சிட்னியில் இடம்பெற்ற சிலப்பதிகார மாநாட்டில் கவியரங்கை அலங்கரித்த கவிதை புலம்பெயர்ந்த நாட்டில் சிலம்பு மகாதேவஐயர் ஜெயராமசர்மா ....... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
இன்பத்தமிழுக்கு விழா இளங்கோவடிகளுக்கு விழா
பொங்கிவரும் தமிழுணர்வால் பொலியட்டும் இந்தவிழா
எங்கள்தமிழ் சிலம்புபற்றி இயம்புகிறேன் இன்பமுடன்
சிலம்பு சிதறட்டும் சிந்தனைகள் குவியட்டும்
விளம்புகின்ற அத்தனையும் வித்தாக முளைக்கட்டும்
உளமுணர்வு பொங்கட்டும் உயர்கருத்து உதிக்கட்டும்
புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்பெழுந்து ஓங்கட்டும்
கங்காரு நாட்டினிலே கண்ணகிகள் பலருள்ளார்
மாதவிகள் சாயலிலே மங்கையரும் பலருள்ளார்
கோவலர்கள் கோலத்தில் கொண்டாடும் பலருள்ளார்
ஆதலால் சிலம்பிங்கே அத்திவாரம் இட்டுளதோ
அறமிங்கே இருக்கிறது நல்லரசாட்சி இருக்கிறது
ஊழ்வினையால் நாமிங்கே ஊரைவிட்டு வந்துள்ளோம்
சாதிமத பேதமின்றி சமத்துவத்தைக் காணுகிறோம்
காதலுடன் சிலம்பினது கருத்துக்களை விதைத்திடுவோம்
புலம்பெயர்ந்து வரும்போது பலசுமைகள் இருந்தாலும்
நலந்திகழும் இலக்கியத்தை நம்மனதில் இருத்திவைத்தோம்
களைப்பெல்லாம் போனபின்னே கண்ணகியை காட்டுதற்கு
புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்புபற்றி செப்பிநின்றோம்
’ஈழத்து புலமைப் பாரம்பரியத்தின் உன்னத அடையாளம் பேராசிரியர் பொன் . பூலோகசிங்கம்’ - முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் அஞ்சலிக்குறிப்பு
ஈழத்தின் தனித்துவ புலமையாளரான தமிழ்ப் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள்
தம் 83 வது அகவையில் இன்று
சிட்னியில் காலமான செய்தி எழுதும் துயரம் கனமானது.
சிறந்த பேராசிரியர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர் என தமிழியல்
உலகில் தடம் பதித்த பேராசிரியரின் வாழ்வும் படைப்புகளும் ஈழத்து புலமைப் பாரம்பரியத்தின்
உன்னத அடையாளம் எனலாம்.
வவுனியா செட்டிக்குளத்தில் 1936 ல் பிறந்த பேராசிரியர் அவர்களின் கலாநிதிப்பட்ட
ஆய்வு, 1963-1965 காலப்பகுதியில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக திராவிட மொழியியலறிஞர் பேராசிரியர்
தோமஸ் பரோவின் வழிகாட்டலில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின் பெருமுயற்சிகள், ஈழம் தந்த நாவலர் இந்துக் கலைக்களஞ்சியம் ,
நாவலர் பண்பாடு, சிலப்பதிகார யாத்திரை என பல நூல்களை தமிழுக்காக்கியவர். நூற்றுக்கு மேற்பட்ட
ஆய்வுக்கட்டுரைகளை எமதாக்கியவர்.
ஈழத்து தமிழிலக்கிய
வரலாற்றினை ஆழ ஆய்ந்து பதிவாக்கிய அதேவேளையில் இலக்கியத்தின் வழியான தமிழர் பண்பாட்டு
வரலாற்றினையும் பல்துறை இணைநோக்கில் நுண் ஆய்வுக்குட்படுத்தியவர். இந்த வகையில் கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் ,வன்னி நாட்டின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுகள்
குறிப்பிடத்தக்கன. களனிப்பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம்,கொழும்புப்பல்கலைகழகம்
ஆகியவற்றில் பேராசிரியராக விளங்கிய அவர், 1997 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.
அங்கும் நிறைவான கல்விப்பணிகளை ஆற்றியவர்.
இன்று சிட்னியில் முதியோர் இல்லமொன்றில் அவரது வாழ்க்கைப்பயணம் நிறைவு பெற்றாலும்
தமிழுள்ளவரை அவர் மேலான வாழ்வின் புலமைச்சுவடுகள் எமக்கெலாம் வழிகாட்டியாகும்.
அவர் ஆத்ம சாந்திக்கான பிரார்தனையில் இணந்திருப்போம்.
-
பேராசிரியர் என் சண்முகலிங்கன்
-
முன்னாள் துணைவேந்தர்
-
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
"விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு": செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள்
29/09/2019 தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும்.
பௌத்தத்தின் ஆக்கிரமிப்பு
28/09/2019 பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம்.
இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டுமென்ற அதிகார தோரணையை நிரூபிப்பதாகவே காணப்படுகிறது.
அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்
ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த அடாவடித்தனச் செயற்பாடு மத ரீதியானது மட்டுமல்ல. ஆக்கிரமிப்புக்கான போர்க்குணம்; கொண்டதோர் அரசியல் நடவடிக்கையும்கூட. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்போக்கிலான சண்டித்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும்.
இந்த இறுதிக்கிரியை நீதிமன்ற உத்தரவை மீறிச் செய்யப்பட்டன. இந்துக்களின் மதரீதியான கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை அவமதித்து, அட்டகாசமாகக் காலில் மிதித்து துவம்சம் செய்திருக்கின்றன. இதன் மூலம் காவி உடை தரித்த பிக்குகளும் அவர்களுடைய ஆதரவாளவர்களும் மத ரீதியாக இந்துக்களின் மனங்களைக் கீறி காயப்படுத்தியுள்ளனர். இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் சமநிலையிலான நல்லிணக்கத்துக்கு இடமில்லை. இனங்களுக்கிடையில் சம நிலையிலான நல்லுறவும் ஐக்கியமும் சாத்தியமில்லை என்பதையும் மதத் தீவிரவாத போர்க்குணம் கொண்ட பௌத்த பிக்குகள்; இதன் மூலம் பறைசாற்றி இருக்கின்றனர்.அது மட்டுமன்றி, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் தேசிய சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்கள் மீதான சிங்கள பௌத்தம் அட்டகாசமாகத் தனது அரசியல் ரீதியான மேலாண்மையையும் நிலை நிறுத்தி உள்ளது. இதற்கு முன்னரும் பௌத்த பிக்கு ஒருவருடைய மரணச் சடங்கில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றிருந்தது. அதனையடுத்து இரண்டு வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சிங்கள பௌத்தம் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் சமூகத்தின் மீது மற்றுமொரு பௌத்த பிக்குவினுடைய மரணச் சடங்கின் மூலம் இப்போது அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு நடத்தி இருக்கின்றது.
கொழும்பில் முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல் வெளியீட்டரங்கு
படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில்
பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை
மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
மகாகவி பாரதியின் படைப்பாளுமை பண்புகள் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்ட இந்நூலின் உள்ளடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்
காலைக்கதிர் இதழில் 40 வாரங்கள் தொடராக வெளியானது. அத்துடன்
அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழிலும் மறுபிரசுரமானது.
இலங்கையில் பாரதி நூல் வெளியீட்டரங்கு
செல்வி பாமினி செல்லத்துரையின் வரவேற்புரையுடன், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு. தெளிவத்தைஜோசப்
தலைமையில் ஆரம்பமாகும்.
ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட
விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன், எழுத்தாளர்
கௌரி அனந்தன், இலக்கிய ஆர்வலர் வானதி ஆறுமுகம் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரை நிகழ்த்துவர்.
புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் நூலின்
முதல் பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
கலை, இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான திரு. உடுவை தில்லை நடராஜா,
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) இளங்கீரனின் புதல்வர் திரு. மீலாத் கீரன், திருமதி
ஜெயந்தி விநோதன் ஆகியோர் நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்வர்.
நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.
நிகழ்ச்சியில் இலக்கிய கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.
கலை, இலக்கிய அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
---0----
முருகபூபதி எழுதிய “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல்: தமிழில் உரையாற்ற சிரமப்பட்ட பாரதியின் கொள்ளுப்பேத்தி ! பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் ( 1878 – 1942 ) !!
படைப்பிலக்கியவாதியும்
ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய “ இலங்கையில்
பாரதி “ ஆய்வு நூலின் வெளியீட்டு அரங்குகள்
எதிர்வரும் 29 ஆம் திகதி நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் கலாசார மண்டபத்திலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி கொழும்பு
தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்திலும் நடைபெறவிருக்கிறது.
மகாகவி
பாரதியின் படைப்பாளுமை இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவும், அதனூடாக ஈழத்து
இலக்கிய வளர்ச்சியில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ள
இந்நூலின் முன்னுரை இங்கு பதிவாகின்றது.
“ இலங்கையில் பாரதி “ நூல் முகுந்தன் பதிப்பகத்தின் வெளியீடு.
எனது பால்யகாலத்தில் ஆரம்பப் பாடசாலையிலும் வீட்டிலும் கேட்டு
ரசித்து பாடிய பாடல்கள் மகா கவி பாரதியிடமிருந்தே
தொடங்கியது. குறிப்பாக ஓடிவிளையாடு பாப்பா, தீராதவிளையாட்டுப்பிள்ளை
என்பனவற்றின் ஆழ்ந்த அர்த்தம் புரியாமலேயே பாடியிருக்கின்றேன். மனனம் செய்துள்ளேன்.
எனது அக்கா, நடனம் பயின்றவேளையில் தீராதவிளையாட்டுப்பிள்ளைக்கு
அபிநயம் பிடித்து ஆடியபோது ரசித்திருக்கின்றேன். இவ்வாறுதான் எனக்கு மகாகவி பாரதியிடத்திலான
உறவும் ஈர்ப்பும் படிப்படியாகத்தொடங்கியது.
பாடசாலை நடத்திய பேச்சுப்போட்டியில் வகுப்பு ஆசிரியை எழுதிக்கொடுத்த
பாரதி பற்றிய உரையை மனனம் செய்து ஒப்புவித்திருந்தாலும், பாரதியின் ஞானத்தை கண்டறிவதற்கு எவரும் துணைக்கு
வரவில்லை.
எனினும் எமது
நீர்கொழும்பூருக்கு தமிழகத்தின் மூத்த படைப்பாளி கு. அழகிரிசாமியும் பாரதியாரின் பேத்தி
விஜயபாரதியும் அவரது கணவர் பேராசிரியர் சுந்தரராஜனும் வருகை தந்து உரையாற்றியதையடுத்து
பாரதி மீது ஆர்வம் அதிகரிக்கத்தொடங்கியது.
அவர்கள் வரும்போது எனக்கு பதினைந்து வயதுதானிருக்கும். இலக்கியப்பிரதிகள்
எழுதத்தொடங்கிய 1970 இற்குப்பின்னர்தான் பாரதியை
ஆழ்ந்த நேசத்துடன் கற்றேன்.
எமக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததையடுத்து அவளுக்கு விஜயபாரதி என்றும் பெயர் சூட்டினேன். காலம்
கடந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர், 1990 ஆம் ஆண்டிற்குப்பிறகு, ஒருநாள்,
அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, " பாரதியாரின்
கொள்ளுப்பேத்தி மீரா ( சுந்தரராஜன் - விஜயபாரதி
தம்பதியரின் புதல்வி) வந்திருப்பதாக தெரிவித்து, அவருடன் உரையாடச்செய்தார்.
இந்த எதிர்பாராத
தொலைபேசி அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியைத்தந்தது.
அவருடைய பெற்றோர்களை இலங்கையில் எமது ஊரில் சந்தித்துப்பேசியதை
நினைவுபடுத்தி உரையாடத்தொடங்கியதும், எனக்கு
மற்றும் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. அது இன்ப அதிர்ச்சியல்ல!!
Subscribe to:
Posts (Atom)