சமூக சேயையாளர் திரு செல்லையா வேலுப்பிள்ளை 15 July 2024 அன்று காலமானார். இறுதிச் சடங்குகள் மற்றும் தகனம் ரூக்வுட் தகனத்தின் தெற்கு தேவாலயத்தில் (மெமோரியல் அவென்யூ) (The South Chapel of Rookwood Crematorium Memorial Avenue)ல் நடைபெறும்.
ஜூலை 13 பிறந்த நாள் காணும் எங்கள் முருகபூபதி அண்ணா ✍️
ஈழத்து இலக்கிய உலகில், புகலிடப் பரப்பில் இருந்து கொண்டு இன்று வாழும் வரலாறாகத் திகழ்பவர் எழுத்தாளர் லெ.முருகபூபதி.
ஆடி மாதம் அமங்கலம் அல்ல அம்மனின் மாதம்
பொழுதும்யாவற்றையும் செய்து வருகின்றோம். சம யத்தில் நம்பிக்கை. தத்துவத்தில் நம்பிக்கை. புராண , இதிகாசகங்களில் நம்பிக்கை. முன்னோர் மொழி ந்த மொழிகளில் நம்பிக்கை. கற்றறிந்தவர் எழுதும் நூல்களில் நம்பிக்கை. அவர்கள் ஆற்றுகின்ற உரைகளில் நம்பிக்கை . இவற்றை எல்லாம் விட சமுகத்தில் நிலவுகின்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்வில் நம்பி க்கை எனும் பொழுது பல பரிணாமங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பனிரெண்டு மாதங்கள் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதை நோக்குவதும் மிகவும் முக்கியமானதாயிருக்கிறது.
பனிரெண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும் , சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகி விட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது - மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புக் களைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன.மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டா சியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம் .ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்கு னியை, சித்திரையை, தையை, ஆவணி யை
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்
‘தண்ணீர் - நீரலைகளும் நினைவலைகளும்’ நூல்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் கீழ், சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் “நீரும் வேரும்” என்ற கட்டுரையை ஈழத்து வாழ்வியலை மையப்படுத்தி எழுதியுள்ளேன்.
படித்தோம் சொல்கின்றோம் : அவுஸ்திரேலியா கானா. பிரபா எழுதிய S P B பாடகன் சங்கதி ! அமரத்துவம் எய்திய கலைஞனின் இசைப்பயணத்தை பேசும் நூல் ! ! முருகபூபதி
கலை, இலக்கியத்தை ரசிக்கும் அதேசமயத்தில், மரபார்ந்த சாஸ்திரீய சங்கீதத்தையும், திரையிசையில் பின்னாளில் நேர்ந்த புத்திசையையும் ஆழ்ந்து ரசித்து, தனது ரசனைக் குறிப்புகளை எழுதிவருபவர் அவுஸ்திரேலியா – சிட்னியில் வதியும் கானா. பிரபா.
தகவல் தொழில் நுட்பத்துறையில்
பணியாற்றிவரும் இவர், படைப்பிலக்கியவாதியாகவும்,
வானொலி ஊடகவியலாளராகவும் இயங்கிவருகிறார்.
வட இலங்கையில் இணுவிலை பூர்வீகமாகக்கொண்டிருக்கும் கானா.
பிரபா, 1995 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் வதிகிறார்.
புகலிட கலை, இலக்கிய, வானொலி
ஊடகத்தில் இவரது வகிபாகம் குறிப்பிடத்தகுந்தது.
அது எங்கட
காலம் என்ற புனைவு
சாராத பத்தி எழுத்து தொகுப்பினையும் கம்போடியா, பாலித்தீவு முதலான பயண இலக்கிய
நூல்களையும் ஏற்கனவே வரவாக்கியிருக்கும் கானா.
பிரபாவின் மற்றும் ஒரு நூல்: S P B பாடகன் சங்கதி.
448 பக்கங்களைக் கொண்டிருக்கும் இந்த நூலை தமிழ்நாடு அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தனது மிகுந்த நேசத்துக்குரிய
ஈழத்து முன்னோடி திரைப்பட இயக்குநரான அற்பாயுளில் மறைந்துவிட்ட ந. கேசவராஜனுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.
1946 ஆம் ஆண்டு, ஶ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரோடு பிறந்திருக்கும் எஸ். பி. பி., கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொவிட் – 19 பெருந்தொற்றின் தாக்கத்தினால் மறைந்தார். அவ்வேளையில் அந்த இழப்பினைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பல நாட்கள் கண்ணீர் சிந்தியவர்கள் பல்லாயிரம் பேர்.
தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக ஆர்வலர் தாமரை சி. மகேந்திரனுடன் சந்திப்பு தோழர் மகேந்திரன் அவர்கள், “ யாதும் ஊரே “ என்ற தலைப்பில் உரையாற்றும் மெய்நிகர் நிகழ்ச்சி .
இம்மாதம் 18 ஆம் திகதி ( 18-07-2024 ) வியாழக்கிழமை
அவுஸ்திரேலியா – இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா : மதியம் 2-30 மணி
இங்கிலாந்து : காலை 10-00 மணி
பிரான்ஸ் – ஜெர்மனி : காலை 11-00 மணி
கனடா : அதிகாலை 5-00 மணி
மெய்நிகர் இணைப்பு:
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89712092206?pwd=3uRVx3FhcO112pYqxZZnC6sA0kujpW.1
Zoom Meeting ID: 897 1209 2206
Passcode: 914664
ஞானம் அட்டைப்பட அதிதி நவீன டிஜிட்டல் முறையில் ஓவியம் வரையும் இலக்கிய படைப்பாளி கிறிஸ்டி நல்லரெத்தினம் முருகபூபதி
( இலங்கையிலிருந்து வெளியாகும் ஞானம் மாத இதழ் ( 290 ஆவது இதழ் ) இம்மாதம் ( ஜூலை ) அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளரும், ஓவியருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளது. இவ்விதழில் இவரைப்பற்றி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய பதிவு இங்கே தரப்படுகிறது )
உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம் விட்டு உலகின் எந்தப்பாகத்திற்குச்சென்று வாழ நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக எனது அவதானத்தில் மற்றும் ஒருவரை ஞானம் இதழில் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
எனினும், இவருக்கு அறிமுகம் அவசியமில்லைத்தான். கருத்தாழமும்
உயிர்ப்பும் இணைந்த தனது வண்ண ஓவியங்கள் மற்றும் ஆக்க இலக்கியப்படைப்புகளின் மூலமாக
எமது வாசகர்களுக்கு, குறிப்பாக ஞானம் மாத இதழின் அபிமான வாசகர்களுக்கு நன்கு
அறிமுகமானவர்தான் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் வதியும் ஓவியர் – படைப்பிலக்கியவாதி
கிறிஸ்டி நல்லரெத்தினம்.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு இவரது பூர்வீகம்.
தனது கல்வியை மட்டுநகர் புனித. மிக்கேல் கல்லூரியில் நிறைவு செய்துவிட்டு, கணக்கியலில் தேர்ச்சி பெற்று இலங்கையில் முன்னணியில் திகழ்ந்த தனியார் வர்த்தக வங்கியில் கடமையேற்றார்.
1970 களில் இலங்கையில்
நன்கு அறியப்பட்ட ஓவியர் செள அவர்களின் மருமகன்தான் கிறிஸ்டி. ஓவியர் செள அவர்களின்
கருத்துப்படங்களையும் ஓவியங்களையும் கொழும்பில் இளம்பிறை ரகுமான் நடத்திய அரசு வெளியீடு
நூல்களில் குறிப்பாக, ஈழத்தின் மூத்த கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பா தொகுப்பில் வாசகர்கள்
பார்த்திருக்கலாம்.
கிறிஸ்டி
நல்லரெத்தினம், தனது இளமைப் பருவத்திலிருந்தே ஓவியக்கலையில் நாட்டம் மிக்கவராகவிருந்தார்.
கற்பகதரு நூல்விமர்சனம் - இரண்டாவது பகுதி
கற்பகதரு நூல் விமர்சனத்தின் இரண்டாவது அங்கமாக அடுத்த பத்து சுவைகளை இங்கே சமைக்கிறேன்…..
சங்கர சுப்பிரமணியன்.
நோக்கு நன்றாக உள்ளது. தென்னைக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிறார். அதுவே பனைமரத்தைப்பற்றிச் சொல்லும்போது பனங்கொட்டையை மண்ணில் புதைத்து சிறுதளவு நீரை விட்டுவந்தால் போதும் அது காலத்துக்கும் பயனளிக்கும் என்பதை நாலடியார் துணைகொண்டு சொல்லியிருப்பதோடு தென்னையைவிட பனைதான் சிறப்பு வாய்ந்ததென செப்பியிருக்கிறார்.
கல்யாணமாம் கல்யாணம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
பாதிப் படம் பஞ்சு என்ற அடை மொழியோடு தமிழ் திரையுலகில்
வலம் வந்தவர் பஞ்சு அருணாசலம். காரணம் அவர் கதை வசனம் எழுதி ஆரம்பிக்கப் பட்ட படங்கள் அனைத்தும் பாதியிலேயே நின்று விட்ட காரணத்தால் அவருக்கு இப்படியொரு ஏளனப் பெயர் கிடைக்கப் பெற்றது. 70ம் ஆண்டின் ஆரம்பத்தில் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி தயாரித்த ஹலோ பார்ட்னர் படம் மூலம் கதாசிரியராக பஞ்சுவால் திரையுலகில் கால் வைக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு கதை சொல்ல நாகேஷிடம் பஞ்சு சென்ற போது நாகேஷ் கதையை மட்டும் நிராகரிக்கவில்லை , பஞ்சுவையும் நிராகரித்து விட்டார்.
மீண்டும் கதை வசனம் எழுதும் வாய்ப்பு பஞ்சுவுக்கு கிடைத்தது. அந்தப் படம் தான் கல்யாணமாம் கல்யாணம். ஜெய்சங்கரின் ஆதரவுடன் தயாரிப்பாளரான அவருடைய மேக்கப் மேன் மாணிக்கம், மானேஜர் பாலகிருஷ்ணன், அக்கவுண்டன்ட் காமாட்சி இவர்கள் மூவரும் தயாரித்த இதில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார். அது வரை காலமும் அவர் ஏற்ற பாத்திரங்களில் இருந்து வேறுபட்டு அப்பாவியாக , வெகுளியாக நடித்து தன் நடிப்புத் திறனை காட்டியிருந்தார் அவர். படம் முழுதும் அவரின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது.
I Am: Celine Dion ஆவணச் சித்திரம் - கானா பிரபா
I Am: Celine Dion
குரல் தான் என் வழிகாட்டி
அது சொன்ன வழியில் தான்
என் வாழ்க்கை அமைந்தது,
ஆனால்.....
2022 ஆம் ஆண்டில் பாடகி Céline Dion தன் உலகச் சுற்றுலாவுக்குத் தயாரான வேளை அவருக்கு Stiff Person Syndrome (SPS) என்ற நோய்க்கூறு பீடிக்கப்பட்டதை அடையாளம் காண்கிறார்.
கணவன் René-Charles Angélil ஐ 2016 இழந்த மன உளைச்சலில் ஒரு புறம்,
பால்ய வாழ்வில் இருக்கும் மூன்று பிள்ளைகள் ஒருபுறம்,
இன்னொரு புறம் நோயோடு போராடுதல்.
இவற்றோடு தன்னுடைய குரலை மெல்ல மெல்ல இழந்து சூனியமாகிப் போய் கொண்டிருக்கும் ஒரு உலகப் புகழ் பூத்த பாடகி என்ற பெரும் உச்சத்தில் இருந்து சரிந்து விழும் மன உறுதி
என்று அவரின் வாழ்க்கையே கடந்த 2 வருடத்தில் புரட்டிப் போடுகிறது இந்த நோய்.
சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
துர்கா தேவியை போற்றுவதற்காகவும், பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவும் ஆடிப் பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சிக்கிக் கொண்ட இருவரின் கதி என்ன?
July 12, 2024 6:04 am
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் சிக்கியிருக்கும் நிலையில், தாங்கள் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்குக் கொண்டுவரும் பணியை ஏற்றுக் கொண்டது.
எல்லாவற்றையும் நம்பும் தலைமுறை
July 14, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
வடக்கின் வைத்தியத்துறை
July 9, 2024
சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையை மையப்படுத்தி வெளிவ ரும் தகவல்கள் வடக்கு மாகாண வைத்தியத்துறையின் மீது மட்டு மல்லரூபவ் ஒட்டுமொத்த வைத்தியத் துறையின் மீதான மக்கள் நம்பிக் கையை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒரு வைத்தியரின் குற்றச்சாட் டும் அதனைத் தொடர்ந்துஇடம்பெற்றுவரும் உரையாடல்களும் வடக்கின் ஒட்டுமொத்த வைத்தியத்துறையின் மீது விரல் நீட்டுகின் றது. அனைத்து வைத்தியர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்து கின்றது. குறிப்பாக அரசாங்க வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டு தனியார் வைத்தியத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் விடயங்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகவல்களில் உண்மையிருக்கின்றதா அல்லது அவைகள் பொய்யான குற்றச்சாட்டுக்களா – இதற்கு ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ எவரும் பதிலளித்துவிட முடி யாது –
இலங்கைச் செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் 3 மனித எச்சங்கள்
எம்.பி. பதவி நீக்கப்பட்ட டயனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி கையளிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலை குறித்து பொறுப்புணர்வோடு நடப்பது அவசியம்
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் 02 வது முனையத்தை விரிவாக்க திட்டம்
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் 3 மனித எச்சங்கள்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்று (11) 3 மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
உலகச் செய்திகள்
டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
காசா நகர வீதிகளில் மீட்க முடியாது குவிந்துள்ள உடல்கள்: வெளியேறுவோர் மீது ‘ஸ்னைப்பர்’ சூடு
தேர்தலில் போட்டியிடுவதற்கு பைடனுக்கு வலுக்கும் எதிர்ப்பு
காசாவில் 4 நாட்களுக்குள் நான்காவது பாடசாலை மீது தாக்குதல்: 30 பேர் பலி
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலால் போர் நிறுத்தப் பேச்சு சீர்குலையும் நெருக்கடி
காசா நகரில் இஸ்ரேல் பாரிய தாக்குதல் பல முனைகளால் டாங்கிகள் முன்னேற்றம்
இஸ்ரேல் படை வாபஸ் பெற்ற காசாவின் ஷுஜையா தரைமட்டம்; 60 சடலங்கள் மீட்பு
டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
- காதோரமாக சென்ற ரவை; மயிரிழையில் உயிர் தப்பினார்
– துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை; ஆதரவாளர் ஒருவரும் பலி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.