சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியாஅழுதகுரல் கேட்டு அம்மையே வந்தாள்
ஆலவாய் அரசு அமைதியாய் இருந்தார்
உண்ணா முலையாள் உயர்ஞானப் பாலை
உண்ட பிள்ளையை உலகமே வியந்தது 

உணர்வெலாம் ஞானம் ஊறிய பிள்ளை 
தோடுடை செவியனாய் கண்டனர் இறையை
பாடினார் பரமனை பரவசம் ஆகியே
நாடினார் திருவருள் கடலினுள் மூழ்கினார் 

திருவருள் செல்வராய் மலந்தனர் அவருமே
திருஞான சம்பந்தர் பெயரதாய்  வாய்த்தது
பக்தியைப் பரப்பிட பரமனைப் பற்றினார்
சொத்தெனச் சைவத்தைக் கருத்தினில் இருத்தினார் 

குழந்தையாய் இருந்தவர் குமரனாய் வளர்ந்தனர்
குவலயம் சிறந்திட ஞானத்தைக் கொடுத்தனர் 
கோவிலை மையமாய் கொண்டுமே சேவையை
வாழ்வினில் இருத்தியே மகிழ்ந்திட்டார் சம்பந்தர் 

இளமையில் ஞானியாய் எழுந்தனர் சம்பந்தர்
இன்தமிழ் மொழியினை ஏந்தினார் நாளுமே
பக்தியைப் பரப்பிட பைந்தமிழ் மொழியினை
சித்தத்தில் இருத்தியே செப்பினார் தத்துவம் 

மாஸ்டர் சிவலிங்கம் எனும் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தின் ஒப்பற்ற கதை சொல்லி - கானா பிரபா

 


இன்று காலை எமது மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுத் துயருகிறேன். ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தில் மிகக் கனதியான பங்களிப்பைச் செய்தவர். அந்தக் காலத்தில் சிந்தாமணி பத்திரிகையில் இருந்து இலங்கை வானொலி சிறுவர் நிகழ்ச்சியில் இடம் பெறும் கதை சொல்லல் வரை என் பால்ய காலத்தின் கதை சொல்லியாகத் திகழ்ந்தவர்.

எம்மைப் பொறுத்தவரை அவர் ஈழத்தின் "வாண்டுமாமா" என்று

சொன்னால் மிகையில்லை. மட்டக்களப்பு மண்ணில் இருந்து சிறுவர் இலக்கியம் மட்டுமன்றி வாழும் வரலாறாகத் திகழ்ந்தவர்.

மாஸ்டர் சிவலிங்கம் குறித்த ஆவணம்மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்கிறார்


வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவுடன் ஒரு சந்திப்பு


மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் இழப்பில் துயருறுகிறேன்.

தாயே உனை மறவேனே! கவிஞர் த. நந்திவர்மன்


(தரவு கொச்சகக் கலிப்பா)

மூன்றாண்டு முடிந்தாலும் முடியாது உன்நினைவு

சான்றாண்மை தவறாத சற்குணத்தைத் தந்தாயே

ஆன்றோரின் வழிநடக்கும் அருங்குணமும் பதித்தாயே

ஈன்றாளே  இவையெல்லாம் என்றைக்கும் மறவேனே!                           1


உன்னுடைய சுகத்துக்காய் உலகத்தில் எதைச்செய்தாய்?

என்னுடைய நலங்காக்க எத்தனையோ செய்தாயே

பின்னடைவு வாராது பிறர்போற்ற நான்வாழ

நன்னெறியில் செல்லவைத்த நன்மையெலாம் மறவேனே!                   2


தமிழன்னை மீதினிலே தாளாத பற்றினையும்

அமிழ்தீந்த  அம்பலவன் அடிசேரும் ஆசையையும்

நிமிர்ந்தேறி நினைத்ததெலாம் நிறைவேற்றும் நெஞ்சினையும்

தமியேனில் பதித்திட்ட தண்ணளியும் மறவேனே!                                    3

அஞ்சலிக்குறிப்பு: கதைசொல்லிக் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் மறைந்தார் முருகபூபதி


மகாபாரதக் கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களில் தொடர்ந்து எழுதினார்.

2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும்,  தனது குழந்தைகளுக்கு மகாபாரதக் கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார்.

அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்ததும்,  அவர் அன்றைய தினமே மகாபாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக எழுதினார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம்.

இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும்


குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த  இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம்  அவர்கள் நேற்று முன்தினம் 11 ஆம் திகதி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தி எம்மை வந்தடைந்தபோது  மகாபாரதம்தான் மனக்கண்ணில் தோன்றியது.

இறுதியாக அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் சென்று பார்த்தேன். அச்சமயம் அவர் சிறுநீரக உபாதையினால் சிகிச்சைக்குட்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் அவரை வருத்த விரும்பாத காலன் தற்போது அவரை கவர்ந்து சென்று,  நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டான்.

 கிழக்கு மாகாணத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. யாழ்நூல் தந்த சுவாமி விபுலாநந்தருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

இசை, கூத்து, கல்வி, நாடகம், இலக்கியம்,  இதழியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்கள் தோன்றிய மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாயில் 1933 இல் பிறந்திருக்கும் மாஸ்டர் சிவலிங்கம் தமது 89 வயதில் வயது மூப்பின் காரணமாக மறைந்துள்ளார்.  

ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலமாக சிறுவர்களுக்கு கதைசொல்லும் கலைஞராகத் திகழ்ந்தவர். கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், வில்லுப்பாட்டு, நகைச்சுவை உரைச்சித்திரம் முதலான துறைகளில் பிரகாசித்தவர். அதற்காக பல விருதுகளும் பெற்றவர். சென்னைக் கலைக்கல்லூரியில் கேலிச்சித்திரத் துறையிலும் பயின்றிருப்பவர்.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதமணி வீ. சீ. கந்தையா, கிருபானந்த வாரியார், செல்லையா இராசதுரை ஆகியோரிடத்திலும் கொழும்பு தமிழ்ச்சங்கம், மட்டக்களப்பு இந்து சமய அபிவிருத்திச்சங்கம் ஆகிய அமைப்புகளிடத்திலும்  பாராட்டுப் பட்டங்கள் பெற்றவர். இலங்கை கலாசார அமைச்சின் விருது, வடகிழக்கு  மாகாண அரசின் சாகித்திய விருது, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருது என்பவற்றையும் பெற்றவர்.

ஒருகாலத்தில்  இவரது ஆற்றல்களை நன்கு இனங்கண்டுகொண்ட புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை,  இவரை இலங்கை வானொலி கலையகத்திற்கு அழைத்துச்சென்று சிறுவர் மலர் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் வானொலி மாமா சரவணமுத்துவிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

" சிறுவர்களுக்கு நேரில் கதை சொல்லமுடியும். ஆனால், வானொலி ஊடாக சிறுவர்களுக்கு எவ்வாறு கதை சொல்வீர்...?" என்று அந்த மாமா இவரிடம் கேட்டதும்,  அங்கிருந்த மாமாவின்  பெரிய டயறியை கையில் எடுத்திருக்கிறார் சிவலிங்கம்.

" அதனை எதற்கு எடுக்கிறீர்....?" மாமா கேட்கிறார்.

" இதிலும் கதை இருக்கிறது" எனச்சொல்லிவிட்டு, டயறியை கையில் வைத்து விரல்களினால் அதில் வெவ்வேறு ஒலி எழும்வகையில் தட்டியிருக்கிறார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு 1988 – 1989 இல் மெல்பனில் தொடங்கிய கையொப்பம் திரட்டும் இயக்கம் அங்கம் - 13 முருகபூபதி


குடும்பங்களில் சமூகங்களில் நாட்டில், நாடுகளில் ஒற்றுமை குலைந்தால் அதனால் பாதிப்பு அனைவருக்கும்தான். அதனால்தான் எமது முன்னோர்கள்,   “  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு  “ எனச் சொல்லிவைத்தார்கள்.

முரண்படுகின்ற அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவது கடினம்தான். ஆனால், ஒற்றுமைப்படக்கூடிய சந்தர்ப்பங்களை சரியாகப்  பயன்படுத்திக்கொண்டு, அந்த சந்தியிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி ஆரோக்கியமாக பயணிக்கலாம்.

அன்று 1988 இறுதியில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு


காணாமலாக்கப்பட்ட  தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சட்டத்தரணி கே. கந்தசாமிக்கான நினைவுக்கூட்டம் முடிந்தவுடன் இலங்கையில் ஆயுதம் ஏந்தி போராடப் புறப்பட்ட அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் அனுப்பும் பகிரங்க மடலை தயார் செய்து ஊடகங்களுக்கு அனுப்பினேன்.

அதனை மெல்பனில் 3 E A  வானொலியில் ஒலிபரப்புவதற்காக  ‘சோமா’  சோமசுந்தரம் அண்ணனுக்கும் அனுப்பினேன். ஆனால், அவர் அதனை ஒலிபரப்பவில்லை. அவர் அச்சமயம் சூழ்நிலையின் கைதியாகவே விளங்கினார்.

எனினும்,  வீரகேசரி நாளிதழ் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி, அதன் 10 ஆவது பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

அதற்கு வீரகேசரி இட்டிருந்த தலைப்பும் – உப தலைப்பும்:

 “ தமிழ் இயக்கங்கள் ஒன்றையொன்று அழிப்பதை நிறுத்தவேண்டும்.  

மெல்போர்ன் கையெழுத்து சேகரிப்பு இயக்கம் கோரிக்கை

இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய தமிழ் இயக்கங்கள் திசை தவறிய வழியில் சென்று ஒன்றையொன்று அழிப்பதிலேயே சிரத்தை காட்டுவதை கண்டித்து, மேற்படி இயக்கங்களின் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வலியுறுத்துமுகமாக சகல இயக்கங்களையும் கோரும் அறிக்கையில் தமிழ்பொது மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கும் இயக்கம் ஒன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகியுள்ளது.

தோழர் லீனஸ் ஜயதிலக்க ( 1942 – 2022 ) நினைவுகள் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்தவரின் குரல் ஓய்ந்தது ! முருகபூபதி


தனது வாழ்நாளில் பெருவாரியான நேரத்தை உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும்,  முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்காகவும் செலவிட்ட தோழர் லீனஸ் ஜயதிலக்க மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது, அவர் குறித்த நினைவுகளே மனதில் தோன்றின.  

லீனஸ்  தொடக்கத்தில் கத்தோலிக்க மதத்தில் அருட். சகோதரராக தனது மறை சார்ந்த  இறைபணியில்  ஈடுபட்டவர். பின்னர்  மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசுகள் ஈடுபடத் தொடங்கியதும், மறை சார்ந்த திருப்பணிகளை விட்டுவிட்டு,  மனித உரிமை சார்ந்த பணிகளுக்காக தெருவில் இறங்கியவர்.

அவரை 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதல் முதலில் சந்தித்தபோது,  மனித உரிமைப் போராளியாகத்தான் அறிமுகமானார்.

லங்கா சமசமாஜக்கட்சியின் ஆதரவாளராக அவரை எங்கள்


நீர்கொழும்பூரில் அதன் கிளைக் காரியாலயத்தில்தான் சந்தித்தேன்.  வாசுதேவ நாணயக்காரவும், விக்கிரமபாகு கருணாரத்தினவும் அக்கட்சியிலிருந்து வெளியேறி, நவசமசமாஜக்கட்சியை உருவாக்கியபோது, லீனஸ் ஜயதிலக்கவும் அதில் இணைந்தார்.

1971  ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணி தொடங்கிய கிளர்ச்சியினால் அதன் முன்னணித் தலைவர்களான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே,  உபதிஸ்ஸ கமநாயக்க, உட்பட நூற்றுக்கணக்கான தோழர்கள்  கைதாகி சிறையிலிருந்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு குற்றவியல் ஆணைக்குழுவின் சார்பாக நீதியரசர் அலஸ் முன்னிலையில் பல மாதங்கள் நடந்தன. அதனைப் பார்ப்பதற்கு தொடர்ச்சியாக வந்தவர்கள் இருவர். அதில் ஒருவர் ரணசிங்க பிரேமதாச, மற்றவர்தான் லீனஸ் ஜயதிலக்க.

கதிர்காமத்தில் குறிப்பிட்ட 1971 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பிரேமவதி மனம்பேரி தொடர்பாக பல செய்திகளை உள்வாங்கிக்கொண்ட பிரேமதாச, 1977 பொதுத் தேர்தல் மேடைகளில்  மனம்பேரி காவியம் பேசிப் பேசியே தனக்கும் தனது ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்கு வங்கியை பெருக்கிக்கொண்டார்.

ஒரு பெண் ( ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா ) பதவியிலிருந்தபோது புனித நகரமான கதிர்காமத்தில் மற்றும் ஒரு பெண்ணுக்கு ( மனம்பேரி ) நடந்த கொடுமை பற்றியே பிரேமதாச ஊர்கள் தோறும் சென்று பிரசாரம் செய்து பெண்களின் வாக்குகளை சேகரித்தார்.

ஆனால், அக்காலப்பகுதியில் சிறைகளில் வாடிய அரசியல் கைதிகளுக்காக அவர் குரல் கொடுக்கவில்லை.

ஸ்வீட் சிக்ஸ்டி 14 - படித்தால் மட்டும் போதுமா - ச சுந்தரதாஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,இயக்குனர் பீம்சிங் கூட்டில் 1962ம் ஆண்டு நான்கு திரைப் படங்கள் வெளிவந்தன.அவ்வாறு வெளிவந்த படங்களுள் மூன்று வெற்றி கண்டன.அதில் ஒன்றுதான் படித்தால் மட்டும் போதுமா .


சிவாஜியின் ஆடை அமைப்பாளராக பணியாற்றியவர் பி ராமகிருஷ்ணன்.இவருக்கு படத் தயாரிப்பாளர் ஆகும் அதிர்ஷ்ட்டம் சிவாஜி மூலம் கிட்டியது.சிவாஜியின் நிதியுதவி மூலம் உருவான இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பீம்சிங்கிற்கு கிடைத்தது.பொதுவாகவே இவர் இயக்கும் படங்களில் இரண்டு கதாநாயகர்கள் காணப்படுவார்கள்.பெரும்பாலும் அது சிவாஜி,ஜெமினியாகவே அமையும்.அந்த அடிப்படையில் இந்தப் படத்துக்கும் சிவாஜியுடன் நடிப்பதற்கு ஜெமினியை அணுகினார்கள்.ஆனால் படத்தின் கதையைக் கேட்ட ஜெமினி அதில் நடிப்பதற்கு மறுத்து விட்டார்.

ராஜு,கோபால் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள்.ஆனால் ஒருவர் மீது ஒருவர் பாசத்தை பொழிபவர்கள்.ராஜு படித்த பட்டதாரி.கோபாலோ படிக்காதவன்.திருமணத்துக்காக கோபாலுக்கு பார்த்திருக்கும் படிக்காத பெண் சீதாவை ராஜுவும்,அவனுக்காக பார்த்திருக்கும் படித்த பெண்ணான மீனாவை கோபாலும் பார்க்கப் போகிறார்கள்.சீதாவின் குடும்பப் பாங்கைப் பார்க்கும் ராஜு அவளையே மணக்க விரும்புகிறான்.தன் எண்ணத்தை நிறைவேற்ற விபரீத காரியம் ஒன்றில் ஈடுபடுகிறான்.தன்னைப் பற்றியே மோசமாக ஒரு மொட்டைக் கடிதத்தை எழுதி மீனாவின் தந்தைக்கு அனுப்புகிறான்.அதனைப் பார்த்து நம்பிவிடும் மீனாவின் தந்தை,மீனாவை பெண் பார்க்க வந்த கோபாலுக்கே அவளை மணம் முடித்து வைக்க முடிவு செய்கிறார்.கோபால் படித்தவன் என்று எண்ணும் மீனாவும் அதற்கு சம்மதிக்கிறாள்.அமைதியே உருவான சீதா ராஜூவை மணக்க உடன்படுகிறாள்.கல்யாணத்துக்கு பின் கோபால்,மீனா உறவில் கல்வித் தகமை காரணமாக விரிசல் ஏற்படுகிறது.எல்லாவற்றிக்கும் காரணம் படிக்காத கோபால் தான் என்று அனைவரும் நம்புகிறார்கள்.கோபாலோ வேதனையில் துடிக்கிறான்.கடிதத்தை எழுதியவன் தன் பாசத்துக்குரிய அண்ணன் என்று அறிய வரும் போது குமுறுகிறான்.

இப்படி அமைந்த படத்தின் கதை வங்காள நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.அதற்க்கான வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார்.பல இடங்களில் அவரின் திறமை வெளிப்பட்டது.அந்த வசனங்களை அருமையாக பேசி சிவாஜி,கண்ணாம்பா,சகஸ்ரநாமம்,சாவித்ரி ஆகியோர் பல இடங்களில் ஸ்கோர் பண்ணினார்கள்.இவர்களுடன் பாலாஜியும் இணைந்திருந்தார்.எம் ஆர் ராதா இல்லாதப் படமே இல்லை என்பது போல் இந்தப் படத்திலும் அவர் இருக்கிறார்.கல்யாண புரோக்கர் கைலாசம் என்ற நல்லவர் வேடம் அவருக்கு!இவர்களுடன் ரங்காராவ்,எம் வீ ராஜம்மா,ஏ கருணாநிதி,மனோரமா,சி கே சரஸ்வதி,ஆகியோரும் நடித்தனர்.

ஆடிய ஆட்டம் என்ன…? பேசிய வார்த்தை என்ன…? தேடிய செல்வம் என்ன…? அவதானி

இலங்கைப்  பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ திரிசங்கு சொர்க்கத்தில்


நிற்கிறார் என்று கடந்த வாரம் எழுதியிருந்தோம்.

தற்போது முன்னாள் பிரதமர் என்ற அடைமொழியோடு அவர் எங்கே நிற்கிறார்..? என்பதை நாம் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதில்லை.

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்க ஒருவரின் இன்றைய நிலை குறித்து அவரது நிழலும் வெட்கித் தலைகுனியும்.


தற்போது அவர் தனது நிழலுக்கு அஞ்சியும் நடமாடவேண்டிய பரிதாபத்திற்குரியவராகியிருக்கிறார்.  இரண்டு முறை ஜனாதிபதியாகவும் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்த அவர், பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறிய தருணமானது  – அதாவது கடந்த 09 ஆம் திகதி திங்கட்கிழமை நடந்திருக்கும் சம்பவங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில்  நீங்காத கறையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு நெருக்காமான ஆதரவாளர்களை அங்கே அழைத்து மந்திராலோசனை நடத்திய அவருக்கு அதற்கான தகுதியிருந்தது. ஆனால், அதன்பின்னர் அவர்கள் அத்துமீறி வெளியே மேற்கொண்ட அடாவடித்தனங்கள் அவருடைய மரியாதையை போக்கிவிட்டது.

காலமுகத்திடலில் கடந்த 30 நாட்களுக்கும் மேல் மக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டங்களை அமைதியாகத்தான் நடத்திக்கொண்டிருந்தனர்.  அவர்கள், ஜனாதிபதியையும் பிரதமரையும் இவர்களின் அமைச்சர்களையும்தான் வீட்டுக்கு திரும்பிச்சென்று தத்தம் குடும்பத்தை கவனிக்குமாறுதான் சொன்னார்கள்.  அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினாலும் ஊழல், மோசடி, நிருவாகக் குளறுபடிகளினாலும் தேசம் வங்குரோத்தாகியிருந்த வேளையில், தங்கள் வயிற்றில் அடிவிழுந்த பின்னர்தான் அவர்கள் வீதிக்கு இறங்கியிருந்தார்கள்.

திருவருட் பயனைச் சிந்தையில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                          மெல்பேண் .... அவுஸ்திரேலியா       சமயம் என்றால் என்ன சமயம் என்றாலே கடவுள் நெறி பற்றிச்

சொல்லுவதா ? என்னும் ஐயம் எழுவது இயல்பானதுதான். இதனால் சமயம் என்றால்  என்ன வென்று ஒரு தெளிவு அவசியமாய் வேண்டப்படுகி றது அல்லவா ! சமயம் என்றால் " மக்கள் ஆன்மலாபத்தை அடைதற்குரிய வழியைத் தெரிவிப்பதே " என்று சொல்லப்படுகிறது. கடவுள் நெறிபற்றிக் கண்டு கொள்ளாமலே சமயம் என்று சொல்லிக் கொள் ளும் நெறிகளும் காணப்படுகின்றன என்பதும் நோக்கத்தக்கது.

  சமயங்கள் யாவுமே கடவுள் கொள்கையினை ஏற்றுக் கொண்டுள்ளனவா என்பதிலும் தடுமாற்றம் காண ப்படுகிறது. சமயங்கள் என்று பெயரளவில் இருந்தாலும் கடவுள் என்னும் சிந்தனையினைத் தொடாதன வாகவும் சமயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது. கடவுள் கொள்கையினுக்கு முதன்மை கொடுக்காமல் ஓரளவு நிலையில் ஒத்துக் கொள்ளும் சமய ங்களும் இருக்கின்றன.அதேவேளை சமயம்  என்னும் பெய ரில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெளத்தமோ சமணமோ கட வுள் என்னும் கருத்தை ஏற்றிடாச் சமய ங்களாகவே இருக்கின்றன. தர்க்கம் வேறு. தத்துவம் வேறு. தர்க்கிப்பது என்பதை மூலமாய்க் கொண்ட னவே பெளத்தமும் சமணமும். தத்துவத்தை முதன்மைப் படுத்தும் சமயங்கள் நிலை  வேறாய் அமை கிறது. அந்த வகையில் சைவசமயமானது சைவசித்தாந்தம்  என் னும் தத்துவத்தை முழுமையாக்கி கடவுள் நெறியினை வலிமையாக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2022 மெல்பேர்ண் நிகழ்வு

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண்


இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராகஅரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்டமுள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 13 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.

 

ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்துசர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்திசாட்சிகள் அற்ற போரை நடத்திஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.

 

கொடியபோர் முடிவடைந்து 13ஆண்டுகள் கடந்தும்நீதிக்காக எமது


மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்துமறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 

அன்பான உறவுகளே,

 

எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில்மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில்எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

 

மெல்பேர்ணில் எதிர்வரும் 18-05-2022 அன்று நினைவேந்தல் நாள் நிகழ்வு நடைபெறுகின்றது.

 

நிகழ்விடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152

 

காலம்: 18-05-2022 Wednesday 7pm – 8.30pm

 

மேலதிக விபரங்களிற்கு 0433002619 அல்லது 0406429107 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

 

நினைவேந்தல் நாளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.

 

இவ்வண்ணம்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோரியா

-------------------

இலங்கைச் செய்திகள்

ரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு ஜனாதிபதியினால் 4 அமைச்சர்கள் நியமனம்

பிரதமர் ரணில் தலைமையிலான அரசின் பங்காளிகளாகமாட்டோம்

அரசில் எந்தவொரு பதவியையும் நான் ஏற்கப்போவதில்லை

மாஸ்டர் சிவலிங்கம் இயற்கை எய்தினார்

தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் 16இல் வருகிறதுரணில் தலைமையிலான அமைச்சரவைக்கு ஜனாதிபதியினால் 4 அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார்.

முழுமையான அமைச்சரவையை நியமிக்கும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக முதற் கட்டமாக நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

உக்ரைனின் ஹெர்சன் நகர் ரஷ்யாவுடன் சேர விருப்பம்

வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

தாய்வான் குறித்து மாவோவின் கருத்து

ஜூலை இறுதியில் எல்லையை திறப்பதற்கு நியுசிலாந்து முடிவு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி


உக்ரைனின் ஹெர்சன் நகர் ரஷ்யாவுடன் சேர விருப்பம்

உக்ரைனின் தெற்கில் உள்ள ஹெர்சன் நகரம் ரஷ்யாவுடன் இணைய விரும்புவதாக அதன் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அந்நகரை இணைத்துக்கொள்ளும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கேட்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

திருஞான சம்பந்தர் குரு பூஜை 22/05/20221 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia 


பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “ஞான சம்பந்தர் தேவாரம்” பாடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் "ஞான சம்பந்தர் தேவாரம்" புத்தகம் பாடுவதற்கு வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப முழு நிகழ்ச்சியிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் பங்கேற்கலாம்.

 தேதி: 22 மே 2022 - ஞாயிறு

இடம்: சிவன் கோவில் வளாகம்

காலை 8:30 மணி: நிருத்தி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் அதைத் தொடர்ந்து திருஞான சம்பந்தர் சிலைகளுக்கு அபிஷேகமும்.

சம்பந்தர் தேவாரம் பாடுதல்

மதியம் 12:30 மணி: சிவன் கோயில் வளாகத்தில் திருஞான சம்பந்தர் பஞ்சலோக ஊர்வலம் சிறப்பு பூஜை.

மகா தீபாராதனை

ஓம் நமசிவாய


மரண அறிவித்தல்

 .

              

                                                      திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி

                                                                              ( இராசாத்தி )வட இலங்கை புற்றளை, புலோலி  தெற்கைச்சேர்ந்த திருமதி பாலசுந்தரம் மங்கையற்கரசி ( இராசாத்தி ) கடந்த 09-05 – 2022 திங்கட் கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,  கந்தையா பாலசுந்தரத்தின்                 (  AO Health Department, Retd R / ACLG – AO,  ACHC )   அன்பு மனைவியும்,   மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புநிறை தாயாரும் பகீரதன், திருமாவளவன் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை 12-05-2022 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9-30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,  பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

                                              தகவல்: க. பாலசுந்தரம் ( கணவர் )

                                                       தொலைபேசி: 021 – 226 4046   

                      திருமதி சிவமலர் சபேசன் ( சகோதரி ) மெல்பன்

                                                      malarsabesan@yahoo.com