மங்கலமாம் சித்திரை மனமகிழ வைக்கும் !
புனிதத்தலம் கதிர்காமத்தில் 54 வருடங்களுக்கு முன்னர் ஏப்ரில் மாதம் நிகழ்ந்த கொடுமை ! கங்கை மகள் பிரேமாவதியின் கதை ! முருகபூபதி
இலங்கையின் தென்மாகாணத்தில் புனிதமான பிரதேசமெனப்பிரகடனப்படுத்தப்பட்ட கதிர்காமத்தில் ஒரு காலத்தில் வேடர்கள் வாழ்ந்தனர்.
125
ஆயிரம் வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு
முன்னர் இருந்தே அங்கு வற்றாத ஜீவநதியாக
ஓடிக்கொண்டிருக்கிறது மாணிக்க கங்கை.
முருகனை தமிழ்க்கடவுள் எனச்
சொல்கிறார்கள். அவர் மணம் முடித்த வள்ளி வேடுவர்
இனத்தைச் சேர்ந்தவள். ஆனால், ஆரியர்கள் முருகனுக்கு
ஏற்கனவே தெய்வானை என்றும் ஒரு மனைவி
இருக்கிறாள் என்று புராணம் எழுதி முருகனை
உயர்ந்த சாதியில் இணைத்துக்கொண்டார்கள்.
ஆனால் ,
திருப்புகழ் எழுதிய
அருணகிரிநாதர், முருகனின் ஆறு முகங்களுக்கும்
அர்த்தம் கற்பிக்கும்பொழுது "
வள்ளியை மணம் புணரவந்த வந்த முகம்
ஒன்று" எனவும்
பாடிவிட்டார். எங்கிருந்தோ வந்து வள்ளியை
மணம் முடித்து அழைத்துச்சென்ற முருகனை சிங்கள பௌத்த
மக்கள் கதரகம தெய்யோ என
அழைக்கிறார்கள்.
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பீஜித் தீவில் தமிழ் கற்பிக்கும் திட்டம் - 2025
06-04-2025
Sivagnana Tamil Peravai Inc., Australia
சிவஞானத் தமிழ்ப்
பேரவை
ஆஸ்திரேலியா
Reg No: INC2100326 ABN: 47 223 168 903
Reg. Address: 17 RINGAROOMA
CIRCUIT WEST HOXTON NSW 2171 Australia.
Email: sivagnanatamilperavai.australia@gmail.com
அன்புடையீர்
வணக்கம்!
…….தெற்கு
மாகடலுக்கு
நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே – தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்...
என்று பாரதியார் பீஜித்
தீவினிலே அல்லற் பட்ட தமிழர்களைப் பற்றிக் கவிபாடிக் கலங்கினார்.
19ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் வெள்ளையர்கள் தமிழர்களைப் பீஜித் தீவுக்கு அழைத்துச் சென்று அங்கு
கரும்புத் தோட்டங்களிலே கடுமையாக வேலை செய்யப் பணித்தார்கள். அவர்களின் கடும் உழைப்பினாலே காடெல்லாம் பொன்
கொழிக்கும் நாடாயிற்று. அவர்களைக் கொண்டு சென்ற வெள்ளையர்கள் அதனால்
செல்வந்தராயினார்கள். தமிழர்கள் ஏழைகளாகவே
இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள்.
அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள்
மொழியையும் பண்பாட்டினையும் இழந்து தாங்கள் யாரென்பதே அறியாத மானிடராகவும்
வாழ்ந்து வருகின்றார்கள்.
பல்லாண்டுகளுக்கு முன்னர் அங்கு சென்ற தமிழர்கள் தென்னிந்திய சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இச்சங்கம் நாடெங்கும் பல பள்ளிக்கூடங்களைக் கட்டித் தம் பிள்ளைகள் படிப்பதற்கு வழிசெய்தது. வழமையான கல்வியோடு தமிழும் கற்பிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இப்பள்ளிக்கூடங்களில் தமிழைப் படிப்பிக்க ஆசிரியர்கள் இல்லாமற் போனதால் தமிழ்க் கல்வி நின்று போயிற்று. ஒரு சந்ததியே தமிழைப் பேசாமல், படிக்காமல் விட்டுவிட்டது.
பண்பாடு மறவாதே – அன்பு ஜெயா பா வகை: வஞ்சி மண்டிலம்.
உண்பதும் உடுப்பதும் உயர்வழி
மண்ணில்
நம்மின மாண்பே,
கண்ணின்
மணிபோல் காத்திடுவோம்,
எண்ணம்
தூய்மையில் இருத்தியே! (1)
ஒருவனுக்
கொருத்தியாம் உயர்ந்தயிப்
பெருமை
இங்கே பெற்றிடும்
அருமை
என்றும் அழியாமல்
பெருவாழ்
வுதனைப் பேணுவோம்! (2)
அன்பெனும்
அருவியில் ஆழ்ந்திட
என்றுமே விரும்புவர் யாவரும்!
அன்பினைப் பொழிந்தே ஆள்வீரே
இன்பமாய் அவர்மனம் ஏற்கவே!
(3)
சென்ரியு கவிதை - சங்கர சுப்பிரமணியன்.
-சங்கர சுப்பிரமணியன்.
(இதுவும் ஒருவகை ஹைக்கூ கவிதையே. ஆனால் இதற்கு கவிதை இலக்கணம் பெரிதாகத் தேவையில்லை என்றாலும் சிறிதாவது நக்கல் எட்டிப்பார்க்க வேண்டும்)
பலநாளாக பின் சென்றான்
ஒருநாள் காதலைச் சொன்னான்
கன்னத்தைத்தொட்டது காலணி
பெரிய எழுத்தாளராம்
நூல் பல வெளியிட்டாராம்
விற்றது பத்தேதானாம்
வழிமேல் விழிவைத்தான்
காத்திருந்த கன்னி வந்தாள்
சென்றதோ வேறொருவனுடன்
தாலி பாக்கியம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஓர் இடத்தை பெற்றிருப்பவர் பி.
கண்ணம்பா . தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இவர் தமிழில் உணர்ச்சிகரமாக வசனம் பேசி நடிப்பதை பார்த்து திரையுலகமே வியந்து பாராட்டியது. குறிப்பாக கண்ணகி படத்தில் இவர் பேசிய அனல் கக்கும் வசனங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்ததன.
படங்களை தயாரித்து அவை அவரின் கணவர்கே.பி. நாகபூஷணத்தின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி கண்டன. 1963 ம் வருடம் எம் ஜி ஆரின் அம்மாவாக நடித்துக் கொண்டிருந்த கண்ணாம்பா எம் ஜி ஆர் நடிப்பில் சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார்.
இலங்கைச் செய்திகள்
பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம்
யாழ். மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சனத் உள்ளிடோர் கள விஜயம்
35 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு
பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!
வவுனியாவில் எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்
பலாலி ஊடாக காங்கேசன்துறை வரை பஸ் சேவைகள் : தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம்
10 Apr, 2025 | 04:35 PM
யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக வியாழக்கிழமை (10) திறக்கப்பட்டதையடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன.
தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால், இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து, அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும், அதன் மூலம் பலாலி வடக்கு, அந்தோணிபுரம், மயிலிட்டியை சென்றடையும்.
உலகச் செய்திகள்
பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா?
புதிய வரிகள் 90 நாட்களிற்கு இடைநிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு
இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பங்குசந்தையை தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்த முயன்றாரா? புதிய குற்றச்சாட்டுகள்
அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி- சீனா
பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா?
10 Apr, 2025 | 12:48 PM
அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு பி-2 அதிநவீன போர்விமானங்களை அனுப்பியுள்ளமை தனக்கான செய்தியா என்பதை ஈரானே தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு ஆறு பி-2 போர்விமானங்களை மார்ச்மாதம் அனுப்பியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டருக்கு அனுப்பியுள்ளனர்.
யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிற்குஎதிரான அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2025 24 - 05 - 2025
விழா நாயகன்:-- பண்டிதமணி திரு. க. சு. நவதீத கிருஷ்ணபாரதியார்அவர்கள்
தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்து சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்டபுரத்தை இருப்பிடமாக்கி திருப்பொலிய வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய பணி ஆற்றியவர் சிவத்திரு மாவைக் கவுணியன்’ பண்டிதமணி திரு. க. சு. நவதீத கிருஷ்ணபாரதியார்அவர்கள்.
சிறப்புச் சொற்பொழிவு - செஞ்சொற்
செல்வர் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள்
விழா பற்றிய மேலதிக முழு
விபரங்களும் விரைவிலே அறிவிக்கப்படும்.
அத்துடன்
சிவஞானச் சுடர்
பல்வைத்திய கலாநிதி பாரதி
இளமுருகனார் அவர்கள் இயற்றிய