ஹாலிவுட் சினிமாவில் வால்ட் டிஸ்னியின் பங்கு மிக முக்கியமானது. பல படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும் கார்டூன் வகையை சார்ந்த அவர்களின் படங்களுக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே நம்மில் பலரும் பார்த்திருந்த தி லயன் கிங் தற்போது புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி சிங்க ராஜாவை பார்க்க காட்டிற்குள் செல்வோமா...
கதைக்களம்
பெரிய வனத்திற்கு ராஜாவாக முஃபாஸா என்னு சிங்கம் இருக்கின்றது. அதன் வாரிசாக குட்டி சிங்கம் சிம்பா. சிம்பாவுக்கு தோழியாக லாலா. தனக்கு பின் தன் மகன் தான் காட்டின் இளவரசன் ஆகவேண்டும் என கனவு சிங்க ராஜாவுக்கு. இதற்காக மகனுக்கு சில சூட்சமங்களை சொல்லி புரிவைக்கிறார்.
இவரின் அரசாட்சியின் கீழ் காட்டு மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் சில இயற்கை விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக வாழ்கின்றன. ஆனால் மயான பூமி என்ற ஒன்றில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருக்கின்றது.
சந்தோசமாக போய்க்கொண்டிருக்கையில் திடீரென சிம்பாவுக்கு பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதனை காப்பாற்ற முஃபாஸா வர பெரும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்கிறது.
இறுதியில் முஃபாஸா இறந்துவிட, தன் அப்பாவின் சாவுக்கு தான் காரணம் என்ற மனவேதனையில் திக்கு தெரியாத இடத்திற்கு செல்கிறது. காட்டில் திடீர் ஆட்சி மாற்றம், முஃபாஸாவின் மரணத்திற்கு காரணம் யார், சிம்பா என்ன ஆனது?? முஃபாஸா கனவு நிறைவேறியதா?? என்பதே இந்த தி லயன் கிங்.
படத்தை பற்றிய அலசல்
தி லயன் கிங் முன்பே நாம் சிறு வயதில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவில் இப்போது தொழில் நுட்பம் நவீனமாக வளர்ந்து விட்டது. அதில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகிறது என்ற செய்தியே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது எனலாம்.
2019 ல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் கூட இந்த படத்தை காணும் ஆர்வத்தில் தியேட்டர்களுக்கு வந்திருப்பது தெரிகிறது.
தி லயன் கிங் பல முக்கிய நடிகர்களின் குரல் தாங்கி வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக பறவையின் குரலாக காமெடி நடிகர் மனோபாலா வந்திருப்பது இண்ட்ரஸ்டிங்.
ஆபத்தில் மாட்டிக்கொண்ட குட்டி சிம்பாவை காப்பாற்றும் குரலாக வந்த காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் எண்ட்ரி காட்சிகளுக்கு சூப்பரான ஓப்பனிங்.
வளர்ந்த சிம்பாவின் குரலாக வந்த சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். படத்தில் உலகில் எதுவும் நமக்கு சொந்தமல்ல ஆனால் இயற்கையை பாதுகாப்பது நம் கடமை என மெசெஜ் முக்கியமானது.
படத்திற்கான பின்னணி இசை, காட்சிகள் நகர்வு, கதை கோர்ப்பு என திட்டமிட்டு அழகான படைப்பாக கொடுத்திருப்பது நன்று.
கிளாப்ஸ்
மனோ பாலா, ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் காமெடிகள்.
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடியான கதை ஸ்கிரிப்ட்.
அலட்டல் இல்லாத இயல்பான வசனங்கள்..
பல்ப்ஸ்
இவ்வளவு செய்தவர்கள் இடைவேளை விசயத்தில் கோட்டை விட்டது ஏனோ?? மைண்ட் டிஸ்டர்பிங்.
மொத்தத்தில் தி லயன் கிங் கலர்ஃபுல்லான காட்டு பயணம். டிஸ்கவரி சானலையே தூக்கி சாப்பிட்டிடும் போலயே...
நன்றி CineUlagam