skip to main | skip to sidebar

தமிழ்முரசு Tamil Murasu

அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/03/2023 - 26/03/ 2023 தமிழ் 13 முரசு 49 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com

மரண அறிவித்தல்

.           ஈழத்து  மிருதங்கமேதை  திரு .ஆறுமுகம்  சந்தான  கிருஷ்ணன் 

                                                              மறைவு 11 02 2016
யாழ்ப்பாணம் மூளாயை பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு/ கொழும்பு வெள்ளவத்தையை வாழ்விடமாகவும், அவுஸ்ரேலியா சிட்னியில் வசித்தவருமான முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாலரும், பிரபல மிருதங்க வித்துவானுமாகிய, கலாபூஷணம்/ மிருதங்க பூபதி  உயர்திரு.ஆறுமுகம்  சந்தானகிருஷ்ணன் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை 10:30 மு.ப அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான  ஆறுமுகம் - வீரலஷ்மியின் புதல்வரும்,  ஸ்ரீரஞ்ஜனியின்  ஆருயிர்க் கணவரும், காலம் சென்ற திரு. உருத்திராபதி, திருமதி. தையலம்பால் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமரர் சிவபாலன், சிவராம், சிவசங்கர், ராஜீவலோஜனா, சிவகுமார் அவர்களின் அருமைத் தந்தையும், வசந்தன், லஷ்சுமி, மகா, மாலா, துஷ்யந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சாய்லஷ்மன், சம்யுதா, ராகுல், அபர்னா, சஹிதா, தீபிகா, டிறன், அம்ரிதா ஆகியோரின் செல்லப் பாட்டனுமாவார்.

மேலும் வாசிக்க

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

.
       வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென
       தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும்
       அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென
       வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது !

       பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே
       நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது

மேலும் வாசிக்க

எழுதமறந்த குறிப்புகள் - முருகபூபதி

.
மறைந்தவர்களினால்  தோன்றும்  வெற்றிடத்தை எவ்வாறு  நிரப்புவது ?
சங்க  இலக்கிய பாடல்  - சித்தர்  பாடல் - நாட்டார்  பாடல் -துல்லிசையிலும்   திரையிசையிலும்  எவ்வாறு மாற்றமடைகிறது ?


     
                              
" எனது  கருத்துக்களும்  எனது  கதைகளும்  பிறரால் கையாடப்படும்போது  இவரைப்போன்ற  மனோநிலை  பெறும்  பக்குவம்  எனக்கு  வரவில்லையே  என்று  இப்போதும்  நான் ஏங்குகிறேன்."
என்று   சொன்னவர்  சமகால  இடிமுழக்கம்  எனச்சொல்லப்பட்ட ஜெயகாந்தன்.
யாரைப்பற்றி  அவ்வாறு  சொன்னார் ?
 ஜெயகாந்தனின்  நல்ல  நண்பரும்  தமிழ்முழக்கம்,  சாட்டை முதலான   இதழ்களின்  ஆசிரியரும்  திரைப்படப் பாடலாசிரியரும், பன்னூல்   ஆசிரியருமான  கவிஞர்  கா.மு.ஷெரீப்  ( காதர்ஷா முகம்மது  ஷெரீப்)   அவர்களைப்பற்றி  ஜெயகாந்தன்  எழுதியிருக்கும் குறிப்புகளில்  ஒரு  அதிர்ச்சியான  தகவலை  சொல்லிவிட்டே,   இவரின்   மேன்மையான  இயல்பையும்  பதிவுசெய்துள்ளார்.   (நூல்: ஓர்  இலக்கியவாதியின்  கலையுலக  அனுபவங்கள்)

இதுவரையில்   ஐந்து  பதிப்புகளைக்கண்டுவிட்ட  இந்த  நூலில்,  ஏ.பி. நாகராஜனின்   திருவிளையாடல்  படத்தில்  (1965)   வரும்  " பாட்டும் நானே   பாவமும்  நானே "  என்ற  புகழ்பெற்ற  பாடலை  ( பாடியவர்: ரி.எம்.சவுந்தரராஜன் -  இசை கே.வி. மகாதேவன்)   இயற்றியவர்  தமது நண்பர்  கா.மு.ஷெரீப்   என்று  எழுதியிருக்கிறார்.
ஜெயகாந்தன்,  "  பாட்டும்  நானே  என்ற  பாடலை  எழுதியவர்  கவிஞர் கா.மூ. ஷெரீப்.  ஏ.பி. நாகராஜன்,   அவரது   நண்பர்  என்ற காரணத்தினால்   பெருந்தன்மையோடு  பிறிதொரு  பிரபல  கவிஞர் பெயரால்  இந்தப்பாடல்  வெளிவந்தபோதும்  "  கேட்பதற்கு நன்றாகத்தானே   இருக்கிறது " என்று   மனமுவந்து  பாராட்டும்  உயர்  பண்பை  நான்  இவரிடம்தான்  பார்த்தேன்."  என்று  மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க

உலகச் செய்திகள்


நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

அனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும்

போலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்

ஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்

ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி

 துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கிய படகு 11 சிறு­வர்கள் உட்­பட 27 குடி­யேற்­ற­வா­சிகள் பலி

சிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர்  இடம் பெயர்வு

மேலும் வாசிக்க

MELBOURNE Rockbank குன்றத்து குமரன் ஆலய திருவிழா 13.02.2016 to 23.02 2016

.

சங்க இலக்கியத் தூறல் - 11--- அன்பு ஜெயா, சிட்னி

.
அருவி நீராடிய அணங்கு


எங்கோ பெய்த மழையின் நீரையெல்லாம் தன்னகத்தே ஏந்திக்கொண்டு யாரும் தன்னைப் பிடித்து தன் ஓட்டத்திற்கு அணை கட்டிவிடுவர்களோ என்ற பயக்கத்துடன் ஓடி வருகிறாள் அந்த நதியென்னும் பெண்ணாள். அவள் பாய்ந்து வருகின்ற அழகை ரசிக்காத மானிடரும் உண்டோ இவ்வையகத்தில்! அப்படிப் பாய்ந்து வருகின்ற அவள், அதோ அந்த அழகிய மலையிலிருந்து அருவியாகக் தரையிறங்கி வருகின்றாள். அதுவும் ஓர் அழகுதான். அந்த அழகையும் தோற்கடிக்கும் அழகுடைய என் காதலியோ தன் தோழிகளுடன் அந்த அருவியிலே நீராடிக் கொண்டிருக்கின்ற காட்சி என்னை கற்பனையின் உச்சிக்கே அழைத்து செல்கிறது. எப்போதும் குளிர்ச்சியாய் உள்ள அவளுடைய விழிகள், அந்த அருவி நீரின் வேகத்தால், சிவந்து காணப்படுகின்றன. அவள் நீராடி முடித்து வீடு திரும்பும் முன், அந்த சிவந்த கண்களினால் ஓர் உள்நோக்கத்தோடு என்னைப் பார்த்த பார்வையும், அவள் சிந்திய புன்னகையும் அப்பப்பா என்னை அவை மயக்கியதை எப்படி நான் விவரிப்பேன். அதற்கு ஒரு கவிஞன்தான் வரவேண்டும்! அவளை மீண்டும் எப்போது நான் காண முடியும். அவளோ அந்த மலைநாட்டுக்கு உரியவனின் மகள்.

மேலும் வாசிக்க

புலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு

.
புலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு : 'தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது'

ஒரு புத்­­தகம் நன்­றாக இருந்­தாலும் எல்­லோ­ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை.

  அதாவது  எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழு­மையாக இருக்­கு­மென கூற  ­மு­டி­யா­து. ஒரு புத்­தகம் பலரின் கைகளில் சேர்ந்த  பின்பு அதனை விமர்­சிக்­க­லாம்.

அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக் கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

இது காலங்­கா­ல­மாக வலி­யு­றுத்­த­ப்­பட்­டு­ வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.

பிழை­யான விமர்­ச­னங்கள் மூலம் புத்­த­கத்­திற்­கான வர­வேற்பு முற்­றாக தடைப்­பட்டுவிடுகிறது.

இலங்­கையில் இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது  என்கிறார் புலம்­பெ­யர்ந்து அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழும் எழுத்­தாளர் நடே­சன்.

மேலும் வாசிக்க

ஈழத்து மிருதங்கமேதை சந்தான கிருஷ்ணனுக்கு அஞ்சலி - - நல்லை க. கண்ணதாஸ்

.

லயவுலகின்  உயர்  நட்சத்திரம்!
மிருதங்கக்
கலையுலகின்  கண்கண்ட  தெய்வம்!
சந்ததமெம்  செவியில் - நாதத்தை
சத்துணவாய்  தந்த  ஐயா !
சந்தான கிருஷ்ண  மாமேதையே  - உலகில்
வந்தான  காரியம் முடிந்ததென்று
வழிபார்த்துச்சென்றீரோ !?
சொல்லடிக்கும்  அழகும் -சுந்தரமாய்
சிரிப்புதிர்க்கும் நெகிழ்வும் -நினைவில்
வந்துவந்து - எமை
வாட்டுதையே .
லயமதே  உயிர்மூச்சாய்   கொண்டு- பாடகர்
தரமறிந்த 'பக்கா' வாத்தியத்தில்
நிகரிலாத்தனிக்கலைஞனாய்
நிமிர்ந்து நின்ற பெருங் கலைஞ ! -ஈழத்து
மண்ணின் கலைவரலாற்றில்
எண்ணிட  முடியாச்சாதனைகளாய்
ஒவ்வொரு மேடைகளையும்
ஒப்பற்ற கணக்குகளால்
ஔிர வைத்த உன்னதக்கலைஞர் நீங்கள்.
உங்களது உழைப்பின் தொடர்ச்சியும்
இடைவிடாத ஆற்றுகைத்தேடலும்
எங்கும் பரவவென

இறையருள் வேண்டுகிறோம் .
மேலும் வாசிக்க

"யாழ்ப்பாணம் பாரீர்" செங்கை ஆழியானின் உலாத்தல் - கானா பிரபா

.

என் நேசத்துக்குரிய எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் 75 வது பிறந்த தினம் அன்று அவரின் வீட்டுக்கு எதேச்சையாகச் சென்ற அனுபவம் குறித்துப் பகிர்ந்திருந்தேன்.
அவருடைய பிறந்த நாள் வெளியீடாக "யாழ்ப்பாணம் பாரீர்" என்ற நூலை வெளியிட்டு வைத்ததோடு அன்று எனக்கும் ஒரு பிரதியைத் தந்திருந்தார் செங்கை ஆழியான் மனைவி கமலா குணராசா அவர்கள்.

1963 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தைச் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்க எண்ணி செங்கை ஆழியானும் அவரின் நண்பர்கள் மூவருமாக நான்கு நாட்கள் யாழ்ப்பாணம்,இயக்கச்சி, தாழையடி, மணல்காடு வல்லிபுரம், பருத்தித்துறை, கீரிமலை, காங்கேசன்துறை, கந்தரோடை, தீவுகள் என்று சுற்றிய கதையைச் சொல்லி யாழ்ப்பாணத்தில் என்ன இல்லை? சுற்றுலாப் பயணிகளைக் கவரத் தக்கவை நிறையவே உள்ளன என்று தன் பழைய நினைவுகளோடு இந்த நூலுக்கு நியாயம் கற்பிக்கிறார் நூலாசிரியர்.

கமலம் பதிப்பகம் வெளியீடாக 84 பக்கங்களுடன் கருப்பு, வெள்ளைப் படங்களோடும் வெளிவந்திருக்கிறது இந்த நூல்.
ஜெயக்குமாரன் சந்திரசேகரன் (J.K) ஈழத்து வாசகர் பரப்பில் செங்கை ஆழியானின் ஆளுமை குறித்துத் தன் இணையப் பகிர்வில் கொடுத்ததைப் பின் அட்டையில் இட்டுச் சிறப்பித்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாண தேசத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் முக்கியமான அமைவிடங்கள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள், பாரம்பரிய விழுமியங்கள் போன்றவற்றைத் தாங்கி நிற்கும் அம்சங்கள் என்று 64 தலைப்புகளில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க

கவி விதை 10 - காரிருள் எது? - --விழி மைந்தன்--

.
கவின் மிகுந்த காட்டுக் கன்னி அந்தக் குன்றைக் கட்டித் தழுவியபடி படுத்திருந்தாள்  பல நாளாய்.

குன்றின் மேல், இயற்கையோடு இணைந்ததாய், இருப்பதே தெரியாமல் நின்றது, அந்த மரக் கோட்டை.

கோட்டைக்குள்ளே கொல்லியூர்க் கிழாரும்  அவரது குடிகளும் வசித்தனர்.

கோட்டையின் ஓர் பக்கம் குட்டை மரங்கள் அடர்ந்த ஒரு வெளி, ஒரு நீண்ட மலைத் தொடரிலே போய்  முடிந்தது. பனிப் புகார் உடுத்தி நின்ற மலையின் சரிவுகளில் நரமாமிச உண்ணிகளான பழங்குடியினர் வாழ்வதாக வதந்தி உலாவியது. மூர்க்க குணம் கொண்ட அவர்கள் ஓநாய்த்  தோல்களை  ஆடையாக அணிவார்களென்றும் அந்தத் தோல்களின்  தலைப் பகுதிகளைத் தமது தலைகள் மேல்  போர்த்துக் கொள்வதால் இரண்டு கால் ஓநாய்கள் போலத் தோற்றம் அளிப்பார்கள் என்றும்  சொன்னார்கள். ஆனால் யாரும் அவர்களைக் கண்டதில்லை.


மேலும் வாசிக்க

விஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா

.
இமைகள்  கவிழ்ந்த  இலக்கிய  இதழ்
புகலிடத்தில்  வரையறைக்குள்  நின்று  பெண்ணியம்பேசிய  ஆளுமையின்  காலத்தை பதிவுசெய்த  ஆவணம்
  


இலங்கையிலும்  புகலிடம்பெற்ற  அவுஸ்திரேலியாவிலும்  ஒரு இலக்கியத்தாரகையாக  மிளிர்ந்த  எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும்   சமூகப்பணியாளருமான  திருமதி அருண். விஜயராணி  கடந்த   ஆண்டு  இறுதியில்  மறைந்து  நாட்கள்  விரைந்து  ஓடி,  ஒரு  மாதகாலம்  கடந்துவிட்ட  நிலையில் அவருடைய  நினைவுகளைத்  தாங்கி  வெளியாகியிருக்கிறது விஜயதாரகை  என்னும்  இமைகள்  கவிழ்ந்த இலக்கிய  இதழ்.
" தாரகைகள்  உதிரும்  இயல்புள்ளவை.  மீண்டும்  உலகிற்கு  அவை விஜயம்மேற்கொள்ளும்  இயல்பையும்  தன்னகத்தே கொண்டிருப்பவை.  "  என்ற  தொனிப்பொருளுடன்  விஜயதாரகை இதழை   தொகுத்துள்ளனர்.
இதன்   வெளியீடு  கடந்த  31  ஆம்  திகதி  அவுஸ்திரேலியா விக்ரோரியா  மாநிலத்தின்  மெல்பன்  நகரத்தில்,  பிரஸ்டன்  நகர மண்டபத்தில்  மக்கள்  நிறைந்த  அரங்கில்  இடம்பெற்றது.
காலத்தின்தேவையாக  கருதப்படும்  விஜயதாரகை  பற்றியதே இக்கட்டுரை.
இந்த  இதழில்  விஜயாவின்  மனிதநேயத்தை,   அவரின் இலக்கியப்படைப்புகளை   அவரிடமிருந்த  சமூகப்பார்வையை,  அவர் மேற்கொண்ட   கலை,  இலக்கிய  சமூகப்பணிகளை  நாம் காணமுடிகிறது.   இதில்  எழுதியிருப்பவர்கள்  விஜயாவுடன்  பல வருடகாலம்   இணைந்து  பொதுப்பணிகளில்  ஈடுபட்டவர்கள்.

மேலும் வாசிக்க

இலங்கைச் செய்திகள்


சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்

உள்ளூராட்சித் தேர்தல் ஜூனில் நடக்கும்  : அமைச்சர் பைசர் முஸ்தபா

எம்.பி.யாக பதவியேற்றார் சரத் பொன்சேகா

லலித் கொத்தலாவலயின்  மனைவிக்கு விளக்கமறியல்

எச்சரிக்கை : புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு

திருமணம் செய்துகொண்ட சிறுவனும் சிறுமியும் கைது

வடக்கு ஆளுனராக ரெஜினோல் குரே

குவைட்டிலிருந்து திருப்பி அனுப்பிவைப்பு

மேலும் வாசிக்க

1000 கவிஞர்கள் கவிதைகள்

.


உலக கவிதைகள் வரலாற்றில் ஒரு பொக்கிச ஆவணமாய் உலாவரவிருக்கின்றது '1000 கவிஞர்கள் கவிதைகள்' எனும் கவிநூல். அவனியின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தரமிகு கவிதைகளின் தொகுப்பாய் முகம் காட்டவிருக்கும் '1000 கவிஞர்கள் கவிதைகள்' நூலில் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கவிதைகள் இடம்பெறும். ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக எல்லா நாடுகளிலும் செயலாற்றுநர்களும், கவிச்சேகரிப்பாளர்களும் இயங்குவர். இப்பெரு கவித்தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவானது தேர்வுக்குழுவினரால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.
கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்பவே கவிதைகள் ஏற்கப்படும்.

01. எவ்வகையான கவிதைகளும் ஏற்கப்படும். கருப்பொருளுக்கு வரையறை இல்லை. ஏற்கனவே பிரசுரமான, ஒலிபரப்பான கவிதைகளையும் அனுப்ப முடியும்.
02. கட்சிசார், சமூகத்தால் விரும்பப்படா தனிநபர் புகழ்ச்சிசார் கவிதைகள் ஏற்கப்படமாட்டாது.

03. கவிதையின் ஆகக்கூடிய‌ வரிகள் 35 ஆகும். இவ்வரிகளுக்கு குறைவாகவும் கவிதைகள் அனுப்ப முடியும். ஒருவர் ஒரு கவிதையே அனுப்ப முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட கவிதைகளினை அனுப்பி, தேர்வுக்குழுவின் விருப்பிற்கு ஒரு கவிதையை ஏற்கச் செய்யவும் அனுமதி உண்டு.

04. பங்கேற்கும் கவிஞர் கடவுச்சீட்டு அளவான புகைப்படம், மற்றும் அவர் சார்ந்த 70 சொற்களுக்குட்பட்ட சுயகுறிப்பினையும் இணைத்து அனுப்பலாம். இக்குறிப்பிலேயே முகவரியும் உள்ள‌டங்கும்.

05. மேலதிக விடயங்களுக்கான தொலைபேசி எண்கள். இலங்கை 0094 775892351/0094 775006796/0094 773407243 சர்வதேசம் 001 416 6661855. 

06. கவிதைகளை tamilkavithaikal1000@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது செயலியக்குநர், 1000 கவிஞர்கள் கவிதைகள், விஜய் அச்சுப் பதிப்பகம், மில் வீதி, வவுனியா, இலங்கை. என்ற முகவரிக்கோ அனுப்ப முடியும்.
மேலும் வாசிக்க

ஒரு விருது பெருமை பெறுகிறது....

.
நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதிற்கான பட்டியலில் இருந்தவர்களின் பெயர்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட பெயர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தாவின் பெயர்தான்.


எண்பத்தெட்டு வயதாகிறது இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.

மேலும் வாசிக்க

தேங்காய் மகத்மியம் - முருகபூபதி

.
மக்களுக்கும்  தேசத்தின்   பொருளாதாரத்திற்கும் வழிபாட்டிற்கும்   பயன்பட்ட  தேங்காய் சாபமிடும்  பொருளாய்  அரசியல்வாதிகளின்  கையில் சிக்கிவிட்டதா ?
தெருத்தேங்காய்  வழிப்பிள்ளையாருக்கு !  திருட்டுத்தேங்காய்  சாபத்திற்கா  ?
    
                                        
பயன்தரும்  மரங்களின்  பெயர்களையும்  எழுதி,  அதில் ஒன்றைத்தெரிவுசெய்து,  அது  தரும்  நல்ல  பயன்களைப்பற்றி எழுதச்சொன்னார்  ஆசிரியர்.   இந்தச்சம்பவம்  நான்  ஐந்தாம்  வகுப்பு படித்த காலத்தில்  நடந்தது.

எனது  வகுப்பில்  பெரும்பாலான  மாணவ  மாணவிகள்  தென்னை மரம்  பற்றியே  எழுதியதற்குக்காரணம்,  எங்கள்   ஊரில்  அந்த மரங்கள்தான்  அதிகம்.   நாம்  பனைமரத்தை  படங்களில்தான்  பார்த்திருந்த  காலம்.
தென்னையின்   பயன்பாடு பற்றி  நிறையச் சொல்லமுடியும்.  ஆனால்,  அந்த  பால்யகாலத்தில்  எமக்குத் தெரிந்ததையே  எழுதினோம்.
தெங்கு  ஆராய்ச்சி  நிலையம்,   தேங்காய்  எண்ணெய்  தொழிற்சாலை, தேங்காய்  துருவல் (Desiccated Coconut)    தொழிற்சாலை  என்பன  எங்கள்  ஊரில்  இருந்தன.   தென்னந்தோட்ட  உரிமையாளர்கள்  பலர்  தமக்குள்  சங்கமும்  வைத்திருந்தனர்.
ஆனால் , இவைபற்றிய  எந்த  ஞானமும்  இல்லாமலேயே  நானும் சகமாணவர்களும்   தென்னையின்  பயனை   நன்றாக  எழுதி ஆசிரியரிடம்  சிறந்த  மதிப்பெண்களும்  பெற்றோம்.
பாடசாலைக்கு  அருகில்  அமைந்த  கோயில்களில்  யாராவது பக்தர்கள்   வந்து  தேங்காய்  உடைத்து  பிரார்த்தனை  செய்தால்,  எமக்கு  கொண்டாட்டம்தான்.   பாடசாலை  இடைவேளை  நேரத்தில் சிதறுதேங்காய்  பொறுக்கிய  அந்தக்காலத்தை  மறக்கத்தான்  முடியுமா.?
கோயில்  அய்யரோ  அல்லது  பண்டாரமோ  வந்து  அவற்றை பொறுக்குவதற்கு  முன்னர்  நாம்  முந்திவிடுவோம்.   சில  சமயங்களில்    அவர்கள்  முந்துவார்கள்.
கோயில்  வெளிவீதியில்  சிதறு தேங்காய்களை  காயவைத்து கொப்பறையாக  மாற்றி,  தேங்காய்  எண்ணெய் தொழிற்சாலைக்கு அனுப்புவார்கள்.
மேலும் வாசிக்க
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

GOOGLE SEARCH

ஆசிரியர் குழு


C.PASKARAN

MATHURA MAHADEV

C.KARUNASALADEVA

M.GOWRI

இவ்வாரம் தமிழ்முரசை பார்வையிட்டவர்கள்

இவ்வார தலைப்புக்கள்

  • ►  2023 (181)
    • ►  19 March - 26 March (19)
    • ►  12 March - 19 March (12)
    • ►  5 March - 12 March (20)
    • ►  26 February - 5 March (13)
    • ►  19 February - 26 February (14)
    • ►  12 February - 19 February (10)
    • ►  5 February - 12 February (14)
    • ►  29 January - 5 February (13)
    • ►  22 January - 29 January (23)
    • ►  15 January - 22 January (15)
    • ►  8 January - 15 January (13)
    • ►  1 January - 8 January (15)
  • ►  2022 (733)
    • ►  25 December - 1 January (16)
    • ►  18 December - 25 December (10)
    • ►  11 December - 18 December (12)
    • ►  4 December - 11 December (13)
    • ►  27 November - 4 December (16)
    • ►  20 November - 27 November (11)
    • ►  13 November - 20 November (15)
    • ►  6 November - 13 November (16)
    • ►  30 October - 6 November (17)
    • ►  23 October - 30 October (15)
    • ►  16 October - 23 October (13)
    • ►  9 October - 16 October (13)
    • ►  2 October - 9 October (16)
    • ►  25 September - 2 October (9)
    • ►  18 September - 25 September (13)
    • ►  11 September - 18 September (10)
    • ►  4 September - 11 September (9)
    • ►  28 August - 4 September (13)
    • ►  21 August - 28 August (13)
    • ►  14 August - 21 August (15)
    • ►  7 August - 14 August (17)
    • ►  31 July - 7 August (14)
    • ►  24 July - 31 July (17)
    • ►  17 July - 24 July (12)
    • ►  10 July - 17 July (14)
    • ►  3 July - 10 July (15)
    • ►  26 June - 3 July (9)
    • ►  19 June - 26 June (7)
    • ►  12 June - 19 June (13)
    • ►  5 June - 12 June (10)
    • ►  29 May - 5 June (13)
    • ►  22 May - 29 May (14)
    • ►  15 May - 22 May (14)
    • ►  8 May - 15 May (17)
    • ►  1 May - 8 May (13)
    • ►  24 April - 1 May (13)
    • ►  17 April - 24 April (13)
    • ►  10 April - 17 April (14)
    • ►  3 April - 10 April (14)
    • ►  27 March - 3 April (12)
    • ►  20 March - 27 March (16)
    • ►  13 March - 20 March (15)
    • ►  6 March - 13 March (15)
    • ►  27 February - 6 March (22)
    • ►  20 February - 27 February (18)
    • ►  13 February - 20 February (30)
    • ►  6 February - 13 February (18)
    • ►  30 January - 6 February (15)
    • ►  23 January - 30 January (13)
    • ►  16 January - 23 January (14)
    • ►  9 January - 16 January (13)
    • ►  2 January - 9 January (14)
  • ►  2021 (886)
    • ►  26 December - 2 January (14)
    • ►  19 December - 26 December (11)
    • ►  12 December - 19 December (18)
    • ►  5 December - 12 December (11)
    • ►  28 November - 5 December (16)
    • ►  21 November - 28 November (12)
    • ►  14 November - 21 November (15)
    • ►  7 November - 14 November (16)
    • ►  31 October - 7 November (15)
    • ►  24 October - 31 October (19)
    • ►  17 October - 24 October (18)
    • ►  10 October - 17 October (22)
    • ►  3 October - 10 October (16)
    • ►  26 September - 3 October (17)
    • ►  19 September - 26 September (19)
    • ►  12 September - 19 September (21)
    • ►  5 September - 12 September (18)
    • ►  29 August - 5 September (13)
    • ►  22 August - 29 August (22)
    • ►  15 August - 22 August (14)
    • ►  8 August - 15 August (19)
    • ►  1 August - 8 August (14)
    • ►  25 July - 1 August (16)
    • ►  18 July - 25 July (10)
    • ►  11 July - 18 July (18)
    • ►  4 July - 11 July (16)
    • ►  27 June - 4 July (17)
    • ►  20 June - 27 June (14)
    • ►  13 June - 20 June (22)
    • ►  6 June - 13 June (16)
    • ►  30 May - 6 June (18)
    • ►  23 May - 30 May (18)
    • ►  16 May - 23 May (18)
    • ►  9 May - 16 May (22)
    • ►  2 May - 9 May (14)
    • ►  25 April - 2 May (22)
    • ►  18 April - 25 April (16)
    • ►  11 April - 18 April (15)
    • ►  4 April - 11 April (22)
    • ►  28 March - 4 April (17)
    • ►  21 March - 28 March (18)
    • ►  14 March - 21 March (10)
    • ►  7 March - 14 March (19)
    • ►  28 February - 7 March (17)
    • ►  21 February - 28 February (22)
    • ►  14 February - 21 February (18)
    • ►  7 February - 14 February (24)
    • ►  31 January - 7 February (21)
    • ►  24 January - 31 January (22)
    • ►  17 January - 24 January (15)
    • ►  10 January - 17 January (16)
    • ►  3 January - 10 January (13)
  • ►  2020 (1000)
    • ►  27 December - 3 January (17)
    • ►  20 December - 27 December (15)
    • ►  13 December - 20 December (17)
    • ►  6 December - 13 December (21)
    • ►  29 November - 6 December (17)
    • ►  22 November - 29 November (23)
    • ►  15 November - 22 November (15)
    • ►  8 November - 15 November (16)
    • ►  1 November - 8 November (14)
    • ►  25 October - 1 November (25)
    • ►  18 October - 25 October (16)
    • ►  11 October - 18 October (17)
    • ►  4 October - 11 October (25)
    • ►  27 September - 4 October (17)
    • ►  20 September - 27 September (18)
    • ►  13 September - 20 September (17)
    • ►  6 September - 13 September (13)
    • ►  30 August - 6 September (19)
    • ►  23 August - 30 August (18)
    • ►  16 August - 23 August (22)
    • ►  9 August - 16 August (20)
    • ►  2 August - 9 August (18)
    • ►  26 July - 2 August (24)
    • ►  19 July - 26 July (21)
    • ►  12 July - 19 July (26)
    • ►  5 July - 12 July (22)
    • ►  28 June - 5 July (25)
    • ►  21 June - 28 June (15)
    • ►  14 June - 21 June (26)
    • ►  7 June - 14 June (20)
    • ►  31 May - 7 June (21)
    • ►  24 May - 31 May (21)
    • ►  17 May - 24 May (17)
    • ►  10 May - 17 May (19)
    • ►  3 May - 10 May (17)
    • ►  26 April - 3 May (20)
    • ►  19 April - 26 April (17)
    • ►  12 April - 19 April (28)
    • ►  5 April - 12 April (17)
    • ►  29 March - 5 April (24)
    • ►  22 March - 29 March (19)
    • ►  15 March - 22 March (17)
    • ►  8 March - 15 March (25)
    • ►  1 March - 8 March (25)
    • ►  23 February - 1 March (14)
    • ►  16 February - 23 February (15)
    • ►  9 February - 16 February (17)
    • ►  2 February - 9 February (18)
    • ►  26 January - 2 February (12)
    • ►  19 January - 26 January (18)
    • ►  12 January - 19 January (20)
    • ►  5 January - 12 January (20)
  • ►  2019 (829)
    • ►  29 December - 5 January (17)
    • ►  22 December - 29 December (19)
    • ►  15 December - 22 December (20)
    • ►  8 December - 15 December (22)
    • ►  1 December - 8 December (23)
    • ►  24 November - 1 December (20)
    • ►  17 November - 24 November (14)
    • ►  10 November - 17 November (18)
    • ►  3 November - 10 November (15)
    • ►  27 October - 3 November (14)
    • ►  20 October - 27 October (15)
    • ►  13 October - 20 October (15)
    • ►  6 October - 13 October (16)
    • ►  29 September - 6 October (16)
    • ►  22 September - 29 September (24)
    • ►  15 September - 22 September (13)
    • ►  8 September - 15 September (15)
    • ►  1 September - 8 September (23)
    • ►  25 August - 1 September (13)
    • ►  18 August - 25 August (15)
    • ►  11 August - 18 August (17)
    • ►  4 August - 11 August (14)
    • ►  28 July - 4 August (20)
    • ►  21 July - 28 July (13)
    • ►  14 July - 21 July (11)
    • ►  7 July - 14 July (16)
    • ►  30 June - 7 July (17)
    • ►  23 June - 30 June (13)
    • ►  16 June - 23 June (12)
    • ►  9 June - 16 June (13)
    • ►  2 June - 9 June (14)
    • ►  26 May - 2 June (9)
    • ►  19 May - 26 May (14)
    • ►  12 May - 19 May (11)
    • ►  5 May - 12 May (15)
    • ►  28 April - 5 May (18)
    • ►  21 April - 28 April (18)
    • ►  14 April - 21 April (14)
    • ►  7 April - 14 April (11)
    • ►  31 March - 7 April (14)
    • ►  24 March - 31 March (12)
    • ►  17 March - 24 March (15)
    • ►  10 March - 17 March (23)
    • ►  3 March - 10 March (17)
    • ►  24 February - 3 March (16)
    • ►  17 February - 24 February (13)
    • ►  10 February - 17 February (20)
    • ►  3 February - 10 February (16)
    • ►  27 January - 3 February (18)
    • ►  20 January - 27 January (16)
    • ►  13 January - 20 January (23)
    • ►  6 January - 13 January (9)
  • ►  2018 (626)
    • ►  30 December - 6 January (9)
    • ►  23 December - 30 December (14)
    • ►  16 December - 23 December (11)
    • ►  9 December - 16 December (7)
    • ►  2 December - 9 December (15)
    • ►  25 November - 2 December (12)
    • ►  18 November - 25 November (12)
    • ►  11 November - 18 November (11)
    • ►  4 November - 11 November (13)
    • ►  28 October - 4 November (13)
    • ►  21 October - 28 October (14)
    • ►  14 October - 21 October (12)
    • ►  7 October - 14 October (14)
    • ►  30 September - 7 October (11)
    • ►  23 September - 30 September (10)
    • ►  16 September - 23 September (13)
    • ►  9 September - 16 September (13)
    • ►  2 September - 9 September (11)
    • ►  26 August - 2 September (11)
    • ►  19 August - 26 August (14)
    • ►  12 August - 19 August (10)
    • ►  5 August - 12 August (12)
    • ►  29 July - 5 August (10)
    • ►  22 July - 29 July (11)
    • ►  15 July - 22 July (14)
    • ►  8 July - 15 July (14)
    • ►  1 July - 8 July (16)
    • ►  24 June - 1 July (15)
    • ►  17 June - 24 June (12)
    • ►  10 June - 17 June (11)
    • ►  3 June - 10 June (10)
    • ►  27 May - 3 June (11)
    • ►  20 May - 27 May (10)
    • ►  13 May - 20 May (10)
    • ►  6 May - 13 May (10)
    • ►  29 April - 6 May (17)
    • ►  22 April - 29 April (11)
    • ►  15 April - 22 April (12)
    • ►  8 April - 15 April (10)
    • ►  1 April - 8 April (12)
    • ►  25 March - 1 April (13)
    • ►  18 March - 25 March (10)
    • ►  11 March - 18 March (12)
    • ►  4 March - 11 March (9)
    • ►  25 February - 4 March (22)
    • ►  18 February - 25 February (12)
    • ►  11 February - 18 February (11)
    • ►  4 February - 11 February (8)
    • ►  28 January - 4 February (11)
    • ►  21 January - 28 January (12)
    • ►  14 January - 21 January (15)
    • ►  7 January - 14 January (13)
  • ►  2017 (656)
    • ►  31 December - 7 January (12)
    • ►  24 December - 31 December (9)
    • ►  17 December - 24 December (14)
    • ►  10 December - 17 December (8)
    • ►  3 December - 10 December (15)
    • ►  26 November - 3 December (13)
    • ►  19 November - 26 November (10)
    • ►  12 November - 19 November (11)
    • ►  5 November - 12 November (10)
    • ►  29 October - 5 November (15)
    • ►  22 October - 29 October (12)
    • ►  15 October - 22 October (16)
    • ►  8 October - 15 October (8)
    • ►  1 October - 8 October (12)
    • ►  24 September - 1 October (12)
    • ►  17 September - 24 September (8)
    • ►  10 September - 17 September (10)
    • ►  3 September - 10 September (12)
    • ►  27 August - 3 September (14)
    • ►  20 August - 27 August (16)
    • ►  13 August - 20 August (14)
    • ►  6 August - 13 August (14)
    • ►  30 July - 6 August (19)
    • ►  23 July - 30 July (13)
    • ►  16 July - 23 July (9)
    • ►  9 July - 16 July (13)
    • ►  2 July - 9 July (14)
    • ►  25 June - 2 July (17)
    • ►  18 June - 25 June (13)
    • ►  11 June - 18 June (14)
    • ►  4 June - 11 June (16)
    • ►  28 May - 4 June (19)
    • ►  14 May - 21 May (14)
    • ►  7 May - 14 May (14)
    • ►  30 April - 7 May (17)
    • ►  23 April - 30 April (17)
    • ►  16 April - 23 April (17)
    • ►  9 April - 16 April (5)
    • ►  2 April - 9 April (15)
    • ►  26 March - 2 April (18)
    • ►  12 March - 19 March (14)
    • ►  5 March - 12 March (9)
    • ►  26 February - 5 March (10)
    • ►  19 February - 26 February (8)
    • ►  12 February - 19 February (10)
    • ►  22 January - 29 January (24)
    • ►  15 January - 22 January (17)
    • ►  8 January - 15 January (16)
    • ►  1 January - 8 January (19)
  • ▼  2016 (869)
    • ►  18 December - 25 December (16)
    • ►  11 December - 18 December (17)
    • ►  4 December - 11 December (20)
    • ►  27 November - 4 December (22)
    • ►  20 November - 27 November (16)
    • ►  13 November - 20 November (17)
    • ►  6 November - 13 November (17)
    • ►  30 October - 6 November (20)
    • ►  23 October - 30 October (18)
    • ►  16 October - 23 October (16)
    • ►  9 October - 16 October (17)
    • ►  2 October - 9 October (19)
    • ►  25 September - 2 October (14)
    • ►  18 September - 25 September (11)
    • ►  11 September - 18 September (18)
    • ►  4 September - 11 September (14)
    • ►  28 August - 4 September (15)
    • ►  21 August - 28 August (17)
    • ►  14 August - 21 August (27)
    • ►  7 August - 14 August (28)
    • ►  31 July - 7 August (9)
    • ►  24 July - 31 July (7)
    • ►  17 July - 24 July (11)
    • ►  10 July - 17 July (19)
    • ►  3 July - 10 July (19)
    • ►  26 June - 3 July (20)
    • ►  19 June - 26 June (16)
    • ►  12 June - 19 June (17)
    • ►  5 June - 12 June (14)
    • ►  29 May - 5 June (19)
    • ►  22 May - 29 May (22)
    • ►  15 May - 22 May (18)
    • ►  8 May - 15 May (14)
    • ►  1 May - 8 May (15)
    • ►  24 April - 1 May (11)
    • ►  17 April - 24 April (13)
    • ►  10 April - 17 April (12)
    • ►  3 April - 10 April (20)
    • ►  27 March - 3 April (21)
    • ►  20 March - 27 March (21)
    • ►  13 March - 20 March (19)
    • ►  6 March - 13 March (22)
    • ►  28 February - 6 March (19)
    • ►  21 February - 28 February (22)
    • ▼  14 February - 21 February (19)
      • மரண அறிவித்தல்
      • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. ( எம். ஜெயராமசர...
      • எழுதமறந்த குறிப்புகள் - முருகபூபதி
      • உலகச் செய்திகள்
      • MELBOURNE Rockbank குன்றத்து குமரன் ஆலய திருவிழா ...
      • சங்க இலக்கியத் தூறல் - 11--- அன்பு ஜெயா, சிட்னி
      • புலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு
      • ஈழத்து மிருதங்கமேதை சந்தான கிருஷ்ணனுக்கு அஞ்ச...
      • "யாழ்ப்பாணம் பாரீர்" செங்கை ஆழியானின் உலாத்தல் - க...
      • கவி விதை 10 - காரிருள் எது? - --விழி மைந்தன்--
      • விஜயதாரகை அறிமுகம் - ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்த...
      • இலங்கைச் செய்திகள்
      • 1000 கவிஞர்கள் கவிதைகள்
      • ஒரு விருது பெருமை பெறுகிறது....
      • தேங்காய் மகத்மியம் - முருகபூபதி
      • நட­னக்­க­லையே எனது உயிர்­மூச்சு...! கலை­மா­மணி நர்...
      • ரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.
      • சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா? - Lakshmanan Ma...
      • தமிழ் சினிமா - விசாரணை
    • ►  7 February - 14 February (12)
    • ►  31 January - 7 February (18)
    • ►  24 January - 31 January (18)
    • ►  17 January - 24 January (12)
    • ►  10 January - 17 January (20)
    • ►  3 January - 10 January (11)
  • ►  2015 (850)
    • ►  27 December - 3 January (5)
    • ►  20 December - 27 December (16)
    • ►  13 December - 20 December (16)
    • ►  6 December - 13 December (19)
    • ►  29 November - 6 December (20)
    • ►  22 November - 29 November (16)
    • ►  15 November - 22 November (15)
    • ►  8 November - 15 November (11)
    • ►  1 November - 8 November (14)
    • ►  25 October - 1 November (16)
    • ►  18 October - 25 October (12)
    • ►  11 October - 18 October (15)
    • ►  4 October - 11 October (17)
    • ►  27 September - 4 October (21)
    • ►  20 September - 27 September (18)
    • ►  13 September - 20 September (15)
    • ►  6 September - 13 September (19)
    • ►  30 August - 6 September (18)
    • ►  23 August - 30 August (18)
    • ►  16 August - 23 August (11)
    • ►  9 August - 16 August (10)
    • ►  2 August - 9 August (20)
    • ►  26 July - 2 August (17)
    • ►  19 July - 26 July (21)
    • ►  12 July - 19 July (13)
    • ►  5 July - 12 July (19)
    • ►  28 June - 5 July (16)
    • ►  21 June - 28 June (14)
    • ►  14 June - 21 June (8)
    • ►  7 June - 14 June (13)
    • ►  31 May - 7 June (9)
    • ►  24 May - 31 May (13)
    • ►  17 May - 24 May (15)
    • ►  10 May - 17 May (23)
    • ►  3 May - 10 May (8)
    • ►  26 April - 3 May (19)
    • ►  19 April - 26 April (20)
    • ►  12 April - 19 April (29)
    • ►  5 April - 12 April (21)
    • ►  29 March - 5 April (23)
    • ►  22 March - 29 March (9)
    • ►  15 March - 22 March (21)
    • ►  8 March - 15 March (24)
    • ►  1 March - 8 March (18)
    • ►  22 February - 1 March (14)
    • ►  15 February - 22 February (19)
    • ►  8 February - 15 February (18)
    • ►  1 February - 8 February (17)
    • ►  25 January - 1 February (13)
    • ►  18 January - 25 January (17)
    • ►  11 January - 18 January (17)
    • ►  4 January - 11 January (20)
  • ►  2014 (903)
    • ►  21 December - 28 December (20)
    • ►  14 December - 21 December (21)
    • ►  7 December - 14 December (17)
    • ►  30 November - 7 December (16)
    • ►  23 November - 30 November (19)
    • ►  16 November - 23 November (16)
    • ►  9 November - 16 November (21)
    • ►  2 November - 9 November (19)
    • ►  26 October - 2 November (21)
    • ►  19 October - 26 October (21)
    • ►  12 October - 19 October (15)
    • ►  5 October - 12 October (22)
    • ►  28 September - 5 October (23)
    • ►  21 September - 28 September (20)
    • ►  14 September - 21 September (16)
    • ►  7 September - 14 September (19)
    • ►  31 August - 7 September (19)
    • ►  24 August - 31 August (21)
    • ►  17 August - 24 August (19)
    • ►  10 August - 17 August (21)
    • ►  3 August - 10 August (23)
    • ►  27 July - 3 August (16)
    • ►  20 July - 27 July (13)
    • ►  13 July - 20 July (17)
    • ►  6 July - 13 July (16)
    • ►  29 June - 6 July (17)
    • ►  22 June - 29 June (14)
    • ►  15 June - 22 June (13)
    • ►  8 June - 15 June (20)
    • ►  1 June - 8 June (25)
    • ►  25 May - 1 June (14)
    • ►  18 May - 25 May (19)
    • ►  11 May - 18 May (22)
    • ►  4 May - 11 May (18)
    • ►  27 April - 4 May (17)
    • ►  20 April - 27 April (22)
    • ►  13 April - 20 April (18)
    • ►  6 April - 13 April (15)
    • ►  30 March - 6 April (23)
    • ►  23 March - 30 March (19)
    • ►  16 March - 23 March (19)
    • ►  9 March - 16 March (29)
    • ►  2 March - 9 March (23)
    • ►  23 February - 2 March (17)
    • ►  9 February - 16 February (12)
    • ►  26 January - 2 February (15)
    • ►  19 January - 26 January (16)
    • ►  12 January - 19 January (10)
    • ►  5 January - 12 January (15)
  • ►  2013 (889)
    • ►  29 December - 5 January (11)
    • ►  22 December - 29 December (17)
    • ►  15 December - 22 December (14)
    • ►  8 December - 15 December (15)
    • ►  1 December - 8 December (26)
    • ►  24 November - 1 December (13)
    • ►  17 November - 24 November (16)
    • ►  10 November - 17 November (16)
    • ►  3 November - 10 November (15)
    • ►  27 October - 3 November (18)
    • ►  20 October - 27 October (16)
    • ►  13 October - 20 October (16)
    • ►  6 October - 13 October (20)
    • ►  29 September - 6 October (18)
    • ►  22 September - 29 September (19)
    • ►  15 September - 22 September (14)
    • ►  8 September - 15 September (13)
    • ►  1 September - 8 September (18)
    • ►  25 August - 1 September (14)
    • ►  18 August - 25 August (16)
    • ►  11 August - 18 August (14)
    • ►  4 August - 11 August (12)
    • ►  28 July - 4 August (21)
    • ►  21 July - 28 July (19)
    • ►  14 July - 21 July (12)
    • ►  7 July - 14 July (14)
    • ►  30 June - 7 July (21)
    • ►  23 June - 30 June (24)
    • ►  16 June - 23 June (17)
    • ►  9 June - 16 June (17)
    • ►  2 June - 9 June (18)
    • ►  26 May - 2 June (22)
    • ►  19 May - 26 May (23)
    • ►  12 May - 19 May (9)
    • ►  5 May - 12 May (11)
    • ►  28 April - 5 May (15)
    • ►  21 April - 28 April (14)
    • ►  14 April - 21 April (19)
    • ►  7 April - 14 April (16)
    • ►  31 March - 7 April (14)
    • ►  24 March - 31 March (25)
    • ►  17 March - 24 March (26)
    • ►  10 March - 17 March (14)
    • ►  3 March - 10 March (18)
    • ►  24 February - 3 March (19)
    • ►  17 February - 24 February (25)
    • ►  10 February - 17 February (16)
    • ►  3 February - 10 February (17)
    • ►  27 January - 3 February (21)
    • ►  20 January - 27 January (15)
    • ►  13 January - 20 January (18)
    • ►  6 January - 13 January (18)
  • ►  2012 (845)
    • ►  30 December - 6 January (19)
    • ►  16 December - 23 December (20)
    • ►  9 December - 16 December (18)
    • ►  2 December - 9 December (17)
    • ►  25 November - 2 December (15)
    • ►  18 November - 25 November (17)
    • ►  11 November - 18 November (23)
    • ►  4 November - 11 November (16)
    • ►  28 October - 4 November (15)
    • ►  21 October - 28 October (18)
    • ►  14 October - 21 October (12)
    • ►  7 October - 14 October (14)
    • ►  30 September - 7 October (12)
    • ►  23 September - 30 September (25)
    • ►  16 September - 23 September (15)
    • ►  9 September - 16 September (12)
    • ►  2 September - 9 September (16)
    • ►  26 August - 2 September (17)
    • ►  19 August - 26 August (16)
    • ►  12 August - 19 August (15)
    • ►  5 August - 12 August (18)
    • ►  29 July - 5 August (14)
    • ►  22 July - 29 July (15)
    • ►  15 July - 22 July (14)
    • ►  8 July - 15 July (15)
    • ►  1 July - 8 July (10)
    • ►  24 June - 1 July (14)
    • ►  17 June - 24 June (11)
    • ►  10 June - 17 June (10)
    • ►  3 June - 10 June (14)
    • ►  27 May - 3 June (17)
    • ►  20 May - 27 May (19)
    • ►  13 May - 20 May (10)
    • ►  6 May - 13 May (17)
    • ►  29 April - 6 May (16)
    • ►  22 April - 29 April (21)
    • ►  15 April - 22 April (17)
    • ►  8 April - 15 April (17)
    • ►  1 April - 8 April (28)
    • ►  25 March - 1 April (16)
    • ►  18 March - 25 March (14)
    • ►  11 March - 18 March (23)
    • ►  4 March - 11 March (17)
    • ►  26 February - 4 March (22)
    • ►  19 February - 26 February (16)
    • ►  12 February - 19 February (19)
    • ►  5 February - 12 February (19)
    • ►  29 January - 5 February (12)
    • ►  22 January - 29 January (12)
    • ►  15 January - 22 January (19)
    • ►  8 January - 15 January (16)
    • ►  1 January - 8 January (11)
  • ►  2011 (896)
    • ►  25 December - 1 January (16)
    • ►  18 December - 25 December (17)
    • ►  11 December - 18 December (13)
    • ►  4 December - 11 December (10)
    • ►  27 November - 4 December (16)
    • ►  20 November - 27 November (14)
    • ►  13 November - 20 November (11)
    • ►  6 November - 13 November (15)
    • ►  30 October - 6 November (20)
    • ►  23 October - 30 October (19)
    • ►  16 October - 23 October (12)
    • ►  9 October - 16 October (19)
    • ►  2 October - 9 October (17)
    • ►  25 September - 2 October (15)
    • ►  18 September - 25 September (15)
    • ►  11 September - 18 September (13)
    • ►  4 September - 11 September (16)
    • ►  28 August - 4 September (14)
    • ►  21 August - 28 August (12)
    • ►  14 August - 21 August (19)
    • ►  7 August - 14 August (19)
    • ►  31 July - 7 August (18)
    • ►  24 July - 31 July (16)
    • ►  17 July - 24 July (13)
    • ►  10 July - 17 July (20)
    • ►  3 July - 10 July (17)
    • ►  26 June - 3 July (16)
    • ►  19 June - 26 June (14)
    • ►  12 June - 19 June (20)
    • ►  5 June - 12 June (19)
    • ►  29 May - 5 June (20)
    • ►  22 May - 29 May (23)
    • ►  15 May - 22 May (25)
    • ►  8 May - 15 May (15)
    • ►  1 May - 8 May (18)
    • ►  24 April - 1 May (21)
    • ►  17 April - 24 April (19)
    • ►  10 April - 17 April (16)
    • ►  3 April - 10 April (20)
    • ►  27 March - 3 April (16)
    • ►  20 March - 27 March (16)
    • ►  13 March - 20 March (22)
    • ►  6 March - 13 March (16)
    • ►  27 February - 6 March (21)
    • ►  20 February - 27 February (18)
    • ►  13 February - 20 February (21)
    • ►  6 February - 13 February (18)
    • ►  30 January - 6 February (22)
    • ►  23 January - 30 January (17)
    • ►  16 January - 23 January (19)
    • ►  9 January - 16 January (24)
    • ►  2 January - 9 January (14)
  • ►  2010 (651)
    • ►  26 December - 2 January (13)
    • ►  19 December - 26 December (14)
    • ►  12 December - 19 December (11)
    • ►  5 December - 12 December (12)
    • ►  28 November - 5 December (12)
    • ►  21 November - 28 November (12)
    • ►  14 November - 21 November (13)
    • ►  7 November - 14 November (18)
    • ►  31 October - 7 November (16)
    • ►  24 October - 31 October (12)
    • ►  17 October - 24 October (19)
    • ►  10 October - 17 October (18)
    • ►  3 October - 10 October (16)
    • ►  26 September - 3 October (18)
    • ►  19 September - 26 September (16)
    • ►  12 September - 19 September (12)
    • ►  5 September - 12 September (13)
    • ►  29 August - 5 September (21)
    • ►  22 August - 29 August (24)
    • ►  15 August - 22 August (23)
    • ►  8 August - 15 August (20)
    • ►  1 August - 8 August (21)
    • ►  25 July - 1 August (21)
    • ►  18 July - 25 July (23)
    • ►  11 July - 18 July (26)
    • ►  4 July - 11 July (19)
    • ►  27 June - 4 July (22)
    • ►  20 June - 27 June (14)
    • ►  13 June - 20 June (13)
    • ►  6 June - 13 June (17)
    • ►  30 May - 6 June (20)
    • ►  23 May - 30 May (13)
    • ►  16 May - 23 May (21)
    • ►  9 May - 16 May (14)
    • ►  2 May - 9 May (15)
    • ►  25 April - 2 May (14)
    • ►  18 April - 25 April (10)
    • ►  11 April - 18 April (11)
    • ►  4 April - 11 April (7)
    • ►  28 March - 4 April (4)
    • ►  21 March - 28 March (11)
    • ►  14 March - 21 March (2)

மேலும் சில பக்கங்கள்

  • Home
  • சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013
  • மரண அறிவித்தல்
  • விளம்பரங்கள்
  • சிறுகதைகள்
  • சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...
  • ஆன்மீகம்
  • பிறந்த நாள் வாழ்த்து
  • கவிதைப் பக்கம்
  • எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்
  • மௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்
  • மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை

இணைய செய்திகள்

  • காலச்சுவடு
  • தெனாலி
  • பதிவுகள்
  • திண்ணை
  • Noolaham.org
  • குளோபல் தமிழ் நியூஸ்
  • ATBC RADIO
  • இனிஒரு
  • சூத்திரம்
  • பதிவு
  • லும்பினி
  • அமுது அ.முத்துலிங்கம்
  • ஒஸ்ரேலிய தமிழ்க் கையேடு
  • Paadiniyar
  • நோயல்நடேசன்
  • தேசம்நெற்
  • ஈழநேசன்
  • புதினப்பலகை
  • ஈழம் வெப்
  • வணக்கம் மலேசியா
  • தேனி
  • உதயன்
  • வீரகேசரி
  • charindaa.org
  • அட்ஷயபாத்திரம்
  • மடத்துவாசல் பிள்ளையாரடி
  • தமிழ் மதுரம்
  • சிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்
  • திருமுறை பாடல்கள்
  • இரா இரவியின் கவிமலர்
  • குமுதம்
  • விகடன்
  • நக்கீரன்
  • தினகரன்
  • தினமலர்
  • தினமணி
  • தினத்தந்தி
  • BBC Tamil

பாடல்களின் தளங்கள்

  • OOsai.com
  • Tamilcinema.com
  • MOHANKUMARS.ORG
  • EELAM MP3
  • RAAGA.COM
  • Tamil beat
  • CINESOUTH.COM
  • PAADAL.COM
  • MUSICINDIAONLINE.COM
  • TAMILCINEMA.DK
  • Thevaaram

AUDIO IMPRESSIONS

AUDIO IMPRESSIONS

TREKKAUD INDIA TOURS

TREKKAUD INDIA TOURS
விபரங்களுக்கு படத்தில் அழுத்துங்கள்

ATBC RADIO

ATBC RADIO

Gnanam Art Creation

Gnanam Art Creation

AUSTRALIAN MEDICAL AID FOUNDATION Ltd

AUSTRALIAN MEDICAL AID FOUNDATION Ltd
விபரங்களுக்கு படத்தில் அழுத்துங்கள்

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்

ஒஸ்ரேலிய தமிழ்க் கையேடு

ஒஸ்ரேலிய தமிழ்க் கையேடு

விளம்பரங்கள்

விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.

படித்ததில் பிடித்தவை

படித்ததில் பிடித்தவை
பார்ப்பதற்கு படத்தில் அழுத்தவும்

Followers