இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்
நடந்து ஈராண்டும் கடந்து ஏழு மாதங்களாகிவிட்டதென்றால், பொதுஜன பெரமுனையின் அதிபர் வேட்பாளர் அதிமேதகு கோத்தபாய
ராஜபக்ஷ வெற்றிபெற்று இம்மாதத்துடன் இரண்டு வருடங்களாகிவிட்டன.
எனினும் குறிப்பிட்ட ஈஸ்டர்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களினதும் குடும்பங்களுக்கும்
படு காயமடைந்தவர்களுக்கும் இதுவரையில் நீதி
கிடைக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு ஏப்ரில்
மாதம் குறிப்பிட்ட ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும்
ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும் பதவியிலிருந்தனர்.
மைத்திரி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும்,
ரணில் ஐக்கிய
தேசியக்கட்சியையும் பிரதிநிதித்துவம்
செய்தவர்கள்.
ஈஸ்டர் சம்பவத்தினால்,
அதனை தடுத்திருக்கவேண்டிய அந்த சுட்டமண் – பச்சை மண் நல்லிணக்க அரசு, மீண்டும் பதவிக்கு
வரமுடியவில்லை.
யாரை ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிப்பது என்பதில் ரணிலுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் மத்தியிலிருந்த இழுபறிநிலையில்
மைத்திரி தனது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவை, ராஜபக்ஷ சகோதரர்களுக்கு காண்பித்தார்.
இறுதியில் கடந்த 2019 ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி
தேர்தலில், தனது அமெரிக்க இரட்டைக்குடியுரிமையை துறந்துவிட்டு வந்த, கோத்தபாய ராஜபக்ஷ
சுமார் 69 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
அவர் தன்னை எதிர்த்து ஐக்கிய
தேசியக்கட்சியிலிருந்து ரணிலின் புறக்கணிப்போடு
போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று
வெற்றியடைந்தார். அதே 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
நடந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனமும்
பெறாமல் படுதோல்வியடைந்தது. ரணிலும் காலம்
கடந்து அவரது கட்சிக்கு கிடைத்த வாக்குகளின்
அடிப்படையில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பின்கதவால் வந்தார்.
சஜித் ஐக்கிய மக்கள் சக்தி
என்ற அமைப்பை கட்டி வளர்த்து, எதிர்க்கட்சித் தலைவரானார்.