அரிகர புத்திரன் தரிசனம் காணுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

                              பல்லவி

அரிகர புத்திரன் தரிசனம் காணுவோம்

அவனியில் அரிகர சுதனையே நாடுவோம் 

                      அனுபல்லவி 

 வருவினை போக்கிட மனத்தினால் வேண்டுவோம்

அரிகர சுதனுமே அருளுவான் நாளுமே 

                             சரணம்

 இருமுடி கொண்டுவுன் தரிசனம் காணவே 

அரிகரசுதனே உன்  அடியவர் வருகிறார் 
உருநிலை ஏறியே உருக்கமாய் பாடியே 
திருவடி பணிந்திட அடியவர் வருகிறார் 

உடையினை மாற்றுவார் உணர்வுடன் பாடுவார்
சாமியே சாமியே எனப்பெயர் சூட்டுவார் 
படிகளை அமைத்துமே விளக்குகள் ஏற்றுவார்
பக்தியாய் பூஜைகள் பண்ணியே மகிழுவார் 

ஒருவரை ஒருவர் சாமியே என்றுமே

பெருமையாய் பெயரினைச் சூட்டியே மகிழுவார்
படிகளை அமைத்துமே பூசைகள் ஆற்றுவார்
பக்தியாய் யாவரும் விளக்குகள் ஏற்றுவார்

உணவினை மாற்றுவார் ஒழுக்கத்தைப் பேணுவார்

பழவினை போக்கிட பக்குவம் பேணுவார்
தளர்விலா விரதத்தை பற்றியே பிடித்தவர்
உனதடி சரணெனப் பாடியே பரவுவார்

 



ஆஸி தமிழரின் பெரும்படம் " பொய் மான்" இயக்குநர் Dr ஜெ.ஜெயமோகன் பேசுகிறார் - கானா பிரபா

 ஆஸி தமிழ்ச் சமூகத்தில் வெகு ஜன அந்தஸ்தைப் பெற்ற


பெரும் 
படைப்பாளி Dr J.ஜெயமோகன் அவர்கள் தனது வெற்றிகரமான நாடகத்துறை, குறுந்திரைப் பயணங்களைத் தொடர்ந்து தற்போது "பொய் மான்" என்ற முழு நீளத் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கின்றார்.

ஜனவரி 20, 2023 திரையரங்கில் இப்படம் திரையிடலுக்குத் தயாராகியிருக்கின்றது. 

"பொய் மான்" திரைப்படத்தின் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்பு, சவால்கள், தொழில் நுட்ப நுணுக்கங்கள் குறித்த விரிவானதொரு பேட்டியை Dr J.ஜெயமோகன் அவர்கள் வீடியோஸ்பதிக்காக வழங்கியிருந்தார்.

அந்தப் பேட்டியின் காணொளி

https://www.youtube.com/watch?v=qJq_n-xRrAQ&t=8s


ஒலி வடிவில்

அஞ்சலிக் குறிப்பு அமைதியான சமூக செயற்பாட்டாளன் மகாதேவன் ஜெயக்குமரன் மறைந்தார் முருகபூபதி


கலை, இலக்கிய , சமூக செயற்பாட்டாளரான மகாதேவன் ஜெயக்குமரன் லண்டனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை கனடாவில் வதியும் எழுத்தாளர் – பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் நண்பர் கிரிதரனின் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.

மிகவும் குறைந்தவயதில் சிறுநீரக உபாதையினால் இவர் மறைந்திருக்கிறார்.  ஜெயக்குமரனை முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் சந்தித்தேன்.

அக்காலப்பகுதியில்,  கனடா, கியூபா சென்றுவிட்டு திரும்பும் வழியில்


லண்டனுக்கு வந்தபோது நண்பர் நூலகர் என். செல்வராஜா,  என்னுடன் பயணித்த  இலக்கிய நண்பர் நடேசனுக்கும் சேர்த்து லண்டனில் வரவேற்பு தேநீர் விருந்துபசார நிகழ்ச்சியை  ஒரு உணவு விடுதியில் நடத்தியிருந்தார்.

இந்நிகழ்விற்கு  மு. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், தாஸீசியஸ், அனஸ் இளைய அப்துல்லா, பாலேந்திர – ஆனந்தராணி தம்பதியர், பாலசுகுமார், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தேசம் ஜெயபாலன், நடா. மோகன், நவஜோதி யோகரட்ணம் ஆகியோருடன் ஜெயக்குமரனும் வருகை தந்திருந்தார்.

இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை அன்றே தெரிந்துகொள்ள முடிந்தது.  அதிர்ந்து பேசாமல்,  மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பவர்.  அச்சந்திப்பின் பின்னர் மீண்டும் அவரை அவுஸ்திரேலியா சிட்னியில் 2008 ஆம் ஆண்டு நாம் நடத்திய எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் சந்திக்க முடிந்தது. 

அந்த விழா காலை முதல் மாலை வரையில் சிட்னி ஹோம்புஷ்  ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடந்தது. கலை – இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகளிலும் ஜெயக்குமரன் கலந்துகொண்டார்.

அன்றைய விழாவில் கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளருமான வி. எஸ். துரைராஜாவும்  பேராசிரியர் பொன். பூலோகசிங்கமும் பாரட்டப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும்  நாடக கலைஞரும் வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான உடுவை தில்லை நடராஜாவும், லண்டனிலிருந்து எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் வருகை தந்திருந்தனர்.

அந்த விழாவில்  காலை முதல் மாலை வரையில் எம்முடன் இணைந்திருந்தவர் ஜெயக்குமரன். அவரும் கலை, இலக்கிய ஆர்வலர் என்பதனால்,  பேசுமாறும் கேட்டேன். தான் பார்வையாளனாகவே நிகழ்ச்சிகளை அவதானிக்கின்றேன் எனச்சொல்லி, இறுதிவரையில் மண்டபத்தில் அமைதியாகவிருந்தார்.

அவரிடமிருந்த ஆற்றலும் ஆளுமைப்பண்பும் எத்தகையது என்பதை, காலம் கடந்துதான் அறிந்துகொள்ள முடிந்தது.

2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜெயக்குமரன் அவுஸ்திரேலியா சிட்னியைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய செய்திகள் எமக்கு கிடைக்கவில்லை.

படித்தோம் சொல்கின்றோம்: அ. யேசுராசாவின் அங்குமிங்குமாய்…. நூல் கூறும் பலதரப்பட்ட இலக்கிய புதினங்கள் ! முருகபூபதி

இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில்   உயிர் இல்லையாயின் - வாசகரின் மனதைப்பிணிக்கும் கலைத்தன்மை இல்லையாயின் – அதிற் பயனேதுமில்லை. இதனூடாக, இலக்கிய வடிவங்களிற்குத் திட்டவட்டமான வரையறைகளைக் கொடுக்கமுடியாதென்பதையும்,  அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை புரிந்துகொள்ளலாம் என்பதையுமே, நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை  என்ற இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.  

இவ்வாறு தனது அங்குமிங்குமாய்… நூலில் எழுத்தாளர்                  அ. யேசுராசா மறைந்துவிட்ட எழுத்தாளர் அ.செ. முருகானந்தனின் மனித மாடு சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்து எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பின் தொடக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

அண்மையில் கனடா ரொறன்றோ தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்திய கலந்துரையாடலில், அங்கே வதியும் இலக்கிய திறனாய்வாளர் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள்   அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் நீண்டதோர் உரையை நிகழ்த்தியபோது, யேசுராசாவின் அங்குமிங்குமாய் … நூல்தான் நினைவுக்கும் வந்தது.

யேசுராசாவும்  இந்த நூலில் ஆங்காங்கே எம்மவர் படைப்புகள் குறித்து எழுதும்போது இந்த அழகியல் விடயத்தையும் தூவிச்சென்றுள்ளார்.

மொத்தம் 75 பதிவுகளைக்கொண்ட இந்த நூல், ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் போக்குகளையும் இனம் காண்பித்தவாறு, மொழிபெயர்ப்பு, ஓவியம், இசை, திரைப்படம், பயணங்கள், அவதானிப்புகள், நூல் விமர்சனங்கள் மற்றும் யேசுராசாவுக்கு மிகவும் பிடித்தமான கலை, இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் பேசுகின்றது.

அத்துடன்  அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால கட்டத்தின்  ஈழத்து இலக்கிய வரலாற்றினையும்  யேசுராசா தனது பாணியில்  நினைவூட்டியிருக்கின்றமையால்,  அதனை வாசிக்கும்போது கடந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.

யேசுராசா, சிறுகதைப்படைப்பாளி, விமர்சகர், தொகுப்பாளர், பதிப்பாளர், இதழாசிரியராக இயங்கிய அனுபவம் மிக்கவர். அத்துடன் கலா ரசிகர்.  கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர்.  அலை, கவிதை, தெரிதல் முதலான இதழ்களை வெளியிட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான திசை வார இதழின் துணை ஆசிரியராகவும் இயங்கியிருப்பவர். எனவே,  யேசுராசா கலை, இலக்கிய உலகில் கற்றதும் பெற்றதும் அநேகம். 

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ். குருநகரில் பிறந்திருக்கும் இவர்,  இம்மாதம் தனது 76 ஆவது பிறந்த தினத்தை நெருங்குகிறார்.

கலை, இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு அவசியம் என்பதில் உறுதியானவர்.  

சிலசமயங்களில் அவரது பதிவுகளில் அறச்சீற்றத்தையும் காணமுடியும்.  அங்குமிங்குமாய்… நூலில் அவரது ஐந்து பக்கங்களுக்கு விரியும் என்னுரையிலும் யேசுராசாவின் அறச்சீற்றத்தை காணமுடிகிறது.


ஒரு காலத்தில்  இவருடன் நல்ல நண்பர்களாக திகழ்ந்த சிலரும்,   இந்த அறச்சீற்றத்தை சகிக்க முடியாமல்  இவரிடமிருந்து ஒதுங்கிச்சென்றுவிட்ட  துயரத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. முன்னர் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அவதானித்தேன். பின்னர் புகலிட தேசத்திலிருந்தும் ( அவுஸ்திரேலியா ) பார்க்கின்றேன். ஆனால், யேசுராசா அதற்கெல்லாம் மனதளவில் அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்தும் கலை, இலக்கியத் தேடலுடன் இயங்கிக்கொண்டேயிருப்பவர்.

கருத்துப்பகைமை தனிப்பட்ட பகைமையாகிவிடுவது மிகுந்த


கவலையை  எனக்குத்தந்திருக்கிறது என்பதையும் வலியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.

யேசுராசா,  ஈழத்து இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை என்பதே எனது அபிப்பிராயம்.  அவர் தனது அறச்சீற்றத்தை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு,  படைப்பிலக்கியத்துறையில் இணைந்துள்ள புதிய தலைமுறையினருக்கும் இனி வரவிருப்பவர்களுக்கும் திறனாய்வு – விமர்சனம் – மொழிபெயர்ப்பு –  ஆவணப்படுத்தல் முதலான துறைகளில் ஆதர்சமாக திகழவேண்டும் என்பதும்  எனது தாழ்மையான வேண்டுகோள். 

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் 2014 ஆம் ஆண்டு நடந்த நூலக தினம் நிகழ்வில் யேசுராசா நிகழ்த்திய உரையுடன் அங்குமிங்குமாய்… நூலின் உள்ளடக்கம் தொடங்குகிறது.  இதுபோன்ற  உரைகள்  வருடாந்தம் ஏனைய கல்லூரிகளிலும்


இடம்பெறல் வேண்டும்.

வாசிப்பு அனுபவமும், படைப்பூக்கமும் அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது.  இன்றைய தலைமுறை வாசகர்களும்  எழுத்தாளர்களும் ஒரு கால கட்டத்தில் பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களாயிருந்தவர்கள்தான்.

யேசுராசா,  தரமான இலக்கியபடைப்புகளையும், தனது பயணங்களையும் ஆழ்ந்து அனுபவிப்பவர். உடனுக்குடன் குறிப்புகளையும் எழுதி சேமித்து வைக்கும் இயல்புகொண்டவர் என்பதை அறிவேன்.  அந்த இயல்பை  அங்கிங்குமாய்…. நூலின்  402 பக்கங்களிலும் காணமுடிகிறது.

மொழிபெயர்ப்பும் கவிதையும், அங்குமிங்குமாய் இணையுங் கதைகள், தமிழைப் பேணுவது யாரின் கடமை, செவ்விதாக்கம் பற்றி, தமிழ் ஊடகங்கள் பற்றிச் சில அவதானங்கள் முதலான கட்டுரைகள் எனது வாசிப்பு அனுபவத்தில் மிகுந்த கவனத்தை பெற்றிருந்தன. அதனால், ஏனைய பதிவுகளும், குறிப்புகளும் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதல்ல அர்த்தம்.

தனக்கு பிடித்தமான சில இலங்கை – இந்திய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் நினைவுப்பதிவுகளை எழுதியிருக்கிறார்.

விருதுகள் பற்றி யேசுராசா எழுதியிருந்த குறிப்புகள் சுவாரசியமாகவிருந்தன.

  கலைஞர் – எழுத்தாளர் சமூகப்பொறுப்பு உள்ளவர், சிறுமைகண்டு பொங்குபவர், கலகக் குரல் எழுப்புபவர், சமூகத்தின் வழிகாட்டி , காலத்தை பதிவுசெய்பவர், சத்தியதர்சி, சுயமரியாதை மிக்கவர் என்றெல்லாம் பெருமைப்படுத்திச்சொல்லப்படுகிறது. நமது கலை, இலக்கியச் சூழலில் இவற்றின் உண்மைப்பெறுமானம் எப்படி இருக்கிறது என்பதைத் திறந்த மனதுடன் ஒருவர் நோக்கும்போது, ஏமாற்றந்தரும் நிலைமை . ( பக்கம் 275 ) என்று தனது ஆதங்கத்தையும் யேசுராசா வெளிப்படுத்தியிருக்கிறார்.

என்ன செய்வது நண்பரே…?!

கவிதை, கனவு... காதலி! - மெல்போர்ன் அறவேந்தன்

 




ஞான ஒளி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 சுந்தரராக,அப்பராக,விப்ரநாராயணனாக,ரஹீமாக படங்களில் நடித்து தன் திறமையை பறைசாற்றிய சிவாஜிக்கு ஆன்டனியாக இயேசு பக்தனாக நடிக்கும் சந்தர்ப்பம் 1972ம் ஆண்டு கிடைத்தது.அதிலும் அதுவரை காலமும் அவர் ஏற்று நடிக்காத வேடமாக அது அமைந்தது. அப்படி அமைத்த படம்தான் ஞான ஒளி. விக்டர் ஹியூகோ 18ம் நூற்றாண்டில் எழுதிய லெஸ் மிஸரபல்ஸ் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இப் படத்தின் கதை எழுதப்பட்டது.



ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி, யூ டியூப் என்பன இல்லாத கால கட்டத்தில் மேடை நாடகங்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. இதனால் பல நாடக சபாக்கள் மூலம் ஏராளமான நாடகங்கள் மேடையேறி அவற்றில் ரசிகர்களின் ஆதரவை பெரும் நாடகங்கள் திரைப் படங்கள் ஆகி வந்தன. இந்த வரிசையில் மேஜர் சுந்தரராஜன் நடிப்பில் ஞான ஒளி நாடகம் மேடைகளில் நடிக்கப்பட்டு வந்து அதுவே படமானது.

தமிழில் கிறிஸ்துவ பின்னணியில் அமைந்த கதைகள் படமாக்குவது

குறைவாக இருந்த போதும் வியட்நாம் வீடு சுந்தரம் மிக நேர்த்தியாக இந்தக் கதையை பின்னி எடுத்திருந்தார். அதற்காக அவரை பாராட்டலாம். அதே போல் அவரின் வசனங்களும் அர்த்தபுஷ்டியுடன் அமைந்தன.

பூண்டி மாதா கோவிலில் தினசரி மணியடித்து, ஆலயத்துக்கான நித்ய கருமங்களை செய்து , கோயில் பாதிரியாரின் செல்ல பிள்ளையாக வாழ்பவன் அன்டனி . நல்லவன் , பிறருக்கு உதவுபவன் , ஆனால் கல்வி அறிவில்லாதவன், முரடன்! அவனுடனே வளர்ந்து கல்வி கற்று போலீஸ் இன்ஸ்பெக்டராகி வரும் லோரன்ஸ் அன்டனியின் முரட்டுத்தனத்தை நட்பினாலும், அதிகாரத்தினால் கட்டுப்படுத்த முனைகிறார். அன்டனிக்கும் ராணிக்கு காதல் திருமணம் நடக்கிறது. ஆனால் பிரசவத்தின் போது பெண் குழந்தையை பெற்று கொடுத்து விட்டு ராணி இறந்து விடுகிறாள். சோகத்தில் ஆழ்ந்து விடும் அன்டனி தன் மகளுக்காகவே வாழ்கிறான்.மகள் பட்டணம் சென்று படித்து திரும்புகிறாள். அவளைத் தொடர்ந்து அவள் காதலனும் வருகிறான்.மகளின் காதலை அறிந்து குமுறும் அன்டனியை ஆற்றுப்படுத்தும் லோரன்ஸ் இருவருக்கும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் மகளை விதவையாக்கி, அன்டனியை நாட்டை விட்டே வெளியேறச் செய்கிறது. இருபது ஆண்டுகள் கழித்து அன்டனி, அருண் என்ற பேரில் கோடீஸ்வரனாக நாடு திரும்புகிறான்.

அருமையாக வடிவமைக்கப் பட்ட திரைக் கதையை உள்வாங்கி அன்டனி பாத்திரமாகவே மாறியிருந்தார் சிவாஜி. கெஞ்சல், கொஞ்சல், முரட்டுத்தனம், தவிப்பு, சாதுரியம் என்று பலதரப் பட்ட உணர்ச்சிக் கலவையாக படம் முழுதும் அவர் பரிணமித்தார். இத்தனைக்கும் படத்தில் பதினைந்து நிமிடங்களுக்குத்தான் சிவாஜிக்கு ஜோடி. அதன் பின் தனி ஆவர்த்தனம்தான். படத்தின் முன் பகுதியில் அன்டனியாக அக்கினிப் பிழம்பாக காட்சியளிப்பவர் பிற் பகுதியில் அருணாக அமைதியே உருவாக காட்சிதருகிறார்.

சிவாஜியின் அன்டனி வேடத்துக்கு சமமான வேடம் லோரன்ஸ் வேடம். சுந்தர்ராஜனுக்கு அத்துப்படியான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம்.சிரமமின்றி செய்திருந்தார் அவர். ஆனால் இவர்கள் இருவருக்கும் சவால் விடுவது போல் நடித்து பிரகாசித்தவர் பாதிரியாராக வரும் கோகுல்நாத். அமைதியான நிதானமான நடிப்பு, நல்ல குரல் வளம். கோகுல்நாத்தின் நடிப்பை பார்த்து சிவாஜியே சுந்தர்ராஜனிடம் எங்களையே விழுங்கிட்டான் என்று சொல்லி பாராட்டியிருந்தார்.

ஆளும் வர்க்கமா…? மக்களை சுரண்டும் வர்க்கமா…? அவதானி


கொவிட் பெருந்தொற்றையடுத்து  உலகெங்கும் பொருளாதார நெருக்கடி தோன்றியது தவிர்க்கமுடியாததுதான். இதிலிருந்து மீளுவதற்கான செயற் திட்டங்களைத்தான் ஒவ்வொரு  நாட்டின் அரசுகளும் மேற்கொள்ளவேண்டும்.

பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் படிக்கும்


மாணவர்களுக்கும் கூட இந்த பொது அறிவு நிச்சயம் இருக்கும்.  சாதாரண குடிமகன் கூட குடும்பத்தின் வரவு – செலவில் பொருளாதார நெருக்கடி காணும் பட்சத்தில் அநாவசிய செலவுகளை தவிர்க்கத்தான் பார்ப்பார்.

ஆனால், இலங்கை பாராளுமன்றத்தின் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளும்,  நாட்டை ஆளும் வர்க்கத்தினரும் என்ன செய்கிறார்கள்,..?

நீண்ட காலமாக நாட்டில் மின்வெட்டு நடைமுறையிலிருக்கிறது. அதிலும்  பாரபட்சம்  நிலவுகிறது. வசதிபடைத்த செல்வந்தர்கள்,  அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் பிரதேசங்களில் மின்வெட்டு இல்லை.

மின்வெட்டினால்,  பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் புறநகரங்களில் வசிக்கும் மாணவர்கள்.  கிராமப்புறங்களில்  மண்ணெண்ணை விளக்கேற்றி அவர்கள்  படிக்க தயாரானாலும் சிறிது காலம் அதற்கும் பற்றாக்குறை நிலவியது.

இவ்வளவு நெருக்கடிக்குள்ளும் வாழும் மக்கள்தான் தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். 

ஆனால், தம்மை நம்பி வாக்களித்தவர்களுக்கு சிறிதளவேனும் விசுவாசமாகத்தானா இந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ராஜாங்க அமைச்சர்களும் இருக்கிறார்கள்…?

நாட்டிலே தொடர்ந்தும் மின்வெட்டு. ஆனால்,  பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் மின் கட்டணத்தை செலுத்தாமலிருக்கின்றனர்.

அவ்வாறு செலுத்தப்படாமல் நிலுவையிலிருக்கும் மின்கட்டணம் சுமார் 42 கோடி ரூபாய்.  இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் மாத வருமானம், இதர வேதனங்கள்,  வாகனங்கள்,  அவற்றின் சாரதிகளுக்கான சம்பளம், மற்றும் தொலைபேசி -  வீட்டு வசதி உட்பட இதர  செலவுகள் என்பன மற்றும் ஒரு பெரிய தொகை.

பாராளுமன்ற அமர்வில்  ஒரு தடவை ஆசனத்தில் உட்கார்ந்துவிட்டு எழும்போது மற்றும் ஒரு வேதனம்.  இவை அனைத்தும் மக்களிடமிருந்து சுரண்டப்படும் பணம்தானே..?

இவர்களுக்கு துளியளவும் இரக்கமே இல்லையா..?

இது இவ்விதமிருக்க, பாராளுமன்றத்தில் அண்மையில் நடந்த வரவு – செலவுத்திட்ட விவாதங்களின்போது செலவிடப்பட்ட தொகை சுமார் இருபது கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மின்கட்டண நிலுவை மற்றும் வரவு – செலவுத்திட்ட விவாதத்தின்போது செலவிடப்பட்ட பணம் என்பவை பற்றிய செய்திகள்தான் கசிந்திருங்கின்றன.

வெளியே தெரியாமல் எத்தனை இருக்கிறதோ தெரியவில்லை.

வரணி மத்திய கல்லூரிக்கு இரண்டு மலசல கூடத்தொகுதிகள் அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு 21/12/2022

 


22/12/2022 வன்னி ஹோப் ( Vanni Hope) அவுஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் வரணி மத்திய கல்லூரிக்கு இரண்டு மலசல கூடத்தொகுதிகள் அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது ( 2022.12.21 )  யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்  வரணி மத்திய கல்லூரிக்கு

வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டு மலசலகூட தொகுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.    இந்த வேலைத்திட்டத்திற்கான நிதி அனுசரனையை திரு விந்திரன் வெங்கடாசலம், ராதா சந்திரன் மற்றும் ரேனுகா சிவபாலன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.  இம்மலசலகூட தொகுதிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான திருமதி பிரேமினி சிவஞானசுந்தரம் , என் .முரளிதரன், ஊடக பணிப்பாளர் திரு  தயான் சிவஞானசுந்தரம்,|பாடசாலை அதிபர் திரு. தங்கவேலு , வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

விக்டோரியா தமிழ் சங்க பாடசாலை - வருடாந்த பரிசளிப்பு விழா

 அவுஸ்திரேலியா மெல்பேர்னில் 40 வருடங்களுக்கு மேலாக


புலம்பெயர்ந்த 
தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பதில் முன்னணி வகிக்கும் விக்டோரியா தமிழ்ச் சங்க தமிழ்ப் பாடசாலைகளின் நரே வொரென் வளாகம் தனது வருடாந்த பரிசளிப்பு விழாவை Holt பாராளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ (Hon. MP Cassandra Fernando) தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18/12/22)

கொண்டாடப்பட்டது.


ஒவ்வொரு வகுப்புகளிலும் பல பிரிவுகளில் வெற்றி பெற்ற


மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதுடன்விக்டோரியா மாநிலத்தால் நடாத்தப்படும் VCE தமிழ் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உயர் விருதும்நரே வொரென் வளாகத்தில் அதிக மதிப்பெண்ணைப் பெற்ற மாணவி நிருத்திகா தவீசனுக்கு $500 பணப் பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

 

கடந்த 25 ஆண்டுகளாகவிக்டோரியா மாநிலத்தால் VCE தமிழ் பரீட்சை நடாத்தப்படுகிறது. அண்மைக் காலங்களில் அதிகமான மாணவர்கள் VCE பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்து வருகிறார்கள். இனி வரும் காலங்களில்மேலும் பல மாணவர்கள் தமிழை VCE பரீட்சையில் ஒரு பாடமாக தெரிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக நரேவொரென் வளாகத்தில் வெட்டு புள்ளி 40க்கு மேல் பெறும் மாணவர்களுக்கு $1000 பணப் பரிசு வழங்கிக் கௌரவிக்க பெற்றோர் சங்கம் எண்ணியுள்ளது.

இலங்கைச் செய்திகள்

க​னேடிய தமிழ் காங்கிரஸ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் 

சிறையிலிருந்த வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி

மலையக தமிழர்கள் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்பை கௌரவித்து விசேட நிகழ்ச்சிகள்

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரோக்கியமானதாக அமைந்தது


க​னேடிய தமிழ் காங்கிரஸ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் 

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

உலகச் செய்திகள்

உக்ரைன் சரணடையாது 

பிரபல ஈரான் நடிகை கைது

ஜி20 மாநாட்டில் புட்டின் பங்கேற்பு

பலஸ்தீனிய சட்டத்தரணி இஸ்ரேலால் நாடுகடத்தல்

இஸ்ரேலில் தீவிர வலதுசாரி அரசை அமைக்க ஒப்பந்தம்


உக்ரைன் சரணடையாது 

உக்ரைன் ஒருபோதும் சரணடையாது என்று அமெரிக்கா விஜயம் மேற்கொண்ட அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது உறுதி அளித்துள்ளார்.

திருவாம்பாவை ஆருத்ரா தரிசனம் - 28 டிசம்பர் 2022 முதல் 6 ஜனவரி 2023 வரை

 


திருவெம்பாவை

 


சிட்னி துர்கா கோவில் NEW YEAR EVE 31/12/2022, மற்றும் புத்தாண்டு பூஜை 01/01/2023

 


01/01/2023 ஆங்கில புத்தாண்டு


 

Parramtta பொங்கல் தமிழ் அறுவடை திருவிழா 22/01/2023

 


வன்னி ஹோப் - பருவத்தின் நல்வாழ்த்துக்கள் 2023


 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"


வன்னி ஹோப் அணி ஆஸ்திரேலியா & இலங்கை

ஆனந்தத் தமிழை அரவணைக்கும் மாதம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


              மார்கழி என்றாலே மனமெல்லாம் குளிரும்


          நீர்பெருகி நிற்கும் நிலம்மகிழ்ந்து சிரிக்கும்
          ஊர்முழுக்க விழித்து உவந்தேற்று நிற்கும்
          கார்மேகம் வானைக் கவ்வியே இருக்கும்

         ஆறு குளமெல்லாம் ஆர்ப்பரித்து நிற்கும்
         வீறுடனே நீரும் வெளியில் வரப்பாக்கும் 
         ஊரவரின் கவனம் நீர்பெருக்கை நோக்கும்
         மார்கழியும் மகிழ்வாய் வந்துமே நிற்கும்

         குளிர்வுடைய மாதம் குறைவதனைத் தருமா

         கீதைதந்த கண்ணன் மார்கழியைப் புகழ்ந்தான் 
         தேவரது மாதம் மார்கழியாய் சிறக்க
         நாமதனைப் பீடை எனவுரைத்தல் தகுமா 

         சீர்காழிச் செல்வர் சம்பந்தர் பிறந்தார் 
         சேந்தனார் தேரை தமிழ்பாடி அசைத்தார் 
         சிவனாரின் நடனம் சிரேஷ்டர்கள் கண்டார்
         சிறப்புகள் அனைத்தும் சேர்ந்ததே மார்கழி 

        தோடுடை செவியனைத் தொழுதேற்றும் மாதம்
        மாதொரு பாகனை மனமிருத்தும் மாதம் 
        மாசிலா மனத்துடை மாணிக்க வாசகர்
        வழங்கிய திருவெம்பா முழங்கிடும் மாதம் 

        மாலவன் மாண்பினைப் போற்றிடும் காலம்
        மாண்புடை திருப்பாவை மலர்ந்திடும் காலம்
        ஊனையும் உருக்கிடும் உன்னதத் தமிழை
        உவந்துமே ஆண்டாள் வழங்கிய காலம் 

        ஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதியை
        வீதியெங்கும் பாடி வியந்தேற்றுங் காலம்
        தாளல யமோடு பாடிவரு மடியார்  
        காலையது வேளை காட்டிவிடு காலம் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 44 தீவுக்கூட்டமாக திகழும் எழுத்தாளர்கள் – கலைஞர்களை ஒன்றிணைப்பதில் சந்திக்கும் சவால்கள் ! முருகபூபதி


எங்கள் ஊரில் சில அமைப்புகளிலும் கொழும்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் நான் அங்கம் வகித்திருந்தமையால், அங்கிருந்து பெற்றுக்கொண்ட புத்திக்கொள்முதலின் அடிப்படையில்தான் புகலிடத்திலும் இயங்கினேன்.

வெகுஜன அமைப்புகளில் பலதரப்பட்ட குணவியல்பு


கொண்டவர்களும் இணைந்திருப்பார்கள்.  இவர்களிடத்தில்  ஊடலும் கூடலும் தவிர்க்கமுடியாதது.

அனைவரையும் சமாளிக்கவும் முடியாது.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நான் 1973 இல் இணைவதற்கு முன்பே அது இரண்டு அணியாக பிரிந்துவிட்டது.

எஸ். பொ. நற்போக்கு என்று தொடங்கினார்.

நான் இணைந்த காலப்பகுதியில்  கே. டானியல், என். கே. ரகுநாதன், சாருமதி, புதுவை இரத்தினதுரை, சில்லையூர் செல்வராசன் ஆகியோர் விலகிச் சென்றிருந்தார்கள்.

இச்சங்கத்தில் மாஸ்கோ சார்பு எழுத்தாளர்களும் பீக்கிங் சார்பு எழுத்தாளர்களும் தொடர்ந்து இணைந்திருந்தனர்.

இதேவேளை பூரணி காலாண்டிதழை வெளியிட்டவர்கள்  அணியேதும் உருவாக்காமல் மார்க்ஸீய சிந்தனை கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மு. தளையசிங்கத்தின் சிந்தனைக்கு  நெருக்கமாக  இயங்கினார்கள்.

எனக்கு அனைவருடனும் எந்த முரண்பாடுமற்ற நட்புறவு இருந்தது.  அப்போது நான் அங்கே புதிய இளம் தலைமுறை. அதனால் அனைவருக்கும் நான் செல்லப்பிள்ளை.  அங்கிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் குணவியல்புகளை நன்கு அறிந்து வைத்திருந்தேன். அவ்வாறு பெற்ற புத்திக்கொள்முதல் அனுபவத்துடன்தான் அவுஸ்திரேலியாவில் கால் ஊன்றினேன்.

இங்கே இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் ஆகியனவற்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்திருந்தாலும், இங்கிருந்த ஏனைய தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்தேன்.  இடையில் மக்கள் குரல் கையெழுத்து சஞ்சிகை, உதயம் இருமொழி மாத இதழ் ஆகியனவற்றின் ஆசிரியர் குழுவிலுமிருந்தேன்.

எனினும்,  எனது முழுக்கவனமும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்தான் குவிந்திருந்தது.  இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருப்பதனால் மீண்டும் அதுபற்றி பதிவுசெய்யவேண்டிய அவசியமில்லை என கருதுகின்றேன்.

இதில் இணைக்கப்பட்டுள்ள காணொளிகளின் வாயிலாக இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வரலாற்றை வாசகர்கள் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே எழுத்தாளர்களின் முக்கிய கடமை எனக் கருதுபவன் நான். இந்த பால பாடத்தை வீரகேசரி நாளிதழ் எனக்கு கற்றுத் தந்திருந்தது.

ராஜ தந்திரமும் ராஜ விசுவாசமும் அவதானி


மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மா,  முக்கிய பாத்திரம். தருமம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது காட்சி தருபவர்தான் இந்த பரமாத்மா எனவும் சொல்வார்கள்.   கௌரவர்கள்,  அஸ்தினாபுரத்தை ஆண்டபோது, அதில் தமக்கும் பங்கு கேட்டு பேராடியவர்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.

அந்த பங்காளிச் சண்டையில்  இறுதியில் துரியோதனன் தோற்றான். 


செஞ்சோற்றுக் கடனுக்காக இறுதிவரையில் அவனுடன் நின்ற கர்ணனும்  கிருஷ்ண பரமாத்மாவின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டான்.  கர்ணன் இருக்கும் வரையில் துரியோதனனை பாண்டவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது கிருஷ்ணருக்கு நன்கு தெரியும்.

அதனால்தான் குந்திதேவிக்கு மாத்திரமே தெரிந்த அந்தரங்க இரகசியத்தை, அவளிடமே அம்பலப்படுத்தி,  கர்ணனுக்கு தூது அனுப்பி,  அவனை தாயின் பாச வலையில் விழச்செய்து, இறுதியில் குருஷேத்திர போர்க்களத்தில்  கர்ணனை வீழ்த்தினார் கிருஷ்ண பரமாத்மா. போரிடத் தயங்கிய அருச்சுனனுக்கு கீதோபதேசம் செய்து அவனுக்கு உருவேற்றினார்.

அந்தப்போரில் கௌரவர்களை வீழ்த்துவதற்காக கிருஷ்ண பரமாத்மா மேற்கொண்ட ராஜதந்திரங்கள் அனைத்துக்கும், அவருக்கு பாண்டவர் வம்சத்திடமிருந்த ராஜவிசுவாசம்தான் பிரதான காரணம்.

அத்துடன்   பாண்டவர்களையும் கௌரவர்களையும் சோதிக்கவும் அவர் தவறவில்லை. இதனால் மகாபாரத காவியத்தில்  கிருஷ்ணர் பிரதான பாத்திரமானார். 

சமகாலத்தில்  இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த 13 ஆம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும்போது, எமக்கு மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர்தான் நினைவுக்கு வருகிறார்.

இலங்கையில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை என்பதையும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் தலைவர்கள் சிலர்தான் இதில் பங்கேற்றுள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அநுரா குமார திஸாநாயக்காவின் தலைமையில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணியும், குமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்க்காங்கிரஸும் இடம்பெறாத சந்திப்பே இந்த சர்வகட்சி மாநாடு.