மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை

.

மலரும் முகம் பார்க்கும் காலம்  - கவிதை 15
  திருமதி. ரதி மோகன், டென்மார்க்

மலரும் முகம் பார்க்கும் காலம்
மனம் மலரும் வசந்த காலம்
மாதங்கள் பத்து காத்திருக்கும்
மங்கையவளின் கனவுக்காலம்..

காதலுக்காய் அவன் தந்த
கனியொன்றின் விதையொன்று
துளிர்விட்டு மொட்டவிழ்ந்து
கனியாகும் இப் பேறு காலம்..

காத்திருந்து காத்திருந்து
பல வருடங்கள் கடந்த பின்பு
பட்டு வண்ண ரோஜா ஒன்று
இதழ்கள் விரிக்கும் வேளை..

வனப்பும் செழிப்பும் மதாளிப்புமாய்
வஞ்சியவள் உடலுக்குள் மாற்றம்
விஞ்சையர் பாவுக்குள் அடங்காத
விந்தையான உணர்வுக்கோலம்..

பஞ்சுப்பாதங்கள் மெல்ல அரும்பும்
பிஞ்சு விரல்கள் ரோஜாவாகும்
கஞ்சமின்றிய அழகான படைப்பு
வெஞ்சுடரான மகவின் வரவுக்காலம்..

குட்டிப்பாதங்கள் வயிற்றில் உதைக்க
கள்ளனவன் செய்திட்ட குறும்பெல்லாம்
கள்ளியிவள் நெஞ்சத்தில் அலைமோத


கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்

==============================================
மலரும் முகம் பார்க்கும் காலம்  - கவிதை 14
திரு.எஸ: தேவராஜாஜேர்மனிமலரும் முகம் பார்க்கும் காலம்
மண்ணில் நம்வாழ்க்கை கோலம்
ஒளியை காணும் போதெல்லாம்
உள்ளம் தானே மலர்வாகும்

கருவைகொண்டு    உலகைக்கண்டு
உறவைக்கண்ட வாழ்கை
உயிரைத்தந்து உலவவைத்து
மகிழ்வைக்கண்ட  அன்னை-எம்
உயர்வைக்கண்டு மலரும் அவள் முகம்தானே

விழிகள் அழகைக்கானும்போது-புது
விந்தையாய் மனம் அலைமோதும்
விந்தையின்படைப்பாய் இறைவன் எமது
சிந்தையின் பதிவைவைத்தான் பாரும்

அலையை கரையில் அலைய வைத்து
கரையும் காதல் கொள்ள-மனிதன்
மொழியின்  உரையினில் அர்த்தம் தவித்து
காதல் மொழியே கண்கள் பேச
கடவுள் தந்த விசித்திரமே
காதலர் கனவுகள்  நனவுகள் ஆகும்போது - அவர்கள்
மலரும் முகம் பார்க்கும் காலம்  மனம் மலரும்

மலரும் முகம் பார்க்கும் காலம்  - கவிதை 13
டாக்டர் எழில்வேந்தன்

வாராமல் அவள் ஏக்கம் வரலாறாய்ப் போய்விடுமோ
தீராமல் அவள் வடிக்கும் கண்ணீரும் ஓய்ந்திடுமோ
மீட்பன் எனஒருவன் வந்திடுவான் என்றெண்ணி
வாட்டம் மிகக்கொண்டு வடிவம் குலையாமல்
தொழுது கரங்குவித்து தோளின் வலி குன்றாமல்
அழுத உன் கண்ணீர் ஆவியாகும் படிக்கு
எழுந்து விழி உயர்த்து பாரெங்கும் பார் செந்தீக்
கொழுந்து பரவட்டும் கண்ணில்  தமிழச்சி
மலரும் முகம்பார்க்கும் காலம் எதுவென்று
புலரும் பொழுதெல்லாம் ஆதவனைப் பார்த்திருந்தால்
கழுத்தின் சுளுக்கால் கடும் வலிதான் நேரும்
இழுத்து அரவணைப்பாய் இதயத்தின் அன்பால்
எல்லா தமிழரையும் புத்தொளியை நீபாய்ச்சி
பொல்லாத்தன மெல்லாம் பொசுக்கி உணர்வூட்டி
ஒத்திருக்கும்  சிந்தையெல்லாம் ஒன்றிணைத்து ஓங்கவைப்பாய்
வித்தக வீரத்தில் முனைமழுங்காத் தமிழர்எலாம்
நித்திலமாய் புவிப்பரப்பில் இறைந்து கிடக்கின்றார்
எத்தரத்தோர் என்றாலும் இணைந்திடுவர்


சத்தியமாய் நம்தமிழர்  வெற்றியென்று ஊதுசங்கே.மலரும் முகம் பார்க்கும் காலம்  - கவிதை 12 
திருமதி. நர்மதா  சஞ்சு, யாழ்ப்பாணம், இலங்கைClick for Options

அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே பகைமொழியால் 
அகஞ்சூழும் புகையனைத்து எழில் கொண்டு வாழியவே !
அரிச்சுவடி அரவணைத்து தமிழக்குயிலென்று வாழியவே !
அந்தமது இல்லையென்னும் மமதையுடன் வாழியவே !
செருக்கேறும் செழுமைபெற்ற பொற்குயிலே உந்தன்
மலரும் முகம் பார்க்கும் காலமெது உரைத்திடவா ?
ஊனமாய் ஊமைகளாய் உருக்குலைந்த உன் தளிர்கள்
உரக்க அழைத்திடும் காலமே அதுவல்லவா !
குனிந்து குனிந்து கேள்விக்குறியாய் கூன்விழுந்த முதுகுகளே !
பணிந்து பணிந்து படிக்கட்டாய்ப் போன பதிவுகளே !
கல்தோன்றி மண்தோன்றிய காலத்தின் பின்தோன்றிய
மொழிகட்கு அடிபணிதல்தான் முறையோ?
ஏன் அன்னையைப் பெற்றெடுத்த அன்னைக்கும் அன்னையாம்
ஏன் தமிழ்க் கிழவியவளின் 
மலரும் முகம் பார்க்கும் காலம் வந்திடுமோ ?லரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 11 நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே

வரலாற்றுச் செதுக்கலில் நாளை
வரமாய் எம்பெயர் செப்பப்படும் – மொழிக்கலப்பில்
குறளாறாய் தமிழ் குறுமாயின் குறுகுமாலை
குவலயத்தில் பெயர் கருக்கப்படும்
மலரும் முகம் பார்க்கும் காலம் – வரலாற்றில்
புலரும் புதுத்தமிழ் என்று கூறும்
வரவு வைத்து ஓடும் ஆறே வரலாறு – தமிழில்
உறவு வைத்து ஓடுவதே எம் பேறு
பொதிகையிலே புதுமையுடன் பிறந்த மகள் – பூவுலகில்
பதிகையென தன்பாதம் பதித்த இவள்
அகத்தியன் கரம்பிடித்து கைவீசி ஒளிர்ந்த அகல் – அன்னிய மொழி
தரித்திரியன் தாழ்பணிய மறுத்திடுவாள் மங்கையிவள்
கங்கைமுதல் கடாரம் வரை வெற்றிவாகை சூடினாள்
இமயம்முதல் குமரிவரை முத்தமிழாய் ஆடினாள்
இதயமெங்கும் இன்னுயிராய் உணர்வுகளில் ஏறினாள் – புது
கமலமுகம் மலருமொரு காலமதைத் தேடுவாள்
சங்கம் வைத்து சாகரமாய் வளர்ந்தவளே
சங்காரம் சகயமென சமயமனம் சமைத்தவளே
ஓங்காரப் பொருளாய் „ஓம்’ என்று ஒலித்தவளே – எதிரிமொழிகள்
அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே
நோர்வே நக்கீரா (திலீபன் திருச்செல்வம்)நோர்வே.

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 10 செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி

ஒவ்வொரு கனவும் மெய்யாகும்
இந்த விதைகள் உறங்கப் போவதில்லை
நோடி நேரம்கூட இவை
சாத்தியமற்றதாக இருக்கப் போவதில்லை
சூழ்நிலைகள் நமக்கு எதிராய் இருக்கையிலும்
சுழலும் சிந்தனையில் புது வழிகள் பிறந்திடட்டும்
தன்மேல் உள்ள நம்பிக்கையில் தானே
மலைகள்கூட இங்கு நகர்ந்திருக்கு
வலிதாண்டி விதி மாற்றும் விடியலுக்கு மட்டும்
வடிகட்டி திறமையை தேர்ந்தெடுக்க முடியும்
கற்களை மிதித்து மற்றவரை மதிப்பவர்க்கு மட்டும்
நிமிர்ந்து நின்று பணிவோடு வெற்றி ஏந்த முடியும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
சிதறுண்டு போகும் நம் வழித் தடைகள்
விழிவழியே இரசித்திடும் பரிணாமம்
இனி கையசைவிலே வசமாகும் காலம்
கீழே விழுகின்ற நொடிகள் யாவும்
மேலே காணும் இமயத்துக்காய் இருக்க வேண்டும்
இணைந்தே உலகில் சாதனைகளை செதுக்கிச் செல்வோம்
வரலாற்றின்; செதுக்கலில் நம் பெயர் நாளை செப்பப்படும்.
செல்வி.சறீகா சிவநாதன், ஜேர்மனி

மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 9 மாலினி மாலா,ஜேர்மனி

இனவழியறிவோடு
சிகரத்துக் கேகுவோம்
முகவரிகள் நாம் பதிக்க
முகமூடிகள் அகற்றிய
முழுமனித பாதைகளின்
முதல் வழியில்
தடம் பதிப்போம்.
கனவுகள் வரைந்த
காட்சிகளின் பாதைகளில்
உணர்வுகளை வழிநடத்தி
உள்ளங்களை வென்றெடுத்து
ஒன்றிணைந்த வேள்விகளால்
உயிர் கொடுத்தேனும்
உச்சங்கள் நாம் தொடுவோம் .
வாழ வந்த பூமியிலே
வாதங்களை வளர்த்து நிற்கும்
பேதங்களை களைந்து விட்டு
வந்து வாழ்ந்த காரணத்தை
சென்ற பின்னும்
சிறப்பில் வைக்கும்
சிகரங்களாய்
செதுக்கிச் செல்வோம்.
மாலினி மாலா,ஜேர்மனி


மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 8 திருமதி.வேதா இலங்காதிலகம்

வர வழி விடு தாயே
ஈர முத்தங்களாக இன்பங்களை இனியாவது
அரங்கேறிய துன்பங்கள் எமது வாரிசுகளை
உரசியரசகட்டில் ஏற வேண்டாம்
தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்
தாயகப் பெருமை, சிறுமைகள் அனைத்தையும்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையும்
வையகம் போற்றும் விருட்ச வேராக்கலாம்
மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்
இனிதான சுவாசம் வானவிற் கனவுகளாயுயரும்
தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவு கொண்டு துன்ப
மனவிருட்டின் தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகுவோம்.
திருமதி.வேதா இலங்காதிலகம்


மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 7 ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்
இனம் புரியாத ஏக்கம்
இறுதிவரை தொடருமா
கண்ணின் இமையான தாயவளை
பணிவிடைகள் செய்யாமல்
பாதி வழியில் விட்டு வந்தோம்
ஓடாய் உழைத்த தந்தைக்கு
கடைசிவரை கடமையே செய்யாமல்
பாசத்தை கொட்டி வளர்த்த பாட்டன் பாட்டிக்கு
பயணமே சொல்லாமல் ஓடி வந்தோம்
எங்கிருந்தோ என்னை மனைவியாக்கி
இறுதிவரை இணையான கணவனுக்கும்
முடிந்தவரை கடமையை செய்யும் பாக்கியம்
இல்லாமல் செய்யமால் போகும்படி
காலதேவன் இடையில் கதையை முடிப்பானோ
இல்லை தேடி வந்து தடுப்பானோ
தேடித் தேடி செய்தவர்களும்
பார்த்துப் பார்த்து செய்தவர்களும்
போலியாக கூட ஒரு நன்றி
சொல்லாமல் போன வருத்தம்
என்றும் வலியாய் இதயத்துக்கு
வலி இல்லாத வசந்தங்களை
வர வழி விடு தாயே
திருமதி. பாமா இதயகுமார், வன்கூவர், கனடா
மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 6  ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்

  • மலரும் முகம் பார்க்கும் காலம்’ – கவி - 5 திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி


மணம் வீசுமே மகிழம்பூவாய் எனினும்
தினமொரு காலநிலை
தினமொரு சலிப்பு நிலை
இனம்புரியா ஏக்கங்கள்
சூளு(ழு)மிப் புலப்பெயர் வாழ்வில்
கனவொன்று கண்டேனடி சகியே
கனவொன்று கண்டேன்.
ஓவியங்கள் சுவரெங்கும் கண் சிமிட்ட
ஓர் கூடம் கலைக்கூடம்
பாரிலெங்கும் நான் பார்த்தறியா
பசுங்கம்பளம் மீதில்
ஆண்களும் சரிநிகர்த்த பெண்களும்
சமமாய்
மனமொத்த காதலெனின்
வாழ முடியுமெனும்
சாதிப்பேயழித்து
அல்லா யேசு சிவன் விஸ்ணு
மேலும் இன்னோரன்ன சின்னச்சிறு
செப்படிவித்தைக் கடவுளரும்
மதவெறியகற்றி
மூட நம்பிக்கைகளை
மூலையில் கொளுத்தி
வீற்றிருந்த நேரமதில்
தேவதையொத்த பெண் உருவொன்று
‘இன்று முதல் இலங்கையில்
சோசலிஸ சமவாழ்வு மலரும்’என
வாழ்த்துச் சொன்ன
அந்தக் கனவிருக்கே
அதை இப்போ நினைத்தாலும்
இனம் புரியா ஏக்கங்கள்
ஆதவன் கதிரேசர்பிள்ளை, டென்மார்க்

தொடுகை இல்லாத் தீண்டலாக
எதுகை மோனை இதமாய் சேர்த்து
உவமை உருவக அணிகள் கோர்த்து
அடுக்கு மொழியும் எடுப்பு நடையும்
அழகாய் கோர்ப்பதே அற்புதக்கவி
கருவிற்கு உயிர் கொடுத்து
கற்பனை தேன் கலந்து
ஒப்பனை வளம் சேர்த்து
ஓசையோடு நயமும் தென்றலாகி
ஓலித்து வருமே அழகியகவி
ஏண்ண அலைகளை எழுத்தில் வடிக்க
வண்ண சொற்களை வளமாக்கி
திண்ணமாய் தீட்டும் ஓவியம்
சந்தங்கள் சங்கதிகள் சேர்ந்து
சந்தோசக் கவியாகிப் படையலாகும்
முத்துச் சரங்கள் அட்சரமாகி
முல்லைப் பூக்கள் அச்சாரமாகி
மனதிற்கு மத்தாப்பாய்
மலரும் நினைவுகளாய்-கவி
மணம் வீசுமே மகிழம்பூவாய்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி

மலரும் முகம் பார்க்கும் காலம்  இல-4 

திருமதி.சுபாஜினி சிறீரஞ்சன்டென்மார்க்

.
என்னுள் தீண்டிய உணர்வுகள்
எண்ணைச்  சுரங்கமாய்......
அள்ள குறையா அமிர்தமாய்
வேண்டுமே

ஐம்புலனும் அடங்கி அள்ளிப் பருகும்
ஊற்றாய் பாய்ந்து
தேனாய் இனித்து
தினம் பார்க்கும் மலர்ந்த
முகமாய் வேண்டுமே..........

கலைகள் பெருகிட
காலமெலாம் படைத்து
புதிதாய்  முகம் காட்டி
மலரும் முகமாய் வேண்டுமே......

பிறமொழிக் கலைகளை பெயர்த்து
நுகர்ந்;;து இன்பம் எனச் சொல்லி....
இணையவலையில் நிலையாய்
தமிழே நின் முகமே வேண்டுமே.......

அழகு மொழி கற்றும்
அதில் ஏதும் உணராத
உயிரோடும் கலக்காத
உணர்வுகளை தந்த
தமிழே என்றும்
தொடுகை(ஸ்பரிச)இல்லா
தீண்டலாக வேண்டுமே.........

மலரும் முகம் பார்க்கும் காலம் -  இல-3 

திருமதி. சுமதி பாலச்சந்தர்இ பிஜித்தீவு

.


திகைத்திடும் திமிராகஇ திக்கெட்டும் தீர்வாய்
அண்டம் நடுநடுங்கஇநீ உன் 
தாண்டவம் கொண்டதிங்கு
போதும் சிவனே
செயலாற்றும் காலமிது என்னோடு
நீ வந்திங்கு களமிறங்கு
யுத்தம் இல்லாத 
அண்டம் செய்! இங்கு
ரத்தம் சிந்தாத பிண்டம் செய்
தாவரங்களேஇபூமி வந்த
தேவதைகளெனச் சொல்! அவற்றை
காத்தலே மானிடத்தின் வாழ்வியல் எனச் சொல்
பெண்மை என்பதே 
புனிதமெனச் சொல்! அதில்
கண்ணியம் கொள்வதே வளமை எனச் சொல்
வாழும் இடமே 
சொர்க்கமெனச் சொல்! எவருக்கும்
உதவாத மனமே நரகமெனச் சொல்
பணம் என்பது 
பண்டமெனச் சொல்! அதுவல்ல
பிராணன்இ என்பதையும் சொல் !
இனிதாக
இத்தனையும் செய்துவிடு
நிரந்தர மலர்ந்த முகம்
நுகர்ந்துவிடு !


மலரும் முகம் பார்க்கும் காலம் -  இல-2 

திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம்

.

எம்மைப் பெற்றவர்கள் பெருமையினைப் பேணிடுக
.மொட்டவிழ்ந்து மென்னிதழ் விரிந்;து மலராகும் தாய்மை
சொட்டும் அதன் மீதாக தியாகப் பனி வகிடு மூட்டம்
கட்டவிழ்ந்து காம்பினைத்தக்க கவர்ந்திழுக்கும் தந்தை..
வட்டமிட்டு உடன்பிறந்தோர் மலரும்முகம் பார்க்கும் காலம்!
விடுதலைக்கு விரித்து வைத்த விண்ணப்ப மலர்கள்
படுகிடப்பில் பக்குவமறியா விளை பாதகங்கள் சுழ..
விடுகதைகள் விடுவிக்க விரைந்திட்ட மேலோர் --வீணாகா
மலரும் முகம் காணும் வேளை மெல்லனவே உதிக்கும் !
பெண்களவர் தங்களை விடுவிக்க எழுந்தால் .குமுகாயம்
கண்கட்டு பூட்டுக்கள் சாவியற்றே கழன்று நிலைதேறும்
அன்னையவர் மநுநீதி அவளுள்ளே சரிநிகர் ஆட்சிகொளின்
திண்ணமாய் பூம்பொழுது புலர்திங்கே புத்துணர்வால் நிமிரும் !
மலருவதை தொலைத்தவர்கள் மங்கையர்கள் அல்லவே... -
மானுச நேயமது குடைக்கொன்றின் கீழாக மதியிட்டு சேரின்
தோளோடு சமதோளாக பால்பேத வேற்றுணர்வை துரத்தின்..
தொல்லைகள் தொலைந்தங்கே மலரும்முகம் பார்க்கும்காலம் !
காலத்தால் கனிவாகும் அக-புற காதலது புவிச்சுழல்வில்
கடுகதியாய் வன்முறைகள் வன்புணர்வு காணாத்துப் போகும்
அவலமது மோசடிகள் அந்நியமாய் அகன்று அகலும்..nஐக
அகமதில்ஆன்றோர் சான்றோர் அற்புதமாய் தலையெடுப்பின் !
தலைப்பினைத்தத்தெடுத்து தடைதாண்டி விடையாக..எழுமின்
திகைத்திடும் திமிராக திக்கெட்டும் ஓரே தீர்வாய் !
திருமதி. கோசல்யா  சொர்ணலிங்கம்


மலரும் முகம் பார்க்கும் காலம் -  இல-1 

பொலிகை ஜெயா

.
செய்தொழில்  உடல்  சோரும் 
சேயின்   குதலையால்  மெய்  நிமிரும் 
இல்லானின்  கடின  உழைப்புக்கு
இல்லாளின்  ஆலிங்கனம்  ஒத்தடமாகும் 
மலரில்  மணம்  மதியில்  குளிர்ச்சிபோல்
மழழைகளின்   சிரிப்பில்  மலரும்  முகம் 
ஆஸ்திக்கும்  ஆசைக்குமொன்றாய்
ஈன்றெடுத்த  இரு  கண்மணிகளை 
போர்  ஏப்பமிட்டது  அறியாது
ஏங்கித்தவித்து  புலம்பி  ஏறியிறங்கி   
கைகூப்பி  காலில்  விழுந்து  மன்றாடி
கையில்  மனுவுடன்  அலைகிறது 
துணையற்ற   பாசமிகு  தாய்மனசு
காலம்  காரிருளாய்  நீண்டுபோச்சு 
பெத்தவள்  கண்ணீரும்  வற்றிப்போச்சு
முகமும்  குழியாகி  சோபைபோச்சு 
பிள்ளைகளை  பார்க்கும்  காலம்  நீண்டுபோச்சு
பெற்றோர்  பேணி  பராமரித்தல் 
பிதாமாதாக்களை  பிள்ளை  பேணுதல்
நாம்  குழைக்கும்  ஒவ்வொரு  கவளத்தையும் 
நன்றியுள்ளது  தனக்கேயென  வாய்பார்ப்பதும்
எம்மை  பெத்ததுகள்   பார்க்கும்  காலம்.
கவிதை- பொலிகை ஜெயா 
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம்.
திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்
திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி
திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு
திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி
திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்
திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா 
திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்
திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி
செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி
திரு. நோர்வே நக்கீரா – நோர்வே
திருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்
டாக்டர் எழில்வேந்தன் - தமிழகம், இந்தியா
திரு. எஸ் தேவராஜா – டெனமார்க்
திருமதி. ரதி சிறீமோன் - டென்மார்க்
திருமதி. நிவேதா உதயராயன் - லணடன்
மருத்துவர். மதுராகன் செல்வராஜா – வவுனியா, இலங்கை
மருத்துவர். அகிலன் நடேசன் - காரைதீவு(மட்டக்களப்பு)இலங்கை 
திரு.இணுவையூர் சக்திதாசன் - டென்மார்க்
திரு. இணுவையூர் மயூரன் - சுவிஸ்
திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்
திரு.சசிகரன் பசுபதி – லண்டன்
திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் - கைதராபாத், இந்தியா
திருமதி. கவிதாயினி நிலா – புத்தளம், இலங்கை
திரு.பார்த்தீபன் பத்மநாதன் - பிரான்ஸ்
திரு.வன்னியூர் செந்தூரன் - வன்னி, இலங்கை
திரு.நயினை விஜயன் - ஜேர்மனி
திரு.பகீரதன் அரியபுத்திரன் - கனடா
திரு.மண் சிவராஜா – ஜேர்மனி
திரு. மட்டுவில் ஞானகுமாரன் - கனடா
திருமதி. சிவமேனகை – சுவிஸ்
திரு. ஆவூரான் - அவுஸ்திரேலியா
திரு.பசுபதிராஜா – ஜேர்மனி
திரு. தமிழ்முரசு பாஸ்கரன் - அவுஸ்திரேலியா
திருமதி. நகுலா சிவநாதன் - ஜேர்மனி
திரு. வேலனையூர் பொன்னண்ணா – டென்மார்க்
திரு. அம்பலவன் புவனேந்திரன் - ஜேர்மனி
திரு. சரவணன் - மலேசியா
திரு.ராஜ்கவி ராகில் - சிசில்தீவுகள்

திரு . கந்தையா முருகதாசன் - யேர்மனி 
திரு.இக.கிருஷ்ணமூர்த்தி  - யேர்மனி 


(இத்திட்டத்தில் இன்னும் பல படைப்பாளிகளின் பெயர்களையும் இணைக்கவிருக்கின்றோம்)
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
Tamil Writers Net Portal
Edited  by நிழலி 
தலைப்பு சுமேயின் விருப்பிற்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது

No comments: