நம்வாழ்வு விடிந்திடட்டும் ! - ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )        வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட
        உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும்
        நல்லவைகள் நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று
        நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் !

        இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல்
        முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று
        அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று
        உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் !
பரா பொங்கல் 2016 ஒரு பார்வை - பரமபுத்திரன்

.
தமிழரின் பொங்கல் விழா பரமற்றா நகரில்


தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும்  ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து  பொங்கல்விழா என்று கட்டியம் கூறியது. நிற்குமிடம் தமிழ்பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் பேசி இனிமை பகிர பொங்கல் உண்டு கூடி மகிழும் நல்லநாள் பொங்கல்நாள் என்பது நம்தமிழர் யாவரும் அறிந்த ஒன்று. உழவர் பெருநாள் தமிழர் திருநாளாய் பரமற்றா நகரில் கொண்டாடப்படுவதால் எங்கள் பொங்கல் விழா பரா பொங்கல் என்னும் பெயருடன் அறிமுகமாகி உள்ளது.  இந்தவிழா அவுஸ்த்திரேலியா சிட்னியில் பரமற்றா  நகரிலும் நிகழ்ந்தது நம்மை பெருமிதம் கொள்ளவைக்கிறது. மக்கள் பாரம்பரிய உடைகளணிந்து, பெருமளவில் ஒன்றுகூடி நிகழ்வை சிறப்பிப்பது எங்கள் பாரம்பரிய கலாசார விழுமியங்களை இன்னும் நேசிப்பதனை காட்டுகிறது.
சரியாக இரண்டு மணியளவில் பருணிதன், தர்சனா ஆகியோரின் அறிமுகப்படுத்தலுடன்  திவாகரன் முருகதாஸ் ஆகியோர் தங்கள் நாதஸ்வர தவில் மூலம் மங்கள இசை வழங்கி தமிழ்மணம் பரப்பி நிகழ்ச்சியை திறந்த அரங்கில் ஆரம்பித்து வைத்தனர். 

கவிவிதை - 7 - உண்ணீர் - -- விழி மைந்தன்--

.
அந்த இடத்திற்குப் பெயர் மணற்காடு.

ஏகாந்தமான வெளிகள். பற்றைகள்.  குட்டை குட்டையாய்த் தேங்கி நிற்கிற சதுப்புத் தண்ணீர். சதுப்புத் தண்ணீர் நடுவே வளர்ந்து தலை சிலுப்பி நிற்கிற சவுக்கு மரங்கள். சவுக்கு மரங்களின் ஊடே  ஊதிச் செல்கிற காற்று.

எப்போவாவது வந்து மெழுகுவர்த்தி ஏற்றி மன்றாடிப்  போகிற, நம்பிக்கை உள்ள மீனவனை எதிர்பார்த்துத் தனித்திருக்கும் அந்தோனியார் கோவில். 'அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?' என்று யாரும் கேட்கவில்லை அவரைப்  பார்த்து!

அவுஸ்திரேலியா மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா 2016”

.

மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது. மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இந்த தமிழர் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 – 01 - 2016 அன்று நடைபெற்றது
ஒஸ்ரேலியாவின் விக்டோறியா மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மெல்பேர்ண் நகரில் ஈஸ்ட் பேவுட் றிசேவ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
காலை 9.00 மணிக்குத் தொடங்கி இந்நிகழ்வில் ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. லிங்கேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விக்டோறியா மாநிலத்தின் உறுப்பினர் திருமதி உதயா சிங்கராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.

திரும்பிப்பார்க்கின்றேன் - (கடந்த வாரத்தொடர்ச்சி) - முருகபூபதி

.
கிராமத்து விழிசைக்குயில் எங்கும் பறந்து சென்று சோலைக்குயிலான கதை.
தேசங்கள்  சென்றாலும் தன் கால்களை தாய்மண்ணில் ஊன்றியிருக்கும் பல்துறை ஆற்றலின் ஆளுமை கோகிலா மகேந்திரன்


' குயில் ஒன்று பறந்து வருகிறது. வசந்தகாலச்சோலை அதன் மனதைக்கொள்ளை கொள்கிறது. அங்கு பச்சைப்பசேலென மரங்களும் செடிகளும் கொடிகளும் பலவர்ண மலர்களுமாய் பூத்துக்குலுங்குகிறது. காய்களும் கனிகளும் விருந்து தருகின்றன. குயில் அங்கும் இங்கும் தத்தித்தத்திப்பறந்து இன்பலாகிரியில் தன்னை மறந்து பாடுகிறது. குயிலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. குயிலின் குரலோசை உச்சஸ்தாயியில் விதவிதமான மெட்டுக்களில் ஒலிக்கிறது. இப்படி ஒரு புதுமையான உருவகச்சித்திரமான கோகிலாவின் சோலைக்குயில் எங்களுக்கு விருந்து வைக்கிறது."
இவ்வாறு 2010 ஆண்டு வெளியாகியிருக்கும் சோலைக்குயில் (கோகிலா மகேந்திரனின் மணிவிழா மலரின் அணிந்துரையில் பதிவுசெய்துள்ளார் இம்மலரை வெளியிட்ட தெல்லிப்பழை கலை இலக்கியக்களம் அமைப்பின் தலைவர் கலாபூஷணம் சைவப்புலவர் செல்லத்துரை.
தெல்லிப்பழை விழிசிட்டியின் புதல்வி எவ்வாறு விழிசைக்குயிலாக அங்கிருந்து பறந்து மிகப்பெரிய சோலையின் குயிலாக சிறகடித்திருக்கிறார் என்பதை ஆவணமாக்கியிருக்கிறது இம்மலர்.
விழிசிட்டியும் இலங்கை இராணுவத்தினால் கபளீகரம் செய்யப்பட்டது. இன்றும் வலிகாமத்தில் அரசு விடுவிக்காத நிலங்கள் அங்கு தரிசாகிக்கிடக்கின்றன. அந்த அழகிய கிராமத்தின் இலக்கியக்குயில் சிறகடித்து பறந்து சென்ற பிரதேசங்கள் பல. அந்நிய தேசங்களுக்கும் இந்தக்குயில் பறந்து சென்றாலும் தன் தாய்நிலத்தில் காலூன்றி வாழவே விரும்புகின்றது. அதற்கான இரை அங்குதான் நிறைந்திருக்கிறது. அந்த இரையில் கலையும் இலக்கியமும் கல்வியும் சீர்மியமும் பல்சுவையாகியிருக்கிறது.

தொத்து வியாதிகள் - (சிறுகதை) அருண். விஜயராணி

.
( படைப்பிலக்கியவாதியும் சமூகச்செயற்பாட்டாளருமான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் மறைந்து ஒரு மாதமாகிவிட்டது. அவர் மறைந்த திகதி 13-12-2015. அவரது நினைவாக பதிவாகும், அவரது இச்சிறுகதையை தமிழ்நாட்டில் பேராசிரியை, கவிஞி தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்)


"  இப்ப  நான்  உங்களை  ஒஸ்ரேலியாவுக்கு  கூப்பிட்டது,  ஒவ்வொரு  நாளும்   மூட்டை   மூட்டையாக  எனக்கு  புத்தி  சொல்லவோ...?"
உந்தக் கண்றாவியளைக் காட்டத்தான்  என்னைக் கூப்பிடுகிறாய்  என்று தெரிந்திருந்தால்  அங்கேயே  நின்றிருப்பன்."
"  பின்னப்  பயந்து  வாழ்ந்திட்டால்  சரி...  கொஞ்சம்  தலையை நிமிர்த்திவிட்டால்... அது  கண்றாவி   அப்படித்தானே...?"
சுட்டுவிரலை    முகத்துக்கு  எதிரே  நீட்டி  புருவத்தை  மேலே  உயர்த்தி, நிமிர்ந்து   நிற்கும்  மகளை  வியப்புடன்  பார்த்தாள்  அருளம்மா.
மகளா  பேசுகிறாள்...?  ஒஸ்ரேலியாவுக்கு  வந்து  எப்படி  மாறிவிட்டாள். உடையில்   பேச்சில்,   உறவாடுவதில்...?

ஆலோசனை கூட்டம் - 24 --01--2015 ஞாயிறு மாலை 4--30 மணிக்கு

.
அன்புடையீர்,

அவுஸ்திரேலியாவில் தமிழை முன்னெடுக்கின்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் ,கலைஞர்கள் ,விமர்சகர்கள் ,கல்வியாளர்கள்,ஆய்வாளர்கள் , இதழாளர்கள் ஆகியோரை  இணைக்கும் ஓர் அமைப்பைத் தொடங்குவது குறித்து நீண்ட காலமகச் சிந்தித்துக்கொண்டிருந்தோம். அமைப்பு என்றால் வெறுமனே விழா என்ற பெயரில் கூடிக்கலையாமல், புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளையும தாயகஇலக்கியவாதிகளையும்இணைக்கவும் ,இளைய தலைமுறையில் படைப்பாற்றலை  வளர்க்கவும் ,தமிழருக்கு இருக்கும் தேசியஅடையாளமான   தமிழ் மொழி   குறித்து குரல் கொடுக்கவும் பொருத்தமான வகையில் அந்த அமைப்பு இயங்க வேண்டும் என்று கருதுகின்றோம். இதுசம்பந்தமாக
  24 --01--2015 திகதி  ஞாயிறு  மாலை 4--30  மணிக்கு
191 ,  GREAT WESTERN HIGH WAY.MAYS HILL     ( சிட்னி முருகன் கோவிலுக்கு அருகில்  }  முகவரியில்  அமைத்துள்ள சிட்னி தமிழ் அறிவகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில்  ஆலோசனை கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக  இலங்கையின்  பிரபல எழுத்தாளர் நீர்வை பொன்னையன் ,தமிழகத்தைச்  சேர்ந்த கவிஞர் சிதம்பர பாரதி   ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன்   அழைக்கிறோம்

அன்புள்ள,
மாத்தளைசோமு 

இலங்கைச் செய்திகள்


பாகிஸ்தானிடமா இந்தியாவிடமா  போர் விமானங்களை  கொள்வனவு செய்வது ?

ஹிருணிகாவின் பிணையில் புதிய கிண்ணஸ் சாதனை

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

முஸ்லிம்களுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபில்லை  : அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

நாடு திரும்பினர் 80 பணிப்பெண்கள்

இந்திய வெளிவிவகார செயலாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்திப்பு

துமிந்தவிற்கு பிணை

“பீகொக்” மாளிகையில்   மஹிந்தவின் தங்கம்?

வடக்கு மற்றும் தலைமன்னார்  புகையிரத சேவைகளில் மாற்றம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

யாழ். பொங்கல் விழாவில்  கலந்துகொள்வது எனக்கு கௌரவம் :  நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது

வண. இராயப்பு ஜோசப் பதவி துறப்பு


முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி - முருகபூபதி - அவுஸ்திரேலியா

.
தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த  குரல் ஓய்ந்தது.


இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்; "
தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே..குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் - பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல்.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே  1955 ஆம் ஆண்டு பிறந்த குணசேகரன்,  நாட்டுப்புற பாடல்கள்  ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
காலம் காலமாக நீடித்த முன்னைய மரபார்ந்த அரங்கவியலுக்கு மாற்றாக தலித் அரங்கவியல் கோட்பாட்டை உருவாக்கியவர் குணசேகரன்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் கலை இலக்கிய அமைப்புகளின் மாநாடுகளில் இவருடைய நிகழ்ச்சிகளின்  அரங்காற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.
தன்னானே என்னும் பெயரில் நாட்டுப்புறக்கலைக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் தலித் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய சமூகப்போராளிநாட்டுப்புறக்கலைகள் தொடர்பாக ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த குணசேகரன் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்'.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. புதுவை அரசின் கலை மாமணி விருதும் பெற்றவர்

மலரும் முகம் பார்க்கும் காலம் 26 - தொடர் கவிதை

.
மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் இருபத்தாறாவது கவிதையை எழுதியவர் ஜேர்மனியைச் சேர்ந்து படைப்பாளி திரு.ஏலையா க.முருகதாசன்


மடிநதவர்; மடிந்தும் வாழ்வர் என்றென்றும்
மரபணுக்கள் தொடர்தலில் வாழையடி வாழையென
உயிர்ப்பிறப்புக்கள் ஆண் பெண் உயிரணுக்கள் உறவினில்
கருவென உருவெடுக்கையில் உருக்கொடுத்த அன்னை தந்தை
மகிழ்ந்துமனம்  குதூகலித்தவர்கள் மகிழ்ந்திடுவர்
நாட்களை எண்ணி காத்திருக்கையில் உதிரம் தோயந்தொரு சிசு
அன்னை உதரம் விட்டேகி பூமியதனை நோக்கி வருiகையில்
இவ்வுலகு மகிழ்வெல்லாம் எமக்கே என பெற்றவர்கள் காற்றில் மிதக்க
சிசு குழந்தையாகி  தவழ்ந்து விழுத்தெழும்பி நடக்கையில்
இதுவெல்லோ மலரும் முகம் பார்க்கும் காலம் என சிலிப்பர்
பலபருவம் தாண்டி உணர்வுகள் வேதியல் மாற்றம்கொள்
உணர்ச்சிகள் தேங்கியே விம்மியெழும் உடல் வளர்ச்சி
கண்டு தந்தை தாய் பூரிப்பர் கல்வியில் மேல் நிலை
சமூகத்தில் தன்பிள்ளை போற்றப்படுகையிலும் ஆனந்தம் கொள்வர்
வளர்ந்த பிள்ளை தன்னிலை உணர்ந்தே தனக்கொரு வாழ்வுக்காய்;
உணர்கையில் பிள்ளைகளின் உள உடல் தேவைக்காய்
திருமண பந்தம் தேவையெனத்  தேடியே  துணை தேடிக் கொடுக்கையில்
திருமணம் கண்டு தொடரும் தொடுகையிலும் உயிரணுக்களின்
உறவினில் உருவாகும் கருவொனறு உதரத்தில் தங்கிடுகையில்
தொடர்ந்திடுமே பிறப்பு  தொடராகி தொடர்கதையயாய் 

உலகச் செய்திகள்


சாதனை விமானப் பயணம் 

மத முறைப்படி ஆடை அணியத் தவறியதற்காக பெண்ணுக்கு சித்திரவதை செய்து மரணதண்டனை

84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்

ஜல்­லிக்­கட்­டுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்காலத்தடை

பய­ணித்த விமா­னத்தின் சக்­கரப் பகு­தியில் 11 மணி நேர­மாக தொங்­கிய சடலம் 

மூன்­றரை வரு­டங்­க­ளாக மம்மி நிலையில் பேணப்­பட்ட சீனத் துற­வியின் உடல் 

இந்தோனேஷியாவில் தொடர் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : மூவர் பலி 

சாதனை விமானப் பயணம் 


11/01/2016 பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு திறந்த சிறிய ரக விமா­ன­மொன்றில் 14,600 கடல் மைல் தூரம் பய­ணித்து பிரித்­தா­னிய சாகஸ கலை­ஞ­ரான திரேசி கேர்டிஸ் ரேலர் சாதனை படைத்­துள்ளார்.

தமிழ் சினிமா - ரஜினி முருகன்

.விஜய், அஜித்திற்கு பிறகு உண்மையாகவே விநியோகஸ்தரின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் சிவகார்த்திகேயன்காக்கிசட்டைவெற்றிக்கு பிறகு பல தேதிகள் மாற்றி எப்படியோ ரஜினி முருகன் இன்று திரைக்கு வந்து விட்டது.

வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணி பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான் மீண்டும் இணைய இப்படத்திற்கு பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டது. இதை தொடர்ந்து ஒரு வழியாக பொங்கல் திருநாளில் மேலும் திருவிழா கோலம் ஆக்க,ரஜினி முருகன் உலகம் முழுவதும் இன்று 800 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.
கதைக்களம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்+சூரிகூட்டணி வேலைக்கே போகாமல் கலாட்டா செய்து வருகின்றனர் ஊருக்குள். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் யதார்த்தமாக பார்க்க வழக்கம் போல் பார்த்தவுடன் காதல்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் அப்பாவிற்கு சிவகார்த்திகேயனை பார்த்தாலே பிடிக்கவில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் அப்பாவும் கீர்த்தி சுரேஷ் அப்பாவும் இளம் வயதில் நண்பர்களாக இருந்து ஒரு சண்டையால் பிரிந்தவர்கள்.
பின் கீர்த்தியை காதலிக்க அவர் வீட்டு முன்பே டீக்கடை போடுகிறார் சிவகார்த்திகேயன்.
கீர்த்தி அப்பாவின் பேச்சை கேட்டு சிவகார்த்திகேயனை காதலிக்க மறுக்கிறார். பிறகு டீக்கடையை காலி செய்து ரியல் எஸ்டேட்டில் நல்ல பணம் வரும் என்று தன் தாத்தா ராஜ்கிரணிடம் பணம் வாங்கி ரியல் எஸ்டேட் ஆரம்பிக்க, அதே ஊரில் பணக்காரர்களை டார்க்கெட் செய்து பணம் பிடுங்கும் சமுத்திரகனி சிவகார்த்திகேயனிடம் பணம் கேட்டு மிரட்ட, சிவகார்த்திகேயன் அதை கொடுக்க மறுக்கிறார்.
இதன் பின் ஒரு சில இடங்களில் இவர்களுக்குள் மோதல் ஏற்படசமுத்திரகனி, சிவகார்த்திகேயன் குடும்பத்தையே அழிக்க முயற்சி செய்கிறார்.
இதன் பின் ஒரு சில இடங்களில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட சிவகார்த்திகேயன் தன் வீட்டை விற்க முயற்சி செய்ய அந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கு என்று சமுத்திரகனி வந்து நிற்கிறார். அந்த வீட்டை விற்றால் தான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் செட்டில் ஆகமுடியும். அந்த வீட்டை சிவகார்த்திகேயன் விற்றாரா, சமுத்திரகனியின் சதி செயலை முறியடித்தாரா என்று கலகலப்பாக கமர்ஷியலாக கூறியிருக்கிறார் பொன்ராம்,
படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் மான்கராத்தே, காக்கிசட்டையில் அதிரடியில் கலக்கியிருந்தாலும், தன் பேவரட் குடும்ப ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றினார். ஆனால், இதையெல்லாம் சேர்த்து வைத்தார் போல் ரஜினி முருகனில் காமெடி, செண்டிமெண்ட், ஆடல், பாடல் என அதகளம் செய்துள்ளார். கொஞ்சம் லிட்டில் இளைய தளபதி போலவே தெரிகின்றது.
நடித்த ஒரு படம் தான் வந்துள்ளது, ஆனால், அடுத்தடுத்து கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு இப்படம் தான் தமிழ் சினிமாவின் பிள்ளையார் சுழி என்று கூட சொல்லலாம். சிவகார்த்திகேயனுக்கு கவுண்டர் கொடுப்பது, பாடல் காட்சியில் குட்டி குட்டி எக்ஸ்பிரஷன் என ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றார். தமிழ் சினிமாவிற்கு இன்னும் 10 வருடம் ஆள ஒரு தரமான கதாநாயகி கிடைத்து விட்டார்.
சூரி நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் பேவரட் கூட்டணியுடன் இணைந்துள்ளார். சிவாக்கு போட்டியாக கவுண்டர் கொடுத்து கலகலப்பாக்குகிறார். அதிலும் சிவா காதலுக்கு பாடல் போடுவது, அதற்காக கீர்த்தியின் அப்பாவிடம் அடிவாங்கும் இடம் தான் கலகலப்பின் உச்சக்கட்டம், தீவிர ரஜினி ரசிகராக கீர்த்தியின் அப்பா மேனரிசம், ரஜினி பாணியில் மகளுக்கு அட்வைஸ் செய்வது என அட்டகாசம் செய்கிறார்.
ராஜ்கிரண் இனி தான் அவர் நல்ல நடிகர் என்று நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக எப்போதும் போல் ஸ்கோர் செய்கிறார். அதிலும் இறந்தது போல் நடிக்கும் இடத்தில் சிரிக்க வைத்து, வெளிநாட்டில் இருக்கும் தன் பிள்ளைகளை பார்த்து என் தலைமுறைக்கு தமிழே கற்றுக்கொடுக்கல, நீங்க என்னைய பற்றிய சொல்லியிருப்பீங்க என்று சொல்லும் இடத்திலும் செண்டிமெண்டில் ராஜ்கிரண் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு செம்ம போட்டி தான்.
சமுத்திரகனி கதாபாத்திரத்தில் தான் ஒரு அழுத்தமே இல்லை.
டி.இமான் இசையில் என்னம்மா இப்படி பண்றீங்களேமா....உன் மேல கண்ணு பாடல்கள் ரசிக்க வைக்க, பின்னணி இசையில் மதுரைக்கே ஏற்ற போக்கில் கலக்கியுள்ளார்.
க்ளாப்ஸ்
சிவகார்த்திகேயன் டைமிங் காமெடி, செண்டிமெண்ட், சின்ன ஆக்‌ஷன் என முழு கமர்ஷியல் ஹீரோவாகிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூரி காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கு. அதிலும் குறிப்பாக பஞ்சாயத்து காட்சி காமெடி கலக்கல்.
2:30 மணி நேரம் படம் என்றாலும் எந்த காட்சியும் போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் பொன்ராம். அதிலும் பொங்கலுக்கு ஏற்ற கமர்ஷியல் விருந்தாக வந்துள்ளது.
பல்ப்ஸ்
சமுத்திரகனி வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு அழுத்தம் இல்லாமல் உள்ளது. ஏதோ நானும் வில்லன் என்று ஏதோ செய்கிறார். வழக்கமான கமர்ஷியல் பார்முலா பார்த்து பழகிய கதை.
மொத்தத்தில்
ரஜினிமுருகன் நம்பி வாங்க 2:30 மணி நேரம் சந்தோசமா இருந்துட்டு போங்க     

ரேட்டிங் 3/5                       நன்றி  cineulagam