தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

மு. பொ


Image may contain: one or more people, people sitting and indoor

.
1939 ம் ஆண்டு புங்குடுதீவில் பிறந்த மு . பொ என்று அழைக்கப்படும் முருகேசு பொன்னம்பலம் அவர்கள் சிறுவயதிலிருந்தே தனது தமையனார் மு. தளையசிங்கத்துடன் சேர்ந்து கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1950 களின் பிற்பகுதிகளில் சுதந்திரன் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் சிறுவர் பகுதிக்கு கட்டுரைகள், கதைகள் எழுத ஆரம்பித்த இவரது கைகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்றன. ஈழத்து தமிழ் கலை இலக்கிய துறைக்கு புதுவடிவத்தையும் புத்துணர்ச்சியையும் வழங்கிய இவரது படைப்புகள் அதன் வளர்ச்சியில் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இவரது வாழ்வோடு இணைந்த ஆன்மீக நாட்டம் அவரது எழுத்திலும் பிரதிபலிக்க தவறியதில்லை.
இதுவரை இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை/ விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறுவர் ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் தனது 30 இற்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஆங்கில கவிதையும் உள்ளடங்கும். அவரது ஆக்கங்கள் அனைத்தும் ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்திருப்பதுடன் கலை இலக்கியத்துறையில் இனிவரவிருக்கும் மாற்றங்களை கோடிட்டு காட்டுபவையாகவும் அமையப்பெற்றிருப்பது அவற்றின் தனிச்சிறப்பாகும்.
இவரது பல நூல்கள் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளன.
• கடலும் கரையும் (சிறுகதை)
 வடகிழக்கு மாகாண விருது 1998
 சுதந்திர இலக்கிய விருது 1998
 கொழுப்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் விருது – 1998
• நோயில் இருத்தல் (நாவல்) – அரச சாகித்திய விருது – 2000
• முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை (சிறுகதை) - வடகிழக்கு மாகாணசபை விருது 2010
• திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம்)
 வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூலுக்கான விருது 2011
 தான்ஸ்ரீ விருது – மலேசியா அனைத்துலகப் புத்தகப் போட்டியில் முதற் பரிசு 2012
• கவிதையில் துடிக்கும் காலம் (கவிதை)
 அரச சாகித்திய விருது – 2012
 சிறந்த நூலிற்கான தமிழியல் விருது – 2012
• ஒயாத கிளர்ச்சி அலைகள் (மொழிபெயர்ப்பு) - அரச சாகித்திய விருது – 2015
இது தவிர இவரது இலக்கியசேவையை பாராட்டி பல கெளரவ விருதுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

காதலுடன் கைதொழுவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியாஅமரர் எஸ்.பொ. அங்கம் - 4 மதிப்பீடுகளுக்கு நடுவே உண்மைகளைத் தேடுவோம். மதிப்பீடுகள் கசக்கும் - இனிக்கும் - துவர்க்கும் - இதில் உண்மைகள் சுடுவதும் மறைபொருள்தான். - முருகபூபதி


அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை - இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 - 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன -  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   - எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர்.
தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி . கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி, ஆன்மீகம்,  சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம்.
மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  எனினும்  தமிழ்  ஓசை,  தமிழ் அவுஸ்திரேலியன்   முதலான  மாத  இதழ்கள்  அச்சிடப்பட்டு வண்ணப்பொலிவுடன்    வெளிவந்தன. தற்போது மாத்தளை சோமு ஆசிரியராக இருக்கும் சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ் ஓசையும் மெல்பனிலிருந்து எதிரொலி மாதப்பத்திரிகையும் வெளிவருகின்றன.
அத்துடன் சிட்னியிலிருந்து செ. பாஸ்கரன் மற்றும் கருணாசலதேவா ஆகியோர் இணைந்து நடத்தும் தமிழ்முரசு அவுஸ்திரேலியா இணைய இதழும்  மெல்பனில் யாழ். பாஸ்கர் நடத்தும் அக்கினிக்குஞ்சு இணைய இதழும் வெளிவருகின்றன.
தவிர சில கலை இலக்கியவாதிகள் தங்கள் தரப்பில் வலைப்பூக்களை (Blogs) நடத்திவருகின்றனர்.
அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன்  வை. டபிள்யூ. சி. ஏ.   மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   -  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து -  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,   சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி,  எஸ்.பொ.  - மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை,  கூத்துக்   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.
 நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  .சி. கந்தராஜா   தலைமை வகித்தார்.
மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது.