கண்ணகி பேசா கதவினைத் திறந்தாள் !
உறவுகளுடன் உயர்ந்து நில் ---- அன்பு ஜெயா (கழி நெடிலடி எழுசீர் ஆசிரிய விருத்தம்)
அனைவரும்
வாழ்ந்திடில் மகிழ்ச்சிதானே?
உறவினுக் கெதிரியாய் உழன்றுநீ அலைவதால்
உண்மையில் இழப்பது நீயன்றோ?
உறவுமே உன்னையே ஒதுக்கியே வைத்திடில்
உலகினில்
உனக்கென இருப்பதேது?
பறவையும் இனத்துடன் பகிர்ந்துதான் வாழ்ந்திடும்
பார்த்ததைப்
போலநீ திருந்துவாயே! (1)
என்றுமே உறவுகள் இணைந்துடன் வாழ்வதால்
எய்துவர்
வாழ்வினில் இன்பமதே;
நன்றென நம்மவர் நவின்றநன் மொழிகளை
நாளுமே
பற்றுதல் நன்மைதானே;
இன்றுநான் உரைப்பவை ஏற்றிட மறுத்திடில்
இனியவுன்
உறவுகள் இழந்துநிற்பாய்;
என்றுமே மாந்தரும் தீவினை யாளரை
ஏற்பதே உலகினில் இல்லைதானே? (2)
இயக்குநர் ஜெயபாரதி – கானா பிரபா
இந்திய சினிமாவில் கலைப்படங்கள் என்ற பட்டியல் வரும் போது அங்கே இயக்குநர் ஜெயபாரதி என்ற ஆளுமையும் இருப்பார்.
ஆனாலும் தனது தணியாத தாகம் நிறைவாறாத நிலையில் கடந்த டிசெம்பர் 6 ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இயக்குநர் கே.பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுக்க வேண்டிய சூழலும், “கிராமத்து அத்தியாயம்” படத்தில் ஒரு பாடல் காட்சியோடு ஜெயபாரதிக்குப் பதில் இன்னொரு நாயகனை மாற்றி விட்டார்கள்.
இங்கே எதற்காக? என்ற பெயரில் இயக்குநர் ஜெயபாரதி எழுதிய நூல் குறித்த என் வாசிப்பனுபவத்தை இங்கே அவரை அஞ்சலித்துப் பகிர்கின்றேன்.
இயக்குநர் ஜெயபாரதி இப்படிச்
சொல்கிறார், நான் பகவத் கீதையை ஆழ்ந்து படித்தவன்
இல்லை! இருந்தாலும் எப்போதோ படித்தபோது பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்டது நினைவுக்கு
வந்தது.
"தீயவர்களின் (கெளரவர்களின்) மனங்களை
மாற்றி இந்த மகாபாரதப் போரை நீங்கள் தவிர்த்திருக்கலாமே!"
அதற்குக் கண்ணன்,
"ஒருவன் என்னவாக இருக்க வேண்டுக் என்பதை
அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின்
ஆன்மாதான் தீர்மானிக்கிறது. ஆன்மா முடிவு செய்ததை மாற்றும் சக்தி எனக்கில்லை
பாஞ்சாலி"
கிருஷ்ணன் சொன்ன இந்தமாதிரியான ஓர்மம் வயப்பட்ட, நல்ல சினிமாவைத் தமிழ் ரசிகனுக்குக் காட்டவேண்டும், நாமும் நல்ல சினிமா எடுக்கலாம் என்ற வைராக்கியத்யோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சினிமாச் சூதாடிகளின் மத்தியில் தன் சுயத்தைத் தொலைக்காமல் தன் ஒவ்வொரு முயற்சிலும் போராடிச் சளைக்காமல் தன் நாற்பதாண்டுக் கலையுலக வாழ்வைத் தொடவிருக்கும் இயக்குநர் ஜெயபாரதியின் வாக்குமூலம் தான் இந்த நூல்.
மறுபடியுமா? - இரகுநாத் அழகப்பா
வழக்கம் போல் அன்று மாலை என்னுடைய நடைப்பயிற்சிக்கு கிளம்பி நடக்க ஆரம்பித்தேன். வீட்டுத் தெருவை கடந்து வலது பக்கம் திரும்பி பிரதான சாலையை அடைந்து சாலையின் இடது ஓரத்திலுள்ள நடைப்பாதையில் நடந்து கொண்டிருந்தேன்.
சூரியன் மேற்கே தன் செங்கதிர்களை பரப்பியவாறு அன்றைக்கு விடை பெற்றுக் கொண்டிருந்தது. பறவைகள் உல்லாசமாகப் பாட்டுப் பாடியவாறு குடும்பத்துடன் தங்கள் கூட்டை நோக்கி பறந்து சென்று கொண்டிருந்தன. இதமான தென்றல் வீசி செடி, கொடிகளை தாலாட்டி கொண்டிருந்தது. நான் இளையராஜாவின் இசையில் ‘இது ஒரு பொன் மாலை பொழுது...’ பாடலை கேட்டுக்கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.
சிறிது தூரம் சென்றபிறகு என் பின்னால் நாய்கள் குரைக்கும் சத்தம்
கேட்டு திரும்பிப் பார்த்தேன். ஒருவர் இரு நாய்களுடன் வேகமாக வந்துக் கொண்டிருந்தார். நாய்கள் தான் அவரை அத்தனை வேகமாக இழுத்துக் கொண்டு வருகிறது என்பதைப் பார்த்ததும் புரிந்துக் கொண்டேன். அந்த நாய்களின் துறுதுறுப்பும், குறும்புத்தனமும், எஜமானரின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த பொன் மாலை பொழுது மயக்கத்தில் குதூகலமாக வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்து குரைத்து கொண்டும் அவற்றை விரட்டிப் பிடிக்க முயற்சித்து கொண்டும் வந்த அழகை சில நிமிடங்கள் புன்முறுவலுடன் பார்த்தவாறே நின்றேன். என்னை கடக்கும் போது அவை என்னருகே வந்து என் கால்களை முகர்ந்துவிட்டு, இல்லை முத்தமிட்டு என்று சொல்வதே சரி, என்னைப் பார்த்து வாலையாட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்திவிட்டு, சென்று வருகிறோம் என்று சொல்வதைப் போல் என்னைப் பார்த்து குரைத்துவிட்டு சென்றது. அப்போது, என் நினைவெல்லாம் என் சிறுவயதில் நாங்கள் வளர்த்த செல்ல நாயான ஸ்வீட்டியின் எண்ணங்களால் நிரம்பிவழிய நான் அவர்களை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.
நான் எட்டாவது படிக்கும்போது நாங்கள் நாய் வளர்க்க முடிவெடுத்து ஒரு நாய்க்குட்டி வாங்கினோம். பிறந்து இரண்டு வாரங்களே ஆன பொமரேனியன் வகை ஆண் குட்டி. உடல் முழுவதும் பனித்துளிகள் படர்ந்தது போல் வெண்மையான நன்கு வளர்ந்த முடிகள். முகத்தில் மட்டும் மூன்று சிறிய கருப்பு திராட்சைகளை வைத்ததுப்போல் இரண்டு கண்களும், மூக்கும் கொள்ளை அழகாக இருந்தது. தன் வசீகரிக்கும் அழகாலும், சுட்டித்தனத்தாலும், அன்பு பார்வையாலும், மெல்லிய முனகல் சத்தத்தாலும் குடும்பத்தில் எல்லோரையும் அவன்பால் இழுத்துக்கொண்டான். அன்றிலிருந்து அவன் எங்கள் குடும்பத்தில் ஒருவனானான். என் அம்மா அவனுக்கு ‘ஸ்வீட்டி’ என பெயர் வைத்து அழைத்தார்.
தமிழ் பண்பாட்டு வலையத்தின் வரலாற்று நிகழ்வு: நடராஜா மதீந்திரனின் நினைவாக அஞ்சல் முத்திரை வெளியீடு
தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்ஸ் மற்றும் பிரான்சின் அஞ்சல்
சேவையான La Poste உடன் இணைந்து, 2012ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள், பாரிஸில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், கேணல் பரிதி என்று அழைக்கப்பட்ட நடராஜா மதீந்திரன் அவர்களின் நினைவாக ஒரு அஞ்சல் முத்திரை வெளியீட்டு நிகழ்வை நடாத்தியது.
இந்த நிகழ்வு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி Bobigny நகரசபையின் Salon d’honneur de l’Hôtel de Ville மண்டபத்தில், Bobigny நகரபிதாவும் Seine-Saint-Denis மாவட்டசபை உறுப்பினருமான திரு. Abdel Sadi அவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள்:
நிகழ்வில் Bondy நகரசபை உறுப்பினரும் Seine-Saint-Denis மாவட்டசபை
உறுப்பினருமான திருமதி Oldhynn Pierre, Seine-Saint-Denis மாவட்டத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான திருமதி Raquel Garrido, மற்றும் Seine-Saint-Denis மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு Alexis Corbière ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நடராஜா மதீந்திரனின் படுகொலைக்கு நீதி பெற்றுத்தர தாங்கள் துணை நிற்பதாகவும், இந்த நினைவுச்சின்னம் தமிழரின் தியாகத்திற்கான முக்கியமான அடையாளமாக இருக்குமென்றும் அவர்கள் உறுதியாகக் கூறினர்.
முத்திரை வெளியீடு:
நடராஜா மதீந்திரனின் தாயார் தருமதி நடராஜா கமலாம்பிகை மற்றும் Bobigny நகரபிதா திரு. Abdel Sadi இணைந்து முத்திரையை வெளியிட்டனர். முதல் முத்திரையை பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. இரா. சிறிதரன் பெற்றுக்கொண்டார்.
நினைவு நிகழ்வின் சிறப்பு:
இந்த அஞ்சல் முத்திரை வெளியீடு ஒரு சாதாரண நினைவு முத்திரை அல்ல. இது ஈழத்தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய ஒரு வீரத்தின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் நீதி பெற வேண்டிய போராட்டத்தின் அடையாளமாக அமைந்தது.
பிரான்சில் பொபினி நகரில் தமிழினவழிப்பின் நினைவாக நினைவுக்கல் திறந்துவைக்கப்பட்டது.
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் seine-saint-denis மாவடத்தில் உள்ள பொபிணி Bobigny நகரசபையினால் தமிழினவழிப்பின் நினைவாக சமாதானத்தை குறிக்கும் ஒலிவ் மரம் நாட்டப்பட்டு நினைவுக் கல்லும் சனிக்கிழமை 07-12-2024 திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நினைவுக்கல்லினை Bobigny பொபினி நகரபிதாவும் seine-saint-denis மாவட்டசபை உறுப்பினருமான திரு.abdel sadi அவர்களார் திறந்துவைத்தார்.
குறித்த நினைவுக்கல்லின் “சிறீங்கங்கா அரசினால் 1948 முதல் 2009
மே மாதம் வரை இனவழிப்பு செய்யப்பட்ட தமிழீழ மக்களின் நினைவாக” என்ற வாசகங்கள் பிரஞ்சு மொழியிலும் தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டிருந்தன.
நகரசபை மேயர் திரு.abdel sadi உரையாற்றும் போது பொபினி நகரசபையில் 2021 தமிழினவழிப்பை அங்கீகரத்து தீர்மானம் நிறைவேற்றிதையும் , பொபினி நகரம் தமிழ் மக்களின் நீதியை வென்றெடுக்க துனைநிற்பதையும் சுட்டிக்காட்டினார்.
திக்கற்ற பார்வதி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
இந்தியாவில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த
மாமேதைகளில் ஒருவராக கருதப் படுபவர் மூதறிஞர் ராஜாஜி. சக்ரவர்த்தி ராகவாச்சாரியார் என்று இயற் பெயர் கொண்ட இவர் ராஜாஜி என்று பாரதம் முழுதும் அறியப்பட்டார். வக்கீலாக தொழில் தொடங்கி, அரசியல்வாதியாகி, சுதந்திர போராட்ட வீரராகி, ராஜதந்திரியாகி பின்னர் இந்தியாவின் கடைசி கவனர் ஜெனரலாக பணியாற்றிய இவர் அதன் பின் சென்னை மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்தவராவார். இன்னும் பல பதவிகளை வகித்த ராஜாஜி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
மட்டும் கால் பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அத் துறையை அவர் விரும்பவும் இல்லை. ஆனாலும் 94ஆண்டுகள் வாழ்ந்த அவரை வாழ்வின் இறுதி காலம் அத்துறைக்கும் இழுத்து விட்டது. அது வரை காலமும் சினிமாத் துறையில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜாஜியின் குறு நாவல் ஒன்று படமானதால் அவரின் திரு நாமமும் திரையுலகில் இடம் பெறலானது. அப்படி படமான கதைதான் திக்கற்ற பார்வதி.
சமூகப் பணிக்கான அங்கீகார விருது!
ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலபாராளுமன்ற புரூஸ்
தொகுதியில் ஆண்டுதோறும் சமூகப் பணியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப் படுகிறார்கள். 2024 ஆம் ஆண்டான இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாண்டினாங்க் நகரசபை மண்டபத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அரசியலில் காலாவதியாதல்
December 6, 2024
ஓவ்வொரு பொருளுக்கும் காலாவதியாகும் காலம் உண்டு. அந்தப் பொருளின் பயன்பாடு என்பது அதன் பயன்பாட்டுக்கான கால எல்லைக்குள் மட்டும்தான். அதன் பின்னர் அந்தப்பொருள் என்ன தான் விலைமதிப்புள்ளதாக இருந்தாலும் அதற்கு எந்தப் பெறுமதியும் இருக்காது. இது பொருட்களுக்கு மட்டுமல்ல – இலக்கியம், அறிவியல், தத்துவம், அரசியல் என அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
ஒரு குறிப்பிட்ட துறையில், ஒரு காலகட்டத்தில் முதன்மையானவர்களாக போற்றப்படுபவர்கள் பிறிதொரு காலத்தில் பொருத்தமற்வர்களாகப் போகலாம் – ஏனெனில் அவர்களால் கால மாற்றத்தை புரிந்துகொண்டு செயற்பட முடியாமல் போகும் போது, புதியவர்கள் அவர்களை தாண்டிச் சென்றுவிடுவர். பின்னர் இப்படியும் ஒருவர் இருந்தார், அவர் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான விடயங்களை முன்வைத்தார் என்னும் வரலாற்றுப் பதிவு மட்டுமே மிஞ்சியிருக்கும்.
இந்த அடிப்படையில் தமிழர் உரிமை அரசியலை எடுத்து நோக்கினால், ஆரம்பத்தில் தமிழ் மிதவாதிகளால் வழிநடத்தப்பட்ட தமிழர் அரசியல் பின்னர் ஆயுத இயங்களினால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆங்கில எழுத்துக்களை முன்னுக்கும் பின்னும் போட்டு, முப்பத்தேழு இயக்கங்கள் தோற்றம்பெற்றன. ஐந்து இயக்கங்களே பிரதான இயக்கங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய நான்கு இயக்கங்களும் 1990 களில் ஆயுத விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாக அறிவித்தன.
ஈரோஸ் அமைப்பின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளோடு இணைந்து கொண்டது. இவற்றில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்தன. புளொட் இயக்கத்தின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எப்) 2009இற்கு பின்னர் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. கூட்டமைப்பின் அங்கமாக இருந்த காலத்தில் கூட, முன்னாள் ஆயுத இயங்கங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட, தனித்துவமான அரசியல் கட்டமைப்பை இவர்கள் கொண்டிருக்கவில்லை.
மதுபானசாலை அரசியல்
December 7, 2024
வடக்கு, கிழக்கில் வழங்கப்பட்ட மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு, தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பியிருந்தார். சரி நாங்கள் நாளையே வெளியிடுகின்றோம் என்று அரசாங்க அமைச்சரும் தெரிவித்திருந்தார்.
அதன்படி எந்த மாவட்டத்துக்கு எத்தனை மதுபானசாலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்னும் தகவல்கள் வெளியாகியிருக்கி;ன்றன. வடக்கு, கிழக்கில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்புக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறுவிதமான பிரச்னைகள் தொடர்பில் குரல் எழுப்பி வந்த, தமிழ் (தேசிய) அரசியல்வாதிகள் இன்று வடக்கு, கிழக்கிற்கு எத்தனை மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதனை யாருக்கு வழங்கினார்கள் என்னும் தகவல்களை கோரிவருகின்றனர்.
தங்களுக்குள் இருக்கும் சிலரை தோற்கடித்து, அவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காகத்தான் அதனையும் கோருகின்றனர் – மக்களின் நன்மைக்காக அல்ல – ஏனெனில் தேர்தல் காலத்தில் தங்களின் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மது பானம் வழங்குவதையும் மக்கள் அறிவார்கள். உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், இன்று மதுபான சாலைகள் தொடர்பில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றால் – இது யாருடைய கெட்டித்தனம். ரணில் விக்கிரமசிங்க அதிகார அரசியலிலிருந்து வெளியேறினாலும் கூட, அவரால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அதிர்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளால் இன்னும் விடுபட முடியவில்லை – தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
மதுபான சாலைகள் தொடர்பான விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன? ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் அரசியல் வாதிகளை தங்கள் பக்கம் எடுக்கும் நோக்கில் சலுகையாக, மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை ரணில் வழங்கியிருக்கின்றார். அது ஒரு வகையில் அரசியல் கையூட்டுத்தான். ஆனால் இலங்கைத் தீவின் அதிகார அரசியலில் இவ்வாறான அரசியல் கையூட்டுக்கள் முதலும் அல்ல – அதேபோல் இறுதியுமல்ல. நாடாளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் மதுபானசாலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாக அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருந்தார்.
இலங்கைச் செய்திகள்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர் செவ்வியல் ஆடல்-2024"
சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் - வெளிவிவகார அமைச்சர் விஜித, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு : இன்று வடக்குக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்த ஆதரவளிக்கத் தயார் ; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் உறுதி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 10 ஆம் திகதி முதல் கனமழை!
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர் செவ்வியல் ஆடல்-2024"
Published By: Vishnu
07 Dec, 2024 |
உலகச் செய்திகள்
காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் - நான்கு மருத்துவர்கள் உட்பட பலர் பலி- சிஎன்என்
உலகம் மூன்றாவது அணுவாயுத யுகத்தின் விளிம்பில் - பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை
சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம்
திருவண்ணாமலை மகாதீப மலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு-5 பேர் சிறுவர்கள்
மகனிற்கு பொது மன்னிப்பு வழங்கினார் பைடன்
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் கைவிடப்பட்டது
காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் - நான்கு மருத்துவர்கள் உட்பட பலர் பலி- சிஎன்என்
Published By: Rajeeban
06 Dec, 2024 | 08:03 PM
இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பவித்ரா உற்சவம் 2024 (13 டிசம்பர் முதல் 15 டிசம்பர் 2024 வரை)
பவித்ரா உற்சவம் என்பது "பவித்ரா" (புனித) மற்றும் "உத்சவம்" (பண்டிகை) ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலவையிலிருந்து பெறப்பட்டது.
பவித்ரோத்ஸவம் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகள் நடத்தும் விஷயத்தில் "ஆகம" உத்தரவில் ஏதேனும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விதிகளை பின்பற்ற தவறியதில் இருந்து மீட்பதற்காக உற்சவம் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 13, 2024 வெள்ளிக்கிழமை
08.00 AM : திருப்பள்ளி எழுச்சி (இறைவன் எழுந்தருளல்), நித்ய பூஜை, புண்யவாச்சனம், ஸ்ரீ வெங்கடேஸ்வர உற்சவமூர்த்தி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ராம லக்ஷ்மண சீதா தேவி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ சுதர்ஷன முத்தி மற்றும் ஸ்ரீ கருடன் ஆகியோருக்கு அபிஷேகம்.
மதியம் 12.00: மதிய பூஜை
05.00 PM : நித்ய பூஜை, சங்கல்பம், சோம கும்ப பூஜை மற்றும் யாகம், வாஸ்து பூஜை & ஹோமம், ரக்ஷா பந்தனம், மாலை பூஜை.
பவித்ரா உற்சவம் - சாத்துதல் (பிரசாதம்)
டிசம்பர் 14, 2024 சனிக்கிழமை
காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை : திருப்பலி எழுச்சி (இறைவன் எழுந்தருளல்), நித்ய பூஜை, புண்யாகவாசனம், 108 கலச பூஜை, ஹோமம் & அபிஷேகம், யாகசாலை நிகழ்ச்சிகள்.