தென்றல் என்ற பெயரை இழந்தவள் நீ -செ.பாஸ்கரன்
.
காதலில்லை எனக்கு
கடும் கோபம்தான்
நேற்று என் மூச்சுக்காற்றாய்
நீயிருந்தாய்
என் உயிரே நீயென்றிருந்தேன்
சுவாசம் புகுந்து மனதைத் தொட்டபோது
என் இதயத் துடிப்பாகினாய்
ஆங்கிலப் புத்தாண்டு : முடிவிலியில் ஆரம்பிக்கும் அழகிய கனவு
.
(01.01.2011) : நயனி
(01.01.2011) : நயனி
சற்றுப்பின்னர்…
கண்டங்கள் கடந்து,
ஆறுகள், மலைகள், பனிப்படலங்கள்,
இரத்தமும் சதையும்,
பிணங்களும், கொல்லப்படுவோரும்,
அனைத்தும் அணிவகுக்க,
ஒரு கனவுகூட மிஞ்சவில்லை -சிறுகதை
.
லறீனா அப்துல் ஹக், இலங்கை
இம்முறை பல்கலைக்கழகத்தில் இருந்து நான் ஒரு தீர்மானத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தேன். செமஸ்டர் எக்ஸாமுக்கு நானும் ஸல்மாவும் எங்கள் வீட்டில் இருந்து படிக்கப் போகிறோம். வருடக் கணக்காகப் பூட்டிக் கிடக்கும் தொங்கல் அறையைச் சுத்தப்படுத்தி அதற்குத் தயார் செய்துவிட வேண்டும். வாப்பாவிடம் அதைச் சொன்னபோது அவர் அதை அவ்வளவாக விரும்பவில்லை என்பது அவரின் முகக் குறியிலிருந்தே விளங்கியது. ஆனால், ஹொஸ்டலில் இருந்து சரியாகப் படிக்க முடியவில்லை. சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் ஒரே பிடியாக நிற்கவும் உம்மாவும் அப்பாவும் என் சப்போர்ட்டுக்கு வந்துவிட்டார்கள். “என்னவோ பண்ணித் தொலை” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு வாப்பா கடைக்குப் போனதும் ஏதோ பெரிதாக சாதித்துக் கிழித்தது போல இருந்தது, எனக்கு. நானும் அப்பாவும், வலது உள்ளங் கைகளை மோதி “ஃபைவ்” அடித்து மகிழ்ந்தோம். நான் எப்போதுமே அப்பாவின் செல்லப் பிள்ளைதான்.

மகாவம்சத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி -1
.
-நடராஜா முரளிதரன்-
-நடராஜா முரளிதரன்-
அமெரிக்காவில் வாழும் “அர்ஜுனா குணரத்னா” என்ற சிங்கள எழுத்தாளர் மகாவம்சத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி எவ்வாறு சிங்கள மக்களின் உணர்வுகள் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறித்து எழுதிய கட்டுரையொன்றினை சாரமாகக் கொண்டு இக் கட்டுரை எழுதப்படுகிறது. (ஆதார நூல் : வியூகம் இதழ் -2, கட்டுரை -: வரலாற்றுப் பிரக்ஞையின் உருவாக்கம்; மகாவம்சத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி)
சிங்கள மக்கள் தம் கற்பனையில் தங்களது வரலாறு தொடர்பான ஐதீகங்களை, உணர்வுகளை எவ்வாறு பற்றிப் பிடித்துள்ளார்கள்? அது அவர்களது ஆழ்மனதில் எவ்வாறு புதைந்து கிடக்கின்றது? என்பவை குறித்துப் பல ஆதாரங்கள் பேசப்படுவது வழக்கம். முக்கியமாக ஆய்வாளர்களால், எழுத்தாளர்களால் இவை குறித்த ஆக்கங்கள் பல்வேறு கோணங்களிலிருந்தும் எழுதப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற திரையுலக நட்சத்திரம் எலிசபெத் ரெய்லர் காலமானார்
.
வாஷிங்டன்: இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற திரையுலக நட்சத்திரமான எலிசபெத் ரெய்லர் 23 ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை தனது 79 ஆவது வயதில் லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.
இரு தடவைகள் ஒஸ்கார் விருதை வென்ற நடிகையான ரெய்லர் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அண்மைக் காலமாக இருதயக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா?
.
- சந்திரலேகா வாமதேவா –
புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா? இது என்ன அபத்தமான கேள்வி என்று எம்மில் பலர் நினைப்போம். வேறு சிலர் இந்த வினாவுக்கு வேறு விதமாக, அதாவது தமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி அறிவு அவசியமில்லை என்று பதில் அளிப்பார்கள். ஆங்கிலம் தலைமை மொழியாக இருக்கும் இந்த நாட்டில் தமிழைப் படிப்பதனால் என்ன ஆகப்போகிறது? அது பணம் ஈட்ட உதவுமா? என்பது இல்லை என்போர் கேட்கும் எதிர்க் கேள்விகள். பணம் மட்டுமா வாழ்க்கை? மனித வாழ்வுக்கு பல உயர்ந்த அர்த்தங்கள் உள்ளன. படிப்பதும் பணம் உழைப்பதும் மட்டும் வாழ்க்கை என்று நினைத்து நாம் வாழ நினைத்தால் மனித வாழ்வு அர்த்தமற்றுப் போகும். படிப்பதும் பணம் உழைப்பதும் மட்டும் வாழ்க்கை என்று எல்லோருமே நினைத்திருந்தால் உலகம் இவ்வளவு முன்னேற்றங்களைச் சாதிக்க முடிந்திருக்குமா? பெருந்தொகையானோர் தம் வாழ்வை அர்ப்பணித்து உலகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருக்கிறார்கள். பலர் தமது சொகுசான வாழ்வைத் துறந்து உதவப் போனதால்தான் ஏழைகள், நோயுற்றவர்கள், யாருமற்ற ஏதிலிகள் இன்று ஓரளவில் வாழமுடிகிறது.
இலங்கைச் செய்திகள்
1. பாலியல் கல்வியின் தேவை குறித்த அக்கறைகள்
2. தேர்தல் முடிவுகள் குறித்த வியாக்கியானங்கள்
3. தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்
4 . அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது

இலங்கையில் வருடமொன்றுக்கு 2 இலட்சம் வரையிலான சட்டவிரோதக் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாகப் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் பாடசாலை பாட விதானத்தில் பாலியல் கல்வியையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடையத் தொடங்கியுள்ளன. 2011 ஆம் ஆண்டின் யுனிசெவ் அறிக்கையில் இலங்கையில் இளம் பருவத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கு 28 பேர் என்ற அடிப்படையில் 15 முதல் 19 வயது வரையான சிறுமியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 84 ஆயிரம் சிறுமியர்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் அதேவேளை நாட்டிலுள்ள மூவாயிரத்துக்கு மேற்பட்ட சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையங்கள் மூலமாக நாளொன்றுக்கு 550 முதல் 700 என்ற கணக்கில் வருடமொன்றுக்கு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றமையே தற்போது இலங்கையில் பாலியல் கல்வியின் அவசியத்தை புத்திஜீவிகள் மட்டத்தில் உணர்த்தியுள்ளது.
வழிகாட்டும் முன்… மஷூக் ரஹ்மான்
.
சென்ற கட்டுரையில் ஆசிரியர் மாணவர் உறவில் இருக்க வேண்டியச் சமநிலை பற்றி பார்த்தோம்… இந்த வாரமும் அதே மையக் கரு தான்இ ஆனால் வேறு கோணத்தில் பார்க்கப் போகிறோம்.
மாணவர்களை கையாளும் முறை… சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒன்று! ஒரு முன்னணி தொலைக்காட்சிக்காக பேட்டி காணப்பட்டபோது என்னை கேட்கப் பட்ட கேள்வி அது! நீங்கள் இன்றைய மாணவர்களிடம் என்ன மாற்றத்தைப் பார்க்கின்றீர்கள் என்பதே அந்தக் கேள்வி! வெகுவான மாற்றங்கள் உள்ளன…குறிப்பாக நல்ல மற்றும் கெட்ட மாற்றங்கள் எல்லா காலத்திலும் இருந்ததைவிட அதிகமாகி இருப்பதைக் குறித்துப் பேசிவிட்டு சரியான counselling மூலம் தவறான மாணவர்களை நல்வழிப்படுத்த இயலும் என்று சொன்னேன்
அடுத்த கேள்வி: புதிய நல்ல கருத்துக்களைச் சொல்கையில் மாணவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதாக இருந்தது.
என் அணுகுமுறையைப் பற்றி சொல்ல நேர்ந்தது… சில வரிகளில் அதை இங்கே குறிப்பிட்டு நிறைவு செய்கிறேன்
அதாவது… ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் முன் தங்கள் கொள்கைகளை தம் வாழ்வில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். தங்களின் நிறை குறைகளையே மாணவர்களுக்கு உதாரணமாகச் சொல்கையில் அனுபவ ரீதியில் நாம் பேசுகிறோம் என்பதைத் தெளிவு படுத்துவதுடன் நாம் விதைக்க நினைக்கும் பண்புகள் செயலாகச் சாத்தியமானவையே என்பதையும் புரிய வைக்க முடியும். இதனைச் செய்து ஓரளவிற்கு வெற்றியும் கண்டு இருக்கிறேன்.
ஆசிரியர்கள் தங்கள் இமேஜ் பற்றி கவலைப்படாமல் மாணவர்களிடம் வெளிப்படையாக தங்கள் வெற்றி தோல்விகளை மேற்கோள் காட்டலாம்
அடுத்த வாரம் சந்திப்போம்

கவியரசரின் கைவண்ணம்
.
மென்மையானபாடல் என்பது எது என்று கேட்டால் இந்தப் பாடலை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கவிதாலயா தயாரிப்பில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நெற்றிக்கண் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் .. தோன்ற .. இசைஞானி இளையராஜா அமைத்த இசையில் விளைந்த பாடல்!

ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு...
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணமேது
இளவேனிர்காலம் வசந்தம்..
ஒரு கோயில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
உலகச் செய்திகள்
1. அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்
2. ஜப்பான் மீண்டும் உயிர் பெற 5 ஆண்டுகள் ஆகும்.
1. அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்
2. ஜப்பான் மீண்டும் உயிர் பெற 5 ஆண்டுகள் ஆகும்.
1. அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்
தண்ணீர் தரும் ஆரோக்கியம்
.
மனிதனுடைய ஆரோக்கிய வாழ்வுக்கும் , நீருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நீரை சரியானபடியும் தேவையான அளவு பயன்படுத்தாவிட்டால் பல விதமான நோய்களுக்கு இலக்க்காக வேண்டிவரும். நீரின் உதவி இல்லாவிட்டால் நாம் உண்ட உணவின் ஜீரனபணியே சரி வர நடைபெறாது . நாம் உண்ணும் உணவின் சத்துக்களை உடல் பயன் படுத்திக் கொண்டதும் அதன் சக்கைகளான கழிவுப்பொருட்களை வெளிஏற பயன்படுவதற்கு நீர் தான் உதவிபுரிகின்றது. போதிய அளவு நீர் பருகாவிட்டால் மனிதனுக்கு மலசிக்கல் ஏற்ப்பட்டு அதன் காரணமாக பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்ப்படும். நீரில் கரைந்திட்ட நிலையில் தன சத்துக்கள் அந்தந்த இயக்கத்துக்கு ஆதாரமான செல்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றது. நமது உடலுக்குள் மிக நுண்ணிய துளைகள் உள்ள தடுப்புச் சுவர் ஜவ்வுகள் பலவுள்ளன .இந்தச் சவ்வுச் சுவர்களின் இரு புறமும் ஏற்ப்படும் வாயு அழுத்தத்தைச் சமன் படுத்தும் பணிஎனை நீர் செய்கின்றது .
மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா
.
31. என் திருப்பணி
31. என் திருப்பணி
வேதத்தின் பால் நான் செலுத்துகின்ற அன்பிற்கு, மனித சமூகத்தின்பால் நான் செலுத்துகின்ற அன்பு மட்டுமே ஈடு இணையாகும். நினைவிற் கொள்ளுங்கள்: என்னுடைய திருப்பணி, சரியாக நான்கு கூறுபாடுகளைக் கொண்டது!
அவை:
வேதத்தைப் பேணி வளர்த்தல் (வேதபோஷணம்)
வித்வான்களைப் பேணி வளர்த்தல் (வித்வத்போஷணம்)
அறத்தைப் பாதுகாத்தல் (தர்மரசஷணம்)
அன்பர்களை பாதுகாத்தல் (பக்தரசஷணம்)
இந்த நான்கையும் நோக்கித்தான் நான் என்னுடைய அருளையும் ஆற்றலையும் பரப்பித் செலுத்துகின்றேன். இவற்றின் மையத்தில்தான் நான் என்னையே நிறுவிக் கொள்கின்றேன்!
தமிழ் சினிமா
.
ஐவர்
ஐவர்
ரமணாவும் திருவும் நண்பர்கள். தனக்கு மனைவியை ரமணா தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அவர்கள் இறுக்கமாகிறார்கள். ரமணாவுக்கு திருமணம் முடிந்து முதலிரவில் இருக்கும் போது திருவுக்கு அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வர மனைவியை விட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான்.
அவன் நடவடிக்கை மனைவியை எரிச்சலூட்டுகிறது. நண்பர்களை பிரிக்க சதி செய்கிறாள். தம்பியை விட்டு திரு மேல் திருட்டு பழி சுமத்தி கணவனிடம் இருந்து விலக்குகிறாள். ஆத்மார்த்த நண்பன் மனமாற்றத்தால் திரு நொறுங்கி குடிகாரன் ஆகிறான்.
பத்தாம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்று
1ம் காலிறுதிப் போட்டி பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள்
2ம் காலிறுதிப் போட்டி இந்தியா – அவுஷ்திரேலியா
3ம் காலிறுதிப் போட்டி நியூசிலாந்து – தென் ஆபிரிக்க
2ம் காலிறுதிப் போட்டி இந்தியா – அவுஷ்திரேலியா
3ம் காலிறுதிப் போட்டி நியூசிலாந்து – தென் ஆபிரிக்க
4ம் காலிறுதிப் போட்டி இலங்கை – இங்கிலாந்து
புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்காக STARRTS என்ற அமைப்பு
.
புது நாட்டில் வாழ்வை நிலைப் படுத்துதல்
புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்காக STARRTS என்ற அமைப்பு தமிழ் பண்பாட்டைக் காப்பதுடன் அவுஸ்திரேலியாவில் கிடைக்கின்ற வாழ்க்கை வளங்களை அறிவதற்கும் அநுபவிப்பதற்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.அது வாரம் ஒரு நாள் 3 மணி நேரம் 9 வாரங்கள் தமிழில் நடைபெறும்.
இத் தொடரில் புதிய நாடொன்றில் குடியேறும் போது நாம் எதிர் கொள்ளும் குடியேற்றப் பிரச்சினைகள், போரின் தாக்கங்களில் இருந்து மீழுதல்,வேலைவாய்ப்புச் சிக்கல்கள், கல்வி வீட்டு வசதி, குழந்தை வளர்ப்பு, குடும்ப ஒற்றுமை, இணக்கப் பாடான வாழ்க்கை ஒன்றை கட்டி எழுப்புதல்,இங்கு கிடைக்கும் சேவைகள்,அவற்றைப் பெறும் வழி வகைகள்,வருவாய்க்குத் தக்க மகிழ்ச்சிக்கான சுற்றுலா வாய்ப்புகள் போன்ற தகவல்கள் உள்ளடங்குகின்றன.
மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நடைபெறும் 15 பேர்கள் கொண்ட இம் அமர்வு முற்றிலும் இலவசமானதாகும்.குழந்தைப் பராமரிப்பும், இடை நேரச் சிற்றுண்டியும் வழங்கப் படும்.
இந் நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பினாலோ அல்லது மேலதிக தகவல்களைப் பெற விரும்பினாலோ பின் வரும் தொடர்புகளை நாடுங்கள்.
ஜீவா.பார்த்திபன்;0415960391
jivajiva@yahoo.com
யசோதா.பத்மநாதன்;0403051657
yasonathan@yahoo.com.au
”தகவல்களை அறிவதன் மூலம் சேவைகளைப் பெற்றுயர்வோம்”
Subscribe to:
Posts (Atom)