மரணஅறிவித்தல்

.
                                                                                   
                                  திரு.அப்பாத்துரை மகாதேவன்     
   



                                                             
                                                                     
                                                                                மறைவு : 16.07.2012

யாழ்ப்பாணம் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும்,சிட்னிஅவுஸ்திரேலியாவைவசிப்பிடமாகவும் கொண்டஓய்வுபெற்றகணக்காளர் திரு.அப்பாத்துரைமகாதேவன் அவர்கள் 16.07.2012 திங்கட்கிழமைசிட்னியில் காலமானார்.

இவர் அமரர்களானநாகமுத்து அப்பாத்துரை, சரஸ்வதி தம்பதியினரின் கனிஸ்ட புத்திரனும்,அமரர்களான குணநாயகம் சரஸ்வதி தம்பதியினரின் மூத்தமருமகனும்,திருமதி. குணலக்சுமியின் அன்புக் கணவரும்,பவானி,பகீரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரூபன்அல்பிரட்,சுகந்திஆகியோரின் அன்புமாமனாரும்,நிஷானி,தக்ஷா,நிதுஷா,நோவா,கசியாஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,திருமதி.சீதாதேவிவைத்திலிங்கம் (சிட்னி),காலஞ்சென்றமகேஸ்வரன் (மலேசியா),திரு.சர்வானந்தன் (மெல்பேர்ண்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றஉயர் நீதிமன்றநீதிபதிவைத்திலிங்கம்,திருமதிதனலட்சுமிமகேஸ்வரன்,திருமதி. ரோகினிசர்வானந்தன்,திருமதிகுணபாக்கியம் கருணாலேயன்,திருமதிகுணதேவிபவேந்திரநாதன்,திரு.குணசீலன் ஆகியோரின் அன்புமைத்துனரும்,திரு.கருணாலேயன்,திரு.பவேந்திரநாதன் ஆகியோரின் சகலனும்,திருமதி.செல்விகுணசீலன் அவர்களின் உடன்பிறவாசகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 13 Angas St, Meadowbank  இல் 18ந் திகதிபுதன் கிழமைமாலை 6 மணிமுதல் 8 மணிவரைவைக்கப்படும். ஈமைக்கிரிகைகள் 19 ந் திகதி, 13 Angas St, Meadowbank  இல்  12.30முதல் 2.30 வரை இடம்பெற்றுதகனத்துக்காக 3 மணிக்கு  Manolia Chapel, Macquarie Park ( Cnr of Plassey and Delhi rds)  க்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலைஉற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 02 9836 0512



மரணஅறிவித்தல்

                                                    .                                                       
                                                                                          
திரு.கந்தசாமி யோகநாதன்


                                                                                            மறைவு : 16.07.2012








அச்சுவேலியை பிறப்பிடமாகவும் ஸ்ரத்பீல்டை வசிப்பிடமாகவும் கொண்ட வழக்கறிஞரும் சட்டவல்லுனரும்   இளைப்பாறிய Registrar and Master of the High Court of Botswana திரு.கந்தசாமி யோகநாதன் காலமானார்.


இவர் காலம் சென்ற கந்தசாமி கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்ற சிற்றம்பலம் அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், இந்திராதேவியின் அன்புக்கணவரும் காலம்சென்ற ராகுலன், யசோதரா, ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜனகன், நிவாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெய்ஷனின் அன்பு பாட்டனாரும், காலம் சென்ற கதிர்காமநாதன், புனிதவதி, கமலநாதன், தேவகி ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்வநாயகம், செலீன், அழகசுந்தரம் சரோஜினி, காலம்சென்ற பத்மநாதன், கீதாஞ்சனா, நிர்மலா, ராதா, லீலா காலம்சென்ற மகேந்திரன், மகேந்திராணி ஆகியோரின் மைத்துணரும் ஆவார்


அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 21ம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை Gregory & Carr Funeral Directors, 100 Concord Road, North Strathfield.   இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 22ம் திகதி ஞாயிற்றக்கிழமை இறுதிக் கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் 8 மணிக்கும் தகனக்கிரிகைகள் 10.30 மணிக்கு  Macquarie Park Cemetery and Crematorium, Corner Delhi and Plassey Roads, North Ryde. இல் இடம் பெறும்.


இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு ராகவன் / யசி :  9742 3217

பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. (கவிதை)


.


யிற்றில் யாரோ
கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும்
அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும்
வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும்
எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே
சகிக்க ஒப்பாத உணர்வு மேவும்
எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின்
கால்வீங்கும்
நீட்டினால் மடக்கினால் நின்றால்
அமர்ந்தாலும் வலிக்கும்
இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும்
அயர்ந்து அயர்ந்து கண்கள் மூடிப் போக
ஒரு மயக்க நிலை உடம்பெல்லாம் பரவி
கண்கள் சிலநேரம் சொருகி நிற்கும்
அதையும் தாங்கமறுப்பதாய் காதில் விழும் வசவுகளை
இன்னொரு வலியாக பெண்மை பொருத்தேக் கொள்ளும்
பின், மாதம் நெருங்க நெருங்க
முதுகுவலி முறித்துயெடுக்கும்,
நாட்கள் நெருங்க நெருங்க
அடிவயிறு பிய்ந்ததுபோல் வலிக்கும்,
நேரம் நெருங்கிவிடுகையில் -
உயிரோடு பச்சைசதை கிழியும்,
எலும்புகள் உடைந்ததுபோல் வலித்து வழிவிட நீங்கும்
உயிர்வழி அகற்றி இன்னொரு உயிர் ஜனிக்கும்;
கண்களின் வெளிச்சத்தை
யாரோ பிடுங்கிக் கொண்டதுபோல்


எந்திர மாலை 2012 ஒரு பார்வை -நாகேஸ்வரன்


.

மேற்படி நிகழ்வு தமிழ் பொறியியலாளர் அமைப்பினால்8 ஜூலை 2012 அன்று சில்வவாட்டர்(Silverwater) இல் அமைத்துள்ள Bhai centre இல் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வந்திருந்த பொறியியலாளர் மாணிக்கவாசகரையும் அவரது துணைவியாரையும் ஸ்ரீதரன் மங்கள விளக்கேற்ற அழைக்கவும், இந்த அமைப்பை உருவாக்குவதற்கு முன்னோடியாக இருந்த அதன் தலைவர் தெய்வேந்திரனையும் அவரது துணைவியாரையும் கார்த்திகா நாகேஸ்வரன் அழைக்கவும், இந்நிகழ்வு 5:33 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமாகியது.


கம்பன் விழா 2012 - 21.07.12

.




வீழ விடுவமோ நாம்?

நீர் கண்டு பல நாட்களாகிப்போன
நிலம் போல நின்றார்கள் சோதரர்கள்.
யார் கண்டு அவர் புண்ணை ஆற்ற வந்தார்?
எதைக்கொண்டு அவர் நெஞ்சச்சூடணைப்பீர்?
ஊர் கண்டு ஒதுங்கித்தான் போனபோதும்
உலகத்தின் ஒளி இல்லாத் துயரின் போதும்
வேர்செத்த மரம்போல வீழும் அவர்கள்
விம்மியழும் உயிரோசை கேட்குதம்மா.

நோயுற்ற உடல் அழுகி சீழும் வீழ
நுரைதள்ளித் தெருவோரம் கிடந்து வாழும்
தேய்வுற்ற சோதரர்கள் கண்ணீர் எல்லாம்
தேகத்தைக் கண்டல்ல! ஒதுங்கிச்செல்லும்
ஓய்வற்ற மானிடர்காள்! நீங்கள் தள்ளி
ஒதுக்கிட்ட நிலை தந்த கண்ணீரன்றோ!
சாய்வுற்றுக்கிடக்கின்ற அவர்கள்பாடல்
சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவிலம்மா!

யாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்பிறப்பு.


.
யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும். 

ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் உள்ளனர். இந்த அளவுக்கு ஆடிமாதத்தின் சிறப்பு பண்டைய யாழ்ப்பாணத்து மூத்த குடியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சமும், பெருமைப்படவேண்டிய அம்சமும் என்னவென்றால், பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டுவருவதே ஆகும்.
தமிழ்நாட்டு தமிழர்கள் கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பெரும்பாலும் அம்பாள் கோவில்களில் கூழ் ஊற்றல் என்ற சடங்கினை செய்துவருகின்றனர் எனினும் யாழ்ப்பாண மக்களைப்போல தமிழில் ஆடிமாதம் முதலாம் நாளில் தமக்கே உரிய வகையில் அந்த நாள் மட்டும் சமைக்கும் இனிப்பு கூழ்பற்றி அவர்கள் அறியமாட்டார்கள்.






 ரி பண்டைய யாழ்ப்பாணத்து ஆதிக்குடியினர் ஏன் ஒரு மாதத்தின் தொடக்க நாளினை இப்படி கொண்டாடுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றதுதான். ஆனால் எந்த சமய சம்பிரதாய நூல்களிலோ அல்லது மத அனுஸ்டானங்களிலோ இந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் தரப்படவில்லை. அப்படி இருக்க யாழ்ப்பாணத்து மக்கள் ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்தே இந்த ஆடிமாத முதல் தேதியில் ஆடிப்பிறப்பினை கொண்டாட முற்பட்டுள்ளனர்.

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!- சுவனப்பிரியன்


Bookmark and Share

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!
பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.

RAJI SILKS

.

Eega - நான் ஈ





ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி.

செய்திகள்


ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் கைது
கொழும்பு, ஜூலை 15: ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 101 தமிழர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை கடற்கரையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 101 தமிழர்களும், 8 சிங்களர்களும் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்கள் அனைவரும் 25 கடல் மைல் தூரத்தில் கைது செய்யப்பட்டனர் என்று இலங்கை படற்படை செய்தித் தொடர்பாளர் கோசாலா வர்ணகுலசூரியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோன்று இலங்கையின் மேற்கு கடற்கரைப் பகுதியான சிலாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட இருந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ""கடந்த மே மாதத்திலிருந்து இதுபோன்று தப்பிச் செல்ல முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு 43 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா ஒப்பந்தம்

இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும் – கருணாகரன்

.

ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார்.
‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார்.
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார்.
அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும் கருணாகரனிடம் ஈழத்தின் கடந்த நாற்பது ஆண்டுகால சமூக, அரசியல், இலக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த உரையாடலை மேற்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: ஈழம் கடந்த பல தசாப்தங்களாக கொந்தளிப்பான சமூக அரசியற் களங்களைக் கொண்டிருக்கிறது. சாதிய முறைமைக்கு எதிரான போராட்டங்கள், இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் என நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் காலங்களில் உங்களின் அனுபவங்கள் அல்லது ஈடுபாடுகள் என்னவாக இருந்தன?
கருணாகரன்: தமிழர்களிடத்தில்தான் சாதிய ஒடுக்குமுறை மிகத் தீவிரமாக உள்ளது. அதிலும் யாழ்ப்பாணவாசிகளிடம். ஆகவே இந்தக் கேள்வி வடக்குத் தமிழர்களை – யாழ்ப்பாணத் தமிழர்களை மையப்படுத்துகிறது. எனவே, முதலில் இதைக் குறித்துப் பேசலாம்.
தமிழர்களில் ஒரு தரப்பினர் சாதிய ஒடுக்குமுறைகளையும் இன ஒடுக்குமுறையையும் கூட்டாகச் சந்தித்துள்ளனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்கள். அல்லது தலித்துகள். அல்லது யாழ்ப்பாணத்து உயர்சாதியினரால் ஒதுக்கப்பட்ட ‘எளியன் சாதிகள்’ என்போர். அல்லது டானியல் போன்றவர்கள் சொல்லுகிற மாதிரிப் ‘பஞ்சமர்கள்’.

ஆடிப்பிறப்பு ஒன்றுகூடல்

.

பில்லா -2





ஹிட்டான படத்தின் அடுத்த பாகமாய் ஆங்கிலத்தில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வெளி வந்திருக்கிறது. முதல் முறையாய் தமிழில் ஏன் இந்திய படங்களில் ப்ரீக்யூவல் எனப்படும் முதல் பாகத்திற்கு முந்தைய கதை என்று எடுக்கப்பட்ட படம் பில்லா 2.



எடுத்த எடுப்பிலேயே அட்ரிலினை ஏற்றும் படியான ஒர் ஆக்‌ஷன் காட்சியில் தொடங்குகிறது கதை. அட.. என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு டைட்டிலில் காட்டப்படும் கருப்பு வெள்ளை படங்களிலேயே அஜித்தின் சாரி பில்லா .. டேவிட் பில்லாவின் ப்ளாஷ்பேக்கை சொல்லி விடுகிறார்கள். இலங்கையில் அகதியாய் வந்து இறங்குபவர் எப்படி பெரிய டான் ஆனார் என்பது தான் கதை. அதை நீட்டி முழக்கி, படு ஸ்டைலாய் இரண்டரை மணி நேரம் படம் பார்க்கிற ஆடியன்ஸை தவிர மற்ற எல்லாரையும் சுட்டுச் சுட்டே சொல்லியிருக்கிறார்கள்.



படத்தின் மேக்கிங், மற்றும் ப்ரொடக்‌ஷன் வேல்யூவெல்லாம் அசத்தல் என்றால் அவ்வளவு அசத்தல். நிஜமாகவே படத்தின் ஹீரோ யார் என்றால் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும்தான். தான். ரெட் எபிக் கேமராவில் படு துல்லியமான ஒளிப்பதிவு, கலர் டோன், ஹாலிவுட் பட லெவலுக்கான ஷாட்டுகள் என்று பிரம்மிக்க செய்யும் ஒளிப்பதிவு. எடிட்டிங்கின் திறமை சண்டைக் காட்சிகளில் மிளிர்கிறது.

அஜித் வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். மற்றபடி நடிக்கவெல்லாம் முயற்சியே செய்யவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை என்பதால் அவரைக் குறை சொல்ல முடியாது. படம் நெடுக படம் பார்க்கிற ஆடியன்ஸைத் தவிர சுமார் நூறு பேரையாவது மிஷின் கன், சாதாரண் பிஸ்டல், கலானிஷ்கோவ், ஏகே 47 என்று வகை வகையான துப்பாக்கிகளிலும், தக்குணூயூண்டு கத்தியில் சதக் சதக்கென குத்தியும் சாய்க்கிறார். பல இடங்களில் ரசிகர்கள் அவர்கள் உடம்பில் பட்ட கத்திக் குத்தாகவே ஃபீல் செய்து கத்தியது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு என்று நினைத்தால் அது அவதானிக்கிறவர்களின் தவறு.



புருனோ அப்துல்லா, ஓமனக்குட்டன் என்று ரெண்டு ஹீரோயின்கள். பிகினியில் ஒருத்தி, டைட் சட்டையில் ஒருத்தி என்று ஆளாளுக்கு கவர்ச்சியாய் வந்தாலும் ஒண்ணும் ஏறத்தான் மாட்டேனென்கிறது. நடுவில் விபசாரவிடுதியில் ஆடும் பெண்கள் கொஞ்சம் கிளுகிளூப்பை ஏற்றுகிறார்கள். வில்லன் என்று ரெண்டு பேர் கல் போன்ற இறுகிய முகத்துடன் எப்பப்பார் புட் மசாஜ் செய்து கொண்டு பிஸினெஸ் டீல், என்று பேசுகிறார். இன்னொருவர் பொலிவியாவில் சப்டைட்டிலிலேயே பேசுகிறார். க்ளைமாக்ஸில் சாகிறார் இதைவிட வேறு ஏதும் சிறப்பான வேலையை செய்ததாய் ஏதும் தெரியவில்லை.


வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள். நிறைய இடங்களில் வெகு ஷார்பான வசனங்கள் மிக குறைந்த வரிகளில். அதுவும் அஜித் மாதிரி ஹீரோ பேசும் போது நிறைய அழுத்தம் கிடைக்கிறது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது. இசை யுவன் சங்கர் ராஜாவாம். பின்னணியிசையில் ஓகே ஆனால் பாடல்கள் ஏதும் நினைவில் நிற்கவேயில்லை.



அஜித்தின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. சரி பில்லா என்ற ஒருவன் எப்படி உருவானான் என்பதுதான் கதை என்றாகிவிட்டது. பிறகு அதற்கான கதை என்ற வஸ்துவை கொஞ்சமாவது யோசித்திருக்கலாம். அல்லது ஒரு நல்ல லைனை வைத்து நல்ல திரைக்கதை அமைத்திருக்கலாம். எந்த ஒரு கேரக்டருக்கும் எந்த ஒரு விளக்கமும் இல்லாது தடாலடியாய் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆரம்பக் காட்சிகள் எல்லாம் அப்படியே நாயகன் படத்தின் ரீமேக். ஒரு சாதாரண அகதி ஏன் கடத்தல் தொழிலில் இறங்குகிறான். ஏன் அவனுக்குள் காதல் போன்ற இத்யாதிகள் வருவதில்லை. எதனால் அவன் டான் ஆகிறான் எனபதற்கான காரண காரியம் ஏதுமில்லாமல் ஏதோ லாரியில் டைமண்ட் கடத்துகிறார்கள் என்று பெரிய சைஸ் கல்கண்டு போல ஒன்றை காட்டுகிறார்கள். உலகமெல்லாம் பறக்கிறார்கள். சென்னைக்கும், கோவாவிற்கும் துரத்துகிறார்கள். ஆளாளுக்கு சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு ஹீரோயின்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் ஓமனக்குட்டன் நான் திரும்ப வர முடியாத இடத்துக்கு போறேன் என்று சொல்வதெல்லாம் படு அபத்தம். முதல்பாதியைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ரெண்டாம் பாதி வந்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் யார் தான் பில்லாவுக்கு வில்லன் என்றில்லாமல் இலக்கில்லாமல் ஓடுகிறது திரைக்கதை. சீக்கிரம் சுட்டு முடியுங்கப்பா என்று புலம்ப வைத்துவிட்டார் சக்ரி டோலட்டி.

ஸ்டைலான மேக்கிங் மட்டும் படத்தை காப்பாற்றும் என்று நம்பியிருக்கிறார்கள். ஓவர் ஸ்டைல் உடம்புக்கு ஆகாது என்பதை இப்போது புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஊரெல்லாம் டிக்கெட் இலலை என்று சொன்னவர்களுக்கு.. எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு நேரில் சென்று வாங்கினேன். டிக்கெட் விலை 100. நாற்பது சீட்டுகள் விற்பனையாகாம்ல் இருந்தது.
நன்றி
கேபிள்சங்கர் (www.cablesankaronline.com)