மரண அறிவித்தல்திரு சபாரட்ணம் கிரிதரன் (Financial Controller  )

பிறப்பு : 16 -  மாசி - 1959 — இறப்பு : 6 வைகாசி 2018


யாழப்பாணம் மல்லாகத்தை  பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் கிரிதரன் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற  விசுவலிங்கம் சபாரட்ணம் - பதிவாளர் (Registrar),  பஞ்சமாசோதிநாயகம் (Darwin) தம்பதிகளின் அன்பு மகனும், திரு, திருமதி சிவசுப்ரமணியம்(Sydney) தம்பதிகளின் அன்பு மருமகனும், மதிவதனி அவர்களின் பாசமிகு கணவரும், சோபனின் அன்புத் தந்தையும், பிரகஸ்பதி (Sydney), பிரதாபன் (Darwin), பிரதீபன ( Bolton, UK ), Dr.சோமசுந்தரம்(Canberra), பாலரஞ்சன் (Brisbane), கேதாரநாதன்(Sydney) கதிர்காந்தன்(Melbourne), விசுவலிங்கம்(Cousin Brother  - மல்லாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குணலிங்கம், இந்துமதி, உசா, Dr.தர்மலக்ஷ்மி, மாலினி, சிவகௌரி, குமுதினி, சுகந்தினி, திலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் Dr.பிருந்தாபன், பிரியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் கிருஷ்சான், அரவிந், லோகன், Dr.ரூபன், Dr.பிரவீன், தீபனா, பிரணவன், கர்ணன், ஜெனனி, நிலானி, அஷ்வினி, திவ்வியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 09-05-2018 புதன்கிழமை பிற்பகல் 6 மணியிலிருந்து 8 மணிவரை  Magnolia Chapel, Macquarie Park Crematorium Cnr Delhi Road & Plassey Road, North Ryde இல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை  10-05-2018 வியாழக்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 1.30 மணிவரை Magnolia Chapel, Macquarie Park Crematorium Cnr Delhi Road & Plassey Road, North Ryde  இல் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு
கேதாரநாதன் (Ketha) – 0434 503 794
திலகேஸ்வரன் (Thilak) – 0418 898 162
-->

சங்கத்தமிழை நினைத்துப் பார்ப்போம் ! - [ எம். ஜெயராமசர்மா.....மெல்பேண்....அவுஸ்திரேலியா ] தமிழ்மொழி கல்வி இயக்குநர்

    
          இருபத்தொரு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூட - சங்கத்தமிழை நினைத்துப்பார்க்கிறோமென்றால் அதற்கு தக்க காரணங்கள் இருக்கத்தானே வேண்டும்.அப்படிப்பட்ட காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் சங்கத்தமிழ் பற்றியும் அதற்கான சூழ்நிலை பற்றியும் எமக்கெல்லாம் தெரிய வருமல்லவா?
image1.JPG     சங்கம் வைத்துத் தமிழை வளர்க்கும் அளவுக்கு அக்காலத்தில் கற்றறிந்தோர் பலர் இருந்திருக்க வேண்டும்.சங்கம் வைத்துத் தமிழை வளர்ப்பதற்கு ஏற்ற அரச, சமூகச் சூழலும் இருந்திருக்க வேண்டும்.அரச ஆதரவு இல்லாவிட்டால் எந்த இயக்கமும் வளரமுடியாது. சங்க காலத்தில் அரச ஆதரவும் பெருமளவில் தமிழ் வளர்ச்சியின் அடிநாதமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறதல்லவா?
      சங்க காலத்தில் அரசர்கள் பலர் புலவர்களாக விளங்கி இருந்திருக்கிறா ர்கள் என்பதை சங்கவரலாற்றால் அறியமுடிகிறது.அரசர்கள் புலவரை மதித்த தனர்.புலவர்கள் அரசரை மதித்தனர். புலவர் வாயால் தாம்பாடப்படவேண்டும் என்று அரசர்களிடத்து பேராவல் காணப்பட்டது.அறிவொழுக்கங்களில் சிறந்து விளங்கிய சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும் அவர்பாடிய செய்யுள்
களைச் சான்றோர் செய்யுள் என்று சொல்லுவது தமிழ் வழக்காகும்.
   

இலங்கைச் செய்திகள்


வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

தமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்.!

131 இலங்கை அகதிகள் மலேசிய பொலிஸாரால் இடைமறிப்பு..!
வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 

01/05/2018 வட மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதற்கு முன்னர் அவர்கள் ஆளுனர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, ஒரு மாதக் காலத்துக்குள் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் அலுவலகத்தினால் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும், இன்னும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து, இந்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 11 தெருத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு! திருட்டுத்தேங்காய் சாபத்திற்கு!! தேங்காயின் விதிப்பயன் என்ன...? - முருகபூபதி   பயன்தரும்  மரங்களின்  பெயர்களையும்  எழுதி,  அதில் ஒன்றைத்தெரிவுசெய்து,  அது  தரும்  நல்ல  பயன்களைப்பற்றி எழுதச்சொன்னார்  ஆசிரியர்.   இந்தச்சம்பவம்  நான்  ஐந்தாம்  வகுப்பு படித்த காலத்தில்  நடந்தது.

எனது  வகுப்பில்  பெரும்பாலான  மாணவ  மாணவிகள்  தென்னை மரம்  பற்றியே  எழுதியதற்குக்காரணம்,  எங்கள்   ஊரில்  அந்த மரங்கள்தான்  அதிகம்.   நாம்  பனைமரத்தை  படங்களில்தான்  பார்த்திருந்த  காலம்.

தென்னையின்   பயன்பாடு பற்றி  நிறையச் சொல்லமுடியும்.  ஆனால்,  அந்த  பால்யகாலத்தில்  எமக்குத் தெரிந்ததையே  எழுதினோம்.
தெங்கு  ஆராய்ச்சி  நிலையம்,   தேங்காய்  எண்ணெய்  தொழிற்சாலை, தேங்காய்  துருவல் (Desiccated Coconut)    தொழிற்சாலை  என்பன  எங்கள் நீர்கொழும்பூரில்   இருந்தன.   தென்னந்தோட்ட  உரிமையாளர்கள்  பலர்  தமக்குள்  சங்கமும்  வைத்திருந்தனர்.
ஆனால் , இவைபற்றிய  எந்த  ஞானமும்  இல்லாமலேயே  நானும் சகமாணவர்களும்   தென்னையின்  பயனை   நன்றாக  எழுதி ஆசிரியரிடம்  சிறந்த  மதிப்பெண்களும்  பெற்றோம்.

பாடசாலைக்கு  அருகில்  அமைந்த  கோயில்களில்  யாராவது பக்தர்கள்   வந்து  தேங்காய்  உடைத்து  பிரார்த்தனை  செய்தால்எமக்கு  கொண்டாட்டம்தான்.   பாடசாலை  இடைவேளை  நேரத்தில் சிதறுதேங்காய்  பொறுக்கிய  அந்தக்காலத்தை  மறக்கத்தான்  முடியுமா.?
 
கோயில்  அய்யரோ  அல்லது  பண்டாரமோ  வந்து  அவற்றை பொறுக்குவதற்கு  முன்னர்  நாம்  முந்திவிடுவோம்.   சில  சமயங்களில்    அவர்கள்  முந்துவார்கள். கோயில்  வெளிவீதியில்  சிதறு தேங்காய்களை  காயவைத்து கொப்பறையாக  மாற்றி,  தேங்காய்  எண்ணெய் தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள்.பிரதான   கடைவீதியில்   எந்தக்  கடை  முதலாளி,  ரதங்களுக்கு முன்னால்  அதிகம்  தேங்காய்  உடைத்தார்  என்பதை  நானும் நண்பர்களும்  ஆராய்ந்தது   பால்யத்தின்  வசந்தகாலங்களில்தான்.

ஆனால்,  அதில்  பதுக்கல்  வர்த்தகத்தின்  மூலம்  பொருளீட்டிவிட்டு பாவசங்கீர்த்தனமாக  எத்தனைபேர்  தெய்வத்திற்கு  தேங்காய் உடைக்கிறார்கள்  ????  என்பதை  ஆராயும்  வயது  அல்ல  அந்த பால்யகாலம்.

இலங்கைத் திரையுலக மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்: அஞ்சலிக்குறிப்பு ஜெயகாந்தனுடன் அமர்ந்து "உன்னைப்போல் ஒருவன்" பார்த்த ரசிகர் - முருகபூபதி


" உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும்  வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச்சிற்பங்கள், ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலை மரபை வளர்த்து வந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத்துணை பின்தங்கியிருப்பது ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாகும். "  
இவ்வாறு 48 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத்து  இலக்கியஉலகில் முன்னர் வெளியான மல்லிகை இதழில் (1970 செப்டெம்பர்) சொன்னவரும், இலங்கையின் சிங்களத்திரையுலகை வெளியுலகம் வியப்புடன் விழியுயர்த்தி பார்க்கவைத்தவருமான திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்  கொழும்பில் காலமானார்.
இவ்வாறு தென்னிந்தியப்படங்கள் பற்றிய பார்வையை அன்றே வைத்திருந்த இவர், ஜெயகாந்தனின் முதல் திரைப்படமான "உன்னைப்போல் ஒருவனை" யும் பார்த்திருக்கிறார். அதனை இவருக்காகவே ஜெயகாந்தன் காண்பித்துமிருக்கிறார் என்ற தகவலையும் அதே மல்லிகையில் பதிவுசெய்துள்ளார்.
டொமினிக் ஜீவாவின் மல்லிகை, எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்களை ஒவ்வொரு  இதழிலும் மரியாதை நிமித்தம் அட்டைப்பட அதிதியாக கௌரவித்து அவர்களின் நேர்காணல்களை அல்லது அவர்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு வந்திருக்கிறது.
மாவை நித்தியானந்தன், 'தில்லைக்கூத்தன்' என  அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் மல்லிகைக்காக லெஸ்டரை நேரில் சந்தித்து எழுதிய குறிப்பிட்ட நேர்காணல் கட்டுரையைப்பார்த்த பின்னரே லெஸ்டரின் படங்களை நானும் விரும்பிப்பார்த்தேன்.
முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கிய வாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அவரது திரைப்படங்களுக்கான தெரிவாக இருந்தது, கிராமங்கள்தான். அவரது முதல் படமான ரேகாவ, வெளிப்புறத்தில் எடுக்கப்பட்டதனால் அக்காலத்தில் வித்தியாசமான முயற்சியாகப்பேசப்பட்டது. அதுவரையில் திரைப்படங்கள் ஸ்ரூடியோக்களுக்குள் தயாராகிவந்தன.
லெஸ்டர், இலங்கையின் முன்னணி சிங்கள எழுத்தாளர்களின் படைப்புகளை திரைப்படமாக்கியவர்.  மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய)  முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர்.
லெஸ்டர் பற்றிய சிறந்த அறிமுகத்தை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதிவந்துள்ளனர்.
1919 ஆம் ஆண்டில் ஏப்ரில் மாதம் பிறந்திருக்கும் லெஸ்டர், கடந்த ஏப்ரில் மாதம் தனது 99 ஆவது பிறந்ததினத்தையும் கொண்டாடினார். அதனை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர் வசித்த திம்பிரிகஸ்ஸாய இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள். நூறு ஆண்டு வயதை நெருங்குவதற்கு 12 மாதங்கள் இருக்கும் தருணத்தில் இலங்கை கலையுலகிற்கு விடைகொடுத்துவிட்டார்.
பத்திரிகையாளராக தனது தொழில் வாழ்வை ஆரம்பித்த லெஸ்டர், லண்டன் சென்று திரைப்பட நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து குறும்படங்களும் ஆவணப்படங்களும் எடுத்தவர்.  அன்றிலிருந்து சிறந்த திரைப்பட இயக்குநராகவே ஒளிவீசிக்கொண்டிருந்தவர். இவருக்கு பேராதனை பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டத்தையும் வழங்கி,  அதனாலும் பெருமைகொண்டது.

உலகச் செய்திகள்


ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

உலகின் மிகப்­பெ­ரிய கண்­ணாடி மாளிகை: கண்கவர் அம்சங்களுடன் மீண்டும் திறப்பு..!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு மே 7 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழா!!!ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

30/04/2018 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக  அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.   நன்றி வீரகேசரி 

அப்பர் குருபூசை @ SVT Helensburgh 13/05/2018


சைவமன்றம் - அப்பர் குருபூசை - 09/05/2018ராகமாளிகா, கோகுல தர்ஷன் வழங்கும் இராகஸ்வரூபம் 12/05/2018தமிழ் சினிமா - தியா திரைவிமர்சனம்


எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன, விஜய் என்ன சொல்கிறார் என இனி உள்ளே போகலாம்.

கதைக்களம்

கதையின் ஹீரோவாக நாக சௌரியா. அவரின் தோழியாக நடிகை சாய் பல்லவி. பள்ளிப்பருவ காதலர்களான இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஹீரோவின் அப்பா நீழல்கள் ரவி. சாயின் அம்மாவாக நடிகை ரேகா. இவர்களின் செய்கையினால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கொஞ்சம் வாக்கு வாதம். பின் இருவரும் பிரிகிறார்கள்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு நாகா, சாய் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெற்றோர் சம்மத்தோடு இவர்களின் திருமணம் நடந்து பின் ஹனிமூன் செல்கிறார்கள்.
தேனிலவுக்கு பிறகு புது வீட்டில் இவர்கள் குடியேற, எதிர்பாராத விதமாய் அடுத்தடுத்து சில சோக நிகழ்வுகள் இவர்களின் குடும்பத்தில். குழந்தை தியா சாய்பல்லவிக்கு மிகவும் நெருக்கமானவர்.
நிழல்கள் ரவி இறக்க, சில நாட்களில் ரேகா இறந்துபோகிறார். இவர்களின் குடும்ப பெண் மருத்துவருக்கும் இதே நிலை தான். இது போலிஸ் பிரச்சனையாக நடந்து என்ன என அவர்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் எல்லோரின் மரணமும் ஒரே மாதிரி திட்டமிட்ட கொலை போல தெரிகிறது. சாய் பல்லவியின் மனதிற்குள் சில அதிர்வலைகள் அவரை மிகவும் யோசிக்க வைக்கிறது.
அடுத்தடுத்து யார் என கணிக்கும் அளவிற்கு அவர் நடக்கும் அமானுஷ்யத்தை உணர்கிறார். ஆனால் இவருக்கு மனநிலை சரியில்லை என கணவர் நாகா, மனநல சிகிச்சை அளிக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் நாகா ஏதோ ஒரு காரணத்தால் தனி இடத்திற்கு செல்கிறார். இவரை காணாமல் சாய்பல்லவி துடிக்க கடைசியில் பெரும் ஆபத்து காத்திருக்கிறது.
நாகா பிழைத்தாரா, பல்லவிக்கு என்ன ஆனது, தொடர் மரணத்தின் பின்னணி என்ன என்பதே இந்த தியா படம்.

படத்தை பற்றிய அலசல்

இயக்குனர் விஜய் எப்போதும் தன் படத்தில் ஆழமான கருவை வைத்திருப்பார். சில வெற்றிப்படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் கடைசியாக அவர் இயக்கிய வனமகன் பெரிய இடத்தை பிடிக்கவில்லை.
அதனை தொடர்ந்து அவர் இப்போது இந்த தியாவை அனுப்பியிருக்கிறார். அவர் இப்படத்தில் சொல்ல வந்த விசயத்தை சரியாக தெளிவுபடுத்திவிட்டார். கதையை நீண்ட தூரம் இழுக்காமல் முதல் பாதியிலே கிளைமாக்ஸ் போல அமைத்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் தான் முக்கிய கரு அடங்கியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாக சௌரியா தற்போது தமிழுக்குள் எட்டிபார்த்திருக்கிறார். கதை முழுக்க அவரின் பங்கும் இருக்கிறது. ஆனால் திணறாமல் நடித்து அனுபவத்தை காட்டியிருக்கிறார். சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழ்ந்து போக அவரும் காரணமாகிறார். லவ் ஸ்டோரி இவருக்கு மிகவும் செட்டாகிவிடும்.
சாய் பல்லவி பிரேமம் படத்திற்கு பிறகு முதல் முதலாக தமிழ் படத்தில் காண்பது நிறைய ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் தான். இளம் நடிகையான இவருக்கு இப்படம் ஹீரோயினை மையப்படுத்திய ஸ்டோரி என்றே சொல்லலாம். இனி தமிழ் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நிழல்கள் ரவி, ரேகா, ஸ்டண்ட் சில்வா என சிறு காட்சிகளில் வந்துபோகிறார்கள். கதையை நகர்த்திய விதம், காட்சிகளை கோர்த்த விதத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டிங் அந்தோனி நிறைவு செய்கிறார்கள்.

கிளாப்ஸ்

ஹாரர் திரில்லர் மற்ற படங்கள் போல அலட்டல் இல்லாமல் படத்தில் ஒரு தனியான ஸ்டைல்.
அடுத்து என்ன நடக்கும் என நமக்குள் ஓடும் அளவிற்கு கதை கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.
தியாவுக்கு சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கதைக்குள் நம்மை இழுத்துவிடுகிறது.
ஓரிரு பாடல்கள் என்றால் கரு சுமக்கும் கருத்தாய் மதன் கார்க்கியின் வரிகள்.

பல்பஸ்

ஆர்.ஜே.பாலாஜிக்கு இதில் பெரிதளவில் இடமில்லை. ஒரிரு இடங்களில் தான் அவரின் காமெடி செட்டாகிறது.
கற்பனைக்கும் மீறி சில விசயங்கள் இருந்தாலும் பெரிதாக குறை சொல்ல ஒன்றுமில்லை.
மொத்தத்தில் தியா (கரு) மென்மையானவள், ஆனால் அவள் சுமக்கும் கரு வலிமையானது..

நன்றி CineUlagam