கொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் இலங்கையர்கள் அறுவர் உட்பட 219 பேர் மீட்பு

.
இலங்கையர்கள் அறுவர் உட்பட சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் 219 பேரை மெக்ஸிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ‘ட்ரக்’ வண்டியொன்றில் ரகசியமான முறையில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். 177 ஆண்கள், 33 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அடங்கலாக இந்த 219 பேரில், குவாத்தமாலாவைச் சேர்ந்த 169 பேரும், எல்சல்வடோரைச் சேர்ந்த 22 பேரும், ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவதுடன் ஆறு இலங்கையர்களும் இருந்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்திக்கருக்கலில் அவள் நடந்தாள் - செ.பாஸ்கரன் -


   .
              
அந்திச் சூரியனின் கருக்கலில்
அடிவானம் வெட்கிச் சிவந்திருக்க
பொற்கதிர்வீசிப் புணரத்துடிக்கிறது
காமதேவனின் கட்டியம் கூறலில்
காற்றுக்கூட குளிரைப் போர்த்தியபடி
நாசித்துவாரங்களில் நர்த்தனம் புரிகிறது
ஒற்றைச்சடையில் உயிரோவியமாய்
வெள்ளிக் கொலிசின் சந்தம் பிசகாத
பாதச் சுவட்டில் நீ நடக்கிறாய்

ஈழத் தமிழர் கழகத்தின் நிவாரணநிதி நிகழ்வு


.
இலங்கையின் கிழக்கு மாகாணம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதில் அவதியுறும்மக்களின் நிவாரண உதவிக்காக ஆற்றிய ஈழத் தமிழர் கழகம்  சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை  ஒரு விருந்துபசார நிகழ்ச்சியை  நடாத்தியது. அந்த நிகழ்ச்சியில் பெறப்பட்ட பணம் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக அங்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு


அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்காக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பிரதிநிதிகள் கொடகே பதிப்பகத்தின் ஸ்தாபகர் திரு. கொடகே அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர். திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து) லெ.முருகபூபதி (அவுஸ்திரேலியா) வி.ரி.இளங்கோவன் (பிரான்ஸ்) அளவெட்டி சிறிசுகந்தராஜா (கனடா) பத்மகுணசீலன் (ஜேர்மனி) கனகசபாபதி (கனடா)ஆகியோருடன் இலங்கை எழுத்தாளர்கள் திக்குவல்லை கமால், ஓ.கே. குணநாதன் ஆகியோரும் சிங்கள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான உபாலி லீலாரத்னவும் இச்சந்திப்பில் கலந்துரையாடினர்.


ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய இணையத்தளம்

.
ஒஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய இணையத்தளம் இப்பொழுது புதிய வடிவில் இயங்கத் தொடங்கி உள்ளது. நிகழ்ச்சிகளை கேட்கக் கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த இணையத்தளத்தை இடது பக்கம் உள்ள இணைய செய்திகளின் கீழ் பார்வையிடலாம்.
www.atbc.net.au


தஸ்லீமா நஷ்ரீன்-----------சௌந்தரி


.
நான் விரும்பி வாசித்த கவிதைகளிவை. விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமானது எனது எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் ஒத்துப் போகின்றவையாக இருப்பது. அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஒரு ஆளுமை மிக்க பெண்ணின் எழுத்துக்கள் இவை.

தஸ்லீமா நஷ்ரீனின் கவிதைகள் மிகவும் புலமை வாய்ந்தவை என்று சொல்வதைவிட வாசிப்பவர்களை மீண்டும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் கொண்டவை என்றே கூறத்தோன்றுகின்றது.

மனைவிகள்


.

சமய அடிப்படையில் உபந்நியாசம் செய்பவர்களை விட்டு-விடலாம். வருடத்தில் சில நாட்களே சென்னையில் தங்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறு, ஏழு பிரசங்கங்கள் செய்வார். புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், ஆலமரத்தடியில். ஒரு மணி நேரத்துக்குள்ளாகத்தான். பிரசங்கம் ஆரம்பித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் கேட்க வந்தவர்களில் பெரும்பாலோருடைய மனம் எங்கெல்லாமோ அலைய ஆரம்பிக்கும். கிருஷ்ணமூர்த்தி கைகூப்பிப் பிரசங்கம் முடிந்துவிட்டதென்று தெரிவிக்கும்போது எல்லோரும் பெரிய இக்கட்டு விலகியது போன்ற விடுதலை உணர்ச்சியோடு வெளியே விரைவார்கள்.

உறவியல் கட்டுரை - மஷூக் ரஹ்மான்

.
பகிர்தல் பற்றி சென்ற வாரம் பேசினோம்…
இப்பவும் அதே விஷயம்தான். ஆனா பொருள் வேறு!

ஒரு வயது குழந்தை உண்ணுவதே தனி அழகு! ஆனா வளர்ந்துவிட்ட ஒருவர் குழந்தைபோல் சாப்பிட்டால்?

இப்படித்தான் நம்மில் பலர் ஒரு விஷயத்தைப் பகிர்கின்ற விஷயத்தில் வளராமல் இருக்கிறோம். ஒரு உரையாடல்இ ஆலோசனை அல்லது கருத்துப் பரிமாற்றம். இந்த மூன்றுமே வெற்றிகரமாக அமைவதற்கு தேவை பொறுமையாக கவனிக்கும் திறன்.

உதாரணம்: பேச இயலாதவர்களும் தங்களுக்குள் பரிமாறிச் சிரிப்பது

இப்போது மூன்று விதமான சூழல்களை ஆராய்வோம்

நிர்வாகி – பணியாளர்

இதில் நடைபெறுவது (One-way-downward communication) கீழ் நோக்கான ஒரு வழிப் பரிமாற்றம். இதில் உள்ள உறவியல் சிக்கல் என்ன? தன் நிர்வாகி சொல்வதை கேட்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தால் சிரத்தையோடு தலையாட்டிவிட்டு இடத்தை காலி செய்வதே பணியாளரின் நோக்கமாக இருக்கும். செய்தியின் பொருளும் அவசிய அவசரமும் சரியான முறையில் பணியாளர் மனதில் பதியாமல் போக அநேக வாய்ப்புகள் அதிகம். இதே நிலை பல குடும்பங்களில் கணவன்-மனைவி இடையே நிகழ்வதும் உண்டு.

துர்க்கை அம்மன் அறிவுத்திறன் போட்டி பரிசளிப்பு

.


ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010

பரிசளிப்பு நிகழ்ச்சி 11-02-2011

சென்ற வருடம் நடைபெற்ற ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின் போது 11-02-2011 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் பெரும் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது என்பதை அறியத் தருகின்றோம். பரிசு பெறும் பிள்ளைகளை தயவுசெய்து உரிய நேரத்தில் அழைத்து வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அலங்கார உற்சவம் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா எதிர்வரும் 09-02-11 முதல் 19-02-11 வரை விநாயகர், நடராஜர், ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி தேவியருடன் கோவில் கொண்டுள்ள துர்க்கா தேவியர்க்கு அம்பிகையின் தெய்வீகமான திருநாட்களில் மேன்மையான மாசி மக நன்னாளான 18-02-11ஜ அம்பாளின் தீர்த்த உற்சவமாக கொண்டு   09-02-11 முதல் 19-02-11 வரை 12 நாட்கள் தினமும் மாலை அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடைபெற துர்க்கை அம்மன் திருவருள் பாலித்துள்ளது.

நன்றி

அறிவுத்திறன் போட்டி குழு.
நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி


.
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இன வெறிக் கொள்கையினை எதிர்த்து போராடி சிறை சென்ற நெல்சன் மண்டேலா (92), கடந்த சில மாதங்களாக பொது மக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். உடல் நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும், கடந்தாண்டு நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது தான் கடைசியாக பொது மக்களை சந்தித்தார்.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.

இந்தக் கட்டுரை இவ்வாரம் இடம் பெறவில்லை என்பதை அறியத் தருகின்றோம். 9ம் பகுதி அடுத்த வாரம் தொடரும்

எனது இலங்கைப் பயணம் - பகுதி 8

மடுவிற்கு செல்வதற்கு வவுனியாவில் இருந்து நல்ல வீதி இருப்பதால் நாங்கள் வவுனியாவால் செல்கின்றோம். வவுனியாவின் நகரப் பகுதியில் கம்பீரமாக பண்டார வன்னியனின் சிலையுள்ளது அதையும் எமது கமராவில் அடக்கிக் கொள்கிறேன். மடுவீதியின் ஒருபகுதி மிக நன்றாக போடப்பட்டிருக்கிறது. செல்லுகின்ற பாதைகளில் உடைந்த கட்டிடங்களும் கூரையில்லா வீடுகளும் தற்போது குடியேறியவர்களின் சின்னஞ்சிறு கொட்டகைகளும்தான் தெரிகிறது.


மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா”

.
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 23-01-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.மெல்பேர்ன் ரெறாறா மைதானத்தில், காலை 09 மணிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் தமிழர் விளையாட்டு விழா ஆரம்பமானது.


தமிழ் சினிமா

காவலன் 'சூப்பர் ஹிட்'!

பொங்கலுக்கு வந்த படங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடைகளைத் தாண்டி சூப்பர் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் நடித்த காவலன்.


பொங்கலுக்கு காவலன் படம் வருமா? வராதா? என பெரும் குழப்பம் ஏற்பட்டது.சென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத்த கண்டனக் குரல் எழுந்துள்ளது

.
தமிழகத்தின் சென்னை மாநகரின் எழும்பூரில் உள்ள மகா போதி சங்க காரியாலயத்தின் மீது, சில துஷ்டர்கள் மேற் கொண்ட சட்ட விரோத தாக்குதல்களை, தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மாநில அரசாங் கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அந்த ஸ்தானத்திற்கு விரை ந்து சென்ற, இந்தியாவில் இருக்கும் இலங்கை துணை உயர்ஸ் தானிகர் திரு. கிருஷ்ணமூர்த்தி, நிலைமையை நேரில் அவதா னித்தார்.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி

.
மூன்றாவது போட்டிஇங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. சிட்னியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளால் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஒவர்களில் 214 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.நோன்பு------T.V.ராதாகிருஷ்ணன்


சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும்,வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக்கொண்டிருந்தது.

பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார்.
கருமை நிறம் அதிகமா...அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில்

திருமுறை முற்றோதல்

.

WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC.

cyf irtg; Nguit mT];jpNuypah

                                                                                   email: sivainsydney@gmail.comதிருமுறை முற்றோதல்

(56வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

06.02.2011 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.02.2011 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருத்தாண்டகத்தின் சிறப்பு (தொடர்ச்சி) பற்றி கலாநிதி வடிவேலு அவர்களால் விளக்கம் கூறப்பட்டு பின்னர் ஆறாம் திருமுறையில் நாற்பதாம் பதிகம் (திருமழபாடி) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

மாஸ்கோவில் குண்டுவெடிப்பு: 35 பேர் பலி _

.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள டெமோட்டோவோ பயணிகள் வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில்; 35பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
படுகாயமடைந்த அனைவரும் வைத்திசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டதுடன் அவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தலைமை விசாரணை அதிகாரி இது ஒரு பயங்கரவாத தாக்தல் என்று கூறியுள்ளார்.

சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசியுங்கள்


.

சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசியுங்கள் அதனைப் படிக்காதவர்கள் கவிஞனாக இருக்க முடியாது

திருகோணமலை நிருபர் : சங்ககால இலக்கியங்களைப் படித்து ரசிக்காதவர்கள் கவிஞனாக முடியாது என்று அகில இலங்கை இளங்கோ கலைக் கழகத்தின் தலைவர் பெரிய ஐங்கரன் "ரசவாதம்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தலைமை வகித்துப் பேசும்போது குறிப்பிட்டார்.
மூதூரைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் தில்லைநாதன் பவித்ரனின் "ரசவாதம்' கவி நூல் வெளியீடு கடந்த சனிக்கிழமை மாலை திருகோணமலை நகரமண்டபத்தில் நடைபெற்றபோது;

இந்தோனேசிய எரிமலை

.
இந்தோனேசிய எரிமலையொன்று குமுறி வருவதால் பாலி தீவுக்கான அநேக விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு ஜாவாவிலுள்ள புரோமோ எரிமலையானது கடந்த வருட இறுதியிலிருந்து குமுற ஆரம்பித்துள்ளது.

இந்த எரிமலை வியாழக்கிழமை பெருமளவு புகையையும் சாம்பலையும் வெளித்தள்ள ஆரம்பித்ததால் அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுக ளிலிருந்தான விமானங்கள் திசை திருப்பப் பட்டன. ஏனைய சர்வதேச விமான சேவை களும் தமது விமான பயணங்களை இரத்துச் செய்திருந்தன. எனினும் உள்ளூர் விமான சேவைகள் நடத்தப்பட்டன.

இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வியடையும் அபாயம்

.
கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ளார்.

ஒபாமா அமெரிக்க பாராளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் உரையாற்றினார். ஒரு மணி நேரம் அவர் பேசிய போது அவர் 3 முறை இந்தியாவை பற்றி குறிப்பிட்டார்.