எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 25 ஆசிரியபீடத்தின் பிராணவாயுவும் கரியமில வாயுவும் ! கிழக்கிலங்கை சூறாவளி காலத்தில் துளிர்த்த மனிதநேயம் !! முருகபூபதி


.


எழுத்தும் வாழ்க்கையும் 25 வது வாரம் 
எழுத்தாளர் முருகபூபதி தொடர்ச்சியாக எழுத்துப் பனி புரிந்து கொண்டிருப்பவர். இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணிபுரிந்த இந்த எழுத்தாளர் 1972 இல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலம் மல்லிகையில் அறிமுகமானவர்.  இன்று உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ் ஊடகங்களில் இவர் எழுத்துக்கள் வந்தவண்ணம் இருக்கின்றது.

தமிழ்முரசுஅவுஸ்திரேலியா தொடங்கிய காலம் முதல் அதற்காக  எழுதிக்கொண்டிருக்கும் இவர் .  தான் வாழும் நாட்டின் தமிழ் ஊடகத்திட்கு முன் உரிமை கொடுக்கும் பண்பு கொண்ட எழுத்தாளர். 

இவர் பல தொடர்களை தமிழ்முரசுஅவுஸ்திரேலியாவிறகு 25 வாரங்களுக்கு மேல்  எழுதி இருக்கிறார். இவ்வாரம் 25வது  வாரமாக வெளிவரும் எழுத்தும் வாழ்க்கையும் என்ற தொடர் பலரைப் பற்றிய சுவையான விடயங்களை வெளிக்கொண்டு வந்தது.  

புலம் பெயர் வாழ்க்கையில் முருகபூபதி அவர்கள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருப்பது எமக்கு பெருமையே.  திரு முருகபூபதி அவர்களின் எழுத்துப் பணி பல்லாண்டுகாலம் தொடர தமிழ்முரசுஅவுஸ்திரேலியாவின் வாழ்த்துக்கள்.

ஆசிரியர் குழு
வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக முதலில் நானும், எனக்குப்பிறகு நண்பர் செல்வரத்தினமும் பணியாற்றியதைத் தொடர்ந்து, அந்தப்பணியில் வெற்றிடம் ஏற்பட்டதற்கும் நாமிருவரும்தான் காரணம்.

எனக்கு காலிமுகத்திடலிலும் அதன்பிறகு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திலும் பணிகள் கிடைத்தமையால்,  கொழும்பில் அக்குவைனஸில் படித்துக்கொண்டிருந்த நண்பர் செல்வரத்தினத்தை வீரகேசரி பிரதம ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாகவே அறிமுகப்படுத்தி அந்த நிருபர் பணிக்கு இணைத்துவிட்டேன்.

எமது குடும்ப மருத்துவர் சோ. பாலசுப்பிரமணியம் கடற்கரை வீதியில் நடத்திக்கொண்டிருந்த சிகிச்சை நிலையத்தில் இலவசமாக தொலைபேசி இணைப்பு கிடைக்கும்.  அவர்


இந்துவாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது அவருக்கு சென்ற கூட்ட அறிக்கை எழுதுவதற்கு நான் உதவிசெய்வதுண்டு.  அதனால் அவருக்கும் நான் ஒரு செல்லப்பிள்ளை.

1977 இல் அரசு மாறியதனால்  கொழும்பில்  ஊடகவியலார்கள்  பலருக்கு   நன்மை நிகழ்ந்தது.   ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் முன்னைய அரசின்   தடையுடன் சீல்வைக்கப்பட்ட எம். டீ. குணசேனாவின்  பத்திரிகை சாம்ராஜ்யத்திற்கு ஜே.ஆர், பிரேமதாசவின் புண்ணியத்தினால் விடுதலை கிடைத்தது.  

அங்கு வெளியான தினபதி நாளேடு, மற்றும் சிந்தாமணி வாரவெளியீடு என்பன மீண்டும் வெளிவரத் தொடங்கின.  செல்வரத்தினத்திற்கு தினபதியில்  அலுவலக – நாடாளுமன்ற  நிருபர் வேலை கிடைத்தது.

எனக்கு வீரகேசரியில் ஒப்புநோக்காளர் வேலை கிடைத்ததை தொடர்ந்து, அவ்வப்போது நீர்கொழும்பு பிரதேச செய்திகளை எழுதிக் கொடுத்தேன்.  எனினும் நீதிமன்ற செய்திகளை பெறுவதில் தொடர்ச்சியாக நெருக்கடிகள் நீடித்தன.

வண்ணை தெய்வம் என்ற வாழும் வரலாற்றை இழந்தோம்

கானா பிரபா

 


" எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள்”

14 வருடங்களுக்கு முன்னர் வண்ணை தெய்வம் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் முக்கிய பகுதிகளை என் பகிர்வில் மீள் பிரசுரிக்க அனுமதி வேண்டி அழைத்தேன். அப்போது என் முதல் தொலைபேசி அழைப்பிலேயே அவர் பேசிய வார்த்தைகள் தான் அது.

வண்ணை தெய்வம் என்று தமிழ் ஊடகப் பரப்பில் அறியப்பட்ட நாகேந்திரம் தெய்வேந்திரம்


அவர்கள் புலம் பெயர் வாழ்வில் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்து கொண்டு வாழ்ந்து வந்தவர். எழுத்தாளராக, ஊடகராக இயங்கிய அவரின் தனித்துவம் ஈழத்து வாழ்வியலைத் தன் தலையில் சேமித்து வைத்தோடு அவற்றை எழுதி எழுதிக் குவித்தார் என்றே சொல்ல வேண்டும். அவை பல்வேறு நூல்களாக, பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டு வந்தன. கலைத்துறையில் மேடை நாடகங்கள், திரைப்படங்களில் கூடத் தன் சீரிய ஆற்றலை வெளிப்படுத்தினார்.

ஈராயிரத்தின் முற்பகுதியில் நான் ஈழத் தாயகத்துக்குச் சென்ற போது பூபாலசிங்கம் புத்தகசாலையில் கண்டெடுத்தது “யாழ்ப்பாணத்து மண் வாசனை” அதுவே “வண்ணை தெய்வம்” என்ற எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த முதல் நூல். ஈழத்து இலக்கிய, அரசியல், கலைத்துறை ஆளுமைகள் பலரைப் பற்றி எழுதிய கட்டுரைகளோடு, பல்வேறு


படைப்பாளிகள் தத்தமது ஊர்களைப் பற்றி எழுதிய மண் வாசனைப் பதிவுகளுமாக ஒரு பல்சுவைக் களஞ்சியமாக அந்த நூல் அமைந்திருந்தது.

தனது முதலாவது கவிதைத் தொகுப்பு “விடிவை நோக்கி” 1992 இல் ரஜினி பதிப்பகத்தால் வெளிவந்தது என்று வண்ணை தெய்வம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆறுதல் அளிக்கும் !  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


வீழும் மழைத்துளி
வித்தினில் பட்டு
ஆலம் விருட்சமாய்
ஆறுதல் அளிக்கும்

தாழ இருப்பவர்
தண்ணளி பட்டால்
மீள எழுவர்
நாளையை நம்புவர் 

கோழை தெளிந்தால்
காளை வருவான்
வாழை மடிந்து
வளர்த்திடும் ஈகை

முல்லைத்தீவு: குருந்தூர் மலையில் தமிழர் வழிபாட்டுத் தலம் அகற்றம்- பெளத்த விகாரைகள் வைத்து வழிபாடு


முல்லைத்தீவு: இலங்கை முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வந்த ஆதி ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு பெளத்த விகாரை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழரின் தாயகப் பிரதேசத்தில் உள்ள குருந்தூர் மலை பகுதியை ஆக்கிரமித்தில் பெளத்த பிக்குகள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இதனை தமிழர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளால் முறியடித்து வந்தனர். தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் அப்பகுதியை ஆக்கிரமித்து பெளத்த விகாரை அமைப்பதற்கு பிக்குகளும் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தமிழர்கள் ஆதி முறையில் சூலம் வைத்து வழிபாடு செய்த வழிபாட்டு இடம் திடீரென அகற்றப்பட்டது.

அஞ்சலிக்குறிப்பு தேனீ – ஜெமினி கங்காதரன் விடைபெற்றார் ! மாற்றுச்சிந்தனைக்கு களம் வழங்கிய கர்மயோகி !! முருகபூபதி


டந்த 2020 ஆண்டு மலர்ந்தது முதல் அடுத்தடுத்து எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள் நிரந்தரமாக விடைபெற்ற தருணங்களில் சோகத்தை அடக்கிக்கொள்ள சிரமப்பட்டேன்.

மீண்டும் இந்த 2021 மலர்ந்ததும், அந்தச்சிரமம் மேலும் உக்கிரமடையும் வகையில் மரணச்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ தொடர்ந்தும் உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதன் தொற்றுக்கு ஆளாகியவர்கள், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியிருந்தாலும் பக்கவிளைவுகளின் தாக்கத்தினால், மீண்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், அனுமதிக்கப்படாமலும்  நிரந்தரமாக விடைபெற்றனர்.

உடல் உள்ளுறுப்புகளை மோசமாக பாதிக்கும் அந்த எதிரி


உடனிருந்து பலியெடுத்துவருகிறது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத்தொற்றுக்கு ஆளாகியிருந்த எனது அருமைத் தோழரும் தேனீ இணைய இதழின் ஆசிரியருமான ஜெமினி கங்காதரனையும்  கடந்த 22 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை கொரோனோ காவுகொண்டுவிட்டது.

அச்செய்தி என்னை வந்தடைந்தபோது, அவரை நன்கு தெரிந்த ஒரு சில தோழர்களுடன் துயர்பகிர்ந்துகொண்டேன்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தோழர் ஜெமினி பற்றிய கட்டுரையை எழுதி, அவர் அயராமல் மேற்கொண்டுவந்த ஊடகப்பணியை வாசகர்களுடன் பகிர்ந்திருந்தேன். அந்தப்பதிவின் இறுதியில், அவர் விரைவில் குணமடையவேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

எனினும்  அவரது உயிரைப்பறித்த அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எனதும் மற்றவர்களினதும்  உருக்கமான வேண்டுதல் எட்டவில்லை.

இலங்கை வடபுலத்தில் புங்குடுதீவில் 09.01.1965 ஆம் திகதி கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் செல்வப்புதல்வனாகப்பிறந்த ஜெமினி கங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியில் படித்தவர்.

தூபி இடிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம் ஏன் விரிவடையவில்லை? - இதயச்சந்திரன்


 ராஜபக்ஷக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோட்டாபயவிடம் இருக்கிறது.

ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?

இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம்.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித் திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது.

எமது தமிழ்த் தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?.

வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?.

ஒடுக்குமுறையாளர் எம்மீது திணிக்கும் அழுத்தங்களை எதிர்கொள்ள நாடாளுமன்ற மேடை மட்டும் போதுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இயற்கை 2
......பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்


தென்றல் -

கோலநிலா தோற்றிடமென் குளிர்ச்சி தேக்கக்   

        குன்றெல்லாம் ஏறியவை உச்சி மோந்து 

ஓலமிடும் நீர்வீழ்ச்சி யுடன்விளை யாடி   

        ஓயாது பாயும் அருவிகளோ டோடி 

ஞாலமிசை வளம்பெருக்கும் ஆறெலாம் நீந்தி    

        நறும்பூங்காமலர்ப்பொய்கை நாற்றம் ஏந்தி 

காலத்தால் நினைவினிலே நிலைத்தெம் நெஞ்சம்   

        கசிந்துருகச் சாமரைதான் வீசிடுமே தென்றல்! 


அந்திகாணும் அருணன் -

செந்தீயின் நாப்போலச்  செக்கர் வானம்   

        சிவப்பேறத் தீப்பிழம்பாய் மேற்கில் நின்று 

"வந்துதிப்பேன் கிழக்கால்நான்" என்று சூரியனும்  

        மறைகின்ற வேளையெங்கும் அந்தோ வானில் 

விந்தையன்றோ விதம்விதமாய் வண்ண மாற்றம்   

        வேடிக்கை காட்டிடுதே மயக்கும் மாலை 

எந்தையீசன் எமக்களித்த எழிற்கோ லத்தை   

        எவ்வண்ணம் இயம்பிடுவேன்! வார்த்தை உளதோ? 

மேற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் தமிழ் மொழி அறிமுகமாகிறது!


தமிழ், ஹிந்தி மற்றும் கொரியன் ஆகிய மொழிகளையும் பள்ளிகளில் மாணவர்கள் கற்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பான அமைச்சர் Sue Ellery தெரிவித்துள்ளார்.

Pre-primary முதல் ஆண்டு 12 வரையான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்கான பணி எதிர்வரும் ஜுலைமாதம் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தமிழ்மொழிக்கான பாடத்திட்டம் மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்படவுள்ளதாகவும் மாணவர்கள் 2023ம் ஆண்டிலிருந்து மேற்கு ஆஸ்திரேலிய அரசபாடசாலைகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி SBC  தமிழ்

நயினா தீவில் இறங்கும் சீனா: அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும் இந்திய ராணுவம் ?

 

விடுதலைப் புலிகளை அழிக்க ஏனடா உதவினோம் என்று, நினைத்து நினைத்து ஒவ்வொரு மணி நேரமும் பைத்தியம் பிடித்து அலைய வேண்டிய நிலையில் தற்போது இந்தியா உள்ளது. இதுவரை காலமும் சிங்கள பகுதியில் ஊடுருவி வந்த சீனா. முதல் முறையாக யாழ் நயினா தீவில் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க உதவி செய்வதாக கோரி. அங்கே காலடி எடுத்து வைக்க உள்ளது. ஆனால் அங்குள்ள மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அங்கே வசிக்கும் தமிழர்கள் இந்தியா இருக்கிறது.

அவர்கள் அனல் மின் நிலையத்தை அமைக்க முடியும். ஆனால் சீனா ஏன் வந்து அனல் மின் நிலையத்தை இங்கே அமைக்க வேண்டும் என்று கேட்டு போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை சிங்களம் விரைவில் அடக்கி விடும். அது வேறு கதை. இது நாள் வரை லடாக் கில் உள்ள எல்லைப் பகுதிகளை தான் இந்தியா பாதுகாத்து வந்தது. ஆனால் இந்த வாரம் முதல், யாழ் கரையோரப் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளதால்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 50 – தமுக்கு, துடும்பு மற்றும் அரைச்சட்டி – சரவண பிரபு ராமமூர்த்தி


தமுக்கு
: தமுக்கு மண்ணாலான கருவி. சிறிய குழம்பு சட்டியில் ஆட்டுத்தோல் கட்டி செய்யப்படும். தென் தமிழ்நாட்டில் பலா மரத்தைக் குடைந்தும் செய்யப்படும். தற்காலத்தில் இரும்புத் தகர சட்டி தான் பெரும்பாலும். அதிகமாக அறிவிப்பு கருவியாக உள்ளது தமுக்கு. தமுக்கு வீரன் என்கிற நாட்டார் தெய்வம் வட தமிழ்நாட்டில் உண்டு. அவர் கையில் தமுக்கு இருக்கும். அய்யனார், வீரனார் போன்ற காவல் தெய்வங்களின் கோயில் நுழைவாயிலில் தமுக்கை அடித்தபடி வேட்டை நாயுடன் நிற்கும் தமுக்கு வீரனின் உருவச் சிலை இருக்கும். தற்போது இதைக் காவலர்களாக (போலிஸ்)துப்பாக்கியுடன் நிற்பது போல் வடிமைக்கின்றனர்.ஆயிரமே அய்யனாருக்குப் படைச்சாலும் தமுக்கு வீரனுக்கும் முக்கியமாப் படைக்கணும்” என்பது நடுநாட்டு சொல் வழக்கு. இக்கருவி தண்டோரா என்றும் வழங்கும். விருத்தாசலம் அடுத்த கொளஞ்சியப்பர் கோவிலில் நேர்ச்சை செய்யும் பக்தர்கள் தமுக்கு வரி என்று தனியே செலுத்தும் வழக்கம் உள்ளது. பறை, பெரியமேளம் ஆகியவற்றின் துணைக்கருவி தமுக்கு. இறப்புக்கு மறுநாள் பால் ஊற்றும் நிகழ்வில் புதுவை வட்டாரத்தில் தமுக்கு மட்டுமே இசைக்கப்படும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கோடியம்மனின் பச்சைக்காளி பவளக்காளி திருநடன பெருவிழாவில் காளி வேடமிட்டவர் தமுக்கு இசைக்கு ஆடி வருவர்.

 

துடும்பு: துடும்பு மண்ணாலான கருவி. மண்மேளத்தின் துணைக்கருவி.

கழுத்தில் மாட்டியபடி
இசைக்கப்படும். திடுமம், துடும்பு, கிடுமுட்டி எல்லாம் இதுவே. குழம்புச்சட்டி வடிவிலான மண்பாண்டத்தில் ஆட்டுத்தோலைக் கட்டி உருவாக்கப்படுகிறது. மண்மேளம் மற்றும் அரைச்சட்டியின் இசையை ஒன்றிணைக்கும் கருவி இது. மண்மேளத்தோடு இவ்விரு இசைக்கருவிகளும் சேர்த்தே இசைக்கப்படுகிறது.  தொன்மை அடையாளங்களான அரைச்சட்டியும் உருட்டியும் மெல்ல வழக்கொழிந்து விட்டது. எளிதில் உடையும் தன்மையுடைய இவ்விருக்கருவிகளுக்கு ஆதரவு இல்லை. உலோகம்/ஃபைருக்கு பெரும்பாலும் கலைஞர்கள் மாறிவிட்டார்கள்.

 

பாரம்பரியம் மாறாமல் துடும்பு தென் கொங்கு நாட்டு நாட்டார் தெய்வ கோவில்களில் தினமும் இசைக்கப்படும். இதற்கென்று இங்கே இசைக்கும் கோவில் ஊழியர்கள் உள்ளார்கள். திருவிழா நாட்களி

மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது

 மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருதுஅமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருதான, கென்டக்கி கர்னல்  விருதானது  நெதர்லாந்து நாட்டின் மாலதீவுகளுக்கான கௌரவ துணைநிலை துணைதூதராக செயலாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் (Andy Beshear) இதற்கான அதிகாரப்பூர்வ விருதில் கையெழுத்திட்டுள்ளார்.

கென்டக்கி கர்னல் விருதானது சமூகம், மாநிலம் அல்லது தேசத்திற்கு சேவையாற்றிய தனிநபரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அனைத்து விதங்களிலும் தந்து சிறப்பாக சாதனை புரிந்தவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதறக்காக கென்டக்கி ஆளுநரால் வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். கென்டக்கி மாகாணம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்டு ரீகன், நோபல் பரிசு பெற்றவரும் இங்கிலாந்து நாட்டின்  முன்னாள் பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மாலத்தீவில் சேவையாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனுக்கும் இவ்விருது வழங்கப்படுள்ளது.

யார் இந்த ஹிம்மத் அஹ்மத் ஹூசைன்?

மட்டக்களப்பில் அத்துமீறி சிங்கள குடியேற்றம்

 20/01/2021 மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேற்றம் அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 காணிகள் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு மேச்சல்தரையை அபகரிப்பது தொடர்பாக இன்று (20) கொக்கட்டிச்சோலையில் இருந்து பட்டிப்பளை வரையும் பேரணியாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்று பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி


 
“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா…?  “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.

எனக்கு  ‘ஜமாத்  ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “

இவ்வாறு தனுஜா,  தன்வரலாற்று நூலில்  பேசும் வரிகள்  133 ஆம் பக்கத்தில்  இடம்பெறுகின்றன.

ஆம் ,  எமக்கும் திருநங்கை ஜமாத் பற்றி எதுவுமே அதன் அரிச்சுவடியே தெரியாதுதான்.

தமிழ்த்திரைப்படங்களில் திருநங்கைகளை ரசிகர்களை சிரிக்கவைக்கும் பாத்திரமாக படைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பணம் சம்பாதித்தனர்.

திருநங்கைகள் யார்..? அவர்கள் எத்தகைய பாதையை கடந்து வருகிறார்கள் என்பது பற்றியோ, அவர்களின் வலிகளையோ எவரும்   அறிவுபூர்வமாகவும் உணர்ச்சியின் பாற்பட்டும் பதிவுசெய்து , நாம் படிக்காத சூழ்நிலையில் தனுஜாவின் நூல் எம்மை பேரதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும்  வேதனைக்கும் ஆளாக்கியிருக்கிறது.

நண்பர் தெய்வீகன், சுமார் 150 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்து இந்த நூலை என்னிடம் தந்துவிட்டு விடைபெற்ற கணம் கையில் எடுத்து  சில மணிநேரங்களில் படித்து முடித்தேன்.

பேர்த் பால முருகன் கோயில் வருஷா அபிஷேகம் 27/01/2021பேர்த் பால முருகன் கோயில் தைப் பூசம் 28/01/2021

  


முந்து தமிழ்!

அலகிலா இறை துணைநிற்க,
அகில இலங்கைக் கம்பன் கழகமும்
அவுஸ்திரேலியக் கம்பன் கழகமும்
அன்பாய் இணைந்து அரங்கேற்றும்,
அறிவார்ந்த நிகழ்நிலை இயலரங்கம்,
முந்து தமிழ்!🌺

அறமும் சைவமும்
அழகுறு தமிழும் பொழிய,
அவனி போற்றும் பேச்சாளர்
அரங்கேறவுள்ளனர்.
அந்தமிழை மாந்த,
அழைத்தோம் வாரீர்!🙏
🌞இரு கழகத்தார் அன்பு அழைப்பு🌞 

உலகச் செய்திகள்

நாடு திரும்பிய ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிப்பிரமாணம்

பைடன் பணிகளை ஆரம்பித்து 15 உத்தரவுகளில் கையொப்பம்

கொவிட்–19: பிரிட்டனில் உயிரிழப்பு புதிய உச்சம்

முன்னாள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது சீனா தடை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு


நாடு திரும்பிய ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சே நேவல்னி, மொஸ்கோ விமான நிலையத்துக்குச் சென்றுசேர்ந்த சில நிமிடங்களில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கைச் செய்திகள்

விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்- எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் தருணம் இது! 

முல்லை மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பிற்கான ஆரம்பமே இது!

இடித்தழிக்கப்பட்ட நினைவுதூபி! மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

 'சிலைகள், வேறு நிர்மாணங்கள் அமைக்கப்படமாட்டாது'


விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்- எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் தருணம் இது! 


முல்லைத்தீவு, குருந்தூர் ஐயனார் ஆலய அழிப்புத் தொடர்பாக சர்வதேச இந்து இளைஞர் பேரவை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்து மதத்தின் பெயரால் பல அமைப்புகள் உள்ள போதும் தற்போதைய சூழ்நிலையில் அவை பெயரளவில் மாத்திரமே அமைப்புகளாக உள்ளதாக பேரவையின் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மூதூர் திருமுருகன் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன


இலங்கை கிழக்கில்  திருகோணமலை மாவட்டத்தில்  மூதூரில்  கட்டைப்பறிச்சான் தெற்கில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டுநிறுவனமான திருமுருகன் மக்கள் ஒன்றியம்  தமது பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு மலர்ந்துள்ள புதிய 2021 ஆம் ஆண்டில் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக

வேண்டுகோள் விடுத்திருந்தது.

இவ்வேண்டுகோள் குறித்து தீவிர கவனம் செலுத்திய அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக ஆர்வலர் திரு. இராஜரட்ணம் சிவநாதன் தனிப்பட்ட ரீதியிலும் ஊடகங்கள் வாயிலாகவும் விடுத்த வேண்டுகோளையடுத்து அவுஸ்திரேலியாவில் நல்லெண்ணம் படைத்த அன்பர்கள் சிலர் உதவமுன்வந்தனர்.

அதன் அடிப்படையில்   மூதூர்  பிரதேசத்தில் சந்தனவெட்டை, அம்மன் நகர், கட்டைபறிச்சான், கணேசபுரம், சந்தோசபுரம், சம்பூர், கடற்கரைச்சேனை, சீதனவெளி, பாட்டாளிபுரம், நல்லூர், நீனாக்கேணி, பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், சின்னக்குளம், றால்குழி, சாலையூர் ஆகிய கிராமங்களில்  வதியும்  மாணவர்களுக்கு முதற்கட்டமாக    பாடசாலை உபகரணங்கள்  அண்மையில் வழங்கப்பட்டன.

இம்மாணவர்கள், பாடசாலைக்குச்செல்வதற்கான சில முக்கிய அடிப்படைத்தேவைகளை பெறமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

புன்னகை என்ன விலை?

faj darling 2.JPGdr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad


உங்கள் புன்னகயால் நீங்கள் இந்த உலகத்தை மாற்றுங்கள். உலகம் உங்கள் புன்னைகையை மாற்ற இடம் கொடுத்து விடாதீர்கள் – கோன்னர் ஃப்ரான்ட்டா

புன்னகை என்ன விலை? என்பதாக புன்னகைக்கு மட்டும் ஒரு விலை இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கி அணிந்து கொள்ளலாமே என மகிழ்ச்சியைத் தேடி இன்று பலரும் வாழ்க்கையில் ஓஓஓ…டிக் கொண்டிருக்கிறார்கள். 

ஏதேனும் பிரச்னைகள் அழுத்தும் போதும், கவலைகள் ஏற்படும் போதும், ஏதாவது மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து விடாதா என மனம் ஏங்கும். யாராவது மகிழ்ச்சியாக ஏதாவது சொல்லி விட மாட்டார்களா என உள்ளம் துடிக்கும்.

 உங்களுக்குத் தெரியுமா..? அந்த மகிழ்ச்சிக்கு ஏதோ ஒன்று நடக்க வேண்டியதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தர வேண்டியதில்லை. நிறைவான புன்னகையை, ஆனந்தத்தை, பரவசத்தை, மகிழ்ச்சியைத் தேடி நீங்கள் எங்கெங்கோ அலைய வேண்டியதில்லை. விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் உங்களிடமே சுரக்க செய்யலாம்!.

எண்டோர்ஃபின்ஸ்… இந்த வார்த்தையை கேட்டிருக்கிறீர்களா?! ஆஹா.. இது மட்டும் கடையில் இலகுவாக கிடைத்தால், இதை மூட்டை மூட்டையாக வாங்கி வீட்டில் குவித்து வைத்து விடலாம். அப்படி என்ன பொருள் அது?!

ஒரு கப்புச்சீனோ காதல் - குறும்படம்

 நகைச்சுவை மேடை நாடகங்கள் மூலம் நன்கு பிரபல்யமான Dr J ஜெயமோகன் முதன்முதலாக 'ஒரு கப்புச்சீனோ காதல்' எனும் ஒரு குறும் படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இங்கு புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களினதும் பிள்ளைகளினதும் அங்கலாய்ப்புகளை அலச முற்பட்டிருக்கும் த்திரைப்படம்Dr J ஜெயமோகன் எழுதிய படம்     

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்

 Friday, January 22, 2021 - 3:18pm

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ரூ.800கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9மாதங்களாக தடைப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், மணிரத்னத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இன்றளவும் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.  நன்றி தினகரன்