தமிழ் முரசின் கண்ணீர் அஞ்சலி

.
வாழும் போது  மக்கள் சேவைக்காய்   வாழ்ந்தாய் 
மறைந்த போது 
மக்கள் மனங்களில் வாழ்கின்றாய் 
அமரர் விஜயரத்தினம் அவர்களின் மறைவிற்கு                   தமிழ்முரசின்கண்ணீர் அஞ்சலி 

கண்ணீர் அஞ்சலி - ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையம்

.
அமரர் இ .விஜயரத்தினம் அவர்களுக்கு ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தின் கண்ணீர் அஞ்சலி

மரணஅறிவித்தல்

                                      .
      திரு. விஜயரட்ணம் 
மறைவு  07.07.2015

யாழ்ப்பாணம் சங்கானை/ சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய MPCS  நுகர்வோர் சங்கப் பொதுமுகாமையாளரும் சமூக ஆர்வலருமான திரு. விஜயரட்ணம் அவர்கள் இன்று 7.7.15 காலை சிவபதம் அடைந்தார்.
இவர் காலம் சென்ற திரு இலகுப்பிள்ளை திருமதி செல்லம்மா அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற திரு. தம்பாபிள்ளை திருமதி மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும், கனகாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும்,  விஜயசீலன், செல்வலக்சுமி, விஜயமுகுந்தன் ஆகியோரின் அன்புமிகு தந்தையும், சுமதி, சரவணபவானந்தன், விஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆரணி, விஜயராம் , சிவாயன் , விஜயாள, வித்தகனின் பாசத்துக்குரிய பேரனும், காலம் சென்ற செல்வரஞ்சிதம் றெளடேந்திரன் சிட்னி ,விஜயபாலன் லண்டன், விஜயகுமாரி லண்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 8.7.15 புதன்கிழமை மாலை 6:30 தொடக்கம் 8:30 மணிவரை Strathfield நகரமண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதிக்கிரியைகள் 9.7.15 வியாழக்கிழமை Rookwood மயானத்தில்10:30 – 2:00 மணிவரை East Chapel  இல் இடம் பெறும்.
உற்றார்  ,உறவினர் , நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். 
தொடர்புகளுக்கு -  முகுந்தன் விஜய் 0402 208 127  / 0450 126 102

அனைவரும் செய்திடுவோம் ! - எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

.
              பல்லில்லா வாயாலே பலகதைகள் நீசொல்வாய்
                கேட்டபடி நானிருருந்து கிறுகிறுத்துப் போய்விடுவேன்

                ஓரடிநீ வைத்தவுடன் உலப்பில்லா மகிழ்வுடனே
                உன்கையைப் பிடித்தபடி உன்னுடனே நான்நடப்பேன்

               பல்முளைத்த பின்னாலே பலதடவை நீகடித்தாய்
               தொல்லையென நினைக்காமல் சுகமாக நானினைத்தேன்

               மடிமீது கிடந்திருந்து மார்பினிலே உதைத்திடுவாய்
               மனமெல்லாம் இன்பவெள்ளம் பெருகெடுத்து நிற்குமப்போ

               முடிமீது கையைவைத்து முறுக்கிநீ இழுத்திடுவாய்
               முகஞ்சுழியா உனைப்பார்த்து முறுவலுடன் நானிற்பேன்

               மார்பினிலே படுத்திருந்து மழலையிலே பேசிடுவாய்
               ஊர்முழுக்க ஓடிவந்து உன்பேச்சைக் கேட்குமப்போ

’தில்லை என்னும் திருத்தலம்’ சிட்னியில் வெளியீடு - --- அன்பு ஜெயா

.

விரைவில் ஆங்கிலப் பதிப்பு ” The Lord of Dance”
  

 தமிழ் அவுஸ்திரேலியன் ஆசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய தில்லை என்னும் திருத்தலம் நூல் வெளியீடு முதல் முறையாக மக்கள் பயனுக்காக சிட்னியில் 28-6-2015 அன்று இடம் பெற்றது. விழாவினை தமிழ் வளர்ச்சி மன்றம் எற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியை செல்வி மாதுமை கோணேஸ்வரன் தொகுத்து வழங்கினார்.

தமிழ் கலை , பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு அனகன் பாபு நூலாசிரியரை அறிமுகம்  செய்து வைக்க,  சிவஸ்ரீ சிவசண்முகக் குருக்கள் ஆசியுரையுடன் விழா தொடங்கியது. பாலர் மலர் தமிழ்ப் பள்ளியின் திரு அண்ணா சுந்தரம் நூலை அறிமுகம் செய்து வைத்த போது  இன் நூலைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு முறை தில்லை செல்லவேண்டும் என்ற என்ற அவா எழும், படித்த போது  ஒரு முறை அக்கோயிலை சுற்றி வந்த அனுபவம் கிடைத்தது”, என்றார். தலைமை உரை ஆற்றிய ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலை அதிபர் திரு திருநந்த  குமார், ”பல அரிய விடயங்களை ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்று பாராட்டினார்.

கல்விப்பணியில் ஆறு தசாப்தங்களைத் தொடரும் ஆசிரியப் பெருந்தகை திலகமணி ரீச்சர்

.
       கல்வியும்   கலையும்  கண்களாகியிருக்கும்   அவருக்கு     80   வயது
                           முருகபூபதி   (ஆசிரியையின்  முதல்  மாணவன்) உலகிலேயே  மிகவும்  புனிதமான  தொழில்  என்று  கருதப்படும் ஆசிரியப்பணியில்   வயது  நிமித்தம்  ஓய்வுபெற்றாலும்,   அறுபது ஆண்டுகளுக்கும்   மேலாக   இன்றும்  மாணவக் குழந்தைகளுடன் தமது   பொழுதை  செலவிடும்  ஒருவர்  இலங்கையில்  நீர்கொழும்பில் இருக்கிறார்.   அவர்  பெயர்   திருமதி  திலகமணி   தில்லைநாதன்.
  அவருக்கு  எண்பது  வயது  பிறந்தது.
இந்து சமுத்திரத்தாயின்  அரவணைப்பில்  நெய்தல்  நிலமாகத்திகழும்  நீர்கொழும்பு  நகரில்  1954  ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட  விவேகானந்தா  வித்தியாலயத்தில்  ( இன்றைய விஜயரத்தினம்   இந்து  மத்திய  கல்லூரி)  தமது  19  வயதில் தொண்டர்   ஆசிரியராக  பணியாற்றத் தொடங்கிய  காலம்  முதல் தற்பொழுது   80  வயதை நெருங்கும்  இச்சந்தர்ப்பத்திலும் மாணவக்குழந்தைகளுடன்   தமது  பொழுதை செலவிட்டுக்கொண்டிருக்கும்    எமது  மூத்த  ஆசிரியப்பெருந்தகை திலகமணி  ரீச்சர்  அவர்களுக்கு  முதலில்  மனம் நிறைந்த வாழ்த்துக்களையும்    அன்பார்ந்த  வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டே    இந்தப்பதிவை   எழுதத் தொடங்குகின்றேன்.
மாதா, பிதா, குரு, தெய்வம்   என  நாம்  வணங்கும்பொழுது  குருவுக்கும்   முக்கியத்துவம்  வழங்கப்படுதலின்  தாற்பரியம், மாணவர்கள்     பெற்றோர்களுடனான  வாழ்விட  இல்லத்தையடுத்து  அதிக  நேரம்  செலவிடும்  இடமாகத்திகழ்வது   பாடசாலை.   அங்கு ஆசிரியர்களுடனான    உறவும்  நெருக்கமும்   அதிகரிக்கும்.
இதனால்தான்    எமது  முன்னோர்கள்  மாதா -  பிதா எனசொல்லிவிட்டு    குருவைப்பற்றியும்  மனதில் பதியவைக்கின்றார்கள்.

யுக சந்தி 2015 11 July 2015

.
தேமதுர தமிழ் ஓசை உலகெலாம் பரவவேண்டும் என்ற முறுக்கு மீசை கவிஞனின் கனவை நனவாக்கும் தமிழ் இளவல்களின் சங்க(ம)ம் மனித விழுமியங்கள் என்ற தொனிப்பொருளில் வழங்கும் ஒரு முத்தமிழ் நிகழ்ச்சி. அனைவரும் வருக !மழைக்கால இரவு

.

படிக்க கிடைத்த இந்த பகிர்வு  யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாமல் உள்ளது. மற்றவர்களும்  படிப்பதற்காக 
அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.
அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.

உலகச் செய்திகள்

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை

ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 11 படை­வீ­ரர்கள் பலி

இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு

யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்

40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: மிசேல் ஒபாமா அதிரடி அறிவிப்பு


ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு மர­ண­தண்­டனை

29/06/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனையை நிறை­வேற்­றி­யுள்­ளனர். சிரிய ரக்கா நகரில் இந்த மர­ண­தண்­ட­னைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.


அழைப்பிதழ் 11 JULY 2015


சுவாமி விவேகானந்தர் சமாதி நினைவுநாள் July 4

.

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda சனவரி 12, 1863 - யூலை 4 1902)பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா(யேசநனெசயயெவா னுரவவய). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைதவேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

அஞ்சலி: டி எம் சவுந்திரராஜன் உணர்ச்சிகர பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு....எஸ் வி வேணுகோபாலன்

.
இசையை ரசிக்கும் நீங்கள் டி எம் எஸ் பாடல்களில் மட்டும் மனத்தைப் பறிகொடுக்காமலா இருப்பீர்கள்...அந்த அற்புதக் கலைஞன் மறைந்த அன்று நள்ளிரவைத் தொடும் நேரத்தில் எழுதிய இந்தக் கட்டுரை அடுத்த இரண்டாம் நாள் தீக்கதிரில் வந்திருந்தது...


ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம் ஜி ஆர், ஒரு விஸ்வநாதன், ஒரு சவுந்திரராஜன்....
இதெல்லாம் ஒரு சகாப்தம்..
திரும்ப வராது....


மேலே நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது. கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது. உள்ளபடியே சகாப்தம் தான் அந்தக் காலம்.

பி பி ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி என மறைந்து கொண்டிருக்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி எம் சவுந்திரராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்கு துயரம் மிகுந்த காலமும் கூட இது. 

உலக தத்துவ ஞானிகளின் உருவ சிலைகளோடு திருவள்ளுவரும் இருக்கின்றார்

.

Thiruvalluvar / The amazing (Ten Sages of the World) sculptures at MDIS Queenstown Singapore

இலங்கைச் செய்திகள்


இந்து கலைஞர் சம்மேளன கருத்தரங்கு

பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன், புதிய அரசாங்கத்தை அமைப்பேன்: மெதமுலன்னவில் மஹிந்த

சு.க.வில் போட்டியிடுவதற்கு சந்திரிகா தீர்மானம்

கொழும்புக்கு வேலைக்குச் சென்ற குடும்பஸ்தரைக் காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு

பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் விசாரணை

இந்து கலைஞர் சம்மேளன கருத்தரங்கு

30/06/2015   2015 ஜுன் 02ம் திகதி பௌர்ணமி தினத்தன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்து கலைஞர் சம்மேளன செயல்பாட்டு வடிவத்தில் முதல் அம்சமாக  நாளை முதலாம் திகதி புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு - 13 ஸ்ரீ கதிரேசன் வீதி விஷ்வகர்ம மண்டபத்தில் 'இந்துக்கலைகள்' பற்றிய கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.

தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி


‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.
இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.
புதுமை நீர்ப் பாய்ச்சல்
தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை - கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.

விழுதல் என்பது ' நிறைவுப் பகுதி 3- திருமதி.நிவேதா உதயராயன்

.
„விழுதல் என்பது எழுகையே“ நிறைவுப் பகுதி (3)  திருமதி.நிவேதா உதயராயன்

அன்றைய பொழுதின் விடியல் சீலனுக்கு மிக மகிழ்வாக இருந்தது. தன் வாழ்வில் இத்தனை காலம் பட்ட துன்பத்துக்கு முதல் முறையாக  சஞ்சலங்கள் எதுவுமற்று, கவலைகளே இன்றி மகிழ்வு கொண்டு மனம் துள்ளிக் குதிப்பது இன்றுதான். அவனுக்கே அம்மகிழ்வைத் தாங்க முடியாது மனது கனத்தது.
துன்பங்கள் வருவது கூட நல்லதுதான். அப்பொழுதுதான் நாம் இழந்தவைகளும் பெறுமதி மிக்கவைகளும் எம் கண்ணுக்குத் தெரிகின்றது. இறைவன் தெரிந்தேதான் இரண்டையும் மனிதவாழ்வில் வைத்துள்ளான் என்று எண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது. எத்தனை இலகுவாகிவிட்டது மனம். வாற வெள்ளிக்கிழமை கலா வந்தால் எப்படி எப்படிச் செய்யவேண்டும், என்ன முதலில் கதைக்கவேண்டும் என்று மனதுள் பட்டியல் இட்டுக்கொண்டான். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசித்தவன் உடனேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பத்மகலா வந்த பிறகு அவளைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் வாங்கிக் கொடுப்பதுதான் நல்லது என முடிவெடுத்தவன், பாடல் ஒன்றை மகிழ்வாக விசிலடித்தபடி எழுந்து குளியலறைக்குச் சென்றான். 

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) அவுஸ்திரேலியா 02 08 15

.
இலங்கை மாணவர் கல்வி நிதியம்  (இணை)    அவுஸ்திரேலியா
     27 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்    02-08-2015 ஞாயிற்றுக்கிழமை
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம்  ஆண்டு  முதல்  இயங்கும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  27  ஆவது   ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும்  02-08-2015  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை  மாலை  4.30  மணிக்கு    மெல்பனில்  VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive,Vermont South,Victoria 3133) மண்டபத்தில்  நடைபெறும்.
 நிதியத்தின்  தலைவர்  திரு.விமல். அரவிந்தன்   தலைமையில் நடைபெறவுள்ள  27  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  நிதியத்தின் உறுப்பினர்களின்    ஒன்றுகூடலும்  தகவல்  அமர்வும்  இடம்பெறும்.
இலங்கையில்    நீடித்த  போரில்   பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ் மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்காக  1988  ஆம்   ஆண்டு   தொடங்கப்பட்ட நிதியம்  இதுவரையில்  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு   உதவியுள்ளது.    நூற்றுக்கணக்கான  மாணவர்கள்  நிதியத்தின் உதவியினால்   பல்கலைக்கழக  பட்டதாரிகளாகியிருப்பதுடன்  மேலும்  பல மாணவர்கள்   அரச  மற்றும்  தனியார்   துறைகளிலும்  பணியாற்றுகின்றனர்.
இலங்கையில்   வடக்கு  கிழக்கு  மற்றும்  தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்த   மாணவர்களுக்கும்  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம் உதவிவருகிறது.    மேலும்   பல  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு நிதியம்    உதவவேண்டியிருப்பதனால்  மேலதிக  விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும்  27   ஆவது    ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல்   அமர்வும்  ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது.   மேலதிக  விபரங்களுக்கு :
திரு. விமல் அரவிந்தன்   ( தலைவர்)                                                   0414 446 796
திருமதி.  சத்தியா  சிவலிங்கம்  (செயலாளர்)                             0432 281 961
திருமதி. வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா ( நிதி;ச்செயலாளர் )     0404 808 250
திரு.  லெ.முருகபூபதி   (துணை  நிதிச்செயலாளர்)                   0416 625 766


குழந்தை மா.சண்முகலிங்கத்தின் ஆரொடுநோகேன் நாடக எழுத்துரு நூல் வெளியீடடு‏ விழா

.
unnamed (5)ஈழத்தின் சமூத்த நாடகவியலாளர் குழந்தை மா.சண்முகலிங்கத்தின் ஆரொடுநோகேன் நாடக எழுத்துரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வு 04.07.2015 சனிக்கிழமை பிற்ப்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் தம்பர் மண்டபத்தில் செ.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நூல் வெளியீட்டு நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக வடமாகாண அழகியல் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் |திருமதி மதிவாணி விக்னராஜா, இ சிறப்ப விருந்தினராக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நூல் வெளியீட்டுரையினை யாழ் திருக்|குடும்பகன்னியர்மட பாடசாலை நாடகத்துறை ஆசிரியர் யோ.யோன்சன் ராஜ்குமார் நயப்புரையினை யாழ்ப்பாணம் தேசியகல்வியற்கல்லூரி நாடகத்துறை விரிவுரையாளர் க.திலகநாதன் . நூலாசிரியர் உரையினை குழந்தை ம.சண்முகலிங்கம் ஆகியோர். நிகழ்த்தினார்கள்.
நூலின் முதற்பிரதியினை வடமாகாண அழகியல் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா வெளியிட்டு வைக்க சமூக செயற்ப்பாட்டு மையத்தின் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ் பெற்றுக்கொண்டார்..

தமிழ் சினிமா


இன்று நேற்று நாளை 
ஒரு Time Machine, கிடைத்தால் இறந்தகாலம் எதிர்காலம் என எந்த காலத்திற்க்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் நாம் என்ன என்ன செய்யலாம், யோசிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? அப்படிப்பட்ட சுவாரஸ்யமான கதைக்களத்தை தனது முதல் படத்திலேயே எடுத்துக்கொண்டு நம்மை ஒரு Fantasy உலகத்துக்குள் அழைத்து சென்றுள்ளார் அறிமுகஇயக்குனர் ரவிகுமார்.
படத்தின் கதை
2065ல், அதாவது எதிர்காலத்தில் ஆரம்பிக்கிறது அந்த காலத்தில் உள்ள விஞ்ஞானி ஆர்யா ஒரு Time Machineனை உருவாக்கி அதை பரிசோதித்து பார்க்க நம் நிகழ் காலத்திற்க்கு (2015)அனுப்புகிறார். அது தவறுதலாக ஹீரோ விஷ்ணு, அவரது நண்பர் கருணாகரன் அவர்களுடன் விபத்தில் நண்பாராகும் local விஞ்ஞானி கார்த்திக் ஸ்ரீனிவாசன் அவர்கள் கையில் கிடைக்க, பிறகு அதை வைத்து அவர்களுக்கு தோன்றியதெல்லாம் செய்ய அது ஒரு கட்டத்தில் இவர்களுக்கே பாதகமாக முடிகிறது.
பின் அந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி தீர்க்கிறார்கள், அந்த time machineக்கு என்ன ஆனது, காதல் கைகூடியத இல்லையா வில்லன் என்னவானார் என்று மிக சுவாரஸ்யமாக நகர்கிறது படத்தின் மீதி கதை.
1895 H G Wells என்பவரின் நாவல்தான் முதல் முதலாக time machine பற்றி வந்த படைப்பு . அதன் பின் ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ”இன்று நேற்று நாளை” தான் தமிழில் வந்த முதல் time machine பற்றிய படம். காதல், ஆக்ஷன் அல்லது பேய் இது போன்ற கதைகளங்களையே பொதுவாக தனது அறிமுகத்துக்கு தேர்தெடுக்கும் நேரத்தில் தனது முதல் படத்திலேயே இது போன்ற ஒரு fantasy கதையை எடுத்து அதிலும் வெற்றியடைந்திருக்கிறார் இயக்குனர் ரவிகுமார்.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் விஷ்ணு இப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற இளைஞனாக வரும் இவர், கையில் time machine கிடைத்தவுடன் அதை வைத்து தனது தொழிலிலும் காதலிலும் வெற்றியடைய இவர் முயற்சிக்கும் காட்சிகளில் பவுண்டரிகளாக விளாசுகிறார்.
தவறுதலாக கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட செயலை மாற்றி பின் இவர் அதை சரி செய்ய முயற்சிக்கும் போது நமக்கு “generator” start ஆகிறது.
மியா ஜார்ஜுக்கு தமிழில் இரண்டாவது படம், ஒரு பொறுப்பான காதலியாக, அன்பு மகளாக வந்து நம் மனதை கவருகிறார். Welcome back மியா!
ஜோசியராக வரும் கருணாகரனின் சரவடி comedyகளுக்கு பஞ்சமே இல்லை, ஜோசியர் தேர்வு எழுதும் காட்சியிலும், சீரியஸான காட்சிகளிலும்கூட இவர் அடிக்கும் counterகளுக்கு அரங்கமே சிரிப்பொலியில் அதிர்கிறது மொத்ததில் இவரின் நடிப்பு ”அமோகம்”. குழந்தை”னு பெயர் வைத்துக்கொண்டு மிரட்டி தள்ளுகிறார் வில்லன் சாய் ரவி.
பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஹிப்ஹாப் தமிழா You are Rocking! ஒளிப்பதிவாளர் A. வசந்த் தனது கேமரா மூலம் படத்திற்க்கு எவ்வளவு பலம் சேர்க்க முடியுமோ அதை முழுமையாக செய்துள்ளார். சற்று பெரிய படமென்றாலும் தனது எடிட்டிங் மூலமாக ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரசெய்திருக்கிறார் லியோ ஜான்பால். இது Sci-Fi படம் என்பதால் vfxன் பங்கு மிக அதிகம், இதிலும் இப்படத்தின் குழு வெற்றியடைந்துள்ளது!
க்ளாப்ஸ்:
படத்தின் சுவாரஸ்யமான கதையும் அதற்க்கு ஏற்றவாறு நகரும் திரைக்கதையும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் ஒரே கோட்டில் பயணிக்க செய்த இயக்குனரின் வழிநடத்தல்.
பல்ப்ஸ்:
இரண்டாம் பாதி சற்றே நீளம், லாஜிக் உள்ளதா என்று யோசிக்க வைக்கும் சில இடங்கள்.
நேற்று பற்றிய வருத்தத்தையும் நாளையை பற்றிய பயத்தையும் போக்க இன்று நாம் எடுக்கும் முடிவுகளே முக்கியம் என முன்மொழிகிறது இந்த “இன்று நேற்று நாளை”

Rating: 3.5/5

நன்றி cineulagam