வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் அலங்கார தேர் உத்சவம்

.
 சிட்னியில் வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் பெரும் திரளான மக்கள் புடைசூழ பெருமாள்  வீதி உலா வரும் காட்சி 

படப்பிடிப்பு ஞானி

தமிழ் சினிமா

1. கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு, ராவணன்!
2. அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்!

1. கோவா திரைப்பட விழாவில் அங்காடித் தெரு, ராவணன்!

கோவாவில் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு, மணிரத்னம் இயக்கிய ராவணன் ஆகிய 2 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 140 திரைப்படங்களை பார்த்து, அதில் 26 இந்திய மொழி திரைப்படங்களை என்.சந்திரா தலைமையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளனர்.

ஈழ மண்ணின் தற்போதய கோலம்!!!

.
ஈழ மண்ணின் தற்போதய கோலம்!!!
ஈழ மண்ணிற்கு சென்று வந்த எமது ஊடக நண்பர் தந்த 3 படங்களும் அதனைப் பற்றிய குறிப்புக்களும்.

கவிதை

நட்பா? காதலா?
நட்பா? காதலா? நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               
நண்பன் கேட்டான்
நான் முதலில் கற்றுக் கொண்டது
               
நட்பு தான் நான் இது வரையில் காத்து வருவது
               
நட்பு தான்
என்னை நானாக பார்த்தது
               
நட்பு தான்
காதலின் இனிமையான பாகம்
               
நட்பு தான்
எனினும் எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               
நட்பின் காதலும்,
               
காதலின் நட்பும்.

மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

.
மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்


யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்


காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

பந்தி படித்துச் சுவைத்தது

.
பந்தி

ஆடிஅமாவாசை, மற்றும் தாத்தா, ஆச்சியின் திவச நாட்களில் எங்கள் வீட்டிலுள்ள யாரும் சாப்பிடாமல் குருக்களையாத்தாத்தாவின் வருகைக்காகக் காலையிலிருந்தே பசியுடன் காத்துக் கொண்டு இருப்போம். ஆச்சிக்கும், தாத்தாவுக்கும் அப்பா தர்ப்பணம் செய்து காரில் தாமிரபரணியாற்றங்கரைக்குச் சென்று பிண்டம் கரைத்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்தான் சாப்பிட முடியும். அதுவுமே கூட உடனடியாக சாப்பிட்டு விடமுடியாது. படிப்படியாக அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் கடைப்பிடித்த பிறகே பந்தி பரிமாறுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் போக, குருக்களையாத் தாத்தாவையும் சேர்த்து குறைந்தது பத்திலிருந்து இருபது பேராவது பந்தியில் அமர்ந்திருப்போம்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி பெற்றது.

.
இந்தியா அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக மைகேல் கிளார்க் 111 ஓட்டங்களும் (138 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஒயிட் 89 ஓட்டங்களும் (49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக வீரட் கோக்லி அபாரமாக விளையாடி தனது 3 ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 121 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 118 ஓட்டங்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க வில்லை. யுவராஜ் சிங் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 11

.
தனக்கு ஆதரவாக இருந்த முக்குவர்களின் தலைவர்களுக்கு மட்டக்களப்பு தேசத்து வன்னிப்பற்றுக்கள் பலவற்றில் வன்னிபம் என்னும் பதவியை மாகன் வழங்கினான். பொலன்னறுவை நகரத்தை மட்டக்களப்புத் தமிழர் தாப்பாவை என்று குறிப்பிட்டனர். தாப்பாவையில் இருந்து சென்ற மாகன் மண்முனையில் மாளிகையும் அரணும் அமைத்து சுகதிரன் என்பவனிடம் வழங்கினான் என்றும் அவனுக்குப் பட்டம் சூட்டினான் என்றும் சொல்லப்படுகிறது. மட்டக்களப்புச் சமுதாயத்தினரின் குடிமுறைப் பாகுபாட்டையும் ஆலயங்களையும் மாகன் உருவாக்கினான் என்ற

சட்டத்தரணி ஜோர்ஜ் வில்லியின் கோரிக்கை

.
சட்டத்தரணி ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிடம் விடுத்த கோரிக்கையின் தமிழாக்கம்.



நவீன துட்டகைமுனுவென அழைக்கப்படும் மகிந்த ராஜபக்ச அவர்களே, நீங்கள் உண்மையிலேயே அந்த பெருமையை உங்கள் வசம் அணிந்துகொள்ளவேண்டுமெனில், வாழ்வில் சகலதையும் இழந்து அல்லல்படும் தமிழ்மக்களுக்கு வாழ வழி அமைத்துக்கொடுங்கள். இனியொரு இன்னல் இல்லாத தேசமாக இலங்கையை மாற்றிக்கொள்ளுங்கள்.

மருத்துவம் - தக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம்

.
தக்காளிப் பழமும் சரும‌‌‌ப் பாதுகாப்பும்
தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மீகம்

.

மதுரகவி  ஆழ்வார்


வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள். கடந்த வாரம் நம்மாழ்வரை பற்றி பார்த்தோம், இந்த வாரம் அவர் சீடரான மதுர கவி ஆழ்வாரை பற்றி பார்ப்போம். 'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாருக்கோ  எல்லாம் நம்மாழ்வரே. பகவத் பக்தி கூட வந்து விடுமாம்,  ஆனால் பாகவத பக்தி  வருவது மிகவும் கடினம்.  பகவத் பக்தியை காட்டிலும் பாகவத பக்தி மிகவும் உயர்ந்தது என்று கண்ணனே தன் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார் .

சிட்னி முருகன் கோவில் நடைபெற்ற வாழை வெட்டுத் திருவிழா

.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 17-10-2010 ம் திகதி  நவராத்திரியின் பத்தாவது நாளாகிய விஐய தசமி அன்று மாலை 7மணிக்கு சிட்னி முருகன் கோவிலில் வாழை வெட்டுத்திருவிழா நடைபெற்ற போது எடுத்த படங்களை கீழே காணலாம்.