சிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை
"ஐயா! ராஜா சார் ஐ வச்சு ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை சிட்னியில் நடத்தத் திட்டம் போட்டிருக்கிறன். சிட்னி சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா தான் இசை. எல்லாம் பேசியாச்சு. ராஜா சாரும் ஒத்துக் கொண்டுட்டார். அடுத்த வருஷம் நடக்கப் போகுது" 

2008 ஆம் ஆண்டில் ஒரு நாள் நண்பர் கதிரிடமிருந்து எனக்கு வந்த தொலை பேசிச் சம்பாஷணை அது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தோடு இந்த இசை நிகழ்ச்சியும் புதைந்து போனது. தொடர்ந்த இளையராஜாவின் உலக இசைச் சுற்றுலாக்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டதோடு அப்போது அது ஓய்ந்து விட்டது.

கதிர் வானொலி நேயராகவும், இளையராஜாவின் வெறி பிடித்த ரசிகராகத் தான் எனக்கு அறிமுகமானார்.

தமிழன்னை தவிக்கின்றாள் ! - ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  [  கலைஞருக்கு ஒரு இரங்கற்பா  ]
             
            தமிழ்த்தாயின் தவப் புதல்வா
               தானாக எழுச்சி பெற்றாய்
           அமிழ்தான தமிழ் மொழியை
                 ஆசை கொண்டு அரவணைத்தாய் 
            தமிழ் முரசாய் நீயிருந்தாய்
                   தமிழெங்கும் முழங்கி நின்றாய்
            தவிக்க விட்டுப் போனதெங்கே
                    தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

            சங்கத் தமிழ் இலக்கியத்தை
                தானாகக் கற்று நின்றாய்
            பொங்கிவந்த தமிழ் உணர்வால்
                  பொழிந்து நின்றாய் பலவுரைகள்
            ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
                  உள்ளம் அதால் நேசித்தாய்
            உனைப் பிரிந்து வாடுகின்றார்
                 ஓலம் அது கேட்கலையா    !

             வள்ளுவத்தை  வாழ்வு  எல்லாம் 
                  மனம் முழுக்க நிறைத்தாயே 
            வள்ளுவத்தை பலர் அறிய
                 வரைந்தாய் நீ ஓவியத்தை
             வள்ளுவர்க்கு சிலை எடுத்தாய்
                  வள்ளுவர்க்கு உரு கொடுத்தாய்
             தெள்ளு தமிழ் அறிவுடையாய்
                  தேம்பி நின்று அழுகின்றோம் ! 

சிட்னி துர்கா ஆலயத்தில் தேர்த் திருவிழா 12/08/2018

சிட்னி துர்கா ஆலயத்தில்12/08/2018 ம் திகதி நடைபெற்ற   தேர்த் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் . ஆடிப்பூரம் இன்று (13/08/2018)  நடைபெறும்கலைஞரும் தமிழ் சினிமாவும் முதல் குழந்தை முரசொலியின் பிரதியுடன் இறுதிப்பயணம் சென்றவர்! சினிமாவிலும் அரசியலிலும் சாதித்திருக்கும் முழுநேர எழுத்தாளரின் வாழ்க்கைப்பயணம் - முருகபூபதி" கருத்து முரண்பாடு வந்தபின்னரும் நண்பர் எம்.ஜீ.ஆர். என்னை கலைஞர் என்றுதான் விளித்தார்.  ஆனால்,  நான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு திரைப்படத்தில் பேசி நடித்த ஜெயலலிதா தன்னைப்பற்றி மேடைகளில் விமர்சிக்கும்போது, "ஏய் கருணாநிதி" என்றுதான் திட்டுகிறார்" இவ்வாறு தனது ஆதங்கத்தை பலவருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருப்பவர் அண்மையில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி.
அவருடைய இந்த ஆதங்கத்தை ஒரு வார இதழ் "சொன்னார்கள்" என்ற தலைப்பில் வெளியிட்ட கருத்துக்களில் படிக்கநேர்ந்தது.
கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை அவர் எழுதிய தூக்குமேடை நாடகத்தின் அரங்காற்றுகையின்போது நடிகவேள் எம்.ஆர். ராதா வழங்கினார் என்பது தகவல்.
நடிகவேள் ராதா  மாத்திரமின்றி பின்னாளில் அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசு, ராதா ரவி, ராதிகா, வாசுவிக்ரம் ஆகியோருக்கும் மாத்திரமின்றி, சிவாஜி, எம்.ஜீ.ஆர், சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, ரி.எஸ். பாலையா, பி. எஸ்.வீரப்பா,  எஸ்.வி. சுப்பையா, ரங்கராவ், நாகையா, ஆர். எஸ். மனோகர், என். எம். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார், பிரசாந்த், நெப்போலியன், விஜயகுமார், சத்திய ராஜ், பிரபு, மற்றும் கண்ணாம்பா, ராஜம்மா, டி.ஆர். ராஜகுமாரி, ஶ்ரீரஞ்சனி,  பானுமதி, பத்மினி, மனோரமா, பண்டரிபாய், விஜயகுமாரி,  ராஜம், ஜெயலலிதா, ராஜ்ஶ்ரீ, சரோஜாதேவி, லட்சுமி,  ஶ்ரீபிரியா,  அம்பிகா உட்பட எண்ணிறந்த நடிகர்கள்,  கலைஞர் எழுதிய வசனங்களைப்பேசி நடித்தவர்களே!
இவர்கள் அனைவரும் கருணாநிதியை கலைஞர் என்றே அழைத்திருக்கும்போது, ஒருகாலத்தில் அவரது வசனத்தில் பேசி நடித்திருக்கும் ஜெயலலிதா மாத்திரம் அரசியலுக்கு வந்து, தனது எதிரியாக மாறி " ஏய், கருணாநிதி" என்று ஏகவசனத்தில் விளித்தமை அவருக்கு மாத்திரமல்ல ஏனையவர்களுக்கும் ஆதங்கமான விடயம்தான்.
கலைஞர் அரசியலுக்குள் பிரவேசிக்காது விட்டிருப்பின் அவரும் மற்றும் பல படைப்பாளிகளைப்போன்று முழுநேர எழுத்தாளராக அல்லது முரசொலி பத்திரிகையின் முழுநேர ஆசிரியராகவே வலம் வந்திருப்பார். தான் எழுதும் நூல்களுக்கு ரோயல்டி பெற்றிருப்பார். தனது இளம்மாணவப்பருவத்திலேயே சக மாணவர்களை இணைத்துக்கொண்டு கையெழுத்து பத்திரிகை நடத்தியவர். தான் பிறந்த திருவாரூரில் மாணவ நேசன் என்ற கையெழுத்து இதழை நடத்தியபின்னர் அங்கிருந்து மாணவர் இயக்கத்தையும் ஆரம்பித்தவர். அதனையடுத்து முரசொலி என்ற பெயரில் மற்றும் ஒரு கையெழுத்து பத்திரிகையை தொடக்கி அதனையே அவர் இணைந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் உத்தியோகபூர்வ அச்சு ஊடகமாக மாற்றி தமிழகம் எங்கும்  அதன் புகழை பரப்பியவர். இன்று  தரணியெங்கும் அதன் இணையப்பதிப்பும் பரவிவிட்டது.
அவர் எழுதிய முதல் மேடை நாடகம் பழனியப்பன்,  அவரது 20 வயதில் அரங்கேறுகிறது. அவர் வசனம் எழுதிய முதல் திரைப்படம் ராஜகுமாரி அவரது 23 வயதில் திரைக்கு வருகிறது. அவரது முதல் மூன்று படங்கள் எம்.ஜீ.ஆர். நடித்த படங்கள்தான். அதன்பிறகு கலைஞர் கதை வசனம் எழுதி வெளிவந்த சிவாஜிகணேசனின்  முதல் படம் பராசக்தி  1952 ஆம் ஆண்டு கலைஞரின்  28 வயதில் வெளியாகிறது.
நாடகம், சினிமாவுக்கு வசனம் எழுதிக்கொண்டும், அரசியல் பத்திகள் வரைந்துகொண்டும் தனது கழகக்கண்மணிகளுக்காக உடன்பிறப்புகளே என விளித்து தினமும் முரசொலியில் மடல் எழுதியவர்.
படுக்கையில் விழும் வரையில் ஓயாமல் எழுதி எழுதி குவித்தவர். அவரது தொழில் எழுத்துத்தான். அரசியல் அவரை முதல்வராக்கியது. முதலவரானதன்பின்னரும் எழுதியவர். சந்தித்த சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அவதூறுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எழுதிக்கொண்டே இருந்தவர்.

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம் 12 தலைமுறை தலைமுறையாக இசைவேள்வி நடத்திவரும் கலைக்குடும்பம் - ரஸஞானி


களனி கங்கை தீரத்தில் கொகிலவத்தை , மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி, ஆமர்வீதி, புளுமெண்டால் வீதி என்பன எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள்  வாழ்ந்த,  பணியாற்றிய, நடமாடித்திரிந்த பிரதேசங்களாகும்.
இந்த இடங்களில்தான்  தினக்குரல்,  வீரகேசரி, திவயின, The Island, சித்திர மித்ர, முதலான பத்திரிகைகள் வெளியாகின்றன.  கொகிலவத்தையில் 1983 இற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் நியமுவா, ரத்து பலய, செஞ்சக்தி,  Red Power  முதலான பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வெளிவந்தன.
வீரகேசரிக்காக ஜா- எல , ஏக்கலையில் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் நிலம் வாங்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்தும் கிராண்ட்பாஸ் வீதி வீரகேசரியின் பெயரை நிலைத்துவைத்திருக்கிறது.
ஆமர்வீதியில் அமைந்திருந்த கே. ஜி. இண்டஸ்றீஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளர் கே. குணரத்தினம். இங்கு இயங்கிய ஓவியக்கூடத்தில் இலங்கை தியேட்டர்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கான பெரிய பெணர்கள் கட்அவுட்டுகள் வரையப்படும். அதற்கென பயிற்சி பெற்ற ஓவியர்கள் இங்கு பணியாற்றினார்கள். நடிகர், நடிகையரின் உருவங்களை தத்ரூபமாக வரையும் தேர்ச்சி பெற்ற ஓவியர்கள் குறிப்பிட்ட கலைக்கூடத்திலிருந்து வரைந்து அனுப்பும் பெரிய வண்ணச்சுவரொட்டிகளும் பெணர்களும் கட் அவுட்டுகளும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.
பிரிண்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதியிலும் ஒரு பிரபல முன்னணி இசைக்கலைஞர் வாழ்ந்தார். அவர்தான் ஆர். முத்துசாமி. பல சிங்கள, தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்தவர். அவரது மகன் மோகனும் நாடறிந்த இசைக்கலைஞர். அவரது இசைக்குழு அப்சராஸ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்றது.
ராமையா ஆசாரி முத்துசாமி என்ற இயற்பெயர் கொண்டிருந்த இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி, தமிழ்நாடு நாகர்கோவிலில்  1926 ஆம் ஆண்டு, இசைக்கலைஞர்  ரமையா பாகவதருக்குப்பிறந்து, தன்னையும் இசைக்கலைஞராகவே வளர்த்துக்கொண்டதுடன் நில்லாமல் தனது மகன் மோகனையும் இசைக்கலைஞராக்கியவர்.
அதனால் தலைமுறைகள் கடந்தும் அவரது குடும்பத்தில் இசைகோலோச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இரண்டாம் வாய்ப்பு !


ன்றொரு நாள்
எனக்கு அறிமுகமானவன் நீ
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் !
நினைத்து பார்க்கையில்
வலிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.
எவ்வளவு நெருக்கமாக
உணர்ந்தேன்
ஏதோ ஒன்று
வெகு ஆழமாக
நீ - என்னில் பாதியாக……
என் உயிரில் பாதியாக……
என் இதயத்தின் பாதியாக…..
ஒவ்வொரு விடியலும்
உன்னாலே….
காண முடியாத
ஒவ்வொரு நாளும்
கடினமாகவே……
வருந்துகிறேன்
என் மவுனத்தில் கரைந்த 
அந்நாட்களை நினைத்து. 


இலங்கைச் செய்திகள்


வாள்வெட்டு குழுவை ஊக்குவிப்பவர் யார்?; பல கோணங்களில் விசாரணை

நாட்டை விட்டு வெளியேறியோருக்கு பிரதமரின் அழைப்பு

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்

ஊடகவியலாளர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

யாழ் ரமணனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர் இரங்கல்


வாள்வெட்டு குழுவை ஊக்குவிப்பவர் யார்?; பல கோணங்களில் விசாரணை


06/08/2018 வாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தென்மராட்சி பகுதியை சேர்ந்த 07 இளைஞர்களை மானிப்பாய் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கைக்கோடரி, வாள்கள், கை கிளிப் போன்ற ஆயுதங்களையும் கைபற்றியுள்ளனர்.

கதம்பமாலை நடாத்தும் நாடகம் - அழகியே MARRY ME! - 12/08/2018
உலகச் செய்திகள்


மறைந்தார் கலைஞர்; கோபாலபுரம் வீட்டில் ஏற்பாடுகள் தீவிரம்

இந்தோனேசிய பூகம்பத்தில் 80 பேர் பலி

கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி 

கருணாநிதிக்கு இறுதி மரியாதை

யேமனில் விமானதாக்குதலில் பல சிறுவர்கள் பலி

இந்தோனேஷியா நிலநடுக்கத்தினால் இதுவரை 347 பேர் பலி

ராஜீவ்காந்தி கொலை- ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது- மத்திய அரசு

இந்தோனேசியா நிலநடுக்கம் ; 400 பேர் பலி, பூகோள அமைப்பிலும் மாற்றம்


மறைந்தார் கலைஞர்; கோபாலபுரம் வீட்டில் ஏற்பாடுகள் தீவிரம்

07/08/2018 தி.மு.க தலைவர் கருணாநிதி சற்று முன் காலமானதைத் தொடர்ந்து அவரது கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழ் சினிமா - கஜினிகாந்த் திரை விமர்சனம்

 தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி சந்தோஷ் எடுத்திருக்கும் படம் தான் கஜினிகாந்த். சந்தோஷ் தன்னை நிரூபிக்கும் இடத்தில் இருக்க, ஆர்யாவோ ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார், இருவரின் குறிக்கோளும் வெற்றிப்பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

தர்மத்தின் தலைவன் படம் பார்க்கும் போது ஆர்யா பிறக்கின்றார். அதன் காரணமாக என்னவோ ஆர்யாவிற்கு மறதி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
இந்த மறதியால் ஆர்யா மிகவும் கஷ்டப்படுகின்றார், பிச்சைக்காரனுக்கு பைக் சாவியை கொடுக்கும் அளவிற்கு மறதி என்றால் பாருங்கள். இப்படி ஒரு மறதி நோயை வைத்துக்கொண்டு சாயிஷாவை பார்த்தவுடன் காதலிக்கின்றார்.
அதை தொடர்ந்து சாயிஷாவிடம் தன் மறதியை மறைக்கவும், சாயிஷாவின் தந்தை சம்பத்திடம் எப்படியாவது நல்ல பெயர் எடுத்து அவருடைய மகளை கரம் பிடிக்கவும் ஆர்யா படும்பாடே இந்த கஜினிகாந்த்.

படத்தை பற்றிய அலசல்

பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓரளவிற்கு நன்றாகவும் தன் பணியை செய்துக் கொடுத்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் பாஸ் என்கின்ற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் பார்த்து பழகி போன ஆர்யா தான் இந்த கஜினிகாந்திலும்.
ஆர்யாவிற்கு பக்க பலமாக சதீஷ், தமிழ் படம்-2வை தொடர்ந்து இதிலும் அவருடைய காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ஆள் மாறாட்டம் செய்யும் காட்சிகள் சிரிப்பு சரவெடி.
இவர்களை விட ஆர்யா மற்றும் அவருடைய தந்தையாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் கூட்டணி இன்னும் சிரிக்க வைக்கின்றது. சாயிஷா பார்க்க அழகாக இருக்கின்றார், ஆனால், நடிப்பதற்கு பெரிதும் வாய்ப்பு இல்லை.
படம் கலகலப்பாக சென்றாலும் அடுத்தடுத்த காட்சிகள் நாம் கணிக்கும் வகையிலேயே உள்ளது. அதை விட தெலுங்கில் ஒரிஜினல் பதிப்பை பார்த்து விட்டால், தமிழில் பார்க்க சுவாரஸ்யம் குறைவாக தான் இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு அப்படியே காட்சி மாறாமல் எடுத்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி தான், செம்ம கலர்புல்லாக உள்ளது. இசை பெரிதும் ஈர்க்கவில்லை, பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, செம்ம கலகலப்பாக செல்கின்றது.
ஆர்யா-சதீஷ்-நரேன் சம்மந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பிற்கு கேரண்டி.

பல்ப்ஸ்

யூகிக்க கூடிய காட்சிகள் அடுத்தடுத்து வருவது.
படத்தின் பாடல்கள் ஏதும் மனதை ஈர்க்கவில்லை, அத்தனை மறதியை வைத்துக்கொண்டு ஆர்யாவை ஒரு விஞ்ஞானி போல் காட்டியிருப்பது லாஜிக் ஓட்டை.
மொத்தத்தில் கஜினிகாந்த் சந்தோஷிற்கு குடும்ப படமும் எடுக்க வரும் என நிரூபித்துவிட்டார். பேமிலியுடன் கண்டிப்பாக இந்த சந்தோஷ் படத்தை பார்க்கலாம். நன்றி CineUlagam