சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற கந்த சஷ்டி பூசை

 சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற கந்த  சஷ்டி  பூசை யையும்  முருகன் ஆலயத்திற்கு  வந்திருந்த அடியார்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்

1 ம் நாள்  



கோடையின் கொடுமை - செ பாஸ்கரன்

.

பருவ காலங்கள் பலகண்டு
மகிழ்ந்திருந்த என் மனது
கோடைகாலத்தின் வருகை கண்டு
குதூகலிக்கவில்லை
வந்த வேகத்தில் வாரி அணைத்து
வாயில் போட்டது
தீநாக்கின் திமிங்கிலங்கள்
நேப்பியன் நதியும்
வானுயர்ந்த மலைகளும்
தீநாக்கின் தழுவலினால்
கருகிச் சிதைந்தது
ஆயுத அரக்கனால் அகதியாகாத
என்நாட்டு மக்கள்
தீ அரக்கனின் தீண்டுகையில்
குடியிருக்க குடிலற்றுப்போனார்கள்
நெருப்பரக்கனின் பெருமூச்சு
காற்று வெளியெங்கும்
புகையாய் எழுந்தாட
கோபத்தில் கதிரவனும்
கொப்பளித்து சிவந்து நின்றான்
கோடை வருகையின் பொல்லா முகத்தை
பொருட்களின் அழிவோடு மட்டுமல்ல
வீடுகளின் எரிவோடும்
பார்த்து கண்ணீர் விடுகின்றோம்.

அரங்காடல் 2013 நிகழ்வு

.
அரங்காடல்  2013 நிகழ்வு  சென்ற 26.10.2013 அன்று சிட்னியில் இடம் பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழக பழைய மாணவர்களினால் இந்நிகழ்வு நடாத்தப் பட்டது. மூன்று நாடகங்கள் இந்நிகழ்வின் போது மேடையேற்றப்பட்டது. திருமதி கோகிலா மகேந்திரனின் சேவல் அழும் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அற்றைத்திங்கள்  மண்சுமந்த மேனியர் நெறியாளர் சிதம்பரநாதனின் புதிதளிப்பு என்பவற்றுடன் சர்மா அவர்களின் நடன நிகழ்வும் இடம் பெற்றது .



உலகச் செய்திகள்

இங்கிலாந்தில் புயல்

ஒடிஷாவில் வெள்ளம்: 47 பேர் பலி

புலிகளுக்கு உதவிய கனேடியருக்கு சிறை

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்


========================================================================
இங்கிலாந்தில் புயல்

28/10/2013   ஐக்கிய இராச்சியத்தை தாக்கிய புயலால் அங்கு பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் சேதமேற்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி காற்றுடன் கூடிய மழையினால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.





சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற கேதாரகௌரி பூசை

.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற கேதாரகௌரி பூசை யையும்  முருகன் ஆலயத்திற்கு 03.11.2013 அன்று வந்திருந்த அடியார்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்



திரும்பிப் பார்க்கின்றேன் - 13 -முருகபூபதி


சிவாஜி  முதல்  சிவாஜி  வரையில்  எழுதி ஓய்ந்த சுஜாதா

எனது  தாய்மாமனாரின்  மூத்தமகன்  ஸ்ரீஸ்கந்தராஜா  எனக்கு  மைத்துனராக  மட்டுமன்றி  வீட்டில்   கணிதம்   விஞ்ஞானம்  கற்றுத்தந்த   ஆசானாகவும்  விளங்கியவர்.  யாழ்ப்பாணம்   இந்துக்கல்லூரிக்கு   எங்கள்   ஊரிலிருந்து   மட்டுமல்ல   முதல்தடவையாக   எங்கள்  உறவினர்களின்   குடும்பங்களின்   மத்தியிலிருந்து   (வெளியூருக்கு)  படிக்கச்சென்றவர்.
அதனால்  எங்கள்  மத்தியில்  நன்கு  படித்தவர்  என்ற  பெயரை 1960 களில்  சம்பாதித்தவர்.   அவருக்குப்பின்னர்தான்   நானும்  அவரது  தம்பி  முருகானந்தனும்  யாழ்ப்பாணம்  ஸ்ரான்லி   கல்லூரிக்கு  புலமைப்பரிசில்  பெற்று  படிக்கச்சென்றோம்.

மைத்துனர்   ஸ்ரீஸ்கந்தராஜா  தமது  கல்வியைத்தொடர்ந்து  கொழும்பில்  சிலோன் தியேட்டர்ஸ்   கம்பனியில்   பணியாற்றினார்.  அப்பொழுது  அவர்  கொழும்பில்  வேலைக்குச்சென்று   திரும்பும்பொழுது  வாராந்தம்  குமுதம்   இதழை  வாங்கிவந்து ஆர்வமுடன்   படிப்பார்.  அக்காலப்பகுதியில்  சுஜாதாவின்  நைலான் கயிறு   என்ற மர்மத்தொடர்கதை   குமுதத்தில்  வெளியாகிக்கொண்டிருந்தது.  அந்த  விறுவிறுப்பான  தொடருக்காகவும்    சுஜாதாவின்   புத்தம்புதிய    எழுத்துநடைக்காகவும்   அதனை  நானும்  விரும்பிப்படித்தேன்.

சில்லையூர் செல்வராசனின் 18வது நினைவு 14-10-1995

.
சில்லையூர் செல்வராசனின் 18வது நினைவு
தினத்தை முன்னிட்டு இன்னினைவுப்பா !
கலாநிதி குமரகுருபரன் MPC
வித்திலே திருக்கொண்டான் வித்தகன் இவனொருவன்
வித்துவான்கள் வியந்திடவே வெண்பாவும் அகவலென
விருத்தங்கள் விருப்புடனே எதுகையுடன் மோனையென
முத்தமிழே தன் மூச்சாய் பல்கலையும் தனதாக்கி
தறித்ததமிழ் தனி மரபாய் வித்தினிலே திருக்கொண்டான்
தாந்தோன்றி கவிராயன் தரணியிலேவந்துதித்தான்
சூசையர் மகனாம் மருவிய செல்வராசன் !
சில்லாலை புகழோச்ச சொல்லாலை அவதரித்தான்
கல்லானைப் போலாமோ வல்லார் நாமென்னும்
பாவலர் பலருள் பாவல்லான் சில்லையூர் செல்வராசன்
பொல்லாத கவிஞனிவன் வீண் கூறாப் புலவனென
வித்துவச்செருக்குண்ட தத்துவக்காரனிவன் .
''தணியாத தாகமதாய்" நாற் திசையும் நம்கலைகள்
முத்தமிழும் மின்னலையாய் வானலையில் இடிமுழக்கம் !
நேயரென ஓர் குலமும் ,நடைபிணங்கள் நாமில்லை
நடைகோலம் தானில்லை கலைஞர் குளாம்ஓர் குலமாய்
கட்டி அவன் காத்ததினால் ''வாத்தி''என வாழ்த்தினரோ?
விளம்பரத்தில் வித்துவங்கள் புத்தலைகள் புதுக்கோலம்
பத்திரமாய் பாத்திரங்கள் வாழ்க்கையிலும் நாட்டியவன்;
காதற் கதையினிலே தன் தனையனவன் புகழ்காட்டி
தன் இனிய கமல மது கரமெடுத்து ி தொடுத்த

அதிசயன் மொழி கேட்டு வாழ்வாங்கு வாழ்ந்தவனே !

கதை சொல்லிகள் இருக்கிறார்களா - எஸ் ராமகிருஸ்னன்

.
சமீபத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன், ஒரு மாணவன் எழுந்து தமிழ்நாட்டில் கதைசொல்லி என யாராவது இருக்கிறார்களா எனக்கேட்டான்,
எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள் தனது பேச்சின் ஊடே கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,
ஆங்கிலத்தில் கதைகள் சொல்லும் கதை சொல்லிகள் பலர் கோடை முகாம்களை நடத்துவதை அறிவேன், ஆனால் தமிழில் கதை சொல்வதை முழுநேர வேலையாகக் கொண்ட ஒருவரை இதுவரை நான் கண்டதேயில்லை என்று சொன்னேன்,
என் பதிலைக் கேட்டு அந்தச் சிறுவன் அமர்ந்துவிட்டான், ஆனால்  ஏன் அப்படி ஒருவர் இங்கே உருவாகவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்,
பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர், இசை ஆசிரியர், யோகா கற்றுதருபவர் போல ஏன் ஒரு கதை சொல்லி இதுவரை நியமிக்கபடவேயில்லை
கதை சொல்வதை ஒரு கலையாக எங்காவது கற்றுத்தருகிறார்களா, ஏன் அது போன்ற முயற்சியை எந்த ஒரு கல்விநிறுவனமும் இன்றுவரை முன்னெடுக்கவில்லை, ஆசிரியர் பயிற்சி நிறுவனமே இது போன்ற ஒரு பட்டயப்படிப்பை உருவாக்கலாம் தானே,

தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் விருது பெறுகிறார்

.
மலையகப்படைப்பாளி  தெளிவத்தை ஜோசப்
 விஷ்ணுபுரம்  விருது  பெறுகிறார்


இலங்கையின்    மூத்த படைப்பாளியும்    மலையக எழுத்தாளர்  மன்றத்தின்  தலைவருமான தெளிவத்தை  ஜோசப் இந்த ஆண்டிற்கான  தமிழகத்தின்  விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார்.  இத்தகவலை  விஷ்ணுபுரம்  விருதுவழங்கும்  தமிழகத்தின்  பிரபல  படைப்பாளி  ஜெயமோகன்  வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும்  டிசம்பர்  மாதம்  22 ஆம் திகதி தமிழ்நாடு கோவையில்  நடைபெறவுள்ள  விருது வழங்கும்  விழா  இந்திராபார்த்தசாரதி  தலைமையில்  நடைபெறவுள்ளது.
மலையாளக்ககவிஞர்  பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய  நூலை வெளியிடுவார். எழுத்தளார் சுரேஷ்குமார்  இந்திரஜித்,  திரைப்பட இயக்குநர்  வசந்தபாலன் ஆகியோர்  விருது வழங்கும்  விழாவில் உரையாற்றுவார்கள்.
இந்நிகழ்வில்  தெளிவத்தைஜோசப்  கலந்துகொள்ளுவார்.
இலங்கையில் ஏற்கனவே  இரண்டு  தடவைகள்  தேசிய  சாகித்திய விருதுகளைப்பெற்றுள்ள  தெளிவத்தை ஜோசப்  கொடகே பதிப்பகத்தின்  வாழ்நாள் சாதனையாளர்  விருது  மற்றும்  யாழ்.   இலக்கிய  வட்டத்தின்  சம்பந்தன் விருது ஆகியனவற்றையும்  பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  ஒன்பதாவது  எழுத்தாளர்  விழா மெல்பனில்  நடைபெற்றபொழுது  அவர்  சிறப்புவிருந்தினராக  அழைக்கப்பட்டார். 

இலங்கைச் செய்திகள்

பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்கொரியா உதவி

5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவிவழங்கும் : சிசனுடனான சந்திப்பின் பின் விக்னேஸ்வரன்


=========================================================================
பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்

29/10/2013    மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது.

பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

கடலின்றி அமையாது உலகு - நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

.


பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக எளிதாக ஆடம்பரச் சடங்கின்றி மீனவர்கள் தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கிவிடுவார்கள். பெண்களின் மறுமணங்கள் இயல்பாக நடைபெற்றன. திருமணமான பெண்கள் கணவனுடன் பிறந்த வீட்டிலும் வாழலாம், புகுந்த வீட்டிலும் வாழலாம். இவை பெரும்பாலும் குடும்பச் சூழல் தொழில் சூழல்களைப் பொறுத்து அமைந்தது.
காலங்காலமாக பட்டினங்களிலும் அதனை ஒட்டியிருந்த கிராமங்களிலும் வாழ்ந்த மீனவர்கள் துறைமுகங்களை நிறுவி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகர்களாக இருந்திருக்கின்றனர் என்றாலும் அவர்களுக்குச் சொத்தாக இருந்தவை பாய்மரக் கப்பல்களும் தோணிகளும்தான். பெரும்பான்மையான நெய்தல் மக்களுக்கு உடமைகளாகயிருந்தவை பரந்த கடலும் கடற்கரையும் குடிசையும் கட்டுமரமும் வலைகளுமே. ஆயிரமாண்டுகளாக நெய்தல் நிலத்தில் வாழ்ந்துவரும் தமக்கு கடலும் கடற்கரையையும் பூர்வீகக் சொத்து என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவர்கள் அவர்கள். சொத்துரிமைக்கான நிலப்பட்டா பதிந்து வைத்திராத சமூகம் என்பதால் பெண்களுக்குத் தனியே சொத்துரிமை என்ற கேள்வி அங்கு இல்லை.

சதி - எஸ் ராமகிருஸ்னன்

அபர்ணா சென்னின் சதி  திரைப்படம், ஒரு ஊமைப்பெண்ணின் கதை, 1828 ம் ஆண்டு வங்காள கிராமம் ஒன்றில் கதை நடக்கிறது
படத்தின் துவக்கமே வயதான கணவன் இறந்து போனதற்காக ஒரு இளம்பெண்ணை உயிரோடு தீயில் வைத்து எரிக்கும் சதியில் துவங்குகிறது, வங்காளத்தில் சதிக்கொடுமை மிகவும் மோசமாக பரவியிருந்தது,
ராஜாராம் மோகன்ராயின் தொடர் போராட்டங்களே இதனை முடிவிற்குக் கொண்டுவந்தன, கதையின் மையம் கணவனுக்காக ஒரு பெண் தன் வாழ்வை அழித்துக் கொள்ள எப்படி நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதே.
உமா, கிராமத்து இளம் பெண், ஜாதகதோஷம் உள்ளவள், அவளை யாருக்குத் திருமணம் செய்து வைத்தாலும் கணவன் சில மாதங்களிலே இறந்து போய்விடுவான், விதவையாகவே அவள் வாழ நேரிடும் என்று ஜோசியர் சொல்கிறார்,
ஆச்சாரமான குடும்பம் ஒன்றில் வாழும் உமா, வீட்டுவேலைகள் செய்வது, மாடு மேய்ப்பது, அவளுக்கு விருப்பமான பெரிய மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு எதையாவது பற்றி கனவு கண்டு கொண்டிருப்பது என நாட்களை ஒட்டிக் கொண்டிருக்கிறாள்,
ஜாதகத்தில் உள்ள தோஷத்தைக் கழிக்க வேண்டும் என்றால் அவளை ஒரு மரத்திற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்கிறார் ஜோதிடர்,

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு செயற்குழு தெரிவு

.



அவுஸ்திரேலியாவில்  வருடந்தோறும்   தமிழ்  எழுத்தாளர்  விழா  மற்றும்   கலை  இலக்கிய   நிகழ்வுகளை  நடத்திவரும்   அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்   ஆண்டுப்பொதுக்கூட்டம்   அண்மையில்   மெல்பனில்  எப்பிங்  மெமோரியல்  மண்டபத்தில்   சங்கத்தின்   தலைவர்  பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா  தலைமையில்   நடைபெற்றது.
உலகெங்கும்  போரில்  உயிர்நீத்த  மக்களுக்காக  ஒரு  நிமிடம்  மௌன அஞ்சலி  இடம்பெற்றதையடுத்து 2012  ஆம்  ஆண்டு  நடைபெற்ற   ஆண்டுப்பொதுக்கூட்ட  குறிப்புகளை  செயலாளர்  திரு. கே.எஸ். சுதாகரன்  சமர்ப்பித்தார்.  குறிப்புகள்  ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து  2012- 2013 ஆம் ஆண்டுகளுக்கான  ஆண்டறிக்கையும்  நிதியறிக்கையும்  சமர்ப்பிக்கப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின்  காப்பாளர்  கலைவளன்  சிசு. நாகேந்திரன்  தயாரித்து  சங்க  உறுப்பினர்களின்   கவனத்திற்குட்பட்ட   புதிய  அமைப்புவிதிகள்  ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து  2013- 2014 ஆம்  ஆண்டிற்கான  செயற்குழு  தெரிவுசெய்யப்பட்டது.

வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியின் நூற்றாண்டு விழா



நன்றி : தினக்குரல்


தமிழ் சினிமா

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்பதனையே மக்களுக்கு சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
தனக்கென்று தனிபானி, தனி பாதை என்று பயணிக்கும் இயக்குனர்களில், தான் முக்கியமானவன் என்று தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபிக்கும் மிஷ்கின் இந்த படத்தையும் அவ்வாரே இயக்கியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, நண்பருடைய வீட்டில் படித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் வேளையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை பார்க்கிறார்.
அவரை காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்க முயல்கிறார். ஆனால் அந்த உயிர் மீது அனைவரும் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால் தன் வீட்டிலேயே கொண்டு போய் அவருக்கு ஆபரேஷன் செய்கிறார். இதற்கு உதவியாக இவருடைய பேராசிரியரும் துணைபுரிகிறார்.
ஆபரேஷன் செய்த மறுநாள் மிஷ்கின் அங்கிருந்து தப்பித்து போய்விடுகிறார். அதன்பிறகு சிபிசிஐடி பொலிசார் ஸ்ரீயின் வீட்டிற்கு வந்து மிஷ்கின் ஒரு பயங்கர ரவுடி என்று சொல்கின்றனர்.
ஒரு கொலையாளிக்கு உதவி செய்தற்காக அவரது குடும்பத்தையே கைது செய்கிறது. பொலிஸ் காவலில் இருக்கும் ஸ்ரீயின் மொபைலுக்கு அழைப்பு வருகிறது. அதில் மிஷ்கின் பேசுகிறார்.
அதில் ஸ்ரீயை சந்திக்க வேண்டும் என மிஷ்கின் கூறுகிறார். இந்த சூழலை பயன்படுத்தி மிஷ்கினை என்கவுன்டர் செய்ய பொலிஸ் திட்டமிடுகிறது.
அதற்கு ஸ்ரீயிடம் துப்பாக்கியைக் கொடுத்து மிஷ்கினை நீயே சுட்டுவிடு என்று கூறுகின்றனர்.
ஸ்ரீ தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்த அசைன்ட்மென்டுக்கு ஒத்துக் கொள்கிறார்.
ஸ்ரீயை சந்திக்கும் மிஷ்கின் மிகவும் சாதுர்யமாக ஸ்ரீயை எலெக்ட்ரிக் ரெயிலில் கடத்திச் செல்கிறார்.
இறுதியில் பொலிஸ் ஸ்ரீயை மீட்டு மிஷ்கினை கொன்றதா? அல்லது மிஷ்கினை ஸ்ரீ கொன்றாரா? என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது.
முகமூடி படத்திற்கு பின்பு மிஷ்கின் எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம் இது. தனது இயல்பான கதை, எதார்த்தம் குறையாத காட்சிகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் பாடல் இல்லாமல், கொமடி, நடிகர் கூட்டம் இல்லாமல் ஒரு ஆங்கில படத்திற்கு இணையான கதையையும், காட்சிகளையும் ரசிக்கும் படியாகவும், பிரமிக்கும்படியாகவும் அமைத்திருப்பது இவருக்கு உரிய பாணி.
குறிப்பாக படத்தில் ப்ளாஷ்பேக்கை காட்சிப்படுத்தாமல் ஒரு குழந்தைக்கு கதை சொல்வதுபோல் படம் பார்ப்பவர்களுக்கு தனது நடிப்பையும் சேர்த்து கதையை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு.
அதில் பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்திருப்பது காட்சியின் உச்சக்கட்டம்.
படத்தில் இதுபோன்ற காட்சிகள் எண்ணில் அடங்காமல் இடம்பெற்றுள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் மிஷ்கின் மின்னலென சுழல்கிறார்.
வழக்கு எண் 18/9 படத்திற்கு பின்பு ஸ்ரீ நடிக்கும் படம் இது. அப்படத்தில் இருந்து இதில் ஒரு மாறுபட்ட நடிகராக தெரிகிறார்.
இந்த படத்தின் விறுவிறுப்பை சுமக்கிற பொறுப்பு இவருக்கு. அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
இசைஞானியின் பின்னணி இசை தென்றல் போல் மனதை தொடுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய பின்னணி இசைதான்.
இதற்கு மிஷ்கின் டைட்டிலிலேயே முன்னணி இசை என்று இசைஞானிக்கு கௌரவம் சேர்க்கிறார்.
பாலாஜி வி ரங்காவின் ஒளிப்பதிவு மிக நுணுக்கமான உணர்ச்சிகளைக்கூட அவசரமில்லாமல் நிறுத்தி, நிதானமாக உள்வாங்குகிறது. இவருடைய கமெரா வியப்பை மட்டுமே அளிக்கிறது.
தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக கோடிகளை சம்பாதிக்க மிஷ்கின் தவறியிருந்தாலும், அவ்வபோது வழி தவறி பயணிக்கும் தமிழ் சினிமாவை சரியான பாதையில் பயணிக்க வைக்க தவறியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் காத்திருந்த ரசிகர்களுக்கு த்ரில்லர் வேட்டை.
நடிகர்: ஸ்ரீ, மிஷ்கின், ஆதித்யா
நடிகை: நீலிமா ராணி
இயக்குனர்: மிஷ்கின்
இசை: இளையராஜா
ஓளிப்பதிவு: பாலாஜி வி ரங்கா
நன்றி விடுப்பு


வெள்ளைவேன் கதைகள் விரைவில் வெளியாகும்


திரைப்­பட வர­லாற்றில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யதன் மூலம் பலத்த விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வரும் பிர­பல இந்­திய திரைப்­படத் தயா­ரிப்­பாளர் லீனா மணி­மே­க­லை­யினால், மக்கள் இது­வ­ரையில் என்­றுமே பார்த்­தி­ருக்­காத வகையில் இலங்­கையில் ஆட்கள் பல­வந்­த­மான முறையில் காணாமற் போகும் சம்­ப­வங்­களை தத்­ரூ­ப­மாக சித்­தி­ரிக்கும் வகை­யிலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள வெள்ளை வான் கதைகள் எனும் தலைப்­பி­லான ஆவணத் திரைப்­ப­ட­மொன்று சர்­வ­தேச ரீதியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.
ஏழு கதா­பாத்­தி­ரங்­களை உள்­ள­டக்­கிய இரண்டு மணி நேர ஆவ­ணத்­தி­ரைப்­படம் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான இலங்­கையில் அவர்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்கள் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டாத வகையில் காணாமற் போயி­ருந்த அந்தக் கொடூர சம்­ப­வங்­களை தத்­ரூ­ப­மாக சித்­த­ிரித்துக் காட்­டு­கின்­றது. இது குறித்து எக்ஸ்­பிரஸ் செய்திச் சேவை தகவல் தரு­கையில், இந்தத் திரைப்­ப­டத்தில் தோன்றும் பாத்­தி­ரங்கள் நீதிக்­காக தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரும் போராட்­டத்தின் அங்­க­மா­கவே காணாமற் போனோரைக் கண்டு கொள்­வ­தான முழு­மை­யான கடி­த­ரி­ச­ன­மொன்­றையும் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அளிக்­க­வுள்­ளன.
தற்­போது பெரும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளான நிலையில் கொழும்பில் இம் மாத நடுப்­ப­கு­தியில் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாடு நடை­பெ­ற­வுள்ள அதே தருணத்திலேயே இந்த ஆவணத் திரைப்­படம் உல­க­ளா­விய ரீதியில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வுள்­ளது.
இது குறித்து திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்கள் தெரி­விக்­கையில், இத்­தி­ரைப்­ப­டத்தில் சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்­களைச் சேர்ந்த காணாமற் போயி­ருந்­தோரின் குடும்­பங்­களின் கண்ணீர் வாழ்க்கை சித்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது என குறிப்­பிட்டார். பல­வந்­த­மான முறையில் காணாமற் போகும் சம்­ப­வங்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் முக­மாக யாழ்ப்­பா­ணத்­திலும் கொழும்­பிலும் அண்­மையில் பல­வந்­த­மான முறையில் காணாமற் போனோர் குறித்த சர்வதேச தினத்தன்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்த போதும் நடத்தப்பட்டிருந்த பேரணிகள் இந்த ஆவணத்திரைப்படத்தில் மையப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.
நன்றி வீரகேசரி