.
தீர்க்கமான தருணம்.
கொழும்புவிற்கு மனம் திறந்த மடல்
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்
இந்திய அரசின் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள்
இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தி.மு.க. தலைவருக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்
கிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கு ஏன் பதவி எதுவும் கிடைக்கவில்லை? விளக்குகின்றார் துரை
தீர்க்கமான தருணம்.
சுகு-ஸ்ரீதரன்
தமிழ்
தரப்பினால் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து ஒரு மாகாண சபையை கிழக்கில்
உருவாக்கமுடியவில்லை. இது மிகவும் பலவீனமான நிலையாகும். சமூக அக்கறை
இருக்குமானால் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும்
நில
அபகரிப்பு இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையீடு போன்ற
நிலைமைகளில் இது மிகவும் முக்கியமானது. தவிர மாகாணங்களுக்கு அதிகாரங்கள்
பகிர்வதற்குப் பதில் மத்தியை நோக்கி நகர்த்துவதென்பது திட்டமிட்ட முறையில்
வெளிப்படையாகவே நிகழ்கிறது. கிழக்குமாகாண ஆளுனர் எப்போதும் மக்களால் தெரிவு
செய்யப்பட்;ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்கள் போவதை விரும்பாதவர். கடந்த
மாகாண சபையின் மீது அவரின் செயற்பாடுகள் அதற்கு சாட்சி. அது அவரின்
சித்தமல்ல . ஆண்டவனின் சித்தப்படி அவர் நடக்கிறார். மாகாண சபையின் அன்றாட
செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் கூட அவற்றிடம் இல்லை. இது முன்னாள்
முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட கடந்த மாகாண சபை உறுப்பினர்களது அனுபவம்.
எது
எவ்வாறெனினும் இம்முறை மாகாண சபை அதிகாரப்பரவலாக்கலுக்காக குரல் எழுப்பும்
மேடையாகவே காணப்படும். அது அவ்வாறிருக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியா,
உலகம் 13வதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு இங்கு இருப்பதை
பிடுங்குவதற்கான நிலைமைகளே காணப்படுகின்றன.
13
வதற்கு அப்பால் என்னும் போது அது ஒற்றை ஆட்சி கடந்ததாக இருக்கவேண்டும்.
தற்போதைய அனுபவங்கள் தரும் பாடமும் அதுதான். ஜனாதிபதி , பாராளுமன்றம்,
நீதித்துறை இவற்றின் சுயாதீனம் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை
சட்டம் ஒழுங்கு ஆகியன அரசியல் மயப்பட்டு அராஜகம் தாண்டவமாடும் நிலைமை
ஏற்பட்டுள்ளது. எனவே ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பரவலாக்கல் நடைமுறையில்
வரும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தினுடாக தீர்வுகாணலாம் என்றும்
அர்த்தப்படுகிறது.
ஆனால்
இலங்கையில் நீதித்துறை இருக்கும் நிலையில் இது மிகவும் கடினமானது. எனவே
ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்றே தீர்வு காணவேண்டும்.தமிழ் தேசிய
கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவாhத்தை நடத்தும் போது இந்த ஒற்றையாட்சி அமைப்பை
நீக்குவது பற்றிய கலந்துரையாடல் முக்கியமானது.
அரசியல்
மயப்பட்டு இன சமூக நிலைமைகளை கருத்திற்கெடாமல் நீதித் துறை
செயற்படுமிடத்து அதற்கு நிhபந்திக்கப்படுமிடத்து பேரினவாத நியாயங்கள்
பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் வரை ஒற்றையாட்சியின் கீழ்
அதிகாரப்பரவலாக்கல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு சாத்தியமில்லை. ஓட்டைப்
பாத்திரத்தில் தண்ணீர் அள்ளுவது போலத்தான் இருக்கும்.
|