இறந்த காதல் - ஆனந்த்.வி

.
இன்னும் எத்தனை நாள் 
என் காத்திருப்பு... உனக்காக ...

தவறிழைத்தவன் நான்தானா?
நெஞ்சை தொட்டு சொல் ...
பிரிவுக்கு காரணம் யார் என்று?
என்னை விட்டு போனது நீ?

வாழ்க்கை கடலில் சிக்கிய
சிறு துரும்பாய்....
தவிப்பது நான் மட்டுமே....
அன்பை தேடி...
அரவணைப்பை தேடி...
தேடியது கிடைக்காது...
மூழ்கினேன்... மூச்சடங்கி.... 

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்

.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ராஜீவ் கொலைமறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீட்டுவிழா.



முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவஜகாந்தி கொலைவழக்கில் ஆயுள்த்தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பாஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த "ராஜீவ் கொலைமறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில்டன்டினோங் நகரத்தில்  சிறப்புற நடைபெற்றதுஇந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

SYDNEY MURUGAN PANNISAI VIZHA ON 25.04.2017.



இலங்கையில் பாரதி - அங்கம் 16 - முருகபூபதி -

.

 பாரதியின்  சிந்தனைகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அடிப்படையான காரணங்களை 1925 ஆம் ஆண்டு முதல் இங்கு நிகழ்ந்த  சம்பவங்களிலிருந்தே ஆராயமுடியும். எமக்கு கிடைத்த தரவுகள், தகவல்களின் அடிப்படையிலேயே  இந்த நீண்ட தொடரை எழுதத்தொடங்கினோம்.
இலங்கையில் பாரதியின் நாமம், பாடசாலைகளில், நகரங்கள், கிராமங்கள், வீதிகள், பாடசாலைகளின் மாணவர் இல்லங்களில், சனசமூக நிலையங்களில், இலக்கிய அமைப்புகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
பாரதியின் முற்போக்கான சிந்தனைகளின் தாக்கத்தினால் இலங்கையில் தோன்றிய மூத்த இலக்கிய அமைப்பு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
அதன் வரலாற்றுச்சுவடுகள் 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து பதிவாகியிருக்கிறது.
இச்சங்கத்தின்  அங்குரார்ப்பணம் அன்றையதினம் கொழும்பில் மருதானை வீரரத்தன மண்டபத்தில் நடந்திருக்கிறது.  இதன் கொள்கைப்பிரகடனம், அதே ஆண்டில் ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி வெளியானது.
அதற்கு முன்னர் குறிப்பிட்ட கொள்கைப்பிரகடனம் சங்கத்தின் மத்தியகுழுவினால் பரிசீலிக்கப்பட்டது.


இது அனர்த்தமா அல்லது படுகொலைகளா?



.
தமிழ்-சிங்கள புதுவருடமான 14.04.2017 அன்று கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பிரதேசமான மீதொட்டமுல்லயில் திண்மக்கழிவு (குப்பை) மேடு சரிந்ததில், அதனைச்சூழ இருந்த 147 வீடுகள் புதையுண்டு, மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரையில் 30 சடலங்கள் மீடகப்பட்டுள்ளன. மேலும் குறைந்தது 20 பேராவது புதையுண்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வேறு இடங்களிலிருந்து வந்த மக்களும் அங்கு கூடியிருந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கையினைச் சரியாகக் கணிக்க முடியாதுள்ளதாகத் தெரியவருகின்றது. உலகெங்கிலும் அடிக்கடி மண்சரிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதுபற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் திண்மக்கழிவு மேடு சரிந்து இவ்வளவு தொகையாக மக்கள் இறந்தது முதன்முறையாக இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

மீதொட்டமுல்லயில் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இங்கு தினமும் 850 தொன் (8 இலட்சத்து 50 ஆயிரம் கிலோ) திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேடுகளால் அப்பகுதியைச் சூழவுள்ள 8 கிராம சேவகர் பகுதிகளில் வாழும் 8700 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரம் மக்கள் கடந்த 20 வருடங்களாகப் பாதிப்புக்களைச் சந்தித்து வந்துள்ளனர். இந்த திண்மக்கழிவு மேட்டின் உயரம் 100 மீட்டருக்கும் அதிகமானதாகும். இங்கு ஏறத்தாள 235 இலட்சம் தொன் நிறையுடைய திண்மக்கழிவுகள் சேர்ந்திருப்பதாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் அமைச்சரொருவர் பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் கணக்குத் தெரிவித்த பின்னர், கடந்த 14 மாதகாலத்தில் மேலும் மூன்றரை இலட்சம் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டுள்ளன.

சிட்னியில் ஆறுதிருமுருகனின் ஆன்மீக சொற்பொழிவு


உலகச் செய்திகள்


பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி

ஜனாதிபதிக்கெதிரான போராட்டத்தினால் கலவர பூமியான வெனிசுவேலா..! 

மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு

ஷிம்லா பேருந்து விபத்தில் 44 பேர் பலி; எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: காணொளி வெளியீடு

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது.!

தமிழக அரசியலில் பரபரப்பு: அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான சமிக்ஞைகள்; சசிகலாவின் எதிர்காலம் இருளில்?

மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்!

பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதி யார்? முதல் கட்ட வாக்கு பதிவு இன்று..!

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 29.04.17

.

மகரந்தச்சிதறல் நூல் விமர்சனம் - முருகபூபதி

.
 நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்
இங்கிலாந்தில்  புகலிடம்பெற்ற  ஈழத் தமிழ்ப்பெண்களின் ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்திருக்கும் அரிய முயற்சி
                                       

நேர்காணல் என்பதும்  ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சிபெறவேண்டியவர்களாகவே  இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும் முக்கியமானது. தம்முடன் உரையாடவிருப்பவர் பற்றி ஓரளவும்  தெரியாமல்  முழுமையான  நேர்காணலை  தயாரித்துவிட முடியாது.
இங்கிலாந்திலிருந்து  எழுத்தாளராகவும், வானொலி ஊடகவியலாளராகவும்  அதே சமயம் இலக்கிய - சமூகச்செயற்பாட்டாளராகவும்  இயங்கும் நவஜோதி ஜோகரட்னம் வெளியிட்டுள்ள நேர்காணல் தொகுப்பு " மகரந்தச்சிதறல்"
நிதானம்,  தனிப்பட்ட விருப்பு வெறுப்பற்ற பண்புகள்,  கூர்மையான செவிப்புலன், கிரகிக்கும்  ஆற்றல் என்பன சிறந்த நேர்காணலை ஒலி - ஒளிபரப்புவதற்கு பெரும் துணைபுரியும்.


நூல் அறிமுகமும் வெளியீடும் - 30.4.17

.
நூல் அறிமுகமும் வெளியீடும் - 2 - ” ஈழத்துத் தமிழ் நவீன இலக்கிய வெளி” - நேர்காணல்களின் தொகுப்பு 30.4.17 ஞாயிறு மாலை 3 - 6 மணிவரை


சமஉரிமை சமுதாயம் - தி. சுவாமிநாதன், நாமக்கல்.



.

கார்ல்மார்க்ஸ் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகிய இரு சம உடைமைக் கொள்கைவாதிகளால் உருவாக்கப்பட்டதுதான் பொது உடைமைக் கொள்கை. வாழ்வியலில் அனைத்து சமூக உறவு நிலைகளையும், இயக்கங்களையும் நிர்ணயிப்பது பொருளாதாரமே. கொள்கைகளும், நம்பிக்கைகளும் கூட பொருளாதாரத்தின் ஆளுமைக்கு உட்பட்டவையே. இதுவே பொதுவுடமை கொள்கைகளின் மையக்கருவாக உள்ளது. சரித்திரம் என்பது ஒன்றுக்கொன்று முரணான பொருளாதாரத் தேவைகள் உள்ள வர்க்கங்களுக்கிடையே இடைவிடாது நடைபெறும் போராட்டம். 9ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருந்த நில பிரபுத்துவ (குநரனயடளைஅ) முறையில்பொ,ருளாதாரத் தேவைகளே சமூக, அரசியல் உறவுகளை நிர்ணயித்ததை சுட்டிக் காட்டுகிறது இது. உயிர் வாழ்தலுக்கான போராட்டம் நிரந்தரமானது என்கிறது.
நில பிரபுத்துவ முறையை, முதலாளித்துவத்திற்கு சமமாகப் பார்க்கிறது. வாழ்வில் உள்ள வர்க்கப் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சித்தாந்தம். சம உரிமை சமுதாயம் அமைந்திட வழி காட்டுகிறது. வர்க்க பேதமற்ற (ஊடயளளடநளள ளழஉநைவல) சமுதாயத்தை அடைய முடியும் போது, எல்லோருக்கும் எல்லாம் பொதுவானதாகி விடுகிறது. ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என்ற பேதம் மறைகிறது. அனைத்து வளங்களும் சமுதாயத்திற்கே அல்லது அரசுக்கே சொந்தம் என்று பாவிக்கும் சமூக கட்டமைப்பு முறையை வலியுறுத்துகிறது. பொதுவுடைமை சித்தாந்தத்தின் தந்தை - கார்ல் மார்க்ஸ் ஆவார். ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் (1818-1883) பிரடெரிக் ஏங்கெல்ஸ் (1820-1995) ஆகியோர் தொழிலாளி வர்க்க அரசியலுக்கு அறிவியல் அடிப்படையிலான தத்துவத்தை உருவாக்கி உலகிற்கு அளித்தனர். இதுவே பொதுவுடமைக் கொள்கை எனப்பட்டது.

இலங்கைச் செய்திகள்


நயினாதீவில் ஜனாதிபதி

முல்லைத்தீவில் தமிழ் - சிங்கள மீனவகுழுக்களுக்கிடையில் அமைதியின்மை

காணி சுவிகரிப்புக்கு எதிராக மன்னாரில் ஆர்ப்பாட்டம்

கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரி போராட்டம்..!

43 நாட்களாக விடையேதுமின்றி தொடர்வதாக முல்லைத்தீவில் போராடிவரும் தாய்மார் கவலை!!!

வைத்தியர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ; யாழில் சம்பவம்




மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா

.
இலங்கையிலிருந்து  'ஞானம்' ஆசிரியர்  ஞானசேகரன், எழுத்தாளர்  மடுளுகிரியே  விஜேரத்தின  வருகை

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன  ஆகியோர் வருகை  தருகின்றனர்.
 எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017)  சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  மெல்பனில் விழா நடைபெறும் இடம்:   Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபம்  ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170)
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலாக  எழுத்தாளர் விழா நடைபெற்றுவருகிறது.


ஏப்ரல் 23: உலக புத்தக தினம் -

.

உலகப் புத்தக தினத்தில் எழுத்தாளர்களுக்கு இணையாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் நல்ல எழுத்தைத் தேடித் தேடிப் படிக்கும் வாசகர்கள். தமிழகத்தின் பல்வேறு தரப்பு வாசகர்களை அவர்களது வாசிப்பு அனுபவம், பிடித்த புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டோம். அவர்களின் பகிர்வுகள் இங்கே…
ஜான்சி, பி.ஏ. பொருளாதாரம் இறுதி ஆண்டு மாணவி, இராணி மேரி கல்லூரி, சென்னை:
ஆப்பிரிக்க மாடல் அழகியான வாரீஸ் டைரீ எழுதிய ‘பாலைவானப் பூ’ என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சமீபத்தில் படித்தேன். சோமாலியாவைச் சேர்ந்தவரான வாரீஸ் டைரீக்கு நடந்த பிறப்புறுப்புச் சிதைப்பு குறித்தும் மற்றும் பாலியல் வன்முறை குறித்தும் வாரீஸ் டைரீ இந்த நூலில் குறிப் பிட்டுள்ளார். அதேபோல், 13 கோடி பெண்கள் பிறப் புறுப்புச் சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் இந்த புத்தகத்தின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தனை வலி மிகுந்த துயரங்களை கடந்து அவர் எவ்வாறு ஒரு மாடல் அழகியாகவும் வலிமையான பெண்ணாகவும் மாறினார் என்பதை இந்த புத்தகம் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது. எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து மீள இந்த புத்தகம் எனக்கு உதவியாக இருக்கிறது.

தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்!


Image result for அம்பேத்க்கார்ப்ரல் 14 அன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மத்திய - மாநில அரசுகளின் சார்பிலும் விழாக்கள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், தமிழகத்தின் சில கிராமங்களில் சாதியப் பார்வையுடன் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காவல் துறையும் துணைபோய் உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாக்களுக்கு அனுமதி வழங்கிய காவல் துறையினர், சில இடங்களில் அதாவது தலித் அல்லாதோர் வசிக்கும் பகுதிகளில் கொடிகள், ஒலிபெருக்கிச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று முன்நிபந்தனை விதித்ததாகத் தெரிகிறது. இது அம்பேத்கரைக் குறுகிய பார்வையுடன் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகவும் அமைந்திருக்கிறது.


.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ அமைப்பினர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். அதற்கு உள்ளூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் ஏழு நிபந்தனைகளின்பேரில் அனுமதி வழங்கியுள்ளார். “அம்பேத்கரின் படத்தின் மீது மலர் தூவி, இனிப்புகள் வழங்கிய பிறகு அவர் படத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் விளையாட்டுகளை நடத்தக் கூடாது, கொடிகளையோ பதாகைகளையோ உயர்த்திப் பிடிக்கக் கூடாது, விளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது, முன் அனுமதியின்றி கூட்டமோ ஊர்வலமோ நடத்தக் கூடாது, மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது’’ என்பதே அந்த நிபந்தனைகள். ராமநாதபுரம் மாவட்டத்தின் மற்ற கிராமங்களிலும் விழா நடத்த அனுமதி கேட்டவர்களுக்கு இதே நிபந்தனைகளே விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில், மறைமுகமாக காவல்துறையே சாதிய ஆதிக்கத்துக்குத் துணைபோயிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தும் நிகழ்வல்ல, மாறாக ஒட்டுமொத்த பொதுச்சமூகமும் தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொள்வதாகும்.
குறிப்பிட்ட கிராமத்திலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பல ஆண்டுகளாக அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால், இதுவரை காவல் துறை இப்படி எந்த நிபந்தனையையும் விதித்ததில்லை என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். கவலையளிக்கும் இந்தப் போக்கு தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நவீன இந்தியாவை வடிவமைத்த மாபெரும் தலைவர்களில் ஒருவர் அம்பேத்கர். அவரது சிந்தனைகள் அனைவருக்குமானவை. அவரது பிறந்த நாள், அனைத்து சமூகங்களும் இணைந்து நடத்துகிற விழாவாக மாற வேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் மட்டுமே அல்ல, பொதுச் சமூகமும் சேர்ந்து அதைக் கொண்டாட வேண்டும். அம்பேத்கரைக் கொண்டாடுவது, அடிப்படையில் நமக்குள் உள்ள சாதிய உணர்வை அழிப்பதற்கான குறியீடுகளில் ஒன்று. காந்தி, நேரு வரிசையில் தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர். அவர் இந்த நாட்டின் சொத்து. 
***************

யாழ்ப்பாணமும் வாழ்வெட்டும் - செ.பாஸ்கரன்

.

யாழ்ப்பாணம் போற சந்தர்ப்பம் கிடைச்சதும் மனதுக்குள்ள ஒரு இனம்புரியாத  சந்தோசம். சண்டைக்குபிறகு போய் வந்தபிறகு இப்ப திரும்ப போறம் எண்டதும் பிள்ளையள் வளர்ந்த பிறகு அவையளையும் கூட்டிக் கொண்டுபோய் நாம நடந்து திரிந்த நகரத் தெருக்களையும் கிராம வாழ்க்கையையும் காட்ட கிடச்ச சந்தர்ப்பம் எண்டதையும். யாழ்பாண கிடாய்க் கறி சாப்பிட்ட பிறகும் கை மணத்தில நாக்கில எச்சில் ஊறுகிற விடயங்களையும் நினைச்சுக்கொண்டு கொழும்பில காலடி வைச்சாச்சு . பெரியவளின்ர திட்டமிடல் பிரகாரம் போற இடங்கள் தெரிவு செய்யப்பட்டாலும் நம்மட பழைய சந்தோசங்கள் நடந்த இடங்களும் போறதென்று ஆட்சேபனையின் மத்தியிலும் மனுசியின்ர வாக்களிப்பால ஐம்பதுக்கு ஐம்பது என்று வந்து செருகப்பட்ட பிறகு கொஞ்சம் சந்தோசம்.

சின்னவள் கையில போனையும் பிடிச்சுக்கொண்டு பதட்டமாய்  வந்து அப்பா யாழ்ப்பாணம் போகேலாது எண்டு குண்டத்தூக்கி போடுறாள். என்ன பிரச்சின ஆமி மறிச்சுப் போட்டாங்களோ எண்டு கேக்கிறன். "அங்க வாலால வெட்டுராங்கலாம் "  என்னது வாலால வெட்டுராங்களோ கேட்டபடி யோசிக்கிறன். அந்த நேரத்தில ஆரியகுள பொன்ராசா, கொட்டடி மணியம் கரையூர் சிலுவை இவங்கள் திருக்க வால் கொண்டு திரிஞ்சதும்  பலபேர அதால விளாசினதும் கண்டிருக்கிறன். சிலவேளை அப்பிடித்தான் ஏதாவது நடக்குதோ எண்டு நினைச்சாலும் அதென்னெண்டு வெட்ட முடியும் எண்டு யோசிக்கிறபோதுதான் பிள்ளையின்ர தமிழ்க்கொலை நினைவில வந்தது. \
நான் சொன்னன் வடிவாபார் வாலால இல்ல வாளாலயோ எண்டு . yes yes வாளாலதான் என்கிறாள். சரியான சொல்லைக் கண்டுபிடித்த பெருமிதம்  முகத்தில தெரிய என்ன பேப்பரில போட்டிருக்கோ மீண்டும் கேள்விக்கணை. இல்ல அப்பா என்ர friend family யோட ரெண்டு நாளைக்கு முதல் Australia வில இருந்து வந்து நிக்கினம். அவா text பண்ணியிருக்கிறா அங்க வாள் வெட்டு நடக்குதாம் தாங்கள் ஐஞ்சு   மணிக்கு பிறகு வெளியால போறதில்லையாம், சரியான பயமாம். சொல்லி முடித்துவிட்டு பயபீதி தெரிய என்னைப் பார்க்கிறாள். பெரிய மகளுக்கு தான் போட்ட Travel plan பிளைக்கப் போகுதெண்ட கவலை.  எனக்கோ பழைய ஞாபகங்கள் .


தமிழ் சினிமா

ப. பாண்டி


இவரெல்லாம் நடிகரா என்ற காலம் மாறி, இந்திய சினிமாவையே கலக்கி, பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்தவர் தனுஷ். ஒரு நடிகராக தன் திறமையை மறைத்துக்கொள்ளாமல் கவிஞர், பாடகர் என பல அவதாரங்களில் தனுஷின் அப்பா, அண்ணன் போலவே தற்போது இவரும் பவர் பாண்டி மூலம் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். நடிகர், கவிஞர், பாடகரில் வெற்றியை சுவைத்த தனுஷ் இயக்குனராகவும் வெற்றியை சுவைத்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

வாழ்க்கையில் எப்போதும் மனைவி, குழந்தை பிறகு அவர்கள் குழந்தை என அவர்களுக்காகவே தான் நம் வாழ்க்கை சுழல்கிறது, நமக்காக எத்தனை பேர் வாழ்கிறோம், அப்படி வாழ ராஜ்கிரண் முடிவு செய்தால் எப்படியிருக்கும்? இது தான் பவர் பாண்டியின் ஒன்லைன்.
ராஜ்கிரண் பவர் பாண்டியாக சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி ஏன் அமிதாப் வரை ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி, தன் மகன் பிரச்சன்னாவை நன்றாக வளர்க்க, அவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகின்றார்.
அதன் பிறகு ராஜ்கிரணை வீட்டில் ஒரு வாட்ச்மேன் போல் தான் நடத்துகின்றனர், அவரும் பேரன், பேத்தி மேல் இருக்கும் அன்பினால் பொறுத்து, பொறுத்து செல்கின்றார்.
ஒரு கட்டத்தில் தனக்கான வாழ்க்கையை தான் வாழவேண்டும் என்று ஒரு பைக் ரைட் செல்ல, அங்கு தான் தன் முதல் காதலியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர, பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் எமோஷ்னலாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் தனுஷ்.

படத்தை பற்றிய அலசல்

ராஜ்கிரணுக்கு எத்தனை விருதுகளை வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்கலாம், தன் மகனுக்காக அத்தனை தியாகங்களை செய்து, பின் அவர் வீட்டில் அவருடைய கட்டுப்பாட்டில் சுதந்திரமாக ஏதும் செய்ய முடியாமல் பேரன், பேத்தி தான் உலகம் என வாழும் இடத்திலும் சரி, எனக்கு சுதந்திரம் வேண்டும் என சரக்கு அடித்துவிட்டு மகனிடம் கோபப்படும் இடத்திலும் சரி இன்றைய பல நடிகர்களை தூக்கி சாப்பிடுகின்றார் ராஜ்கிரண்.
அதிலும் குறிப்பாக பல நாட்கள் வீட்டில் இருந்து Bore அடித்து சினிமா ஷுட்டிங் போக, அங்கு அவரை ஒரு கடவுள் போல் அத்தனை ஸ்டண்ட் கலைஞர்களும் பார்க்க, அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாம் பைட் மாஸ்டர்கள் மீதும் காதல் வரவைக்கும்.
பிரசன்னா, சாயாசிங், சில நேரம் வந்து செல்லும் டிடி, கௌதம் மேனன், பாலாஜி மோகன், ரோபோ ஷங்கர், ராஜ்கிரணின் பேரன், பேத்தி இரண்டு குட்டிஸ் வரை அத்தனை யதார்த்தமாக கலக்கியுள்ளனர். ரேவதி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில். அத்தனை வருடம் கடந்தும் காதலை மறைக்க முடியாமல் அவர் ராஜ்கிரணிடம் காட்டும் வெட்கம் ரசிக்க வைக்கின்றது.
‘வாழ்க்கையில் வேலை, வேலையில்லாதவன் என்பதெல்லாம் சும்மா..வெட்டியாக இருப்பதே நிரந்தரம்’, ‘காதல் கடவுள் கொடுத்ததோ, நாமே அமைத்துக்கொண்டதோ ஆனால், ரிசல்ட் ஒன்று தான்’, ‘நம்ம குழந்தைகள் தான் வாழ்க்கை என்று இருக்கின்றோம், ஆனால், அவர்களின் வாழ்க்கை நாம் இல்லையே’ என பல இடங்களில் அப்லாஸ் அள்ளுகின்றார் இயக்குனர் தனுஷ்.
ஷான் ரோல்டனின் இசையில் அத்தனை ரம்மியம், பவர் பாண்டி சட்டையை மடித்துவிடும் போது வரும் மாஸ் இசையாக இருந்தாலும், அதே பவர் பாண்டி ரொமான்ஸ் செய்யும் போது வரும் கிளாஸ் இசையாக இருந்தாலும் கலக்கியுள்ளார் பின்னணி இசையில். வேல்ராஜின் ஒளிப்பதிவும் அத்தனை யதார்த்தமாக நம்மை ஒன்ற வைக்கின்றது.
படம் இத்தனை யதார்த்தமாக இருந்தாலும், காமெடி என்று நினைத்தார்களா? இல்லை பைட் மாஸ்டர் என்பதால் அப்படி சண்டைக்காட்சிகளை வைத்தார்களா தெரியவில்லை, சண்டைக்காட்சிகள் கொஞ்சம் யதார்த்தம் விலகியே உள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, குறிப்பாக ராஜ்கிரண் - ரேவதி ரொமான்ஸ் காட்சிகள். மேலும் படத்தின் வசனங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் அப்பா, அம்மாக்களை கவணிக்காத பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்படியான பல காட்சிகள்.
தனுஷ் - மடோனா சிறுவயது ராஜ்கிரண், ரேவதியாக வருகின்றனர், ப்ளாஷ்பேக் 1960களின் நடப்பது போல் உள்ளது, அதைக்கூட அத்தனை அழகாக நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர்.

பல்ப்ஸ்
பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் டீம் சபாஷ்.
மடோனா கொஞ்சம் மதுரை பொண்ணாக செட் ஆகாதது போல் ஒரு ஃபீலீங்.
அத்தனை வருடம் தொலைந்து போன காதலியை ஒரு செகண்டில் பேஸ்புக்கில் கண்டுப்பிடிப்பது எல்லாம் இந்த ஜெனேரஷன் தனுஷ் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
மொத்தத்தில் படத்தை பார்த்த அனைவருக்குமே அவர் அவர்களின் தாய், தந்தையின் மீது ஒருபடி மேலே மரியாதை வரவைக்கும், அவர்கள் உலகங்களை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முயற்சி செய்வார்கள், தனுஷ் புதிதாக தொடுவதெல்லாம் ஹிட்டு தான்.
Direction:
Production:
Music:

நன்றி  CineUlagam