.
தமிழ் திரையுலகில் மிக மூத்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்ந தவர் ஏ எஸ் ஏ சாமி.இலங்கையைசேர்ந்த பட்டதாரியான இவர் தமிழகம்
சென்று பில்ஹணன் என்ற வானொலி நாடகத்தை எழுதி அதில்அன்றைய சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் நடித்து அந்த நாடகம் மிக பிரபலம் அடைந்தது.இவரின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர்களாக சோமு மொஹிதீன் இருவரும் சாமிக்கு தாங்கள் தயாரிக்கும் படங்களை இயக்கும்வாய்ப்பை வழங்கினார்கள்.
அந்த வகையில் 1947ல் உருவான ராஜகுமாரி படத்தை சாமி டைரக்ட்
செய்தார்.இந்த படத்திற்கு உதவிவசனகர்த்தாவாக பணியாற்ற வந்தவர்தான் கலைஞர் மு கருணாநிதி.முதல் முதலாக எம் ஜீ ஆருக்குகதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இப் படத்தின் மூலமாகத்தான் சாமியின் பலத்த சிபாரிசின் மூலம்கிட்டியது.ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து அபிமன்யு,கற்புக்கரசி,துளிவிஷம்,தங்கப்பதுமை,கைதிகண்ணாயிரம்,நீதிபதி,அரசிளங்குமரி,முத்துமண்டபம் போன்ற அவர் இயக்கிய படங்கள் நல்ல வரவேற்பைபெற்றன.அதிலும் அறிஞர் அண்ணா எழுதி இவர் இயக்கிய வேலைக்காரி புரட்சிப் படமாக ரசிகர்களைகவர்ந்தது.இவ்வாறு பல படங்களை இயக்கிய சாமி 1971ல் இயக்கிய படம்தான் திருமகள்.
மூத்த நடிகர்களான ஜெமினி ,பத்மினி,இருவருடன் இளைய நடிகர்களான சிவகுமார் ,லட்சுமி,ஏ வி எம்ராஜன்,ஆகியோரும் படத்தில் நடித்தனர்.இவர்களுடன் நாகேஷ் ,சுந்தரராஜன்,எஸ் வரலக்ஷ்மி,எம்பானுமதி ,பேபி ராணி ஆகியோரும் படத்தில் இடம் பெற்றனர் .
ராஜு,ராதா இருவரும் தொட்டதெற்கெல்லாம் சண்டை போடும் மனமொத்த காதலர்கள்.பொருளாதாரரீதியில் கஷ்டப்படும் தன் நண்பனும் சக மாணவனுமான ராமுவை தன் வீட்டிற்கே கூட்டி வந்து தன்னுடன்தங்க வைதது பராமரிக்கிறான் ராஜு.இதை அவன் அண்ணி கல்யாணி விரும்பாவிட்டாலும் விட்டுவிடுகிறாள்.ராஜு ராமு ,ராதா மூவரும் நட்புடன் பழகுகிறார்கள்.ராஜு ராதா இருவருக்கும் திருமண நாளும்நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடக்கும் சமயத்தில் அந்த விபரீதமான சம்பவம் நடந்துவிடுகிறது.எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.