senior disciple of Sri Swami Dayananda Saraswati, and a respected Vedanta Guru, will teach a unique series of classes covering six chapters of the Bhagavad Gita.

In nineteen classes, Sri Acharya will teach the meaning of chapters 13 to 18 of the Gita, covering all chapters in detail.  This is a God-given opportunity to see the meaning in depth of these important chapters.  It will benefit one's life and provide spiritual growth.  In addition, Acharya will teach the chanting of Vishnusahasranama.
No prior knowledge is required.  The course is in English and all materials will be provided.  The course is free of charge; donations are accepted.