மரண அறிவித்தல்


அமரர் டாக்டர் ரட்னவடிவேல் 
Late Dr.RATNAVADIVEL


OBITUARY
Late Dr.RATNAVADIVEL
He passed away peacefully on Friday 22nd June 2018 at the Royal Prince Alfred Hospital, Sydney
Dr Ratnavadivel, a Pathologist, was the former
Assistant JMO (Judicial Medical Officer) of Colombo.
He was the eldest son of the late Dr Kandiah Kanagasabapathy (Former Medical Practitioner of Navalar Road, Jaffna. Born in Inuvil) and Savundarambigai (Daughter of Periathamby Murugapillai).
Beloved husband of Dr (Mrs) Kunarathy Ratnavadivel (Former Anaesthetist at Wanganui Base Hospital in New Zealand). Daughter of Arumugam Sinnathamby and Analakshmi.
Beloved father to his eldest son Dr Rajeev Ratnavadivel (Sleep & Respiratory Physician, Gosford Hospital), father-in-law to Brijanthi (Senior Counsel, daughter of Prakashpathy and Gunalingam) and grandfather to Maran and Lakshi.
Beloved father to his daughter Dr (Mrs) Sureka Thiagalingam (Ophthalmologist), father-in-law to Dr Aravinda Thiagalingam (Cardiologist, Westmead Hospital, son of Dr & Dr (Mrs) Thiagalingam of New Zealand) and grandfather to Arjuna and Sajan.
Beloved father to his youngest son Dr Arun Ratnavadivel (Anaesthetist, Nepean Hospital), father-in-law to Petra (Health Management, of Germany) and grandfather to Luca, Alessa and Sasha.
Beloved brother to Sethunayaky (Toronto & U.S.A), Ratnapoopathy (deceased), Sanmuganathan (Canada), Pankajadevy (Jaffna), Manonmany (Jaffna) and Satkurunathan (deceased).

Viewing
Date: Tuesday 26th June 2018
Time: 7 to 8PM
Place: Andrew Valerio & Sons Funeral Parlour, 177 First Avenue, Five Dock

Funeral
Date: Wednesday 27th June 2018
Time: 1 to 4PM
 Place:   Magnolia Chapel, Macquarie Park Crematorium, Cnr Delhi & Plassey Roads, North Ryde

எல்லாப்புகழும் இறைவனுக்கே ! - ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

           எல்லாப் புகழும் இறைவனுக்கே 
             இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே 
          நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம்
               அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே 
image1.JPG          சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம்
                சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம்
          கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம்
                 குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் ! 

         எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும் 
             எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம் 
        வல்லமையின் வடிவான இறையினைநாம்
               வணங்காமல் இருந்துவிடல் முறையேயன்று 
        சொல்லளித்துச் சுவையளிக்கும் தூயசக்தி 
                துதிப்பார்க்கு காட்சிதரும் பெரியசக்தி 
         எல்லையில்லா உலகினையே படைத்தசக்தி
              இறையொன்றே என்றுநாம் நினைப்போமென்றும் ! 

         நினைப்பார்க்கு இறையாகக் காட்சிதந்து
             வெறுப்பார்க்கு நம்பிக்கை ஊட்டிநின்று 
        பொறுப்புடனே வாழ்வதற்கு வழியாய்நிற்கும் 
              போற்றுகின்ற பொருளே இறைவடிவமாகும் 
        கருத்துடனே நினைவார்க்கு கருணையாகி
               கவலையுடன் இருப்பார்க்கு கையுமாகி 
         இருக்கின்ற சக்திதான் இறையென்றெண்ணி
                இருக்கின்றார் இவ்வுலகில் பலருமின்று ! 

தூண்டில் இரை - கவிக்கோ அப்துல் ரகுமான்


Image result for அழும் பெண்


.
நீ
கண்ணீர்த் துளிகளின்
கீரிடம் அணிந்து
புன்னகை என்னும்
அரியணையில்
அமர்ந்திருக்கிறாய்
*
உன் கிரணங்கள்
என் காட்டுக்குள்
ஊடுருவ முடியவில்லை
*
நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன
*
காதல் கவிதைகளைக்
கப்பல் செய்து
கண்ணீரில் விட்டுவிட்டேன்
*

புதியதொரு வீடு : புதியதோர் உலகம் படைக்கட்டும் -- பூபாலரட்ணம் சீவகன் ---

குளிரூட்டப்பட்ட திரையரங்கில் ரஜினியின் “காலா” திரைப்படத்தை ஓட்டுவதற்கே கஸ்டப்படும் காலத்தில், பள்ளிக்கூட மாணவர்களைக் கொண்டு நாற்பதுகளில் நடந்த கதையை வைத்து, குளிரூட்டிகள் இல்லாத மண்டபத்தில், அதுவும் சில நிமிடங்களாவது மின் விசிறி கூட இல்லாமல், நாடகம் போட வைத்ததே பேராசிரியர் மௌனகுருவின் சவால் குணத்தைக் காட்டுகின்றது.

ஆனால், எல்லோரும் நேரத்துக்கு வரவேண்டும், இல்லாவிட்டால் அரங்கின் கதவு அடைத்துவிடும் என்ற அறிவிப்பும், நேரம் தாழ்த்தி வந்து, இடம் கிடையாமல் நின்றவர்கள், ‘நிலத்தில் இருந்து பார்க்க வேண்டும் அல்லது வெளியே போய், அடுத்த காட்சிக்கு வரலாம்’ என்று மேடையில் அறிவித்தது, அவரது வித்தகச் செருக்கு.

ஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை

திருமூலரால் “சிவ பூமி” என்று சிறப்பிக்கப்பட்ட ஈழ மணித் திருநாட்டில்  இன்று திருவாசகத்துக்கென ஒரு அரண்மனை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. 

சர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள் - கணபதி சர்வானந்தா


ரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் இலையில் காணப்படும் அளவற்ற சத்துகளின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். அந்த இலைகளில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உண்டு. வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கிறது.

உடலில் தோன்றும் கழிவுகளை அகற்றி உடல் கலன்களுக்குப் புத்துயிரூட்டக் கூடிய வல்லமை இந்த முருங்கை இலைக்கு உண்டென்று ஆய்வுகள் விதந்துரைக்கின்றன. தற்பொழுது வயதெல்லையற்றுக் காணப்படும் சலரோகம், இருதய நோய், இரத்தச் சோகை, மூட்டு வலி, கல்லீரல் நோய், தோல் வியாதிகள் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற நோய்களுக்குக் கைவைத்தியமாகவும் இதை உபயோகிக்கலாம் என்கின்றனர் சித்த வைத்தியர்கள்.

படித்தோம் சொல்கின்றோம்: "தங்கத்தாரகை" - இலங்கை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாறு! - முருகபூபதி


                                                                                          ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில்  தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது.
மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. "எல்லாம் கடந்துபோகும்" என்பது வாழ்வின் தத்துவம்.
கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன்.
இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை இதுவரையில் நான் பார்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரையில் எனக்கு கிட்டவில்லை. அதே பிரதேசத்திலிருக்கும் மகாஜனாக்கல்லூரிக்கும் ஒரே ஒரு தடவைதான் சென்றுள்ளேன். அங்கு பணியாற்றிய எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூலின் வெளியீட்டுவிழா 1984 இல்  அங்கு அதிபர் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தபோது உரையாற்றச்சென்றேன்.

21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018






நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 06 பிரேமதாஸாவுக்கு மகாத்மா காந்தியின் கொழும்பு சொற்பொழிவைத் தேடித்தந்த நவசோதி! - ரஸஞானி



முகத்தில் துவாரம் வந்தால் அவலட்சணமாயிருக்கும்! ஓடும் கங்கையில்  துவாரம் வந்தால் எழிலாயிருக்கும். அந்த இயற்கை எழிலைத்தான் இலங்கையில் கொழும்பு முகத்துவாரத்திலும் மட்டக்களப்பு முகத்துவாரத்திலும் நாம்  காண்கின்றோம்.

 நதி எங்கே போகிறது? கடலைத் தேடி ! நாளெங்கே போகிறது?  இரவைத் தேடி!

நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!
நினைவெங்கே போகிறது?  உறவைத் தேடி!  என்று கவியரசர் இயற்றினார்.

காதலி கேள்வி கேட்க, காதலன் பதில் சொல்லும் பாடல். இதில் நதியா, கடலா? காதலன்! அல்லது கடலா நதியா? காதலி! திரைப்படத்தில் பெண்தான் முதலில் நதி எங்கே போகிறது? எனக்கேட்பாள்! அப்படியாயின் அவள்தான் நதியா? அல்லது காதலன் யாரைத்தேடிப்போகிறான் என்பதை அறிவதற்கு அவனைத்தான்  நதி என்று அவள் உவமிக்கிறாளா?
வாசகர்களே என்ன தலைசுற்றுகிறதா? விளக்கம் கேட்பதற்கும் கவியரசர் இல்லை.

கடலை சமுத்திரத்தாய் என்றும் வர்ணிப்பர். நதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள் பெண்களுக்குரியவை! கங்கை, காவிரி, சரஸ்வதி, நர்மதா, யமுனை, தாமிரவருணி. இவை இந்தியாவில் ஓடும் நதிகள். இலங்கையில் மாவலி, களனி, ஜின் கங்கை, மாணிக்க கங்கை, கலு கங்கை, தெதுறு ஓயா, மதுறு ஓயா, மகா ஓயா. இவை ஆண்களின் பெயர்களையா சுட்டுகிறது?
முதலில் சொன்ன இந்திய நதிகளின் பெயர்களில் பெண்குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகிறார்கள். மாவலி என்ற பெயரிலும் இலங்கையில் ஒரு புகழ்பெற்ற மனிதர் தனது மகனுக்கு பெயர் சூட்டியிருக்கிறார்!

வடக்கின் இடதுசாரித்  தோழர் அமரர் வி.பொன்னம்பலம் அவர்கள் தனது மகனுக்கு மாவலி என்றுதான் பெயர் சூட்டினார்! இலங்கையில் மாவலி என்ற பெயரிலும் களனி என்ற பெயரிலும் இலக்கிய சிற்றிதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
மலையிலிருந்து ஊற்றெடுத்து  ஓடும் கங்கை அனைத்தையும் அள்ளிக்கொண்டு வரும். காடு, குன்று, சோலை, புல்வெளி, கிராமம், நகரம் எங்கும் சுற்றிச் சுழன்று வளைந்து நெளிந்து, குப்பை கூழங்களையும் அழுக்குகளையும் சில வேளைகளில் சடலங்களையும் சுமந்துகொண்டு கடலில் வந்து சங்கமிக்கும்.  அதன் பயணம் அத்துடன் முடிவுறும்.
அவ்வாறு முடிவுறும் இடத்திற்கு முகத்துவாரம் என்றும் கழிமுகம் என்றும் பெயர் வைத்தார்கள் எமது முன்னோர்கள்.  
களனி கங்கை கொழும்பின் வடமேற்கு பிரதேசத்தில் இந்துசமுத்திரத்தாயுடன் சங்கமிக்கும் பிரதேசத்திற்கு முகத்துவாரம் என அழைப்பர். கிழக்கில் மட்டக்களப்பு வாவி கடலை சங்கமிக்கும் இடத்திற்கும் முகத்துவாரம்தான் பெயர்.

இலங்கைச் செய்திகள்


யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம் 

நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது - நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  

14 தமி­ழர்­க­ளுக்கு  இலங்­கை வரத் தடை

ஆலையடிவேம்பு நில அபகரிப்பை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்



யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

17/06/2018 யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நூல் நயப்புரை: முருகபூபதியின் சொல்ல மறந்த கதைகள் வாழ்வின் அபூர்வமான தருணங்களையும் கவனத்திற்குள்ளான மனிதர்களையும் சித்திரிக்கும் புனைவுசாராத இலக்கியம் - நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்


லெ. முருகபூபதி சிறுகதைக்காகவும், நாவலுக்காகவும், பயண இலக்கியத்திற்காகவும், பத்தி எழுத்துக்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவர் ஆவார். நீர்கொழும்பைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் இரண்டு முறை தேசிய சாகித்திய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். அவரது  புனைவு சாராத பத்தி எழுத்துக்களின் தொகுப்பு அண்மையில் படிக்கக் கிடைத்தது.
   சொல்ல மறந்த கதைகள் என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும்  இந்த நூல் முருகபூபதியின் மனதிற்குள் கொட்டிக் குவிந்திருக்கும் மகத்தான அனுபவங்களைப் பேசுகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏராளமான சொல்ல மறந்த கதைகள், சொல்லப் பயந்த கதைகள், சொல்ல மறுத்த கதைகள், சொல்ல வேண்டிய கதைகள் நெருடிக்கொண்டுதான் இருக்குமென்று கூறுகிறார் முருகபூபதி.
தமிழ் நாட்டில் யுகமாயினி இதழிலும், அவுஸ்திரேலியாவில் உதயம் இதழிலும், தேனீ இணையத்தளத்திலும், அவுஸ்திரேலியாவில் தமிழ்முரசு இணையத்தளத்திலும், கனடா பதிவுகள் இணையத்தளத்திலும், நடேசனின் வலைப்பதிவிலும் பதிவேற்றிய தன் எழுத்துக்களை முருகபூபதி இந்த நூலிலே தொகுத்துத் தருகிறார்.
சாதாரணமாக நமக்குத் தெரியவந்திருக்கும் முருகபூபதியின் வாழ்வில் அவர் சந்தித்த அபூர்வமான மனிதர்கள், சுவாரசியம் மிகுந்த நிகழ்வுகள், அவர் எதிர்கொண்ட சோதனையான  தருணங்கள் என்பன நூலை எடுத்ததும் முழுவதையும் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவை குன்றாத வகையில் எழுதிச் சென்றிருக்கிறார் முருகபூபதி.
   21 தலைப்புக்களில் முருகபூபதி விதம் விதமான அனுபவங்களை நெஞ்சிலே நிலைக்கும் வகையில் எழுதியிருப்பதை பாராட்டியாகவேண்டும்.
மகாலிங்கம் என்ற ஒரு தாடிவளர்த்த சோதிடர் வத்தளை என்னும் ஊரில் சிறிய வாடகை வீட்டில் குடி இருந்துகொண்டு நந்திவாக்கியம் என்ற பனையோலை ஏட்டுச் சுவடிகளின் பதிவுகளில் இருந்து சாதகங்கள் கூறி வந்திருக்கிறார். சிங்களமொழி தெரிந்த முருகபூபதி இந்த சாதக மொழிபெயர்ப்பில் உதவி செய்து வந்திருக்கிறார். ஒரு முறை ஒரு காரில் வந்திறங்கிய ஒரு பிரமுகர் 172 பக்கமுள்ள பெரிய அப்பியாசக் கொப்பியை எடுத்து வைத்து , அதில் சில முன் பக்கங்களை மறைத்து குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த நந்திவாக்கியப் பாடலின் மொழியைச் சிங்களத்தில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டிருக்கிறார். முருகபூபதி மொழிபெயர்த்து திருப்பிக் கொடுக்கும்போது தற்செயலாக அந்த நந்தி வாக்கியத்துக்குரிய சாதகரின் பெயரைப் பார்த்து விடுகிறார். யார் என்று நினைக்கிறீர்கள் அந்தச் சாதகர், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆவார்.
இப்படி சுவாரசியமான நம்பிக்கை என்ற கதையோடு ஆரம்பமாகும் இந்த நூலில் முழுவதும் ருசிகரமான புதிர் நிறைந்த வியப்பூட்டும் அனுபவங்கள் பரவிக்கிடக்கின்றன.
  காவி உடைக்குள் ஒரு காவியம் என்ற தலைப்பில் வணக்கத்திற்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோ என்ற தமிழ்ப்புலமை மிகுந்த பௌத்த பிக்குவை அறிமுகம் செய்கிறார்.
   தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனநாயகத் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1975 இல் நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டில் அந்த பிக்கு  உரை நிகழ்த்தியதை  முருகபூபதி எடுத்துக் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
 தென் இலங்கையில் இனக்கலவரங்கள் தலைதூக்கிய போதெல்லாம் தமது தமிழ் இலக்கிய நண்பர்கள் பாதுகாப்போடு இருக்கிறார்களா?  என்று தேடி அலைந்த கருணைமிக்க பிக்குவின் கரிசனையை முருகபூபதி நேர்த்தியாக நினைவு கூருகிறார்.
செங்கையாழியானின்  வாடைக்காற்று நாவலை  அவர்  சிங்களத்தில் மொழிபெயர்த்த  தகவலையும் சொல்லி, அந்த மொழிபெயர்ப்பின் மூலப்பிரதி தொலைந்துபோன சோகத்தையும் முருகபூபதி எழுதிச் செல்கிறார்.