.
சிட்னி துர்க்கை அம்மன் கோவில் அறிவுப் போட்டி 2011
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
.
ஆன்மீக குருவான ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் உடல் புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011 ம் திகதி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.85 வயதான சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

3 நாட்களாக அவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது.
டயானா மோதிரத்தில் இலங்கை மாணிக்கம்
அரச குடும்பத்துத் திருமணம்
.
இவ்வருடத்தின் மிகவும் சிறப்பான நிகழ்வான இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனின திருமணம் ஏப்ரல் மாதம் 29 ம் திகதி லண்டனில் நடைபெறறது.
இத்திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 1,900 பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.இவ்வருடத்தின் மிகவும் சிறப்பான நிகழ்வான இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனின திருமணம் ஏப்ரல் மாதம் 29 ம் திகதி லண்டனில் நடைபெறறது.

இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டு பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் நடைபெற ஏற்பாடாகியது.
சொந்தக்குரல் - சிறுகதை
.
எஸ் .ராமகிருஷ்ணன்
அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்
என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது.
சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி. இன்னும் என்ன பயம் என்பாள்
இலங்கைச் செய்திகள்
.
போர்க்குற்றங்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை விசாரிக்க அமெரிக்க சட்டத்துறை தீர்மானித்துள்ளது.
தனிப்பட்ட விஜயமொன்றின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கின்றார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர் அந்நாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
அதே நேரம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீதும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அதன் காரணமாக நிபுணர் குழு அறிக்கையின் விடயங்கள் தொடர்பில் அவரிடம் விசாரணையொன்றை மேற்கொள்ள அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (Department of Homeland Security) மற்றும் சட்டத் திணைக்களம் (Department of Justice) ஆகியன தீர்மானித்துள்ளன.
மே தினம் என்றால் என்ன? – தந்தைப்பெரியார்
.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள்.
கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!
.

9

9
சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தை யொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது.
ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் கடந்த ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். விமான நிலையத்திலிருப்பதையும் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்துப் போனதையும் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுறுத்திக் கொண்டேன்.
தீர்க்கதரிசி தந்தை செல்வா
.
1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசியாவில் பிறந்து கொழும்பில் கல்வி கற்று விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1924 ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத் துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுனரானார் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.
1947இல் நடைபெற்ற தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செல்வநாயகத்தாரின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய் கோமான் கு.வன்னியசிங்கம் கோப்பாய் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசியாவில் பிறந்து கொழும்பில் கல்வி கற்று விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1924 ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத் துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுனரானார் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.
1947இல் நடைபெற்ற தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செல்வநாயகத்தாரின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய் கோமான் கு.வன்னியசிங்கம் கோப்பாய் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார்.
நிம்மதி; கிலோ நாலு ரூபாய் - வாழ்வியல் கட்டுரை - வித்யாசாகர்!!
.
அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று -
"ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?"
"ஏன் முடியாது, தாராளமா பார்க்கலாம் போய் பாரு"
"எங்க இருப்பார் இப்போ?"
"எங்கனா இருப்பார், போய் சுத்திமுத்தி பாரு சாமி"
"இல்லை பெரியவரே அவர் இருக்கும் ஆசிரமம் ஏதோ இருக்குன்னு சொன்னாங்க. அதற்கு எப்படிப் போவது?"
"பெருசா ஆசிரமம் எல்லாம் அந்தாளுக்குக் கிடையாது. அதோ அந்த மலை ஏறி இறங்கினா ஒரு குடிசை இருக்கும் பார்; அதில இருப்பார்; இல்லைன்னா அந்த குடிசை பக்கத்துல ஒரு பெரிய மரமும் மரம் தாண்டி சின்னதா ஒரு ஆறும் ஓடும் அதன் கரையில இருப்பார் போய் பாரு"
இப்போதெல்லாம் சிலரின் அவதூறு பேசத் தக்க நடத்தையினால்; சாமியார் என்றாலே சலிப்பு வருவதை அத்தனையாக அந்த செல்வந்தர் கண்டுக் கொள்ளவில்லை. பெரியவர் கைகாட்டிய படி நடந்து போனார்.
கே.பாலசந்தருக்கு பால்கே விருது
. | |||||
![]() 2010-ம் ஆண்டுக்கான தாதா சாகெப் பால்கே விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு வெள்ளியன்று வெளியிடப்பட்டது. தங்கத் தாமரைப் பதக்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கொண்டது இந்த விருது . மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ்த் திரையுலகிலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபராகிறார் பாலசந்தர். |
சி.டி.யை அறிமுகம் செய்தவர் மரணம்
.
சி.டி.யை அறிமுகம் செய்தவரான நோரியோ ஓஹா என்பவர் மரணமடைந்துள்ளார்.
உலகின் முதல் சி.டி.யை தயாரித்து கடந்த 1982ம் ஆண்டு விற்பனை செய்தது சோனி நிறுவனம். அப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் நோரியோ ஓஹா (வயது 81). கடந்த 1982ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரையில் சோனி நிறுவனத்தின் தலைவராக ஓஹா இருந்தார். இவரது காலத்தில் தான் எலக்ட்ரோனிக்ஸ் ஹார்டுவேர் நிறுவனமாக இருந்த சோனி நிறுவனம் சொப்ட்வேர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக விரிவடைந்தது.
சி.டி.யை அறிமுகம் செய்தவரான நோரியோ ஓஹா என்பவர் மரணமடைந்துள்ளார்.
உலகின் முதல் சி.டி.யை தயாரித்து கடந்த 1982ம் ஆண்டு விற்பனை செய்தது சோனி நிறுவனம். அப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் நோரியோ ஓஹா (வயது 81). கடந்த 1982ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரையில் சோனி நிறுவனத்தின் தலைவராக ஓஹா இருந்தார். இவரது காலத்தில் தான் எலக்ட்ரோனிக்ஸ் ஹார்டுவேர் நிறுவனமாக இருந்த சோனி நிறுவனம் சொப்ட்வேர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக விரிவடைந்தது.
மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா
.
ஒழுக்கம் (நன்னடத்தை) இதுவே முக்கியமானது.
தூய்மையற்ற வழியில் பெறும் இன்பம் நல்லது அன்று!
அன்பு இல்லாக் கடமை – வருந்தத்தக்கது
அன்போடு கூடிய கடமை – விரும்பத்தக்கது
கடமைக்காகக் காட்டாத அன்பு – தெய்வீகமானது
எனவே, அன்பு…அன்பு…அன்பு மயமாயிருங்கள்.
பாலிவுட் வெஜ்ஜி - அப்துல் காதர் ஷாநவாஸ்

நாம் உண்ணும் உணவை
நம்மால் தீர்மானிக்க முடியுமா? அது கிட்டத்தட்டஇயலாத காரியம். நம் உணவைத் தீர்மானிப்பவர்களை இப்படி வேண்டுமானால்வரிசைப் படுத்தலாம்.
விவசாயிகள், உணவு பொருள் விற்பனையாளர், மருத்துவர்கள்,சமையல்காரர் நம்முடைய தேர்வின் விருப்பம் மிகக்குறைந்தசதவீதமாகத்தான் இருக்கமுடியும்.
அனைவரும் விரும்பக்கூடிய உணவுப் பொருட்கள் கடந்துவரும் பாதைகள் நம்ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்தசூழ்நிலையில் தற்காலத்தில் உயிர்ப்புள்ள (Organic foods) உணவுகளைஉண்ணவேண்டும் என்ற இயக்கம் உலகில் வெகு வேகமாகப் பரவிவருகின்றதுOrganic food என்ற வார்த்தையை Lord North burne எழுதிய Look to the land என்றநாவலில் பிரபலமடைந்தது. உயிர்ப்பு உணவுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு1990-ல் ஐரோப்பிய நாடுகள் கூடி Organic Food Product Act (OFPA) கொண்டு வந்தன.முறையான Organic Food உற்பத்தியாளர்கள் அதற்குரிய சான்றிதழ்பெறவேண்டும்.
தமிழ் சினிமா
.
. "கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை - வித்யாசாகர்!!
. விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

"கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை - வித்யாசாகர்!!
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – திருவள்ளுவர்!
. "கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை - வித்யாசாகர்!!
. விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
"கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை - வித்யாசாகர்!!
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – திருவள்ளுவர்!
சொற்கோவை - 2
.
![]() | ||
தேவையான சொற்கோவை என்றொரு பதிவு ஏற்கனவே (2010-04-22) பதியப்பட்டிருக்கிறது. இப்பொழுது பெருப்பிக்கப்பட்ட சொற்கோவை வந்திருக்கிறது. இன்னும் வரும். சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்து முடித்தேன். அப்படியே கட்டிப் போட்டது எனச் சொல்லலாம்; அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஆனால் சிலவொரு இடங்களில் சாதாரண ஆங்கில வார்த்தைகள்கூட அப்படியே வந்திருந்தன. டூர், பர்னிச்சர், செமஸ்டர், நார்மல், சில்வர், கிரேட் போன்ற வார்த்தைகள். யாரோ பின்னுக்கு நின்று என்னை தள்ளிவிட்டதுபோல உணர்ந்தேன். |
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்?
.
காலச்சக்கரத்தின் பற்கள் வினாக்களால் ஆனவை போலும். பிறப்பு முதல் இறப்பு வரை இந்த வினாத்தொடர் நம்மை விடுவதேயில்லை. கடமை என்கிற காரியங்கள் நடக்கும். காலைமுதல் இரவு வரை வினாக்களும் கண்விழிக்கின்றன. பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் எப்படி பரபரப்பை ஏற்படுத்துகின்றனவோ அதைவிட பலமடங்கு மனதில் பதிப்பாகும். தினசரி வினாக்கள் எத்தனை? எத்தனை? விடைதேடி அலைவதற்குத் தானனே பொழுதே விடிகிறது! அன்றைய பிரச்சினை சமாளிப்பதும் அல்லது சந்திப்பதும் நடக்கும்போதே நாளைய கேள்வி நம்மை நோக்கும். என்ன செய்யப்போகிறாய்? எப்படிச் செய்யப் போகிறாய்? உன்னால் முடியுமா? செய்யத்தான் வேண்டுமா? என்று பல துணைக் கேள்விகளும் மனதிற்குள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாளும் துள்ளி குதிக்கின்றன. இறுதியிட்டுச் சொல்வதும்,தீர்மானிப்பதும் எப்போதும் இலகுவாக இருப்பதில்லை. இதனால்தான், மனச்சுமை கூடி மனிதன் தடுமாறுகிறான்.
Subscribe to:
Posts (Atom)