மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
மன்னவன் பாண்டியன் மாபெரும் மண்டபம்
விண்ணவர் வியக்கவே மண்ணகம் மிளிர்ந்தது
பாண்டியன் அவையினைப் பார்ப்பவர் வியந்தனர்
பசுந்தமிழ் புலவர்கள் பாங்குடன் நின்றனர்
ஆக்கிய பாடலை அவையேந்தி வந்தனர்
அதற்குரை பகர்ந்தனர் அனைவரும் மகிழ்ந்தனர்
பண்ணொடு பாடினார் பலவுரை பகர்ந்தனர்
மன்னவன் வதனமோ மலர்ந்துமே நின்றது
எண்ணிலா பொருள்களை மன்னவன் ஈந்தனன்
பாடிய புலவர்கள் பரவசம் எய்தினார்
இம்மாதம் 80 அகவையில் கலை, இலக்கிய ஆர்வலரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் முருகபூபதி
“ உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ வன்முறை
நியாயமானதுதானா..? ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது.
இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
அன்று மௌனம் சாதித்தன.
ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி, தன்னை முன்னர் தடை செய்த எல்லா
நாடுகளாலும் ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார்.
அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும்
சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அப்போது அவர்கள்,
வன் முறையாளராக பார்க்கப்படவில்லை.
இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன.
ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின்
அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (End Justifies the means)
“
படுகொலையின் பின்னணியில் வன்முறையும் அகிம்சையும் !! என்ற கட்டுரையில் ரவி அண்ணன் எழுதியிருந்தார்.
விலங்கு மருத்துவர் நடேசன் எழுத்தாளரான கதை ! ! வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கியவருக்கு இம்மாதம் 69 வயது !! முருகபூபதி
இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம்.
பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன.
ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.
எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.
ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்!
மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில் சென்றுதான் அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்று வந்தனர்.
கர்ப்பிணிப்பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அவ்வாறு அவதியுற்ற காலத்தில் அங்கு பிறந்த நடேசனின் கனவு, அவர் கடல் கடந்து அவுஸ்திரேலியா வந்ததன் பின்னர்தான் நனவாகியது. அதற்கான வழித்தடத்தை வழங்கிய கங்காரு தேசத்திற்கு நன்றி விசுவாசமாக வாழ்ந்தவாறு, இங்கும் பல சமூகப்பணிகளை முன்னெடுத்தவாறு இலக்கியவாதியாகியிருக்கும் நடேசன்
அண்மையில் தமிழ்நாட்டில் தனது நாவலுக்காக
கரிகாற்சோழன் விருதையும் பெற்றிருக்கிறார்.
எழுவைதீவு மக்களுக்காக ஒரு மருத்துவ
மனையையும் சில வருடங்களுக்கு முன்னரே அமைத்துக் கொடுத்துள்ளார்.
எழுவைதீவில் தனது ஆரம்பக்கல்வியை
முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மேலும் தொடர்ந்த நடேசன், உயர்தர வகுப்பில் தேர்ச்சிபெற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு மருத்துவ பீடத்தில் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார்.
இலட்சிய நோக்கத்துடன் வாழும் ஒவ்வொருவரது வாழ்விலும் மூன்று அம்சங்கள் தவிர்க்கமுடியாமல் இரண்டறக்கலந்துவிடும்.
அவை:- கனவு ( Dream) போராட்டம் ( Struggle) வெற்றி ( Success) நடேசனின் வாழ்வை கூர்ந்து நோக்கும்பொழுது இந்த அம்சங்கள் தவிர்க்கமுடியாதவையாக இருந்துள்ளன.
ஒரு நோக்கத்தை கனவுகாண்பது. அதனை நனவாக்க கடுமையாக உழைப்பது. இறுதியில் வெற்றிபெறுவது.
முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான பாரதரத்னா அப்துல்கலாம், இளையசமுதாயத்தைப்பார்த்து அடிக்கடி உதிர்த்த வார்த்தையே “ கனவு காணுங்கள் “ என்பதுதான்.
சிந்தனைகளை மனமிருத்தும் திருவெம்பாவும் மார்கழியும் !
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்மெல்பேண் .. அவுஸ்திரேலியாமார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி
சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந் திருக்கிறது." ஒப்பிலி அப்பன்" என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி - அந்த சுவாமி க்கு உப்பில்லாத பொருட்களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடை வில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும். " பீடுடைய மாதம்" என்பது பீடை உடைய மாதமாக்கப்பட்டு விட்டது. பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.திருவாதிரை நட்சத்திரம் " ஆரு த்ரா " என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகின்றது. சிவனையும் ஆதிரையான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை " ஆருர்த்தா " தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அது மட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்தது கூட மார்கழித் திருவாதிரை என்றும், சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித் திருவாதிரை என்றும், வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிக ழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையில்த்தான் என்றும்அறி யக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப்படுகின்றது.
200 இல் மலையகம்: மாற்றத்தை நோக்கிய பயணத்தின் அடுத்தக்கட்டம் நுவரெலியாவில்
எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.இராதகிருஸ்ணன் தலைமையில் இந்த நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
குறித்த நூல்வெளியீடு தொடர்பில் சர்வதேச உறவுகள் மலையக மக்கள் முன்னணி செயலாளர் எச்.எச்.விக்ரமசிங்க கூறுகையில்,
மலையகம் மாற்றத்தை நோக்கி
கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் நாங்கள் வெளியிட்ட மலையக அரசியல், சமூக, இலக்கிய நூல்கள் மலையக நூல் வெளியீட்டுத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன. மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற தலைப்பில் 2014 இல் வெளியிடப்பட்ட வரலாற்று நூல் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒர் அரசியல் தலைவனின் சாதனைப் பதிவாக அமைந்து சிறப்புச் சேர்த்தது.
சிவாஜியிடம் லேட்டஸ்ட்டாக வராமல் லேட்டாக வந்த ஜெயலலிதா - ச சுந்தரதாஸ்
தமிழ் திரையுலகில் இயக்குனர் ஸ்ரீதர் மூலம் கதாநாயகியாக
அறிமுகமாகி, எம் ஜி ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து நட்சத்திர நடிகையாகி பின்னர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக பதவி வகித்தவர் ஜெயலலிதா. இவர் எம் ஜி ஆர் படத்துக்கு முன், ஸ்ரீதர் படத்துக்கும் முன்னர் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரைக்கு அறிமுகமாக வேண்டியவர் என்பது பலரும் அறியாத விஷயம் ஆகும்!
டைரக்ட்டராகவும் திகழ்ந்தவர் பி ஆர் பந்துலு. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர் கடந்த நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் குணச்சித்திர நடிகராக திரையுலகில் நுழைந்தார். ஏ வி எம்மின் நாம் இருவர் படம் இவரை பிரபலமாக்கியது. அதன் பின் பிரபல நடிகர் டி ஆர் மகாலிங்கத்தின் நிர்வாகியாக பணிபுரிந்து விட்டு 50ஆண்டுகளின் ஆரம்பத்தில் படத் தயாரிப்பாளராக மாறினார். பத்மினி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து அன்று உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகரான டி ஆர் ராமச்சந்திரனையும், இளம் நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனையும், இணைத்து கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தை தயாரித்து வெளியிட்டார். தொடர்ந்து சிவாஜி நடிப்பில் முதல் தேதி படத்தையும் தயாரித்தார். இவ்விரண்டு படங்களையும் ப நீலகண்டன் இயக்கினார்.
நூல் விமர்சனம்
எழுத்துலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான திரு. மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது நூலான “ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழியின் வளர்ச்ச்சி” என்ற நூலின் வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் மெல்பனில் நடைபெற்றது. அந்நூலைப்பற்றிய எனது பார்வையை இங்கு வழங்குகின்றேன்.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அதைத் தாய்மொழியாகக் கொண்ட இனம் எப்படி அம்மொழியை உயிர்த்திருக்க வைத்துள்ளது என்பதைப் பொருத்துள்ளது. உயிர்த்திருக்க வைத்துள்ளது என்றால் அந்த இனம் அதன்மொழியை எப்படி அழியாமல் பாதுகாத்து வைத்துள்ளது என்பதாகும்.
நிருவாகிகள் தெரிவு இலங்கை மாணவர் கல்வி நிதியம்
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெய்நிகரில் நடைபெற்றது.
இலங்கையில் முன்னர் நீடித்திருந்த போரினால் பெரிதும்
பாதிக்கப்பட்டிருந்த ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.
கடந்த ஜுலை – ஓகஸ்ட் மாதங்களில் வடக்கு – கிழக்கு – மலையகம், மற்றும் மேற்கிலங்கையில்
இந்நிதியத்தினால் உதவி பெற்று வரும் மாணவர்களின் தொடர்பாளர் அமைப்புகளின் ஊடாக நடத்தப்பட்ட
மாணவர் ஒன்றுகூடல், நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் பற்றிய விபரமான தகவல்களும் படங்களும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியத்தின் செயலாளர் திருமதி
விதுஷினி விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு நடைபெற்ற
பொதுக்கூட்டத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார்.
நிதிச்செயலாளர் திருமதி திவானா அஜந்தன் நிதியறிக்கையை ( 2022 – 2023 ) சமர்ப்பித்தார்.
இலங்கையில் வாழ்க்கைச்செலவுகள் அதிகரித்திருப்பதை கவனத்தில் கருதிய கல்வி நிதியம், மலரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவையும் அதிகரிக்கவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
திருகோணமலை தொடர்பான சர்ச்சைகள்
December 20, 2023
‘ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்படுவதாக’ ஒரு கூற்றுண்டு – அவ்வாறுதான் இப்போது சில விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கைச் செய்திகள்
‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு மாணவர்களை இலக்கு வைத்த 4,000 வர்த்தகர் இதுவரை கைது
ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கு தமிழ் எம்.பிக்களுக்கும் இடையில் சந்திப்பு
டிஜிட்டல் NIC: விநியோகம் ஜனவரி முதல் ஆரம்பம்
மகுடம் சூடிய இலங்கை சிறுமி கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!
இந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய ஈழத்து சிறுமி கில்மிஷா
‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு மாணவர்களை இலக்கு வைத்த 4,000 வர்த்தகர் இதுவரை கைது
நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர், பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக, பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
காசாவில் ‘பஞ்ச அபாயம்’ குறித்து ஐ.நா. எச்சரிக்கை
காசாவில் போர் நிறுத்த பேச்சுகள் தீவிரம்: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு
போர் நிறுத்தப் பேச்சுக்கு மத்தியிலும் காசாவில் ஹமாஸ்–இஸ்ரேலிய படை வீதிகளில் சண்டை
தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதி இழப்பு
இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!
காசாவில் ‘பஞ்ச அபாயம்’ குறித்து ஐ.நா. எச்சரிக்கை
- இஸ்ரேலின் தாக்குதலால் 48 மணி நேரத்தில் 400 பேர் வரை பலி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின் அமெரிக்க நேரப்படி நேற்று வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. ஆனால் போர் நிறுத்தம் ஒன்றை இந்தத் தீர்மானம் வலியுறுத்தவில்லை.