இலங்கை அகதி ஆஸி.யில் தற்கொலை:விஷமருந்தியதாக தகவல்

.

A
Photo: SMH

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சம் புகுந்த இலங்கைப் பிரஜை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறைவா இது மீண்டும் நடக்குமா? .-செ.பாஸ்கரன்

.


.



                                                 விழியில் நிறைந்த கனவுகள்
 விழி நீரில் கரைகிறது
மனதில் நிறைந்த ஆசைகள்- அது
மௌனத்தில் சாகிறது
சொல்ல எடுத்த வார்த்தைகள்
தொண்டைக் குழியில் அடைகிறது
சோகம் நிறைந்த பார்வையில் 
அவள் துயரம் புரிகிறது

பருவம் அடைந்த நாள்முதல்
பலதடைகள் விரிகிறது
அவள் பாடித்திரிந்த நாட்களோ
வெறும் நினைவாய் விரிகிறது
கூடித்திரிந்த உறவுகள்
திசைஎங்கும் சிதைகிறது
தாலிக் கயிற்றின் உறவிலே 
சிறைக்கதவும் திறக்கிறது

Laughing' ko Laughing 5 - 2011 in Melbourne


தமிழ் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது



abikumaran

.
                                                               
கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் ன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

ஏழாம் அறிவு - உள்ளூர் தரத்தில் ஒரு தமிழ் சினிமா



.

கொஞ்ச நாளாவே டிவியில எந்த சேனல போட்டாலும், ஒரு அக்காவோ இல்லை அண்ணாவோ மைக்கை புடிச்சிகிட்டு (இல்ல சட்டைல மாட்டிகிட்டு) கேள்வி கேட்பாரு... அதுக்கு நம்ம சூர்யா, முருகதாஸ் மற்றும் உதயநிதி, இந்த மூணு பெரும் பதில் சொல்வாங்க பாரு... என்னமோ ஆறு கோடி மக்கள்'ல இவங்க மூணு பேருக்கு மட்டும் தான் (ஆனால் இருந்ததோ பெயருக்கு மட்டும் தான்) தமிழ் பற்று இருக்குற மாதிரியும் நம்ம எல்லாரும் அதை அடகு வச்சிட்டு சரக்கடிச்சிட்ட மாதிரியும் இருக்கும். 

தமிழரின் தானைத்த தலைவரே தமிழரின் காணிகளை அபகரிக்கும் கொடுமை

.


.
               
ஒரு உண்மை சம்பவத்தின் பதிவு இது
(திருமலை அமுதன்‏)

தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் ஈழத் தமிழர்களுக்கு அறிமுகமானவர் திரு. இரா சம்பந்தன். தமிழினத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு வெற்றிடங்கள் ஏற்பட சம்பந்தன் தமிழினத்துக்குத் தலைவர் ஆகிவிட்டார். இவர் தமிழினத்துக்காக இதுவரை எந்தத் தியாகத்தையும் செய்தது கிடையாது. திருகோணமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவார். தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இவரது வளர்ச்சிக்கு உதவி வந்தது. இறுதியாக தலைமைக்குப் பஞ்சம் எற்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் புலிகளின் புண்ணியத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக்கும் தலைவர் ஆனார் திரு. சம்பந்தன்.

தொலைபேசி -


.

நடேசன்
மிருக வைத்தியராக மெல்பேனில் ஒரு கிளினிக்கை நடத்தும் எனக்கு வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் ஓய்வு. எனது நண்பன் அவ்வேளையில் அங்கு பணியாற்றுவான். உறக்கம் களைந்து எழுந்தது முதல் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய படகொன்றில் சிறு குழந்தையாக குடும்பத்துடன் பல கடற் கொள்ளையர்களையும் அபாயகரமான தென் சீன கடலையும் தாண்டி மலேசியாவுக்கு வந்து, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஒருவன் தனது சிறு வயது அனுபவங்களை மிகவும் நகைச்சுவையாக அந்தப்புத்தகத்தில் விவரித்திருந்தான்.



View Perth_CHO...jpg in slide show
.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் ,  இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயகவிழுமியங்களைப்  பேணிப்   பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாயநாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில்சிறிலங்காவின் அதிபர்  மகிந்தராஜபக்சவும் கலந்து  கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று ஒக்ரோபர் 28ம் திகதி வெள்ளிக்கிழமை பேர்த் நகரத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்விலும், ஊர்வலத்திலும் பங்குகொண்டிருந்தார்கள்.

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம்

_

27/10/2011

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கொலம் ப்ரெசெர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் உலகில் நாடக இலக்கியம் படைக்கும் மாவை நித்தியானந்தன் - முருகபூபதி




.
                             
“தமிழ்க்குழந்தைகளை மகிழவைக்கக்கூடியதான காட்சி ஊடகத்தின் வளர்ச்சி தமிழர் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, தாயகச்சூழலிலும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தேவையை நிறைவுசெய்வது எப்படி என்பதைப்பற்றி எமது சமூகம் சிந்தித்தல் அவசியம்.”

இவ்வாறு சிறுவருக்கு மகிழ்வூட்டும் கலை என்ற தலைப்பில் மாவை நித்தியானந்தன் எழுதியிருந்த கட்டுரையின் இறுதியில் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பிட்ட ஆக்கம் இலங்கையில் 2011 ஜனவரியில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரில் வெளியாகியுள்ளது. தனது ஆதங்கத்தை ஒரு உபதேசியாக மாத்திரம் வெளிப்படுத்திவிட்டுப்போகாமல் தனது ஆற்றலுக்கும் சக்திக்கும் அப்பாற்;பட்டவழியில் நடைமுறைப்படுதியிருக்கிறார் நித்தி.

சகுனிகளின் "நியாயத் தீர்ப்பு' -எம். மணிகண்டன்

.

நாட்டு மக்களைச் சித்திரவதை செய்தார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார், பத்திரிகைகளை முடக்கினார் என்றெல்லாம் கடாஃபி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றஞ்சாட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படிப்பட்டவை தெரியுமா? கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் விஞ்ஞானி ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை வந்த பிறகு, அணு ஆயுதத் தொழில் நுட்பம் என்பது கத்தரிக்காய் வெண்டைக்காய் போலக் கிடைக்கத் தொடங்கியிருந்தது. லிபியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஒரு விலை கொடுத்து "கள்ளத்தனமாக' வாங்கியது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தோரியம் போன்ற மூலப்பொருள்கள் கிடைத்தன. இரண்டையும் கொண்டு அணுஆயுதத்தை உருவாக்கிவிட கடாஃபி திட்டமிட்டிருந்தார்.

இத்தனை சோகமான வடுக்களுக்கு அப்பாலும் கலைஞர்களை சிறப்பாகஉபசரிக்கும் இந்த மக்களைப்போல இன்னொரு சமூகத்தினரை நான் சந்தித்ததே இல்லை -ரி.எம்.கிருஷ்ணா

.

krishna.tmலைஞர்களை சிறப்பாக உபசரிக்கும் இந்த மக்களைப்போல இன்னொரு சமூகத்தினரை நான் ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்று நினைவு கூருகிறார். போரினால் சின்னா பின்னமாக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு சமீபத்தில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞரான ரி.எம். கிருஷ்ணா. அங்கு அவர் கண்டது சுற்றியுள்ள பேரதிர்ச்சிகளையும் தாண்டி வெளிவரத் துடிக்கும் கலைமீது கொண்டுள்ள அளவு கடந்த காதலை.

நம்பிக்கை, சுய உறுதி, விசுவாசம் போன்ற வார்த்தைகளை அவை கதைப் புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் கற்பனையாக விபரிக்கப் பட்டிருந்த போதும் நாம் மிகவும் சௌகரியமாகப் பயன்படுத்துவது எதிர் அனுபவங்களுக்காகத்தான். இந்தக் குணாதிசயங்கள் ஒருவருடைய சொந்த வளர்ப்பு மற்றும் சமூகச்சூழல் என்பனவற்றிலிருந்து பிறப்பன அல்ல ஆனால் நாகரிகத்தின் ஒவ்வொரு சிறுபகுதியும் முக்கியமான இந்தத் தூண்களை உறுதிப்படுத்துவதை நோக்கியே பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைச் செய்திகள்


சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம்: விக்கிரமபாகு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின் முக்கியத்துவம்


கூட்டமைப்பு தமது மக்களின் குறைகளை சர்வதேசத்துக்கு கூறுவதில் தவறில்லை: ஐ.தே.க.

பொதுநலவாய போட்டிகளை விட வடக்கு கிழக்கில் பல தேவைகள் தேங்கிக் கிடக்கின்றன: லக்ஷ்மன் கிரியெல்ல

நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எப்போது? குமரகுருபரன் கேள்வி

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் ரொபேட் பிளேக்குடன் சந்திப்பு







இலங்கை ஓய்வூதியம் பற்றி



நன்றி: euthayan.com

உண்மை -


.

உண்மைகள் என்றால்
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்

தனக்குத் தெரியாத உண்மைகளே
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்

அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்

முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்

யாழ்ப்பாணத்தின் அவலம்! - பேராசிரியர் இரா.சிவசந்திரன்

.
jaffnatown-3யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஜயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் அரச பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.

01. யாழ்ப்பாண குடாநாட்டிற்கான வீதி அகலிப்பு நடைபெற்று வருகின்ற போது அதன் எதிர் விளைவுகள் பற்றி எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. ‘காப்பெற்’ வீதியாக மாற்றப்படும் போது வீதியில் வாகனங்கள் தொகையாகவும், ஓட்டங்கள் வேகமாகவும், இடம்பெறும். வீதி அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இவ் ஆபத்துக்களை உணர்ந்து ஏலவே வீதி ஒழுங்கு முறைகளிற்கேற்ப வீதிக் குறிகாட்டிகளை இடுவது இன்றியமையாத முதற்தேவையாகும். பாதசாரிகளுக்கான நடைபாதைக் குறிகாட்டிகள்; பொருத்தமான இடங்களில் மாநகரசபையின் ஆலோசனை பெற்று இடப்பெறுதல் வேண்டும். மேலும் வேகக்கட்டுப்பாடுகளைக் குறிக்கின்ற அறிவித்தல்கள் பாதையின் ஓரங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டும். நகர எல்லைக்குள் குறைந்த வேகக்கட்டுப்பாடு பேணப்படுதல் அவசியம். அவ் அறிவித்தல் இன்றும் இப் பிரதேசங்களில் இடப்படவில்லை. இதனால் பலர் தினம் தினம் உயிரிழக்க வேண்டியுள்ளது. இவ் உயிரிழப்புக்கு பொறுப்பானவர்கள் யார்? வீதி அபிவிருத்தி சபையா? உள்ளுராட்சி அமைப்புகளா? என்பது மக்களுக்கு புரியாதுள்ளது.

இந்திய மாணவர்கள் உட்பட 15 ஆயிரம் பேர் விசா ரத்து

.
மெல்போர்ன் : இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் 15 ஆயிரத்து 66 பேரின் விசாக்களை, பல்வேறு காரணங்களுக்காக ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. கடந்தாண்டில் ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை, மொத்தம் 15 ஆயிரத்து 66 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. இவர்களில், 3,624 மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுறுதல் அல்லது வகுப்புகளுக்குச் செல்லாதது போன்ற காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர். மேலும் 2,235 பேர், தாங்கள் உண்மையில் சேர்ந்த வகுப்புகளுக்குச் செல்லாமல், சட்ட விரோதமாக வேலை பார்த்து வந்தனர். பெண்கள் சிலர், மாணவர் விசாக்களைப் பயன்படுத்தி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அதனால், இவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகச் செய்திகள்

துருக்கியில் நில நடுக்கம் ஆயிரம் பேர் பலி

சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா?

கடாபியின் வெளிநாட்டு முதலீடு 9.8 இலட்சம் கோடி!

சகுனிகளின் "நியாயத் தீர்ப்பு'

எம். மணிகண்டன்


கடாபி ஆதரவாளர்கள் 50 பேர் கொடூர கொலை



தாய்லாந்து விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்தது


கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு

சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்கு அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

.

 mahindaநீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற நிலைமைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டில் பொது மக்கள் இலக்குகள் மீது குண்டு வீச்சுக்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றத்தில் ஜெகதீஸ்வரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தமிழ் சினிமா

.
வேலாயுதம் - திரை விமர்சனம்


சிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் வேலாயுதம் வெளியாகியிருக்கிறது.

தலயா, தளபதியா என்ற போட்டி ஒருபுறமிருக்க சூர்யாவும் விஜய்யும் களத்தில் குதித்திருக்கிருக்கின்றனர்.

தொடர்ச்சியாக ஆக்ஷன் படங்களைத் தந்த விஜய், காவலன் வெற்றி மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதன்பிறகு தயாரிக்கப்பட்ட வேலாயுதம் பற்றிய பரபரப்பான செய்திகள்,கட்டுக்கதைகள் வெளியாகிய போதிலும் அவை அனைத்துக்கும் வேலாயுதம் பதில் கொடுத்துள்ளது எனலாம்.