ஆனந்தம் பெருகிடுமே ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
கல்லுக்குள் உறைந்திருக்கும்
கலைநயத்தைப் பார்ப்பதற்கு
மெல்லவே உளிசென்று
வெட்டிவிடும் கல்லதனை
வேண்டாத பகுதிகளை
வெட்டியே எறிந்துவிடின்
வெளிப்படும் பகுதிதான்
வியப்பெமக்குத் தந்துவிடும் !
தாங்குகின்ற வேளையில்த்தான்
மேலான தன்மையங்கே
வெளிப்பட்டு வந்துநிற்கும்
கல்பட்ட வேதனையால்
கடவுளுரு காட்சிதரும்
கால்மிதிக்கும் கல்லுக்கு
வேதனைகள் புரியாது !
மனமென்னும் கல்தன்னை
மாற்றிவிட வேண்டுமென்று
தினமுமே பலவற்றை
செய்கின்றோம் வாழ்வெல்லாம்
ஆனாலும் அம்மனமோ
ஆகாத வழிசென்று
ஆணவத்தை அணைத்துவிட
ஆர்வம்கொண்டே நிற்கிறது !
அஞ்சலிக்குறிப்பு: மரணத்துள் வாழ்ந்து மறைந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் நினைவுகள் முருகபூபதி
-->
தமிழே மூச்சாக வாழ்ந்தவரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு
சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில் அவரைப்பார்த்தபோது,
அவரது பார்வை நிலைகுத்தியிருந்தது. அருகிலிருந்த அவரது அன்புத்துணைவியார் மருத்துவ
கலாநிதி நளாயினி, " அப்பா... யார் வந்திருக்கிறார்கள் தெரிகிறதா..?" எனக்கேட்கிறார்.
அவரது நீண்ட கால நண்பர் சட்டத்தரணி செல்வத்துரை
ரவீந்திரனும், படைப்பாளியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர்
பரமநாதனும் - நானும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால், தம்மை பார்க்க வந்திருப்பது யார் என்பது
அவருக்குத் தெரியுமா...? தெரியாதா...? என்பதும் எமக்குத்தெரியாது. அவர் கடந்த சில வருடங்களாகவே
மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பது மாத்திரமே எமக்குத்தெரியும்.
எமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்
தமிழ்ப்பற்றாளர், மருத்துவர் பொன். சத்தியநாதன் கடந்த சில வருடங்களாகவே நினைவு மறதி
உபாதையினால் பாதிக்கப்பட்டு, மரணத்துள் வாழ்ந்து - பராமரிப்பிலிருந்து கடந்த 15 ஆம்
திகதி வெள்ளியிரவு மரணவாழ்வுக்கும் விடைகொடுத்து மறைந்துவிட்டார்.
இலங்கையில வடபுலத்தில் கரவெட்டியில் 1948 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், தமது இளம் பராயத்திலேயே பகுத்தறிவுச்சிந்தனைவயப்பட்டவராக
தமது ஆசான்களுடனும் மதபீடத்தினருடனும் வாதம் செய்திருக்கும் முற்போக்காளர். மார்க்சீயப்
பற்றேதுமின்றியும் பெரியாரிஸம்
பேசாமலும் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் வாழ்ந்தவர்.
இலங்கையில் பாரதி - அங்கம் 34 முருகபூபதி
" வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும்
மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப்பதவி கொள்வார்."
பாரதியின் இந்தத்தாரக மந்திரத்துடன் 2000 ஆம் ஆண்டில் கண்டியிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஞானம் கலை, இலக்கிய மாத இதழ் தங்கு தடையின்றி
தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஒரு மருத்துவராவார்.
இலங்கையில் வடபுலத்தில் புன்னாலைக்கட்டுவனில் 1941 ஆம் பிறந்தவர்.
தந்தையோ ஆலயத்தில்
குரு. பூட்டனார் கணேசய்யர்
தொல்காப்பியத்திற்கு விளக்கவுரை எழுதிய
வித்துவ சிரோன்மணி. கதாப்பிரசங்கம்
புகழ் மணி அய்யர் சுவாமிநாதத்தம்பிரான்
தாய் மாமனார். கணேசய்யர்
பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் தமது ஈழத்து
இலக்கிய வளர்ச்சி நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிநாத தம்பிரான்தான் இலங்கையில்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவச்சிலைக்கு
மொடலாக இருந்தவர். இந்தப்பின்னணியிலிருந்து வருகைதந்த ஞானசேகரன்,
அந்தப்பரம்பரையின் குலமுறை ஆலயத்தொண்டிற்குச்செல்லாமல், தனது
பெயருக்குப் பின்னால் அய்யர் என பதிவுசெய்துகொள்ளாமல், மருத்துவம்
பயின்றார். இலக்கியம் படித்தார். படைத்தார். இதழாசிரியரானார்.
பயணியின் பார்வையில் -- அங்கம் 14
அரசியல்
தலைவர்களுக்கும் சொல்ல மறந்த கதைகள் பலவுண்டு
நூலுருவில்
வெளிவந்திருக்கும் முருகேசு சந்திரகுமார் நிகழ்த்திய நாடாளுமன்ற
உரைகள்
முருகபூபதி
கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பு நிறைவடைவதற்கு சற்று
காலதாமதமானது. தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாற்றுவதற்கு சில சகோதரிகள் வந்திருந்தார்கள்.
ஒரு கத்தோலிக்க மதகுருவினால் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனை
அமைப்பிலிருந்து வந்திருந்த அவர்களுடைய உரை சமூகப்பெறுமதியானது. எனினும் அங்கு மிகவும்
குறைந்த எண்ணிக்கையினரே கேட்டனர் என்பது எனக்கு
ஏமாற்றமே.
கத்தோலிக்க மதபீடங்கள் இவ்வாறு இலங்கையில் பல விழிப்புணர்வு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. அத்துடன் கத்தோலிக்க
வணக்கத்துக்குரிய சகோதரிகளும் அன்னையரும் பெற்றவர்களை இழந்தவர்களையும் பராமரிப்பின்றி
அனாதரவான முதியவர்களையும் ஆங்காங்கே இல்லங்கள்
அமைத்து கவனித்துவருகின்றனர்.
மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். வன்னிப்பிரதேசங்களில்
இவ்வாறு நடைபெற்றாலும், கிழக்கில் சில மதபீடங்கள் மத மாற்றவேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவதையும்
அவதானித்தேன். அதுபற்றி கிழக்கிலங்கை பயணம் தொடர்பான பத்தியில் எழுதுவேன்.
அன்றைய ஊடக அமையசந்திப்பு முடிந்து புறப்படும்போது,
" உங்களை சந்திக்க மேலும் சிலர் வந்து வீட்டில் காத்திருக்கிறார்கள்." என்றார்
நண்பர் கருணாகரன்.
"மற்றும் ஒரு சந்திப்பா...?" எனக்கேட்டேன்.
உலகச் செய்திகள்
கொலம்பியாவில் சிந்திய புனித குருதி
பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கம் .!
இலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு
இந்தியாவின் முதல் ‘புல்லட்’ ரயிலுக்கான திட்டம் ஆரம்பம்
மார்க்கப் பாடசாலையில் தீ : 23 இளம் மாணவர்கள் பலி
யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
கொலம்பியாவில் சிந்திய புனித குருதி
12/09/2017 கொலம்பியாவுக்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் தனக்குரிய விசேட கண்ணாடி வாகனத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பயணத்தை மேற்கொண்ட போது, அவரது தலை அந்த வாகன உள் மேற்பரப்பில் மோதியதால் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
கார்ட்டஜெனா நகரினூடாக அவரது வாகனம் பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென அந்த வாகனத்தை சூழ்ந்து கொண்ட அபிமானிகளால் அதனை நிறுத்த வேண்டிய நிலை அதன் சாரதிக்கு ஏற்பட்டது.
இலங்கைச் செய்திகள்
ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க ஜெனிவாவில் 15 உப குழுக் கூட்டங்கள்
கொழும்பில் இலவச திருமணத் திட்டம்
கொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை
நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி
இலங்கையில் போர்க்குற்றம் : மீண்டும் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா
சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது
தமிழ் சினிமா
கதாநாயகன்
தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு
கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த
வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட்
கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன்
கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம்.
கதைக்களம்
விஷ்ணு
மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான்
உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில்
இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது.
ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி ஒருவரை
போட்டு அடிக்க, அதை கேத்ரின் அப்பா தட்டி கேட்கின்றார். அந்த இடத்தில்
இருக்கும் விஷ்ணு அவரை காப்பாற்றாமல் பயந்து ஓடுகின்றார்.
அடுத்த
நாள் கேத்ரினை விஷ்ணுவிற்கு பொண்ணு கேட்டு சரண்யா பொன்வண்ணன் செல்ல, அங்கு
கேத்ரின் அப்பா உன் பையன் ஒரு கோழை என்று அவமானம் செய்கின்றார்.
இதன் பிறகு விஷ்ணு வீரமானாரா? கேத்ரினை கைப்பிடித்தாரா? என்பதை காமெடி அதகளத்தில் கூறியுள்ளார் முருகானந்தம்.
படத்தை பற்றிய அலசல்
படத்தின்
கதையை கேட்டதும் ஏதோ சீரியஸ் படம் என்று நினைத்துவிடாதீர்கள். முழுக்க
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட படம் தான் இந்த கதாநாயகன். விஷ்ணு
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எப்படி பார்த்தோமோ அதேபோல்
தான் இருக்கின்றார். ஜீவா, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் அழுத்தமான
கதாபாத்திரத்தில் அசத்தியவர், காமெடி படம் என்பதால் டேக் இட் ஈஸி என்று
நடித்து செல்கின்றார்.
கேத்ரின் படம் முழுவதும் கிளாமர் தான், எந்த
பக்கத்து வீட்டு பொண்ணு இப்படியெல்லாம் உடையணிவார் என்று தெரியவில்லை,
எப்போதும் புல் மேக்கப்பில் அலங்கரிக்கின்றார். சூரி கண்டிப்பாக தன்னை
பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளார். இன்னும் இங்கிலிஷை தவறாக பேசினால்
ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என்ற எண்ணத்தை அவர் மறக்கவேண்டும்.
ஆனால்,
அனைத்திற்கும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்கின்றார், ஆனந்த்ராஜ் வந்த
பிறகு தான் படம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. சொல்ல போனால் அதன் பிறகு
தான் இது காமெடி படம் என்றே சொல்ல தோன்றுகின்றது. ஷேக் பாயாக இவர் பேசும்
ஒவ்வொரு வசனமும் சிரிப்பு சரவெடி.
இவருடைய கலாட்டாவை அடக்குவதற்குள்
கிளைமேக்ஸில் மொட்டை ராஜேந்திரன் பாடகராக வந்து செய்யும் கலாட்டாவிற்கு
அளவே இல்லை. அதனால், என்னமோ படம் முடிந்து வெளியே வரும் போது கொஞ்சம்
சிரித்த முகத்துடன் வரலாம்.
லட்சுமணின் ஒளிப்பதிவில் படம் முழுவதும்
செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. ஷான் ரோல்டன் கமர்ஷியல் படத்தில்
இசையமைக்கும் போது கொஞ்சம் தடுமாறுகின்றார், பாடல்கள் ஏதும் ஈர்ப்பு இல்லை,
சிங்கம் என்ற வில்லனுக்கு வரும் பிஜிஎம் சூப்பர்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி ஆனந்த்ராஜ் வந்த பிறகு வரும் காட்சிகள், குறிப்பாக கடைசி அரை மணி நேரம்.
விஷ்ணுவை அடிக்க சிங்கம் என்ற ரவுடியின் ஆட்கள் துரத்துவது, அவர் அடிவாங்குவது என அந்த பகுதி கொஞ்சம் காமிக்காக செல்கின்றது.
படத்தின் வசனங்கள்.
பல்ப்ஸ்
முதல் பாதி அதிலும் குறிப்பாக சூரி காமெடி.பாடல்கள் ஏதும் ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் கதாநாயகன் முதல் பாதியில் சறுக்கினாலும், இரண்டாம் பாதியில் வெற்றி வாகை சூடுகின்றார்.
Cast:
Music:
நன்றி CineUlagam
Subscribe to:
Posts (Atom)