எப்படி நான் தாங்கிடுவேன்... கவிதை

.
                                                       சுபேஸ்    
My Photo
அப்பன் அடித்தாலே
ஆவென்று அலறுபவன்
எப்பன் நோவெனிலும்
ஏலாமல் கிடந்தமவன்
முற்றம் முழுதும்-பிணமாகிச்
சுற்றங்கள் செத்
த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

கோழி அடைகிடக்க
குஞ்சுக்காய் தவித்தமகன்
கேவி அழமுதலே ஊரை
கூவி அழைத்த மகன்
கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள்
கொத்துக்கொத்தாய் செத்தகதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

மாயா பெருமையுடன் வழங்கும் To Be Arranged again


இந்த நாடகம் ஜூலை மாதம் 7ம்  திகதி மேடை ஏறி பலரும் பாராட்டை  பெற்றது 

To Be Arranged Again' is an encore performance by Maya after the success of their inaugural production of To Be Arranged. It is a charity event and all proceeds from this event will be donated to The Children's Hospital at Westmead. To Be Arranged raised $3500 and was donated to  The Children's Hospital at Westmead and Annai Saratha Children's Home in SriLanka.


Mani Innisai Maalai 25. 08.12


நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் பல்லாயிரம் அடியார்கள் பங்கேற்பு

.
நல்லூர்க்கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் யாழ். குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்  பல்லாயிரம் அடியார்கள் கலந்துகொண்டார்கள்.


ஆலய வெளிவீதி சனசமுத்திரம் போல காட்சியளித்ததோடு ஆலய சுற்றாடல் முழுவதும் வாகனங்களினால் நிறைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.



புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸிக்கு வெளியில் தடுத்து வைக்க முடிவு


அவுஸ்திரேலிய பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றம்
புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் அமைப்பதற்கான சட்ட மூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை மீண்டும் பப்புவா நியுகினியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறு தீவான நவ்ருவுக்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லாட் நியமித்த சுயாதீன குழுவின் பரிந்துரைக்கமைய அந்நாட்டு பாராளு மன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்திற்கு எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். இந்த சட்ட மூலம் தற்போது பாராளு மன்றத்தின் செனட் சபைக்கு அங்கீகா ரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் தொழிலாளர் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவளிப்பதால் ஒரு சில தினங்களில் இந்த சட்ட மூலம் நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் 2008ம் ஆண்டு முன்னாள் பிரதமர் கெவின் ருட்டின் காலத்தில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ 

நள்ளிரவு காற்று... விஷ்ணுபுரம் சரவணன்


.

தமிழில் குழந்தைகள் இலக்கியம் _ சில பகிர்வுகள்..


1982 ம் ஆண்டு நோபல் பரிசி பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர். காப்ரியல்
கார்ஃபியா மார்க்குவஸ் தனது கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிடுகிறார். " எனது
படைப்பூக்க ஆதாரமாகவும் என்னை ஓர் ஆளுமையாகவும் செதுக்கியவை எனது சிறுவயதில்
பாட்டி சொன்ன கதைகளே"

***

இலக்கிய வகைமைகளில் மிகமுக்கியமானதும், கவனத்துடன் எழுதப்படவேண்டியதும்
குழந்தைகள் இலக்கியம். தமிழில் குழந்தைகள் இலக்கியத்திற்கென எழுதிய
எழுத்தாளர்களின் பட்டியல் சுருக்கமானது என்றாலும் கூட அவர்களின் பங்களிப்பு
அளவில் முக்கியமானது. 1901இல் கவிமணி தேசிக‌விநாயகம் எழுதிய குழந்தைகள்
பாடல்கள் துவங்கி அவரைத் தொடர்ந்து பாரதி,நமச்சிவாயமுதலியார், மணி
திருநாவுக்கரசு, அழ.வள்ளியப்பா, தூரன், மயிலை சிவமுத்து,தம்பி சீனிவாசன்,
தெய்வசிகாமணி, பூவண்ணன் என நீளும் பட்டியலில் யூமா வாசுகி, கம்பீரன்,
எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கீரனூர் ஜாஹிர் ராஜா ஆகிய அண்மைகால படைப்பாளும தங்களின் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். ரஷ்ய நாட்டு நூல்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு மலிவு விலையில் வழங்கப்பத்தையும், அதன் மீதான ஈர்ப்பு
இன்றும் இருப்பதாக முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சொல்லிவருவதை கவனத்தில்
கொள்ளும்போது குழந்தைகள் இலக்கியத்தின் முக்கியத்துவம் விளங்கும்

ஆதாமிண்ட மகன் அபு



.
அபு (நடிகர் சலீம் குமார்) ஒரு அத்தர் வியாபாரி. வயது அறுபது எழுபதுக்கு மேல் இருக்கும். துபாயில் இருந்து செண்ட்களும் பர்ஃப்யூம்களும் வந்து அத்தர் வியாபாரம் நசிவடைய ஆரம்பித்த பிறகும் அதிலேயே ஈடுபட்டு வருபவர்.அவருடைய மனைவி ஐசும்மா. வீட்டில் பசு வளர்த்து அதில் கிடைக்கும் பாலை விற்று சம்பாதிப்பவர். பசுவை உயிருள்ள மனிதரைப் போல் மதித்து நடத்தக்கூடியவர். அவர்களுக்கு சத்தார் என்று ஒரு மகன். அவன் துபாயில் மனைவி குழந்தைகளுடன் இருக்கிறான். ஆனால், ஏழைமையில் வாடும் பெற்றோரை ஒதுக்கித் தள்ளிவிட்டான். பேரக் குழந்தைகளைக் கூட அழைத்து வந்து காட்டியிருக்கவில்லை. முன் வாசலில் பலா மரம் நிற்கும் வீடொன்றில் வசித்து வருகிறார்கள் அபுவும் ஐசும்.
அபுவுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியமே. பணமுள்ளவர்களும் பலமுள்ளவர்களும் மட்டுமே ஹஜ் பயணம் செய்தால் போதும் என்று நபிகள் சொல்லியிருக்கிறார். என்றாலும் ஏழை அபுவுக்கு அந்தப் புனித மண்ணில் ஒரு தடவையாவது காலடி எடுத்துவைத்துவிடவேண்டும் என்று ஆசை.
அந்த வருட ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்கள் கேட்டு ஹஜ் கமிட்டியினரின் விளம்பரம் வருகிறது. அந்த கமிட்டியின் மூலமாகப் போவதென்றால் இலவசமாகவே போய் வந்துவிடலாம். ஆனால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். எல்லாரையும் அனுப்ப முடியாது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துத்தான் அனுப்புவார்கள். எனவே, போக வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. நாலைந்து தடவை ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும் செல்வந்தரான ஹாஜியார், தனக்குத் தெரிந்த அக்பர் டிராவல்ஸில் இருக்கும் அஸ்ரஃப் என்பவரைப் பார்க்கச் சொல்கிறார்.

இலங்கைச் செய்திகள்




புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

கருணாநிதியின் கொடும்பாவி கொழும்பில் எரிப்பு

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

படிப்படியான செயல்பாடுகளினால் சீர்குலைவுக்கு உள்ளாகும் சட்டம் மற்றும் ஒழுங்கு

பள்ளிவாசல் தீயிடப்பட்டமைக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம்

புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது

.

காலமும் கணங்களும்: முருகபூபதி


.
‘தங்கத்தாத்தா’வும் ஓவியர் தாத்தாவும்

ஓவியக்கலைஞர் கே.ரி. செல்லத்துரை நினைவுகள்


 ‘தங்கத்தாத்தா’ என அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப்புலவரைப்பற்றி அறிந்திருக்கிறோம். அவரை சிறுவயதில் பாலபோதினி பாடப்புத்தகத்திலும் பார்த்திருக்கிறோம்.
 குறிப்பிட்ட படத்தை தமது புகைப்படக்கருவியினால் எடுத்து இன்றளவும் நாம் தெரிந்துகொள்ள வகைசெய்த கலைஞர் ஓவியர் கே.ரி. செல்லத்துரை ஐயாவைப்பற்றி நம்மில் எத்தனைபேர் அறிந்துவைத்திருக்கிறோம்.
 அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் சட்டத்தரணி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை எழுத்தாளர் அருண். விஜயராணி ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்த காலப்பகுதியில்தான் செல்லத்துரை ஐயாவும் அறிமுகமானார். இவர் அவர்களின் தந்தையார். 1915 ஆம் ஆண்டில் உரும்பராயில் பிறந்தவர் சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டினார்.
 ஓவிய ஆர்வம் தொடர்பாக அவருடன் உரையாடியபோது, “ சின்ன வயதில் எல்லோருமே ஓவியர்கள்தான்” என்றார்.
 “எப்படி?”


சாரங்கன் ஸ்ரீரங்கநாதனின் அவள் ஒரு மெல்லிய பூங்காற்று


.



15/08/2012 இந்தியாவின் 66ஆவது சுதந்திரதினம்



 15/08/2012
இந்தியா தனது 66 ஆவது சுதந்திர தினத்தை இன்று (15/08/2012) கொண்டாடுகின்றது.

இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

இந்தியாவின் 66 வது சுதந்திர தின விழாவையொட்டி காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி பின்னர், முப்படைத் தளபதிகளுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று, இன்று காலை 7.30 மணி அளவில் தேசியக் கொடியை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றி வைத்தார் .
xxx




தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்கால் ஈகியர் முற்றம் உருவாகிறது

.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன்இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லைசெதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய்வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன்காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான்.  முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம்.இடம்தஞ்சை பெரிய கோவில் உள்ள அதேதஞ்சாவூர்.




உலகச் செய்திகள்

.
ஈரானை உலுக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக 

சிரிய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்

விண்வெளியிலிருந்து இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சுனிதா!

அசாஞ்சுக்கு தஞ்சம் அளிக்க ஈக்வடார் அதிபர் ஒப்புதல்

அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா

தன்மானத்தை இழக்காத ஈரான்!

 ஈரானை உலுக்கிய பூமியதிர்ச்சி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வுயர்வு












வட மேற்கு ஈரானை சனிக்கிழமை தாக்கிய இரட்டை பூமியதிர்ச்சிக ளில் சிக்கி உரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் சிக்கி 2000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.


தப்றிஸ் மற்றும் அஹார் நகர்களுக்கு அருகில் 6.4 ரிச்டர் மற்றும் 6.3 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகள் தாக்கின. மேற்படி பூமியதிர்ச்சி சம்பவங்களால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.


தமிழ் சினிமா

.



மிரட்டல்

கொஞ்சம் வட்டாரம், பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ (Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில் ‘மிரட்டல்’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ்.
ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மிரட்டலாக ஒன்றுமில்லை. அரசாங்கம் என்ற அதிரடி படத்துக்குப் பிறகு சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மாதேஷ் தந்துள்ள படம் இது.
சாப்ட்வேர் இளைஞன் மாதிரி வேடங்களில் பார்த்துப் பழகிய வினய், இதில் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மனதில் பதிகிற மாதிரி எதையும் அவர் செய்யவில்லை.
தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார அண்ணன், மெகா தாதாவாகவும் நடித்திருக்கின்றார் பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக வைத்துக் கொள்கிறார்.
இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு. இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக் காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்பாற்றும் பொறுப்பேற்ற வினய்யுடன் காதலாகிறார் சர்மிளா. காதல் தீ கொழுந்துவிட்டெறிய ஆரம்பிக்கிறது.
பிரபுவைப் பார்க்கும்போது மட்டும் அதை அடக்கிக் கொள்கிறார்கள். சர்மிளாவை வேறு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்க பிரபு முயல, ஒரு நாள் ஓடிப் போய் பழனியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு வினய்யின் பெற்றோரும் உடந்தையாக நிற்கின்றனர். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே பிரபுவின் எதிரிகள் சர்மிளாவை போட்டுத் தள்ளப் பார்க்க, அதிலிருந்து காப்பாற்றுகிறார் வினய். காப்பாற்றி முடிக்கும்போது, சரியாக பிரபு வந்து நிற்கிறார்.
உடனே திருமணத்தை மறைத்து, யதேச்சையாக காப்பாற்றியதாக சொல்லிவிடுகிறார் வினய். தில்லுமுல்லு தொடர்கிறது. தானும் சர்மிளாவும் கணவன் மனைவி என்ற உண்மையை பிரபுவுக்கு சொன்னாரா… இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.
படத்தில் ஹீரோ வினய்யை விட அதிக முக்கியத்துவம் பிரபுவுக்குதான். அவர் தோற்றம், தாதா கெத்துடன் அவரது நடை, தங்கை மீதான கண்மூடித்தனமான பாசம், அறியாமை என அனைத்திலும் கலக்குகிறார் பிரபு.
வினய்யை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. மற்றபடி ரொமான்ஸ், டான்ஸ், பிரபுவை ஏமாற்றும் குறும்புத்தனம் என கலகலப்பாக நடித்திருக்கிறார். படத்தின் ஸ்பெஷல் பார்க்க ரொம்ப ப்ரெஷ்ஷாக இருக்கும் நாயகி சர்மிளாதான். அவரும் வினய்யும் லண்டன் வீதிகளில் போடும் ரேடியோ பாடல் கேட்கவும் பார்க்கவும் இதம்.
சந்தானத்தை இன்னும் கூட நன்றாக பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் வருகிற காட்சிகளில் சிரிப்புக்குப் பஞ்சம் வைக்கவில்லை மனிதர். பிரவீண் மணியின் இசை பரவாயில்லை. இந்த மாதிரி படங்களில் பின்னணி இசைக்கு பெரிய வேலை இல்லை, கண்ணனின் ஒளிப்பதிவு அருமை.
இத்தனை இருந்தாலும், திரைக்கதை என்ற விஷயத்தில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார் மாதேஷ். நகைச்சுவை, கதாநாயகி போன்ற விஷயங்களுக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம் மிரட்டல் திரைப்படத்தை.
நடிப்பு: வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன், பிரதீப் ராவத்.
பி.ஆர். ஓ: நிகில்.
இசை: பிரவீண் மணி.
ஒளிப்பதிவு: டி கண்ணன்.
இயக்கம்: மாதேஷ்.
தயாரிப்பு: மீடியா ஒன் குளோப்.