மரண அறிவித்தல்

.
திருமதி சவரியம்மா மார்க்கு

மறைவு 26 .08 .2014 

திருமதி சவரியம்மா மார்க்கு அவர்கள் 26.8.2014 அன்று மெல்பெர்னில் இறைபதம் எய்தினார்.
இவர் காலஞ்சென்ற இம்மானுவேல் மார்க்கு  அவர்களின் அருமை மனைவியும், திரு. திருமதி. ஆறுமுகம் அம்பலம் - தங்கம்மா அவர்களின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, அன்னம்மா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
மாலினி (Norway), கேசினி (Canada), பவானி (Australia), பிருந்தா (U.K), றோகான் (Norway), யூஐின் (Australia), செல்வகுமார் (Australia) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்
மகேந்திரன் (Norway), அக்லஸ் (Canada), அன்டன் (Australia), குசலகுமார் (U.K), முகுந்தி (Norway), சித்திரா (Australia), அஞ்சலி (Australia) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்
Janani, Gaya, Sajithan, Mark, Noel, Damian, Divya, Stephen, Sylvia, Aaron, Olivia, Arun, Priya ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
பூதவுடல் இறுதி அஞ்சலி - ஞாயிற்றுக்கிழமை 31.08.2014 Le Pine Funerals 513 Greensborough Rd,  Greensborough ,y; 4.00 -6.00 PM
இறுதி ஆராதனை - திங்கட்கிழமை 01.09.2014 2.00 St Francis of Assisi Church, Childs Rd Millpark   இல் ஒப்புக்கொடுக்கப்பட்டும்.
நல்லடக்கம் - பிற்பகல் 3.30 மணிக்கு Northern Memorial Park, Box Forest Rd, Fawkner Vic 3060 இல் நடைபெறும்.
தொடர்புகளுக்கு Bertrand +61 417 338 941 Bhavani +61 403 564 149 Eugen +61 421 277 668 Email: marcoufamily1932@gmail.com

முகில் கலைந்த பௌர்ணமி

.

முகில் மறைத்த
பௌர்ணமியாக
முழுக்காதலை
மறைக்கின்றாய்

முகம் காணும்
பொழுதெல்லாம்
உன் அகம் காண
விளைகின்றேன்


முகம் காட்டும்
பௌர்ணமியே
அகம் ஒளித்து ஏன்?
நடிக்கின்றாய்

கலங்காதே சொல்
பெண் நிலவே
காலம் தேய் பிறையாய்
கரையிதிங்கே

முகில் கலைக்கும்
காற்றாக
என் முகவாட்டம்
உனை குலைக்கலையா?

முகில் கலைந்த
பௌர்ணமியாய்
உன் முழுக்காதல்
சொல்லாயா?

nantripaarvaiyil.com/

வசந்த கால கோலங்கள் Sep 1 - செ.பாஸ்கரன்

.

ஞாயிறு காலை படுக்கையில் இருந்து கண் விழிக்கிறேன் படுக்கை அறை கதிரவனின் தழுவல்களால் நிறைந்து வெளிச்சமாக இருக்கிறது. சின்னக் குருவிகள் தொடக்கம் குக்கபரா குருவிகளின் ஆரவாரம். வெவ்வேறு விதமான சப்த ஜாலங்கள், அந்த பறவைகளின் காதல் மொழியாக இருக்கலாம். யன்னலூடாக பார்வை வெளிச்செல்கின்றது இலைகளற்று  நின்ற மரக்கொப்புகளில் இளம் குருத்துப்பச்சை நிறம் தோன்றியிருக்கிறது . மயிர்க்கொட்டியின் உடலெங்கும் இருக்கும் மயிர்கள்போல் கொப்புகள் எங்கும் குருத்துக்கள். ஓங்கி உயர்ந்து நின்ற கமுகமரத்தின் ஓலைகள் காற்றோடு சரசமாடுகின்றது .வானத்து வெண்முகில்கள் ஒன்றையொன்று கலைத்து விளையாடி களிப்புறுகிறது.

கடந்த மூன்று நாட்களாய் மழையும் குளிரும் மாறிமாறி விரட்டியபோது யன்னல் கதவுகள் அனைத்தையும் இழுத்து மூடி அதன் மேல் தடித்த திரையும் போட்டு படுக்கையுள் பதுங்கியிருக்கும் நிலை மாறி என்ன இன்று காற்றுவந்து கேசத்தை வருடிச் செல்கிறது . எனக்கு முன்பே எழுந்துவிட்ட என்மனைவி வசந்த கால ஆரம்பத்தின் அழகு கண்டு யன்னல்களையும் கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறார். அதன் பயன் தான் நான் கண்விழிக்கும்போது கண்டதும் கேட்டதும்.

நாளை வசந்தகாலம் அது நமக்குமட்டுமல்ல பறவை ,பட்சி, மரம், செடி, கொடி எல்லாவற்றுக்குமே வருகின்ற வசந்தமல்லவா. அதுதான் இத்தனை வரவேற்பு. எழுந்து ஜன்னலருகே சென்று நிக்கிறேன் சின்னக் குருவிகள்கூட ஒன்றையொன்று கொஞ்சி விளையடிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களும் இவை எங்கிருந்தன என்மனது எண்ணத்தொடங்குகிறது. போர்வை கூட இல்லாமல் இவை எப்படி இந்த விண்டர் குளிரை தங்கியிருக்கும் . விடையில்லாத அந்த கேள்வியோடு வசந்தகாலத்தின் வருகையை எதிர்கொள்ள வெளியில் இறங்குகிறேன்..








Indian Cultural Advancement Society Australia Inc (ICASA) - Indian Dance and Music Extravaganza



.                                                                              
                                                                                          மதுரா மகாதேவ் 


Indian Cultural Advancement Society Australia Inc (ICASA) இனால்  நடாத்தப் பட்ட Indian Dance & Music Extravaganza எனும் நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் பஹாய் சென்டர் இல் தமது வெள்ளி விழாவை கொண்டாடி இருந்தார்கள். ICASA இன் ஸ்தாபகரும் உப தலைவருமான டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை அர்ரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எமது பிரதமரின் சார்பாக பிரதம விருந்தினராகMr Craig Laundy  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது உரையை ஆற்றினார்.

திருமதி தமயந்தி பால்ராஜுவின் மாணவர்களினது கண் கவர் நடனம் இடம் பெற்றது. இதில் குறிப்பாகச் சொல்லப்போனால் பல விதமான நடனங்கள் இடம் பெற்றது. அலாரிப்பு சிவனை போற்றி இடம் பெற்றது. அடுத்ததாக Jugal Bandi என்று சொல்லப் படும் கதக்கும் பரத நாட்டியமும் இணைந்த ஒரு நடனம் இடம் பெற்றது. இந்த நடனத்தை மிகவும் அழகாக நெறியாள்கை செய்திருந்தார் தமயந்தி. இதில் நடனம் ஆடிய அருணா மற்றும் ஷாந்தி மிகவும் அழகாக அந்த Jugal Bandi யை  தந்திருந்தார்கள். தொடர்ந்து கோலாட்டம், மற்றும் சல்சா நடனமும் பரத நாட்டியமும் இணைந்த ஒரு Jugal; Bandi யை வழங்கினார்கள் சுமதியும் அலெக்ஸ்சும் இணைந்து நெஞ்சினிலே நெஞ்சினிலே எனும் பாடலுக்கு. தொடர்ந்து ஜனனி பீடிளின் மாணவிகள் ஒரு பாலிவுட் நடனம் ஒன்றை மிகவும் திறம்பட ஆடி பலரது கரகோஷத்தையும் பெற்றார்கள். இந்நிகழ்ச்சியின் பிரதம ஆதரவாளர்களான St George பாங்கின் Strathfield கிளையின் மேலாளரான கீதா ஆனந்தக்ரிஷ்ணன் அவர்கள் அதிஷ்ட லாபச் சீட்டில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்களை வழங்கினார். இன் நிகழ்ச்சியை விகாந்தா நாய்டு அழகாக தொகுத்து வழங்கினார்.

சிட்னி சைவநெறி மகாநாடு 2014 இரண்டாம் நாள் கலாச்சார நிகழ்வு

.

படப் பிடிப்பு ஞானி

எழுத மறந்த குறிப்புகள் - முருகபூபதி

.
பயிர்   வளர்   மண்ணில்  உயிர்ப்புடன்   வாழும்   தம்பதியர்
தொடர்பாடல்தான்     இயந்திர  யுகத்தில்   ஆரோக்கியத்திற்கு   அவசியம்   தேவைப்படுகிறது.
                                                                                                                   

பலரதும்  வாழ்க்கை   ஏதோ   ஒருவகையில்   தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது.   எனது    வாழ்வும்   அப்படியே   சமீபத்தில்   நான்   வெளியிட்ட   எனது   சொல்ல   மறந்த  கதைகள்  நூலை  வெளியிட முன்வந்தபொழுது   அதுதொடர்பாக   நான்   வழங்கிய   வானொலி நேர்காணல்   மற்றும்   வெளியான    விமர்சனங்களையடுத்து   அவற்றை செவிமடுத்த -   கவனித்த   சில  இலக்கியவாதிகள்   எனக்கு   வாழ்த்து தெரிவித்திருந்ததுடன்    நூலின்   பிரதியும்   கேட்டிருந்தார்கள்.    அவர்களில் ஒருவர்    ஜெர்மனியில்   வதியும்   எழுத்தாளர்   ஏலையா  முருகதாசன்   என்ற   அன்பர்.
 இவர்  அண்மைக்காலமாகத்தான்   என்னுடன்   மின்னஞ்சல்   தொடர்பில் இருப்பவர்.    ஒரு   நாள்   இரவு   தொலைபேசியிலும்  தொடர்புகொண்டு உரையாடினார்.


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா -06.09.2014

.
 மெல்பனில்  06-09-2014   ஆம்  திகதி     
இலங்கை   மாணவர்    கல்வி    நிதியத்தின்   வெள்ளிவிழா


         இலங்கையில்    முன்னர்    நீடித்த    உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை குடும்பத்தின் -   மூல உழைப்பாளிகளை   இழந்த    ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு   அவுஸ்திரேலியாவிலிருந்த   கடந்த  1988  ஆம்   ஆண்டு முதல்    உதவி    வழங்கும்    இலங்கை   மாணவர்   கல்வி    நிதியம்   தனது கால்நூற்றாண்டு    கால  பணிகளை    தொடர்ந்தவாறு   அதன் வெள்ளிவிழாவை    மெல்பனில்    நடத்தவிருக்கிறது.
இலங்கையில்     தமிழ்ப்பிரதேசங்களில்   போரினால்    பாதிப்புற்ற ஆயிரத்துக்கும்   மேற்பட்ட    தமிழ்   மாணவர்களுக்கு    மாதாந்தம் நிதியுதவி    வழங்கி     அவர்களது    கல்வி   வளர்ச்சிக்கு   உதவிய   மாணவர் கல்வி     நிதியம்    அவுஸ்திரேலியாவில்    பதிவுசெய்யப்பட்ட    புனவர்வாழ்வு   தொண்டு     நிறுவனமாகும்.
கடந்த    காலங்களில்  இந்நிதியத்தின்   உதவிகளைப்பெற்று   கல்வியை இடைநிறுத்தாமல்   தொடர்ந்த   மாணவர்கள்   பலர்  பல்கலைக்கழகங்களிலும்     பிரவேசித்து   பட்டதாரிகளாகி    சிறந்த    தொழில் வாய்ப்புகளையும்    பெற்றுள்ளனர்.
தொடர்ந்தும்   வடக்கு -   கிழக்கு   மாகாணங்களில்   மேலும்   பாதிக்கப்பட்ட     தமிழ்   மாணவர்களுக்கு   உதவி   வரும்   இக்கல்வி நிதியம்    நூற்றுக்கணக்கான    அன்பர்களின்   ஆதரவுடன்  இயங்கிவருகிறது.
இந்நிதியத்தின்   25   வருட  நிறைவு   வெள்ளிவிழா   நிதியத்தின்  நடப்பாண்டு தலைவி  திருமதி  அருண். விஜயராணியின்  தலைமையில் எதிர்வரும்    செப்டெம்பர்  6   ஆம்  திகதி   (06-09-2014)   சனிக்கிழமை   மாலை 6 மணிக்கு  Noble Park Community Centre    மண்டபத்தில்    நடைபெறவிருக்கிறது.

இலங்கைச் செய்திகள்


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு விளக்கமறியல்

13 வருடங்களுக்கு முன் கொலை செய்த இலங்கையர் நியூசிலாந்தில் கைது

மிதக்கும் சந்தை இன்று திறப்பு

சம்பந்தன் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்

பௌத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை உதயம்

வடிவேல் சுரேஷிற்கு அழைப்பாணை

ஹட்டனில் பல கடைகள் உடைப்பு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஸ்கரிப்பு

விபத்தில் பெண் பலி : யாழ். அச்சுவேலியில் பதற்றம்

யாழ்தேவியில் குழப்பம் விளைவித்த படையினர் மூவர் கைது
==================================================================

சங்க தமிழ் மாநாடு விண்ணப்ப இறுதி நாள் நீடிப்பு

.


சங்க இலக்கியக் காட்சிகள் 21- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை
முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

போன மச்சான் திரும்பி வந்தான்!


ஆண்டுகளுக்குக் கடவுள்களின் பெயரை அந்தக்காலத்து மக்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. அவ்வாறு தெய்வங்களின் பெயர்களைக்கொண்ட பலவருடங்கள் கடந்து விட்டிருந்தன. அத்தனை வருடங்களாக அந்த நீர்த்துறையின் கரையிலே விடப்பட்டிருந்தது ஒரு தோணி. நீர்த்துறையில் இருந்து கரையைநோக்கி அடித்துக்கொண்டிருக்கும் அலை அந்தத் தோணியிலே மோதும். அவ்வாறு தொடர்ந்து பல வருடங்களாக அலையினால் மோதுண்டதால் அந்தத் தோணி பழுதடைந்து விட்டது. மீன்பிடித்தல் தொழிலுக்கு இனி அது உதவாததாகிவிட்டது. அதன் முன்பகுதி முறிந்தும் விட்டது. வழமையாகத் தொழிலுக்குப் பயன்படுத்தும் தோணிகளுக்கு நறுமணப் புகையூட்டிப் பராமரிப்பார்கள். தொழிலுக்கு இனி உதவாது என்பதால் இந்தத் தோணிக்கு அதையும் செய்யாமல் விட்டு விட்டார்கள். அது புன்னைமரமொன்றின் நிழலிலே கிடக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் அடிப்பாகத்தோடு சேர்த்து அதனைக் கட்டிவைத்திருக்கிறார்கள்.

வண்டி இழுப்பதற்கோ அல்லது வயலை உழுவதற்கோ முடியாதவாறு நடைதளர்ந்துவிட்டது எருது ஒன்று. அதனை வீணே புல்லை மேய்ந்து தன் வாழ்நாளைக் கழிக்கட்டுமென்று, புல்மிகுந்த தரையையுடைய தோட்டமொன்றிலே விட்டுவிட்டார்கள்.

உன் சமையல் அறையில் - தமிழ் திரைப்படம் - ரமேஷ் நடராஜா

.


இன்று Auburn Reading திரை அரங்கில் Jaffna Hindu Ladies OGA (யாழ் இந்து மகளிர்) இனால் திரை இடப்பட்டது.
பாடசாலையின் அபிவிருத்திக்காகவும் , பாதிக்கபட்ட மக்களுக்காகவும் இந்த நிதி சேகரிக்கும் முயர்ட்சியில் அவர்கள் இந்த திரைப்படத்தை திரையிட்டு  இருப்பார்கள் .

என்ன நோக்கதித்காக செய்து இருந்தாலும் அவர்கள் தேர்வு செய்த திரை படத்திற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நன்றி.

ஆஹா ...என்ன ஒரு அருமையான, நேர்த்தியான திரைப்படம்.

பிரகாஷ்ராஜ் என்றாலே யதார்த்தம் , அதில் இளயராஜாவும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமா ?

காதல் எவ்வளவு புனிதமானது - அதை கொச்சை படுத்தாமல் எவ்வளவு தத்ரூபமாக, அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள். 

உலகச் செய்திகள்


எபோலா நோயாளர்களை மறைத்து வைத்தால் 2 வருட சிறைத்தண்டனை

இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட்

ஐ.எஸ். போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்க போராளி உயிரிழப்பு

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் சீரமைப்பு

சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 2014 - பேச்சுப் போட்டிகள் 07 - 09 - 2014

.
நமது இளைய தலைமுறையினர்க்கு தமிழின் தொன்மையையும், சங்கத் தமிழ் இலக்கியங்களின் சிறப்பைப் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன், தமிழ் இலக்கிய கலை மன்றம் சங்கத் தமிழ் மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் மாதம் நடத்தவுள்ளது. 
மாநாட்டின் ஓர் அங்கமாக, செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி (September 7, 2014) மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகளும், பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும் மாநாட்டு மேடையில் அறிஞர்களால் வழங்கப்படும்.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

பிரிவுகள்
பிறந்த திகதி விவரம்
போட்டி - தலைப்புகள்
ஆரம்பப்பிரிவு
(7 முதல் 9 வயதிற்குக் கீழ்)
8.09.2005 முதல் 7.09.2007  வரை பிறந்தவர்கள்
முத்தமிழ்
கீழ்ப்பிரிவு
(9 முதல் 12 வயதிற்குக் கீழ்)
8.09.2002 முதல் 7.09.2005  வரை பிறந்தவர்கள்
தமிழின் தொன்மை
மத்தியப்பிரிவு
(12 முதல் 15 வயதிற்குக் கீழ்)
8.09.1999 முதல் 7.09.2002  வரை பிறந்தவர்கள்
சங்க இலக்கியங்கள்
மேற்பிரிவு
(15 முதல் 19 வயதிற்குக் கீழ்)
8.09.1995 முதல் 7.09.1999 வரை பிறந்தவர்கள்
சங்ககால மக்களின் வாழ்க்கை முறை
பேச்சுப் போட்டிக்கான வசனங்களையும், விண்ணப்பப்படிவங்களையும் நமது www.tikmsydney.org  இணையதளத்திலோ அல்லது இணையப் பத்திரிகையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்கும்படி sangamcompetitions@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது மேலே உள்ள மன்றத்தின் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும். பங்குபற்றும் நபர் ஒருவருக்கு நுழைவுக் கட்டணமாக $5, போட்டி நடைபெறும் தினத்தன்று பெறப்படுகின்றது.
மேலதிக விவரங்களுக்கு:
திருமதி க ஜெகநாதன்    - 02 9649 1294

திருமதி பி ராஜலிங்கம்   - 0432 259 414
திரு அன்பு ஜெயா        - 0423 515 263

திரு பஞ்சாத்தரம்         - 02 9643 5224
திரு கு கருணாசலதேவா  - 0418 442 674


இன்னிசை இரவு 2014 14.09.2014




3.5 கிலோ மீட்டர் தூரம் தேசியக் கொடி நாட்டுப்பற்றா? -செபாஸ்கரன்

.
தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டுப்பற்றையும் வெளிக்காட்ட கோவையில் 3.5 கிலோ மீட்டர் தூரம் தேசியக் கொடி பிடிக்கப்பட்டதாக தமிழக பத்திரிகைகளில் செய்தி  வெளிவந்திருந்தது .

தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டுப்பற்றையும் வெளிக்காட்ட இப்படித்தான் துணியில் சாயமடித்து பணத்தை கொட்டவேண்டுமா இந்த மூன்றரை கிலோமீட்டர் துணியில் 400 கஷ்டபட்ட வாழ வழியற்ற பெண்களுக்கு மத,மொழி, சாதி,  இன பேதம் பார்க்காமல் சேலைகள் உடு புடவைகள்  வாங்கி கொடுத்திருந்தால் அதிலே இதைவிட பெரிதாக தெரிந்திருக்கும் தேசிய ஒருமைப்பாடும் நாட்டுப்பற்றும் . காசை கரியாக்கிதான் காட்டவேண்டுமா ?


படுத்தவுடன் தூங்கிப் போக என்ன செய்ய வேண்டும்?

.
Stop Being Lazy Step 1 Version 3.jpgதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். 
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது. 
ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்
 

செர்ரி பழங்கள்: 
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
 
இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.
 
அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.
 

சிட்னி சைவநெறி மகாநாடு 2014 முதல் நாள்

.

படப் பிடிப்பு ஞானி 

சிட்னி சைவநெறி மகாநாடு 2014 இரண்டாம் நாள் நிகழ்வு

.
படப் பிடிப்பு ஞானி 

காந்தி' படத்தின் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

.

லண்டன் : 'காந்தி' திரைப்படத்தை இயக்கி, இந்திய மக்களின் இதயங்களில் Richard2நீங்காத இடம் பிடித்த, பிரிட்டன் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ, 90, உடல்நலக் குறைவால்,  லண்டனில் காலமானார். ஹாலிவுட்டில் பிரபல இயக்குனர் களில், ரிச்சர்ட் அட்டன்பரோ முக்கியமானவர். 1942ல், திரைப்பட துறையில் அடி எடுத்து வைத்த இவர், ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கியுள்ளதுடன், 78 படங்களில் நடித்தும் உள்ளார். ஆனாலும், 1982ல் இவர் இயக்கிய, 'காந்தி' திரைப்படம் தான், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, தயாரிக்கப்பட்ட இந்த படத்துக்கு, எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதும், அவருக்கு கிடைத்தது. இந்திய அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றார். ஆறு ஆண்டுகளுக்கு முன், தன் வீட்டின் மாடிப் படியில் தவறி விழுந்த அட்டன்பரோவால், நடக்க முடியாமல் போய் விட்டது. இதனால், சக்கர நாற்காலியின் உதவியுடன் வலம் வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர் இறந்தார். அவரின் மறைவுக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், காந்தி படத்தில், காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர், இரங்கல் தெரிவித்து உள்ளனர்.