Hindu & Ladies College வழங்கும் இன்னிசை இரவு 2011

வழங்கும் இன்னிசை இரவு 

சிட்னி முருகன் கோவிலில் சூரன் போர் - செ.பாஸ்கரன்

.
சென்ற செவ்வாய்க் கிழமை சிட்னி முருகன் கோவிலில் சூரன்போர் இடம்பெற்றது.

 வாரநாளாக இருந்தாலும் மாலையிலேயே சூரன்போருக்கான ஆயத்தம்தொடங்கிவிட்டது. சூரனுக்கும் முருகனுக்கும் சண்டை. முருகன் யுத்த சன்யுத்தனாய் முதல்நாள் தாயார்கையால் பெற்ற வெற்றி வேலோடு களமிறங்குகின்றான்.ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் வேலும் அலங்கார ஆபரணம் அணிந்தமார்பும் என்ற பாடலலுக்கேற்றது போல்வருகின்ற முருகனை மிக பக்தி சிரத்தையோடு சாந்தமாக கொண்டு வருகின்றார்கள்.

ராணித் தேனீ - ராமலக்ஷ்மி


.
                                                                             
தேனீக்கள் பற்றிய புதியபாடம்
நாளைக்கு

ஆசிரியர் நடத்தும் முன்
வாசித்துச் செல்லும் பழக்கம்
செல்வராணிக்கு

‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்..
குடும்பத்தின் தலைவி ராணித்தேனீ ’

படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது
ராணித் தேனீ

“எப்போடி வந்தேஇ சாப்பிட்டியா?”
உழைத்த களைப்பைக்
குரலில் காட்டாமல் கேட்டாள்
வீட்டுக்குள் நுழைந்த அம்மா.

‘ராணியாக வளரவேண்டிய
புழுவுக்கான அறை
பிரத்தியேகமானது..
நிலக்கடலை வடிவில்
அழகிய கிண்ணம் போன்றது’

Laughing' ko Laughing 5 - என் பார்வையில் செ.பாஸ்கரன்

சென்ற வாரம் சிட்னியில் இடம்பெற்ற நாடக விழா Shobhanam Drama Creations பெருமையுடன் வழங்கிய ஜந்து நாடகங்கள். 29.10 2011 அன்று The Hill Centre Castlehill இல் இடம் பெற்றது. இயந்திரமயமான வாழ்க்கையில இந்த மனிசனுக்கு எப்படி ஜந்து நாடகங்களை தயாரித்து மேடையேற்ற முடிகிறது என்ற கேள்வி எப்போதும் எனக்குள் இருக்கின்ற ஒரு கேள்வி அது மட்டுமல்ல டாக்டர் ஜெயமோகன்  சாமினி ஸ்ரோரர் ஆகியோரின் நாடகத்திற்கென்றே சனம் ரிக்கற் எடுத்து பார்ப்பது என்பது கடந்த ஜந்து வருடங்களாக இடம் பெற்று வருகின்ற ஒன்று. நாடகம் தரமா தரமில்லையா நல்லதா நல்லதில்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் அவர் எடுத்த முயற்சியால் அவர் நினைத்த விடயத்தை சாதித்துக்கொண்டு சென்றிருக்கிறார் இந்த நாடகங்களினால். அல்லல் படுகின்ற மக்களின் துயரங்களைத் துடைப்பதற்கான உதவும் முயற்சியில் அவர் வெற்றியடைந்திருக்கிறார். ஜெயமோகனின் நாடகம் பார்ப்பதற்காக ரிக்கற் எடுத்திருக்கின்றோம் என்பதுதான் பலரின் கருத்து. ஒரு சில மணித்துளிகள் சிரித்து விட்டு வருகின்ற வழமை இதற்கு இருந்திருக்கிறது.



இனி நிகழ்விற்கு வருகின்றேன். சரியாக 6 மணிக்கு சாமினி ஸ்ரோரரின் குரலோடு நிகழ்வு ஆரம்பமானது. முதலில் அன்பே சிவம் என்ற சோபனத்தின் பாடல் இசைக்கப்பட்டது. யார் பாடியது என்று அறிக்காமலே அந்தப்பாடல் இசைக்கப்பட்டது. 

"நல்ல குடும்பம்" என்ற தலைப்பில் தமிழ்ச்சொல்வேந்தர் திரு சுகி சிவம் அவர்களின் அருவியாகத் தமிழ் பாயும் அற்புதச் சொற்பொழிவு!

தமிழ் இலக்கிய பேரவை பெருமையுடன் வழங்கும் மாபெரும் தமிழுரை நிகழ்ச்சி!  சிட்னியில் முதல்முறையாக "நல்ல குடும்பம்" என்ற தலைப்பில்
தமிழ்ச்சொல்வேந்தர் திரு சுகி சிவம் அவர்களின் அருவியாகத் தமிழ் பாயும் அற்புதச் சொற்பொழிவு! அடுத்து சொல்வேந்தர் தலைமை தாங்கும் பட்டிமன்றத்தில் "புலம் பெயர்ந்து தமிழர்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?"


இலங்கைச் செய்திகள்

* கொழும்பு - யாழ்பாணம் இ.போ.ச. பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்


* திருகோணமலை தென்னைமரவாடி தமிழ்க் கிராமத்தில் சிங்களவர் அத்துமீறி விவசாயம்


* வெளிநாடுகளில் வாழும் யாழ்வாசிகள் இங்குள்ள தமது காணிகளை விற்பதில் ஆர்வம்


* வவுனியாவில் இருக்கும் போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவநம்பிக்கையுடன் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

- நாமினி விஜேதாஸ


* வன்னியில் இந்திய ராணுவக் குழு

*  பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வெற்றியா?






கொழும்பு - யாழ்பாணம் இ.போ.ச. பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்
1/11/2011

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம் - கொழும்பு புதிய பஸ் சேவையொன்றை இன்று ஆரம்பித்துள்ளது. காலை 6.45 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் அதே நேரம் யாழ்ப்பாணத்திலிருந்தும் பஸ் வண்டியொன்று கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.

போதிதர்மர் வரலாறு...

.
இன்று வலையுலகில் அதிகம் பேர் கூகுளில் தேடும் பெயர் போதி தர்மர் ஆகத்தான் இருக்கும் நானும் அவரின் வரலாற்றை அறியும் நோக்கில் போதிதர்மரைப் பற்றி தேடும் போது பிரபஞ்சக்குடில் என்னும் பதிவில் இவரைப்பற்றியான பல அற்புத தகவல்கள் இருந்தது.

அனைவரும் அறிவதற்காகவே இப்பதிவு.

இப்பதிவை எழுதிய பிரபஞ்சக்குயில் என்னும் பெயரில் பதிவெழுதும் நண்பருக்கு மிக்க நன்றி....

7am-arivu-suryaபோதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்று நான் சொல்வது தியானத்தைதான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன.

போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள். போதிதர்மாவின் கதையை ‘non-linear’ அமைப்பில் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

நீயே நிழலென்று - சிறுகதை- ஸ்ரீரஞ்சனி

.          
தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்தகையை அவசரமாகக் கழுவி விட்டுஅது தீபாவாகத் தானிருக்கும் என்றுஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான்ஆனால் அது வழமையாக வரும் மாதாந்தகிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு எனதொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறதுஎனக்குத் தேவையற்ற அந்தச்செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும்வைத்துவந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன்.இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில்எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.
அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன்காம்பிங்க்குப் போன போதுஎதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்தியஅவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

'மம்கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?'
'பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்ததுஎங்கையிருந்து போன் எடுக்கிறாய்?'
'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன்என்ன நடந்ததுஎண்டு கேக்கிறதுக்காண்டியும்உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டுமைல் தூரம் ஓடி வந்தனான.;'
' மை பேபிற் வாஸ் ஒகேஅவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?'
'யேஸ் லவ் யுஎன்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'
'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற்வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக்கொள்கிறதுஉண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

பேர்த் நகரத்தில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் - மெல்பேர்ன் ஊடகப்பிரிவு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம் 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்றது. நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில்  ஒக்ரோபர் 28ம் திகதி வெள்ளிக்கிழமை பேர்த் நகரத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்விலும், ஊர்வலத்திலும் பங்குகொண்டிருந்தார்கள்.

உலகச் செய்திகள்

* பாகிஸ்தானில் 60 வருடங்களுக்குப் பின் இந்து ஆலயம் திறப்பு: இந்துக்கள் கொண்டாட்டம்

* யுனெஸ்கோவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது பலஸ்தீனம்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

* நாடு கடத்தலுக்கு எதிரான அசாஞ்சேவின் மனு நிராகரிப்பு: எந்நேரத்திலும் அனுப்பப்படலாம்

* ஹிலரி கிளிண்டனின் தாயார் காலமானார்

* சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணம்: சல்மான்பட், முகமது அசிப் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு


* ஐரோப்பிய நாடுகளின் கடனுதவி திட்டம்: கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

பாகிஸ்தானில் 60 வருடங்களுக்குப் பின் இந்து ஆலயம் திறப்பு: இந்துக்கள் கொண்டாட்டம்
 1/11/2011

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், அரசு கட்டுப்பாட்டில் இருந்த இந்து கோவில் ஒன்று, சுமார் 60 வருடங்களுக்குப் பின், கோவில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், தீபாவளியை அக் கோயிலில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

700 கோடி மனித முகங்கள்

 Tuesday, 01 November 2011

உலக சனத்தொகை நேற்றைய தினம் 700 கோடியைத் தாண்டியிருக்கிறது. உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் குறைந்த பட்சம் இரு குழந்தைகள் பிறப்பதாகவும் பாதுகாப்பற்ற நீரைப் பருகுவதாலும் போதிய சுகாதாரப் பராமரிப்பு இல்லாததாலும் ஒவ்வொரு 15 செக்கன்களுக்கும் ஒரு குழந்தை இறப்பதாகவும் கணிப்பிடப்பட்டிருக்கிறது. தினமும் இலட்சக்கணக்கில் பிறப்புக்களும் இறப்புக்களும் நிகழுவதற்கு மத்தியில் உலகின் 700 கோடியாவது மனிதப் பிறவியாக வரப்போவது யாரென்பதைத் திட்ட வட்டமாக தீர்மானிப்பது நடைமுறைச் சாத்தியமான காரியமில்லை என்ற போதிலும் கூட, நேற்றைய தினம் பிறக்கும் போது பிரசவிக்க ப்படுகின்ற குழந்தைகளில் ஒன்றுக்கே அந்த அடையாள பூர்வமான பெருமையை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்திருந்தது. நேற்றைய தினம் உலகில் 382,000 குழந்தைகள் பிறக்குமென்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்தது.

சமூக முதியோர் கவனிப்பு திட்டங்கள் (Community Aged Care Packages)

.
சமூக முதியோர் கவனிப்பு திட்டங்கள் என்பவை யாவை?

நலிந்த வயதான அவுஸ்திரேலியர்கள் தமது சொந்த வீட்டிலேயே தொடர்ந்து வாழ உதவுவதற்கென ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படும் திட்டங்களேபவையே ‘சமூக முதியோர் கவனிப்பு திட்டங்கள்’ (Community Aged Care Packages (CACPs)) எனப்படும். திட்டங்களாகும். வயதானோருக்குத் தேவைப்படும் சிக்கலான கவனிப்புத் தேவைகளை வழங்குவதற்கென இத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அரசினால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

கிடைக்கும் உதவிகள் யாவை?

CACP எனப்படும் திட்டங்கள் வளைந்துகொடுக்கும் தன்மையுடையயவை அத்துடன் அவைமற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் தேவைப்படும் கவனிப்புத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளனடவையாகும் இவை. இத்திட்டத்தின் ஒரு பாகமாக வழங்கப்படக்கூடிய சேவைகளது வகைகளில் பின்வருவன அடங்கும்:

அருள் மிகு சிட்னி முருகன் ஆலய பஞ்ச குண்ட பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்







தமிழ் சினிமா

.
* தீபாவளி பந்தயத்தில் ஜெயம் யாருக்கு?

இளையராஜாவின் மனைவி ஜீவா காலமானார்!

01/11/2011
இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா தனது 60 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு வீரகேசரி இணையப் பிரிவு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கவின்
நன்றி வீரகேசரி
 
இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு தமிழ் முரசு ஆஸ்திரேலியா ஆசிரியர்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.