நிலத்தினில் தீபாவளி நிறைவினைத் தரட்டும் !
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடாத்திய இனிய இலக்கிய சந்திப்பு
“இது இரண்டு நிமிடக் காணொளிகளையே பார்க்கப் பொறுமை இல்லாத உலகம்!
இந்த நிலையில் யார் தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு வரப் போகின்றார்கள்?”
இது நாம்
அடிக்கடி கேட்டுப் பழகிப் போன வாசகம்.
இந்த நிலையை
மாற்றிக் காட்டி இருக்கின்றார்கள் சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்
கழகத்தினர்.
இவர்கள் சென்ற பன்னிரண்டாண்டுகளாகத் தொடர்ந்து இனிய இலக்கிய சந்திப்பு என்ற தொடரில் மிகச் சிறந்த பேச்சாளர்களைத் தமிழகத்தில் இருந்து வரவழைத்து சிந்தைக்கினிய இலக்கியச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.
இத் தொடரில்
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு மிகச் சிறந்த இலக்கிய விழாவை நடாத்திப் பெரும் வெற்றி
கண்டிருக்கின்றார்கள்.
நாம் விழா
நடந்த துர்க்கா கோயில் மண்டபத்துக்குப் போன போது விழா தொடங்க முன்னரே மக்கள்
திரளாக வந்து அரங்கத்தை நிறைத்திருந்த அதிசயத்தைக் கண்டு வியந்து போனோம். பேச்சாளர்கள் மெல்போர்னில் இருந்து அன்று தான் வந்தமையால்
ஏற்பட்ட தாமதத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
விழாவுக்கு
வந்திருந்தோரை இரத்தினச் சுருக்கமாகக் கழகத்தின் தலைவர் திரு. கர்ணன் சிதம்பர
பாரதி அவர்கள் வரவேற்றுப் பேசினார். அதைத்
தொடர்ந்து கழகத்தின் செயலாளர் திரு அனகன் பாபு அவர்கள் கழகத்தின் செயற்பாடுகளை
விள்க்கிக் கூறினார். எதிர்காலத்தில்
கழகத்துக்கு ஓர் இடத்தைத் தேட வேண்டும் என்றும் அதன் முதற் கட்டமாக ஒரு வீட்டை
வாங்கத் திட்டமிட்டு வருவதாகவும் சொன்னார்.
$10,000 தருபவர்களின் பெயர் வீட்டில் பொறிக்கப்படும் என்றும் சொன்னார். சிந்தித்துப் பார்த்ததில் இது ஒரு மிக நல்ல
திட்டமாகவே பட்டது.
அடுத்து
சிட்னி கவிஞர் கலைமணி அவர்கள் ஒரு வரவேற்புக் கவிதையைப் படித்தார்கள். அது ஓர் உருவகக் கவிதையாகவும் அமைந்தது
சிறப்பாக இருந்தாலும் சற்று நீண்டு விட்டது!
கவிதை இல்லாத இலக்கியமா!
தமிழகத்தில்
இருந்து மூன்று பேச்சாளர்கள் அன்று பேச வந்திருந்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருமே சொற்பொழிவாற்றல் கலையில்
தமக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து மக்கள் மனதிலே இடம்பிடித்தவர்கள்.
இந்த மூன்று
பேருடைய பேச்சுகளுக்கும் இலக்கியத்தில் உணர்ச்சி, இலக்கியத்தில் அறிவாற்றல்,
இலக்கியத்தில் மேலாண்மை என்று மிகச் சாதுரியமாகத் தலைப்புக் கொடுத்து மக்களின்
சிந்தனையைத் தூண்டும் வகையில் விழாவைக் கழகத்தினர் அமைத்திருந்தமை
பாராட்டுக்குரியது.
இலக்கியத்தில் உணர்ச்சி என்ற தலைப்பிலே மொழியரசி பர்வீன் சுல்தானா அவர்கள் அற்புதமாகப் பேசினார்கள்.
யாதும் யாவரும்.... திரைப்பார்வை – கானா பிரபா
நம் தமிழ் சமூகத்தில் காலாகாலமாகப் பேணப்பட்ட வாழ்வியலின்
மீறல்களை நாவல் இலக்கியம் அளவுக்குத் திரை இலக்கியம் அதிகம் அரவணைக்கவில்லை. மாறாக மலையாளத் திரைச் சித்திரங்களில் இவ்விதமான கட்டுடைப்புகளை சீரியஸான படைப்புகளாகவோ அல்லது நகைச்சுவை கூட்டிக் கொடுத்தவையாகவோ வந்திருக்கின்றன.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 84 கலை, இலக்கியம் உருவாக்கும் உறவுப்பாலம் ! இந்திய ஆளுமைகளிடம் கற்றதும் பெற்றதும் ! ! முருகபூபதி
எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் கடந்த 83 ஆவது அங்கத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், இலங்கையிலிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பற்றியெல்லாம் நான் முன்னர் எழுதியிருந்த பதிவுகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
அயல்நாடான இந்தியாவில் வாழ்ந்தவர்கள் – மறைந்தவர்கள் - தற்போதும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுமான பல ஆளுமைகள்
பற்றியும் எழுதி வந்திருக்கின்றேன்.
அவர்களில் மகாத்மா காந்தி முதல்
கடந்த ஜூன் மாதம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவில் நான் சந்தித்த
எழுத்தாளர் பாவண்ணன் வரையில் பல பதிவுகளை எழுதியிருக்கின்றேன்.
அப்பா வழி உறவில் எனது தாத்தாவான தமிழ் நாட்டின் மூத்த
படைப்பாளி – பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சிதம்பர ரகுநாதனை, அவர் 1956 ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது முதல் முதலில் பார்த்திருக்கின்றேன். அப்போது எனக்கு ஐந்து வயது.
பின்னாளில் அவர் எனது இலக்கிய
நட்பு வட்டத்திலும் இணைந்தார். சமகாலத்தில்
அவரது நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கிறது. எனது பறவைகள் ( 2002 ) நாவலை ரகுநாதனுக்கே சமர்ப்பித்திருக்கின்றேன்.
ரகுநாதன் , மீண்டும் 1983 இல் பாரதி நூற்றாண்டு காலத்தில்
இலங்கைக்கு வருகைதந்தவேளையில், அவருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்.
அவருடனான நினைவுகளை விரிவாகவும்
எழுதியிருக்கின்றேன். தமிழ்நாடு அம்ருதா இதழிலும் அக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.
அவரது அண்ணனும் பாளையங்கோட்டை முன்னாள் ஆட்சித் தலைவருமான தொ.மு. பாஸ்கரத்
தொண்டமான் அவர்களை 1960 ஆம்
ஆண்டில் முதல் தடவையாக நான் சந்தித்தபோது எனக்கு 11 வயது.
எங்கள் நீர்கொழும்பூர் இல்லத்திற்கு அவரை அழைத்து விருந்துபசாரம் செய்தோம்.
இவர்கள் இருவரும் உடன்பிறந்த அண்ணன்
தம்பிகளாக இருந்தபோதிலும், ஆளுக்கு ஆள்
கருத்து ரீதியாக முரண்பட்டு ஒருவரோடு ஒருவர் நீண்டகாலம் பேசாமலும் இருந்திருக்கின்றனர்.
பாஸ்கரன் தனது பெயருக்குப்பின்னால் தொண்டமான் என்ற
குலப்பெயரை வைத்துக்கொண்டார். தமிழக
அரசின் உயர் பதவியையும் பெற்றார்.
காங்கிரஸ் ஆதரவாளர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி, இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார்
ஆகியோரின் ஆத்ம நண்பர்.
கங்கை முதல் வேங்கடம் வரையில் முதலான
நூல்களையும் இந்திய திருத்தலங்கள் பற்றியும் எழுதி வந்தவர்.
ஆனால், ரகுநாதன், அண்ணனின் எழுத்துக்கள் மற்றும் பணிகளிலிருந்து முற்றாக
வேறுபட்ட தளத்தில் இயங்கியவர்.
இடதுசாரி சித்தாத்தங்களில் மூழ்கியிருந்தவர். ரகுநாதனின் முதலிரவு என்ற நாவல் இந்திய அரசினால் தடைசெய்யப்பட்டது. ரகுநாதன் நடத்திய சாந்தி இலக்கிய இதழில்தான் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரின் ஆரம்ப கால படைப்புகள் வெளியாகின. புதுமைப்பித்தனின் ஆத்ம நண்பர். புதுமைப்பித்தனின் வாழ்க்கை சரிதமும் எழுதிய இலக்கிய விமர்சகர்.
கந்தசஷ்டி சிறப்புத் துதிகள்
படித்தோம் சொல்கின்றோம்: அருந்ததியின் ஆண்பால் உலகு நாவல் ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! முருகபூபதி
கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன்.
மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே
பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
குடும்ப வன்முறையினால்
(Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு
ஆணாதிக்கம் மாத்திரம் காரணமில்லை. பெண்களின் அறியாமையும் மிக முக்கிய காரணம்.
கனடாவிலிருந்து இலக்கிய
சகோதரி பார்வதி கந்தசாமி நடத்திய குடும்ப வன்முறை
தொடர்பான கருத்தரங்கிலிருந்தும், அருந்ததி
எழுதிய ஆண்பால் உலகு நாவலிலிருந்தும்
பெண்களின் அறியாமையை ஆண்களின் உலகம் எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தப்பித்துக்கொள்கிறது
என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அருந்ததியின் இயற்பெயர்
அருளானந்தராஜா இரத்தினம்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில்
ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்திருக்கும் இவர், அளவையியல் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கும் நாடகக்
கலைஞர், நாடக பிரதியாளர், இயக்குநர்.
1984 இல் பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்து சென்றபின்னரும்
தனது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருபவர். பிரான்ஸிலும் நாடகங்கள் எழுதி இயக்கி தயாரித்து
மேடையேற்றியவர். சமாதானத்தின் பகைவர்கள், இரண்டாவது பிறப்பு, கடல் முதலான கவிதைத் தொகுப்புகளை
வரவாக்கியிருக்கும் அருந்ததி, முகம் என்ற திரைப்படத்தையும் ( 1996 ) எழுதி இயக்கியிருப்பவர்.
ஆண்பால் உலகு அருந்ததியின்
முதல் நாவல். 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தினால்
வெளியாகியது.
இந்நாவல் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.
மனிதரில் மாணிக்கம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
பொதுவில் சிவாஜி நடிக்கும் படங்களில் இணை கதாநாயகர்களாக,
உப கதாபாத்திரங்களாக ஏவி, எம் ராஜன், முத்துராமன், சிவகுமார் போன்றோர் நடிப்பதுண்டு. ஆனால் ஏவி எம் ராஜன் ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் சிவாஜி இணை கதாநாயகனாக நடித்து ஒரு படம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அந்த படம் தான் மனிதரில் மாணிக்கம்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் பொன்னி என்ற பெண்ணை ஓர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதனை தொடர்ந்து இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. தன்னை கைது செய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரியின் குழந்தையை கடத்தி பொன்னியிடம் வருகிறான் பூபதி. குழந்தையோடு அவனை காணும் பொன்னி அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்து அவளுக்கு பிறந்த குழந்தை என்று சந்தேகிக்கிறாள். இதனால் அவன் மீது சந்தேகப் பட்டு ,அவனை ஏசி விரட்டி விடுகிறாள். அது மட்டுமன்றி அவளுக்கு சித்தப் பிரமையும் ஏற்பட்டு விடுகிறது.
அலெக்ஸ் பரந்தாமனின் `ஒரு பிடி அரிசி’ சிறுகதைத்தொகுப்பு - கே.எஸ்.சுதாகர்
ஒரு சிறுகதையானது நாம் வாழ்ந்த/வாழுகின்ற இடம், சுற்றுப்புறச்சூழல், நம் மீது ஆதிக்கும் செலுத்தும் சக்திகள் என்பவற்றைப் பொறுத்தே இருக்கும்.
எனது முதல் சிறுகதையான `ஈழநாடு’ பத்திரிகையில் வெளிவந்த (1983) `இனி ஒரு விதி செய்வோம்’ அப்படிப்பட்ட ஒன்றுதான். முதலாழி, தொழிலாளி, கண் தெரியாதவன்,
கால் ஊனமாகிப் போனவன், விசரி போன்ற பாத்திரங்கள் கொண்டு பின்னப்பட்டது. அதன் பின்னர்,
1995 ஆம் ஆண்டு வரையும் வெளிவந்த எனது படைப்புகள், இலங்கை என்ற வட்டத்திற்குள் சுற்றிச்
சுழன்று வந்து கொண்டிருந்தன. அப்புறம் புலம்பெயர்ந்து போன பின்னர், எல்லாமே மாறிப்
போய்விட்டன. நான் இலங்கையில் தொடர்ந்தும் இருந்திருந்தால், அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள்
எழுதிய `ஒரு பிடி அரிசி’ என்ற தொகுப்பில் உள்ள கதைகளைப் போலத்தான் தொடர்ந்தும் எழுதியிருப்பேன்.
அதற்குரிய சூழ்நிலை தான் அப்பொழுதும் / இப்பொழுதும் அங்கே நிலவுகின்றது. அப்படியான
ஒரு சமுதாயத்திற்குள் தான் நானும் அப்போழுது இருந்தேன்.
அலெக்ஸ் பரந்தாமனின் (இயற்பெயர் – இராசு தங்கவேல்) சிறுகதைத்
தொகுப்பைக் கையில் எடுத்ததும், என்னைக் கவர்ந்த முதல் அம்சம், அட்டைப்படமும் பின் அட்டைக் குறிப்பும் ஆகும். செளந்தர் அவர்கள் வரைந்த அட்டைப்படம், முதல் கதையை மாத்திரம் சொல்லவில்லை. முதலாழி/தொழிலாளியைப் பிரதிபலிக்கின்றது. ஏழையின் வயிற்றைப் படம் பிடிக்கின்றது. இன்னும் எத்தனை எத்தனையோ சங்கதிகளைச் சொல்லாமல் சொல்கின்றது.
அலெக்ஸ் பரந்தாமன் தரும் பின் அட்டைக் குறிப்பு:
“எழுதுவது எனது தொழில் அல்ல! ஆயினும்,
எழுத்துக்களை, நான் மிகவும் நேசிக்கின்றேன். எழுத்தென் வயிற்றுக்கு சோறு தருவதில்லை.
ஆயினும் எழுதிக்கொண்டே இருக்க விரும்புகின்றேன்.”
இதுவே அன்று முதல் இன்றுவரை ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் நிலைமை ஆகும்.
தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. 1989 இற்கும் 2020 இற்கும் இடைப்பட்ட காலத்தில்
எழுதப்பட்டவை. பன்னிரண்டுமே வடிவத்தில் சிறியவை. எவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம்
எந்தவித சிக்கலுமில்லாதவை. ஆனால் மனதில் பாரத்தை இறைக்கி வைப்பவை. ஒன்றிரண்டு கதைகளைத்
தவிர, இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் அன்றாட வாழ்வைப்
பேசும் கதைகள்.
`உள்ளம்’ சஞ்சிகையில் வெளிவந்த `ஒரு பிடி அரிசி’ தொகுப்பின் பெயரும், தொகுப்பின் முதல் கதையும் ஆகும். ஆசிரியர்
எழுதிய முதல் கதையும் இதுவே. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான். அந்த
நிலை ஒரு ஏழைக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்? அதுதான் கதை. புதுக்குடியிருப்பின்
அழகான காட்சி வர்ணிப்பில், வரட்சி நிவாரண அரிசியைப்பெற அலைந்துழலும் மருதமுத்துக் கிழவரின்
கதை அது. `மினி வானில் பயணித்ததற்காக, மருதமுத்துக்
கிழவரிடம் கொஞ்ச அரிசியைப் பெற்றுக்கெண்டு மினிபஸ் நடத்துனர் போயிருக்கலாம். அல்லது
மனிதாபிமான ரீதியில் கிழவரை இறக்கிவிட்டுப் போயிருக்கலாம்’ என்ற ஆதங்கம் மனதில் வந்து போகின்றது. ஆனால் யதார்த்தம் அப்படியல்ல
என்பதே ஆசிரியரின் நிலைப்பாடு. நிஜத்தைச் சொல்லிச் செல்லும் கதை.
அன்றாடம் குடிப்பதற்காக தண்ணீர் பெற்றுக் கொள்ளும் அவலத்தைச் சொல்கின்றது `தண்ணீர்’ என்ற கதை. இந்தக் கதையில்கூட
மனிதாபிமானம் செத்துப்போய் விட்டது என்பதை பவானி பாத்திரம் மூலம் உணர்த்துகின்றார்
ஆசிரியர்.
`பசி ஒரு கொடுமை’ கதையில் பசியின் கொடுமை தாளாது நஞ்சூறிப்போன நிழல் மரவள்ளிக் கிழங்கைச் சாப்பிட்டு இறந்துபோகும் கொடுமையையும் ; `பேராசை’ கதையில் சீட்டுப் பிடிப்பதும், ஏமாற்றப்படுவதும், பின்னர் தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு தீர்வு காண்பதும் என நடைமுறையில் காணும் காட்சிகளை முன் வைக்கின்றார் ஆசிரியர்.
ஸ்கந்த சஷ்டி திருவிழா 2023 - ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023
ஸ்கந்த ஷஷ்டி விரதம் வருடத்திற்கு ஒரு முறை ஐப்பசி மாதத்தில் (அக்டோபர்-நவம்பர்) பிரகாசிக்கும் சந்திரனின் முதல் கட்டமான "பிரதமையில்" தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் என்ற அரக்கனை முருகப்பெருமான் வீழ்த்திய நாள். இறைவன் தனது தெய்வீக ஈட்டியான 'சக்தி வேல்' சூரபத்மன் மறைந்திருந்த வன்னி மரத்தின் மீது எறிந்தார். அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்... அது மயில் மற்றும் சேவல் என மாறியது... ஸ்கந்தனின் தீவிர பக்தர்கள். இந்த காவியமான ‘சூர-சம்ஹாரம்’ ஸ்கந்த சஷ்டி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நிகழ்ச்சி அட்டவணை:
10.00 AM : ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி (முருகன் / கார்த்திகேயா), ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வசேனா ஆகியோருக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் அர்ச்சனை.
பிற்பகல் 02.00 PM : ஸ்ரீ சிவ சுப்ரமணிய ஸ்வாமி (முருகன் / கார்த்திகேயா), ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வசேனா ஆகியோருக்கு திருக்கல்யாணம்.
இலங்கைச் செய்திகள்
பாகிஸ்தான் தூதுவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு; தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 16 வருடங்களின் பின் விடுதலை நீண்ட விசாரணையின் பின் நீதிபதி விடுவித்தார்
அரசியல் தீர்வு விடயத்தில் அவுஸ்திரேலியா உதவ வேண்டும் மத்தியஸ்தம் வகிக்கவும் இரா. சாணக்கியன் கோரிக்கை
சிவனொளிபாத யாத்திரை டிசம்பர் 26 முதல் ஆரம்பம் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்
பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவம் இராஜாங்க அமைச்சர் டயனாவின் விசாரணை அறிக்கை கையளிப்பு
சீனத் தூதுவர் நயினையில் வேட்டி அணிந்து வழிபாடு
சுவஸ்திகாவை யாழ். பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் - யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பாகிஸ்தான் தூதுவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு; தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 16 வருடங்களின் பின் விடுதலை நீண்ட விசாரணையின் பின் நீதிபதி விடுவித்தார்
கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அப்போதைய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத்தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகச் செய்திகள்
காசா மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் போர் குறித்து ஈரான் எச்சரிக்கை: மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரிப்பு
வடக்கு காசாவில் போர் உக்கிரம்: பல்லாயிரம் பலஸ்தீனர்கள் தெற்கை நோக்கி வெளியேற்றம் -தொடர்ந்தும் இடைவிடாது வான் தாக்குதல்
ஹமாஸ் கோட்டையான காசாவில் இஸ்ரேல் தரைவழி மோதல் - தொடர்ந்தும் வான் தாக்குதல்
சிறுவர்களின் மயானமாக மாறிவரும் காசா நகரம் ஐ.நா. செயலாளர் எச்சரிக்கையுடன் கவலை
காசா போருக்கு ஒரு மாதம் எட்டிய நிலையில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல் காசாவை அப்பாஸிடம் கொடுக்க பேச்சு
மத்திய கிழக்கு விரைந்தது அமெரிக்க அணு நீர்மூழ்கி
காசா மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் போர் குறித்து ஈரான் எச்சரிக்கை: மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேலின் காசா மீதான போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பு தவிர்க்க முடியாத வகையில் இந்த மோதலின் விரிவாக்கத்திற்கு காரணமாகும் என்று ஈரான் எச்சரித்திருப்பதோடு காசாவில் உள்ள மருத்துவமனைகள் அல்லது அதற்கு அருகில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல்
இலக்கியவெளி
நடத்தும்
இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 32
சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல்
நாள்: ஞாயிற்றுக்கிழமை 19-11-2023
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
ஒருங்கிணைப்பு: எழுத்தாளர் சிராஜ் மஷ்ஹூர்
உரையாளர்கள்:
பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்
கலாநிதி சு.குணேஸ்வரன்
விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்
திறனாய்வாளர் சி.ரமேஷ்
மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316