85 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 85 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சிறிய படகொன்றில் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
படகை செலுத்தியவரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரி உயர்த்தப்படவில்லை

எதிர்பார்த்தது போல இந்த மாதமும் வரி உயர்த்தப்படவில்லை.
வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீட்டுக் கடன் வைத்திருப்போர் எல்லோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது.

உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்-கவிதை

.
                                       பனித்துளி சங்கரின் நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை !!!   

உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்

நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .

என் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்
சில நேரங்களில் பதில்களற்ற
கேள்விகள் மட்டும்
நம் இருவரின் புன்னகையிலும்
அவ்வப்பொழுது தோன்றி
தொலைந்து போகிறது.

3 idiots போதித்த பாடம் - கானா பிரபா

                                                                                                                   -"என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்"

"எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி"

நான் நடித்துக்கொண்டே இருப்பேன் நயன்தாரா

.
*எந்திரன் புதிய சரித்திரம் படைப்பான்   
*நான் நடித்துக்கொண்டே இருப்பேன் என அடிக்காத குறையாக பொரிந்துதள்ளியிருக்கிறார் நயன்.ஆர்யாவுடன் நயன்தார இணைந்து நடிக்கும் திரைப்படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இத்திரைப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு அண்மையில் சென்னையிலுள்ள கலையகமொன்றில் நடைபெற்றது.


இறுதிநாள் படப்பிடிப்பின் கடைசி காட்சி படமாக்கி முடிந்ததும் அரங்கிலுள்ள அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

இனப்படுகொலை ஆவணம் - ஷோபாசக்தி

.


1977ம் வருடம் ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி இலங்கை முழுவதும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டவகையில் இலங்கை அரசபடையினராலும் சிங்கள இனவெறியர்களாலும் தொடக்கப்பட்டபோது எனக்குப் பத்து வயது. எங்களது கிராமத்திலிருந்து பலர் கொழும்புக்கும் சிங்கள நாட்டுப் பக்கங்களுக்கும் சென்று அங்கே கூலித் தொழிலாளர்களாகவும் கடைச் சிப்பந்திகளாகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களது கிராமமே அப்போது இழவுக்கோலம் கொண்டிருந்தது. தங்களது கணவன்மார்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் நினைத்துப் பெண்கள் நாள் முழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

பூமியை தாக்கும் ‘சோலார் சுனாமி’.

நம் பூமிக்கு ஒளிகொடுக்கும் சூரியனில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவின் அளவு பூமியைவிட பெரியது என நாஸா அறிவித்துள்ளது. இரண்டுமுறை ஏற்பட்ட இந்த வெடிப்பினை நாஸா விண்கலங்கள் படம்பிடித்துள்ளன. அதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் மிக மோசமான வெள்ளம்

.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் ஒருவார காலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாகாணமான கைபர்-பாக்டுன்கவாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மியான் இப்திகார் ஹூசைன் நேற்று இத்தகவலை வெளியிட்டார்.

சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ

.
                                                                                                 - எம்.ரிஷான் ஷெரீப்,


முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ

கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின. தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன.

பூக்கள் எப்படி விரிகின்றன

.
பூக்கள் எப்படி விரிகின்றன என்று எக்ஸ்ரே மூலமாக அறிந்திருக்கிறார் ஹியூஜ் தேர்வி என்பவர்.

பொதுவாக எதனையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை மிக்கவன் மனிதன். தோலில் மேலுள்ள அழகினைவிட அதனுள் இருக்கும் விடயங்களை அறிவதற்கே பெரிதும் ஆசைப்படுவான். அந்த ஆசையினால்தான் பூ விரியும் அந்தரங்கத்தை எக்ஸ்ரே எடுத்திருக்கிறார் ஓவியர் ஹியூஜ் தேர்வி.


பில்லா பாகம்-2

.
 நடிகர் அஜித்குமாரின் 50ஆவது படம்ஏற்கனவே ரஜனிகாந்த நடித்து பிரபல்யமான திரைப்படம் பில்லா. அதனுடைய றீமேக் படத்தில் அஜித்குமார் நடித்து அப்படமும் தூள்கிளப்பியது. 2007ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம் அஜித்தின் சரிந்த மார்க்கெட்டை தூக்கிவிட்டது. அஜித்தின் அசத்தலான நடிப்புடன் நயன்தாராவின் ஒல்லியான கவர்ச்சி மற்றும் நமீதாவின் தாராள கவர்ச்சி என்பவற்றாலும் பில்லா படம் மெகா ஹிட் திரைப்படமாகியது என்னமோ உண்மைதான்.

துருவ மகாராஜா - கனஷியாம் கோவிந்த தாஸ்

 .


துருவ மகாராஜா

ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக வாழ்க்கை நெறி, மற்றும் பல உன்னத கருத்துக்களை பற்றி ஆராய்ந்தோம், இன்று சற்று மாறுதலாக புராணத்தில் உள்ள கதைகளை பற்றி காண்போம்.

இன்று துருவன் என்னும் ஒரு உன்னத பக்தன் பற்றி பார்க்கலாம்.

பருக்களின் வடுக்களை போக்க முடியுமா?

.


பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா? பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மெல்பன் இளம் கலைஞரின் ஆதரவு

                                                            .
                                                                                  முருகபூபதி (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலியாவில் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் இலங்கை மாணவர்கல்வி நிதியம் சமீபத்தில் வவுனியா தடுப்பு முகாம் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழ் போராளிச்சிறார்களின் கல்வி சார்ந்த நலன்களையும் கவனிக்க சில பணிகளை முன்னெடுத்துள்ளது.

சம்சுங் இன் ' கலெக்சி டெப் '

*ஏஸரில் கைகோர்க்கும் கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட்
*சம்சுங்  இன் ' கலெக்சி டெப் '

பிரபல இலத்திரனியல் உபகரண மற்றும் கையடக்கத்தொலைபேசி நிறுவனமான ' சம்சுங் ' புதிய டெப்லட் கணனியொன்றை வெளியிடவுள்ளது.

அந் நிறுவனம் தான் வெளியிடவுள்ள டெப்லட் கணனிக்கு ' கலெக்சி டெப் ' என பெயரிட்டுள்ளது.

இக் கணனியின் உத்தியோகபூர்வ அறிமுகம் இம் மாதம் 11ம் திகதி இடம்பெறுமெனவும் இவ்வருட 2ம் காலண்டு நிறைவுக்குள் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிறப்பும் - மதிப்பும் - சோனா பிறின்ஸ்

.செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லிவைத்த நம் முன்னோர்களே,தொழிலின் அடிப்படையில் சாதி வேறுபாட்டையும் உருவாக்கி வைத்தார்கள். அந்த வேறுபாட்டினை தொடர்ந்து வந்த நம் தமிழினம் கடைப்பிடித்துக் கொண்டே வருகின்றது. எத்தனையோ நல்ல விடயங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த போதிலும், எது மனித சமுதாயத்தைப் பிரிக்கின்றது என்ற சிந்தனையில்லாமல், சாதி என்னும் சாவி கொண்டு தமிழர்களை உள்ளே விடாமல் தடை போடுகின்றது.

அவுஸ்திரேலியா தமிழ்க் கையேடு

.

தமிழ்க் கையேட்டின் ஐந்தாவது இதழை சில திருத்தங்களோடு இப்போது இணையத்தளத்தில் வெளியிடுகின்றார்கள். இதன் மூலம் இன்னும் பலரை நியூ சவத் வேல்ஸ் மாநில, அவுஸ்திரேலியா எல்லைகளைத் தாண்டி இந்த கையேடு சென்றடையும் என நம்புகிறார் இணைப்பாளர் டாக்டர் பொ. கேதீஸ்வரன்.

அவர்களுடைய முயற்சி வெற்றிபெற எமது பாராட்டுக்கள், இந்த கையேடு தமிழ் முரசின் இடது பக்கத்தில் உள்ள இணைய செய்திகள் என்ற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது .

கொழும்பில் ஆடி வேல் விழா

 .


136வது வருடாந்த ஆடிவேல் விழா மிகச்சிறப்பாக கொழும்பில் யூலை மாதம் 23ம் திகதி நடைபெற்றது. காலையில் கொழும்பு கடல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலிருந்து மயில் வாகனத்தில் புறப்பட்ட முருகப்பெருமான் அன்றிரவு சம்மாந்கோட்டு   ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோயிலில் வந்தடைந்தார். மிகவும் அழகாக சோடனை இடப்பட்ட முருகன் மேளம் நாதஸ்வர இசையோடு கொழும்பின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக வந்து கடலில்  தீர்த்தம் ஆடப்பட்டு காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியாவை வந்தடைந்தார். இவ்விழாவில்

ஆப்கானிஸ்தான் ஆவணங்களும் போருக்கு எதிரான போராட்டங்களும்

                                                                                                                  .     
                                                                                                                  Bill Van Auken
விக்கிலீக்ஸினால் பகிரங்கமாக ஆப்கானியப் போர் பற்றி வெளியிடப்பட்ட 92,000 இரகசிய ஆவணங்கள் மற்றும் செய்தி ஊடகம் மற்றும் உத்தியோகபூர்வ ஸ்தாபனத்தின் விடையிறுப்பும் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் போர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கான பெரும் அரசியல் உட்குறிப்புக்களை கொண்டுள்ளன.

முதியோர் கவனிப்பில் கிட்டும் விருப்பத் தெரிவுகள்

SydWest Multicultural Services Inc.

பல வகைப்பட்ட முதியோர் கவனிப்பு சேவைகள் உள்ளன, இருந்தாலும் உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கோ கிடைக்கக் கூடிய முதியோர் கவனிப்பு சேவைகளின் வகைகளைக் கண்டறிவது சிக்கலானதாக இருக்கலாம்.

தற்சமயம் இச்சேவைகள்; உங்களுக்குத் தேவையில்லை என்றிருப்பினும், எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்படக் கூடிய கவனிப்புத் தேவைகளைத் திட்டமிடுவதற்கு உதவ, கிடைக்கக் கூடிய சேவைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

சமூக கவனிப்பு (Community Care)
முதியோரில் பலரும் தொடர்ந்து தமது இல்;லங்களில் வாழ்வதையே விரும்புவர், ஆனால் உதவி ஏதும் இல்லாமல் அப்படி வாழ்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். வயதானவர்கள் தமது இல்லங்களிலேயே தொடர்ந்து வாழ உதவி செய்யும் பல முதியோர் கவனிப்பு சேவைகள் உள்ளன. இவ்வகையான கவனிப்பு ‘சமூக கவனிப்பு’ (Community Care) என அழைக்கப்படும்,

Aged Care at Home Packages (EACH)
சமூக முதியோர் கவனிப்புப் பொதிகளினால் அளிக்கப்படும்
சேவைகளையும் விட அதிகமான உதவி தேவைப்படுபவர்களுக்கு
‘வீட்டில் நீடித்த முதியோர் கவனிப்புப் பொதிகள்’ (Extended
Aged Care at Home Packages -EACH) சேவைகளை
வழங்குகின்றன. இப்பொதிகள் வளைந்து கொடுக்கும் தன்மை
கொண்டவை, அத்துடன் தனிநபர் தேவைகளுக்கென
வடிவமைக்கப்பட்டவை. கீழ் வருவன இவ்வகைப்பட்ட
சேவைகளில் அடங்கலாம்: தாதியர் கவனிப்பு மற்றும் இதர
சுகாதார சேவைகள், ஒருவரது தனிப்பட்ட கவனிப்பு (personal
care) (குளித்தல், ஆடையணிதல், உணவு உட்கொள்ளல்
போன்ற வேலைகளில் உதவி), வீட்டு உதவி (வீட்டு
வேலைகள், துணி வெளுத்தல், கடைக்குச் செல்லுதல்
என்பவற்றில் உதவி), போக்குவரத்து மற்றும் சமூக ஆதரவு
ஆகியவை. அங்கீகரிக்கப்பட்ட முதியோர் கவனிப்பு சேவைகள்
வழங்குநரால் இச்சேவைகள் திட்டமிடப்பட்டு
ஒருங்கிணைக்கப்படுகின்றன. ‘வீட்டில் நீடித்த முதியோர்
கவனிப்புப் பொதிகளினால் பயன் பெறுவதற்கான தகுதி,
‘முதியோர் கவனிப்பு மதிப்பீட்டு குழு ஒன்றினால்’ (Aged Care
Assessment Team) தீர்மானிக்கப்படும் (பார்க்க – பக்கம் 9).

This information was compiled by the Centre for Cultural Diversity in
Ageing 2008 and funded for the translation in Tamil by the Community
Partners Program for Western Sydney from SydWest Multicultural Services
Inc, Blacktown, Sydney and the CPP Project Officer Ms Sree Vithya Harilingam, (Tel:02-8825 3777) or (sree@sydwestmsi.org.au)