மரண அறிவித்தல்இணுவில் மேற்கு - இந்திராணி ஞானதுரை

இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஓக்லாந்து, நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இந்திராணி ஞானதுரை 07/01/12 சனிக்கிழமை இரவு ஒக்லாந்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலம்சென்ற அம்பலவாணர் குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், அம்பலவாணர் ஞானதுரை (இளைபாறிய ஆசிரியர், இணுவில் இந்துக்கல்லூரி, - தற்போது ஒக்லாந்து) அவர்களின் அன்பு மனைவியும்

அருந்தயாபரன் (அருண் – ஒக்லாந்து ), தயாநந்தி (சிட்னி), கிருபாநந்தி (பிரிஸ்பேன்), கலைச்செல்வி (ஒக்லாந்து), விவேகானந்தி (ஒக்லாந்து), மயூரானந்தி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தயாராரும், கீதா (ஒக்லாந்து) திருநந்தகுமார் (சிட்னி), கந்தராஜா (பிரிஸ்பேன்), உதயகுமாரன், (ஒக்லாந்து) கந்தகுமார் (ஒக்லாந்து) சுரேஸ் (சிட்னி) மற்றும் கொழும்பை வதிவிடமாகக் கொண்ட மிதுலா, மிருணன், நித்திலா ஆகியோரின், பாசமிகு மாமியாரும்

வேதகி, அபிராமி, ஆதித்தன், பிரணவன், பிரணோஜன்,காருண்யா, கபிலன், துளசி, சாய்ராம், கீர்த்திகன், மைதிலி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

பாலச்சந்திரன் (இணுவில்), லதாராணி (இணுவில்) ரவிச்சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சிவேஸ்வரதம்பி (இணுவில்), சித்திரா (கொழும்பு) காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற பவளரத்தினம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11-01-2012 புதன்கிழமை மாலை 5 மணிக்கு New Zealand Howick இல் அமைந்துள்ள மலர்ச்சாலையில் நடைபெற்று தொடர்ந்து தகனம் இடம்பெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

Gnanathurai - +64 9 271 2222

Ananthy - +64 9 271 2222

Arun - +64 9 277 4596

Selvi - + 64 9 272 2159

Kanthan - 07 3711 4457

Suresh – 0412 448 220

Thirunanthakumar – 02 9836 2086

ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேசர் சிவன் கோவிலில் 8ம் திகதி நடைபெற்ற தீர்த்தத்திருவிழா

படபிடிப்பு ஞானி


ஸ்ரீ வேங்கடேஷ்வரர் சிவன் தேர்த் திருவிழா 7 ம் திகதி

.
கேலன்ச்பெர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா சென்ற சனிக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது .பக்தர்கள் நிறைந்த விழாவாக இருந்ததுடன் வடம் பிடிப்பதற்காக பக்தர்கள் நிறைந்து காணப்பட்டார்கள் . நாதஸ்வர  தவில் கச்சேரி , நடனம் என்பனவும்  இடம்பெற்றது . தேர்த்திருவிழாவின் படங்களை கீழே காணலாம் .


                                                                                                                  படப்பிடிப்பு ஞானி      


பழகிய நிலவும் பழைய கிழவியும் -அகிலன்


 
.
அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த நிலவா?
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன.
ம் அதேதான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.
அப்ப…..!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?
விடைதரமுடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின….


இலங்கைச் செய்திகள்


வேண்டாம் கையூட்டு .

திருகோணமலையில் பிரபல வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு (பட இணைப்பு)வேண்டாம் கையூட்டு

Friday, 30 December 2011

இலஞ்சம்' அல்லது "கையூட்டு' தெற்காசிய மக்களின்அன்றாட வாழ்க்கையில் மிக மோசமாக ஊடுருவி இருக்கும் தகவலை அண்மையில் ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர்நாஷனல் அமைப்பு வெளியிட்டிருந்தது .

எம்மில் பெரும்பாலானோர் இந்த சட்ட விரோத குற்றச் செயல் குறித்து நிச்சயம் அறிந்திருக்கக் கூடும். ஆனால் இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய 6 தெற்காசிய நாடுகளில் சாதாரண விடயங்களை நிறைவேற்றுவதற்குக் கூட இலஞ்சம் கொடுக்கப்படுன்றது என்ற அதிர்ச்சித் தகவலை ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர் நாஷனல் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கும்

வெள்ளிக்கிழமை

.பசிபிக் சமுத்திரத்தில் சமோவா என்ற மிகச் சின்னத் தீவு ஒன்று இருக்கிறது. சர்வதேச தேதிக் கோடு இதற்கு மிகச் சமீபமாகச் செல்கிறது. கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் கோட்டில் இது அமெரிக்கா பக்கம் இருக்கிறது. இந்தக் கோட்டை தாண்டும்போது ஒரு நாள் கூடுகிறது; அல்லது குறைகிறது. அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் ஒருவர் இந்தக் கோட்டை தாண்டியதும் ஒரு முழு நாளை கடந்துவிடுவார்.

இந்த ஆண்டு, 2011 டிசெம்பர் 29 வியாழக்கிழமை சர்வதேச தேதிக்கோட்டை மாற்றி வரைகிறார்கள்.  சமோவா அவுஸ்திரேலியா பக்கம் போய்விடும். டிசெம்பர் 29, வியாழக்கிழமை சமோவாவில் நடு இரவு வந்து அது விடியும்போது டிசெம்பர் 31, சனிக்கிழமையாக இருக்கும். ஒரு முழு நாள் மறைந்துபோகும்.

180,000 பேர் சனத்தொகை கொண்ட சமோவாவில் அன்று ஒருவரும் பிறக்க மாட்டார்கள். இறக்க மாட்டார்கள். பள்ளிக்கூடம் இல்லை. அலுவலகம் இல்லை. சினிமா இல்லை. விளையாட்டு இல்லை. தூக்கம் இல்லை. சமையல் இல்லை. சாப்பாடு இல்லை. வெள்ளிக்கிழமையே இல்லை. உலகத்து நாடுகள் எல்லாம் 365 நாட்களைக் கொண்டாட இந்த வருடம் சமோவாவில் மட்டும் 364 நாட்கள்தான்.

Nantri:Amuthu.net

’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’ - M.A.சுசீலா

.
விளிம்புநிலை மக்களைத் தங்களின் சுயநலத்துக்காகக் காவு கொடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஒரு சாட்டையடியாக அமைந்திருப்பது வங்கமொழி இலக்கியத்தின் புகழ் மிக்க படைப்பாளியும்,சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவியின் குந்தியும் நிஷாதப் பெண்ணும்என்னும் மீட்டுருவாக்கச் சிறுகதை. இன்றைய சமூகத் தளத்திலும் -கூடங்குளம் முதல் முல்லைப் பெரியாறு வரை...பல வகையான அர்த்தப் பரிமாணங்களிலும் வைத்து வாசிக்க இடம் தரும் அந்தக் கதை குறித்துச் சில பகிர்வுகள்...

பாரதப் போர் முடிந்த பின்பு வானப் பிரஸ்தவனவாசம் மேற்கொள்ளும் திருதிராஷ்டிரனுக்கும்,காந்தாரிக்கும் உதவியாகத் தானும் உடன் சென்று காட்டில் - பர்ணசாலையில் அவர்களோடு தங்கிப் பணிவிடை செய்கிறாள் குந்தி.தன் மகன்களால் காந்தாரியின் பிள்ளைகள் ஒட்டு மொத்தமாகக் கொன்றழிக்கப்பட்ட குற்ற உணர்வின் உறுத்தலும் அவளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.காந்தாரியோ வருவதை ஏற்பகும் பக்குவம் கொண்டவளாக...குந்திக்கும் கூட ஆறுதல் சொல்லித் தேற்றுபவளாக-வரப் போகும் மரணத்தை அமைதியோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிதானத்தோடு இருக்கிறாள்.குந்திக்கு.. எப்போதுமே ஒரு பதற்றம்...தான் செய்த தவறுகளை யாருமற்ற அந்தத் தனிமைச் சூழலில் நினைத்துப் பார்க்கும்போது அவள் நெஞ்சே அவளைத் தீயாகச் சுடுகிறது.

அன்றாடச் சமையலுக்கும் பூசைக்கும் தேவையான மரக்குச்சிகள் மற்றும் பிற பொருட்களைச் சேகரிக்க அந்தக் காட்டுக்குள் செல்லும் வேளைகளில் அங்கு நடமாடும் ’நிஷாத’ப் பெண்கள் பலரைக் காண்கிறாள் குந்தி.அந்த மலைக் காட்டையே தங்கள் வாழிடமாகக் கொண்டிருக்கும் காட்டுவாசிப் பெண்களான அவர்களை நகர நாகரிகங்கள் அதிகம் தீண்டியிருக்கவில்லை. மலையில் விறகு பொறுக்கித் தலைச் சுமையாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போகும் பல நடுத்தர வயது நிஷாதப் பெண்களின் உறுதியான உடல்வாகு, பேச்சு சிரிப்பு,இயற்கையின் மக்களாய் இயைந்து போகும் லாவகம்-இதெல்லாம் அரண்மனைக் கிளியாக மட்டுமே வாழ்ந்து ஆரண்ய வாழ்வை ஒரு சுமையாக-தண்டனை போலவே முன்பு எதிர்கொண்டிருந்த குந்தியை மலைக்க வைத்து வியப்பூட்டுகின்றன. ஆனாலும் அவர்களோடு அவள் எதுவும் பேசுவதில்லை.அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்து கொள்ள விரும்பியதுமில்லை.அரண்மனையில் பணி விடைசெய்த பெண்களிடமிருந்தே சற்று விலகியிருந்து பழகிய அரச குடியல்லவா அவளுடையது? அவர்களோடு உரையாடுவதில் அவளுக்கே உரித்தான ஓர் உயர்குடித் தயக்கம்..

எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும்!

.
2012 ஆம் ஆண்டு இனிதே மலர்ந்திருக்கிறது. நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் மற்றும் என்னை நேசிக்கும் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

புத்தாண்டு மலரப் போகும் தருணத்தில் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த பரிசு மிகுந்த ஆனந்தத்தைத் தந்திருக்கிறது. சென்ற வருடம் அதிக வேலைப் பளுவின் காரணமாக எனதுசிறுகதைகளுக்கான வலைத் தளத்தில் மூன்று சிறுகதைகளை மாத்திரமே பதிவிட முடிந்தது. எழுத்தாளர் மாதவராஜ் அறிவித்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற வம்சி சிறுகதைப் போட்டி 2011 க்கு அவற்றையே கொடுத்திருந்தேன். போட்டிக்கு மொத்தமாக 373 சிறுகதைகள்வந்திருந்ததைக் கண்டேன். எனவே நிச்சயமாக பரிசை எதிர்பார்த்திருக்கவேயில்லை. 

நேற்று வந்திருந்த மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் வாழ்த்துக்களின் மூலமே சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட வம்சி சிறுகதைப் போட்டியின் முதல் பரிசு எனது 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' சிறுகதைக்குக் கிடைத்திருக்கிறதென்பதை முதலில் அறிந்துகொண்டேன். இப் பரிசு பெரும் ஊக்கத்தைத் தந்திருப்பதோடு கூடவே நல்ல படைப்புக்களை மாத்திரமே தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனும் பெரும் பொறுப்பையும் இனிய சுமையாய் என் மீது சுமத்தியிருக்கிறது.

இரு வேறு நகரங்களின் கதை - வெங்கட் சாமிநாதன்


.
கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.
சரமக் கவிகள் என்கிறார் அகிலன் தன் கவிதைகளை. அவர் பத்தாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள் பதுங்கு குழி நாட்கள்- ஐப் பேசுபவையாகத் தான் தந்திருக்கிறார். இப்படித் தான் ஒரு இளம் கவிஞனின் வாழ்க்கை அனுபவங்கள் இருக்கிற தென்றால் அங்கு மனம் குதூகலித்துக் கவிதை பாட, முகம் சிரித்துத் தன் வாழ்க்கையைக் கொண்டாட, சக மனிதனிடம் மலர்ந்த முகம் காட்ட என்ன இருக்கக் கூடும்?.


அவு‌ஸ்திரே‌லியா அபார வெற்றி: இந்திய அணி ஒரு இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 68 ஓட்டங்களால் தோல்வி
6/1/2012

சி‌ட்‌னி‌யி‌ல் நடைபெற்ற அவு‌ஸ்திரே‌லியாவு‌க்கு எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌‌திய அ‌ணி ஒரு இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 68 ஓட்டங்க‌ள் வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ல்‌வியை தழு‌‌வியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இ‌ந்‌திய அ‌ணி முத‌லி‌ல் துடுப்பெடுத்தாடி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ச‌ச்‌சி‌ன் டோ‌னியை த‌விர ம‌ற்ற ‌‌வீர‌ர்க‌ள் அனைவரு‌‌ம் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

முதன் முதலாக அப்பிளின் தந்தைக்கு ஒரு சிலை

 .

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரும், தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை படைத்து ஜாம்பவானாகத் திகழ்ந்தவருமான ஸ்டீவ் ஜொப்ஸ் புற்று நோயுடன் கடந்த பல மாதங்களாகப் போராடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

தொழில்நுட்ப உலகிற்கு இது மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகின்றது.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் முகமாக ஸ்டீவ் ஜொப்ஸின் உருவச் சிலையொன்று புடாபெஸ்ட் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்ட்டிலுள்ள சயன்ஸ் பார்க் ஒன்றிலேயே இச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஸ்டீவ் ஜொப்ஸுக்காக முதன் முதலாகத் திறந்து வைக்கப்பட்ட சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கிராபி சொப்ட் என்ற நிறுவனமே இச்சிலையைத் திறந்துவைத்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு ஆரம்பகாலத்தில் ஸ்டீவ் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெண்கலத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை 6.5 அடி உயரம்கொண்டதுடன் ஹங்கேரிய நாட்டு சிற்பி ஹேர்னோ டொத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸிற்கென இதுவரை சிலை எதுவும் திறந்து வைக்கவில்லை.

இனிமேலும் திறந்துவைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதிலும் ஸ்டீவ் ஜொப்ஸை மறந்து விட்டதா அப்பிள் உலகச் செய்திகள்

ஈரானுக்கு மீண்டும் அடி: முகங்கொடுக்க தயாரென ஈரான் அறிவிப்பு
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு: 25 பேர் பலி

ஈரானுக்கு மீண்டும் அடி: முகங்கொடுக்க தயாரென ஈரான் அறிவிப்பு

5/1/2012
ஐரோப்பிய நாடுகளுக்கான ஈரானின் எண்ணெய் இறக்குமதி மீது ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தடை விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தடையானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட போதும் படிப்படியாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஐரோப்பிய இராஜதந்திரிகள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாகவே உலக எண்ணெய் விலை அடிக்கடி தளம்பல் அடைந்ததாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஈரான் நாளொன்றுக்கு 450,000 பெரல்கள் மசகு எண்ணெயினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3) வித்யாசாகர்!

.
அந்தப் பழைய புத்தகம் விற்பவனின் மனைவி அவருடைய அந்த தாய்வீடு கவிதையைக் கேட்டு அழுதுக் கொண்டேப் போக, அவனும் மிக வருத்தமுற்றான்.

அந்த கவிதையிருந்த அந்த புத்தகத்தை தனக்கே கேட்டு வாங்கிக் கொண்டான். அவரை கையெழுத்துப் போட்டு இரண்டு வரி அதில் எழுதிக் கொடுங்கள் ஐயா என்று பணிவுடன் கேட்டும்கொண்டான்.

அவருக்கு மனது சற்று லேசானது. தன்னை பிறர் மதிப்பதென்பது ஒரு கம்பீரம். பிறர் மதிக்க நடத்தல் என்பது எப்பவுமே தனக்குள் ஓர் உயர்வான தோற்றத்தை வளர்க்கிறது. அதோடு தன்னை பலப்படுத்தும் ஒரு திட உணர்வையும், அதீத தைரியத்தையும், நம்பிக்கையையும் கூட தனக்குள் பீறிட வைக்கிறது அந்த பிறர் மெச்சும் சொல்.

ஆனால் என்னதான் பிறர் மெச்சினாலும், அதைக் கொண்டு தன்னை கர்வப் படுத்திக் கொள்ளாதளவு நமக்கான ஒரு நன்னடத்தையும் தேவையாக இருந்தது. அதை ஜானகிராமன் நிறைய வைத்திருந்தார். எல்லாம் நன்மைக்கே எனுமொரு எண்ணம் மனதில் நிறைந்து ஊறியது அவருக்கு.

ஒரு நிறைவுற்ற மனநிலையோடு அன்பாக இரண்டு வார்த்தையை அவனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு “நம் சமுகம் யாரையும் இருக்கும்போது மதிப்பாகப் பார்ப்பதில்லை என்பது தான் நம் பெருங் குறை தம்பி. நான்கு பேர் சேர்ந்து ஒரு விசயத்தை மெச்சினால்தான் அதை என்னவென்றே உள்சென்றுப் பார்ப்பேனென்றால்’ எப்படி அந்த விசயமானது மேன்மைப் பெரும்? அதுபோன்ற செயல் எப்படி ஒரு படைப்பாளிகளுக்கு ஊக்கத்தைத் தரும்? எனக்கென்ன விருது வாங்கி வீட்டில் குவிக்க ஆசையா? அதுக்காகவா நானென் ஒருவேளை சோற்றைக் கூட நிறுத்திவிட்டுக் இத்தனை வருடமாக காத்துநிற்கிறேன்? அதற்கா வருடந்தோறும் என் புத்தகங்களையெல்லாம் விருதிற்கென அனுப்பிவைக்கிறேன்? அல்லது நாலுபேர் பார்க்கையில் புகழ்ந்துப் பேசுவார்கள் என்றெண்ணி செய்கிறேனா?”

அடுத்து என்ன? - அ.முத்துலிங்கம்


.
இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பாகிஸ்தானில் வேலை செய்த காலத்தில் முதன்முதலாக செல்பேசி அங்கே அறிமுகப்படுத்தப் பட்டது. ஒன்றின் விலை ஆயிரம் டொலருக்கு மேலே. என்னிடம் ஒன்றிருந்தது. இடது கையால் தூக்க முடியாது, அத்தனை பாரம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை மின்னேற்ற வேண்டும். அப்படியும் பேசும்போது அடிக்கடி தொடர்பு அறுந்துவிடும். சில இடங்களில் இருந்து எவ்வளவு முயன்றாலும் தொடர்பு கிடைக்காது. அது ஒரு காலம்.

அதற்குப் பிறகு பல செல்பேசிகள் வந்து போய்விட்டன. இரண்டு செல்பேசிகளை நான் தொலைத்திருக்கிறேன். என் நண்பர் ஒருவர் ஐந்து செல்பேசிகளை தொலைத்திருக்கிறார். ஏனென்றால் அவை தொலைப்பதற்கு வசதியாகத்தான் செய்யப்படுகின்றன. சமீபத்தில் நான் தொலைந்துபோன ஒரு செல்பேசியைக் கண்டுபிடித்து அதன் சொந்தக்காரரிடம் சேர்ப்பித்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் பிளாக்பெர்ரி செல்பேசி ஒன்று வாங்கினேன். அப்பொழுதே முடிவு எடுத்தாகிவிட்டது, இனிமேல் செல்பேசியை மாற்றுவதில்லை என்று. எனக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அதில் இருந்தன. முக்கியமாக பயணம் செய்யும்போது அது என்னை ஒருமுறையும் கைவிட்டதில்லை. உடனுக்குடன் மின்னஞ்சல்கள் பார்த்து அந்தக் கணமே பதில் எழுதலாம். குறுஞ்செய்திகள் அனுப்பலாம். நாட்காட்டி, நாட்குறிப்புகள், புகைப்படம் எடுத்து சேமிப்பது, அனுப்புவது ஆகிய. சகல வசதிகளும் ஏற்கனவே இருந்ததால் ஐபோன் வந்தபோது அசைக்க முடியாத முடிவிலிருந்தேன். நண்பர்கள் ஐபோன் புகழ் பாடி என்னை மாற்ற முயன்றாலும் நான் மாறுவதாக இல்லை.

தமிழ் சினிமா

விமர்சனம்

மௌனகுரு
திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்..

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர் தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது..

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்?

ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..

இப்போ ஹீரோதான் அந்த வீடியோ கேசட்டை எடுத்த ஆள்னு தவறா புரிஞ்சுட்டு ஹீரோ & வேற 2 பசங்களை காட்டுக்குள்ள அந்த இன்ஸ்பெக்டர் குரூப் கடத்திட்டு வந்து என்கவுண்ட்டர் டிராமால போட்டுத்தள்ளறப்ப வீடியோ வெச்சிருக்கற ஆள் வேறன்னு தெரிய வருது.. ஆனா மேட்டர் இவங்களுக்கு த்தெரிஞ்சதால போட வேண்டிய சூழல்.. ஹீரோ எப்படியோ எஸ் ஆகிடறார். இங்கே இடைவேளை..

ஹீரோவை ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்த்து அவனை பைத்தியம்னு பட்டம் கட்டி விட்றாங்க..அவர் எப்படி அதுல இருந்து தப்பி வர்றார்?ங்கறது மிச்ச கதை.. இந்த கேசை டீல் பண்ற இன்னொரு லேடி இன்ஸ்பெகடர் அந்த 4 போலீஸ்தான் குற்றவாளிகள்னு கண்டு பிடிக்கறார்.. இடைவேளை வரை செம விறு விறுப்பு.. பின் பாதியில் லேசான தொய்வு இருந்தாலும் அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்..

ஹீரோ உதயன்க்கு நடிப்பு வர்லைன்னாலும் கேரக்டரே அமைதி டைப் என்பது மாதிரி காட்டி நல்லா சமாளிக்கிறார்.. இந்தப்படத்துக்கு ஒரு அஜித்தோ, விஜய்யோ ஹீரோ ஆகி இருந்தால் படம் எங்கேயோ போய் இருக்கும்..

ஹீரோயின் இனியா இதுல மாடர்ன் கேர்ளா வர்றார்.. வாகை சூடவா படத்துல செமயா இருந்தார், இதுல நெற்றில பொட்டு வைக்காததாலோ என்னவோ அவ்வளவா எடுபடலை.. ஓவர் மேக்கப் வேற. இப்ப வர்ற படங்கள்ல ஹீரோயினுக்கு பொட்டு வைக்க கூடாதுன்னு ஏதாவது சங்கல்பம் வெச்சிருப்பாங்க போல.. மகா ஜனங்களே.. பொண்ணுங்க பொட்டு வைக்கலைன்னா அது மாடர்ன் கேர்ள் ஆகிடாது. அது அழகு தரும்..

அண்ணிக்கு தெரியாமல் ஹீரோ , ஹீரோயின் இருவரும் காதல் கொள்ளூம் இடங்கள் கல கல.. ஹீரோயினை விட அண்ணி செம ஃபிகர் ஹி ஹி ..வில்லனாக வரும் ஜான் விஜய் ( வ குவாட்டர் கட்டிங்க் காமெடி பார்ட்டி) அசத்தலான நடிப்பு, பாடி லாங்குவேஜ். அவர் கூடவே வரும் 3 போலீஸ்களும் நிஜமாவே நேரில் பார்ப்பது போன்ற சம்பவங்களை கண் முன் நிறுத்தும் நடிப்பு.. சபாஷ்..

லேடி இன்ஸ்பெக்டராக வரும் உமா ரியாஸ் அமைதியான நடிப்பு. அவர் இன்வெஸ்டிகேஷன் செய்வது மிக யதார்த்தம். ஆனால் அவர் ஏன் 6 மாத கர்ப்பிணியாக வர்றார்? படத்தின் க்தைக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஏன்னா அவர் வயிற்றை தள்ளிட்டு அங்கேயும், இங்கேயும் அலைஞ்சு இன்வெஸ்டிகேஷன் பண்றது மனசுக்கு கஷ்டமா இருக்கு..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயிஸம் எதையும் காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் காட்டியது பெரிய பிளஸ். ஏன்னா தயாரிப்பே ஹீரோவோட அப்பாதான், அதனால ஓப்பனிங்க், ஃபைட், ஹீரோ துதி பாடும் பாட்டு எதும் இல்லாம யதார்த்தமான ஹீரோவா காட்டுனது முதல் பிளஸ்

2. ஒரு நாவல் படிக்கிற மாதிரி மிக தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதை.. சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைக்கதை தெளிவை நான் பார்க்கலை. வெல்டன் டைரக்டர்..

3. யாரிவன் யாரிவன் பாட்டு, ஒரு டூயட் பாட்டு ரெண்டிலும் படமாக்கப்பட்ட அழகிய காட்சி அமைப்புகள் மனதை விட்டு அகலாதவை

4. படத்தின் கதை அனுமதித்தும் ஒரு இடத்திக் கூட விரசமான காட்சியோ, கண்ணியக்குறைவான சம்பவமோ இல்லை. பெண்கள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படி ஒரு த்ரில்லர் மூவியை தருவது மிக கடினம்.. செம 5. படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிக யதார்த்தமான நடிப்பை தந்தது, அவ்ர்களை வேலை வாங்கியது எல்லாமே செம

6. பின்னணி இசை கன கச்சிதம்.. டெம்ப்போ ஏற்ற வேண்டிய இடங்களில் ஏற்றி , பேக் கிரவுண்டில் சைலண்ட் மோடு தேவைப்படும் இடங்களில் அமைதி என நீட் டெக்னீஷியன் ஒர்க்.. ஒளிப்பதிவும் சூப்பர்..

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. படத்துல ஹீரோ மெண்டல் ஆவது , மெண்டல் ஹாஸ்பிடல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்குது.. அதை சரி செய்ய அமரர் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே கதை யுக்தியை பயன் படுத்தி இருக்கலாம்.அதாவது ஒப்பனிங்க்ல முதல்ல ஹீரோவை மெண்டலா காட்டி அப்புறம் ஃபிளாஸ்பேக் சீன்ல கதை சொல்லி இருக்கலாம்..

2. கார் ஆக்சிடெண்ட்ல உயிருக்கு போராடற ஆளை இன்ஸ்பெக்டர் அவனோட பின் மண்டைல தாக்கி கொல்றார். அதுக்குப்பிறகு அந்த கேஸ் இன்வெஸ்டிகேஷன் லேடி இன்ஸ்பெக்டர் உமா கிட்டே வருது.. ஓகே, ஆனா அவர் ஏன் அவசரப்பட்டு அவனை பின்னால தாக்கனும்?அவனே சீரியஸ்சா இருக்கான்.. ஈசியா முன்னால அடிச்சு கொன்னிருக்கலாமே..

3. இன்ஸ்பெக்டரின் சின்ன வீடு ஒரு ஹோட்டல்ல தன் ஆளுங்களோட டிஸ்கஸ் பண்றாங்க, அங்கேதான் வீடியோ கேமரா பறி போகுது.. இந்த மாதிரி சீக்ரெட் மேட்டர் பேசறவங்க ஆள் நடமாட்டம் இல்லாத ஹை வேஸ் ரோட் ஒதுக்குப்புறத்துலயோ, ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்லயோதான் பேசுவாங்க.. ???

4. இன்ஸ்பெக்டர் தன் சின்ன வீட்டை அடிச்சு காயப்படுத்தி தள்ளி விடறப்ப எதிர்பாராத விதமா இறந்துடறாங்க.. ஆல்ரெடி முகம், உடம்புல காயம் உள்ள ஆளை எப்படி தூக்குல தொங்குற மாதிரி செட் பண்ணி வைக்க முடியும்?காயமே இல்லாம தலையணைல முகத்தை அமுக்கி கொலை செஞ்சாதானே அப்படி செய்ய முடியும்? முறைப்படி இந்த சிச்சுவேஷன்ல மொட்டை மாடில இருந்து கீழே குதிச்ச மாதிரி செட் பண்ணீனாத்தானே அந்த காயங்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும்?

5. ஏதாவது பிரச்சனைன்னா, அல்லது கொலையை நேர்ல பார்த்த சாட்சின்னா உடனே போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டர் ஹீரோவை மட்டும் ஏன் போடாம மெண்டல் ஆக்க தலையை சுத்தி மூக்கை தொடறார்? டப்னு சூட் செஞ்சா மேட்டர் ஓவர்..

6. விறுவிறுப்பா போகும் திரைக்கதைல அந்த சோகப்பாடல் எதுக்கு? இந்தப்படத்துல காதல் ஊறுகாய் மாதிரிதானே?

வித்தியாசமான கதையை ரசிப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

ஹீரோ வால்யூ இல்லாததால் எதிர்பார்த்த அளவு படம் ரீச் ஆகலைன்னாலும் மவுத்டாக் மூலமா ஹிட் ஆக வாய்ப்பு உண்டு.


நன்றி குசும்பு