சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே ! - நாஞ்சில் நாடன்

.

மண் மகள் முன்னின்று மறுகினேன் !
ஒரு பிடி மண் தா,
உழைத்துப் பிழைக்கணும் !
ஆங்காரத்துடன் அள்ளிக்கொண்டன
அதிகாரங்கள்
பன்னாட்டுப் பங்குகள்
கவ்விக்கொண்டன
மற்று என்னிடம் ஏது
மண்ணெனச் சொன்னாள்
அகழ்வாரையும் இகழ்வாரையும்
தாங்கும் அன்னை !

தாழ்விலா மறம் ஒரு துளி மந்திரித்துத்
தா என்றேன் மலையவன் மகளிடம் !
இரு மூன்று வதனத்தான் தன் தாயும் உரை செய்தாள் !
முன்னைக் கொடுத்ததைக் கொண்டு
பாரதி போனான்
வ.உ.சி. மாண்டான்
ம.பொ.சி நீத்தான்
இன்றவர்
அஸ்தியும் இல்லை ஆஸ்தியும் பொச்சு !
வீரம் என்றொரு பொருளுனக்கெதற்கு?
மானம் கெட்ட வாழ்க்கை நடத்த?

சிட்னி முருகன் ஆலயத்தில் கேதாரகெளரி பூசை நிகழ்வுகள்

.

இலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி - செ பாஸ்கரன்

.

அடுத்தடுத்து அழைப்பு வந்து அழைத்துச் செல்கிறது. இலக்கிய தாகம் கொண்டவர்களையும் கலையார்வம் கொண்டவர்களையும் காலன் கணக்கேட்டில் பதிவு செய்துவிட்டானா? பொன்மணியை பிரசவித்து வீடுயாருக்கென்று கேள்வி எழுப்பி கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் சிகரம் தொட்ட காவலூர் ராஜதுரையின் இறந்த செய்தி அக்ரோபர் 14 இல் அவசரமாய் வந்து சேர்ந்தது. அதிலிருந்து மீழுமுன்பே அடுத்த செய்தி

"வேருக்கு நீர்"  என்ற நூலுக்கு விருதுகளால் மகுடம் சூடிய பெண்மணி, சாகித்திய மண்டலமே தலைசாய்த்து விருது கொடுத்த இடதுசாரி எழுத்தின் ஆழுமை , உடல் அங்கங்கள் அனைத்தையும் பொதுவில் வைத்த பரோபகாரி , ராஜம் கிறிஸ்ணன் என்ற அறிவின் சுடர் அணைந்து விட்டதாய் அக்ரோபர் 20இன் அகாலத்தில் செய்திவந்து ஆட்டிவைத்தது. காவலூர் ராஜதுரையின் உடல் அக்ரோபர் 21 இல் அக்கினியில் சங்கமித்த அந்தக்கணங்கள் மறைந்த அடுத்த மூன்று

தினங்களில் கலை உலகின் "ஆலயமணி" யின் அசைவு நின்றுவிட்டது. "பராசக்தியும் , சிவகங்கை சீமையும்"  கண்ணீர்மல்க "தெய்வப்பிறவி ' யாய்      காட்சிதந்த எஸ் எஸ் ராஜேந்திரன், கலைஉலகின் செல்லப்பிள்ளை
சென்றுவிட்ட சேதிவந்து எம்மைத்தொட்டது அக்ரோபர் 24 இல் சேதிவந்த நேரம் முதல் சோகம் தொட்டது. ஆறு முன்பே அடுத்தடுத்துக்  கேட்ட செய்திகளின் ரீங்காரம் அகலாமல் கிடக்கிறது. மக்களிடம் இலக்கிய தாகம் வறண்டு கொண்டு போகின்றது என வருத்தம் கொண்டு இந்த இந்த வல்லுனர்கள் வாழ்வை விட்டு போகின்றார்களா?

இலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி செய்திடுவோம்.

Is Tishani a Meriden student, Sydney's most courteous young lady? - BY BERNADETTE CHUA.
ஆங்கில இணைய தளத்தில் வந்ததை அப்படியே தருகின்றோம் Is Tishani Gowrythasan the politest teen in Sydney? Certainly her school thinks so.
In an age when it is quite often customary to denigrate teens for being self-centred and uncaring, Meriden student Tishani and her friends are an example of a much more caring generation.
The Strathfield student catches the crowded M90 bus every morning from her home in Greenacre. And while there are sometimes dozens of excited schoolchildren on the bus who refuse to give up their seats for elderly passengers, Tishani always sacrifices hers.
So much so that one bus passenger has been moved to write to her school commending her actions.

இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைந்தார்.

இலட்சிய   நடிகர்  எஸ்.எஸ். ராஜேந்திரன் வாழ்வில்
அபூர்வமான    தருணங்கள்

 இலட்சிய   நடிகர்  எனப்புகழப்பட்டவரும்  எஸ்.எஸ்.ஆர்.  என்று  மூன்று   எழுத்துக்களினால்  தமிழ்த்திரையுலகில்  பிரபலமடைந்தவருமான  ராஜேந்திரனுக்கும்  சிவாஜிகணேசனைப்போன்று  முதலாவது  படம் கலைஞர்   கருணாநிதியின்  வசனத்தில்  வெளியான  பராசக்தி  படம்தான். கடந்த   வாரம்  அவர்  சென்னையில்  மறைந்தார்.  அண்ணாத்துரை, கருணாநிதி,   எம்.ஜீ.ஆர்,    ஜெயலலிதா   ஆகிய  முன்னாள்  முதல்வர்கள்  சிவாஜி,   நாகேஷ்,   சகஸ்ரநாமம்,   தயாரிப்பாளர்கள்  ஏ.வி.எம்,      ஏ.எல்.எஸ்,    கவிஞர்   கண்ணதாசன்,    இயக்குநர்கள்  கிருஷ்ணன்,    பஞ்சு,   நடிகை   விஜயகுமாரி  ஆகியோருடன்  எஸ்.எஸ்.ஆர்.  நின்று  எடுத்துக்கொண்ட  படங்கள்  அபூர்வமானவை.

அரசியலிலும்  சமூகத்திலும்  தனிப்பட்ட  வாழ்விலும்  எதிரும்    புதிருமாக நின்ற   இவர்களில்   சிலர்  இவ்வாறு   படங்களில்  இணைந்ததும்    அபூர்வமான    தருணங்கள்தான்.


தகவல்: முருகபூபதி

சூரசம்ஹாரம் அல்லது சூரன் போர் 29.10.2014

.
சூரசம்ஹாரம் அல்லது சூரன் போர் அடுத்த வாரம் புதன் கிழமை 29.10.2014 அன்று நடக்கவிருக்கின்றது.

KARTHIK MUSIC EXPERIENCE 02 .11 2014லைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர் - கானா பிரபா

.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவில்


மூத்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் காலமான செய்தி எட்டியிருக்கிறது.
என் சிறு வயதுகால வாசிப்பில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்கள் தவிர்க்க முடியாதவை. நீண்ட பல வருடங்களுக்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டில் அவர் அவள் விகடனில் கொடுத்த பேட்டி உலுக்கிப் போட்டது. எவ்வளவு பெரிய எழுத்தாளர் கைவிட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார் என்ற கவலை மேலிட அவரின் நினைவைத் தாங்கிய நனவிடை தோய்தலை அப்போது எழுதினேன் அதை மீள் பகிர்வாக இங்கே தருகின்றேன்.

"லைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர்"

வேலைக்குப் போவதற்காக ரயிலில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குக் குறைவில்லாத பயணம். அந்த நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கண்களுக்கு மட்டும் தீனி தேடவேண்டும். எனவே வழக்கம் போல் வாரப்பத்திரிகைகள் வாங்கும் கடைக்குப் போகின்றேன். அங்கே "அவள் விகடன்" சஞ்சிகையின் பதினோராவது ஆண்டு மலர் இருந்தது. புரட்டிப் பார்த்து விட்டு அதையும் எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரையைத் தவிர ஆனந்த விகடனில் உருப்படியாக ஒன்றும் வருவதில்லை என்பது என் பல ஆண்டு விகடன் வாசிப்பில் நான் எடுத்த அனுமானம். அதனால் தான் அவள் விகடனில் ஆவது ஏதாவது சமாச்சாரங்கள் கிட்டுமே அதை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் ரயில் பயணத்தில் பிரிக்கின்றேன் அதன் பக்கங்களை. அதில் வந்த முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.

அப்பா... எங்கே போனீர்கள்...? (சிறுகதை) -நவீனன் ராசதுரை

.
   
  அன்று  வீட்டில்  அம்மாவுக்கும்  அப்பாவுக்கும்  இடையே   நீண்ட வாக்குவாதம்.   எதைப்பற்றி  என்று    எனக்குத்  தெரியாது.  எனக்கு அப்போது  பத்துவயதுதான்   இருக்கும்.
குசினிக்குள்  நான்  நுழைய  எத்தனிக்க  நீ.... அங்காலே  போ... என்று அம்மா   என்னைத் துரத்திவிட்டார்.
எந்த    வீட்டில்தான்  வாக்குவாதம்  இல்லை? பழக்கப்பட்டுப்போய்விட்டது.   ஆனாலும்  அன்று  ஒரு  பெரிய வித்தியாசம். 
திடீரென்று  வாக்குவாத  சத்தம்  நின்றது.  அம்மா   என்னிடம்  ஓடிவந்து ஓடு....   ஓடு....   போய்க் கூட்டிக்கொண்டு  வா !  கடலில்  குதித்து சாகப்போகிறேன்    என்று  சொல்லிவிட்டுப்  போகிறார்  அப்பா  என்றார் அம்மா.
கட்டிலில்   படுத்திருந்த  நான்    என்ன  என்று  கேட்டவண்ணம்  துள்ளி   எழுந்தேன்.
ஓடு ...ஓடு... என்று    கத்தினார்  அம்மா.  எங்கே    குதிப்பார்...?  என்று பதறியபடி   கேட்டேன்.
ஓடு... ஓடு.... ஸ்டேசனுக்குக் கிட்ட  இருக்கிற  கடலாய்த்தான்  இருக்கும்   என்றார்    அம்மா.
நாங்கள்    அப்போது    கொழும்பு  கொள்ளுப்பிட்டியில்    வாழ்ந்து வந்தோம்.   அங்கே  பாலர்  பள்ளிக்கருகில்  கடல்  இருக்கிறது. அதுவாய்   இருக்கும்  என்று  எண்ணிக்கொண்டு  ஓடினேன்.
ஐயோ... அப்பா...?   என்று    எனக்குள்  அழுதபடி  ஓடினேன்.   அம்மா சொன்ன   விதத்தில்  நான்  சொல்லித்தான்  அப்பாவின்  மனதை மாற்றவேண்டும்  போல  இருந்தது.
ஒரு   பத்து  நிமிடம்  ஓடியிருப்பேன்.
காலி  வீதியைக் கடந்து  பாலர்  பள்ளிக்கருகாமையில்  வந்ததும் என்னை   பயம்  பிடித்துக்கொண்டது.  ஒரே  இருட்டு...!  அத்துடன்  கடல் அலைகளின்   இரைச்சல்...!   பள்ளிக்கூட  விளையாட்டுத்திடல் மயானம்   போல  இருந்தது!   உள்ளே  போக  பயமாக  இருந்தது.

சங்க இலக்கியக் காட்சிகள் 29- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

ஊரும் கொடியது அவன் உள்ளமும் கொடியது.பண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமமாகிய மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் உழவுத்தொழிலால் உயர்ந்து நின்றார்கள். நல்ல வருமானம், வளமான வாழ்க்கை, வசதியான வீடு, போதிய ஒய்வு நேரம் என்றிப்படி எல்லாமே அமைந்து நாகரிகத்தில் சிறந்திருந்தார்கள். அத்தகையவர்களில் அவனும் ஒருவன். முறைப்படி திருமணம்செய்து தலைவியுடன் வாழ்க்கை நடத்திவந்த அந்தத் தலைவனுக்கு, அவளிடம் பெற்ற இன்பம் அலுத்திருக்க வேண்டும், அல்லது பரத்தையரிடம் பெறுகின்ற இன்பம் இனித்திருக்க வேண்டும். அதனால், அவன் என்ன செய்கிறான், அடிக்கடி புதிய புதிய பரத்தைப் பெண்களை நாடுகிறான். தலைவியை நிரந்தரமாகவே விட்டுப் பிரிந்தவன்போல அவளை எட்டியும் பார்க்காமல் இருக்கிறான். அவனின் நினைவால் வாடும் தலைவிக்கு அவனைப்பற்றித் தலைவியின் தோழி எடுத்துரைக்கிறாள். அவனின் கெட்ட குணங்களைப்பற்றி விளக்குகின்றாள்.

கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்

.

உலகச் செய்திகள்

.

சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 20 தாலிபன் பயங்கரவாதிகள் பலி

சர்வதேச எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணைத் தூக்கிலிட்டது ஈரான்

உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பேராபத்து'

"சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலை இயக்கத்தில் தளபதியாகவும், முன்னாள் பிரதமர் ஜவாஹர் லால் நேருவின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய ஏ.சி.என். நம்பியார், சோவியத் ரஷியாவுக்கு உளவாளியாகச் செயல்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல்களை லண்டனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1924ஆம் ஆண்டு பெர்லின் நகருக்குப் பத்திரிகையாளராக சென்ற நம்பியார், அங்குள்ள இந்திய கம்யூனிஸ இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். 1929ஆம் ஆண்டில் மாஸ்கோவுக்கு சோவியத் ரஷியாவின் "விருந்தாளி'யாகச் சென்றிருந்தார்.

24.10.2014 விழுதல் என்பது எழுகையே.. பகுதி 23 எழுதுபவர் திருமதி சிறீறஞ்சனி அவர்கள் கனடா

.
விழுதல் என்பது எழுகையே என்னும் பெயரில் பல உலக தமிழ் எழுத்தாளர்கள் தொடராக எழுதும் நீள் கதையை தமிழ்முரசு தொடற்சியாக பிரசுரிக்க உள்ளது என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம் .


தெல்லிப்பழையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா தற்போது கனடாவில் வாழ்கிறார். இவரது முதலாவது சிறுகதை, ‘மனக்கோலம்’, ஏப்ரல் 1984 ல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது.
ஈழநாடு, தினக்குரல், மல்லிகை, ஞானம், நான், ஜீவநதி, உதயன், வைகறை, தூறல், காலம், காலச்சுவடு, யுகமாயினி,வல்லினம், பதிவுகள், மகாஜனன் ஆண்டுமலர்கள், திண்ணை, Tamailauthors.com, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிக் கைநூல், தாய்வீடு, முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) போன்றவற்றில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாக,
தமிழ் படிப்போம், பகுதி 1 & பகுதி 2 எனும் இரு நூல்களை 2009லும்
நான் நிழலானால் – சிறுகதைத் தொகுப்பை (யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு)- 2010 லும் இவர் வெளியிட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான ஸ்ரீரஞ்சனி தற்போது அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் ரொறன்ரோ கல்விச்சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும் தொழில் புரிகின்றார்.
விழுதல் என்பது எழுகையே  பகுதி 23

எழுதியவர் சிறீரஞ்சனி கனடா தொடர்கிறது…

 ‘போன கிழமை கலா சொன்ன செய்தி இன்னும்தான் என்ரை மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்குது. அங்கை ஒரு தாய் தன்ரை இரண்டு பிள்ளையளையும் கொன்று போட்டு தானும் தற்கொலை செய்திட்டாவாம்.”

தனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ்ணன். - முருகபூபதி

.
அடுத்தடுத்து     எமது  இலக்கியக்குடும்பத்தில்  பேரிழப்பு
எல்லாம்   இழந்து  நிர்க்கதியான  பின்னரும்  தனது  உடலை   தானமாக  வழங்கிய   சகோதரி  ராஜம் கிருஷ்ணன்.
  
அவுஸ்திரேலியா - சிட்னியில்  கடந்த  14  ஆம்  திகதி  மறைந்த மூத்தபடைப்பாளி  காவலூர்  ராஜதுரையின்  இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட  பின்னர் சிட்னி  மத்திய  ரயில்   நிலையத்திற்கு  வந்து  மெல்பன்  புறப்படும்  ரயிலில்  அமர்ந்திருக்கின்றேன்.
பத்திரிகையாளர்   சுந்தரதாஸ்   கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றார்.
காவலூரை   வழியனுப்பிவிட்டு  புறப்பட்டீர்கள்.  மற்றும்  ஒருவரும் மீள   முடியாத  இடம்  நோக்கிப்புறப்பட்டுவிட்டார்  என்ற  செய்தி வந்துள்ளது  என்றார்.
யார்...? எனக்கேட்கின்றேன்.
ராஜம்கிருஷ்ணன்  என்கிறார்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
10 வயதில் நாடகத்தில் சேர்ந்த எஸ்.எஸ். ராஜேந்திரன்: சிவாஜி கணேசனுடன் சினிமாவில் அறிமுகம்
சிறு வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1952 தீபாவளிக்கு வெளிவந்த "பராசக்தி'' மூலம் சிவாஜி கணேசனுடன் திரை உலகில் அறிமுகமானார். "இலட்சிய நடிகர்'' என்று புகழ் பெற்றார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள சேடப்பட்டி கிராமம். இவருடைய தந்தை சூரியநாராயண தேவர். கல்வி அதிகாரியாக பதவி வகித்தவர். தாயார் ஆதிலட்சுமி. எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு சகோதரி உண்டு. அவர் பெயர் பாப்பம்மாள்.
எஸ்.எஸ்.ஆர். 1928-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார்.
சிறு வயதிலேயே 5-வது வகுப்பை முடித்த எஸ்.எஸ்.ராஜேந் திரன் 6-வது வகுப்பில் சேர்வதற்கு மேலும் ஒரு வயது தேவை என்பதால், ஒரு ஆண்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடகம்
அப்போது தந்தையின் நண்பரின் வேண்டுகோளால் புளியமா நகரில் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். `வீரஅபிமன்யு' நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

சிட்னியில் அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வு

.
சிட்னியில்மூத்த  எழுத்தாளர்  அமரர்  காவலூர்  ராஜதுரை
  இறுதி  நிகழ்வு  பெரும்  திரளான  மக்கள்   கலந்துகொண்டனர்.

 
இலங்கையின்   மூத்த  எழுத்தாளரும்  இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்  முன்னாள் நிகழ்ச்சித்தயாரிப்பாளருமான  காவலூர்  ராஜதுரையின் மறைவையடுத்து   அன்னாரின்  இறுதிநிகழ்வுகள்  சிட்னியில்    நடைபெற்றபொழுது    பெரும்  திரளான  மக்கள்   கலந்துகொண்டனர்.

தமது   83   வயதில்   காலமான  காவலூர்  ராஜதுரையின்  இறுதி நிகழ்வு   -  இரங்கல்  நிகழ்ச்சி  கடந்த  20   ஆம்  திகதி  சிட்னியில்        Red gum Centre   இல்    நடைபெற்றது.
 திருவாளர்கள்  Mark Schulz ,   திருநந்தகுமார்,    சரத்  விக்கிரமகே,  இரா. சத்தியநாதன்,   எழுத்தாளர்கள்   மாத்தளை  சோமு,  முருகபூபதி மற்றும்   இலங்கை  ஒலிபரப்புக்கூட்டுத்தாபன  தமிழ்ச்சேவையில் பணியாற்றிய   திருமதி  ஞானம்  ரத்தினம் , வானொலி  மாமா  நா. மகேசன்   ஆகியோர்  ராஜதுரையின்  சிறப்பியல்புகளையும்  அவரது பல்துறை   ஆற்றல்களையும்  விதந்து  குறிப்பிட்டு   உரையாற்றினர்.

கடலோடி... எபோலா...

கடலோடி... எபோலா...
கோவை நந்தன்
அறிவியல் வளர்ச்சியின் உச்சியில், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித இனத்தை அப்பப்போ அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று ஆட்டி, அழித்துக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையின் சீற்றங்களை விட இன, மத, தேசிய  மனித முரண்பாடுகள் ஏற்படுத்தும் அழிவுகனை விட ,ஏனைய அனைத்து காரணிகளாலும் ஏற்படுத்தப்படும் அழிவுகளை விட காலம் காலமாக அப்பப்போ மனித குலத்தை மிரட்டிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருப்பது நோய்க்கிருமிகள் என்ப்படும் அழிவு நாசினிகள் தான்.

இந்த வகையில் இன்று உலகை அச்சுறித்திக் கொண்டிருப்பது எபோலா என்னும் நுண்ணுயிரி. இதன் தாக்கத்தால் இன்றைய திகதி வரை லைபீரியா, சியராலியோன், நைஜீரியா, கினியா உள்பட்ட பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 3400 பேர் வரை பலியாகியும் 7,200 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த கொடிய நோய் ஏற்படுத்தும் அழிவுகள் பலமடங்கு அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் பிளேக்,கொலரா,அம்மை போன்ற நோய்களால் பல கிராமங்கள் பூண்டோடு அழிந்த பல சரித்திரங்களை கண்ட நாம், சூரியமண்டல கிரகங்களுக்கே விண்கலன்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்த வேளையிலும் கூட மீண்டும் அதேபோன்ற அழிவுகளை சந்திக்கிறோம், தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறோம் என்றால் இந்த ஆய்வுகளும் மனித சமூகத்தின் அறிவியல் வழர்ச்சியும் எதைத்தான் சாதிக்கப் போகிறது....?


இலங்கைச் செய்திகள்

.
19 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் நிறைவேற்றிக்கொள்ள பூரண ஆதரவு ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு

tpf;Nd];tuDf;Fk; eNue;jpu Nkhbf;fk; mLj;j khjj;jpy; re;jpg;G

19 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் நிறைவேற்றிக்கொள்ள பூரண ஆதரவு ரணில் விக்கிரமசிங்கஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அத்துரலிய ரத்ன தேரரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்கின்றது. அத்துடன் மேற்படி சட்டமூலத்தை நவம்பர் மாதத்தில் பாராறுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசு உத்தேசித்திருக்குமானால் அதனை ஏகமனதாகவே நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விசேட விவாதம் இதன்போது எதிர்க்கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அவ்வை நடராசனுக்கு தினத்தந்தி "மூத்த தமிழறிஞர்' விருது

.

தினத்தந்தி நாளிதழ் சார்பில், இந்த ஆண்டுக்கான "மூத்த தமிழறிஞர்' விருது, முனைவர் அவ்வை நடராசனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளிப் பட்டயத்துடன் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டது இந்த விருது.
இலக்கியப் பரிசு ரூ.2 லட்சம் பெறுபவர், டாக்டர் ஜி.பாலன். இவர், காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். இவர் எழுதிய "விடுதலை இயக்கத்தில் தமிழகம்' என்ற நூலுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
மறைந்த சி.பா.ஆதித்தனாரின் 110-வது பிறந்த நாளான சனிக்கிழமை (செப்.27) மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். இரா.தாண்டவன் அவர்கள் தலைமை தாங்கி, இலக்கியப் பரிசுகளை வழங்கி, உரை நிகழ்த்துவார்.

பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்.

.
  பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன்,
திருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார்.

 "வேருக்கு நீர்', "கரிப்பு மணிகள்', "குறிஞ்சி தேன்', "அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.


பாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். "சாகித்ய அகாதெமி', "சரஸ்வதி சம்மான்', "பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.
nantri vidio sinnakuddy1.blogspot

தமிழ் சினிமா - கத்தி

.

குறையொன்றுமில்லை, வெண்ணிலா வீடு என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கத்தி! விஜய்யின் முந்தைய படங்களான காவலன், துப்பாக்கி, தலைவா படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா?, வெளிவராதா.? என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது!!


வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.


அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான்! ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, கத்தி மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் கத்தி கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தியின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே!


கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களின் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் நான் ஈ பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளந்து கட்டியிருக்கிறார்.

தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லொக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.

பத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ.? ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்! ஏன் இந்த கொலவெறி.?

குளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.? பலவீனமா தெரியவில்லை.!

ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லொக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லொகேசன்களிலும் சரி பிய்த்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.

அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களின் இசையில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்!

ரமணா, 7ம் அறிவு, துப்பாக்கி... என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித புரட்சி கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.

ஆகமொத்தத்தில், கத்தி - காலத்திற்கேற்ற புத்தி! - கலெக்ஷ்ன் உத்தியும் கூட...!!
- See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1525&ta=I#sthash.sTmn7uqT.dpuf