நம்மோடு வந்து நம்மோடு செல்லும் - - எச்.ஏ. அஸீஸ்

.
ஒரு தோற்றம் மட்டும் தெரியும் 
துல்லியமாய் வேறெதுவும் தென்படாது
காது மூக்கு கண்கள் வாய் என
யாதும் அதில் விளங்குமாமோ
முழுத்   தோற்றம் மட்டும் தெரியும்
இருளில் மறைந்து நின்று
ஒளியில் மீண்டு வரும்
பொத்தி எடுத்து பையில் வைக்க
பொருளு மல்ல அது
போவெனச் சொல்லி போவதுமில்லை
வாவெனச் சொல்லி வருவது மில்லை
சித்தரிக்க முடியாது வர்ணம் தீட்டி
காது கழுத்து
கையெல்லாம் நாம் அணியும்
ஏதும் அதன் தரிப்பில்
இடம் கொள்வ தில்லை
முகத்தழகு சந்தணமோ
மெருகூட்டும் கலவைகளோ
வாசனையோ பைரவி, வைஷ்ணவி ஜெயகுமாரின் அரங்கேற்றம் - நாட் டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

பைரவி, வைஷ்ணவி சகோதரிகளின்  அரங்கேற்றம் 20 ஆம் திகதி ஜூன் மாதம் 2015 இல்  U.N.S.W Science அரங்கில் வெகு விமரிசையாக நடந்தேறியது . சிறிது கால தாமதமாகவே மண்டபத்தில் நுழைந்தோம். இரு அழகிய பெண்கள் ஜொலித்த வண்ணம் ஆடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடை அவ்வாறு ஜொலிக்க வைத்தது. இருவருமே நேர்த்தியான உடற்கட்டும் அழகிய முகமும் இறைவன் கொடுத்த வரம்., அங்க சுத்தமாக கல்யாணி இராகத்தில் அமைந்த ஜதீஸ்வரத்தை ஆடிக்கொண்டிருந்தனர். கலாஷேத்திராவின்  பாணியில் அமைந்த ஆடல், சாந்தா தனஞ்சயன் தம்பதியர் ஆடிய அதே உருப்படி. பல வருடங்கட்கு முன் பார்த்தாலும் மனதில் பதிந்துவிட்டது. பிரேமா அனந்தகிரிஷ்னனும், சுருதி பாலாஜியும் தனித்தும் இணைந்தும் பாடினார்கள். இத்தனை அருமையான பாடகர் அரங்கேற்றத்துக்கு பாடக் கிடைத்தமை பாக்கியமே.
அடுத்து ஆடிய வர்ணம் நாட்டை குறிஞ்சி இராகத்தில் பாபநாசம் சிவன் ஆக்கிய "சுவாமி நான் உந்தன் அடிமை" இரு பெண்களும் உணர்ந்து இரசித்து ஆடினார்கள். சஞ்சாரி பாவத்தில் மார்கண்டேயர் , நந்தனார் கதைகள் இணைந்தமை அருமையாக இருந்தது.

தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழக பாலேந்திராவுடன் சிட்னி இலக்கியபவர் சந்திப்பு - செ.பாஸ்கரன்கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப் பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர்
க. பாலேந்திரா அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னிக்கு  வருகை தந்திருந்தபோது சிட்னியில் சிறந்த நாடகங்களை மேடையேற்றும்  ஒரு அமைப்பான அரங்க கலைகள் சக இலக்கியபவர்  திரு .பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோரை சென்ற ஞாயிற்றுக்கிழமை 21.06.2016 அன்று சந்தித்து கலந்துரையாடியது . உலக நாடகங்கள் , தமிழில் சிறுவர் நாடகங்கள் மொழிபெயர்ப்பு நாடகங்கள், தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி போன்ற பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது  கலந்துரையாடப்பட்டது. 

பிரபல நாதஸ்வர மேதை மு.பஞ்சாபிகேசன் காலமானார்

.

பிரபல நாதஸ்வர மேதை மு.பஞ்சாபிகேசன் தனது 91ஆவது வயதில் 26.06.2015 அதிகாலை காலமானார். தற்போது கொழும்பில் வசித்து வந்த அவர் சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கு காலமானார். சாவகச்சேரி, சங்கத்தானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது 15ஆவது வயதில் முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.

இவர் கலைக்கு ஆற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு 2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. லயஞான குபேர பூபதி, இசை வள்ளல், நாதஸ்வர கலாமணி, நாதஸ்வர இசை மேதை, நாதஸ்வர சிரோண்மணி, நாதஸ்வர கான வாரிதி, சுவர்ண ஞான திலகம், சிவகலாபூஷணம், கலாபூஷணம் போன்ற பட்டங்களையும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவரது இறுதிக்கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.

nantri http://www.seithy.com/

திருமுறை
மரண அறிவித்தல்

.

      திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன் (புலவர் ஈழத்துசிவானந்தன்)


யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(வைத்தியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும், தமிழ்ச்செல்வி(சுபா), தவச்செல்வி(லதா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பர்வதபத்தினி, சிவராமலிங்கம்பிள்ளை(ஆசிரியர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பென்ஞ்சோ, ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகநாயகி அருளலிங்கம்(கனடா), செல்வநாயகி பேரின்பநாதன்(கனடா), இந்திராதேவி இரத்தினசிங்கம்(கனடா), அருள்கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான அல்பேர்ட் பொன்னையா கிரேஸ் தம்பதிகள், காலஞ்சென்ற சதாசிவம், கிருஷ்ணாம்பாள் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
அக்சயன், அபிநயா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மருமக்கள்

Oppotunity Class practice test 2015 05 07 15

.

உலகச் செய்திகள்


பாலை­வ­னத்தின் மத்­தியில் உலகின் மிகவும் பெரிய அலங்­கார பூங்கா

பாகிஸ்­தானில் அனல் காற்றால் உயி­ரி­ழந்­த­வர்கள் தொகை 650 ஆக உயர்வு

பிரான்ஸ் ஜனாதிபதிகளை அமெரிக்கா உளவு பார்த்தது : விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல், அமெரிக்கா மறுப்பு

கைதிகளை கொடூர கொலை : அதிர்ச்சி படங்கள் வெளியாகின
பாலை­வ­னத்தின் மத்­தியில் உலகின் மிகவும் பெரிய அலங்­கார பூங்கா

22/06/2015 டுபா­யி­லுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள மிராக்கிள் பூங்­கா­வா­னது தற்­போது 45 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வர்­ண­ம­ய­மான மலர்­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது.

திரும்பிப்பார்க்கின்றேன் - தமிழ்த் தலைவர்களை கவர்ந்த நாவேந்தன். முருகபூபதி

.
இன்று   உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த  தீவுக்குள்தான்   முன்னர்  எத்தனை   எத்தனை ஆளுமைகள்    வாழ்ந்தனர்.
பேச்சாற்றலால்    தமிழ்த் தலைவர்களை  கவர்ந்த நாவேந்தன்.
   
  சமகாலத்தில்  இலங்கையிலும்  தமிழர்  புலம்பெயர்ந்த  நாடுகளிலும் தினமும்  பேசப்படும்  ஊராக  விளங்கிவிட்டது  புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு  இதுவரை  சென்றிராத  தென்னிலங்கை   சிங்கள மக்களும்   மலையக  மக்களும்,  இந்த  ஊரின்  பெயரை  பதாதைகளில்  தாங்கியவாறு  வீதிக்கு  வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும்  இந்தத்தீவு  எதிரொலித்தது. ஜனாதிபதியை  வரவழைத்தது.
இலங்கையில்   மூவினத்து  மாணவர்  சமுதாயமும்  உரத்துக்குரல் எழுப்பும்   அளவுக்கு  இந்தத்தீவு  ஊடகங்களில்  வெளிச்சமாகியது.
இத்தனைக்கும்   அங்கு  ஒரு  வெளிச்சவீடு  நீண்ட  நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது.
பதினைந்துக்கும்  மேற்பட்ட  பாடசாலைகள்,   20   இற்கும்  மேற்பட்ட குளங்களின்   பெயர்களுடன்    இடங்கள்.   20   இற்கும்  மேற்பட்ட சனசமூகநிலையங்கள்  ( வாசிகசாலைகள்   உட்பட)  பல  கோயில்கள் எழுந்திருக்கும்    புங்குடுதீவில்,   இதுவரையில்  இல்லாதது  ஒரு பொலிஸ் நிலையம்தான்.

பாலேந்திராவுடன் சந்திப்பும் கலந்துரையாடலும் Dandenong,

.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப்
பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர்
க. பாலேந்திரா அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார்.
தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம், லண்டன் தமிழ் நாடகப் பள்ளி ஆகியவற்றின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமான
பாலேந்திராவைச் சந்திக்கவும் அவருடன் கலந்துரையாடவும்
ஒரு வாய்ப்பினைப் பாரதி பள்ளி ஏற்படுத்தித் தருகிறது.

பாலேந்திராவுடன்
சந்திப்பும் கலந்துரையாடலும்
தலைப்புகள்:
தமிழில் சிறுவர் அரங்கம்
தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
நாள்:                 4 ஜூலை 2015 (சனிக்கிழமை)
நேரம்:             பி.ப. 3.௦௦ மணி
இடம்: EdX Centre, 203 Gladstone Road, Dandenong, Vic- 3175 (Near Lyndale Secondary)

(மேலதிக விபரங்களுக்கு 0411 114699)


நாடகப் பயிற்சிப் பட்டறை
பாரதி பள்ளி நடாத்தும்
இளையோருக்கான விடுமுறைக்கால நாடகப் பயிற்சிப் பட்டறையில்
பாலேந்திரா கலந்து கொண்டு நாடகப் பயிற்சி வழங்குவார்.
இது டான்டினோங்கில்நடைபெறும்.
பங்கு கொள்ள ஆர்வமுள்ளோர் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி
மேலதிக விபரங்களைப் பெறலாம்.
nithi@hotmail.com.au
வயது, தொலைபேசி எண், முகவரி ஆகிய விபரங்களை அனுப்புதல் வேண்டும்...
பங்குகொள்ள அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.உயிர்க்காற்று அறிவியல் புனைகதை -கே.எஸ்.சுதாகர்

.
(இரண்டு சம்பவங்கள்)


கதை ஒன்று:
படார்' என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது. எத்தனை மணியாக இருக்கலாம்? அப்பா வழக்கமாக நேரத்திற்கு (நாலரை ஐந்து மணியளவில்) எழும்பி  சுவாமி கும்பிடத் தொடங்கி விடுவார்.

"அது என்ன சத்தம்?" படுக்கையிலிருந்தபடியே அப்பாவும் கேட்டார். எல்லாரும் எழுந்து கொண்டோம். விளக்கைப் போட்டோம். ஆளாளுக்கு ஒவ்வொரு அறையாகத் தேடுதல் செய்தோம். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பா மணிக்கூட்டைப் பார்த்தார். மணி மூன்று பதினைந்து.

"சரி எழும்பி விட்டேன். இனிச் சுவாமியைக் கும்பிடுவோம்" காலைக்கடன்களை முடித்து குளித்து பூக்கூடையை எடுத்துக் கொண்டார். தேவாரம் பாடியபடியே பூக்கள் கொய்வதற்காக முற்றத்திற்கு விரைந்தார். நாங்கள் மீண்டும் உறங்க முயற்சி செய்தோம். மனதில் பயம். அந்தச் சத்தம் இப்பவும் காதிற்குள் ஒலித்தபடி.

இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் திருகோணமலையில்..!

மண்டூர் கொலைச் சம்பவம்: மூவர் கைது

வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் விசாரணை
.
பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுகின்றதுஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் திருகோணமலையில்..!

24/06/2015 காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் திருகோணமலை  மாவட்டத்திற்கான விசாரணை அமர்வு எதிர்வரும் (27)சனிக்கிழமை  தொடக்கம் (30)செவ்வாய்க்கிழமை  வரை இடம்பெறவுள்ளது என்று ஆணைக்குழுவின் நிருவாக உத்தியோகத்தர் எச்.டபிள்யூ. குணதாஸ தெரிவித்தார்.

' விழுதல் என்பது ' நிறைவுப் பகுதி: 2 சுசிகரன் பசுபதி (இலண்டன்)

.


கனடாவில் இருந்து ஜேர்மனிக்கு வந்த கலாவை ( பத்மகலா ) சீலன் காரில் பிராங்பேர்ட் விமானநிலையம் சென்று ஏற்றி வந்து கொண்டிருந்தான் .
முரளியும் கலாவின் அக்கா மல்லிகாவும் இணைந்து ஏதாவது சதி செய்து தனது திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் இன்னும் அவனை விட்டு போகவில்லை .
நேரம் இரவு 7 மணியாகிக்கொண்டிருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. ஏனோ  கலாவுக்கு முகம் சரி இல்லை . அவள் பேச்சு பசுமை இன்றி வெறும் சம்பிரதாயச் சொற்களாக இருந்தது.
ஒருவேளை தான்  பிராங்பேர்ட்டுக்கு  வர தாமதமாகியதுதான் காரணமோ என எண்ணினான் .  ஆனாலும் அவள் முகம் செம்ஜம்பு பழம் போல சிவந்திருந்தது.
அவள் சீலனை எதிர்பார்த்து விமான நிலையத்தில் ஒவ்வொரு இடமாக இருந்து இருந்து எழும்பி அலுத்து விட்டாள் . ' இதோ

சிறுநீரகம் காக்க எளிய வழிகள் - வி.சந்திரசேகர்

.சிறுநீரகவியல் மருத்துவர்
நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு, உடலுக்குத் தேவையான விதத்தில் அவை மாற்றப்பட்டு, ரத்தத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இப்படி, ஊட்டச்சத்துக்கள் உடைக்கப்படும்போது, நச்சுப்பொருட்களும் உருவாகின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியை சிறுநீரகங்கள் செய்வதுடன், உடலில் நீர்ச்சத்து சமநிலையில் இருக்கவும் உதவுகின்றன. சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில விஷயங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தைத் கட்டுக்குள் வைத்திருத்தல்

"உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு" 2015 December

.
"உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு" சென்னையில் 2015 திசம்பர் மாதம் நடைபெறுகிறது. அனைத்து தமிழ் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்குபற்றலாம். விவரங்கள்: 

தமிழ் சினிமா


இனிமே இப்படித்தான்


”கண்ணா லட்டு தின்ன ஆசையானு” கேட்டவங்க, சந்தானத்துக்கு கிட்ட ”கண்ணா 2 வது லட்டு தின்ன ஆசையானு” கேட்க உருவானதுதான் “இனிமே இப்படிதான்”.
கதை
படத்தின் Trailer கூட தேவையில்லை படத்தின் Poster வைத்தே கதை சொல்லிறலாம். 1980களில் சிவக்குமார், பாக்கியராஜ், மோகன் போன்ற காதல் மன்னர்கள் எடுத்து அதிலும் வெற்றியடைந்த கதைக்களம் தான் ( பின் குறிப்பு : இது 2 மனைவி கதை அல்ல). ”வெறும் வாயிலே வடை சுடுற” மாதிரி இருக்கும் ஒரு பையன் (சந்தானம்). “பார்த்த ஒரு லுக்”கிலயே ”அத்தனை அழகையும்” ”தேடி ஓடி” ”ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்” வைக்கறார் சந்தானம். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரு பெண்ணை காதலித்து இன்னொரு பெண்ணை நிச்சயம் செய்து விழிபிதுங்கும் கதையின் நாயகனாக வரும் சந்தானம் பட்டைய கிளப்புகிறார். முகத்தோற்றம், உடல்தோற்றம், சிகையலங்காரம், உடை, நடனம், சண்டை காட்சி என ஹீரோவிற்கான அனைத்தையும் மெருகேற்றியிருக்கார். காதலை propose பண்ணும் காட்சியிலும் சரி, காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சியிலும் சரி நம்ம ஊர் பசங்களுக்கு புது Trend ஏற்படுத்தி கொட்டுக்கிறார், interval முன் வரும் காட்சியிலும் Restaurants காட்சியிலும் அரங்கமே சிரிப்பொலியில் அதிருகிறது.
பின் “காதலிக்கவில்லைனு prove பண்ணு”னு சொல்லும் காட்சியில் ”அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி”. ”மெகா சீரியல் பாத்து அழுகுற பொம்பளைகள விட கல்யாண CD பாத்து அழுகுற ஆம்பளைங்கதான் அதிகம்” ”மரமே இப்படி இருந்தா மாங்கா எப்படி இருக்கும்” இது போன்ற சிரிப்பு Punch வசனங்ளுக்கு பஞ்சமே இல்லை. மொத்ததில் சந்தானம் ஹீரோவாக "BACK WITH A BANG".
படத்தில் வரும் இரு ஹீரோயின்களுக்கும் பொருத்தமான கதாபாத்திரங்கள். சந்தானத்தை பார்க்கும் முதல் காட்சியிலேயே அறைவது முதல் சந்தானத்தை மிரட்டுவது வரை கலக்கியுள்ளனர். பாடல் காட்சிகளில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறார் ஆஷ்னா, மொத்தத்தில் “BOLD AND BEAUTIFUL". குடும்ப பெண்ணாக வரும் அகிலா, வரும் கொஞ்ச காட்சிகளிலும் அவரின் கதாபாத்திரத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்.
படத்தின் மற்றொரு தூண் தம்பி ராமையா, சந்தானத்தோடு தாய் மாமாவாக வந்து இவர் செய்யும் காரியங்களும், கொடுக்கும் யோசனைகளும் ”அதிரி புதிரி” குறிப்பாக சந்தானத்தை ஆண்மை சோதனைக்கு அழைத்து செல்லும் காட்சியில் பொறுப்பான ”மாமா”வாக நடந்து கொள்கிறார். ladies tailor ஆக வரும் VTV கணேஷ் ஆங்காங்கே சிரிக்க வைக்க உதவியிருக்கிறார்.
முழு நீள நகைச்சுவை கதையை எடுத்து அதை சரியாக கையாண்ட படத்தின் இயக்குனர்கள் முருகன் ஆனந்த் இருவருக்கும் பாராட்டுக்கள். பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான நிலையில் பின்னணியிலும் பின்னியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. நாயகன், நாயகிகள், துணை நடிகர்கள் என அனைவரையும் மிக அழகாக காட்டிய கோபி ஜகதீஸ்வரனின் கேமரா, பாடல் காட்சிகளை மேலும் மெருகேற்ற உதவுகிறது. படத்தின் நீளத்தை குறைத்து, படத்தின் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல அந்தோனி L ரூபனின் editing பக்க பலமாக உள்ளது.
க்ளாப்ஸ்:
தனக்கு என்ன வருமோ அதை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார் சந்தானம். ரசிகர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். படம் முழுவதும் நம் stress மறைந்து போகும் அளவிற்கு சிரித்து கொண்டே இருக்க வைக்கும் வசங்கள். படத்தின் Climax Twist யாரும் எதிர்பாராதது.
பல்ப்ஸ்:
பல படங்களில் பார்த்த அதே cleache காட்சிகள். காதலில் பொண்ணுங்கள மட்டும் குத்தம் சொல்லி கலாய்ப்பதை குறைத்து இருக்களாம். படத்தில் யார் எந்த வேலை செய்கிறார்கள் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே?.
மொத்தத்தில் சந்தானம் முழு நீள ஹீரோவாகி இனிமே நாங்களும் ஹீரோ தான் என்று இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
ரேட்டிங் : 3.25/ 5
நன்றி cineulagam

ஆஸ்திரேலியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த "யார் அந்த தேவதை" படத்தின் பாடல் வெளியீடு

ஆஸ்திரேலியாவில் சந்திரா Productions தயாரிப்பில் உருவாகும் புதிய படம் "யார் அந்த தேவதை".
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.
இதில் நேசம் புதுசு, பகட பகட போன்ற பல தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுதிய பால் முகில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
மற்ற பாடல்களை கருப்பன், ராஜபாரதி, குமார சூரியர், பால்ராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர் . மேலும் அஜய் ,நளினி, தேனுகா, சோபன ஷேன் குமாரலிங்கம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்துள்ளார்.
இயக்குனர் N.S. தனபாலசுந்தரம் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் இத்திரைப்படத்திற்கு உதயன் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழு.
நன்றி cineulagam