உழைப்பை மதிக்கும்நாள் உன்னதமே உலகினுக்கு !

 


மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
மெல்பேண் ... ஆஸ்திரேலியா

       

ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது

உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது
காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது
கவலையுறும் உழைப்பாளி கண்ணீரில் மிதக்கின்றான் !

சமத்துவங்கள் பேசுகிறார் சங்கங்கள் அமைக்கின்றார்

நினைத்தவுடன் மாநாடு நிறையவே வைக்கின்றார்
அனைத்துமே உழைக்கின்றார் அனுசரணை என்கின்றார்
ஆனாலும் உழைக்கின்றார் அல்லலிலே இருக்கின்றார் !

வியர்வையிலே தொழிலாளி வேதனையில் தொழிலாளி
நலமிழந்து கிடக்கின்றான் நயமெதுவும் காணவில்லை
முதலீட்டும் முதலாளி தலைநிமிர்ந்து நிற்கின்றான்
முழுதுழைக்கும் தொழிலாளி நிலையிழந்து தவிக்கின்றான் !

பணமெண்ணும் மனமகன்று மனமெண்ணும் நிலைவேண்டும்
உழைப்பதனை உயர்வென்று உணர்த்தியே விடவேண்டும்
உழைத்திடுவார் இருப்பிடங்கள் உயரவெண்ணும் உளம்வேண்டும்
உழைப்பாளி முதலாளி ஓரணியாய் வரவேண்டும் !

வளமாக வாழ்வதற்கு வழிசமைக்கும் தொழிலாளி

நிலமீது நிம்மதியாய் தலைநிமிர வழிவேண்டும்
வளமீட்டும் முதலாளி மனமகிழ வைத்துவிடும்
வாழ்வளிக்கும் தொழிலாளி வாழும்நாள் வரவேண்டும் ! 

உழைத்திடும் கைகளென்றும் உயர்வினைப் பெறவேண்டும்

உழைப்பினை மதித்திடும் உளமது எழவேண்டும்
உழைப்பினால் உலகமே உயர்ந்திடும் தன்மையால்
உழைப்பவர் நலத்தினை உயர்த்தியே போற்றுவோம் !

ஏன்மூட நம்பிக்கை எண்ணங்கள் மாறாதோ?நிறைவாகத் திருமுறையைப் பெருளுணர்ந்து ஓதவேண்டும்!

நெஞ்சிருக்கும் பரம்பொருளை நினைந்துருகித் தொழவேண்டும்!

முறையாக உன்னைநீயாரென்று அறியவேண்டும்!

முன்கோபம் காமத்தொடு குரோதமும் மறக்கவேண்டும்!


துறைபோன விழுமியங்கள் தவறாது ஓம்பவேண்டும்!

சொன்னதிவை செய்யாது கோயிலிலோர் தூதரொடு

இறைவனிடம் வேண்டிவிட்டால்  எல்லாமும் சாத்தியமோ?

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?

 

அஞ்சலிக்குறிப்பு : இரக்கத்தின் ஊற்றாக விளங்கிய மகாதேவி ஜெயமணி முருகையா அம்மையார் முருகபூபதி


யாழ்ப்பாணத்தில் பிரபல சட்டத்தரணியாக விளங்கிய  சோமசுந்தரம்  அவர்களுக்கும்   திருமதி நவமணி சோமசுந்தரம் அவர்களுக்கும் செல்வப் புதல்வியாக 1939 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி  பிறந்திருக்கும் எமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய  அம்மா திருமதி மகாதேவி ஜெயமணி அவர்கள்  உள்ளத்தளவிலும் மகா தேவியாகவே வாழ்ந்து எம்மனைவரிடமிருந்தும்  இம்மாதம் 20 ஆம் திகதி  விடைபெற்றுவிட்டார்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர்,  1967 ஆம் ஆண்டில்  எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய உயர் திரு முருகையா அய்யா அவர்களை வாழ்க்கைத்துணைவராக கரம் பிடித்த அம்மா, துளசி, ரொகான் வள்ளுவன் ஆகிய இரண்டு செல்வப்புதல்வி, புதல்வனை எமது சமூகத்திற்கு வழங்கி,  அவர்களுக்கும் உரிய வாழ்க்கைத் துணைகளை தேடித்தந்துவிட்டு, இரண்டு பேரக்குழந்தைகளுக்கும் பேத்தியாராகி, நிறைவான  வாழ்க்கையையே வாழ்ந்து விடைபெற்றிருக்கிறார்.

ஏறக்குறைய 83 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அம்மா,


இனிவாழப்போவது விண்ணுலகில் என்ற குருட்டு நம்பிக்கையுடன் இந்த அஞ்சலிக்குறிப்பினை பதிவுசெய்கின்றேன்.

அம்மாவின் வாழ்க்கைப்பாதை நெடியது. அதில் அவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர்.  அவர் பற்றி சொல்வதற்கு  எனக்கு மட்டுமல்ல அவரை நன்கு தெரிந்த பலருக்கும்   பல சுவாரசியமான கதைகள் இருக்கும்.

என்னைப்பொறுத்தவரையில் அவர் ஒரு சிறந்த கதை சொல்லி.

நீண்டகாலமாக  வோர்க்கரின் துணையுடன் வீட்டினுள் வலம்வந்தவர். அவரைச் சந்திக்கச்செல்லும் சமயங்களில்,  அவர் சமையலறையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து காய், கனி, கீரை நறுக்கியவாறே தனது வாழ்வியல் அனுபவங்களை சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார்.

அவர்  தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தெய்வ பக்தியுடன் வளர்ந்தவர்.  உயர் கல்வியை முடித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில், கலைப்பீடத்தில் அவர் பயின்றபோது, அவரது பேராசிரியர்களாக  விளங்கிய சிலர் மார்க்ஸீய, லெனினிஸ,  ஸ்டாலினிஸ, சோஷலிஸ, கம்யூனிஸ சிந்தனை கொண்டிருந்தவர்கள்.

அவர்களிடம் கற்ற பல மாணவர்களுக்கும் அந்த இஸங்களின் மீதுதான்  ஆர்வம் இருந்தது. அம்மாவையும் அவர்கள் தங்கள் இஸத்தின் பாதையில் அழைத்தபோது, தனக்குத் தெரிந்தது ஆன்மீக இஸமும், அம்மன் இஸமும்தான். நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள், நான் எனது பாதையில் செல்கின்றேன் என்று தனது இளமைக்காலம் முதல் ஆன்மீகப்பாதையிலேயே  வளர்ந்தவர்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 11 1987 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டும் ! “ தாமரைப்பூ மாளிகையில் தாவணிகள் ஆடுகையில்…. “ முருகபூபதி


தாயகத்தை விட்டு விடைபெற்றுவந்த 1987 ஆம் ஆண்டின்  தொடக்க  காலம் முதல்,  அவ்வாண்டு இறுதிவரையில்  மனம் பதறிக்கொண்டேயிருந்தது.  அந்த ஆண்டு ஏப்ரில் மாதம் தமிழ் – சிங்கள சித்திரை புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு, அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனா அரசு,  ஏப்ரில் 11 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் போர் நிறுத்தத்தை அறிவித்தது.

அவ்வப்போது வீரகேசரி ஆசிரிய பீடத்துடன் தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிவேன்.

போர் நிறுத்தம் என்பது, போரை முற்றாக நிறுத்துவது அல்ல!?


  அடுத்த கட்ட போருக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதையும், களத்தில் நிற்பவர்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுப்பதையுமே உள்நோக்கமாகக் கொண்டிருப்பது.

இலங்கையில் இந்த போர் நிறுத்தம் என்பது இரண்டு தரப்புமே மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொண்ட தந்திரோபாயம்தான்.

போர் நிறுத்த காலத்தில் ஆயுதங்களையும் சேகரித்துக்கொள்ள முடியும். 

இதுபற்றி மெல்பனில் எனது குடியிருப்பு  அறை நண்பர்களுடன் விவாதிப்பேன்.

அந்த போர் நிறுத்த காலத்தில்தான் ஏப்ரில் 15 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை – ஹபரணை  வீதியில் சிங்கள பஸ் பயணிகளை புலிகள் இயக்கம் கொன்று குவித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதனையடுத்து, அதே மாதம் 21 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழே  இருந்த புத்தர் சிலைக்கு சமீபமாக பாரிய குண்டுவெடிப்பு சம்பவமும் நடந்தது. இதில் நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் எதிர்வினையாக வடக்கில் இராணுவத்தளபதி டென்ஸில் கொப்பேகடுவ தலைமையில் இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தமிழ் மக்களை சுட்டுக்கொன்றனர்.

வீரகேசரி வாரவெளியீடு பொறுப்பாசிரியர் பொன். ராஜகோபால், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன்,  நண்பர்கள் தனபாலசிங்கம், அன்டன் எட்வர்ட் ஆகியோருடன்  அடிக்கடி தொடர்புகொண்டு செய்திகளை கேட்டறிந்தேன். 

புறக்கோட்டை அரசமரத்தடி குண்டுவெடிப்பு நடந்தன்று, வீரகேசரி ஊழியர்கள் வெளியே செல்லமுடியாமல் அங்கேயே தங்கவும் நேர்ந்தது.

ஸ்வீட் சிக்ஸ்டி 12 - ஆலயமணி - ச சுந்தரதாஸ்

 .


தமிழ் திரைப் படங்களில் கதாநாயகர்களில் கதா பாத்திரங்களின் குணாம்சங்களை,பண்புகளை உயத்திக் காட்டுவதே பொதுவான நியதியாகும்.விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே கதாநாயகனை எதிர்மறையான பாத்திரங்களில் சித்தரித்துள்ளன.அதிலும் வக்கிரம்,பொறாமை,பழி எண்ணம் இவற்றை கொண்ட கதாநாயகர்களாக கமல்ஹாசன் சிவப்பு ரோஜாக்கள்,பிரதாப் போத்தன் மூடுபனி,ரகுவரன் புரியாத புதிர்,ரஜினிகாந்த் ஜானி ஆகிய படங்களில் எண்பதுகளில் நடித்திருந்தார்கள்.ஆனால் அதற்கு இருபது ஆண்டுகள் முன்பாகவே இத்தகைய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.அந்தப் படம்தான் ஆலயமணி.பி எஸ் வி பிக்ச்சர்ஸ் சார்பில் படம் தயாரிக்கப் பட்டது.

ஆங்கிலப் படங்களின் பாணியில் கதாநாயகனின் பாத்திரம் இந்தப் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.கதாநாயகன் தியாகு நல்லவன்,செல்வந்தன்,ஏழைகளுக்கு உதவக் கூடியவன் ஆனால் பொறாமை என்னும் தீ அவன் அடிமனதில் கனன்று கொண்டே இருக்கும்.தோல்வி என்பதை அவன் மனம் எக் காரணம் கொண்டும் ஏற்காது.இதனால் மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையிலேயே அவன் வாழ்கிறான்.எதிர்பாராத விதமாக சேகரின் நட்பு அவனுக்கு கிட்டுகிறது.அவன் மீது அன்பை காட்டுகிறான்.ஆனால் சேகர் காதலிக்கும் மீனாவையே தெரியாமல் தியாகுவும் காதலிக்கிறான்.நன்றிக்கடனாக சேகரும் மீனாவும் தங்கள் காதலை விட்டு கொடுக்க தியாகுவுக்கும் மீனாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது.ஆனால் சேகரும் மீனாவும் பழைய காதலர்கள் என்பதை அறிய வரும் தியாகு உள்ளத்தில் பொறாமை தலை தூக்குகிறது.மிருக மனம் விஸ்வரூபம் எடுக்கிறது.

இவ்வாறு அமைந்த ஆலயமணி படத்தின் மூலக் கதையை பிரபல கதாசிரியர் ஜி என் பாலசுப்ரமணியம் எழுதி இருந்தார்.அவருடைய கதைக்கு திரைக்கதை அமைத்து வசனங்களையும் எழுதியிருந்தார் ஜாவர் சீதாராமன்.எம் ஏ பட்டப் படிப்பு படித்து சட்டத்தரணியாகவும் தேர்ச்சி பெற்ற இவர் நடிகராகி,பின்னர் நாவலாசிரியராகி,கதாசிரியராகி வசனகர்த்தாவாகி பின்னர் ஒரு படத்தையும் இயக்கிய காலகட்டத்தில் திடீரென காலமானார்அந்த ஜாவர் தன் திறமையை முழுமையாக இப்படத்தின் திரைக்ககதையிலும் வசனங்களிலும் காட்டியிருந்தார்.கதா பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்றாற் போல் வசனங்கள் அளவுடன் , அர்த்தத்துடன் அமைந்திருந்தன.

வித்தியாசமாய் சிந்தித்த புதுவைப் புயல் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ....  அவுஸ்திரேலியா


    " பாட்டுக்கொரு புலவன் பாரதியடா " என்று


போற்றப்பட்டவர்தான் எட்ட யபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள் பயணப் பட்டிருக்கிறார் கள். ஒவ்வொரு கவிஞரும் பாரதியைப் பார்த்த பார்வைகள் அவரவர் சிந்த னைகளாக மலர்ந்திருக்கின்றன. பாரதியாரின் காலத்தில் கவிமணி தேசிக விநாகம் பிள்ளை இருந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார்.பாரதிதாசனும் இருந்திருக்கிறார். கவிமணி யின் சிந்தனை வேறாயும், நாமக்கல்லார் சிந்தனை வேறாயும் பாரதிதாசன் சிந்தனை வேறாகாவுமே அமைந்திருக்கிறது. இவர்கள் மூவருமே பாரதியைப் போற்றியாவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எட்டய புரத்துத்துப் பாரதிக்கு எட்டவே போகாமல் கிட்டவே நிற்கும் வாய்ப்பு புதுவையில் கால்பதித்த கனகசுப்பு ரத்தினத்துக்கே வாய்த்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்துக்குத்தான் எட்டயபுரத்து மகாகவி பாரதியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்த ஆசீர்வாதம்தான் " பாரதிதாசன் " என்று இன்றுவரை அவரை    சமூகத்தில் பார்த்திடக் , கொண்டாட , வைத்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

  பாரதியையும் புரட்சிக்கவி என்று அழைக்கின்றோம். அவரின்


வாரிசாக வாய்த்திருக்கும் பாரதிதாச னையும் அழைக்கின்றோம். இருவரையும் புரட் சியின் வடிவமாகவே பார்ப்பதையே சமூகமும் விரும்பி நிற்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.பாரதி வாழ்ந்த காலமோ முப்பத்தொன்பது ஆண்டுக ளேயாகும். ஆனால் பாரதிதாசன் அவரைவிட இருமடங்கு காலம் வாழ்ந்திருக்கிறார்.பாரதியின் தாசனாகவே வாழ்ந்திடவே பாரதி தாசன் ஆசைப்பட்டார். அதுவே தனக்கும் , தனது வாழ்வுக்கும் மிகவும் பெருமையானது என்றும் கூட அவர் எண்ணியே இருந்தார். பாரதியைப் போலவே அவரும் புதிதாய்   புரட்சியாய். சிந்தித்தார். சிந்தித்தவற்றைத் தன்னுடைய படைப்புகள் வாயிலாகச் சமூகத்தில் இடம் பெறவும் செய்தார். பாரதியின் தாசனாய் அவரின் வாரிசாக வாய்த்த பாரதிதாசன் தன்னுடைய காலத் துக்கு ஏற்ப தன்னுடைய சிந்தனைகளை புதிதாய் வெளிப்படுத்தினார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. பாரதியார் வாழ்ந்த காலம்  பாரததேசம் அன்னியத்துக்கு அடிமைப்பட்டிருந்த காலம்.அவரின் வாரிசாய் வாய்த்த பாரதிதாசன் காலமே சுதந்திரக் காற்றினைப் பாரததேசம் சுவாசித்த காலமாகிவிட்டது. அதனால் தன்னுடைய குருவின் சிந்தனைகளை விட வித்தியாசமாய் சிந்திக்கும் அவசியம் பாரதிதாசனுக்கு அவசியமாய் 
ஆகிவிட்டது. அதனால் பாரதியின் சிந்தனைப் பாதையில் பயணித்தாலும் தனக்கென வித்தியாசமான சிந்தனைகளை பாரதிதாசன் வெளிப்படுத்தி நிற்கிறார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

  தம்முடைய குருவான பாரதியின் பிரிவை முன்னிட்டு பாரதிதாசன்

 

          நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா

          காடு கமழும் கற்பூரச் சொற்கோ ......

          திறம் பாட வந்த மறவன் புதிய

          அறம் பாட வந்த அறிஞன்

 

குடும்ப அரசியலும் - புதிய தலைமுறையின் தன்னெழுச்சி போராட்டமும் ! அவதானி


சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் வடபகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி எழுதிய கவிதை தற்போது நினைவுக்கு வருகிறது.

அதனை இங்கே முழுமையாகத் தருகின்றோம்:

எங்கள் தாத்தா குரக்கன் மா பிட்டு சாப்பிட்டார்.

எங்கள் அப்பா அரிசி மா பிட்டு சாப்பிட்டார்.

நாங்கள்  பாண் – ரொட்டி சாப்பிடுகிறோம்.

எங்கள் தம்பிப் பாப்பா என்ன சாப்பிடுவான்…?

 

எங்கள் தாத்தா கடவுளுக்குப் பயந்தார்.

எங்கள் அப்பா, தாத்தாவுக்குப் பயந்தார்.

நாங்கள் ஆர்மி, நேவிக்கு பயப்படுகிறோம்.

எங்கள் தம்பிப் பாப்பா எவருக்கும் பயப்பட மாட்டான் !

இலங்கையில் தோன்றியிருக்கும்   பொருளாதார நெருக்கடிக்கும்


அரசியல்  குழப்பங்களுக்கும், ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆட்சி முறைமையே பிரதான காரணம் எனவும், அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை விட்டு மாத்திரமல்ல, அதிகாரங்களையும் விட்டு விலகி வீட்டுக்கே சென்றுவிடவேண்டும் எனவும் தலைநகரில் காலிமுகத்திடல் தொடக்கம், ஜனாதிபதி – பிரதமர் – மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்னாலிருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் உரத்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பவர்கள் இளம் தலைமுறையினரே !

அவர்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதிற்குட்பட்டவர்கள்தான்.  இவர்கள் பிறந்தபோது அரசியலுக்கு வந்து மக்களை சுரண்டிக்கொழுத்தவர்கள் அனைவரும், சுரண்டியதை மக்களிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் எனவும், நாடாளுமன்றில் ஆசனங்களை சூடாக்கிக்கொண்டிருக்கும் 225 பேருமே பதவி விலகவேண்டும் என்றும் இந்த இளம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.

இவர்கள் முற்றுகையிட்டிருந்த ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்களின் வீடுகளை பாதுகாப்பதற்காக பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு வேலிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் முட்கள் பொருத்தப்பட்ட மரக்கட்டைகள் போடப்பட்டுள்ளன.

இலங்கைச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

"ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்லவும் இல்லை; சொல்லவும் மாட்டார் என்று நான் நம்புகிறேன்"

தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அணுஷ்டிப்பு

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரல்

தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அழைப்பு; நடைமுறைப்படுத்த 5 பேர்

இலங்கைக்கு 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவிகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளை  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  அமெரிக்கத் தூதுவர் ஐுலி சுங் சந்தித்து கலந்துரையாடினர்.

உலகச் செய்திகள்

 ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதியாக மக்ரோன் மீண்டும் வெற்றி

உக்ரைனிய தலைநகரில் ஐ.நா தலைவர் இருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்

நாகேந்திரன் தர்மலிங்கம் மீது மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் கடுமையாகும் கொவிட் தொற்று பாதிப்பு

நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து, சுவீடன் விருப்பம்ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்

இராணுவ ஆட்சியின் கீழ் மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூக்கி மீது நீதிமன்றம் ஒன்று ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்மூலம் அவரின் மொத்த சிறை தண்டனை காலம் 11 வருடங்களாக அதிகரித்துள்ளது.

திருச்சி: `பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம் 04-05-2022 புதன் கிழமை


 
சிறப்புச் சொற்பொழிவு - "நமக்குத் துணை நமசிவாயவே" - சித்தாந்த கலாநிதி செந்தமிழரசு கி. சிவகுமார் - 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை -


 
மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் - 2022.


பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் ஒருமாதகாலமாக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத்தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 34-வது ஆண்டுநினைவுநாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுநாளும் கடந்த 24-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.

அன்றையதினம் மாலை 6.00மணியளவில் வானமுதம் வானொலி


அறிவிப்பாளர் சிறீறஞ்சன் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத்தேசியக் கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. ரவிகிருஸ்ணா அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உரித்துடையவர்கள், நண்பர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கமும், அகவணக்கமும் இடம்பெற்றது.

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 20 " அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் : ஓர் உரையாடல்"


நாள்:
         ஞாயிற்றுக்கிழமை 08-05-2022       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM, Facebook

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

Facebook live:

https://www.facebook.com/ilakkiyavelicom/