அண்ணாதுரை
இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும்
சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால்
மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான்.
அப்படியாக விஜய்
ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன
சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா...
கதைக்களம்
படத்தில்
அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம்.
அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து
பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக
பின்னணி இருக்கிறது.
தம்பி விஜய் பள்ளிக்கூடத்தில் வாத்தியார். உடனே
சைத்தான் படத்தை நினைத்து விடாதீர்கள். இவர் வேறு துறையில் வாத்தியார்.
இவருக்கு ஒரு காதல் பின்னணி. தியானாவுடன் போகிற போக்கில் வந்த காதல் தான்.
போலிஸ்
பெண் ஒருவர் காம வக்ர புத்தி கொண்ட கயவர்கள் இடத்தில் மாட்டிக்கொள்கிறார்.
அவர்களிடம் இருந்து அப்பெண்ணை காப்பாற்றி வீடு சேர்க்கிறார். விஜய்
ஆண்டனியின் அப்பா ஊரில் வியாபாரிகள் நல சங்க தலைவர்.
தன் நண்பன் காளி வெங்கட்க்காக கடன் வாங்கி கொடுத்து உதவி செய்ய போய் கந்து வட்டி கும்பலிடம் சிக்குகிறார். ஆனால் அந்த கும்பல் வேறு விதத்தில் காய் நகர்த்துகிறது. எதிர்பராத விதமாக அண்ணா மீது கொலை பழி விழுகிறது.
இதற்கிடையே
குடும்பத்திற்குள் சிக்கல், போலிஸ் வலை வீச்சு, எதிர்பாராத சோகங்கள்,
தம்பியின் திருமணம் என எல்லாம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அண்ணன் விஜய்
என்ன ஆனார், அவரின் குடும்பம் என்ன ஆனது. அண்ணாதுரை பித்தன் போல் இருப்பதன்
பின்னணி என்ன என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய்
ஆண்டனியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என்ற
நம்பிக்கை சினிமாவில் உள்ளது. கதையின் தாக்கம் நாட்கள் நகர்ந்தாலும்
நிற்கும் என சொல்லலாம். அப்படியாக அவரின் பிச்சைக்காரன் இடம் பிடித்தது.
இந்த அண்ணாதுரை அரசியல் படமாக இருக்கும் என செவி வழி செய்தியாக
சொல்லப்பட்டது.
ஆனால் இப்படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்
வைத்திருக்கிறார். அவரின் நடிப்பு எப்போது எதார்த்தம் என்பதை இப்படமும்
சொல்லியிருக்கிறது. படத்தில் நடிகர் காளி வெங்கட் உடன் இயல்பான காமெடி.
கதைக்குள் தான் காமெடி என்ற லாஜிக்கை சரியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அண்ணன் விஜய்யின் ஆண்டனி மீது ஜீவல் மேரியின் காதல் காளி வெங்கட்க்கு ஷாக். ஏன் என்பதை படத்தில் பாருங்கள். ஓகே.
சில இடங்களில் தானாக சிரிப்பு வந்து விடும். தம்பியாகவும்
அண்ணாகவும் இவர் டூயல் ரோலில் காண்பித்ததில் கூர்மையாக கவனித்தால் தான்
வித்தியாசம் புரியும் என சொல்லுமளவுக்கு நடித்திருக்கிறார்.
விஜய்
ஆண்டனியின் படத்தில் வரும் ஹிரோயின்கள் எங்கிருந்தாவது வருவார்கள் என்பது
போல இங்கே வந்திருக்கும் தியானா தன்னுடைய ரோலை சரியாக அவருக்கு
ஈடுகொடுத்திருக்கிறார்.
படத்தில் ஸ்டோரிக்கேற்ற பிஜிஎம். ஜி.எஸ்.டி
டூயட் பாடல் என சில விசயங்கள் நினைவில் நிற்கும். முன் பாதி மெதுவாக
நகர்ந்தாலும் இரண்டாம் பாதி ஜூட் ஆகிறது.
கிளாப்ஸ்
விஜய் ஆண்டனியின் ரியாக்ஷன் இரண்டு ரோலிலும் குட். நூலிழையில் தான் வித்தியாசம்.
கதையை தேர்வு செய்த விதம் ஓகே. அவருக்கான படம் இது என நினைவூட்டுகிறார்.
இயக்குனர்கள் காட்சிகளை கனெக்ட் செய்தவிதம் ஓகே. ட்விஸ்ட் ரிவீல் ஒர்க்கவுட் செட்டானது.
பல்பஸ்
அண்ணன் விஜய்யை காண்பித்திருக்கும் போது திடீரென தம்பிக்கு இண்ட்ரோ கொடுப்பது மிஸ் மேட்சிங்.
முதல் பாதி மென்மையாக போய் மெதுவாக இண்டர்மிஷன் கொடுப்பது சம்திங் டிஃப்ரண்ட்.
படத்தை இன்னும் கொஞ்சம் கிரிஷ்ப் ஆக்கியிருக்கலாம். பாடல்கள், காமெடி என கூடுதல் கவனம் இல்லை.
மொத்தத்தில் அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.