நல்லூரான் கொடிகாண எல்லோரும் வந்திடுவார் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா     நல்லூரான் கொடிகாண எல்லோரும் வந்திடுவார்
    நாடுவிட்டு சென்றோரும் ஓடியோடி வந்திடுவார் 
    வல்வினைகள் போக்கென்று மனமுருகி வேண்டிடுவார்
    மால்மருகன் கொடிகண்டு மனநிறைவும் கொண்டிடுவார் 
    
    கொடியேற்றம் வருநாளை மனமெண்ணி மகிழ்ந்திடுவார்
    அடியழித்து அடியழித்து பெண்களங்கு பணிந்திடுவார்
    விண்ணவரும் வியந்துமே மலர்மாரி சொரிந்திடுவார்
    மண்ணகத்தில் நல்லூரும் மங்கலமாய் ஒளிர்ந்திடுமே 

    ஏழைபணக் காரென்னும் பேதமின்றி எல்லோரும்
    தாழ்மையுடன் கொடிகாண தமைமறந்து இணைந்திடுவார்
    வேலவனின் திருமுகத்தை அகமதனில் பதித்திடவே
    காதலுடன் காத்திருப்பார் கந்தனவன் சன்னிதியில் 

    கந்தனது சன்னதியில் பெதமெலாம் அகன்றுவிடும்
    நொந்திடுவார் அழுதிடுவார் நோயுள்ளார் வேண்டிடுவார்
    வந்த வினையும்  வருகின்ற வல்வினையும்
    கந்தாநீ நீக்குவென கைகூப்பி  ஏங்கிடுவார் 

சிட்னி முருகன் பாலஸ்தாபனம் 21 AUG 2023

 .கவிதை.. நீயா?...நானா?... மெல்போர்ன் அறவேந்தன்

 


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 77 விமல் சொக்கநாதன் நினைவும் – மடலும் - முருகபூபதி

 .

விமல் சொக்கநாதன்  நினைவும் – மடலும்

தொடரும் பயணத்தில் சந்தித்த ஆளுமைகளும் ஆர்வலர்களும்

                                                                                

 


பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையின் விருது விழாவுக்காக அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்து நான் புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது,  லண்டனில்  மூத்த ஒலி – ஒளிபரப்பாளர் – எழுத்தாளர் சட்டத்தரணி விமல் சொக்கநாதன் அகால மரணமடைந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்தது.

அவரது விதி,  வீதியில் முடிந்திருக்கிறது. பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்துகொண்டு, இங்கிலாந்து வந்து, அன்னாரின் இறுதி நிகழ்விலாவது கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக காத்திருந்தவாறு இந்த தொடர் பதிவை எழுதுகின்றேன்.

இம்மாதம் 01 ஆம் திகதி மரணமடைந்தவரின் பூதவுடல் இன்னமும் பொது மக்களின் பார்வைக்கு வரவில்லை. 

காலமும் கணங்களும் என்ற பெயரில் காணொளிப்பதிவு நிகழ்ச்சியை  தொகுக்கும் பணியை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்திருந்தேன்.

முதல் அங்கமாக அமரர் ஓவியர் கே. ரி. செல்வத்துரை அய்யா பற்றிய காணொளித் தொகுப்பு மெய்நிகரில் வெளியானது.

சிட்னியில்  2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் பற்றிய காணொளிப்பதிவை ( காலமும் கணங்களும் ) கடந்த ஆண்டு ( 2022 ) தயாரிப்பதற்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்திருந்தபோது, விமல் சொக்கநாதனிடமிருந்தும்  கருத்துக்களை கேட்டிருந்தேன். அத்துடன் மேலும் சிலரிடமும் கேட்டிருந்தேன். விமல்தான்  தாமதிக்காமல் முதலில்  தனது குரலை பதிவுசெய்து அனுப்பியிருந்தார்.  அதற்கு நான் எழுதிய ( 01-01-2022 ) பதிலையும், அவர் எனக்கு அனுப்பிய சுருக்கமான பதிலையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.

அன்புள்ள திரு. விமல் சொக்கநாதன் அவர்கட்கு வணக்கம்.  புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் உங்கள்  மதுரமான குரலைக்கேட்டவாறே இன்றைய  இனிய பொழுதை ஆரம்பித்துள்ளேன். இணைப்புக்கு மனமார்ந்த நன்றி.

வீட்டுக்கு வந்த மருமகள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 ஒரு திரைப் படம் எப்படித்தான் எடுக்கப்பட்டிருந்தாலும் அப்படத்தை


விறுவிறுப்பான படமாக மாற்றும் சாமர்த்தியம் அப் படத்தின் படத் தொகுப்பாளரிடமே இருக்கும். அவ்வாறு எடிட்டிங் துறையில் தன் திறமையை வெளிப்படுத்தி சாதனை புரிந்தவர் தான் அண்மையில் மறைந்த எடிட்டர் ஆர் விட்டல். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எடிட்டிங் செய்த இவர் 1973ம் ஆண்டு பட இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்படி இயக்குனரானவர் முதன் முறையாக இயக்கிய படம் தான் வீட்டுக்கு வந்த மருமகள்.


குடும்பக் கதைகளை குறைந்த பஜெட்டில் எடுத்து வெற்றி கண்டு

கொண்டிருந்த தயாரிப்பாளர் சுப்ரமணிய ரெட்டியார் இந்தப் படத்துக்கு கதை எழுதி தயாரித்திருந்தார். பணத் திமிர் பிடித்த பாட்டி அந்த திமிரினால் தன் சொந்த மருமகனையே அடிமை போல் நடத்துகிறாள். அவனின் மனைவியும் அவனை துச்சமென எண்ணுகிறாள். அதனால் மனமுடைந்து போகும் அவனுக்கு சித்த சுவாதீனம் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இங்கோ அவனின் குடும்பம் பாட்டியின் முழுக் கட்டுப்பாட்டில் நடக்கிறது. பேரப் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் இஷ்டத்துக்கு காதலிக்கத் தொடங்கும் போது பிரச்சனைகள் சூறாவளி போல் எழுகின்றன. பாட்டியின் எதிர்ப்பை மீறி நடக்கும் திருமணத்தால் வரும் வீட்டுக்கு வந்த மருமகள் எவ்வாறு பாட்டியை திருத்துகிறார் என்பதே கதை.

இலங்கைச் செய்திகள்

 இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

தேயிலை உட்பட பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்ற புதிய செயற்றிட்டங்கள் அவசியம்

13 ஐ முழுமையாக அமுல்படுத்தி மாகாண தேர்தலை நடத்தவும்

இந்தோ – பசுபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

தர பரிசோதனையில் 73 மருந்துகள் தோல்வி


இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

August 16, 2023 4:47 pm 

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நேற்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டது.

கொழும்பில் பிரதான நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார்.

அத்துடன் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியினால் மக்களுக்காக ஆற்றப்பட்டிருந்த உரையின் முக்கிய அம்சங்களும் உயர் ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாய உலகம்: ஏன் வரலாறு கற்க வேண்டும்? ஜவாஹர்லால் நேரு

 .

அன்புள்ள இந்து,

இந்நேரம் நீ உனது பதிமூன்றாம் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருப்பாய்! உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஏராளமான பரிசுகளும் வாழ்த்துகளும் வந்து குவிந்திருக்கும். சிறகுகள் விரித்து கனவுலகில் மிதந்து கொண்டிருப்பாய்!நானோ உன்னைவிட்டுப் பிரிந்து எங்கோ ஒரு சிறைச்சாலையில் அடைப்பட்டுக் கிடக்கிறேன். என் நெஞ்சம் முழுக்க வாழ்த்தும் அன்பும் நிறைந்துள்ளன. ஆனால், அவற்றை எப்படி உன் சிறிய கரங்களில் சேர்ப்பது?

தவித்துத் தவித்துப் புரண்டுகொண்டிருந்தபோது ஒரு யோசனை தோன்றியது. நான் ஏன் உனக்குக் கடிதம் எழுதக் கூடாது? மறுநொடியே உற்சாகத்தோடு எழுந்து அமர்ந்துகொண்டேன். ஆனால், பேனா நகர மறுத்தது. என்ன எழுதுவது?

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 14, 2023

 அந்த நகரத்தில் அவர் ஒரு பிரபல்யமான நபர்.


நகரத்தில் உள்ளவர்கள் மதிக்கின்ற மனிதர்.
சந்தை கூடும் இடத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் அவர் நின்று கொண்டார்.
மக்கள் சந்தையை நோக்கிப்போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர்.
‘அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன.
இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் ‘ என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.
‘நண்பர்களே! கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்? நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத்தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மட்டும் கைதூக்குங்கள்’ என்றார்.
அநேகமாக அங்கே இருந்த அத்தனை பேரும் கை தூக்கினார்கள்.
அவர் தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார்.
‘என்ன ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே?’ என்று மக்கள் கேட்டனர்.

சிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி - தமிழ் எழுத்தாளர் விழா 2023அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  சிட்னியில்   தூங்காபி Toongabbie சமூக மண்டபத்தில்  முற்பகல் 10-00 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில்  வதியும் எழுத்தாளர்களின்  நூல்களின் கண்காட்சி, , மலையகம் 200 கருத்தரங்கு , வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன்  எழுத்தாற்றல் மிக்க மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலக்கியப்படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப்பங்களிப்பை  பாராட்டும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு  எழுத்தாளர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும்  அவுஸ்திரேலியாவில் தமிழையும் ஒரு பாடமாக உயர்தர வகுப்பில் பயிலும் மாணவர்களையும், தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்கும்  ஆசிரியர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

            அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

          அனுசரணை :  சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றம்  

               Cumberland Council, Wentworth Ville Library,

 

ஏக்கம் (கவிதை) உஷா ஜவாகர் ஸாம்பியாவிலிருந்து....ஸாம்பிய நாட்டு

அனைதைக் குழந்தை

தாய்ப்பாலைத் தேடி

காத்து நிற்கிறது

கண்ணிலே ஏக்கத்தடல்


ஸாம்பிய நாட்டு

ஏழைக் குடிமகள்

அடுத்த வேளை

உணவைத் தேடி

காத்து நிற்கிறாள்

கண்களிலே ஏக்கத்துடன்


ஸாம்பிய நாட்டில்

வாழும் குடிமகள்

சொந்த வீட்டில்

வாழும் வழிதேடி

காத்து நிற்கிறாள்

கண்களிலே ஏக்கத்துடன்


ஸாம்பிய நாட்டில் 

வாழும் வளம்மிக்க

செல்வம் கொழிக்கும் செல்வத்தனை

தமிழ் ஈழக் குடிகளோ

சொத்தாய் பண்ணுக்கா

காத்து நிற்கிறாள்

கண்களிலே ஏக்கத்துடன்
சிட்னி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் வரலட்சுமி பூஜை : ஆகஸ்ட் 25-2023ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் வரலட்சுமி பூஜை ஆகஸ்ட் 25-2023 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணி முதல் சிறப்பு ஹோமம் & அபிஷேகம், தீப பூஜை மற்றும் மஞ்சள் நூல் (தோரக) பூஜையுடன் கொண்டாடப்படுகிறது.   உலகின் எட்டு சக்திகளாக அறியப்படும் அஷ்ட லக்ஷ்மிகள் - ஆதிகால சக்தி (ஆதி லக்ஷ்மி), செல்வம் (தன லக்ஷ்மி), தைரியம் (தைரிய லக்ஷ்மி அல்லது வீர லட்சுமி), ஞானம் (வித்யா லக்ஷ்மி), குழந்தைகள் அல்லது குடும்ப வளர்ச்சி (சந்தான லக்ஷ்மி), வெற்றி (விஜய லக்ஷ்மி), உணவு (தன்ய லக்ஷ்மி) மற்றும் பலம் (கஜ லக்ஷ்மி) ஆகியவை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. வர லக்மி விரதத்தைக் கடைப்பிடிப்பது ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் எட்டு சக்திகளையும் அளிக்கும் என்று புராணங்கள் விவரிக்கின்றன.

கட்டுரை இப்படியும் நடக்கிறது August 18, 2023

                                                                                                                             

குருந்தூர்மலையில் இன்று வெள்ளிக்கிழமை 
பொங்கலுக்கு
தமிழர்கள் சிலர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

நீதிமன்றம்அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது.
ஏற்கனவே, நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் நடத்த சென்றவர்கள் மீது பொலிஸாரும் சில பௌத்த மதவாதிகளும் தாக்குதல் நடத்தியதுடன்,
பொங்கல் நடத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மீண்டும் நீதிமன்றை நாடி பொங்கலுக்கான அனுமதியை பெற்றுக்கொண்டு பொங்கலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மறுபுறம், பொங்கல் வழிபாட்டை தடுப்பதற்காக சிங்கள – பௌத்த கடும்கோட்பாளர்கள் பெரும் ஏற்பாடுகளைச் செய்துவருவதாக செய்திகள்
தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பொங்கல் நடத்தவிடாமல் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு பெரிய படையெடுப்பை செய்யப்போவதாக
அறிவித்திருக்கின்றார்.
நிலைமைகளை பார்க்கும்போது, பெரும் முறுகல் நிலை ஒன்று அங்கு ஏற்படுவதற்கு ஏதுநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
இவ்வாறு அங்கு ‘போர் மேகங்கள்’ சூழ்ந்துள்ள அதேவேளையில்தான், யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரு சமாதான முயற்சிக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கின்றது.

பிரம்மோத்ஸவம் 2023 - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் (SVT, சிட்னி)

 .கட்டுரை இப்படியும் நடக்கிறது August 19, 2023

 காலம் காலமாக நம்மிடையே பழக்கத்தில் உள்ள சர்தார்ஜி


நகைச்சுவைகள் நம்மை எப்படியாவது சிரிக்கவைத்து விடுகின்றன.

நம்மைச் சிரிக்க வைப்பதற்காகவே சர்தார்ஜி என்ற பாத்திரத்தை சிருஷ்டித்து அவரின் நகைச்சுவை கதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரே எழுதியிருந்தனர்.
அந்த சர்தார்ஜி தலைப்பாகை கட்டியிருப்பார்.
தாடி வளத்திருப்பார்.
தனக்கே உரிய உடை ஒன்றையும் அணிந்திருப்பார்.
ஒரு நாள் சர்தார்ஜி, சின்னதாக ஒரு ரீ. வி. வாங்க ஆசைப்பட்டு, எலக்ட்ரோனிக்ஸ் கடைக்கு போயிருந்தார்.
கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன ரீ. வியை காட்டி கேட்டார்.
‘இந்த ரீ. வி. என்ன விலை?’ கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான் ‘இந்தக் கடையில் சர்தார்ஜிக்கெல்லாம் ரீ. வி. விற்கிறதில்லை…’
எப்படியும் இந்த ரீ. வியை வாங்கிடவேண்டும் என்று வீட்டுக்குபோய் தன்னுடைய ‘கெட்அப்’பை மாற்றிக்கொண்டு வந்து கடைக்காரனைப் பார்த்து கேட்டார், ‘இந்த ரீ. வி. என்ன விலை?’ ‘இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் ரீ. வி. விற்கிறதில்லை…’
சர்தார்ஜியால் பொறுக்கமுடியவில்லை, கடைகாரன்கிட்ட பரிதாபமாக கேட்டார், ‘ரீ. வி. குடுக்கலைன்னா பரவாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜிதான்னு எப்படி
கண்டுபிடிச்சே சொல்லு?’ கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், ‘இது ரீ. வி. இல்லை, மைக்ரோவேவ் ஓவன் அதுதான்’.
குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகள் பக்தி பூர்வமாகவும் அசம்பாவிதம் எதுவுமின்றியும் நடந்து முடிந்திருக்கின்றது.
தமிழர்கள் ஏற்பாடு செய்த இந்தப் பொங்கலுக்கு எதிராக சிங்கள – பௌத்த மதவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததாலும் உதய கம்மன்பில போன்றவர்கள் குருந்தூர்மலையை நோக்கி அணிதிரளுமாறு அழைப்புவிடுத்திருந்ததைத் தொடர்ந்து அங்கு மோதல் நிலைமை ஏற்படலாம் என்று நேற்று இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், அப்படி எதுவித அசம்பாவிதமும் இன்றி பொங்கல் வைபவம் நடந்துமுடிந்திருக்கின்றது.

உலகச் செய்திகள்

 ட்ரம்ப் மீது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு

அமெரிக்க பயணம்: தாய்வானுக்கு சீனா எச்சரிக்கை

மத நிந்தனை குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீ வைப்பு

ஜி20 முத்திரை, நாணய வெளியீடு

கடலில் தத்தளித்த தஞ்ச படகில் 60 பேர் உயிரிழப்பு


 ட்ரம்ப் மீது மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு

August 16, 2023 6:01 am 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் 2020ஆம் ஆண்டு ஜோர்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றதை மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.