பொழுதும் மனசும்.

.

சுருண்டு கிடக்கிறது
பொழுதும் மனசும்
கவிழும் ஓடாய்
இருள்.

உரலும் உலக்கையுமாய்
காற்றும் மரங்களும்.

நிலவின் ஒளி
நிசப்தத்தின் மேல்.
இரைச்சலுடன்.

அங்கங்கே
உதிரும் கூடுகள்
இறக்கையடித்தலில்.

துணித்தட்டியாய்
அசையும் குளம்.

இருள் முட்டை
வெளிச்சக்குஞ்சு பொறிக்கும்.

மனமுட்டையில்
உணர்வுக் குஞ்சுகள்
அலகு தீட்டும். 

Nantri Summa

திரும்பிப்பார்க்கின்றேன் - எழுத்தாளர்களும் தேர்தல்களும் - முருகபூபதி

.

அரசியல்   அதிகாரம்  என்பது  மக்களின் நலன்களுக்காகவே   மக்களினால்    தேர்தலில் தரப்படுகிறது.    அத்தகைய   ஜனநாயக  உலகில்  நாம் வாழ்கின்றோம்.
  
                                                                                           
சங்ககாலத்திலிருந்து  புலவர்கள்,  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள்  அரசியல்   பேசிவந்தவர்கள்தான்.   அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும்     இவர்களில், சங்ககாலப் புலவர்கள்   மன்னர்களை  புகழ்ந்து  பாடியே  வாழ்க்கையை   ஓட்டினர்.
விதிவிலக்காக  "  மன்னவனும்   நீயோ   வளநாடும்  உனதோ..." என்று தமது   தர்மாவேசத்தை   கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான்   கம்பர்  என்றும்   சொல்லப்படுகிறது. வள்ளுவரும்    இளங்கோவும்  அவருக்குப் பின்னர்  வந்த  பாரதியும் அரசியல்,   அறம்  பற்றியெல்லாம்  எழுதினார்கள்.
நவீனகாலத்து   எழுத்தாளர்கள்  அரசியல்  பேசியதுடன்  எழுதினார்கள், அரசியல்வாதிகளாக  தேர்தல்களிலும்  தோன்றினார்கள்.   அரசியல் தலைவர்களை   நம்பி   அவர்கள்  பின்னாலும்  சென்றார்கள்.
தமிழ்நாட்டில்  காலத்தின்  இடி முழக்கம்  என  கொண்டாடப்பட்ட ஜெயகாந்தனும்  அரசியல்  பேசினார்,   எழுதினார்,    ஒரு இலக்கியவாதியின்  அரசியல்  அனுபவங்களும்  எழுதியவர்.   ஒரு கட்டத்தில்  சென்னை   தியாகராயர்  நகர்  சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு  நாற்பதுக்கும்  குறைவான  வாக்குகளைப் பெற்று, தமக்கு  கிடைத்த  வாக்குகள்  அனைத்தும்  அப்பழுக்கற்றவை   என்றும்  வசனம்  பேசினார்.
மற்றுமொரு   எழுத்தாளர்  பரீக்ஷா  ஞாநியும்  ஆம்  ஆத்மி  கட்சியில் இணைந்து  தேர்தலில்  போட்டியிட்டு  தோல்வியையும் அனுபவத்தையும்  புத்திக்கொள்முதலாக்கினார்.
இலங்கையிலும்   பல  எழுத்தாளர்கள் -  ஊடகவியலாளர்கள் தேர்தல்களில்  போட்டியிட்டிருக்கின்றனர்.  ஒரு  காலத்தில்  மூத்த நாவலாசிரியர்  சுபைர்  இளங்கீரன்  கம்யூனிஸ்ட்  கட்சியின்  சார்பில் யாழ்ப்பாணம்   மாநகர  சபைத்தேர்தலில்  போட்டியிட்டவர்தான்.

தாமிரபரணி: நதிக்குள் புதையுண்ட ரகசியங்கள் அழிவின் சாட்சியாய் நிலைத்த 'கொற்கை

.

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து கிளம்பும் தாமிரபரணி, ஆழ்வார் திருநகரி, ஏரல், ஆத்தூர் வழியாக கடலை நோக்கி பயணிக்கிறது. வழி எல்லாம் வரலாற்றை ரகசியம்போல தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது நதி. ஒவ்வொன்றையும் தோண்டத் தோண்ட ஆச்சர்யம். அவற்றில் கொற்கையும் ஆதிச்சநல்லூரும் பிரமிக்க வைக்கின்றன. மேற்குலகில் நாகரிகம் வளர்ச்சி அடையாத அந்தக் காலகட்டத்தில் இங்கே மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் கட்டி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
எங்கே போனது துறைமுகம்?
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது கொற்கை. ஊர் முகப்பில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மரம். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் என்கிறார்கள். அதன் கீழே சில கற்சிலைகள் இருக்கின்றன. வரலாற்றை அசைபோட்டபடி கொற்கையில் கால் வைத்தபோது வெறுமை மனதில் அப்பிக்கொண்டது. ஆள் அரவமற்ற தெருக்கள், சிறு பள்ளிக்கூடம், ஆளே இல்லாத ஒரு தேநீர் கடை என சிறு கிராமமாக காட்சியளித்தது கொற்கை. நாம் நடக்கும் இந்தச் சாலையிலா முத்துக்களை குவித்து வைத்து விற்றார்கள்? ஆயிரக்கணக்கில் அரேபியக் குதிரைகள் வந்திறங்கிய துறைமுகமா இது? எங்கே அந்த கடல் அலைகள்? எங்கே அந்தக் குளம்பொலி கள்? காலச்சக்கரத்துக்கு கருணை ஏது?
பாண்டியர்களின் தலைநகரம்

அமரர் அப்துல் கலாம் அவர்கட்கு ஆஸ்திரேலியா தமிழர்களின் அஞ்சலி 29.08.15

.வைணவத்தில் திளைத்த ஆழ்வார்கள்


.

 நம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை  நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.
அவற்றுள் , வைணவ இலக்கியங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் ,  ஆழ்வார்கள் எனப்போற்றப்பட்ட பன்னிருவரால் எழுதப்பட்டவை .

பாற்கடலில் துயிலும் பரந்தாமன்  – திருமால் , பூலோகத்தில்  அர்ச்சாவதாரத்தில் அருள்பாலிக்கிறார் பல திருத்தலங்களில் .

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
 வைணவ பக்தியில் திளைத்திருந்தவர்கள் பலரும்   பல திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகை , சிறப்பை ,இறை தியானத்தை பல வழிகளிலும் , பூவுலகத்தில் துயர் தீர்ந்து மக்கள் , பிறவா வரம் எனும் மோட்சப்பராப்தியடைய வழிகாட்டி சென்றுள்ளனர்

இறைவனை அடைய   ஆண்களுக்கு பல வழிகளை உரைத்த  வேதம் ,
பெண்களுக்குமனதில் சிந்தித்து , வாயினால் பாடி , மாலவனை தூய மலர்கள் கொண்டு தூவித் தொழுதால் மட்டும் போதும் என்கிறது .

இலக்கியச் சந்திப்பு - 23

.சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or   paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 201519 - 09 - 2015 Sat   JHC OBA's கீதவாணி  விருதுகள்    at 6pm at UNSW Clancy Auditorium

 27 - 09 - 2015 Sun    நா .வை.குமரிவேந்தனின் (மகேந்திரராசா) நூல் வெளியீடு மாலை 4.30, யாழ்                                              மண்டபம், பென்டல் கிலில்

11 - 10 - 2015   Sun   நந்திவர்மனின்  கவிதை நூல் வெளியீடு மாலை 5.30 மணிக்கு 


31 - 10 - 2015   Sat - JCC OBA Annual Dinner and Dance. Petersham Town Hall 6:00pm

08 - 11 2015 Sun  - "புனித கயிலாச யாத்திரையும் எனது அனுபவங்களும்" 
                                By Paramasamy Panchadcharam நூல் வெளியீடு –   ( between 3.00 pm to 6.00 pm 
                                at Yarl Function Centre, Station Road, Pendle Hill, NSW 2145
                                 
14 - 11 - 2015   Sat    Laughing' o Laughing , Bahai Centre, Derby St, Silverwater at 6.00Pm

15 - 11 - 2015   Sun     Laughing' o Laughing  Bahai Centre, Derby St, Silverwater at 5.30Pm

21 - 11 - 2015   Sun    நூல் வெளியீடு மாத்தளைசோமுவின்  ஆஸ்திரலிய  திவாசிக்கதைகள்                                       HOME BUSH PRIMARY SCHOOL,  5 PM.

28 - 11 - 2015   Sat  - Vembadi Girls' High School Annual Dinner Dance 2015 - Vembadi Girls' High                                                      School Old Girls Association - Sydney (Australia)

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள் 2016

23 - 04 - 2016   Sat  - 24th Anniverasy  -   ABAYAKARAM

08 - 05 - 2016   Sat  - வசந்த மாலை 2016 - சிட்னி தமிழ் அறிவகம் 


மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-2 திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம்

.

எம்மைப் பெற்றவர்கள் பெருமையினைப் பேணிடுக
.மொட்டவிழ்ந்து மென்னிதழ் விரிந்;து மலராகும் தாய்மை
சொட்டும் அதன் மீதாக தியாகப் பனி வகிடு மூட்டம்
கட்டவிழ்ந்து காம்பினைத்தக்க கவர்ந்திழுக்கும் தந்தை..
வட்டமிட்டு உடன்பிறந்தோர் மலரும்முகம் பார்க்கும் காலம்!
விடுதலைக்கு விரித்து வைத்த விண்ணப்ப மலர்கள்
படுகிடப்பில் பக்குவமறியா விளை பாதகங்கள் சுழ..
விடுகதைகள் விடுவிக்க விரைந்திட்ட மேலோர் --வீணாகா
மலரும் முகம் காணும் வேளை மெல்லனவே உதிக்கும் !
பெண்களவர் தங்களை விடுவிக்க எழுந்தால் .குமுகாயம்
கண்கட்டு பூட்டுக்கள் சாவியற்றே கழன்று நிலைதேறும்
அன்னையவர் மநுநீதி அவளுள்ளே சரிநிகர் ஆட்சிகொளின்
திண்ணமாய் பூம்பொழுது புலர்திங்கே புத்துணர்வால் நிமிரும் !
மலருவதை தொலைத்தவர்கள் மங்கையர்கள் அல்லவே... -
மானுச நேயமது குடைக்கொன்றின் கீழாக மதியிட்டு சேரின்
தோளோடு சமதோளாக பால்பேத வேற்றுணர்வை துரத்தின்..
தொல்லைகள் தொலைந்தங்கே மலரும்முகம் பார்க்கும்காலம் !
காலத்தால் கனிவாகும் அக-புற காதலது புவிச்சுழல்வில்
கடுகதியாய் வன்முறைகள் வன்புணர்வு காணாத்துப் போகும்
அவலமது மோசடிகள் அந்நியமாய் அகன்று அகலும்..nஐக
அகமதில்ஆன்றோர் சான்றோர் அற்புதமாய் தலையெடுப்பின் !
தலைப்பினைத்தத்தெடுத்து தடைதாண்டி விடையாக..எழுமின்
திகைத்திடும் திமிராக திக்கெட்டும் ஓரே தீர்வாய் !
திருமதி. கோசல்யா  சொர்ணலிங்கம்

kalam...


.


தெற்கின் விதையாகி
வடக்கே விருட்சமாகி
தமிழரின் புகழை
தரணியெங்கும் நிலைநாட்டியவர்..

குழந்தைகளோடு குழந்தையாய்
மாறி கலக்க அவரால் மட்டுமே
முடியும்..

அரசுப்பள்ளியின் நம்பிக்கைநட்சத்திரம்
கனவு காணச்சொன்னவர்
கனவாய் மாறினார்....

முதியோர்களினால் பயனில்லை என
மாணவர்களைப்பண்படுத்தியவர்..

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”
தமிழனின் குரலாய் அன்னிய தேசத்தில்
தழைத்தோங்கியத்தலைவா...

இலங்கைத் தமிழரான மருத்துவர் கனகசபைக்கு லைபீரியாவின் உயர் விருது!

.
இலங்கைத் தமிழரான பல் மருத்துவர் மார்க்கண்டு கனகசபை லைபீரியாவின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த யூலை 17ஆம் திகதி மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மொன்றோவியாவில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இவருக்கு ஆபிரிக்காவின் நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.
  
கடந்த 37 வருடங்களாக லைபீரிய மக்களுக்கு மருத்துவர் கனகசபை அர்ப்பணிப்புடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆற்றிய சேவையினைக் கௌரவிக்கும் வகையில் இந்த அதியுயர் விருதை அந்நாட்டின் ஜனாதிபதி வழங்கினார்.
கடந்த 15 வருடங்களாக லைபீரியாவில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமடைந்திருந்ததுடன் அண்மைய நாட்களில் எபோலா தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. லைபீரியாவின் இடர்மிகுந்த இந்த நாட்களிலும் மருத்துவர் கனகசபை தனது பணியினை மேற்கொண்டார்.
கடந்த 40 வருடகால வரலாற்றில் ஆபிரிக்காவின் நட்சத்திரம் என்ற விருதினைப் பெற்ற இரண்டாவது வெளிநாட்டு மருத்துவர் இவரே. நாட்டின் 168ஆவது சுதந்திர தின நிகழ்வில் வைத்தே இந்த அதியுயர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. லைபீரியாவின் சுகாதார மற்றும் சமூகநல அமைச்சு முன்னெடுக்கும் வாய்ச்சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவராக தற்போது மருத்துவர் கனகசபை செயற்படுகிறார். லைபீரியாவின் பல்வேறு மருத்துவமனைகளிலும் பணியாற்றி கனகசபை லைபீரியாவின் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார்.

இலங்கை செய்திகள்


106 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஐ.தே.க. : ரணில் மீண்டும் பிரதமராகின்றார்

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

தேர்தலில் படுதோல்வியடைந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி

பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த

தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்

மலை­ய­கத்­தி­லி­ருந்து எட்டு தமிழ் பிர­தி­நி­திகள் தெரிவு

தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி


106 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஐ.தே.க. : ரணில் மீண்டும் பிரதமராகின்றார்
19/08/2015 நடை­பெற்று முடிந்த எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் 106ஆச­னங்­களை பெற்று ஆளும் ஐக்­கிய தேசிய கட்சி வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் 95 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தேர்­தலில் தோல்­வியை தழு­வியுள்­ளது.

என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவிகள்

.
தமிழ்   மரபிலும்  தமிழ்  இசை  மரபிலும்  பறையின்  இடம்பேராசிரியர் சி. மௌனகுரு


பறை பற்றி  இப்போது பலர் பேசுகிறார்கள்
மட்டக்களப்பில் பெண்கள்  சேர்ந்து  செய்த  பறை முழக்கம்  ஒன்றையும்  நான் இணையத்  தளத்திலும்  பார்த்தேன்.  மிக்க  மகிழ்ச்சியாக  இருந்தது.
இப் பறை  வாத்தியத்தை  நாம்  கிழக்குப்  பல்கலைக்  கழகத்தில்  1996 இல் அறிமுகம் செய்தோம்.   இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.  அப்போது நான் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் தலைவராயிருந்தேன்.
கிழக்குப் பல்கலைக் கழகம் 1996 இலிருந்து வருடாவருடம் உலக நாடகதின விழாவை நடத்தி வந்தது. எமது உலக நாடக தின விழாவினை பறைமுழக்கத்தோடுதான் ஆரம்பித்தோம்.  அது முதல் படி
களுதாவளையிலிருந்து  பாரம்பரிய பறை மேளக் கலைஞரும் மூப்பனுமான பெரியவர் ஆனைக்குட்டி என்பவரது  தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது.  இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்.  இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதாவளையச் சேர்ந்தவரும்  இன்று    விரிவுரையாளராயிருப்பவருமான  அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்.
அவரோடு  சேர்ந்து  எனக்கு  மிகுந்த வலதுகரமாக  நின்றவர் பாலசுகுமார்.   உதவியாக  இருந்தவர்  ஜெயசங்கர் .  முதன் முதலில் பறை தூக்கி  அடித்த  பல்கலைக் கழக  விரிவுரையாளர்  பாலசுகுமாரே.

கவிஞன் கவிதை: நிலம், போர், காதல்

.


இலங்கைத் தமிழ்க் கவிதைகள், இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுபட்டவை. புதுக்கவிதை பிறப்பதற்கு முன்பான இந்தியத் தமிழ்க் கவிதைகளுடன் இலங்கைத் தமிழ்க் கவிதைகளுக்கு உறவு உண்டு. அந்தக் காலகட்டத்திய மரபின் தாக்கத்தை இலங்கைத் தமிழ்க் கவிதைகளும் பிரதிபலித்தன. ஆனால் புதுக்கவிதை பிறந்ததற்குப் பிறகான இந்தியத் தமிழ்க் கவிதைகளின் நிலை வேறு. அவற்றில் மரபின் பாதிப்பு உள்ளடக்கம் ரீதியாகவும் மெல்லக் குறைந்து இன்று கிட்டத்தட்ட இல்லாமல் ஆகியிருக்கிறது. மாறாக இலங்கைத் தமிழ்க் கவிஞர்கள் மரபை உள்வாங்கி தங்கள் நிலப் பதிவுகளை இந்தப் புதிய வடிவத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களுள் ஒருவர்தான் கவிஞர் சேரன்.
மஹாகவி உருத்திரமூர்த்தி இலங்கைத் தமிழ்க் கவிதையின் முன்னோடிக் கவிஞர். ‘பாரதியின் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால் அதன் மறுகிளை மஹாகவி உருத்திரமூர்த்தி’ என்கிறார் இலங்கைக் கவிஞர் சண்முகம் சிவலிங்கம். சண்முகம் சிவலிங்கமும் எம்.ஏ.நுஃமானும் மஹாகவிக்கு அடுத்த தலைமுறைக் கவி ஆளுமைகள். இந்த மூவரும்தான் சேரனின் ஆதர்ச கவிகள். மஹாகவியின் கவிதைகள் மரபிலானவை. சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான் இருவரின் கவிதைகளையும் அதன் அடுத்தடுத்த நிலைகளாகக் கொண்டால் சேரன் கவிதைகளுக்கு இதில் மூன்றாம் நிலை. தரவரிசையல்ல இது; கவிதை அடைந்த வடிவ மாற்றம்.
இனப்பிரச்சினையும் கலவரங்களும்

மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-3 திருமதி. சுமதி பாலச்சந்தர்இ பிஜித்தீவு

.


திகைத்திடும் திமிராகஇ திக்கெட்டும் தீர்வாய்
அண்டம் நடுநடுங்கஇநீ உன் 
தாண்டவம் கொண்டதிங்கு
போதும் சிவனே
செயலாற்றும் காலமிது என்னோடு
நீ வந்திங்கு களமிறங்கு
யுத்தம் இல்லாத 
அண்டம் செய்! இங்கு
ரத்தம் சிந்தாத பிண்டம் செய்
தாவரங்களேஇபூமி வந்த
தேவதைகளெனச் சொல்! அவற்றை
காத்தலே மானிடத்தின் வாழ்வியல் எனச் சொல்
பெண்மை என்பதே 
புனிதமெனச் சொல்! அதில்
கண்ணியம் கொள்வதே வளமை எனச் சொல்
வாழும் இடமே 
சொர்க்கமெனச் சொல்! எவருக்கும்
உதவாத மனமே நரகமெனச் சொல்
பணம் என்பது 
பண்டமெனச் சொல்! அதுவல்ல
பிராணன்இ என்பதையும் சொல் !
இனிதாக
இத்தனையும் செய்துவிடு
நிரந்தர மலர்ந்த முகம்
நுகர்ந்துவிடு !

உலகச் செய்திகள்


பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி

இந்­தோ­னே­சிய விமா­னத்தில் பய­ணித்த 54 பேரது சட­லங்­களும் மீட்பு

இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பெண்கள் படை­ய­ணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பாடகி

பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி

17/08/2015 தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 27 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவுஸ்திரேலியாவில் நடந்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 27 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்.

.


இலங்கையில்   நீடித்திருந்த  போரினால்  தமது  பெற்றோரை  அல்லது  குடும்பத்தின்  மூல  உழைப்பாளியை  இழந்திருந்த ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  உதவுவதற்காக 1988  ஆம்  ஆண்டு  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில் தொடங்கப்பட்ட  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  என்னும் தன்னார்வத்தொண்டு  நிறுவனத்தின்  27   ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்    அண்மையில்  மெல்பனில்  வேர்மன்  தெற்கு  சனசமூக  நிலைய  மண்டபத்தில்  நடந்தது.
நிதியத்தின்  நடப்பாண்டு  தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  தலைமை  தாங்கினார்.
ஆரம்பத்தில்  ஆறு மாணவர்களுக்கு  உதவிய  இந்த  அமைப்பு படிப்படியாக  எண்ணிக்கையை   அதிகரித்து  இதுவரையில்  சுமார் ஆயிரம்  மாணவர்களுக்கு    உதவி   வழங்கி,  அவர்கள்  தமது உயர்தரக் கல்வியை  பூர்த்திசெய்யும்  வரையில்  தொடர்ச்சியாக சேவையாற்றியது.
திரு. விமல் அரவிந்தன்  நிதியத்தின்  உறுப்பினர்களுக்கு  நன்றி தெரிவித்து    உரையாற்றுகையில்  மேலும்  பல  மாணவர்களுக்கு இதுவரையில்  உதவும்  அன்பர்கள்  இல்லாமலேயே   நிதியத்தின் கையிருப்பிலிருந்து   உதவி  வழங்கப்படுகிறது  என்பதையும் சுட்டிக்காட்டி,   மேலும்  உதவும்  அன்பர்களை   நிதியத்தில் இணைப்பதற்கு   நிதிய  உறுப்பினர்கள்  முன்வரவேண்டும்  என்றார்.

சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில்

.

‘துக்ளக்' ஆசிரியரும், நடிகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த சோ ராமசாமி, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மதியம் அவருக்கும் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளையராஜாவுக்கு சிகிச்சை
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நேற்று சிகிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு வந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

தமிழ் சினிமா


வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க அஜித்தின் அமர்க்களம், சூர்யாவின் சிங்கம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் தான் இவர்களின் 25வது படம். இந்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆக, தன்னுடைய 25வது படத்தையும் ஹிட் அடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாரா ஆர்யா?.

தன் Favorite இயக்குனர் ராஜேஸ் அழகுராஜா தோல்வியில் துவண்டு இருந்தாலும், நீ என் நண்பேண்டா என்று தோளில் ஏற்றி வைத்து VSOP படத்தை தானே தயாரிக்கவும் செய்து வெளியீட்டுள்ளார் ஆர்யா.
ராஜேஸ் படத்தில் என்ன கதை? சரக்கு, நண்பர்கள், காதல், மோதல், பின் சந்தானத்தின் மூலம் தீர்வு. இது தான் இவர் படத்தின் வழக்கமான பார்முலா. இதை தன் முந்தைய படத்தில் மிஸ் செய்த ஒரே காரணத்தால் கொஞ்சம் தடுமாறினார்.
தற்போது பிடித்து விட்டார், ஆர்யா, சந்தானம் திக் ப்ரண்ட்ஸ். இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்த நேரத்தில் சந்தானத்திற்கு, பானுவுடன் திருமணம் நிச்சயமாகின்றது. திருமணத்திற்கு பிறகு ஆர்யா செய்யும் சேட்டைகள் பிடிக்காமல், அவருடைய நட்பை மனைவி கட் செய்ய சொல்ல, சந்தானம், ஆர்யா காதலித்தால் நம்மை தொந்தரவு செய்ய மாட்டான் என்று தமன்னாவை இவருக்கு கோர்த்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் தமன்னாவும் சந்தானம் நட்பை ஆர்யாவிடம் கட் செய்ய சொல்ல, கடைசியில் மனைவிகளுக்காக இவர்கள் நட்பு பிரிந்ததா? இல்லை நட்பு தான் முக்கியம் என கடைசி வரை இருந்தார்களா? என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யாவிடம் சார் நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் கேமரா வைத்து Shoot செய்து கொள்கிறோம் என சொல்லி விட்டார் போல ராஜேஷ். தனக்கு எது எது எல்லாம் வராதோ, அதையெல்லாம் ப்ளஸாக்கி சிக்ஸர் அடிக்கின்றார்.
சந்தானம் சார் எங்க போனீங்க இத்தனை நாளா? சந்தானத்தின் சரக்கு ராஜேஸ் தான் போல, இந்த கவுண்டரை கவனித்தால், அந்த கவுண்டர் மறந்து விடுகின்றது. அந்த அளவிற்கு பின்னி பெடல் எடுத்து விடுகிறார். ஒரு நாள் நீ என் இடத்துல இருந்து பாரு, எத்தன கவுண்டர், எத்தன மாடுலேஷன் என சந்தானம் பேசும் காட்சியில் நான் தாண்ட காமெடி கிங் என்று சொல்லாமல் யாருக்கோ சொல்கிறார்.
அதிலும் குறிப்பாக வித்யூ லேகா குடும்பத்தை கலாய்க்க செல்லும் இடத்தில் சந்தானத்தின் டாப் 10 காமெடியில் இடம்பெறும் காட்சி. தமன்னா பாகுபலியில் பார்த்த வீரமங்கை இதில், கண்டேன் காதலை ஸ்டைலில் துறுதுறுவென அசத்தியுள்ளார். வித்யூ லேகாவும் மனோரமா, கோவை சரளா வரிசையில் இடம்பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நீரவ் ஷா தான் கேமராவா? என்று கேட்கும் அளவிற்கு தான் உள்ளது. டி. இமான் இசையில் ‘லக்கா மாட்டிகிச்சு’ ’நான் ரொம்ப பிஸி’ பாடல் செம்ம குத்து. பின்னணி இசை ராஜேஸ் கண்டிப்பாக யுவனை மிஸ் செய்து தான் வருகிறார்.

க்ளாப்ஸ்
ஆர்யா, சந்தானம் கெமிஸ்ட்ரி, இன்னும் 10 படங்கள் நடிக்கலாம், அந்த அளவிற்கு எனர்ஜி. படத்தின் எந்த இடத்திலும் முகம் சுழிக்காத படியான காட்சியமைப்புகள்.

பல்ப்ஸ்

படத்தின் டைட்டிலை ஏதேதோ சொல்லி சமாளித்தாலும், படம் முழுவதும் ‘மது அருந்துதல்’ வாசகம் வந்து கொண்டே தான் இருக்கின்றது. ராஜேஸின் சரக்கு அது தானே? அவரை சொல்லி எந்த குற்றமும் இல்லை.
மொத்தத்தில் ராஜேஸ் நமக்கு இது தான் ‘பாஸ்’ சரி என்று ஆர்யா+சந்தானத்தை ஒண்ணா நடிக்க வைத்து விட்ட இடத்தை பிடித்து விட்டார்.

ரேட்டிங்- 3/5

நன்றி cineulagam