இலங்கைச் செய்திகள்

.
*    நாவாந்துறையில் கைதான 100 பேர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு?

*  மர்ம மனிதனை துரத்தியவர்கள், வீடுகளிலிருந்த பெண்கள் மீது தாக்குதல்; மூவர் கைது உடுவில் ஆலடிப் பகுதியில் சம்பவம்

* திக்குவல்லையில் இரு தரப்பினரிடையே மோதல் நால்வர் காயம்; வீடுகள், வாகனங்கள் சேதம்

* யுத்தத்தின் பின்னரான அழிவுகளை பான் கீ மூன் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவித்துள்ளார்: விக்கிலீக்ஸ் தகவல்

* வட பிராந்தியத்தில் காணி உரிமை பதிவு செய்யும் விடயத்தில் அதிருப்தியான ஏற்பாடுகள்

* அச்சத்தின் கிடுக்கிப்பிடிக்குள் அவதியுறும் சிறுபான்மை மக்கள்

* அரசியல் உறுதிப்பாடற்ற ஆட்சியாளர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பாதகங்கள்

*  இலங்கைக்கு எதிராக தீர்மானம் வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து: சம்பிக்க

 *  நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்?

* மர்ம மனிதர் செயல்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதியிடம் கோரும் தீர்மானம் யாழ்.மாநகர சபையில் நிறைவேறியது

*  சர்வதேசத்துடனான முரண்பாட்டிற்கு அரசாங்கம் அப்பாவி தமிழ் மக்களை பலிகடா ஆக்கக்கூடாது - சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு

காற்றில் மிதக்கும் அவள் குரல் -கவிதை - செ.பாஸ்கரன்


 .

வானம் சிந்தாத அந்த மாலைப்பொழுது
வண்ணயாலம் காட்டும் அழகாயத் தெரிகிறது
கருமேகம் கவிந்து கிடக்கும் அழகில்
மனம் லயித்துவிட சிந்தனை சிறகடிக்கிறது
அன்றும் இப்படித்தான்
விரிந்து கிடக்கும் கரும் கூந்தல்
முகிலென விளையாடும் அவள் முகம்பார்க்கிறேன்
பளிச்சென உதிர்க்கும் சிரிப்பு
மின்னலென வெட்டிப்போகிறது
மீண்டும் வானத்தைப்பார்க்கிறேன்
பொற்கொல்லன் ஊதிவிட்ட உலைக்களமாய்
கீழ்வானம் சிவந்து கிடக்கிறது
ஒற்றைக் கோடாய் சிவந்து சென்ற
அந்திவானத்தின் அழகுக்கோலம்
கண்சிமிட்டி கடந்து செல்லும்
அந்த தேவதையின் அழகுக்கோலமாகிறது
வட்டமிட்டு உயரப்பறக்கும் கரும்பறவையென
அவள் எண்ணஅலைகள் மனதை நிறைக்கிறது
அவள் கனிவான பார்வைக்காய்
காத்திருக்கும் என் மனதைப்போல்
காற்றின் கைகோர்த்தலுக்காய் காத்திருக்கும்
கருத்தரித்த மேகங்கள்
அந்தி வானமும் ஒற்றைப் பறவையும்
என் கண்ணிலிருந்து மறைகின்ற இருளில்கூட
அவள் குரல்மட்டும்
அந்தக்காற்றில் நிறைந்து வானில் மிதக்கிறது.

கலைவளன் சிசு நேர்காணல் - நேர்காணல்: ஆவூரான்.

.
அந்தக் காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும் என்ற கட்டுரைத் தொகுதியைத் தந்த கலைவளன் சிசு நகேந்த்திரன் ஐயா அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர்.

லண்டன் மற்றிகுலேசன் வரையில் பரமேஸ்வராக் கல்லூரியிலும் பின்னர் யாழ் மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று London chamber of commerce உயர் தரப் பரீட்சைக்கு தேற்றிவர். கணக்காய்வுத்திணைக்களத்தில் பணி புரிந்து.ஓய்வு பெற்றவர் கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை நாடகத்தின் மூலமும் ராஜ் நாடக மன்றத்தின் சக்கடத்தார் என்னும் நாடகத்தின் மூலமும் உலகறிந்த நாடக நடிகரானார்.

தன்னையே தணலாக்கிய ஈகியர் செங்கொடி

.
.
இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கேட்டு , தன்னுடலை எரிதழலாக்கிக் காவியமான செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் மெல்பேணிலும் சிட்னியிலும் நடைபெறவுள்ளன.

தமிழீழத் தாயகத்தில் நிலவிய இருளடைந்த நாட்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக வந்திருந்த முன்னாள் இந்தியப்பிரதமர் ராசீவ் காந்தி அவர்கள், 1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியன்று நடைபெற்ற துன்பியல் சம்பவம் ஒன்றின்போது கொல்லப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு 26 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.

புகைப்படக்காரி -கட்டுரை- அ.முத்துலிங்கம்
2011-09-02
நான் நேற்று மாலை பொஸ்டன் வந்து சேர்ந்தேன். இன்று காலை பக்கத்து வீட்டில் ஆரவாரம் தொடங்கியது. அதற்கும் நான் வந்ததற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லையென நினைக்கிறேன்.  பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். மருத்துவத் துறையில் அவருக்கு விருது ஒன்று கிடைத்திருந்தது. அவரைப் பாராட்டுவதற்கு ஆட்கள் காரில் வந்தனர்; போயினர். மருத்துவர், அவர் வீட்டுக்கு முன் இருந்த மரங்கள் நிழல்தரும் தோட்டத்தில், சாய்மணக் கதிரை போட்டு, போரிலே வெற்றியீட்டிய ஒரு குறுநிலமன்னன்போல வீற்றிருந்தார். பத்திரிகைக்காரர்கள் பேட்டி எடுத்தார்கள். புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்தார்கள். வந்த சிலர் வணங்கி வாழ்த்து சொல்லிவிட்டு சென்றார்கள்.

உலகச் செய்திகள்

.
* இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 12 வயது சிறுவன் பலி

* சோமாலியாவில் தினமும் 100 குழந்தைகள் பலி

* தங்கம், பணத்துடன் கடாபி புர்க்கினா பாசோவுக்கு தப்பியோட்டம்?

* சர்வதேச பனி ஹொக்கி வீரர்கள் உட்பட 43 பேர் ரஷ்ய விமான விபத்தில் பரிதாபமாக பலி

* சிரிய நகரில் படையினரின் நடவடிக்கைகள் தீவிரம்

எனக்குப் பிடித்த ஹருணி ஸ்ரீனிவாஸ் பாடல் - Arasu


 .
Super singer 3 என்று விஜே தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியொன்று நடைபெற்று வருகின்றது அரை இறுதிப் போட்டிக்கு அடுத்தவாரம் செல்ல இருக்கும் இந்த நிகழ்ச்சியி;ல் சென்றவாரம் தமிழ்ப் பின்னணிப்பாடகர்கள் பலருடன் சேர்ந்து இந்த புதிய போட்டியாளர்கள் பாடியிருந்தார்கள். அதில் ஸ்ரீனிவாஸ் என்பவர் ஹருணியுடன் இணைந்து பூக்கள் பூக்கும் தருணம் என்ற மதராசுப்பட்டணம் என்ற திரைப்பட பாடலை பாடியிருந்தார். நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் அந்த புதிய போட்டியாளர் பாடியிருந்தார் என்னை மிகவும் கவர்ந்திருந்தது அதை வாசகர்களும் பார்ப்பதற்காக தருகின்றேன்.

புலர்வின் பூபாளம் 2011

.

 

தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள்

.

ஆஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் இரண்டாவது பொதுக் கூட்டம்


அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கடந்த வருட செயற்பாடுகளும், வருங்காலச் செயல் திட்டங்களும் பற்றிய தகவல்கள் கலந்துரையாடப்படும்.

இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை அழைக்கிறது.மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 8


.
                                                                                         பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 8

தூது செல்லல்


இந்தப் பகுதியி;ல் பெண்கேட்டுத் தூது செல்வதுபோன்ற சில பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவள் குங்குமப் ப+ப்போல செந்நிற அழகி.  வாளிப்பான உடற்கட்டுக் கொண்டவள்.  பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் பருவ அழகு நிரம்பப் பெற்றவள்.  பலருக்கு அவளிலே ஒரு கண்.  அந்த ஊர்ப் பணக்காரர் ஒருவருக்கும் அவளிலே தீராத ஆசை.  மாடு-கன்று, தோட்டம்-துரவு, நன்செய்- புன்செய் என்று நிறையச் சொத்து அவருக்கு உண்டு.  இந்தச் சொத்துகளில் மயங்கி அவளைத் தனக்குக் கட்டிவைக்க அவளது பெற்றோர் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர் ஒரு பெண்மணி மூலம் தூது அனுப்புகிறார். இவ்வாறு வயதான பாட்டிமார் திருமணத் தூது செல்வது கிராமங்களில் வழமை.

அவளது தாய் வீட்டு முற்றத்திலே பாய் இழைத்துக் கொண்டு இருக்கிறார்.  தூது சென்ற பெண்மணி மெல்லச் சென்று  அவளருகே அமர்ந்து தான் வந்த காரணத்தை மறைமுகமாகச் சொல்கிறாள்

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் நிலையைப் பாருங்கள்.

.
வெள்ளை மாளிகைகளில் தலைவர்களின் வாழ்வை கற்பனை செய்து பாருங்கள்.....?தமிழ் சினிமா

.
எங்கேயும் எப்போதும் - 'நோ கட்ஸ்' !

ஜெய், சர்வானந்த், அஞ்சலி மற்றும் அனன்யா நடித்து இருக்கும் படம் 'எங்கேயும் எப்போதும்'. ஏ.ஆர்.முருகாதஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணன் இப்படத்தினை இயக்கி இருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருக்கிறார்.
 
இரண்டு காதல் கதைகளை தனித்தனியாக ஆரம்பித்து ஒரே இடத்தில் முடிப்பது தான் படத்தோட கதையாம். ஒரு காதல் கதை சென்னை பின்னணியிலும், ஒரு காதல் கதை திருச்சி பின்னணியிலும் இருக்குமாம்.

இப்படத்திற்கு சத்யா இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

செப்டம்பர் 16ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. இப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படக்குழுவினரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் 'U' சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். படத்தில் எந்தவித காட்சியையும் நீக்க சொல்லவில்லையாம் சென்சார் அதிகாரிகள்.

நிச்சயமாக இப்படம் மக்களின் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
நன்றி வீரகேசரி