“தேற்றம்” அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம்.



தேற்றம்”  அமைப்பு வழங்கியபாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு”  என்னும் அறிவியல் கருத்தரங்கு 13.10.2018 சனிக்கிழமை மாலை 4.30 – 7.30 மணிவரை சிட்னி பெண்டில்ஹில்  பகுதியில்  அமைந்துள்ள யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது

மெய்ப்பொருள் காண்எனும் மகுட  வாக்கியத்துடன், அறிவியல் கருத்துக்களைத் தமிழரிடம், தமிழ் மொழிமூலம் எடுத்துச் செல்லும் நோக்கிலே  சமீபத்த்தில் உருவாக்கப்பட்ட  தேற்றம் அமைப்பின் இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.

இன்று சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தைப் பாவிக்கிறார்கள். இணையம் என்பது இருமுனையும் கூரான கத்தி. இந்த உலகத்தையே சுருக்கி அது  கைகளில் தருகிறது. அதேவேளை இதன் பாவனையில் அபாயங்களும் உண்டு. வைரஸ், ட்ரோஜன், பிஷ்ஷிங், கிரெடிட் கார்டு மோசடி, இணைய மூலமான பணக்களவாடல் என்று இணையப்பாவனை பலவழியில் பாவனையாளர்களை  மிரட்டுகிறது. அதுவும் இதுபற்றி அதிக விபரமில்லாத முதியோர் அல்லது இலகுவில் ஏமாறத்தக்க இளையோர் இந்த வலையமைப்பின்வலையில்இலகுவாக வீழ்ந்துவிடும் பூச்சிகளாக மாறுகிறார்கள். இதனால், பாதுகாப்பான இணையப்பாவனை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியம் பெறுகிறது.  அவ்வகையில், செயலமர்வின் பேசுபொருள் காலத்தின் தேவையாக இருந்தது.

முழு அருளைத் தாநீ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா




                 கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே 
                      கசடில்லா வீரம் தந்திடுவாய் தாயே  
                உல்ளமெலாம் உண்மை உறையச் செய்வாய்தாயே 
                      உன்னயென்றும் மறவா வரமருள்வாய் தாயே 

                மாசுடையார் தொடர்பை மடியச்  செய்வாய்தாயே 
                    மனமதிலே கருணை  வளரச்  செய்வாய்தாயே 
                தானதர்மம் செய்ய  தயைபுரிவாய்  தாயே 
                     தர்மவழி  செல்ல  தக்கதுணை  நீயே 

               ஈனநிலை  போக  எனக்கருள்வாய்  தாயே 
                     என்றும் உயர்வாக எண்ணமெனக் கருள்வாய் 
              ஊனமுடை   எண்ணம்  உதிக்காவண்ணம் எனக்கு
                     உனது கடைக்கண்ணால் எனைநோக்கு தாயே 

              இப்புவியில்  நானும்  ஏழ்மையுற்றை போதும் 
                   தப்பிதங்கள்   செய்யா  தடுத்துவிடு  தாயே 
              எப்பவுமே வாழ்வில் என்றுமுன்னை  மறவா 
                    முப்பொழுதும் நினைக்க முழுவருளைத் தாநீ 









இயலோடு இசை’ ந்த நடனம் - யசோதா.பத்மநாதன்.

.

                  
கார்த்திகா கணேசரின் ஆடல் மாணவியரின்  அரங்க நிகழ்வோடு கூடிய ஒரு சமூக கரிசனைக் குறிப்பு.

சிட்னியில் கலை விருந்து வசந்தகாலம் வந்து விட்டால் களை கட்டும். ஆசிரியர்களின் தகுதிக்கும் திறமைக்கும் செல்வாக்குகளுக்கும் மாணவர்களின் தொகைக்கும் ஏற்ப அரங்க நிகழ்வுகள் விகசிக்கும்.
பொதுவாக சிறு குழந்தைகள் அங்கும் இங்குமாக ஓடித்திரியும்; பருவ மங்கையர் அழகுற அலங்கரித்த படி நடமாடுவர்; மனையறம் கொண்ட நங்கையருக்கு அடுத்தவரோடு பேச ஆயிரம் விடயங்கள் இருக்கும்; இளந் தந்தைமார் பிள்ளைகளின் அரங்க நிகழ்வை சிறைப்பிடித்துவிட கமராக்கள் சகிதம் ஓடியாடி திரிவர். வயதான பல பேரன் பேத்திகள் வசதியாக முன்கூட்டியே வந்து உட்கார்ந்திருப்பர். உடலை அங்கே இருந்தி மனதை கைபேசி வழி உலவவிட்டு அமர்ந்திருக்கும் சில இளந்தலைமுறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலை காட்டும்.
இதில் கலையுணவு கொள்ள வருவோரை / கலை உணர்வோரை வடிகட்டிப் பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டி வரும். இது சொல்லக் கொஞ்சம் சங்கடம். என்றாலும் சொல்லியாக வேண்டும். சக நடன ஆசிரியர்கள் வந்திருக்க மாட்டார்கள்; அவர்களின் மாணவியர் கூட வந்திருந்தால் அது பாதகமாகவே பார்க்கப்படும். முகங்கோணக்கூடாது என வரும் பார்வையாளர் கூட மருந்துக்கும் தம் பிள்ளைகளை அழைத்து வந்திரார். அரங்கேற்றம் கண்ட மாணவியரோவெனில் அரங்கேற்றத்தோடு தம் பணி ஓய்ந்தது என நிகழ்வுகளுக்கு தலைகாட்டார்.
கல்விப்பாரம்பரியம் ஒன்றின் ஏகப்பிரதிநிதிகள் என பெருமை கொள்ளும் தமிழ்சுடர் கொடிகள் தம்மளவில் இப்படித்தான் இங்கு தன்னிறைவடைந்து விளங்குவர். பார்க்கவோ அறியவோ வரார்!

மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் விமல். அரவிந்தனின் ஒளிப்படக் கண்காட்சி - ரஸஞானி


கணினி எமக்கு வரப்பிரசாதமானதும் தினமும் காலையில் அதனை திறந்து நாளாந்த கடமைகளை தொடங்கும்போது, திரையில் தோன்றியிருக்கும் இயற்கைக்காட்சிகள் மனதை கவரும்.
காலையில் துயில் எழுந்ததும் கண்களுக்கு குளிர்ச்சிதரும் ஒளிப்படத்தை பரவசத்துடன் தரிசித்துக்கொண்டே எமது மின்னஞ்சலுக்கான வாயிலை திறக்கின்றோம்.
அவுஸ்திரேலியாவில் அழகிய பூங்காக்கள், நீர் நிலைகள், வாவிகள், நதிகள், ஏரிகள், கடற்கரை இருக்கும் பகுதிகளில் வீடுகள் வாங்கவிரும்புபவர்களும் காலைத்தரிசனத்திற்காகவே அத்தகைய இடங்களை தெரிவுசெய்வர்.
வீடுகளில் மீன் தொட்டி வைத்து அழகிய மீன்களை காலையில் எழுந்ததும் பார்க்கும்போது புத்துணர்ச்சி வருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
            மனித வாழ்வில் காலைப்பொழுது மிகவும் முக்கியமானது. அன்றாடம் ஏதும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தமது மனதிற்குள் " இன்று யாருடைய முகத்தில் விழித்தேன்?" என்று பிதற்றுபவர்களின் உளவியலும் காலைத்தரிசனத்தில் இழையோடியிருக்கிறது.
 இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசங்களுக்கு செல்வது, அவற்றை படம் பிடிப்பது பலருக்கும் பொழுதுபோக்கான கலை. தம்மைக்கவரும் காட்சிகளை முடிந்தவரையில் தமது  ஒளிப்படக்கருவியில் சேமித்துவைப்பார்கள். அவர்களின் வாழ்வின் நினைவுத்தடத்தில் நீக்கமற நிறைந்திருப்பது அக்காட்சிகள்.

வாழ்வை எழுதுதல் - அங்கம் 05 தண்ணீர் பற்றி கண்ணீருடன் எழுதவேண்டிய கதைகள் வடக்கின் தண்ணீர் பிரச்சினையோடு கோமல் சுவாமிநாதனை நினைவுகூர்ந்து எழுதும் பதிவு - முருகபூபதி


(02)
கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் நாடகம் மேடையேறியது. இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக வீரகேசரி ஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் வர்ணகுலசிங்கம் என்பவருடன் சென்றிருந்தேன்.
1984 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். கொழும்பு வாழ் இளம் கலைஞர்கள் அந்த நாடகத்தை தயாரித்திருந்தார்கள். அக்காலப்பகுதியில் இந்திய - தமிழக நாடகாசிரியர்களின் நாடகங்களை கொழும்பு கலைஞர்கள் முன் அனுமதி பெறாமலேயே மேடையேற்றினர்.
இந்திரா பார்த்தசாரதியின் மழை, மராத்திய  நாடகாசிரியர் விஜய் டெண்டுல்காரின் சக்காராம் பைண்டர், கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் ஆகிய நாடகங்களை மேடையேற்றிக்கொண்டிருந்தனர். அத்துடன் சில மேலைத்தேய நாடகாசிரியர்களின் நாடகங்களும் கவிஞர் இ.முருகையன், தாஸீஸியஸ், நா. சுந்தரலிங்கம், பாலேந்திரா, சுஹேர் ஹமீட்,  கலைச்செல்வன்  ஆகியோரால் தமிழ்ப்படுத்தப்பட்டு அரங்கேறின.
தண்ணீர் தண்ணீர் நாடகம் இந்தியாவில் 250 தடவைகளுக்கு மேல் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு கோமலுக்கு பெரும் புகழைத்தேடித்தந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு சமீபமாக அத்திப்பட்டி கிராமத்தின் தண்ணீர்ப்பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பினால் கே. பாலச்சந்தர்  இதனைத்  திரைப்படமாக்கினார்.
ஏற்கனவே பாலச்சந்தர் நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இருகோடுகள், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், நவக்கிரகம், பாமா விஜயம்  முதலான மேடை நாடகங்களை திரைப்படமாக்கியவர். இந்நாடகங்கள் தனிமனிதர்களின் அகவய புறவய பிரச்சினைகளைப் பேசியிருந்தன.
கோமலின் தண்ணீர் தண்ணீர்,  கல்வியாலும் பொருளாதாரத்தினாலும் மிகவும்  பின்தங்கிய தமிழ்ச்சமூகத்தின் கதை. ஏழை விவசாயிகளின் கண்ணீர்க்கதை. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக  அன்றைய ஆட்சியாளர்களை இடித்துரைத்த கதை. தேசிய விருதுகள் பெற்ற திரைப்படம். நாடகத்திற்கிருந்த அதே வரவேற்பு திரைப்படத்திற்கும் கிட்டும் என்பதனால் அதன் திரைக்கதை வடிவத்தை கே. பாலச்சந்தர் நம்பிக்கையோடு  எழுதினார். நாடகத்திற்கு வசனம் எழுதிய கோமல் சுவாமிநாதனே படத்திற்கான வசனத்தையும் எழுதினார்.

அறுவடை - பிச்சினிக்காடு இளங்கோ



அனைத்துப்பையிலும்
அதுதான் இருக்கிறது
அதற்காகத்தான்
உயிர்வளி  நுழைந்து
திரும்புகிறது

அதுவே முதன்மையெனில்
அதுமட்டும் எப்படி
சாத்தியம்?

விழுந்து
விழிதிறக்காமல்
சிரித்துச்செழிக்காமல்
 ஆயுதம் இருந்தும்
ஆவதென்ன?

விளைச்சலுக்கு
விழுக்காடு குறைவுதான்
அதற்காக
என்பதிலே
இருக்கிறது.......

பொருள்படப் பொழுதை
இழப்பதை விடுத்து
சாக்குப்பையோடு அழைவதில்
பொருளில்லை


கனடா செய்தி


Witness In Heaven சாட்சியங்கள் சொர்க்கத்தில்



இலங்கைச் செய்திகள்


யாழில் வர்த்தக மத்திய நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி 

ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா

“அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென  நம்புவது சாத்தியமற்ற ஒன்று”

“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”

இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி.

பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம்

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரதமர்



யாழில் வர்த்தக மத்திய நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி 

17/10/2018 மத்திய நிலையம் ஒன்று  இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பிரதேசத்தில் அமைப்பதற்காக  அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை - சினிமா ஒரு பார்வை

.
காட்டை காட்டும் போதெல்லாம் எனக்கு அழுகை வந்தது. எனக்கு அழுகை வரும் போதெல்லாம் காடு அசைந்தது.
அங்கே ரத்தத்தின் அத்தியாயமாக நிற்கும் மரங்களின் ஆற்றாமை கொடிதிலும் கொடிது. இயற்கையோடு வாழ்ந்த ஒருவனின் வாழ்வு... அவன் வாங்க ஆசைப்பட்டு... அத்தனை கஷ்டங்களுக்கு பின் வாங்கிய இடத்தின் பொருட்டு நடக்கும் வாழ்வின் திருப்பு முனை சம்பவங்களால் அதே இடத்துக்கு செக்யூரிட்டியாக அமருகிறான். அப்போது ஆழ் மனதுக்குள் நகம் கொண்டு பிராண்டி எதையோ எடுத்துக் கொண்டு போகிறது இந்த மானுடத்தின் விளிம்பு நிலை மனித வாழ்வு. ஒவ்வொரு கேட் வாசலிலும் நிற்கும் செக்யூரிட்டிகளுக்கு பின்னால் மூடி அடைத்த ஒரு பெரு வாழ்வு இருப்பதை உணருகையில்... உள்ளே பதறும் மூச்சிரைப்பை முடிந்தளவு உரிந்து எடுத்து விடுகிறது வீணாய் போன உலக மயமாக்கலும்.......வெட்கங்கெட்ட உள்ளூர் உலக அரசியலும்.
Merku Thodarchi Malai Movie
செத்துப் போவதை விட கொடியது செத்தது போல போவது.

உலகச் செய்திகள்


கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது கனடா!!!

சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்- அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா வருவதற்கு தேவையான தகுதிகள் இவைதான் - ட்ரம்ப் அறிவிப்பு

சோகத்தில் முடிந்த தசரா விழா ; 60 பேரை பலியெடுத்த ரயில் விபத்து

இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ்


கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது கனடா!!!

17/10/2018கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய உலக நாடுகளில் கனடா இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.

நிருத்தியச் சூடாமணி' பிரியதர்ஷினி கோவிந்த் அவர்களின், ஆடல் வேள்வி 27/10/2018


மெல்பனில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கும் தமிழ்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் 04/11/2018



தமிழ் சினிமா - வடசென்னை திரை விமர்சனம்


ஒரு சில கூட்டணியை பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் படத்திற்கு முதல் நாளே போகலாம். அப்படிபட்ட இயக்குனர்-நடிகர் கூட்டணி என்றால் அது வெற்றிமாறன்-தனுஷ் தான். இவர்களின் பல வருட உழைப்பில் தயாராகி இன்று வெளியாகி இருக்கிறது வட சென்னை. சென்னையை விரும்பும் ரசிகர்களுக்கு வடசென்னை பிடித்ததா பார்ப்போம்.

கதைக்களம்

செந்தில்(கிஷோர்) குணா(சமுத்திரக்கனி) இருவரும் ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையில் இருந்தே பல அரசியல் பிறக்கின்றது.
அதன் பின் செந்தில், குணா இருவரும் பிரிந்து தங்களுக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடிக்கின்றனர்.
அந்த நேரத்தில் தனுஷ் (அன்பு) கேரம் ப்ளேயராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க இந்த கேங் வாருக்குள் யதார்த்தமாக உள்ளே வர அதை தொடர்ந்து யார் கொடி வடசென்னையில் பறக்கின்றது, ஆரம்பத்தில் செந்தில் குணா யாரை கொலை செய்தார்கள், தனுஷ் தன்னை சூழ்ந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கின்றார் என்பதை படமாக இல்லை பதிவாக செய்துள்ளது இந்த வடசென்னை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் கேரக்டரில் ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் உள்ளனர், யாரையுமே நம்மால் ஒரு நடிகனாக பார்க்க முடியவில்லை. அன்பாக தனுஷ் படத்திற்கு படம் தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கின்றார். 18 வயதில் ஆரம்பித்து 30 வயதை தாண்டி அவருக்கான கதாபாத்திரத்தில் வாழ்ந்து உள்ளார்.
வடசென்னை என்றாலே அடிதடி வெட்டுக்குத்து என்பது மட்டுமே மக்களுக்கு தெரியும், இதிலும் அதே தான் என்றாலும் இந்த அரசியல்வாதிகள் தான் அவர்களை அடிமைகள் போல் பயன்படுத்தி தங்கள் அரசியலுக்காக வளரவிடாமல், பாடப்புத்தகத்தை கையில் கொடுக்காமல் கத்திதை கொடுத்து வளர்த்து விடுகின்றனர் என்பதை தோலுரித்து காட்டியுள்ளது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் ஜெயில் காட்சிகள், அதில் உள்ளே செந்தில் செய்யும் ராஜ்ஜியம், எப்படி போதை மருந்து கை மாறுகின்றது, உட்கார்ந்த இடத்தில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றனர் என்பதை வெற்றிமாறன் காட்டியவிதம் அவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
படத்தின் டீடெயிலிங் பற்றி சொல்லியே ஆகவேண்டும், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டத்தில் ஒரு கலவரம் நடக்கின்றது, அதில் மக்களின் மனநிலை என்ன, அதை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் இறப்பு, அதில் நடக்கும் அரசியல், சாலை அமைக்கின்றேன் என்று குடிசை மக்களை விரட்டுவது, அதற்கு தற்போதுள்ள ஆளங்கட்சியையே படத்தில் காட்டிய விதம் என வெற்றிமாறனுக்கு அசால்ட்டு தைரியம் தான். எழுந்து நின்று பாராட்டலாம்.
அதேபோல் படக்குழுவினர்கள் சென்ஸார் போர்டிற்கு தான் முழு நன்றியை சொல்ல வேண்டும், நாம் நடைமுறையில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தையும் படத்தில் பீப் இல்லாமல் வருகிறது, கதைக்கு அது அவ்வளவு தேவை என்பதால் ஏ சான்றிதழுடன் வெளியிட்டது நல்ல முடிவு.
படத்தின் பல கதாபாத்திரங்கள் வந்து சென்றாலும் அன்புவிற்கு பிறகு நம்மை ரசிக்க வைப்பது ராஜன் அமீர் கதாபாத்திரம் தான், 40 நிமிடம் வந்தாலும் அன்புவின் முழு வீச்சுக்கு இன்ஸ்பிரேஷனாக ராஜனை வடிவமைத்தது சூப்பர். ஆண்ட்ரியா கடைசி அரை மணி நேரம் மிரட்டிவிடுகின்றார். இரண்டாம் பாதியில் இவர் தான் ஹீரோ என்பது போல் முடிகின்றது.
சந்தோஷ் நாராயணன் இசை மிரட்டியுள்ளது. பின்னணியில் நமக்கே இசையால் ஒரு அச்சத்தை கொண்டு வருகின்றார். அதேபோல் வேல்ராஜின் ஒளிப்பதிவு வடசென்னைக்குள் நாமே சென்று வந்த அனுபவம்.

க்ளாப்ஸ்

நடிகர் நடிகைகள் பங்களிப்பு, ஒரு சீன் என்றாலும் பலரும் ஸ்கோர் செய்கின்றனர்.
படத்தின் கதை களத்திற்காக வெற்றிமாறன் எடுத்த மெனெக்கெடல், உண்மையாகவே வியப்பை தருகின்றது.
இசை ஒளிப்பதிவு செட் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
மக்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக காட்டிய விதம்.

பல்ப்ஸ்

பெரிதாக ஏதும் இல்லை, நிறைய கதாபாத்திரம் வருவதால் யார் யார் என்று நினைவில் வைக்க கொஞ்சம் தடுமாற்றம் அடைய வைக்கிறது.
மொத்தத்தில் வடசென்னை படம் என்பதை விட தமிழ் சினிமாவின் முக்கிய பதிவு.
நன்றி   CineUlagam